E4 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
நிறைய கேள்விகள் வருது......
1. சுந்தரியின் தோற்றம் ...... வடிவு பாட்டி லட்சணமா இருப்பதாக சொல்லறாங்க..... கலர் மட்டும் தான் கம்மி .......கண்ணன் பார்வையில் அவ குண்டு.... முகத்துல பரு...... எண்ணெய் வழியும் தலை ...... நாகரீக உடை இல்லை..... கருப்பு...... இவங்க ரெண்டு பேருல யாரு சொல்லறது நிஜம்...... சுந்தரி கருப்பு வகைல சேர்த்தி என்பது தவிர வேற இங்கே பெரிதாக குறை என்று இல்லை என்று என்னோட எண்ணம் ...... எதோ ஒரு படத்துல சுஹாசினி பட்டிக்காட்டு தோற்ற துலா வருவாங்க..... என்ன புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு......பாட்டு வரும்( ஒரு லைன் தான் தெரியும்) ...... பெஅஉட்டி பார்லர் கூட்டிட்டு போனா தீர்ந்து போற பிரச்சனை......
அது பள்ளி பருவ தோற்றம், உமா...
திருமணத்திற்கு முன் அவன் ஞாபகத்தில் இருந்த அவளது தோற்றம்...
பாட்டிக்கு பேத்தி அழகி தானே...
அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணில் தானே...

மேலும் கருப்பே அழகு... காந்தலே ருசி அல்லவா....
 

Lalithaganesan

Well-Known Member
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA.... ( ORU CHINNA CHANGE PANNINEN FRIENDS )

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
தவிக்குது ஒரு மனம்
மண்ணை விட
தவிக்குது ஒரு மனம்


என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்

வந்தாய் மணவாளனாய்
வாழ்ந்தேன் சில நாட்கள்
தந்தாய் கவிதையை
சென்றாய் விலகியே
வேண்டாம் என்றாய்
இன்று
நீ வந்தாலும்
வேண்டாம் என்கிறேன்
நான்
மண் மணம் விட்டு வராது இந்த பெண் மனம்

விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
எனக்கு
உன் மேல்
விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
சென்று விடு என் கணவா

மறு மனம் அது
தடுக்குது மறு மனம்
உன்னுடன் வருவதை
தடுக்குது மறு மனம்


பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய



போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
Super kavidhai pa
Aanalum 15 epi storya ippidi oru kavidhaiyila solla koodathupa
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓய் மலர்...:)
என்னப்பா ஒரே பக்கமா பார்க்காதீங்க...
இரண்டு பக்கமும் பாருங்க....
எனக்கு என்னவோ சுந்தரிக்கு கண்ணனை பிடிச்சு இருக்கும் என்றுதான் தோன்றியது.
இல்லைனா வண்டி எடுக்கிற அழகை ரசிக்க முடியாது.... 4 எப்பிக்குள்ள எப்படி முடிவு செய்ய முடியும் ....வெயிட் பண்ணுங்க.

ஹா.. ஹா. இதே நானும் நினைச்சேன், அவனை பிடிக்காம எல்லாம் ரசிக்க முடியாதுன்னு... எங்கயோ உள்ள ஆழத்துல இன்னமும் அவனை பற்றிய எண்ணம் இருக்கப் போய் தானே பார்க்க முடிஞ்சது...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அன்பு தோழமைகளே!

என்னுடைய profile picture எங்கள் வீட்டு நெல் வயல். நெற்பயிர்களுக்கு நடுவில் நிற்பது எனது அண்ணன். அவரது உயரம் ஆறு அடிக்கும் மேல். நெற்பயிர்கள் அவரைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

இது அழிந்து வரும் நாட்டு நெல் ரகம். ஒற்றை நாற்று நடவுமுறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்பட்டது

மல்லி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாவலை எழுதி கொண்டிருப்பதால் இத்தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

எனக்கு உங்க profile picture பிடிச்சுது கேட்கலாம் நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க... ரொம்ப அழகா இருக்கு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நன்றி சிந்து. பாராட்டெல்லாம் அண்ணனை தான் சேர வேண்டும். காவல் துறையில் பணிபுரியும் அவர் கிடைக்கும் சொற்ப நேரத்தில் இயற்கை விவசாயம் செய்கிறார். நம்மாழ்வாரின் சிஷ்யர்.

பாராட்டப்பட வேண்டிய மனிதர்... எங்களின் வாழ்த்தும் நன்றியும் சார்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top