From Me

Advertisement

shiyamala sothy

Well-Known Member
Hi malli mam!
உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் மாம். நன்றாக ஓய்வெடுத்து விட்டு மூன்று மாதத்திற்குப் பின்னர் புதுவருடத்துடன் புதுசாக வாங்கோ. குடும்பத்தைப் பார்க்க வேண்டும், வேலைக்கும் போகவேண்டும், கதையும் எழுதவேண்டும். உடல் தானாகவே ஓய்வு கேட்கும். அதுவும் கையில் மருந்தெல்லாம் ஏறுது என்றீர்கள் கண்டிப்பாக மூன்று மாத ஓய்வு தேவை. அப்படியாயின் பரீட்சை நன்றாக எழுதினீர்களா? உங்களின் உடல் நிலையைப் பற்றிக் குறிப்பிட விரும்புறது இல்லையென்றீர்கள். ஆனால் நாங்கள் எலோரும் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்திப்போம் தானே. கூட்டுப் பிரார்த்தனையில் உங்கள் உடல் நலம் தேறி ஆரோக்கியம் சீக்கிரம் திரும்பிவிடும். பிறகு நீங்கள் உங்கள் எழுத்தில் ஒன்றரை டொன்னுக்குப் பதில் ஆயிரம் டொன்கள் தெறிக்க விடுங்கோ. நீங்கள் நன்றாக உடல் நலம் தேறி ஆரோக்கியமாக நோய்நொடியின்றி சகல ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும், சம்பத்துகளும் பெற்று நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலங்கள் நீடூழிவாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
1537194312482.png1537195070742.png1537196800833.png
 

Chandhini

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ் ,

ரொம்ப நாளே நான் ஆளே வரலை ஏன்னா வர்றமாதிரியான சூழ்நிலை இல்லை. திடீரென்று உடல் நலக் குறைவு நானே எதிர்பாராத வகையில். ஒரு வார ஹாஸ்பிடல் வாசம் அதற்கு பின்னும் கைல ஊசி வழியா பலதடவை மருந்து, ரொம்பவுமே சிரமப் பட்டுட்டேன்.

பொதுவாவே இந்த மாதிரி விளக்கங்கள் கொடுப்பது எனக்கு பிடித்தமில்லை. ஆனாலும் என்னை தேடுபவர்களுக்கு நான் கண்டிப்பா என்னோட நிலையை சொல்லணும்ன்றதுக்காக தான் இது.

சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும், நான் நல்லா இருந்தா தான் எழுத முடியும். அப்படி ஒரு சூழல் தான் இப்போ. கடந்த ஆறு மாதமாவே எழுதறதுல தொய்வு தான். இப்போ இன்னும் நாள் ஆகும்.

மூன்று மாதம் ஓய்வு எடுத்துட்டு வரலாமா இல்லை வாரம் ஒரு எபி ன்னு ஏதாவது எழுதலாமா இப்படி ஒரு ஊசலாடிட்டு இருக்கேன். ஏன்னா எழுதாம என்னாலையும் இருக்க முடியாது.

எதோ ஒன்னு எதுவா இருந்தாலும் எனக்காக பொறுத்துக்கங்க, அட்லீஸ்ட் அடுத்த வருஷமாவது என்னோட எழுதற ஸ்பீட் தடையில்லாம வருதான்னு பார்ப்போம்.

ஒரு சின்ன ரிக்வெஸ்ட் கூட இங்கே நம்ம சைட்ல நிறைய புது ரைட்டர்ஸ், உங்க கம்மண்ட்ஸ் தான் அவங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும், ஒரு ரெண்டு வார்த்தை நிறையோ குறையோ சொன்னா அவங்களுக்கு எழுத ஊக்க சக்தியா இருக்கும்.

கண்டிப்பா பழையபடி கூடிய விரைவில் வர முயற்சிக்கறேன். சில மாதங்களுக்கு slow தான். please and sorry for that.
Madam please take care of yourself. Take ur own time. We, ur friends all wil wait with prayers. Bye. Take care.
 

Hema27

Well-Known Member
Hi mam...
Take care..
Take good rest...
Konjam gap vittutom adhu naala imsaingalaam vittu poirkunga nu ninaichidathinga...
Ippodhai ku naangalum gap vittrukom..
Neenga vandhone adhe kuuttam vandhruvom and adhe imsai thaan:p

So physical health oda serthu mental health um strong aagittu vanga..

We are waiting....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top