மெல்ல உன் வசமாகுறேன் -5

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
அருமை ரேணு டியர்.
அம்மாடி இதுங்க ரெண்டும் என்ன இப்படி சண்டை போட்டுக்கிறாங்க??
அடேய் பரங்கிமலை நீ எப்படி மாறினாலும் எங்களுக்கு உன்னை பிடிக்காது டா.
Y this kolaveri sis? Let him get a chance to change...v ll start loving him :)
 

உதயா

Well-Known Member
அடேய் பிரசன்னா உன்னோட பேஸ்ட்ல உப்பு இல்லையா ஆனால் பிருந்தாவோட பேஸ்ட்ல உப்பு உரைப்பு புளி மிளகு சீரகம் எல்லாம் இருக்கு போல அதான் அவ கடிச்ச கடியில் உன் வாய் அனகோண்டா வாய் மாதிரி ஆகிடுச்சு

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று சொல்லி சொல்லியே ஒரு டூத் பேஸ்ட் விளம்பரம் கூட பார்க்காமல் விட்டுட்டியே

பிருந்தா இருந்தாலும் நீ கொஞ்சம் அப்பாவியாக தான் இருக்க அவன் உன்னால் தான் இப்படி ஆகிட்டுன்னு சொன்னால் நீயும் பதிலுக்கு அப்படி எல்லாம் இல்லை பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்ட ன்னு சொல்லுவேன் என்று மிரட்டணும் அவன் பேமிலியும் இப்போதைக்கு உன்னை தான் நம்புவாங்க

நீ அவனை மாமான்னு கூப்பிடும் போது மாங்கா மடையனை ஷார்ட் ஃபார்ம்ல கூப்பிடுற மாதிரி இருக்கு

அடேய் லிப்ஸ்டிக் இப்படி ஒரு மொக்கை கதையா ரெடி பண்ணுவ. உனக்கு காதலி இருந்தாள் உன்னோட லிப்ஸ்டிக் பாரத்ததும் என்னோட காதலி நியாபகத்துக்கு வரா அப்படின்னு சொல்லி இருந்தால் கூட கடுப்பாகி லிப்ஸ்டிக் போடுறதை நிறுத்தியிருப்பா அதை விட்டு அடுத்தவன் காதலி நியாபகத்துக்கு வரா ன்னு சொன்னா இன்னும் அதிகமா தான் போடுவாள்

ஒரு முத்தத்துக்கு ஒரு சீட் ஃப்ரியா கொடுக்குறியேடா
முப்பது நாளில் முப்பது கோடி செலவு செஞ்ச அருணாசலம் மாதிரி முப்பதே நாளில் முத்தத்துக்கு மொத்த காலேஜ் சீட்டையும் கொடுத்துடுவான் போலயே
யோவ் அரங்கா மத்த பிள்ளைங்கலாம் காதல் மயக்கத்தில் உனக்கு எதிராக கல்யாணம் தான் செஞ்சுதுங்க ஆனால் இவன் காதல் மயக்கத்தில் மொத்த காலேஜையும் ஃப்ரியா வித்துடுவான் போலயே
அரங்கநாதன் கூடிய சீக்கிரம் விடுகதையா இந்த வாழ்க்கை எனது விரல் என் கண்ணை குத்தியதே என்று பாடிகிட்டே சுத்த வேண்டிய நிலைமை வந்திரும் அதனால் இப்பவே மனசில் ரேணுகா அம்மனை நினைத்து விரதம் இருந்து வேண்டிக்கோ ஏன்னா அவங்க நினைச்சா மட்டும் தான் பிருந்தாக்கு உன் பிள்ளை பிரசன்னா மேல் காதல் வரும்.
பிருந்தாக்கு எவ்வளவு சீக்கிரம் காதல் வருதோ அவ்வளவு சீக்கிரம் உன் காலேஜ் தப்பிக்கும்

பெட்ரூம், பாத்ரூம், காருக்குள்ள வச்சு பிரசன்னா பிருந்தா சண்டை தான் போட்டாங்கன்னு நாங்கள் எல்லோரும் நம்பிட்டோம் என்று அவங்க இரண்டு பேர் கிட்டயும் சொல்லிடுங்க

அவ ஸ்லிவ்லெஸ் போட்டால் நீ சட்டை இல்லாமல் போவியா ஆனாலும் இப்படி பழிக்கு பழி வாங்குற புருஷனை இப்போ தான் முதல் முறையாக பார்க்கிறேன்

சட்டைய மாத்தி போட்டுட்டு போனால் பார்க்கிறான் எல்லாம் லூசுன்னு நினைக்க மாட்டாங்களா

அப்புறம் படம் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது உப்பு இருக்க பேஸ்ட் மறக்காமல் வாங்கிட்டு போயிடு அப்போ தான் அடுத்த தடவை கடி வாங்கும் போது தப்பிக்க முடியும்

சர்ப் எக்செல் வேணும்னா வாங்கிட்டு போ இல்லை கறை நல்லது அப்படின்னு சட்டை பாதுகாப்பா வச்சிருக்கணும் என்று நினைச்சா தேவை இல்லை உன்னை நம்பி காலேஜை கொடுத்ததுக்கு ஒரு இரண்டு ரூபாயாவது அரங்கநாதனுக்கு மிச்சம் ஆகட்டும்
 

Nachu

Well-Known Member
Y this kolaveri sis? Let him get a chance to change...v ll start loving him :)
:LOL: :LOL:
அவன் மாறுறான் மாறலை..... அது பிரச்சனை இல்லை.
நீங்க தடால் ன்னு கவுந்துடுவீங்க அவனை பார்த்து.
நான் எல்லாம் இந்த பரங்கிமலைக்கு போர்க்கொடி தான் தூக்குவேன். இவன் எப்போ தன்னோட attitude change பண்ணி பிருந்தாக்கு டென்ஷன் கொடுக்காமல் இருக்கானோ....... அப்போ பார்த்துக்கலாம் ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top