oru ceenna karuthtu

Advertisement


murugesanlaxmi

Well-Known Member
`
ஒரு சின்ன கருத்து பரிமாற்றம் ப்ரெண்ட்ஸ். இங்கு பாண்டிச்சேரியில் ரெயின்போ என்ற ஹோம், சிறப்பு குழந்தைகளுக்கு {மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள்} உள்ளது. எனக்கு ஆண்டவன் வருடம் முழுவதும் அவர்களுக்கு உணவு தரும் சக்தி கொடுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு வருடம் என் மகளின் பிறந்த நாளுக்கு காலை உணவு தருவேன். இது பல வருடங்களாக செய்து வருகிறேன். முன்பெல்லாம், வீட்டிலோ, ஹோட்டலிலோ உணவை தடல்புடலாக செய்து தருவேன். அதற்கு காரணம் அன்று ஒரு நாள் அவர்கள் நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று நினைத்து செய்து வந்தேன். ஒரு நாள், அதன் நிர்வாகியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் சொன்ன ஒரு செய்தி, என் செவிலில் அடித்தது போல் இருந்தது. சாதாரண குழந்தைகளே ஒரு நாள் உணவு தடல்புடலாக இருந்தால் மறுநாளும் ஏங்கும், இந்த சிறப்பு குழந்தைகளும் அப்படியே ஏங்க செய்யும், அந்த பணத்தை எங்களிடம் கொடுத்தால், அதனை கொண்டு சில நாள்கள் எங்களால் சாப்பாடு தரமுடியும் என்றார். அதற்கு நான், “இதை ஏன், என்னிடம் இவ்வளவு நாள் சொல்லவில்லை” என்றேன். “உங்கள் மனதை, கஷ்டபடுத்தவிரும்பவில்லை,ஏன் உங்களின் ஆசையை நான் கெடுக்கவேண்டும் என்று அமைதியாக இருந்து விட்டேன். இங்கு வருபவர்கள் எல்லாம் அப்படி செய்கிறார்கள், நான் மௌனமாக இருந்து விடுவேன்” என்றார். அன்றிலிருந்து இன்று வரை இந்த தேதியின் காலை உணவு கடவுள் அருளால் நான் கொடுத்து வருகிறேன். அதுமட்டும் இல்லாமல் என்னுடன் பணிபுரிபவர்கள் சிலரும் இங்கு வரும்படி செய்துள்ளேன். என் உடைகள், என் மகள் உடைகள், மற்றும் என் நண்பர்கள் உடைகள் என்று சேகரிந்து, சுத்தம் செய்து இங்கு தந்துவிடுவோம். இது என் மனதை சமாதனம் செய்யும் ஒரு சின்ன செயல். இதனை இங்கு பதிவது என் புகழ் பாடவோ, அல்லது செல்பு டப்பவோ அல்ல. உங்கள் அனைவருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சிலர் இதனை விட பலமடங்கு உதவி கொண்டு இருப்பீர்கள். இதன் மூலம் இன்னும் ஒரு சிலரும் அங்கங்கு ஊரில் இருக்கும் ஹோமுக்கு உதவினால் இன்னும் மகிழ்ச்சியே. அனாதைக்கு உதவுவது ஆண்டவனுக்கு செய்யும் சேவையை விட சிறந்தது. நன்றி ப்ரெண்ட்ஸ்.
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான
பணி, சகோதரரே
நீவிர், வாழ்க பல்லாண்டு ரெயின்போ இல்லத்தின்
முகவரியை தந்து
உதவினால் நன்றாக
இருக்கும், சகோதரரே
 

murugesanlaxmi

Well-Known Member
ரெயின்போ சிறப்பு குழந்தைகள் ஹோம், சின்ன ஆசாரி தெரு, தேசமுத்து மாரியம்மன் கோவில் நகர், உருளையன் பேட், புதுவை. சகோதரி. நீங்கள் உதவும் போது சொல்லுங்கள் சகோதரி. அவர்களில் இடத்தில் இருந்து போன் செய்து பேசிவிடுங்கள். அவர்களின் a/c நம்பர் வாங்கி தருகிறேன்.
 

Sundaramuma

Well-Known Member
எனக்கு இப்படி கல்யாண நாள் பிறந்த நாள் இப்படி நம் தனிப்பட்ட விசேஷ நாட்களுக்கு மட்டும் அனாதை இல்லங்களில் உணவளிப்பது கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு விஷயம் ....
அதை மாற்றி பொது பண்டிகை நாட்களில் உணவளிக்கலாம் .....இல்லாவிட்டால்
நிர்வாகியிடம் அவங்களுக்கு என்ன முக்கிய தேவை என்று கேட்டு பணம் சேர்த்து கொடுக்கலாம் ....இல்லாவிட்டால் நாமே வாங்கி கொடுக்கலாம் ....
போற்ற தகுந்த செயல் .....ப்ரோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top