மெல்லிய காதல் பூக்கும் P21

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் நல்லா இருக்கிறீங்களா? அடுத்த டீசரா ??? உறவால் உயிரானவள் டீசர் போட்டு எத்தனை நாளாச்சு கதை எங்கன்னு நீங்க கேக்குறது கேக்குது.... :D:D

பாமிலில ரெண்டு பங்க்சன் ரொம்பவே பிஸிபா... கடைசியா எழுதினது எந்த கதையோ அதுவே மைண்டுல இருக்குறதால எழுதிக்கிட்டு இருக்கேன். :):)

தேவதையிடம் வரம் கேட்டேன் அண்ட் உறவால் உயிரானவள் டிசம்பர் 15 பிறகு தரேன்.(y)(y)



images (19).jpg

சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்த மலர்விழியின் சிந்தனையில் ரத்னவேல் பாத்திருக்கும் மாப்பிளையை எப்படி துரத்துவதென்பதில் இருக்க, அவனை பற்றின தகவல்களை திரட்ட மும்பாயில் இருக்கும் பொழுதே உத்தரவிட்டிருக்க அவள் விமானம் ஏறு முன் அவனை பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்திருந்தது. அதை படிக்க மனம் வராமல் தந்தையையும், அத்தையையும் காணும் போது கொதிக்கும் இரத்தத்தை அடக்குவது பெரும் பாடாக இருக்க, அன்னை கூறியது போல் தன்னால இருந்து விட முடியுமா? கண்டிப்பாக முடியாது. அன்னையின் மரணத்துக்காக அவர்களை பழிவாங்கிய தீருவேன். அவள் கண்களுக்குள் அன்னை இறந்தநாள் வரவே ஆழ மூச்செடுத்து மனதில் உறுதி பூண்டவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.



"என்னண்ணே! என் பொறந்த நாள் அதுவுமா இப்படி குடிக்கிறியே. வா எங்கயாச்சும் வெளியே போயிட்டு வரலாம்" ரத்னவேல் குடிப்பதை தடுத்தவாறே உள்ளே நுழைந்தாள் கீதா.



"வா கீது மா... " அவளை வரவேற்றவாறே கிளாசில் மதுவை ஊற்ற அதை பறித்து ஒரு ஓரமாக வைத்தாள் கீதா.



"என்னால முடியல, என்னால முடியல அவ இல்லாம இருக்க முடியல" ரத்னவேல் அமுதாவின் நினைவுகளில் புலம்ப



அவ செத்தும் இந்தண்ணன் இன்னும் விட்டுத் தொலைக்காமல் அவளையே நினைத்துக் கொண்டிருப்பது கீதாராணிக்கு எரிச்சலாக இருந்தது.



"ஏன் கீதா அவ என்ன விட்டு போனா.... ஏன்.. ஏன்.." அவனின் புலம்பல்கள் முடிவில்லாது இருக்க வேலையாட்களை வரவழைத்து ரத்னவேலை அவனது அறைக்கு தூக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டாள் கீதா.



அமுதவள்ளி இறந்த போது நடைப்பிணமாக அலைந்த ரத்னவேலை அரசியலில் முழுமூச்சாக ஈடு பட வைத்து, தான் சம்பாதிக்கும் மொத்தத்தையும் அவனுக்காக கொடுத்து இன்று ரத்னவேல் வர்த்தக அமைச்சராக பதவியில் இருக்க கீதாராணி தான் காரணம் என்றால் மிகையாகாது.



அதற்கு கைமாறாக அவள் எதிர்பார்ப்பது அவளது பிறந்தநாளன்று அண்ணன் தன் கூடவே இருக்க வேண்டும் என்பதே! ஆனால் அவன் காலையிலையே குடித்து விட்டு மறைந்த மனைவியின் நினைவில் புலம்புவது கீதாராணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.



இத்தனை வருடங்களாக முயற்சி செய்தும் இந்த நாளை தனக்கு வேண்டியது போல் கொண்டாட அவளால் முடியாமலே போனது. அமுதவள்ளி இருந்த வரைக்கும் அவளோடு இருந்த அண்ணன் அவள் இறந்த பின்னும் அவள் நினைவுகளால் புலம்புவது கீதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் வேறு என்ன செய்யும்?



"அவ இருந்ததை விட இல்லாம நீ இவ்வளவு மோசமா குடிச்சு உன்னையே வ்ருத்திக்குவேன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கி நான் நிதானமா நடந்திருப்பேன். கண் மண் தெரியாத என்னோட கோபத்தால் அவ சாவான்னு அப்போ நான் நினைக்கல" கீதாராணி ஒரு பெருமூச்சு விட்டவாறே கட்டிலில் உளறிக் கொண்டிருக்கும் ரத்னவேலை பார்க்க



"மலருக்கு அவ அம்மா செத்தது எப்படி என்று நியாபகத்துல வருமா? வந்தா என்ன பண்ணுவா?" ரத்னவேல் போதையில் உளற



"மூடிட்டு தூங்குனா... நீயே உன் பொண்ணு கிட்ட எல்லாம் சொல்லிடுவா போல இருக்கே!" அவனை திட்டியவாறு அகன்றாள் கீதாராணி.


 

rajienia

Well-Known Member
Ada pavi neengatha kolapaningala da dei:mad::mad:nan kuda pona epi la nee feel panuratha pathu nee 1%nalavano nenachuten chiiiiii:sick::sick:
 

Yogesh

Well-Known Member
Adap pavii apo geetha than etho pannitalla :eek::cry:
thangachi pannathuku annanu udanthaya vilanguviyaa da nee:mad::mad::mad:unakkula ethuku da love
 

Gomathianand

Well-Known Member
Enakku already thonuthu amutha maranam iyarkaiyaai irukathunnu aanal geetha than karanamna ival ponna porandathe arthamillai...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top