ஹய், கைப்பாவைக்கு கோவம் வர ஆரம்பிச்சுருக்கே. நல்ல முன்னேற்றம்.
அதென்ன அவளுக்கு அப்படி ஒரு gender bias. பையன் தான்னு சொல்லிட்டே இருக்கா. பொண்ணு பொறந்தா விட்டு எறிஞ்சுடுவாளா இல்லை பீஷ்மன் கிட்ட சந்தோஷமா கொடுத்துட்டு அவனையும் மகளையும் விட்டு பிரிஞ்சுடுவாளா?
Marriage proposal - இவ ஏன் reject பண்ணுகிறாள் என்று பீஷ்மனுக்கு சரியான காரணம் தெரியுமோ? அதுனால தான் அவளைப் பேச விடாமல் பண்ணுகிறானோ? பீஷ்மா, கோவிச்சுக்கிட்டு இருக்குற உன் ஆளை எப்படி சரிக்கட்டலாம்னு உன்னோட minister cousin கிட்ட ஐடியா கேளு. நிறைய சொல்லுவான். உனக்கும் அவனுக்கும் இருக்குற வித்தியாசம் உன் past affairs மட்டும் தான். மத்தபடி பெருசா ஒன்னும் கிடையாது.