'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !! ' - 32.1

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
காயத்தை காட்டி
காரணம் இன்றி பிரிந்து வந்தவனிடம் காயத்திலேயே காதலை காட்டி
கவலை நீக்கும் கீர்த்தி.....
கண்ணீர் விட்டு
கவலையில் தள்ளி நிற்கும்
கீர்த்தியை பார்த்தவனுக்கு குழந்தைத்தனமாய்
கள்ளம் கபடமற்ற சிரிப்பினை
காதலுடன் தேடி வந்த கீர்த்தியை
கண் குளிர பார்த்து
காதலுடன் ஆனந்தம் கொள்ளும் சரண்..
 

Priyaasai

Active Member
"வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!"

View attachment 10966

எழில் கிளம்பிய அடுத்த நொடியே சரண் கையில் சிக்காமல் கீர்த்தி அத்தனை வேகமாக உள்ளே ஓடியிருந்தாள்.

அதை கண்டவன் "ஏய் ஆழாக்கு நில்லுடி" என்றவாறே அவள் பின்னே சரண் துரத்தி செல்ல,

கீர்த்தியோ அதற்குள் கேட்டை திறந்து போர்ட்டிக்கோவை கடந்து உள்ளே நுழைந்து மாடிக்கு ஓட முயன்றவள் அவன் நெருங்கி விட்டதை உணர்ந்து உடனே அருகே இருந்த அறையினுள் சென்று கதவை தாளிட முயல அதற்குள் அவள் முயற்சியை முறியடித்து கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த சரண் அவளை இழுத்து மூடிய கதவின் மீது சாய்த்து இருபுறமும் அணையிட்டு அவளை நகர முடியாமல் செய்தவன்,

"ஏய் என்னையே வெளியே போக சொல்லுவியாடி நீ..?? அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேனா..??

'நீங்களும் தான் என்னை போக சொன்னீங்க அப்போ நான் உங்களுக்கு வேண்டாதவளா போயிட்டேனா..?? என்று கீர்த்தி திருப்பி கேட்க,

"யார் அப்படி சொன்னா..?? வேண்டாதவன்னு நெனச்சிருந்தா உன்னை தேடியே வந்திருக்க மாட்டேன்டி"

'தேடி வந்தா போதுமா..??' என்ற கீர்த்தியை மேலும் பேசவிடாமல் அவள் தாடையை பிடித்து "சொல்லுடி நான் யாரு உனக்கு..??" என்றான் அதட்டலாக


'ஹவுஸ்மெட்' என்று அசராமல் பதில் வந்தது கீர்த்தியிடம் இருந்து

"என்னது..??"

'ஆமாம்' என்றவள் அவன் கரத்தை விலக்க அவனோ சுவரில் இருந்த கரத்தை நகர்த்தி அவளிடையில் தவழவிட்டு 'நான் உன் புருஷன்டி' என்றான் அவள் விழிகளுக்குள் ஊடுருவி,

'யாரு நீங்களா..?? என்றவள் அவன் கரத்தை தட்டி விட்டு அவன் மார்பில் கரம் வைத்து முடிந்த அளவு பலமாக அவனை நகர்த்தி அவனிடம் இருந்து தள்ளி நின்றவள், 'நானும் பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு பொறுத்து போயிட்டு இருக்கேன் ஆனா நீங்க என்னை பேச வைக்காம விடமாட்டீங்க போல' என்று நாசி விடைக்க அவனை பார்த்தவள்,

'நான் ஹவுஸ்மெட் சொன்னா மட்டும் உங்களுக்கு கோபம் வருதே என்னை உங்களை விட்டு போக சொன்னா எனக்கு வராதா..?? நீங்க ரொம்பவே மாறிட்டீங்க மாமா முன்ன மாதிரி கிடையாது அதான் நீங்க சொன்ன மாதிரி இந்த நிஜமான உங்களை அக்செப்ட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அது தப்பா..??' என்று கேட்க சரணோ அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவளையே பார்க்க தொடர்ந்த கீர்த்தி,

'அது என்ன நீங்க சொல்றதை தான் கேட்கணும்ன்னு என்னை கம்பெல் பண்றது ஏன் எனக்கான முடிவை கூட நான் எடுக்க கூடாதா..?? அவருக்கு மகளா பிறந்த காரணத்தால அந்த உரிமையும் இழந்துட்டேனா..??' என்று அவள் திருப்பி கேட்க,

என்றுமே அவள் கூறுவது போல நினைத்திராத சரணுக்கு இன்றைய அவள் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று புரியாமல் நின்றான்.

'எதுக்கு என்னை இங்க இருந்து போக சொல்றீங்க காரணம் சொல்லுங்க' என்று அவள் நேரிடையாக கேட்கவும்

அவன் கண்களில் அதுநேரம் வரை இலகுத்தன்மை துணி கொண்டு துடைத்தார் போல மறைய கண்களை மூடி தன்னை நிலைபடுத்த முயன்றான் சரண் ஆனால் கீர்த்தியோ 'கண்ணை திறங்க மாமா' என்றவள் அவன் திறக்காமல் இருப்பதை கண்டு,

"எத்தனை முறை சொன்னேன் நீங்க எது பண்ணாலும் எனக்கு பிடிக்கும் மாமான்னு அப்பவும் என் வார்த்தையை நம்பாம போயிட்டீங்க இல்ல போங்க மாமா நல்லவனா இருக்கவும் ஒரு அளவு இருக்கு ஆனா நீங்க ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க' என்றவள் அவன் தாடையை பற்றி ஆமா எத்தனை நாள் திட்டம் போட்டீங்க இப்படி என்னை அசிங்கபடுத்தி எல்லார் கிட்டவும் திட்டு வாங்க வைக்க" என்று கீர்த்தி எள்ளலாக கூறவும் உடனே கண் திறந்து அவளை பார்த்தவன்,

'என்னது நான் அசிங்கபடுத்தினேனா..?? என்னடி உளர்ற ..??' என்று அவன் சீற,

'ஆமா நீங்க தான் ப்ளான் பண்ணி பண்ணினீங்க..' என்று அவனை குற்றம் சாட்டியவள் 'இப்போ என் கேள்வி அது இல்லை எதுக்கு என்ன போக சொல்றீங்க அந்த காரணத்தை சொல்லுங்க' என்று கேட்க சரணோ அவளை பார்ப்பதை தவிர்த்து வேறுபுறம் திரும்ப,

அவனை திரும்ப விடாமல் அவன் முகத்தை பற்றி தன் புறம் திருப்பியவள் "இப்போ இது தானே உங்க பிரச்சனை" என்று மறுகையால் ஆடையை விலக்கி தன் மேனியின் காயத்தை சுட்டி காட்டிட,

'கீர்த்தி' என்று சிறு அதிர்வுடன் அவளை பார்த்தவனுக்கு மேலும் வார்த்தை எழாமல் போக

'போங்க போங்க நீங்க சொல்லாட்டியும் எல்லாம் எங்களுக்கு தெரியும், இப்படி விட்டுட்டு போறதுக்கு எதுக்கு தேடி வந்து கல்யாணம் பண்ணனும்..??' என்ற கீர்த்தியோ அவனை இழுத்து கொண்டு அங்கிருந்த கண்ணாடியின் முன் நிறுத்தியவள் நொடியும் தாமதிக்காமல் அவன் சட்டையை களைந்து 'அப்போ இதுக்கு நான் என்ன செய்யட்டும்..??' என்று அவன் மேனியில் அவளால் ஏற்பட்ட நகக்கீறல்களையும், பற்த்தடங்களையும் அவளை விடவும் அதிகமாக சிவந்து கன்றி போயிருந்த காயங்களையும் சுட்டி காட்டிட சரண் முகத்தில் இளமுறுவல்..!!

"சொல்லுங்க உங்களுக்கு இப்படி நடக்க நான் காரணமாகிட்டேன் உங்களை வலிக்க வச்சிட்டேன் சொல்லி நானும் பத்து நாள் எங்கயாவது போகட்டுமா..??" என்று கோபத்தோடு கேட்க அப்போது தான் அவர்களுக்கிடையேயான எதார்த்த நிகழ்வை அவன் பூதாகரமாக கற்பனை செய்து கொண்டு ஓடி வந்தது புரிய சரண் மனதில் நிம்மதியும் முகத்தில் புன்னகையும் மலர்ந்தது.

அதை கண்டு கொண்ட கீர்த்தி, " எங்கயோ எதுக்கு போகணும் பேசாம நான் பெங்களூர்கே போறேன் நீங்க உங்க மனசு மாறின பிறகு வந்து கூட்டிட்டு போங்க" என்று கதவை திறந்து வெளியேற முயல,

'கீர்த்தி நில்லு' என்று அவளை பிடித்து நிறுத்தி, 'இதெல்லாம் ஒரு வலியாடி..?? என்றவனுக்கு மனதளவில் உண்டான காயங்கள் கொடுக்காத வலியை விடவா உடலில் கொண்ட காயங்கள் கொடுத்துவிடும் என்ற எண்ணம் தோன்ற என்ன முயன்றும் சரணின் முகத்தில் வலி பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

வார்த்தையாக அவளிடம் சொல்லாவிட்டாலும் அவன் எண்ணம் செல்லும் போக்கை உணர்ந்த கீர்த்திக்கும் கண்கள் கரித்து கொண்டு வர முயன்று கண்ணீரை உள்ளிழுத்து அழுகையை கட்டுபடுத்தியவள் "அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா..??" என்று கரகரத்த குரலை செருமி கொண்டே கேட்க,

'இல்ல' என்று சரணின் தலை தானாக அசைந்து இத்தனை நாட்களாக அவனை விட்டு விலகி செல்வதிலேயே குறியாக இருந்தவள் இப்போது அவனை புரிந்து கொண்டு தேடி வந்ததில் சிறகின்றி பறந்தவன் அவளை நெருங்கி இறுக்கமாக அணைத்து கொண்டு 'இதுக்கு மேலயும் உனக்கு உரிமை இருக்குடி' என்றான் அவள் நெற்றியில் இதழ் பதித்து.


"இல்ல அதெல்லாம் ஒன்னும் கிடையாது..?? காரணமே இல்லாம என்னை அங்க விடவும் எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா..??" என்றவளின் இதழ்கள் அவன் வெற்று மார்பில் உரச "அதான் உனக்கு காரணம் தெரிஞ்சிடுச்சே அப்புறம் என்ன..??" என்று புன்னகையோடு கேட்ட சரணின் அணைப்பில் இன்னுமே இறுக்கம் கூடி அவள் சுவாசத்தை தடை செய்தது.

'விடுங்க என்னை'

'முடியாது'

'மூச்சு விட முடியலை விடுங்க மாமா' என்றாள் சிணுங்கலாக

தன் கரங்களை அவன் சற்று தளர்த்தவும் கீர்த்தி லாவகமாக அவனிடம் இருந்து நழுவிட,

'ஏய் எங்கடி போற..?' என்று சரண் அவளை பிடிக்க முயல அறையின் ஒரு கோடியில் சென்று நின்றவாளோ "இங்க பாருங்க இது என் போர்ஷன் அது உங்க போர்ஷன் இப்போ நான் சொல்றதை அங்க இருந்தே கேட்கணும் இங்க வரகூடாது" என்று கட்டளையாக கூற,

சரணோ கூந்தலை ஒதுக்கியவாறு நெற்றியில் இருந்து வடிந்த வியர்வையை சுண்டி விட்டு இதழ்கள் நடுங்க எங்கே நெருங்கி விடுவானோ என்ற சிறு பதட்டத்தோடு அவள் கூறுவதை கண்டவனின் பார்வையில் ரசனை கூடிட அமைதியாக அவள் பேச்சை கேட்க தொடங்கினான்.

"என்ன சொன்னீங்க எனக்கு உரிமை இருக்கா..?? இல்ல இல்லவே இல்ல நீங்க அப்படி நினைச்சி இருந்தா என்னை விட்டுட்டு வந்திருப்பீங்களா..?? எங்கே கீர்த்தியா வந்தா வீட்டுக்குள்ளவே விடமாட்டீங்கன்னு நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு மாறுவேஷத்துல ஆரத்தியா வந்தா என்னை வேண்டாம் சொல்லி போ போன்னு விரட்டிட்டு இப்ப மட்டும் என்ன புருஷன்..?? என்ன உரிமை..?? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் முதல்ல நீங்க தள்ளி போங்க" என்று உதட்டை பிதுக்கி கொண்டு சிறு குழந்தையாக ஊடல் கொள்பவளை கண்டு தள்ளி நிற்க முடியாமல் மீண்டும் நெருங்கி அவளை அணைத்து கொண்டு நின்றவனிடம்,

" விடுங்க " என்று அவனை விலக்கி விட்டு "இன்னொருமுறை இப்படி கிட்ட வந்து புசுபுசுன்னு மூச்சு விட்டீங்க மூக்கை கடிச்சி வச்சிடுவேன்" என்று அறையின் வாயிலில் நின்று கொண்டு கூற அதை கேட்ட சரண் சட்டென சிரித்துவிட்டான்.

" ஏன் இப்போதான் அங்க கடிக்காம விட்டது உனக்கு நியாபகம் வந்ததா..?? அன்னைக்கு மறந்துட்ட போல கிட்ட வா இன்னும் எங்க எல்லாம் மறந்தேன்னு சொல்றேன்" என்று விஷமக்குரலில் கூறியவாறு அவளை நெருங்கி அணைக்க ,

கீர்த்தியோ அவன் மார்பில் கரம் வைத்து ' ஒன்னும் வேண்டாம் !! தள்ளி போங்க" என்று அவனிடம் இருந்து தள்ளி நிற்க,


'போதும் போதும் இத்தனை வருஷம் தள்ளி இருந்ததெல்லாம் போதும் கிட்ட வா..!!" என்று சிரிப்போடு அழைத்தான்.

'முடியாது முடியவே முடியாது ஒருவேளை நீங்க என்னை இங்க இருந்து போக சொல்லாம இருந்திருந்தா நீங்க சொல்றதை கேட்டிருப்பேன் ஆனா இப்போ கேட்கவே மாட்டேன்' என்று கதவை திறந்தவள் அவன் புறம் திரும்பி

"இனிமேல் உங்க பேச்சை கேட்காத இந்த நான் தான் நிஜம் மாமா..!! நீங்களும் என்னை அக்செப்ட் பண்ண ட்ரை பண்ணுங்க..!! ஹான் அப்புறம் இன்னொரு விஷயம்" என்று அவனை பார்க்க

'என்ன ..??'

"ஊருக்கு போறேன் "

"எங்க..??"

"நீங்க தான் என்னை வேண்டாம் சொல்லிட்டீங்கல்ல அதான் இப்போ நான் பெங்களூர் போறேன் இந்த முறை உங்க கிட்ட சொல்லிட்டே கிளம்புறேன் பை "

அவனோ அட்டகாசமான சிரிப்புடன் 'எதுக்குடி'

'ஹான் நானும் என் மாமாவை நானே பிராண்டி வச்சதை நெனச்சி ரூம் போட்டு அழனும் அதுக்கு தான்..!! ஆனா திரும்பி வரதுக்கு எனக்கு ரெண்டு வருஷம் டைம் வேணும் அதுவரை யாராவது சரண் , கரண்ன்னு சொல்லிக்கிட்டு என்னை தேடி வந்தா நானும் இதே மாதிரி அவங்களை தொரத்துவேன் ஜாக்கிரதை" என்று சுட்டு விரல் நீட்டி உதட்டை சுழித்து வெளியே செல்ல தலையை கோதியவாறே முகம் கொள்ளா புன்னகையுடன் செல்லும் அவளையே பார்த்திருந்தான் சரண்.

இதை !! இதை தானே..!! இந்த கீர்த்தியை அவன் மீதான அவள் உரிமையை, சீண்டல்களை, கோபங்களை, மகுடமாக அவளது குழந்தைதனத்தை தானே இத்தனை நாட்களாக இல்லையில்லை இத்தனை வருடங்களாக தொலைத்திருந்தான். பெங்களூரில் அவளை சந்தித்ததில் இருந்தே தன்னை கண்டு அஞ்சி, அழுது, நடுங்கி, ஒதுங்கி சென்று கொண்டிருந்தவளை கண்டவனுக்கு எங்கே இத்தனை வருடங்களில் அவளை தொலைத்து விட்டோமோ மீட்கவே முடியாதோ என்று அலைப்புருதல் மேலோங்கி அவனை வதைக்க இப்போது கீர்த்தி தன் இயல்பு திரும்பி இருப்பதை கண்டவனின் மகிழ்ச்சி சொற்களால் விவரிக்கமுடியாதவை..!!

"எத்தனை கசடுகள் மனதை விட்டு அகலாமல் அழுத்தினாலும் அதை எல்லாம் தூர எறிந்து தான் பழையபடி மாறினால் மட்டுமே தன்னை சுவாசமாக கொண்டு உயிர்வாழும் சரணிடம் மாற்றம் கொண்டு வந்து உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்" என்று உணர்ந்து கீர்த்தி தன்னை மாற்றிக்கொள்ளவும் சொல்லாமலே சரணிடம் மாற்றம் தொடங்கி விட்டது.

சரணுக்கு நடப்பவையை நம்ப முடியவில்லை எப்படி இது நிகழ்ந்தது..!! அவன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால் எங்கே மீண்டும் தன்னை விட்டு அஞ்சி நடுங்கி விலகிவிடுவாளோ என்று அவன் நினைத்திருக்க நிஜம் அதற்க்கு நேர்மாறாக இருந்தது. கனவில் மட்டுமே இவ்வாறு காட்சி கொடுத்து என்றோ மடிந்திருக்க வேண்டியவனின் மூச்சாகி இருப்பவளை மட்டுமே சுவாசித்து இன்று வரை உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் இப்போதைய அவள் உரிமையான ஊடலில் கோபத்திற்கு பதில் மகிழ்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்தது சரணிடம் ..!!

ஆம் எத்தனை எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து மீண்டு அவனை உயிர்பித்து கொண்டிருப்பதே கனவில் அவன் காணும் கீர்த்தியின் இந்த மழலை முகமும் சிணுங்கள் பேச்சும் தானே..!! இன்று நனவிலும் அதை காணும் சரணின் மகிழ்வை விவரிக்கவும் வேண்டுமா என்ன..?? என்னவோ வானம் வசப்பட்ட நிலையில் முகம் கொள்ளா பூரிப்பும் மனமெங்கும் ததும்பி வழியும் மகிழ்வும் பரவ கண்களை மூடி நிதானமாக இந்த நொடியை அனுபவித்து கொண்டிருந்தான்.

தொலைந்த காதல் கை சேர்ந்த பின் எப்படி தொலைந்தது..!! எதனால் தொலைந்தது..?? ஏன் தொலைந்தது..?? எப்படி கிடைத்தது..?? யாரால் கிடைத்தது..?? எதனால் கிடைத்தது..?? என்ற முட்டாள்தனமான ஆராய்ச்சியை மேற்கொள்வதை விட உயிரினும் மேலானவளும் அவள் காதலும் கை சேர்ந்த சொர்க்கமாக அவன் வசமான பின் அதை மீண்டும் தொலையா வண்ணம் தக்கவைத்து கொண்டு வாழ்வது தானே புத்திசாலிதனம்..??

இப்போது அதை தான் சரணும் கீர்த்தியும் தங்களால் இயன்றவரை செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர் இதுநாள் வரை கோபத்திலும் அழுகையிலும் இருவருமே மனதை அழுத்தி கொண்டிருந்த பாரத்தை மற்றவரிடம் இறக்கி வைத்த பின் மீண்டுமான ஒரு தன்னிலை விளக்கம் இருவருக்குமே அனாவசியமானது..!!

அவளுக்காக அவளை நீங்கி அவன் வந்ததிலேயே சரண் காதலும் அவனுக்காக அவனை தேடி அவள் வந்ததிலேயே கீர்த்தியின் காதலும் புனர்ஜென்மம் எடுத்திருக்கும் நிலையில் ஆரா ரணங்களை கிளறி காயம் கொண்டு வலியை வாழ்க்கை முழுக்க தொடரவிடும் முட்டாள்தனத்திற்கு இருவருமே தயாராக இல்லை.

மீசை துடிக்க அதரங்கள் புன்னகையில் மிளிர இமையோரம் ஈரம் கசிய இருகரங்களையும் விரித்து கண்களை மூடி படுத்திருந்த சரண் முகத்தில் இன்னுமே வற்றாத மகிழ்ச்சி..!! அவன் உடலின் அத்தனை செல்களும் சந்தோஷக்கூத்தாடி கொண்டிருந்தது அதீத மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தவனுக்கு கண்களை திறக்கும் எண்ணமே எழவில்லை. பெங்களூர் செல்வேன் என்று குறும்புடன் மிரட்டி கதவடைத்து சென்றவளை ஓடி சென்று நிறுத்தும் எண்ணம் இல்லை.., அவளுடன் செல்ல சண்டை இட ஆசை இல்லை.., குறும்பு கூத்தாடும் அவள் விழிகளிலும் இதழ்களிலும் முத்தமிடும் ஆசையில்லை, அவளை கண்ட நாளில் இருந்து அவள் கழுத்தை அலங்கரித்திருக்கும் சங்கிலியோடு உரசி உறவாடும் எண்ணம் தோன்றவில்லை, உன்னை விட குறைவாக காயம் கொண்ட என்னை மேலும் காயபடுத்தி கணக்கை சமன்படுத்து என்று சொல்லாமல் சொன்ன அவளோடு மோகம் கொள்ளும் எண்ணம் இல்லை. அதீத மகிழ்ச்சியில் கிட்டத்தட்ட மூர்ச்சையாகாத நிலையில் இருந்தவனுக்கு இப்படியே இந்த நிறைவுடனே இந்த நொடியே செத்துவிட மாட்டோமா..?? என்ற எண்ணம் மட்டுமே அவனிடம்...!!

ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்துவிட்டேன் கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க யாருக்கும் இன்னும் பதிலளிக்கவில்லை கொஞ்சம் வேலை பளு தவறாக கொள்ளவேண்டாம் சீக்கிரம் பதில் தருகிறேன்..

நன்றிகள்


ருத்ரபிரார்த்தனா
Nice
 

keerthukutti

Well-Known Member
அருமையான பதிவு கீர்த்தி வருகைக்கு பின் கதை எப்படி போக வாய்ப்பு உண்டு என்று ஒரு அனுமானம் இருந்தது ஆனால் முழுதாக வேறு மாதிரி கொடுத்திருக்கீங்க சிஸ்... அவங்க காதலோட ஆழத்தை இதை விட அழகா சொல்ல முடியாது...என்ன மனுஷன் சரண் ரொம்ப பிடிக்குது :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top