"வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !! " - முன்னோட்டம்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்..

இன்னைக்கு valentines day அதுவுமா சரண் கீர்த்திக்கு டீசர் போடாம போனா தெய்வ குத்தம் ஆகிடும் அதான் டீயோட வந்துட்டேன். குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க.


"இங்க பாருங்க மாமா இப்படி எல்லாம் என்னை டைவர்ட் பண்ணா அப்புறம் நான் சொல்ல வந்ததை மறந்துடுவேன்... நான் பேசும்போது குறுக்க பேசக்கூடாது வாய் மேல கை வைங்க" என்று கீர்த்தி அதட்ட,

மடை திறந்த அவள் பேச்சை ரசித்து கொண்டிருந்தவன் இறுதி வரிகளில் கட்டுபடுத்த முடியாத சிரிப்புடன் அவளை நெருங்கி அவள் இதழில் ஒற்றை விரலை வைத்து, 'வச்சிட்டேன்டி' என்றிட,

கீர்த்தியோ திகைத்து அவனை பார்க்க இப்போது அவன் விரல் அவளிதழை மென்மையாக வருட தொடங்கி இருந்தது, அதை கண்டவளின் சுவாசக்காற்று தாளம் தப்பி போக, அவன் கையை அழுத்தமாக பிடித்து, 'என்ன பண்றீங்க'என்றாள்.

'நீதானே வாய் மேல கை வைக்க சொன்ன'

'மாமா' என்று கண்களை சுருக்கி கோபமாக அவனை முறைத்து அவனிடம் இருந்து தள்ளி நின்றவள் "நான் சொன்னது உங்களுக்கு..!! உங்க வாய் மேல கை வச்சிட்டு அமைதியா நான் சொல்றதை கேட்க சொன்னேன்".

'ஓஓ அப்படியா..??' என்றவனின் விரல் இன்னுமே அவளிதழை விட்டு நகர மறுக்க கீர்த்தியே அதை எடுத்து அவன் இதழ் மீது வைத்து இப்படிதான் இப்போ புரியுதா..?? என்று கேட்க,

தன் விரலோடு சேர்த்து அவள் விரல்களும் அவனிதழை உரசிக்கொண்டு இருப்பதை கண்டு "புரியுது புரியுது..!! எப்பவும் இப்படி புரியிற மாதிரி சொல்லுடி சில நேரம் நீ சொல்றது எல்லாம் என் காதுல வேற மாதிரி விழுது.."

"விழும் விழும்..!! இருங்க இப்படியே போச்சுன்னா வேற மாதிரி விழுற அந்த காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துறேன் அதுக்கு அப்புறம் சொல்றது எல்லாம் சரியா விழும் இப்போ முதல்ல நல்ல பிள்ளையா உட்காந்து நான் சொல்றதை கேளுங்க" என்று கூறவும்,

அவள் உட்கார சொன்னது தான் தாமதம் உடனே அமர்ந்திருந்த கீர்த்தியின் மடியில் சரண் அமர போக,

'மாமா என்ன பண்றீங்க..??' என்றாள் அவன் முதுகில் கரம் வைத்து தடுத்தவாறே

'நீ தானடி உட்கார சொன்ன..??'

"வேண்டாம் மாமா நீங்க என்னை ரொம்ப படுத்துறீங்க ஒழுங்க பக்கத்துல இல்லல்ல இருங்க.." என்றவள் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டு, "இதுல உட்காருங்க" என்றவள் முன்ஜாக்கிரதையாக அவனிடம்,

"இதோ பாருங்க நான் சொல்ற வரை இந்த சேர்ல இருந்து எழக்கூடாது, குறுக்க பேசக்கூடாது, எதுக்காகவும் வாயை திறக்க கூடாது கையும் காலும் இப்போ இருக்கிற இடத்த விட்டு வேற எங்கயும் போக கூடாது புரிஞ்சதா..??" என்று கேட்க,

'மூச்சு விடலாமா கூடாதா..??' என்றவனிடம் அடக்கப்பட்ட புன்னகை

கீர்த்தியோ தோய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள், 'ஆம்' என்பதாக தலையை மட்டும் அசைக்க,

வாய் திறக்க கூடாதுன்னு சொன்னியே தும்மல், விக்கல் வந்தா என்ன செய்யட்டும்..?? என்று கேட்க கீர்த்தியின் முகத்தில் இதற்கு மேலும் 'முடியாது அழுதுடுவேன்' என்பதாக அழுகைக்கான அறிகுறி தென்பட தொடங்கி விட்டது.

அதை கண்டவன், சரி சரி மொசக்குட்டி நீ சொல்லு நான் அமைதியா கேட்கிறேன் என்றவன் இருகரங்களையும் கட்டிக்கொண்டு வாய் மீது விரல் வைத்து அமைதியாக அவளை பார்த்தான்.

என்ன சொல்ல..??

'நீதானே ஏதோ சொல்லனும்ன்னு சொன்ன..!!'

'இனி என்னத்தை சொல்ல..!! நான் என்ன பேச வந்தேன்னு எனக்கு மறந்து போச்சு போங்க..

***


"அது நீ இப்போ இருக்க மாதிரி நார்மலா இல்லாம ஏதோ என்னை வில்லனை பார்க்கிற மாதிரி பார்த்து பயந்தா எனக்கு கோவம் வராதாடி" என்று அவனுமே கோபத்தோடு கேட்க,


"வேண்டாம் மாமா நீங்க மட்டும் இல்ல நானுமே பழசை பேச வேண்டாம்ன்னு பார்க்கிறேன் இப்படி கேள்வி கேட்டு என்னை பேச வைக்காதீங்க "

இப்போ மட்டும் உன் பேச்சுக்கு என்னடி குறை..?? முன்ன விட வேகமாவே வருது..

நீங்க மட்டும் முன்ன மாதிரி இல்லாம புதுசு புதுசா எதுனாலும் பண்ணி என்னை பயமுறுத்தலாம் ஆனா நான் புதுசா பேசக்கூடாதா..?? என்று சடைத்து கொள்ள,

கண்கள் மின்ன அவளை பார்த்தவன், "நான் என்னடி பண்ணேன் சொல்லு கேட்போம்" என்று அவள் தோளில் கைபோட்டு தன்னை நோக்கி இழுக்க,

"இதோ பாருங்க மாமா இன்னொரு முறை நான் என்ன நெனச்சேன் என்ன பண்ணேன் கேட்டுட்டு வந்தீங்க என்ன பண்ணுவேன்னு தெரியாது..." என்றாள் எச்சரிக்கும் தொனியோடு

'என்னடி பண்ணுவ..?' என்ற சரண் அவளை நெருங்க அதுநேரம் வரை கீர்த்தி கொண்டிருந்த தைரியம் அனைத்தும் வற்றி போனது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top