நேச நதி -10

Advertisement

Novel-reader

Well-Known Member
ஷைலஜா இப்போது எடுத்த இந்த தெளிவான முடிவை பாவனா பிறந்த உடனே எடுத்து ரமணன் விட்டு பிரிஞ்சு இருந்தால் அவங்களும் பாவனாவும் நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம்.‌
ரமணன் மாதிரி ஆட்கள் எல்லாம் ஷைலஜா மாதிரி ஆதரவு இல்லாமல் தவிக்கிற பெண்களை இப்படி தன்னோட கேவலமான ஆசைக்கு பயன்படுத்திக்கிற ஆட்களை அவனுங்க பொண்டாட்டிங்க எல்லாம் ஏன் ஒன்னுமே செய்யமாட்டுகிறாங்க நாலு மிதி மிதித்து அடக்கி வைக்கவேண்டிய தான.
பாவனாவுக்கு அவங்க அப்பாவுக்கு பொண்டாட்டிக்கு பிள்ளைங்க என்று தனியாக ஒரு குடும்பம் இருப்பது அசிங்கமா தெரியலன்னா அது அம்மாவுக்கும் பொருந்தும் தானே.
திருமணம் என்று சொன்னாலே நம்ம மக்கள் எல்லாருக்கும் உடல் ரீதியான உறவு மட்டும் தான் நியாபகத்துக்கு வருது இந்த வயசில போய் இது தேவையா என்று அதுக்காக தான் கல்யாணம் செய்து கிட்ட மாதிரி அசிங்கமாக விமர்சனம் செய்ய வேண்டியது பாவனாவும் தன்னோட அம்மாவை நினைக்கிறார்களோன்னு தோணுது.
நாளைக்கு விஜயோட குடும்பமோ இல்லை அவங்க உறவுகளே ஷைலஜா பத்தி தப்பாக பேசினால் இவ தான் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கணும் ஆனால் இங்கே விஜய் கூட ஷைலஜாவுக்கு ஆதரவாக இருப்பான் போல ஆனால் பாவனா சந்தேகம் தான்.
விஜய் அப்பா இப்போது வரை கதையில் ரொம்ப வரல அதனால் அவர் தான் கதையோட ட்விஸ்ட் டாக இருப்பார்ன்னு நினைக்கிறேன. ஒழுக்கத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறவங்க தான் இரண்டு பக்கத்தையும் சமமா பார்ப்பாங்க அதனால் விஜய் அப்பா ஷைலஜாவை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.
பாவனா ரமணன் உறவை முழுசாக தலை முழுகினால் தான் அவங்க அம்மா பக்கம் புரியும். பாவனாவை வெளியில் இருந்து விமர்சனம் செய்தால் என்ன வேண்டும் ஆனாலும் சொல்லலாம் அவள் இடத்தில் இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது நரக வலி. அப்பா என்கிற உறவு உரிமையில்லாத உறவு தான் என்பது சின்ன வயசில் இருந்தே தெரிஞ்சு வளர்ந்தாள் ஆனால் அம்மா அவளுக்கு மட்டுமான உறவாக இருந்தவங்க அவங்களை தவிர வேற யாரும் அவளுக்காக இல்லை இப்போது அவங்களும் திருமணம் செய்ததும் அவளால் தாங்க முடியல தனக்கு யாரும் இல்லை என்கிற பயம் அது தான் . ஊரும் உறவும் அவளை அவதூறு பேசி ஒதுக்கும் போது அம்மா மட்டும் தான் அவளோட பற்றுகோல் இப்போது அவங்களும் இல்லை எனும் போது அவளோட நிலை பரிதாபம் தான். விஜய் கூட சந்தோஷமாக வாழும் போது அவ அம்மாவோட திருமணத்தை புரிந்து கொள்வாள். ஷைலஜா பாவனா பிறந்த உடன் ஆவது கொஞ்சம் எதிர்காலம் பற்றி யோசித்து சுதாரிச்சிருக்கலாம் கௌரவமாக ஒரு சுய தொழில் கற்றுகொண்டு பாவனா கூட தனியாக வாழ்ந்து இருக்கலாம்.‌ இப்பவும் ஒருத்தர் திருமணம் செய்ய முன் வந்தார் அவங்க வாழ்க்கை சரி ஆகிடுச்சு அவர் வரலன்னா என்ன செய்து இருப்பாங்க.
ஷைலஜா இவ்வளவு தயக்கம் வேண்டாம் நாளைக்கு பாவனா விஜய் திருமணத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நீங்கள் விஜய் குடும்பத்துக்கிட்ட தைரியமாக வந்து பேசணும். சும்மா பயந்து தயங்க கூடாது அவங்ககிட்ட உங்க வாழ்க்கை பற்றி விளக்கம் கொடுக்க வெட்கப்பட கூடாது. கொஞ்சம் நிமிர்ந்து பதில் சொல்லலாம் ரமணன் நெஞ்ச நிமிர்த்தி கிட்டு நடக்கும் போது நீங்க தயங்க வேண்டாம். தவறான வாழ்க்கை இவ்வளவு காலம் வாழ்ந்தாச்சு இப்போது கௌரவமான வாழ்க்கை தான் தேர்ந்து எடுத்து இருக்கீங்க.

ரமணன் விஜய் பாவனா திருமணத்தை பற்றி பேசினாலும் ஷைலஜா வந்து பேசி அதனால் தான் அவங்க திருமணம் நடந்ததாக இருந்தால் தான் ரமணனுக்கு நல்ல செருப்படி விழுந்த மாதிரி இருக்கும். ரமணனை விட ஷைலஜாவுக்கு விஜய் குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கனும் அதை பார்த்து புழுங்கி சாகட்டும் அவன்.
ரமணன் ஷைலஜா மாதிரி வாழ்கிறவங்க குழந்தை பெற்றுகொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் இரண்டு பேரும் நல்லா வாழ்ந்துட்டு போயிடுவீங்க ஆனால் குழந்தைகள் நிலை சமூகத்தில் ரொம்ப மோசம் இப்படி கற்பனையில் தான் அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும் நிஜத்தில் பெண் பிள்ளைகளுக்கு சாத்தியம் இல்லை.
உங்க விமர்சனம் அனைத்து கோணத்தில் இருந்தும் அருமை.... அருமை.. அருமை.
இந்த கதை ஒரு track -ல போனாலும் எனக்கு ஷைலஜாவும், அரங்கநாதனும் தான் மனசில ஓடிட்டே இருப்பாங்க. What would be their actions and reactions - இதை தான் நான் யோசிச்சுட்டே இருப்பேன். ஷைலஜா future -ல எப்படி இருக்கணும்ன்னு சொன்னது சூப்பர்.

ஆனால் அம்மா பொண்ணு ரெண்டு பேருமே ரமணனை விட்டு வேறு ஒரு ஆணைச் சார்ந்த அடையாளத்தை தான் தேடுறாங்களே தவிர தன் சுய அடையாளத்தை உருவாக்க நினைக்கலை. ஷைலஜாக்கு கூட இந்த வயதில் அது ஓரளவு சரி தான். ஆனால் படித்த பாவனா இப்படி 18 வயசுலயே love - கல்யாணம் என்று யோசிப்பது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.
 
உதயா

அம்மா பார்த்து வளர்ந்ததால் அவங்க திருமணம் தான்‌ கௌரவமான அடையாளம் கொடுக்கும் என்று நம்புகிற மாதிரி அவளும் அதை நம்புகிறாள். ஷைலஜா தனக்கு தான் படிப்பு இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டிய வந்தது தன் பொண்ணுக்காவது கல்வியோட முக்கியத்துவத்தை சொல்லி கொடுத்து இருக்கலாம்.

விஜய் அவனோட அப்பா எவ்வளவு சம்பாதித்து வைத்திருந்தாலும் அவரோட அடையாளத்தை பயன்படுத்தாமல் தனக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கின மாதிரி பாவனாவுக்கும் அவளோட அடையாளத்தை உருவாக்க தெளிவும் தைரியம் கொடுத்திருக்கணும் ஆனால் அவனும் காதலிக்க மட்டும் தான் செய்கிறான். ஷ்யாம் மாதிரி இன்னும் நிறைய பேர் பேசுவாங்க அப்போ எல்லாம் இவன் போய் அடிப்பானா எப்போது தான் பாவனா தைரியமாக எதிர்கொள்வாள் இரண்டு வருடம் காதலிக்கிறான் பாவனாவுக்கு அந்த தைரியத்தை கூட கொடுக்கல. இப்படி பாவனாவோட பிரச்சினை எல்லாம் விஜய் அவனே சரி செய்கிறதால அவளும் திருமணம் தான் தனக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறாள்
 
Nithi_lovesReading

Very true..if she fits herself in a decent profession, her background will vanish to a certain limit...but no signs for it...
 
Geetha sen

Well-Known Member
Lovely update :love::love::love:
உயரத்திலிருந்து அவ விழுந்தாலும் பஞ்சு மெத்தையாக தாங்குறது…ரொம்ப அருமையாக இருக்கிறது உங்க எழுத்து
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top