சகி-8
மதிய நேரம் அது. மிஞ்சிப்போனால் மணி மூன்றாக இருக்கலாம். வெயில் தாழ்ந்திருந்தது….கண்ணுக்கு முன் அழகான ஒரு சிறிய குளம் சுற்றி மரங்கள்...ஆள் அரவமற்ற இடம். அந்தப்பக்கம் இருக்கும் ரோட்டிற்கும் இங்கு நிலவும் அமைதிக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமேயில்லாமல் இருந்தது. இப்படி ஒரு இடமிருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் அவனுக்குமே ஆறு வருடங்களுக்கு முன் தெரிந்திருக்கவில்லை.
ஆழகான இடம்….பெயர் தெரியாத பறவைகள் எழுப்பும் சத்தம்….அந்தச்சூழலே அவ்வளவு ரம்யமாக இருந்தது...ஆனால் அந்த இனிமையை ரசிக்கும் நிலையில் அவனில்லை என்பது வெறித்த அவன் பார்வையே சொல்லியது.
‘ஓய்ய்ய்….’ என்று யாரோ சத்தமாக அழைப்பதுப்போல் இருக்கவே உட்கார்ந்திருந்தவன் அங்கும் இங்கும் திரும்பிப்பார்த்தான். ஓரிடத்தில் பார்வையை நிலைக்கவிட்டவன் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான். அவளை இங்கு அவன் எதிர்ப்பார்க்கவில்லை பார்ப்பதற்கு கொஞ்சம் மாறியிருந்தாலும், அவளை பார்த்தவுடனே ‘ இது அவள்தான்’ என்று அவனுக்கு தெரிந்துவிட்டது.அவளுமே அங்கு அவனை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவளது அதிர்ந்த பார்வையே காட்டியது.
‘நீயா???...’ என்ற பார்வையே இருவர் கண்களிலும் நிறைந்திருக்க இரண்டு சொட்டு நீர்மணிகள் அவர்கள் சம்மதமின்றியே விழுந்துடைந்தது. என்றாவது ஒருநாள் சந்திப்போமென்ற நம்பிக்கையிலிருந்தவர்களை ஏமாற்றாமல் காலமும் அந்த நாளை பரிசளித்துவிட்டது.
கண்களில் கண்ணீரும் உதட்டில் சிரிப்புமாய் அவளை பார்க்கவே அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாயிருந்தது. ஏனெனில் இதே இடத்தில் ஆறு வருடங்களுக்கு முன் அவளை சந்தித்தான் அப்பொழுது அவள் கண்களில் கண்ணீர் இருந்ததே தவிர உதட்டில் சிரிப்பில்லை. பழைய நினைவுகளை தூசி தட்டிக்கொண்டிருந்தவர்கள் அந்தப்பக்க ரோட்டில் கேட்ட ஹார்ன் சத்ததில் தான் நிகழ்காலத்திற்கு வந்தார்கள்.
அவனும் எழுந்துக்கொள்ள வேகமாக அவனிடம் வந்தவள் அவனை அணைத்துக்கொண்டு ‘எங்க போன நீ இவ்வளவு நாளா?.... நான் எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா?.... நீ சொன்னா மாதிரியே நான் ஜெய்ச்சிட்டேன் ஆனா அத சொல்லகூட நீ இல்லை….பேரைக்கூட சொல்லாம போய்ட்டல்ல…’ என்று முதலில் அழுதவளை எப்படி சமாதானப்படுத்த என்று தினறியவன் மெல்ல,
‘நீக்கூடதான் உன் பேரை சொல்லல்ல’ அவள் முறைப்பதை பார்த்துவிட்டு.
‘கிருஷ்ணா’ என்றான். அவள் ‘மா…’ என்று ஆரம்பிக்கும்போது அவனது போன் பாடி வைத்தது அதை எடுத்துப்பார்த்தவன் ‘அம்மா’ என்றிருக்கவே ‘ஒரு நிமிஷம்’ என்று காலை எடுத்துவிட்டான்.அன்னையிடமிருந்து போனென்றால் மட்டும் இடம், பொருள் எதுவும் பார்க்கமாட்டான் உள்ளுக்குள் ஏதோ ஒருவிதமான பயம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது அவனுக்கு. அவரிடம் வேலை கிடைத்துவிட்ட விஷயத்தையும் , வருவதற்கு கொஞ்சம் தாமதமாகும் என்றும் அவன் சொன்னதை அவள் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். அவன் போனை அணைத்த மறுநொடி அவள் கேட்டது அவன் எங்கு வேலை செய்கிறான் என்பதே
‘வேதா அன்ட் கோ’ என்க
அவள் கள்ளச்சிரிப்புடன் பேச்சை திசை மாற்றிவிட்டாள்.
அவளுக்கு தெரியாத ஒரு விஷயமென்னவென்றால் அவள் அவனிடத்திலும் அவன் அவளிடத்திலும் மாறிவிட்டார்கள், அவள் குழப்பத்திலிருந்து தெளிந்துவிட்டாள் ஆனால் அவன் குழப்பத்திற்குள் விழுந்துவிட்டான்.