நேசம் மறவா நெஞ்சம்-21Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-21



கயல் படிக்கும் கல்லூரிக்கு கண்ணன் ஊரிலிருந்து அடிக்கடி பேருந்து இருக்காது...... கண்ணன் ஊருக்கு அருகில் இருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் டவுன் பஸ்ஸோ அல்லது மினி பஸ்ஸோதான் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வரும்.... அதில்தான் வேலைக்கு சென்று வருபவர்கள்.... அன்றாட தேவைக்கு பொருள் வாங்கச் செல்பவர்கள்... சந்தைக்கு காய் கொண்டு செல்பவர்கள்.... காய் வாங்க.....செல்பவர்கள்..... மேலும் எட்டாம் வகுப்புக்கு மேலே படிப்பவர்கள்...... கயல் படிக்கும் கல்லூரி இருக்கும் ஊருக்கு சென்றுதான் படிக்க வேண்டும்..... அதனால் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.......



கண்ணன் வீட்டில் கார் இருந்தாலும் அதை குடும்பமாக எங்காவது செல்லும் போதுதான் பயன்படுத்துவார்கள்...... கண்ணனும் வாசுவும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதால் மற்ற நேரங்களில் அதனையே பயன்படுத்துவார்கள்..... முத்துவும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று விடுவான்.......கயலும் தன் ஊரில் பஸ்ஸில் சென்று வந்ததால் அவளுக்கு இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை....



கண்ணன் ஊரிலிருந்து இருபது...முப்பது பிள்ளைகள்..... கயலோடு பேருந்தில் வந்து முத்து படிக்கும் பள்ளியில் படிக்கின்றார்கள். கயலும் அவர்களோடு நன்கு பேசி பழகியதால்...... அவர்களும் அக்கா... அக்காவென்று சலசலவென்று பேசிக்கொண்டே வருவார்கள்...... கயலும் முன்பெல்லாம் அமுதாவோடு அரட்டை அடித்தபடி வருபவள்..... இப்போதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு இணையாக பேசியபடி வருவாள்.......



கயலின் கல்லூரிக்கு அருகிலேயே பேருந்து நிலையம் இருப்பதால் அவள் நான்கு மணிக்கு கல்லூரி விடவும் அமுதாவோடு பேருந்து நிலையத்திற்கு வருபவள்..... நான்கு முப்பதுக்கு வரும் அந்த மினி பஸ்ஸில் ஏறி இருப்பாள்..... அடுத்த ஸ்டாப்பில் பள்ளி பிள்ளைகள் ஏறிவிடுவார்கள்...... கயல் கல்லூரிக்கு அருகில் புதிதாக ஒரு ஒயின்சாப் திறந்திருந்தார்கள்...... அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஆண்கள் வாங்கிய கூலியில் பாதியை அந்த ஒயின்சாப்பில் குடித்து அழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்கள்...... காலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருபவர்கள்..... திரும்பி வரும்போது..... எதையாவது.... உளறிக்கொண்டும்.... தேவையில்லாமல் அடுத்தவர்களோடு வம்பிழுத்து.....சண்டை போட்டுக்கொண்டும் வருவார்கள்.......



கயலுக்கும் காலையில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை...... மாலையில் வரும்போது அந்த நாத்தமே அவளுக்கு வாந்தி வருவதுபோல இருக்கும்......மேலும் அவர்கள் ஏதாவது உளறிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் வருவதை பார்த்தால் பயமாக இருக்கும்..... கயலின் தந்தைக்கும்....தாமரையின் கணவருக்கும் குடிப்பழக்கம் இல்லை....... அதனால் குடிகாரர்கள்......தன்னை மறந்து பேசி வருவதை.... கண்ட இவளும் மற்ற பெண்பிள்ளைகளும் ஏதாவது தங்களுக்குள்....பேசி அரட்டை அடித்தாலும் கயலுக்கு பஸ்ஸைவிட்டு இறங்கினால்தான் மூச்சே..... வரும்.....அமுதாவோடு வரும்போது.... அவர்களுக்கு தெரிந்தவர்கள் கண்டிப்பாக யாராவது இருப்பார்கள்.......



சென்ற வாரத்தில் ஒருநாள்.... இவள் பிள்ளைகளோடு பேசியபடி வந்தவள்....அங்கிருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் பிள்ளை.... அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒரு நடிகரோடு ஒப்பிட்டு அவர்கள் மாதிரி நடித்துக்காட்ட..... மற்ற அனைவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை..... அப்போது அந்த பெண் ஒருவரை காட்டி நடிகர் வடிவேல் மாதிரி நடித்துக்காட்ட..... இவளும் சிரித்தபடி அந்த ஆளை நிமிர்ந்து பார்க்க...... அவனோ.... கயல் தன்னைதான் பார்த்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டான்.....



அன்றிலிருந்து கயலை சைட் அடிப்பதை தவிர அவனுக்கு வேறு வேலையில்லை..... அவன் ஒரு வேலைவெட்டி இல்லாதவன்....சூதாடுவதும் ஏதாவது அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கச் சொன்னால் அதற்கு ஆள் சேர்த்து கொடுத்து அரசியல்வாதிகளுக்கு கைகூலியாக திரிபவன்.... வேலை இல்லாத சமயங்களில் தன் இருசக்கர வாகனத்தில் சும்மா ஊரைச் சுற்றி வெட்டிபந்தா காட்டிவிட்டு நேராக ஒயின்சாப்பிற்கு செல்பவன்......ஆறு மணிவரை இருப்பவன்....பின் தன் வீட்டிற்கு கிளம்புவான்..... இன்று அவனுடைய வண்டி பஞ்சரானதால் அதை வேலைக்கு விட்டவன்.... வண்டி நாளைக்குதான் கிடைக்கும் என்று கடைபையன் சொன்னதால்.....அவனின் ஊருக்கு இந்த பஸ்ஸை விட்டால் மீண்டும் இரவு பத்து மணிக்கு என்பதால் அன்று அந்த பஸ்ஸில் ஏறியிருந்தான்.......



ஆனால் இந்த நிகழ்வுக்குபின்.... கயல் பஸ்டான்டில் நிற்கும் போது இவளை பார்த்து சிரித்தபடி இருக்க….

அமுதாவோ.....” ஏய் யாருடி இவன்..... உன்னைய பாத்து அப்பத்திலிருந்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்....”.



“ எவன்டி...” என்று அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தவள்....... இவன நேத்து பஸ்ல பாத்தமே........ என்று யோசித்தவள்......” இவன் ஒரு குடிகாரன்டி.... நேத்து பஸ்ல குடிச்சுப்புட்டு கம்பிய புடிக்க மாட்டேன்னு ஒரே..... அடம்..... பஸ்ல வந்த புள்ளங்க கூட....டிரைவர் அண்ணகிட்ட போய் அண்ணே.....ப்ளிஸ்..... வேகமா போய் பிரேக் புடிங்கண்ணே.... வடிவேலுமாதிரி பஸ்ஸுக்கு வெளிய போய் விழுகட்டும்னு சொன்னுச்சுக.......அந்த அண்ணே என்னனா......ஏம்மா....நான் புள்ளகுட்டிகாரன்....வீனா என்னைய போலிசுல மாட்டி விட்டுருவிக போலன்னு.......சொல்லிட்டாருடி......”.





அமுதா......” ம்ம்ம்…… அப்புடி விட்டுருந்தாக்கூட..... இந்நேரம் சங்கு ஊதிருப்பாங்கடி...... ஆனா இப்ப பாரு இவன் பார்வையே சரியில்லை...... அவன் மூஞ்சியும் முகரையும் தலைக்குள்ள நாலுகுருவிகூடு இருக்கும் போலடி...... எதுக்கும் பஸ்ல போகும் போது இவன்மேல கொஞ்சம் கவனமாவே இருடி.....”



“இவன்கிடக்குறான்டி....லூசுப்பய...... தேவையில்லாம இவனுக்கெல்லாம் ஓவர் பில்டப் குடுக்ககூடாதுடி........”



இவள் இப்புடி சொல்ல.......... அவனோ இந்த பொண்ணு நம்மள பத்திதான் என்னமோ பேசுது....... பாத்தா.....வெள்ளையா...... நல்ல அழகா.....இருக்கே....... இப்புடி இருக்குற புள்ளைகளுக்கு நம்மள மாதிரி உள்ளவங்களதானே பிடிக்கும்னு அன்னைக்கு ஒரு படத்துல பாத்தமே...... என்று கயலை பார்த்து ஒருமாதிரி இளித்து வைத்தான்.....கயல் அவனை கண்டுக்காமல் பஸ்ஸில் ஏறவும் இவனும் இவள் பின்னால் ஏறியிருந்தான்...... கயல் அடுத்த ஸ்டாப் வருவதற்குள்.....அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி வந்தான்....... பார்க்க...பார்க்க..... அவனுக்கு கயலை எப்புடியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியே ஏற்பட்டிருந்தது........



பக்கத்தில் இருந்த அவனுடைய கூட்டாளி.....” என்னப்பா..... அந்த பொண்ணையே பாத்துக்கிட்டு வார......”



“ஏண்டா.....பாத்தா.... என்ன...... நேத்து அந்த பொண்ணு என்னைய பாத்து சிரிச்சமாதிரி இருந்துச்சுடா......”



“ஏண்டா...... இது உனக்கே ஓவரா.....தெரியல...... உம்மூஞ்சிய நீ கண்ணாடியில பாத்தது இல்ல...... அந்த பொண்ணு என்ன கலரா...... அழகா..... இருக்கு...... ஆனா......அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா......”



“என்னது..... கல்யாணம் ஆகிடுச்சா.......”

“ஆமா..... எங்க பக்கத்தூருலதான் கட்டிக்குடுத்துருக்காங்கன்னு நினைக்கிறேன்...... அன்னைக்கு குன்னக்குடி கோயிலுல இந்த புள்ளய அவ புருசன் படியிலகூட இறங்க விடாம.....தூக்கிக்கிட்டு இறங்கி வந்தத நான் பாத்தேன்.....கூட வந்தவுக எல்லாம் எங்க பக்கத்து ஊருகாரங்க.........”



“கல்யாணம் எப்ப ஆச்சுடா.....”

“இருக்கும்.... அது ஒரு ரெண்டுமாசம் இருக்கும்டா......”

“ரெண்டு மாசம்தானே......நான்கூட.... ரெண்டுவருசம் ஆச்சோன்னு நினைச்சேன்...... பரவால்லடா.... எப்புடியாச்சும்.....அவள ஒருதடவையாவது அடையாம விடமாட்டேன்டா......” குடித்தில் அவனுக்கு சுயநினைவு இல்லாமல் கயலையே பார்க்ககூடாத இடங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்......

கயல் தலையை குனிந்திருந்தாலும் தன்னை யாரோ வெறிப்பதை உணர்ந்து.... சாலை ஒழுங்காக சரிபடுத்தினாள்........கயலை பொருத்தவரை எப்போதும் டிரஸை ஒழுங்காக போடுவாள்..... சிறுவயதிலிருந்தே...... பிள்ளைகள் மாடல் மாடலாக டிரஸ் போடும்போது இவளுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை.....கூட்டத்தில் தான் தனியாக தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்......



மறுநாளில் இருந்து அவன் தொல்லை ஒரு எல்லையில்லாமல் போய் கொண்டிருந்தது.. அவள் அருகில் வந்து உரசுவதும் ஒரு மாதிரியாக சிரிப்பதுமாக இருந்தான்...... இதை அந்த பள்ளிபிள்ளைகளும் கவனித்து இருந்தார்கள்.......” அக்கா..... அவன் பார்வையே....சரியில்லக்கா..... அவன் ஒருமாதிரியா பாக்குறான்கா.....”.



“இங்க பாருங்கப்பா..... இவன் குடிச்சிருக்கான்னு நினைக்குறேன்.......நாம கண்டுக்காம இருப்போம்.....” என்றபடி தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்....



வேண்டுமென்றே கயலை கவர்வதற்காகவே...... இவன் அங்கு பேசாமல் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் வம்பிழுக்க ஆரம்பிக்க....கயலும் அந்த பள்ளி பிள்ளைகளுமே பயந்து போயிருந்தனர்...... அவன் பேசிய பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை.....







மறுநாளில் இருந்து கயலிடம் நேரிடையாகவே..... பேச துவங்கியிருந்தான்......

“உன்னோட.....பேரு.... என்னம்மா....” என்று நேரிடையாக கேட்கவும்....கயல் உண்மையிலே பயந்து விட்டாள்...... மெதுவாக நழுவி முன்புறம் சென்றவள்..... அப்போது ஒரு பெண் சீட்டிலிருந்து எழவும்...... இவள் டக்கென்று அமர்ந்து கொண்டாள்........ அதிலிருந்து கயலுக்கு மாலை கல்லூரி விட்டு வருவது பெரும் சோதனையாகவே இருந்தது.......



அமுதாவோ......” ஏய் ...அவன பாத்தா.... எனக்கென்னமோ.....சரியாபடல....... கயலு..... ஒன்னு அண்ணன்ட்ட சொல்லு...... இல்லைனா உங்க அப்பாட்ட போன் பண்ணி சொல்லு இவனுக மாதிரி பாக்க சாதரணமா..... இருக்குறவங்கதாண்டி...... பொண்ணுகள லவ் பண்றேன் டார்ச்சர் குடுக்குறது...... ஒத்துவரலைனா......கத்தியாளா.....குத்துறதுன்னு நிறைய நடக்குது...... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் தெரிஞ்சும்..... அவன் இப்புடி பேசுறான்னா...... எனக்கென்னமோ....சரியா படல...... நீ இன்னைக்கே அண்ணகிட்ட சொல்லிரு......புரியுதா......”



அமுதா.... இவ்வளவு சொல்லும்போதும் அவன் நேற்று பஸ்ஸில் தன் அருகில் வந்தவன்.....” என்னமா.... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்ல.....பரவால்ல...ஒம் புருசன்.... அப்புடியே உன்னைய பூ போல கையாளுவான் போல....... அப்புடியே....புத்தம் புது ரோஜா மாதிரி இருக்க...... என்கிட்ட வா....... நீ போதும் போதும் சொல்லுர அளவுக்கு நான் உன்னைய விடாம என் கைக்குள்ள வச்சுக்குறேன்..... ஆனா உன் புருசன் மாதிரி சாப்டால்லாம் இருக்கமாட்டேன்.....நமக்கு எல்லாமே.....அடிதடிதான்......” என்று அவளின் லேசாக ஒதுங்கிய சாலை பார்த்தபடி சொன்னவனை பார்த்தவளுக்கு உண்மையில் கை காலெல்லாம் வெடவெடவென்று நடுங்க துவங்கியது........



“ஏய் கயலு என்ன....நான் சொன்னது புரிஞ்சதா.......”

“என்னடி.......”

“கிழிஞ்சது...... அண்ணகிட்ட சொல்லச் சொன்னேன்ல...... சொல்லிரு....”



“சொல்லிருவேன்டி....... ஆனா அவுகளே ரொம்ப கோபகாரவுக..... ஏதும் கைகலப்பு வந்துருமோன்னு பயமாயிருக்கு..... காலேஜ் சேரும் போதே.... அப்பா சொன்னாங்க...... நீ போறதும் தெரியக்கூடாது வாரதும் தெரியக்கூடாது....அப்புடி என்னமாச்சும் பிரச்சனை வந்தா முதல்ல படிப்பைதான் நிப்பாட்டுவேன்னு.........அதான்டி பெரிய யோசனையா... இருக்கு......”



“எனக்கென்னமோ......அண்ணன பாத்தா அப்புடி தெரியலடி.......”

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
முத்துவோடு வகுப்பில் படிக்கும் பிள்ளைகள்....... முத்துவிடம் வந்து “ஏய் முத்து உங்க அண்ணிகிட்ட..... ஒருத்தன் தினமும் வந்து....தப்பு தப்பா பேசுறாண்டா.....”



முத்துவோ.... அதிர்ச்சி அடைந்து....” என்னபுள்ளைகளா.... சொல்லுறிக.... எங்க அண்ணிகிட்டயா.....”.

“ஆமாண்டா....... பாக்கவே..... குடிகாரன் மாதிரி இருக்கான்.... ஏன் உங்க அண்ணி வீட்டுல சொல்லலையா.....”

“இல்லப்பா....”

“பாவம்டா..... உங்க அண்ணி ரொம்ப பயந்து போய் இருக்காங்கன்னு நினைக்குறோம்......”

“சரிப்பா....நான் பாத்துக்குறேன்...”. என்றவனுக்கு எப்போது அண்ணனிடம் இந்த விசயத்தை சொல்வோம் என்றிருந்தது......

மறுநாள் அறுவடை விசயமாக அலைந்து விட்டு கண்ணன் இரவு நேரம் கழித்து வந்ததால் முத்துவால் சொல்லமுடியவில்லை....... மறுநாள்.... எப்படியாவது இன்னைக்கு அண்ணேகிட்ட சொல்லாம ஸ்கூலுக்கு போகக் கூடாது என்ற முடிவில் இருந்தவன்....... கண்ணனிடம் விசயத்தை சொல்லவும்.....

” இது எத்தன நாளா....நடக்குது.......”

“ஒரு வாராமாண்ணே.........”

கண்ணனுக்கு கோபம் என்றால் கடுமையான கோபம்...... ஒரு வாரமா கஷ்டப்படுறா...... நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லல..... நாம எத்தனை தரம் கேட்டோம்..... என்று நினைத்தவன்...... ஒரு வேளை இத சொல்லத்தான் இன்னைக்கு நம்மள வண்டியில கூட்டிட்டு போகச் சொன்னாளோ......... என்று நினைத்தவன்...வேகமாக பஸ்ஸ்டான்டிற்கு சென்றான் ……அதற்குள் பஸ் சென்றிருந்தது ..... இவனும் காலேஜ்க்கு போறதுக்குள்ள எப்புடியும் பஸ்ஸ புடிச்சுரலாம் என்று நினைத்து வேகமாக வண்டியை ஓட்ட பஸ் சென்று கயல் காலேஜ்க்கும் சென்றுவிட்டாள்....... கண்ணனுக்கு போன் வந்து கொண்டே இருந்தது..... ஆனால் அவன் எந்த போன் காலையும் எடுத்து பேசவில்லை.......

அவன் அம்மா போன் பண்ணவும்.......” ம்ம்ம்ம்…… இந்தா .............இங்க பக்கத்துல தாம்மா இருக்கேன்.....”

“நீங்க வயல காட்டுங்க..... நான் இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்.......ம்ம்ம் இந்தா வந்துட்டேன்”



கயலுக்கு....பயம் என்றால்.....மிகுந்த பயமாயிருந்தது...... காலேஜ் விடவும் அமுதா..... “ஏண்டி நான் வேணா.... துணைக்கு வரவா.....”

“வேணாம்டி..... அப்புறம்....நீ எப்ப வீட்டுக்கு போவ.... நான் பாத்துக்குறேன்......”

“நீ வேணா அண்ணனுக்கு போன் பண்ணி பாரேன்......”

“இல்லடி.....வேணாம்..... இன்னைக்கு கதிரு அருக்குறாங்க...... எப்புடியும் வேலைமுடிய அஞ்சு....ஆறுமணி ஆகிறாதா.....நான் பாத்துக்குறேன்......” பஸ் வர அதில் ஏறியிருந்தாள்.......

அவனை காணாமல் நிம்மதி பெருமூச்சு விட்டவள்...... அடுத்த ஸ்டாப்பில் பள்ளி பிள்ளைகளோடு அவனும் முன்புறம் ஏறியிருந்தான்......கயலை பார்த்து இழித்தபடி மெதுவாக அவள் கையை பிடிக்க....... கையை உதறியவள்.... பஸ்ஸின் முன்பகுதியை நோக்கிச் செல்ல அவனும் மெதுவாக பின்னாலே சென்று கொண்டிருந்தான்...... கண்ணனும் அடுத்த ஸ்டாப்பில் பின்புறம் ஏறியிருந்தவன்.....கண்ணணுக்கு அவனை அடையாளம் தெரியாததால் கயலை தேட கயல் பஸ்ஸின் முன்புறம் இருக்க அவள் பின்னாலே ஒருவன் நின்று கொண்டிருக்க.......... கண்ணன் கண்ணில் கனலுடன் அவனை நோக்கி முன்னேறினான்......



கயல் முன்புறமாக திரும்பியிருக்க.... அவள் பின்புறமாக நின்றிருந்த அந்த குடிகாரன்....... அவள் கழுத்தில் ஊத.... இனிமேலும் பொருக்க முடியாது என்று நினைத்த கயல் பையிலிருந்த மிளகாய்தூளை எடுத்து அவன் புறம் திரும்பி அவன் கண்ணில் தூவ போக........ கயலின் இடுப்பில் கைவைக்க தூக்கியிருந்த கையை கண்ணன் பின்னால் இருந்து முறுக்கியிருந்தான்.......... மிளகாய்தூளை போட திரும்பியவள்...கண்ணனை பார்த்ததும் அதிர்ந்து போய் இருந்தாள்.......கண்ணன் கயலை பார்த்து முறைத்தபடி அவன் சட்டையை இரு கையால் பிடித்தவன்.....

“ ஏண்டா....உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா...... எம் பொண்டாட்டி மேல கைய வப்ப......” என்றபடி அவன் மூக்கில் ஓங்கி குத்தியிருந்தான்.......வேட்டியை மடித்து கட்டியவன்..... சட்டையை பிடித்தபடி அவனை ஓங்கி ஒருமிதிவிட..... அவன் குடிவெறியில் தடுமாறி விழுந்திருந்தான்...... பஸ்ஸில் ஒரே சத்தமாக இருக்கவும் டிரைவர் பஸ்ஸை ஒரு ஓரமாக நிப்பாட்டினார்.......



அங்கிருந்த பிள்ளைகளும் ....பெண்களும்...”..நல்லா போடுங்க...... இவன்களெல்லாம் குடிச்சுப்புட்டு பஸ்ல போடுற ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை......” என்று சொல்ல.....கண்ணன் அவனுக்கு எழுவதற்குகூட அவகாசம் கொடுக்காமல்...... அடி வெளுத்திருந்தான்....... கையை பிடித்து முறுக்கியதில் அவனுக்கு கையே ஒருவேலை ஒடஞ்சிருச்சோ....... என்னும் அளவுக்கு அவனுக்கு வலி உயிர்போய் உயிர் வந்தது ...... கண்ணன் அவனை அடித்ததில் மூஞ்சி மொகரையெல்லாம் பேந்து ரத்தம் ஊற்றியது.......சட்டையெல்லாம் கிழிந்து நார்நாராக தொங்கியது....... அடி பொறுக்க முடியாமல்...... அவன் அலர..... அங்கிருந்தவர்கள் கண்ணனை..... பிடித்து விலக்கிவிட்டார்கள்........

“ விடுப்பா.....விடு..விடு..செத்துகித்து போயிர போறான்..........”



“டேய்........ உன்னைய..... இனிமே...... இந்த பக்கம் பாத்தேன்.........அப்புறம் நீ உயிரோட போக மாட்ட...... அத முதல்ல ஞாபகத்துல வச்சுக்க......”.என்றபடி ஓங்கி ஒரு உதை விட்டான்.... அந்த குடிகாரனை பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டவர்கள் பஸ்ஸை கிளப்ப....... கண்ணன் கயலிடம் ஒன்றும் பேசாமல் வர அவர்கள் இறங்கும் ஸ்டாப் வரவும் கண்ணன் இறங்கி விறுவிறுவென்று வீட்டிற்கு நடக்க......கயல் அவனோடு ஒத்து நடக்கமுடியாமல் அவள் ஓட வேண்டியதாய் இருந்தது.....வீட்டிற்கு வந்தவன் மாடிக்கு செல்லவும்....... கயல் வீட்டிற்குள் வந்தவள்....... எங்க அத்தைய ..... காணோம்..... இப்ப என்ன பண்ணுறது........ இவர் ரொம்ப கோபமா இருக்காரே...... அவன் நம்மகிட்ட வம்பிழுக்குறதா யாரு சொல்லியிருப்பா........ இப்ப மாடிக்கு போவமா..... வேண்டாமா... என்று யோசித்தபடி....மாடி ஏறினாள்.......



கண்ணன் கட்டிலில் படுத்து.....ஒரு கையால் கண்ணைமூடிய படி படுத்திருந்தான்........



கயல்......தயங்கியபடி அவன் அருகில் சென்றவள்........ மெதுவாக.... “என்னங்க.......என்னங்க.......”.

கண்ணன் பதிலே சொல்லவில்லை...... கயல் மெதுவாக அவன் கையை பிடிக்க....பட்டென்று தட்டி விட்டவன்....எழுந்து அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்...... கயல் அவனை பார்த்தபடி இருக்க..... கயலை திட்ட திரும்பியவன்.... அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க....... அவள் ஓடி வந்து அவனை கட்டிப் பிடித்தவள்.... அவன் நெஞ்சில் சாய்ந்து .... கதறி..... அழ ஆரம்பித்தாள்.......



திட்ட வாய் திறந்தவன் அவளின் அழுகையை பார்க்கவும்...... அவன் மேல் கொலைவெறி .....வந்தது.... கயல் இத்தனை நாள் மன அழுத்தத்தை தன் அழுகையில் கரைத்துக் கொண்டிருந்தாள்... அவளுக்கு இந்தமாதிரி யாரும் பேசி கேட்டதில்லை..... இதை யாரிடம் சொல்வதென்றும் தெரியவில்லை..... இன்று கண்ணன் தனக்காக அவனை அடிக்கவும் தனக்கு ஒரு பிரச்சனை வந்தால் ...... அவன் தன் பக்கம் நிற்பான் என்பதே அவளுக்கு அவன்மேல்........ ஒரு தனி பிடித்தத்தை ஏற்படுத்தியது.... கயல் வெகுநேரம் அழுதவள்..... சிறுகுழந்தை போல தேம்பவும்.....



கண்ணன்.... தன் நெஞ்சிலிருந்த அவள் முகத்தை தூக்கி... அவள் கண்ணை துடைத்துவிட்டான்......அழுது அழுது அவள் முகம்....செவசெவன்று இருந்தது..... .கண்ணனுக்கு சற்று கோபம் குறைந்தது....

..” அழுகாத...... ம்பச்..... அழுகாதன்னு சொல்றேன்ல....”.என்று சற்று குரலை உயர்த்தவும்...... கயல் சட்டென்று அவனைவிட்டு தள்ளி நின்று...... தன் இருகண்ணையும் புறங்கையால் துடைக்க......



கட்டிலில் அமர்ந்த கண்ணன் அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமரசெய்தவன்....... அவளை தன்புறம் இழுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.......



“ம்ம்ம்...... சொல்லு......?.”.

“என்ன....சொல்ல....”

“அப்ப…………என்கிட்ட சொல்ல ஒன்னும் இல்ல அப்புடிதானே.......?”

“இல்ல.........”

“அப்ப...சொல்லு....”.

“எனக்கு சொல்ல பயமாயிருந்துச்சு........”

“எங்கிட்ட... என்ன பயம்.......”

“இல்ல..... உங்களுக்கு கோபம் வந்து ஒருவேலை என்னைய காலேஜ்க்கு அனுப்ப மாட்டீங்கன்னு நினைச்சேன்........”

“ஏண்டி....ஒரு குடிகாரன் குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனா..... நான் ஏன் உன்னைய காலேஜ்க்கு அனுப்பாம வீட்டுல இருக்கச் சொல்லபோறேன்......”



“இல்ல எங்கப்பா....சொன்னாங்க.....”



“உங்கப்பா....சொன்னாங்கன்னா...... அவரு அந்தகாலத்து ஆளு...... இப்ப பெண்களுக்கு படிப்பு எம்புட்டு முக்கியம்னு எனக்கும் தெரியும்டி.........பெண்களுக்கு இப்ப எங்க போனாலும் பிரச்சனை வருது.....ஸ்கூல் பிள்ளைகளில் இருந்து வேலைக்கு போற பெண்கள் வரைக்கும் பிரச்சனைதான்.....நீதான் தைரியமா இருக்கனும்.......என்ன புரியுதா......”



“ம்ம்ம் ....அப்புறம் உங்களுக்கு கோபம் வந்து இன்னைக்கு அடிச்சமாதிரி....ஏதாச்சும் பிரச்சனை வரும்னு நினைச்சேன்.....”



“ஆமா..... எம் பொண்டாட்டி மேல ஒருத்தன் கைய வைப்பான்...... அவன நான் பாத்துகிட்டு சும்மா இருப்பனா..... இன்னைக்கு பஸ்ஸூனால அவன் தப்பிச்சான்.... இல்ல இன்னைக்கு அவன்மேல இருந்த கோபத்துக்கு.....தொட்ட அவனோட கையை வெட்டிட்டுதான் மறுவேலை பாத்துருப்பேன்........”

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
“ஏய்..... ஏன் இப்புடி முழிக்குற...... என்ன கண்ண திறந்துகிட்டே....கனவுகாங்குறியா......”. என்று அவள் தோளில் கைபோட்டு தன்பக்கம் இழுத்தவன்...... அவள் நெற்றியில் முட்டி.....

“.என்ன......?”.

“என்னால உங்கள புரிஞ்சுக்கவே முடியல........”

“ம்ம்ம் ....நீ என்னைய இப்பதானே....லேசா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்குற......போக போக எல்லாம் சரியாயிரும்...... முதல்ல உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்கிட்ட சொல்லனும் புரியுதா....... நீ எனக்கு மட்டும் சொந்தமானவ..... எவனும் என் உயிர் இருக்குறவரை உன்னை ஒருவார்த்தை சொல்லவிடமாட்டேன்....புரியுதா.....”



அவள் கையை எடுத்து அவன் வாயில் வைத்து...”.ச்சு....ச்சு..... இப்புடியெல்லாம் பேசாதிங்க......எனக்கு கஷ்டமாயிருக்கு......”என்றபடி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.........



அவள் உள்ளங்கைக்கு முத்தம் கொடுத்தவன் ....”ஆமா.....வந்ததும் வராததுமா ஏன் இப்புடி ஒரு அழுகை........”

கயலுக்கு தன் மனபாரம் எல்லாம் காணாமல் போகவும்....... “அது நீங்க கோபமா வந்திங்கள்ள...... அதுதான் ஒருவேலை அடிச்சிரகிடிச்சிர போறிங்கன்னு நான் முன்னாடியே.....அழுதுட்டேன்.........”



“உன்னைய.....”.என்றபடி அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்...... அவளின் குழந்தைதனமான சிரிப்பை பார்த்து ரசித்தான்...... இருவருக்குமே தெரியும் கயல் அதனால் அழவில்லை என்று........



“ஆமா..... அத்தை எங்க...”

“பத்தியா....மறந்துட்டேன்..அம்மா களத்துமேட்டுல இருக்காங்க..... நீ போய் டிரஸ மாத்திட்டு அம்மாவுக்கு காப்பி போட்டுகுடு.... நான் போய் குடுத்துட்டு..... அங்கயிருக்குற வேலைய பாக்குறேன்...... இன்னைக்கு இருந்த டென்சன்ல ஒரு வேலையும் ஒழுங்காப் பாக்கல....... அப்புறம் உனக்கு என்ன வேணும்னாலும் இல்ல பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லனும்..... மூஞ்சிய இத்தனநாளு இருந்தமாதிரி உம்முன்னு இருக்காம..... சிரிச்சுகிட்டே இரு....... எனக்கு அதுதான் புடிச்சிருக்கு........ இப்ப என்ன பண்ணுற காலையில இருந்து எனக்கு ஒரே டென்சன்...... அதுனால.......”.



“உங்களுக்கு மட்டும் டீ போட்டு கொண்டுவரவா......”



“ஆமாடி உன்னால மட்டும்தான் பால் அப்புடியே பொங்கி வரும்போது அதுல படக்குன்னு பச்ச தண்ணிய ஊத்தமுடியும்....”.என்றவன் எழுந்து

“இன்னைக்கு உங்கிட்ட வெளக்கம் சொல்லி என்னால முத்தம் வாங்கமுடியாது...... அதுனால நானே குடுக்குறேன்”.என்றவன் அவள் இருகன்னத்திலும் முத்தமிட்டான்........



அவளிடமிருந்து போங்க மீசை குத்துது என்னும் வார்த்தையை எதிர் பார்க்க.... கயல் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருக்கவும்.......

“ என்னடி ஒன்னும் சொல்லாம இருக்க...மீசை குத்தலையா..........?”



“குத்துது ஆனா.....பரவால்ல......” என்றபடி கயல் வெட்கப்பட்டுக் கொண்டே....கீழே ஓட....



“பார்ரா.....நம்ம பொண்டாட்டிய......” என்றபடி கண்ணனும் பின்னாலே வந்தான்........

மறுநாளில் இருந்து வயலில் அறுவடை வேலை முடிந்ததால் கண்ணனே கயலை காலேஜ்க்கு கூட்டிக்கொண்டு போய் விட்டு கூட்டிவர பழகியிருந்தான்.......கயலும் அவனோடு இன்னும் கொஞ்சம் மனம்விட்டு பேச பழகியிருந்தாள்……



அங்கு சுதா தன் தாய் வீட்டிற்கு சென்றிருக்க....... வாசுவும் அப்போதுதான்......வயலுக்கு கிளம்பி கொண்டிருந்தான்......

வாசுவின் அம்மா பேச்சி......” வாசு.....வாசு......”

“என்னம்மா..... இப்ப எதுக்கு கூப்புடுறீங்க.....”

“டேய் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்......?”

“சொல்லுங்கம்மா.......”

“இங்க வாப்பா....”.தன் அருகில் உட்காரவைத்தவள்......

“ டேய்....நீ அம்மாவ சின்னபுள்ளயில இருந்து பாக்குற....நான் எப்பவாச்சும் உனக்கு எதிரா பேசியிருக்கனா......எப்பவுமே உம்மேல உசுராதானேடா... இருக்கேன்...?”

“ஆமா..... ஏம்மா.... இப்ப அதெல்லாம் தேவையில்லாம பேசுற.....”

“நீ கல்யாணவிசயத்துல கொஞ்சம் அவசரபட்டியோன்னு தோனுதுப்பா..... வரவர ஒம் பொண்டாட்டி நடக்குறே எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல.....முந்தியாச்சும் ரூமுக்குள்ளயே இருந்தா.... இப்ப என்னனா...நைட்டிய போட்டுக்கிட்டு ..அடுத்தடுத்த வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருக்குறா....வீட்ல ஒருவேலையும் பாக்குறதில்லை.... உங்க அப்பாவையும் மதிக்கிறதில்லை....... இப்புடி நைட்டியெல்லாம் யார்டா அவளுக்கு வாங்கிகுடுத்தா....பாக்க சகிக்கல.......முன்னாடி இப்புடி எறக்கமா.....கையும் இல்லாம...... இதெல்லாம் நல்லாவா இருக்கு......

ஒரு வெள்ளி...செவ்வாய்...கோயிலுக்கு போவோம்ன்னு இல்லை...... நீ வாங்கிகுடுக்குற பூவ.....தான் வச்சது போக...... அப்புடியே பிரிட்ஜ்ல கிடந்து வாடுது...... அத எடுத்து சாமிக்கு போடுவோம் அட நானும் ஒரு வாவரசிதான ஒரு ரெண்டு இனுக்கு கிள்ளி குடுப்போம்னு இல்லை..... சும்மாதானே இருக்குன்னு நான் எடுத்து சாமிக்கு போட்டோன்னு அன்னைக்கு அந்த குதிகுதிக்குறா.......உன் தம்பி வேற டிக்கெட்டு போட்டுடானாம்..... அவன் வரும்போது இப்புடி நடந்துக்காம கொஞ்சம் நல்லா டிரஸ்ஸ போடச்சொல்லு....... சொல்றத சொல்லிட்டேன்..... அப்புறம் உம் பிரியம்.........”



“ம்ம்ம் ....சரி.....” என்று முனங்கியபடி.....வீட்டை விட்டு வெளியே சென்றான்......



நாட்கள் அதன் போக்கில் செல்ல..... தீபாவளிக்கு இன்னும் இருபது நாட்களே இருந்தது..... காந்திமதி தன் பேத்தியை பார்த்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தார்....... அன்று ஏதோ அரசு விடுமுறை என்பதால் கயலும் முத்துவும் ராமனும் வீட்டில் இருந்தனர்....... கண்ணனும் கொல்லைபுறத்தில் வேலைபார்த்து கொண்டிருக்க....



“சாவித்திரி.....ஆத்தா கயலு....”

“என்னத்தே....”

“கண்ணன் தோட்டத்துல இருக்கான் அவன்கிட்டபோய் ரெண்டு முருங்கைகாய மரத்துல இருந்து பறிச்சுதர சொல்லுத்தா.....”

“இந்தா....போறேன்தே”.....என்றபடி ....கொல்லைபுறத்திற்கு சென்றவள்..... கண்ணன் வேலை பார்த்துக் கொண்டிருக்கவும்......சரி நாமளே......காய் கிட்டதான இருக்கு தொரட்டிய வச்சு பறிச்சுக்குவோம்...... என்று நினைத்தவள்.... அங்கிருந்த தொறட்டியை எடுத்து மரத்தில் இருந்து முருங்கைகாயை பறிக்கமுயல அந்த மரத்தை ஆட்டவும் ...... மரத்தில் இருந்த ஒருகுட்டி பச்சை பாம்பு ஒன்று பொத்தென கீழே விழவும் கயல் பயந்து அந்த தொறட்டியை கீழே போட்டவள்....திரும்பி ஓட்டத்தில் கிளம்பியவள் எதிரே வந்த கண்ணனை பாக்காமல் மோதி அவன் கழுத்துல் கையை மாலையாக கோர்த்து கண்ணைமூடி கத்த ஆரம்பிக்கவும்.........



கண்ணன் கயல் தோட்டத்திற்கு வந்ததில் இருந்து அவளைதான் கவனித்துக் கொண்டிருந்தான்.....அவள் ஓடிவரவும்....எங்கே வாசல்படியில் தடுக்கி கீழே விழுந்து விடுவாளே என்று நினைத்து எதிரே வரவும்.....கயல் அவனை பிடிக்கவும் சரியாக இருந்தது....... அவள் கத்த ஆரம்பிக்கவும்.....தன் உதட்டோடு அவள் உதட்டை சேர்த்து.... இந்த உலகத்தையே.....மறக்க வைத்திருந்தான்.....



பயத்தில் வந்தவள் கண்ணன் முத்தமிடவும்........கண்ணை திறந்து பார்த்தவள்..... .கண்ணனை பார்க்கவும் .....மீண்டும் கண்மூடி.........பேசாமல் இருக்கவும் ..... அதை உணர்ந்த கண்ணனின் பிடியும் இறுகியது......கயல் இடுப்பில் கை கொடுத்து இறுக்கியவன்....முத்தத்தில் ஆழ்ந்தான்..... சில ......நொடிகளோ....நிமிடங்களோ...கடந்த நிலையில்...... சாவித்திரியின் குரல் கேட்கவும்...... சுயநினைவுக்கு வந்த கண்ணன்... இவள நாம இப்ப விட்டமுன்னா.....தத்து….பித்துன்னு ஏதாச்சும் கேள்விகேப்பாளே..... என்ன பண்ணுவது என்று யோசித்தவன்.....மெதுவாக அவள் கையை விலக்கியவன்...... அவள் ஏதோ கேட்பதுபோல இருக்கவும்..... திரும்பி....விறுவிருவென்று வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்..........



இவன் வேகமாக திரும்பவும் கயல் மறுபடியும் பாம்பு வந்துருச்சோ..... என்று நினைத்தவள்...... இவளும் அவன் பின்னே வேகமாக வந்தவள்.....அவன் வீட்டுக்குள் நுழையவும் சாவகாசமாக நடக்க... இதுதெரியாமல் அவன்பின்னே வந்து மோதியவள்..... அவன் மெதுவாக நடக்கவும்.....இவருக்கு என்னாச்சு.......என்று நினைத்தபடி பே.....வென நிற்கவும்....

சாவித்திரி வந்து.....” முருங்கைகாய்...எங்கத்தா......?”

“ம்ம்………”

“ஆத்தா....கயலு...என்னாச்சுத்தா.... கண்ணா... என்னப்பா...இந்தபுள்ள ஒருமாதிரியா முழிக்குது......”

கண்ணனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் அதை வாய்க்குள் அடக்கியபடி.....

“எனக்கு தெரியலயேம்மா......” என்றபடி கயலை ஓரக்கண்ணால் பார்த்தபடி மாடி ஏறி போக....

காந்திமதி வந்து கயலை போட்டு உலுக்க.......” அடியே....கூறு கெட்டவளே..... என்னாச்சு......”

கயல் காந்திமதியை பார்த்தும் ஒரு மாதிரியாக முழிக்க....

காந்திமதி...”. ஆத்தி..... நான் ....என்ன...பண்ணுவேன்....இந்த புள்ளைய......ஏதோ...காத்து கருப்பு புடுச்சிருக்குன்னு நினைக்கிறேன்....... ஆத்தா சாவித்திரி....இங்க யாராச்சும்...நல்ல கோடாங்கி..... இருக்காங்களாத்தா..........”



இனி...................?



தொடரும்................



 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்..........போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்......போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா.........இப்ப கதைய படிச்சுட்டு உங்களோட கருத்தை பதிவு செய்ங்க.........ப்ளிஸ்.....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top