நேச நதி -23 (prefinal)

Advertisement

Surya Palanivel

Well-Known Member
Correct, சூ மந்த்ர காளி போடற மாதிரி ஒவ்வொருத்தரும் மாற முடியாதுல்ல. Takes time.
Aazhi- thathaa combo nice to read. Amma kooda Aazhi ya vittuttu nee po nu solrangaley.

Brindha 1st halwa mattum. Dosa kal vendaam. Paavam. Avana vera thani hero vaa vachu story kekkuraanga.
 

உதயா

Well-Known Member
அரங்கநாதன் பார்க்க பாவமாக தான் இருக்கு. அவர் பிள்ளைங்க எல்லாம் அவரை மீறி தான் போகுதுங்க.

இந்த எபில விஜய் பிடிக்கவே இல்லை. காதலுக்காக பெத்தவங்களை தூக்கி எறியுற‌ மாதிரி இருக்கு. அண்ணனா இவரே எல்லாத்தையும் பார்த்துக்குவானா அப்போ பெத்தவங்க எதுக்கு இருக்காங்க.

வைஷு உன்னோட அப்பா முழு மனசாக சம்மதிச்சு அவரே முன்ன நின்று நடத்தி தரணும் அது வரை எவ்வளவு நாள் ஆனாலும் நான் காத்திருப்பேன் என்று சொல்லி அவர் மனசு மாறுகிற வரை பொறுமையா இருந்திருந்தா அவரே சந்தோஷமா திருமணத்தை நடத்தி வச்சுருப்பார். ஆனால் உன் அண்ணன் பேச்சை கேட்டுகிட்டு கல்யாணம் நடந்தால் போதும்னு அப்பா இல்லாமலே தயாராகிட்ட.
இப்போது தான் உன் விருப்பத்தை சொல்லி இருக்க தேவா பத்தி புரிஞ்சுகிட்டு உங்க அப்பா சம்மதிக்க வரை காத்திருந்தால் என்னவாம்
ஏன் விஜய் பாவனாவும் தான் இத்தனை வருஷம் பாத்துகிட்டாங்களா மூன்று வருஷம் உங்களை எல்லாம் வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சுட்டு போனான் அவன் முக்கியமானவனா போயிட்டான். உன் காதலுக்கு ஜால்ரா போட்ட உடனே அவன் பக்கம் போயிட்ட

காதல் என்று நீங்கள் வந்து சொன்னவுடனே பெத்தவங்க சம்மதிச்சுடணுமா உங்க காதலை ஏத்துக்க கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டாமா உங்களோட தேர்வு சரிதானா அவங்களோட உங்க வாழ்க்கை நல்லா இருக்குமான்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்க நேரம் கொடுக்க வேண்டாமா

நீங்கள் சம்மதிச்சா உங்களோட மரியாதை கெடாமல் கல்யாணம் நடக்கும் இல்லன்னா எங்கள் விருப்பத்துக்கு கல்யாணம் நடக்கும்ன்னு விஜய் மிரட்டி சம்மதிக்க வச்ச மாதிரி இருக்கு.

பிரசன்னா சொன்ன மாதிரி விஜயோட திட்டம் வைஷு கல்யாணத்தை வச்சு பாவனாவுக்கு மரியாதை வாங்கி கொடுக்கணும் .அதனால் அவனோட அப்பா அம்மாவை வைஷுவோட கல்யாணத்தில் ஒதுங்கி இருக்க வச்சுட்டு பாவனாவை முன்னிறுத்தி எல்லாம் செய்கிறான்.

அரங்க நாதன் கங்கா எதிர்பார்ப்பு நியாயமானது தானே ஒரு ஒழுக்கமான நல்ல குடும்பத்தில் தன்னோட பிள்ளைங்களை வாழ வைக்கணும் என்று நினைக்கிறார் இதில் என்ன தப்பு இருக்குன்னு அவரை அசிங்கபடுத்திற மாதிரி அவர் பிள்ளைங்க கல்யாண சீன் எல்லாம் வச்சிருக்கீங்க . பாவனா விஜய் கல்யாணமும் அரங்கநாதனை அசிங்க படுத்துற மாதிரி நடந்துச்சு இப்போது வைஷு கல்யாணமும் அவரை ஆழினியை வச்சு மிரட்டி சம்மதிக்க வைக்குறீங்க.

பாவனாவுக்கு ஏன் நேர் வழியில் கல்யாண நடக்குற மாதிரி நீங்கள் எழுதல . கல்யாணத்துக்கு முன்னாடி தப்பு செஞ்சு திருட்டு கல்யாணம் செஞ்சு அப்புறம் பிரிஞ்சு சில வருஷம் கழிச்சு குழந்தையோடு வந்து அந்த குழந்தையை காரணம் காட்டி மருமகளா வீட்டுக்குள்ள வந்திருக்கா இதில் எங்க நேர்மை ஒழுக்கம் இருக்கு.
தப்பான உறவுல பிறந்தது பாவனா தவறு இல்லை ஆனால் அதே தப்பான வழியில் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சிருக்கா. ஏன் பாவனா மாதிரி பொண்ணுங்க தங்களோட காதலுக்கு நேர் வழியில் போராடி ஜெயிக்கிற மாதிரி வச்சிருக்கலாம்.அதை விட்டுட்டு விஜய் பாவனா ஒழுக்கம் தவறுகிற சீன் அதை நியாய படுத்த தேவை இல்லாமல் அரங்க நாதன் ஷ்யாம் கெட்டவன் மாதிரி காட்டுறீங்க.

விஜய் வைஷு இவங்க இரண்டு பேரோட காதலிலும் எங்காவது நேர்மையோ நியாயமோ ஒழுக்கமோ இருக்கா அப்படி இருந்தால் பெத்தவங்க சம்மதத்திற்காக காத்திருக்கலாமே.

விஜய் பாவனா காதலுக்கு ஷ்யாம்
வைஷு தேவா காதலுக்கு பிரசன்னா இவங்க இரண்டு பேரையும் தேவை இல்லாமல் வில்லன் ஆக்கிருக்கீங்க.

எனக்கு பிரசன்னாவை தான் பிடிச்சிருக்கு. ஆரம்பத்தில் எப்படி‌ இந்த விஜயை எனக்கு பிடிச்சுதுன்னு தெரியல. இந்த கதையிலே எனக்கு பிடிக்காத கேரக்டர் விஜய் தான் இவன் கூட கம்பேர் பண்ணும் போது பாவனா பெஸ்ட் தான்.

விஜய் பாவனா வைஷு தேவா காதல் இரண்டிலும் ஆழினியை பகடைகாய் ஆக்கி அரங்க நாதனை ஒதுக்கி வச்சிருக்கீங்க.

நேசநதி பெத்தவங்களோட நியாயமான எதிர்பார்ப்புகளை கூட அவமதிக்கிற மாதிரி இருக்கு.

ஒருவேளை பிரசன்னா பிருந்தா தனிகதை எழுதினால் விஜய் வைஷு எல்லாம் வரும் இருந்தால் படிக்க நல்லா இருக்கும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top