Enakku Therintha Vaarthaigal

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
fdc79d05-0bea-7170-0000-015fa8cdad72

நம்பிக்கை உரியவர்களிடம்
சொன்ன சொல்
மூன்றாமவரிடமிருந்து கேட்கும்போது
அடிபட்டு போகிறது
என் நம்பிக்கை
நம்பி'கை' கோர்க்க முடியா
நண்பர்களுக்காகவும்
நம்ப முடியா
எதிரிகளுக்காகவும்
தோற்கவே ஆசைபடுகிறேன்
அவர்களும் சந்தோச படட்டும்.

யாமினி அருண்

அருமை சகோதரி ஆனால் ஒன்று சகோதரி, விரோதியை கூட மன்னித்துவிடலாம். ஆனால் துரோகியை மன்னிக்கவும் கூடாது, மறக்கவும் கூடாது. அதற்காக பழி என்று சொல்லவில்லை. அவரால் நமக்கு கோடி வரும் என்றாலும் அந்த உறவு வேண்டாம். நம்பி"கை" கோர்க்க முடியாதவர்கள், நம்மை பொருத்தவரை இறந்ததுக்கு சமமானவர்கள்
 
banumathi jayaraman

உண்மைதான், சகோதரரே
 
yamini

Writers Team
Tamil Novel Writer
அறிவு நீங்கள் சொல்வதை ஏற்கிறது ஆனால் மனம் அவர்கள் சரியோ நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லையோ என்று தடுமாறுகிறது
 
fathima.ar

Well-Known Member
அறிவு நீங்கள் சொல்வதை ஏற்கிறது ஆனால் மனம் அவர்கள் சரியோ நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லையோ என்று தடுமாறுகிறது

இது உண்மை மனதின் போராட்டம்...
தவறுதலாக கூட பிறர்க்கு அநீதி இழைக்க மறுக்கும் உண்மை உள்ளத்தின் தடுமாற்றம்..
 
murugesanlaxmi

Well-Known Member
அறிவு நீங்கள் சொல்வதை ஏற்கிறது ஆனால் மனம் அவர்கள் சரியோ நாம் தான் சரியாக புரிந்து கொள்ள வில்லையோ என்று தடுமாறுகிறது
உண்மையின் போராட்டம் இப்படித்தான் இருக்கும் சகோதரி. ஆனாலும் ---------------------
 
yamini

Writers Team
Tamil Novel Writer
நாம் அனைவரும் பணிக்கு செல்லும் பெண்கள் ,,,இந்த வருட ஆய்வின் படி நம் மக்கள் தொகையில் பாதிக்கு பாதி பேர் வீட்டில் இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
இதில் நாம் குழந்தையின் நலனிற்காகவும் ,வருங்கால வளர்ச்சிக்காகவும் போராடும் நாம் ,குழந்தையின் தற்போதைய மன நிலையை ஆராய தவறுகிறோம்.

இன்றைய மன நல ஆராய்ச்சிபடி குழந்தைகளிடம் அதிகமாக பரவி வரும் நோய் " designer disease"

இது நோய் அல்ல சிறிய குறைபாடு ,,இதை பற்றி ஒரு சின்ன information.

இந்த

இந்த நோயை நாம் கவனம் மற்றும் கற்றலில் குறைபாடு அப்படினு சொல்வாங்க ,இந்த நோய் உள்ள குழந்தைகள், தந் பெற்றோரின் கவனத்தை கவர தற்கொலை முயற்சிகூட செய்யும் அளவுக்கு இது முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தகூடிய நோய்.
வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி ஓட்டமாகச் செல்லுவது, மேசையில் இருக்கும் பொருட்களை இழுத்து வீழ்த்துவது, வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் பையைத் திறந்து பார்ப்பது, வீட்டுக்கு வெளியே யாரும் பார்க்காத சமயத்தில் ஓடிச்செல்வது, வீதியைக் கடக்கும் போது இருபுறமும் பார்க்காமல் செல்வது, விளையாட்டுப் பொருட்களைத் தொலைப்பது அல்லது உடைப்பது, தாமதமாகத் துயிலுக்குச் சென்று முன்னதாகவே துயிலில் இருந்து எழும்புவது போன்ற செயல்கள் நான்கு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட குறைபாடு உள்ளவர்களின் செயற்பாடாக இருக்கின்றது.
இந்த குழந்தைகள் தான் அமெரிக்க ஆய்வாளர் களால் கண்டறியபட்ட designer diseases symptoms.
இந்த குழந்தைகளுக்கு முறையான் மருத்துவ சிகிச்சை கிடையாது ,ஏனெனில் இது ஒரு குறை அதனால் இதற்கு ஒரு தீர்வு ,குழந்தைகளிடம் நேரம் செலவிடுதலே ஆகும்.குழந்தைகளை காப்போம்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top