ஹாய் மக்களே!!!
மேவு கடல் நானுனக்கு..!!ல இருந்து ஒரு குட்டி டீசர்!!!
Eagerly waiting for your comments makkale
மேவு கடல் நானுனக்கு..!!
அந்த பெரிய காரிடாரின் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கும்… இங்கிருந்து அங்குமாக கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் தன் முழு கவனத்தையும் பதித்தவளாக உலாவிக் கொண்டிருந்தாள் சமுத்ரா…!
அவளுக்கு நேர்கீழே இருந்த ஹாலில் அவளைபோலவே ஆனால் அவளைவிட சற்று பதட்டமாக அங்குமிங்கும் நடை பழகிக் கொண்டிருந்தார் அவள் அம்மா!
மனம் முழுக்க பதட்டம் மேகமூட்டமாய் சூழ்ந்திருக்க வாயிலேயே பார்த்தவாறு நடந்துக் கொண்டிருந்தார்.
மணி இரவு பன்னிரெண்டை தாண்டிய நிலை!
வெளியே போர்ட்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தத்தில் அவளது கவனம் சிதற மேலிருந்தபடியே கீழே எட்டிப் பார்த்தால்… அவள் அன்னை அவசர அவசரமாக வாசல் பக்கம் சென்றிருந்தார்.
வந்தது யார் வண்டி என்று தெரிந்தும் அசையாமல் நின்றவள் கீழே கண்ட காட்சியில் புத்தகத்தை அங்கேயே கீழே ஒரு ஓரமாக வைத்துவிட்டு படி இறங்கியிருந்தாள்!
அவள் படியிறங்கி வரவும் விக்ரமை தாங்கியவாறு அரவிந்தன் வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.
ஒருபக்க டீசர்ட்டின் கையை மடக்கியவாறு விறுவிறுவென நடந்து வந்தவள அரவிந்தனை கேள்வியாக ஒற்றை புறுவம் உயற்றி நோக்க… அவனோ முதலில் தலைகுனிந்தவன் பின் அவளிடம்…
“மொத தடவ…. நான் எவ்வளவோ சொன்னேன் விக்ரம் கேக்கவே இல்ல…” என்றிழுக்க விக்ரமாகப்பட்டவனோ அவன் தோளில் இருந்து விலகிக் கொண்டு தள்ளாடியபடி அவளை நோக்கி வந்தான்….
**********
விக்ரமை அவர்களது அறையினுள் தள்ளியவள் கீழே குற்ற உணர்வுடன் நின்ற அரவிந்தனிடம் வந்து…
“நான் பாத்துக்கறேன்… லேட்டாச்சு நீங்க கிளம்புங்க!” என்று அவனை வழியனுப்பி வைத்துவிட்டு வர
கவலையில் தோய்ந்த முகத்துடன் நின்றிருநத அன்னையிடம்…
“நான் பாத்துக்கறேன்மா நீ போய் தூங்கு” என்றாள்.
இம்முறை அவரால் எப்படி அவனுக்காக அவளிடம் பேச முடியும்…? அவர் இதை அவனிடம் இருந்து எதிர்ப் பார்த்திருக்கவில்லை… ஒவ்வொரு முறையும் அவனுக்காக பேசுபவர் அவர்தான் ஆனால் இன்று…?
************
சூரிய ஒளி கண்களை கூச திரும்பி படுத்தவனது தூக்கம் பறந்துவிட லேசாக கண்களை கசக்கியவாறு எழுந்து அமர்ந்தான்.
அவனுக்கு நேரே அந்த பெரிய அளவிலான சேரில்… இடது காலின் தொடைமேல் வலது காலின் பாதத்தை வைத்து கைகளை கட்டிக் கொண்டு அதில் வலதுபக்க முழங்கையை சேரின் பக்கவாட்டில் வைத்திருந்தவள் தலையை கையில் தாங்கியவாறு பார்த்திருந்தவளின் கண்கள் சிவந்திருந்தது!
தூக்கம் கலைந்தவன் எழுந்தமர எழுந்து வந்தவளின் வலக்கரம் அவன் செவிப்பறையை கிழித்துவிடுவது போல் இடியாய் இறங்கியிருந்தது!
ஒரு நொடி அதிர்ச்சியில் அவன் உரைந்துவிட அறைந்த வேகத்தில் குளியலறையினுள் நுழைந்திருந்தாள் சமுத்ரா.
தன்னை ஒருவர் காயப்படுத்த நினைத்தாலே அவர்களை இருமடங்கு கொடுப்பவன் அவளின் அறையில் அதிர்ந்து அமர்ந்திருந்தான்… வெளியே வந்தவள் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்…
Stay tuned