மண்ணில் தோன்றிய வைரம் 32

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சாரு மற்றும் அஸ்வினின் காதல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்தது... காலையில் குட்மார்னிங் மெசேஜுடன் ஆரம்பமாகும் அவர்களது நாள் இரவு ஒரு மணி நேர உரையாடலுடனே முடிவடையும். இடையிடையே சிறு சிறு சண்டைகளும் சமாதானங்களும் அவர்களது உரையாடலில் முக்கியமாக இடம்பெறும்... அது காதலர்களுக்கே பிரத்யேகமான ஒன்று.... அன்று ஒரு நாள்
“ஹேய் ஜிலேபி இன்னைக்கு அந்த காபி ஷாப்பில் ஒரு பொண்ணு வந்து உன்னோட பேசிட்டு இருந்தாளே அவ யாரு???”
“அதை தெரிந்துக்கிட்டு நீ என்ன பண்ண போற ரௌடி பேபி??”
“சும்மா ஒரு ஜென்ரல் நாலேஜிக்கு தான்...”
“அப்படி என்ன ஜெனரல் நாலேஜ் உனக்கு இதை தெரிந்துக்கொள்வதால் கிடைக்கப்போகுது???” என்று கடுப்புடன் சாரு கேட்க
“ அது உனக்கு எதுக்கு... நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. யாரு அந்த பொண்ணு.... பார்க்க சும்மா சமந்தா மாதிரி இருந்தா அவள்”
“ஓ அவ்வளவு தூரத்திற்கு போயிருச்சா??”
“இல்லை ஜிலேபி உண்மையாவே அவ்வளவு அழகா இருந்தா.... நீ சொல்லு அவ யாரு அவளோட....” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அழைப்பு துண்டிக்கப்பட்டது... அவன் மீண்டும் முயற்சிக்க அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது....
இது எப்போதும் நடப்பதே... அஸ்வின் அவளை கோபப்படுத்துவதற்கென்றே அவளை வம்பிழுப்பான். ஆனால் அவளோ வாய் வார்த்தைதளால் சண்டையிடாது தன் அமைதியின் மூலம் அவனுக்கு தன் கோபத்தை வெளிக்காட்டுவாள்... வாய் ஓயாமல் பேசும் அவள் மௌனமாய் இருப்பது அவனுக்கு நகைப்பாய் இருந்தாலும்.. ஏதோ ஒன்று இல்லாத குறைய அவன் உணருவான்... ஆனால் அவளது கோபமும் அவனை அவள் மேல் இன்னும் மையல் கொள்ளச் செய்யும்..... சிறு பிள்ளை போல் அவனுடன் பேசாது போர்க்கொடி தூக்கும் அவளை அவன் எப்போதும் ரசிப்பான்.... அதற்காக அவன் அவளை சீண்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது தோரணையில் சமாதானப்படுத்தவும் தவறமாட்டான்.
அதாவது அவனது சமாதானப்படலம் ரோஜாப்பூ பொக்கேயுடன் ஆரம்பிக்கும்.... ஆபிசில் தன் அறையில் நுழையும் சாருவை சாரி ஜிலேபி என்ற அட்டையை தாங்கிய பூங்கொத்தே வரவேற்றும்... பின் மெயில் பாக்ஸை திறந்ததும் சாரி பொம்மு குட்டி என்ற அஸ்வினின் மெயிலே முதலில் வரவேற்கும்...
பின் அவளது மொபைலில் அஸ்வினது சாரியை தாங்கியிருக்கும் வாய்ஸ் மேசேஜும் அதனது சேவையை ஆற்றியிருக்கும். ஆபிஸ் நேரம் முடிந்த பின் அஸ்வின் நேரடியாக வந்து அவளை தன் சித்தி அழைத்து வரச்சொன்னதாக சொல்லி அழைப்பான்.... மறுக்கும் சாருவை தன் சித்தியை பேச வைத்தே சரி கட்டுவான்.....
அவளை நேராக வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அவளை எப்போதும் செல்ல விரும்பும் கடற்கரைக்கு அழைத்து செல்வான்... அவளுக்கு கடற்கரை மண்ணில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டே கடற்காற்றை சுவாசிப்பதில் கொள்ளை இஷ்டம். அதுவும் நிலவொளியில் வானத்தை முற்றுகையிட்டிருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதென்பது அவளது வாடிக்கை.... அந்த நேரத்தில் அவளது கோப தாபங்கள் அவளிடமிருந்து விடைபெற்றிருக்கும்.. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாருவிடம் மன்னிப்பு கேட்பது அஸ்வினின் வாடிக்கை....
பின் அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று சித்ராவின் நளபாகத்தை ருசிக்க செய்து மிச்சம் மீதி உள்ள கோபத்தையும் சரிகட்டி விடுவான்...
சாருவும் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே அவனிடம் அடிக்கடி சண்டையிடுவாள்..... அவளுக்கு அந்த கடற்கரை மண்ணில் நிலவொளியில் அஸ்வினுடன் நேரம் செலவளிக்க அலாதி விருப்பம்.... அதற்காகவே ஏதேனும் ஒரு காரணத்தை உருவாக்கி அவனுடன் சண்டையிடுவாள்... அவளது சண்டையிற்கு காரணங்களாக அவள் கூறுபவை “ குட் மானிங் சொல்லலை,என்னை பார்த்து சிரிக்கல, எனக்கு உம்மா குடுக்கலை” என்று தினம் தினம் அவளது பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்....
அதன் மூலக்காரணத்தை அறிந்த அஸ்வினோ அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வான்.. இதற்கிடையில் ஒரு நாள் சஞ்சு இவர்களது அலும்பலை பொறுக்க முடியாது சாருவிடம் புகார் கொடுத்தான்...
“ சாரு நீயும் அஸ்வினும் டூ மச்..... நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுவீங்களாம் அதுக்கு பொக்கே வருமாம்... அவன் உனக்கு சாரி சொல்ல பீச்சிற்கு கூட்டிட்டு போவானாம்... நீயும் அங்க போனதும் கன்வின்ஸ் ஆகிருவியாம்.... என்னமா நடக்குது இங்க??? சண்டைக்கான ரீசன் கேட்ட அதுக்கு நீ சொல்லுற பதிலை கேட்டா எனக்கு அழுவதா சிரிப்பதானு தெரியலை.... குட் மார்னிங் சொல்லலை, பார்த்து முறைச்சது இப்படி உப்பு சப்பு இல்லாத விஷயத்தை ஒரு மேட்டரா எடுத்து நீ பண்ணுறது எல்லாம் ஓவர். அதை விட ஓவர் அதுக்கு அவன் கூஜா தூக்குறது...” என்று தன் குற்றச்சாட்டினை முன்வைக்க
“எங்களை பார்த்து உனக்கு பொறாமை டா... ரௌடி பேபியை பார்த்து சரி கத்துக்கோ.... எவ்வளோ ஸ்வீட் அவன்...நான் எப்ப கோபப்பட்டாலும் அடுத்த நாளே என்னை எப்படியாவது சமாதானப்படுத்திடுவான். அதுக்கு அவன் செய்யும் செயல்கள் எப்பவும் யுனிக்கா இருக்கும்.... யுனிக்கா மட்டும் இல்லாமா எனக்கு பிடித்ததாகவும் இருக்கும். அது தான் என்னோட ரௌடி பேபி... அவனுக்கு என்னோட கோபம் உண்மையில்லைனு தெரிந்தாலும் எனக்காக நான் அப்படி அவன் கெஞ்சுவதை விரும்புறேன் அப்படிங்கிறதுக்காக என்னிடம் வந்து கெஞ்சுவதை போல் நடிப்பான்... இதை பலபேர் அடிமைத்தனம்னு நினைக்கலாம். ஆனால் காதலன்-காதலி உறவிற்கும் கணவன் மனைவி உறவுக்கும் இது ரொம்ப அவசியம். எதிரிகளை தோற்கடித்து தன் முன் மண்டியிடச்செய்யும் அரசன் கூட தன் காதலி அல்லது மனைவியிடம் மண்டியிட்டு காதல் யாசகம் பெறுவதை மானக்குறைச்சலாக நினைக்க மாட்டேன். அதே போல அந்த காதலி அல்லது மனைவி தன் கணவன் அல்லது காதலன் அவள் முன் மட்டுமே மண்டியிட வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள்.இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும். தன் அன்புக்குரியவன் தன்னிடம் மட்டுமே சிரம் தாழ்த்தி கையேந்த வேண்டும் அதான் பெண்கள் மெண்டாலிட்டு...இதை பசங்க நீங்க தப்பா புரிந்துகொள்றீங்க.. ஏதோ நாங்க உங்களை டாச்சர் பண்ணுறதாகவும் ஏதோ உங்கள் ஒரிஜினாலிட்டியை நாங்க அழிச்சிட்டதாகவும் பேசுறீங்க.... ஆனா அது அப்படியில்லை.. எங்கிட்ட மட்டும் நீங்க அப்படி இருக்கனும்னு விரும்புறோமே தவிர சமூகத்தில் உங்களுக்கு அப்படி நடக்க நாங்க எப்பவும் விரும்ப மாட்டோம்.... அப்படி நடந்தா அதுக்கு எதிரா சண்டை போடுவமே தவிர என்னைக்கும் அக்சப்ட் பண்ண மாட்டோம்...நீ யோசிச்சி பாரு ஆது அவள் உன்னை எப்படி வேணாலும் திட்டுவா... ஆனா அவள் முன் நான் உன்னை திட்டுனா அவ சண்டைக்கு தான் வருவா.....அது தான் பெண்கள் நேச்சர்... இதை நீங்க எப்பவும் புரிந்துகொள்ளாமல் ஏதோ நாங்க உங்களை டாச்சர் பண்ணுற மாதிரி சீனைப் போடுவீங்க....ஆனா என்னோட ரௌடிபேபி அதில் எல்லாம் கெட்டி..... எப்பவும் எனக்காக மட்டுமே யோசித்து எனக்கு பிடித்ததை மட்டும் செய்வான்.... அதுனாலேயே எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..... நீயும் அவனிடம் கேட்டு கத்துக்கோ....அப்போ சரி ஆது கிட்ட திட்டு வாங்காம இருக்கியானு பார்ப்போம்......” என்று குற்றம் சாட்டிய சஞ்சுவிற்கு சாரு ஆலோசனை வழங்க
“போதும் உன் ரௌடி பேபி புராணம்...இப்போவா வேலையை பார்க்கலாம்...”
“நீ இப்ப மட்டும் இல்லை எப்பவும் ஆதுகிட்ட வாங்கிகட்டிட்டு தான் இருப்ப... உன்னை எல்லாம் திருத்தவே முடியாது... “ என்றுவிட்டு வேலையை கவனிக்க தொடங்கினாள் சாரு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top