P11 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends

Will try to give the update today evening only.

கட்டிலில் படுத்திருந்த ஆதிரை வெற்றியைப் பார்த்து, “கண்டிப்பா பண்ணிக்கணுமா?” என கேட்க,

“என்னைக் கேட்கிற உனக்கு இஷ்ட்டம் இல்லையா?”

“இன்னும் ஒன்னு மட்டும் பெத்துக்கலாமே?”

“அடியே அடங்க மாட்டியா நீ?”

“இந்த தடவை பிரசவம் ஈஸியா தான இருந்துச்சு.”

“என்னது ஈஸியா இருந்துச்சா? நீ மாசமானதுல இருந்து பிள்ளை பெத்துகிற வரை... என் மனசு அடிச்சிட்டு இருந்தது எனக்குத்தான் தெரியும். போதும் மா என்னால திரும்ப டென்ஷன் ஆக முடியாது.”

“வலிச்சு பெத்துகிற நானே பயப்படலை... சும்மா பார்த்திட்டு இருக்க உங்களுக்கு என்ன?”

“அதுதான் பிரச்சனையே... சும்மா பார்த்திட்டு தானே இருக்க முடியுது. அவ்வளவு பெரிய வயிறை வச்சிகிட்டு நீ நடக்க உட்கார சிரமப்பட... நான் பார்த்திட்டு தான் இருந்தேன். அதோட நீ வலியோட கஷ்ட்டப்படும் போதும் பார்த்திட்டு தான் இருந்தேன்.”

“நீ கஷ்டப்படுவதை பார்த்திட்டும் ஒன்னும் செய்ய முடியாம இருக்கிறது எவ்வளவு வேதனைன்னு எனக்குதான் தெரியும்.”

**********************************************************************************************************************************

ஆதிரை இருப்பதை பார்த்த வெற்றிக்கே, இந்த அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கலாமோ என இருந்தது.

அதை உணர்ந்தது போல அவனின் மாமியார், “ஒரு நாள் வலி மாப்பிள்ளை. நாளையில இருந்து சரியாகிடுவா.” என்றார்.

“வலிக்காம இருக்க மருந்து எதுவும் இருக்கான்னு டக்டரை போய் கேட்டுட்டு வரவா?” என சிவமணி கேட்க,

“நான் ரெண்டுமே ஆபரேஷன் பண்ணி பெத்து போட்டேன். அப்ப எல்லாம் இந்த மனுஷனுக்கு கண்ணு தெரிஞ்சுதா... இன்னைக்கு மகளுக்கு வலிக்குதுன்னு உடனே துடிக்கிறதைப் பாரு.” என நினைத்தவர், “போங்க, போய் கேட்டு டாக்டர்கிட்ட திட்டு வாங்கிட்டு வாங்க.” என்றார் கடுப்புடன்.

ஏற்கனவே வெற்றி சென்று கேட்டு திட்டு வாங்கி இருந்தான் என்பது வேறு விஷயம்.

********************************************************************************************************************************

ஆதிரையை அவள் அம்மா பிரசவதிற்கே சென்னைக்குதான் வர சொன்னார். பிரசவத்திற்கு முன்பு மாதாந்திர பரிசோதனைக்கும் அலைய வேண்டும். பிள்ளை பெரும் நேரத்திற்கு செல்ல முடியாது. முன்பே செல்ல வேண்டும், அருணுக்கு அத்தனை நாள் பள்ளிக்கு விடுமுறை எடுக்க முடியாது என்றே செல்லவில்லை.

இப்போது நல்லபடியாக பிரசவம் முடிந்து இருக்க, பதினோராம் நாள் புண்ணியாதானம் முடிந்து அவள் அம்மா வீட்டிற்கு செல்வதாக இருந்தது.

சிவமணிக்கு நிறைய உடல் உபாதைகள் உண்டு. அதனால் மங்கை பார்த்து பார்த்து சமைப்பார். மகள் மருத்துவமனையில் இருந்து வந்ததும் மங்கை ஊர் திரும்பிவிட... ஆதிரையின் பாட்டி வந்து உடன் இருந்தார்.

பிரசவமே முடிந்துவிட்டது இனிமேல் செல்ல வேண்டுமா என ஆதிரைக்கும் இருக்க.. மனைவியை அனுப்ப வெற்றிக்குமே மனம் இல்லை.

*******************************************************************************************************************************************

ஜாதகம் பார்த்து பொருந்தி இருக்க...ஏற்கனவே தெரிந்தவர்களும் என்பதால் ஆதிரையும் குழந்தையும் பார்க்க வருபது போல... மேனாகவின் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஆதிரையும் குழந்தையும் பார்த்து விட்டு, திருமணம் குறித்து அவர்கள் பேச... ஆதிரைக்கு இப்போதுதான் குழந்தை பிறந்து இருப்பதால்... தாங்கள் இன்னும் எட்டு மாதங்கள் சென்றுதான் மகனின் திருமணத்தை வைப்போம் என சிவமணி சொல்லிவிட்டார்.

“எட்டு மாதங்களா... அவ்வளவு நாள் ஏன் தள்ளிப் போகணும்.”

“எங்க பெண் வந்து எல்லாம் பண்ணாத்தான் எங்களுக்கு திருப்தி, திருமண புடவை வாங்க, நகை வாங்க இப்ப ஆதிரையாள அலைய முடியுமா? அதனால எட்டு மாசம் கழிச்சே வச்சுக்கலாம்.” என சிவமணி முடிவாக சொல்லிவிட... பெண் வீட்டாருக்கு அது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

பெண்ணின் அம்மா அதையே சொல்லி தங்கள் வீட்டில் புலம்பினார். அவங்க பெண்தான் வந்து எல்லாம் வாங்கனுமா என்ன? நம்ம பெண்ணுக்கு வாங்க அவ ஏன் வரணும். நம்ம பெண் வந்தா போதாதா? என கொஞ்சம் கொதித்து போயே இருந்தார்.

இதெல்லாம் சின்ன விசயம் பெரிது படுத்தாதே... நல்ல சம்பந்தம் விட்டு விட வேண்டாம் என்றார் அவரின் கணவர் மோகன்.
 

banumathi jayaraman

Well-Known Member
மோகனின் மனைவி பேசுவது சரியில்லையே
முகூர்த்தப் புடவை எடுக்க மாப்பிள்ளை வீட்டார் வர வேண்டாமா?
முக்கியமா மணமகனின் சகோதரி வரணுமில்லே
சில குடும்பங்களில் நாத்தனார்தான் கல்யாணச் சேலை எடுக்கணுமாம்
அடேய் வெற்றி
பத்து மாசம் சுமந்து பிள்ளை பெற்றெடுக்கும் அவளே இன்னொரு குழந்தைக்கு ஆசைப்படும்பொழுது உனக்கென்ன வந்தது?
ஆனால் மனைவியின் வலி உணர்ந்து வெற்றி பேசுவது அருமை
எத்தனை கணவர்மார்கள் மனைவியின் கஷ்டத்தை அறிகிறார்கள்?
அப்டேட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங்,
ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top