நேசம் மறவா நெஞ்சம்-21Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
“ஏய்..... ஏன் இப்புடி முழிக்குற...... என்ன கண்ண திறந்துகிட்டே....கனவுகாங்குறியா......”. என்று அவள் தோளில் கைபோட்டு தன்பக்கம் இழுத்தவன்...... அவள் நெற்றியில் முட்டி.....

“.என்ன......?”.

“என்னால உங்கள புரிஞ்சுக்கவே முடியல........”

“ம்ம்ம் ....நீ என்னைய இப்பதானே....லேசா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்குற......போக போக எல்லாம் சரியாயிரும்...... முதல்ல உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்கிட்ட சொல்லனும் புரியுதா....... நீ எனக்கு மட்டும் சொந்தமானவ..... எவனும் என் உயிர் இருக்குறவரை உன்னை ஒருவார்த்தை சொல்லவிடமாட்டேன்....புரியுதா.....”



அவள் கையை எடுத்து அவன் வாயில் வைத்து...”.ச்சு....ச்சு..... இப்புடியெல்லாம் பேசாதிங்க......எனக்கு கஷ்டமாயிருக்கு......”என்றபடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.........



அவள் உள்ளங்கைக்கு முத்தம் கொடுத்தவன் ....”ஆமா.....வந்ததும் வராததுமா ஏன் இப்புடி ஒரு அழுகை........”

கயலுக்கு தன் மனபாரம் எல்லாம் காணாமல் போகவும்....... “அது நீங்க கோபமா வந்திங்கள்ள...... அதுதான் ஒருவேலை அடிச்சிரகிடிச்சிர போறிங்கன்னு நான் முன்னாடியே.....அழுதுட்டேன்.........”



“உன்னைய.....”.என்றபடி அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்...... அவளின் குழந்தைதனமான சிரிப்பை பார்த்து ரசித்தான்...... இருவருக்குமே தெரியும் கயல் அதனால் அழவில்லை என்று........



“ஆமா..... அத்தை எங்க...”

“பத்தியா....மறந்துட்டேன்..அம்மா களத்துமேட்டுல இருக்காங்க..... நீ போய் டிரஸ மாத்திட்டு அம்மாவுக்கு காப்பி போட்டுகுடு.... நான் போய் குடுத்துட்டு..... அங்கயிருக்குற வேலைய பாக்குறேன்...... இன்னைக்கு இருந்த டென்சன்ல ஒரு வேலையும் ஒழுங்காப் பாக்கல....... அப்புறம் உனக்கு என்ன வேணும்னாலும் இல்ல பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லனும்..... மூஞ்சிய இத்தனநாளு இருந்தமாதிரி உம்முன்னு இருக்காம..... சிரிச்சுகிட்டே இரு....... எனக்கு அதுதான் புடிச்சிருக்கு........ இப்ப என்ன பண்ணுற காலையில இருந்து எனக்கு ஒரே டென்சன்...... அதுனால.......”.



“உங்களுக்கு மட்டும் டீ போட்டு கொண்டுவரவா......”



“ஆமாடி உன்னால மட்டும்தான் பால் அப்புடியே பொங்கி வரும்போது அதுல படக்குன்னு பச்ச தண்ணிய ஊத்தமுடியும்....”.என்றவன் எழுந்து

“இன்னைக்கு உங்கிட்ட வெளக்கம் சொல்லி என்னால முத்தம் வாங்கமுடியாது...... அதுனால நானே குடுக்குறேன்”.என்றவன் அவள் இருகன்னத்திலும் முத்தமிட்டான்........



அவளிடமிருந்து போங்க மீசை குத்துது என்னும் வார்த்தையை எதிர் பார்க்க.... கயல் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருக்கவும்.......

“ என்னடி ஒன்னும் சொல்லாம இருக்க...மீசை குத்தலையா..........?”



“குத்துது ஆனா.....பரவால்ல......” என்றபடி கயல் வெட்கப்பட்டுக் கொண்டே....கீழே ஓட....



“பார்ரா.....நம்ம பொண்டாட்டிய......” என்றபடி கண்ணனும் பின்னாலே வந்தான்........

மறுநாளில் இருந்து வயலில் அறுவடை வேலை முடிந்ததால் கண்ணனே கயலை காலேஜ்க்கு கூட்டிக்கொண்டு போய் விட்டு கூட்டிவர பழகியிருந்தான்.......கயலும் அவனோடு இன்னும் கொஞ்சம் மனம்விட்டு பேச பழகியிருந்தாள்……



அங்கு சுதா தன் தாய் வீட்டிற்கு சென்றிருக்க....... வாசுவும் அப்போதுதான்......வயலுக்கு கிளம்பி கொண்டிருந்தான்......

வாசுவின் அம்மா பேச்சி......” வாசு.....வாசு......”

“என்னம்மா..... இப்ப எதுக்கு கூப்புடுறீங்க.....”

“டேய் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்......?”

“சொல்லுங்கம்மா.......”

“இங்க வாப்பா....”.தன் அருகில் உட்காரவைத்தவள்......

“ டேய்....நீ அம்மாவ சின்னபுள்ளயில இருந்து பாக்குற....நான் எப்பவாச்சும் உனக்கு எதிரா பேசியிருக்கனா......எப்பவுமே உம்மேல உசுராதானேடா... இருக்கேன்...?”

“ஆமா..... ஏம்மா.... இப்ப அதெல்லாம் தேவையில்லாம பேசுற.....”

“நீ கல்யாணவிசயத்துல கொஞ்சம் அவசரபட்டியோன்னு தோனுதுப்பா..... வரவர ஒம் பொண்டாட்டி நடக்குறே எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல.....முந்தியாச்சும் ரூமுக்குள்ளயே இருந்தா.... இப்ப என்னனா...நைட்டிய போட்டுக்கிட்டு ..அடுத்தடுத்த வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருக்குறா....வீட்ல ஒருவேலையும் பாக்குறதில்லை.... உங்க அப்பாவையும் மதிக்கிறதில்லை....... இப்புடி நைட்டியெல்லாம் யார்டா அவளுக்கு வாங்கிகுடுத்தா....பாக்க சகிக்கல.......முன்னாடி இப்புடி எறக்கமா.....கையும் இல்லாம...... இதெல்லாம் நல்லாவா இருக்கு......

ஒரு வெள்ளி...செவ்வாய்...கோயிலுக்கு போவோம்ன்னு இல்லை...... நீ வாங்கிகுடுக்குற பூவ.....தான் வச்சது போக...... அப்புடியே பிரிட்ஜ்ல கிடந்து வாடுது...... அத எடுத்து சாமிக்கு போடுவோம் அட நானும் ஒரு வாவரசிதான ஒரு ரெண்டு இனுக்கு கிள்ளி குடுப்போம்னு இல்லை..... சும்மாதானே இருக்குன்னு நான் எடுத்து சாமிக்கு போட்டோன்னு அன்னைக்கு அந்த குதிகுதிக்குறா.......உன் தம்பி வேற டிக்கெட்டு போட்டுடானாம்..... அவன் வரும்போது இப்புடி நடந்துக்காம கொஞ்சம் நல்லா டிரஸ்ஸ போடச்சொல்லு....... சொல்றத சொல்லிட்டேன்..... அப்புறம் உம் பிரியம்.........”



“ம்ம்ம் ....சரி.....” என்று முனங்கியபடி.....வீட்டை விட்டு வெளியே சென்றான்......



நாட்கள் அதன் போக்கில் செல்ல..... தீபாவளிக்கு இன்னும் இருபது நாட்களே இருந்தது..... காந்திமதி தன் பேத்தியை பார்த்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தார்....... அன்று ஏதோ அரசு விடுமுறை என்பதால் கயலும் முத்துவும் ராமனும் வீட்டில் இருந்தனர்....... கண்ணனும் கொல்லைபுறத்தில் வேலைபார்த்து கொண்டிருக்க....



“சாவித்திரி.....ஆத்தா கயலு....”

“என்னத்தே....”

“கண்ணன் தோட்டத்துல இருக்கான் அவன்கிட்டபோய் ரெண்டு முருங்கைகாய மரத்துல இருந்து பறிச்சுதர சொல்லுத்தா.....”

“இந்தா....போறேன்தே”.....என்றபடி ....கொல்லைபுறத்திற்கு சென்றவள்..... கண்ணன் வேலை பார்த்துக் கொண்டிருக்கவும்......சரி நாமளே......காய் கிட்டதான இருக்கு தொரட்டிய வச்சு பறிச்சுக்குவோம்...... என்று நினைத்தவள்.... அங்கிருந்த தொறட்டியை எடுத்து மரத்தில் இருந்து முருங்கைகாயை பறிக்கமுயல அந்த மரத்தை ஆட்டவும் ...... மரத்தில் இருந்த ஒருகுட்டி பச்சை பாம்பு ஒன்று பொத்தென கீழே விழவும் கயல் பயந்து அந்த தொறட்டியை கீழே போட்டவள்....திரும்பி ஓட்டத்தில் கிளம்பியவள் எதிரே வந்த கண்ணனை பாக்காமல் மோதி அவன் கழுத்துல் கையை மாலையாக கோர்த்து கண்ணைமூடி கத்த ஆரம்பிக்கவும்.........



கண்ணன் கயல் தோட்டத்திற்கு வந்ததில் இருந்து அவளைதான் கவனித்துக் கொண்டிருந்தான்.....அவள் ஓடிவரவும்....எங்கே வாசல்படியில் தடுக்கி கீழே விழுந்து விடுவாளே என்று நினைத்து எதிரே வரவும்.....கயல் அவனை பிடிக்கவும் சரியாக இருந்தது....... அவள் கத்த ஆரம்பிக்கவும்.....தன் உதட்டோடு அவள் உதட்டை சேர்த்து.... இந்த உலகத்தையே.....மறக்க வைத்திருந்தான்.....



பயத்தில் வந்தவள் கண்ணன் முத்தமிடவும்........கண்ணை திறந்து பார்த்தவள்..... .கண்ணனை பார்க்கவும் .....மீண்டும் கண்மூடி.........பேசாமல் இருக்கவும் ..... அதை உணர்ந்த கண்ணனின் பிடியும் இறுகியது......கயல் இடுப்பில் கை கொடுத்து இறுக்கியவன்....முத்தத்தில் ஆழ்ந்தான்..... சில ......நொடிகளோ....நிமிடங்களோ...கடந்த நிலையில்...... சாவித்திரியின் குரல் கேட்கவும்...... சுயநினைவுக்கு வந்த கண்ணன்... இவள நாம இப்ப விட்டமுன்னா.....தத்து….பித்துன்னு ஏதாச்சும் கேள்விகேப்பாளே..... என்ன பண்ணுவது என்று யோசித்தவன்.....மெதுவாக அவள் கையை விலக்கியவன்...... அவள் ஏதோ கேட்பதுபோல இருக்கவும்..... திரும்பி....விறுவிருவென்று வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்..........



இவன் வேகமாக திரும்பவும் கயல் மறுபடியும் பாம்பு வந்துருச்சோ..... என்று நினைத்தவள்...... இவளும் அவன் பின்னே வேகமாக வந்தவள்.....அவன் வீட்டுக்குள் நுழையவும் சாவகாசமாக நடக்க... இதுதெரியாமல் அவன்பின்னே வந்து மோதியவள்..... அவன் மெதுவாக நடக்கவும்.....இவருக்கு என்னாச்சு.......என்று நினைத்தபடி பே.....வென நிற்கவும்....

சாவித்திரி வந்து.....” முருங்கைகாய்...எங்கத்தா......?”

“ம்ம்………”

“ஆத்தா....கயலு...என்னாச்சுத்தா.... கண்ணா... என்னப்பா...இந்தபுள்ள ஒருமாதிரியா முழிக்குது......”

கண்ணனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் அதை வாய்க்குள் அடக்கியபடி.....

“எனக்கு தெரியலயேம்மா......” என்றபடி கயலை ஓரக்கண்ணால் பார்த்தபடி மாடி ஏறி போக....

காந்திமதி வந்து கயலை போட்டு உலுக்க.......” அடியே....கூறு கெட்டவளே..... என்னாச்சு......”

கயல் காந்திமதியை பார்த்தும் ஒரு மாதிரியாக முழிக்க....

காந்திமதி...”. ஆத்தி..... நான் ....என்ன...பண்ணுவேன்....இந்த புள்ளைய......ஏதோ...காத்து கருப்பு புடுச்சிருக்குன்னு நினைக்கிறேன்....... ஆத்தா சாவித்திரி....இங்க யாராச்சும்...நல்ல கோடாங்கி..... இருக்காங்களாத்தா..........”



இனி...................?



தொடரும்................
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top