நேச நதி -10

Advertisement

Novel-reader

Well-Known Member
பாவனாக்கு அவளாலயே அவ அம்மாவை அடுத்தவங்களுக்கு introduce பண்ண முடியலைன்னா என்ன அர்த்தம்? இவளை illegitimate child என்கிற status -ல் வெச்சுருக்குற அப்பாவை introduce செய்ய முடியுமா? இவளே இந்த அநியாயமான சமுதாய நடைமுறையை தான் follow பண்ணுவான்னா, அது discrimination இல்லையா? அப்ப விஜய் family இவங்க கல்யாணத்தை எதிர்த்தா அதில் என்ன தப்பு?

ஏன்ப்பா ஷ்யாம், உனக்கு இந்த அவமானம் தேவையா? இனிமேல் இப்படி விஜயோட முடிவை விமர்சனம் செய்யறது தப்பு. உதவியும் பண்ண வேண்டாம் இடைஞ்சலும் தர வேண்டாம்.
அவனோட அம்மா சொன்ன மாதிரி ஏதாவது ஒரு பக்கத்துக்கு தான் நிம்மதி கிடைக்கும்னாலும் அது அவனை மட்டுமே நம்பி இருக்குற பாவனாக்கு கிடைக்கிறது தான் நியாயம்.
நம்பி வந்த பெண்ணை ஏமாத்துறது குடும்பத்துக்கு செய்யற துரோகத்தை விட மோசம். அதனால் ஷ்யாம் ஒரு நல்ல friend - ஆ விஜய்க்கு அந்த மாதிரி எந்த advice -ம் பண்ணக்கூடாது.

Chicken-pox is not that terrible to be afraid of. இவனோட அம்மாக்கு வந்தா இவன் செய்ய மாட்டானா? இதெல்லாம் கொஞ்சம் too much.

ஷைலஜா பாவம். அவங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அதை அரங்கநாதன் புரிஞ்சுப்பாருன்னா - அந்த அதிசயம் நடந்தால் - நிஜமாவே அவர் தான் கதையோட ஹீரோ. ஏன்னா இந்த நேரம் வரைக்கும் அவங்களோட பொண்ணே சுயநலமாய்த் தான் யோசிக்கிறா. அவளுக்கு விஜய் ok சொல்லி இருக்கலைன்னா அவ அவங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சுருப்பாளாங்கிறதே சந்தேகம் தான்.
 
P.Barathi

ரொம்ப சரி.
அதே தப்ப செய்த அப்பாவ எல்லோருக்கும் அறிமுக படுத்த முடியும்னா , மறுமணம் செய்த அம்மாவை ஏன் ஏத்துக்க முடியாது?
 
P.Barathi

Well-Known Member
விஜய்க்கு இருக்க தெளிவான சிந்தனை பாவனாவுக்கு இல்லை. அவன் அவளோட தவறான குழப்பமுடைய சிந்தனையை சரி படுத்துவானு நம்பலாம்.
 
Novel-reader

Well-Known Member
ரொம்ப சரி.
அதே தப்ப செய்த அப்பாவ எல்லோருக்கும் அறிமுக படுத்த முடியும்னா , மறுமணம் செய்த அம்மாவை ஏன் ஏத்துக்க முடியாது?
இப்படிப்பட்ட பெண்களை பெண்களே மதிக்காம இருக்குறது தான் ரமணன் மாதிரி ஆண்களுக்கு ஏத்தம் கொடுக்குற செயல்.
என் வரையிலும் ஷைலஜா மற்றும் அவங்க கணவரோட பாவனா உறவை விடக்கூடாது. அதே நேரம் ரமணனுக்கு அப்பாங்கிற மரியாதையை கொடுக்கவும் கூடாது. அது அவ அம்மாவை அவளும் சேர்ந்து அவமதிப்பதற்கு சமம்.
இப்பையும் அவங்க அப்பா காசுல தானே PG படிக்கிறா. As of now பாவனா 360° சுயநலவாதியா தான் தெரியறா என் பார்வைக்கு.
 
Sathya Velusamy

என்ன பொறுத்த வரை அவளுக்கு அவ்வளவு maturity இல்லைனு தான் தோணுது....
I think she never thought about her mom and her situation or anything else ......
சுயபச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒரு குழந்தைனு தான் தோணுது...
 
Either at school final year or college 1st year(17yrs to 18yrs), she has conveyed her love for Vijay. அப்ப அந்த வயசுல அது சரின்னா, மன முதிர்ச்சியையும் அது கொடுக்கணுமே. வாழ்க்கைத் துணை பத்திய புரிதல் இல்லாமலா அவ ரெண்டு வருஷம் அவனையே நினைத்து கொண்டு இருந்தா ( Before his acceptance ). அதுவும் பாருங்க அவன் கண்ணை பார்த்து அவன் மனசைத் தெரிந்து கொண்டவள். ஒரு department -ல மட்டும் மூளை வேலை செய்யுமா? Self sympathy எதுக்கு? தனக்கு மற்ற பிள்ளைகளைப் போல் கெளரவம் இல்லையேன்னு தானே? அது அவளுக்கு முன்னாடி அவ அம்மாக்கு கிடைக்க வேண்டாமா?

இன்றைய அவளோட நிலையில் அவ திருமணமே செய்யாமல் கூட அவளோட தகுதிக்கு இதே மாதிரி அவ அப்பாவை சார்ந்தோஇல்லை ஒரு வேலை செய்து சாம்பாதித்தோ அவளால வாழ முடியும். ஆனால் அதே வயசில் அவளோட அம்மா நிலைமை என்ன? அவங்களோட வாழ்க்கையில் எந்த முடிவும் அவங்க கையில இல்லை. புதை மணலில் சிக்கிய நிலை. யாரு கை கொடுப்பாங்கன்னு ஏங்கி நின்ன நிலை. அதை சாதாகமாகிக்கிட்ட நல்லவன் தானே அந்த ரமணன்.

அவனோட மனைவி மக்கள் எல்லாரும் தெரிந்தும் அமைதியா தானே இவ்வளவு நாள் இருக்காங்க. இப்ப இவன் ஒரு தாலி கட்டுறதை தான் தடுக்க போறாங்களா? So அவங்களேல்லாம் காரணம் இல்லை. ரமணன் ஷைலஜா மாதிரி பொண்ணுக்கு இவ்வளவு தான் மதிப்பு தரமுடியும்ன்னு சொல்றாரு. அதுக்கப்புறமும் இவ இப்படி அவரை சார்ந்து இருப்பது சுயநலம் இல்லாமல் என்ன? ஆனாலும் அவங்கம்மா இவ ஒத்துக்கிட்ட அப்புறம் தான் திருமணம் செஞ்சுகிட்டாங்க.

இவ குழந்தையும் இல்லை, self sympathy -ங்கிற பேருல இவ செய்யறதெல்லாம் சரியுமில்லை.
 
உதயா

Well-Known Member
ஷைலஜா இப்போது எடுத்த இந்த தெளிவான முடிவை பாவனா பிறந்த உடனே எடுத்து ரமணன் விட்டு பிரிஞ்சு இருந்தால் அவங்களும் பாவனாவும் நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம்.‌
ரமணன் மாதிரி ஆட்கள் எல்லாம் ஷைலஜா மாதிரி ஆதரவு இல்லாமல் தவிக்கிற பெண்களை இப்படி தன்னோட கேவலமான ஆசைக்கு பயன்படுத்திக்கிற ஆட்களை அவனுங்க பொண்டாட்டிங்க எல்லாம் ஏன் ஒன்னுமே செய்யமாட்டுகிறாங்க நாலு மிதி மிதித்து அடக்கி வைக்கவேண்டிய தான.
பாவனாவுக்கு அவங்க அப்பாவுக்கு பொண்டாட்டிக்கு பிள்ளைங்க என்று தனியாக ஒரு குடும்பம் இருப்பது அசிங்கமா தெரியலன்னா அது அம்மாவுக்கும் பொருந்தும் தானே.
திருமணம் என்று சொன்னாலே நம்ம மக்கள் எல்லாருக்கும் உடல் ரீதியான உறவு மட்டும் தான் நியாபகத்துக்கு வருது இந்த வயசில போய் இது தேவையா என்று அதுக்காக தான் கல்யாணம் செய்து கிட்ட மாதிரி அசிங்கமாக விமர்சனம் செய்ய வேண்டியது பாவனாவும் தன்னோட அம்மாவை நினைக்கிறார்களோன்னு தோணுது.
நாளைக்கு விஜயோட குடும்பமோ இல்லை அவங்க உறவுகளே ஷைலஜா பத்தி தப்பாக பேசினால் இவ தான் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கணும் ஆனால் இங்கே விஜய் கூட ஷைலஜாவுக்கு ஆதரவாக இருப்பான் போல ஆனால் பாவனா சந்தேகம் தான்.
விஜய் அப்பா இப்போது வரை கதையில் ரொம்ப வரல அதனால் அவர் தான் கதையோட ட்விஸ்ட் டாக இருப்பார்ன்னு நினைக்கிறேன. ஒழுக்கத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறவங்க தான் இரண்டு பக்கத்தையும் சமமா பார்ப்பாங்க அதனால் விஜய் அப்பா ஷைலஜாவை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.
பாவனா ரமணன் உறவை முழுசாக தலை முழுகினால் தான் அவங்க அம்மா பக்கம் புரியும். பாவனாவை வெளியில் இருந்து விமர்சனம் செய்தால் என்ன வேண்டும் ஆனாலும் சொல்லலாம் அவள் இடத்தில் இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது நரக வலி. அப்பா என்கிற உறவு உரிமையில்லாத உறவு தான் என்பது சின்ன வயசில் இருந்தே தெரிஞ்சு வளர்ந்தாள் ஆனால் அம்மா அவளுக்கு மட்டுமான உறவாக இருந்தவங்க அவங்களை தவிர வேற யாரும் அவளுக்காக இல்லை இப்போது அவங்களும் திருமணம் செய்ததும் அவளால் தாங்க முடியல தனக்கு யாரும் இல்லை என்கிற பயம் அது தான் . ஊரும் உறவும் அவளை அவதூறு பேசி ஒதுக்கும் போது அம்மா மட்டும் தான் அவளோட பற்றுகோல் இப்போது அவங்களும் இல்லை எனும் போது அவளோட நிலை பரிதாபம் தான். விஜய் கூட சந்தோஷமாக வாழும் போது அவ அம்மாவோட திருமணத்தை புரிந்து கொள்வாள். ஷைலஜா பாவனா பிறந்த உடன் ஆவது கொஞ்சம் எதிர்காலம் பற்றி யோசித்து சுதாரிச்சிருக்கலாம் கௌரவமாக ஒரு சுய தொழில் கற்றுகொண்டு பாவனா கூட தனியாக வாழ்ந்து இருக்கலாம்.‌ இப்பவும் ஒருத்தர் திருமணம் செய்ய முன் வந்தார் அவங்க வாழ்க்கை சரி ஆகிடுச்சு அவர் வரலன்னா என்ன செய்து இருப்பாங்க.
ஷைலஜா இவ்வளவு தயக்கம் வேண்டாம் நாளைக்கு பாவனா விஜய் திருமணத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நீங்கள் விஜய் குடும்பத்துக்கிட்ட தைரியமாக வந்து பேசணும். சும்மா பயந்து தயங்க கூடாது அவங்ககிட்ட உங்க வாழ்க்கை பற்றி விளக்கம் கொடுக்க வெட்கப்பட கூடாது. கொஞ்சம் நிமிர்ந்து பதில் சொல்லலாம் ரமணன் நெஞ்ச நிமிர்த்தி கிட்டு நடக்கும் போது நீங்க தயங்க வேண்டாம். தவறான வாழ்க்கை இவ்வளவு காலம் வாழ்ந்தாச்சு இப்போது கௌரவமான வாழ்க்கை தான் தேர்ந்து எடுத்து இருக்கீங்க.

ரமணன் விஜய் பாவனா திருமணத்தை பற்றி பேசினாலும் ஷைலஜா வந்து பேசி அதனால் தான் அவங்க திருமணம் நடந்ததாக இருந்தால் தான் ரமணனுக்கு நல்ல செருப்படி விழுந்த மாதிரி இருக்கும். ரமணனை விட ஷைலஜாவுக்கு விஜய் குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கனும் அதை பார்த்து புழுங்கி சாகட்டும் அவன்.
ரமணன் ஷைலஜா மாதிரி வாழ்கிறவங்க குழந்தை பெற்றுகொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் இரண்டு பேரும் நல்லா வாழ்ந்துட்டு போயிடுவீங்க ஆனால் குழந்தைகள் நிலை சமூகத்தில் ரொம்ப மோசம் இப்படி கற்பனையில் தான் அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் நிஜத்தில் பெண் பிள்ளைகளுக்கு சாத்தியம் இல்லை.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top