Advertisement

கைப்பாவை இவளோ 05

 

                        சாஷாவை வெளியேச் செல்ல வேண்டாம் என்று கூறிச் சென்ற பீஷ்மன் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவளை சந்திக்கவில்லை. சாஷா இதுவரை மருத்துவமனையிலேயே இருக்க, அவளுக்கான மருந்துகள் அத்தனையும் மீனலோச்சனியின் மேற்பார்வையில் தான். அவரைத் தவிர வேறு யாரும் தன்னை நெருங்க அனுமதிக்கவில்லை அவள்.

 

                       ஒவ்வொரு வேளையும் அவள் எடுத்துக் கொள்ளும் உணவு முதல் அவளுக்கான மருந்துகள் வரை அத்தனையும் அவர் பரிசோதித்த பிறகே சாஷாவால் தொடப்பட்டது. மீனலோச்சனிக்கே அவளை நினைத்து பாவமாகிப் போனது.

 

               எத்தனைப் பெரிய அந்தஸ்தில் இருப்பவள்.. அவள் கையசைத்தால் அவள் பின்னே வர ஒரு ரசிகர் பட்டாளமே தயாராக இருக்கிறது. அதற்கும் மேலாக பணம், செல்வாக்கு என்று எதிலும் குறைவில்லை. ஆனால், நிம்மதியில்லாத வாழ்க்கை. ஆனால், எதையுமே சிந்திக்க முடியாமல் இப்படி பித்துப் பிடித்தவள் போல் குழந்தை குழந்தை என்று புலம்பிக் கொண்டு இருக்கும் அவளை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை அவருக்கு.

 

               அவர் வரையில் அவரால் முடிந்த உதவியை அவளுக்கு செய்வது என்று அவர் ஏற்கனவே முடிவு செய்திருக்க, அதன்படி நடந்து கொண்டிருந்தார் இந்த நிமிடம் வரை. அதற்கும் மேலாக என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்து முடித்திருந்தார் மீனலோச்சனி.

 

                    சாஷா காலை உணவை முடித்து மாத்திரைகளையும் நேரத்திற்கு எடுத்துக் கொண்டவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாததால் விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள். அந்த நேரம் அவள் அறையில் அவள் மட்டுமே இருக்க, மனம் முழுவதும் தன் பிள்ளையின் நினைவு தான்.

 

                 பீஷ்மன் தன்னை அத்தனை எளிதில் விட்டுவிட மாட்டான் என்று தெரிந்திருக்க, அவனை எப்படி மனமிறங்க செய்வது என்று மட்டுமே சிந்தித்திருந்தாள் அவள். ஆனால், தன் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவனாகிற்றே அவன். அவனை தன்னால் வளைக்க முடியுமா??? என்று மனத்தை உழப்பிக் கொண்டு அவள் கண்ணீர் விட்ட நேரம், கதவு சத்தம் எழுப்பியது.

                கதவு திறக்கும் ஓசையில் அவள் சட்டென வாயிலைப் பார்க்க, வந்தது அவள் பீமன் தான். ஆனால், அதற்காக ஆசுவாசப்பட முடியாமல் அவள் விதி அவளை விரட்ட, மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள். “கடவுளே.. இன்னும் எத்தனை தூரம் இவனோடு போராட வேண்டும் நான்..” என்று அப்போதே சோர்ந்து போனது மனம்.

 

                 அசையாமல் தன்னை மொய்க்கும் அவன் பார்வை வேறு, தவறு செய்த உணர்வை கொடுக்க தலையைக் குனிந்து கொண்டாள் கண்கள் மடியில் இருந்த விரல்களை நோக்கி கொண்டிருந்தது. கண்களின் கண்ணீர் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சரியான நேரம் பார்த்து காத்திருக்க, நேற்று போலவே கால்களை நீட்டி அமர்ந்திருந்த அவளை உரசிக் கொண்டு அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் பீஷ்மன்.

 

                 சாஷா கால்களை மடித்துக் கொள்ள முயல, அவள் கால்களை மடிக்கவிடாமல் தடுத்து, அவள் கால்களின் மறுபுறம் தன் வலது கையை ஊன்றிக் கொண்டான் பீஷ்மன். அவன் செயலில் சாஷா நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவளைத்தான் அழுத்தமாக பார்த்திருந்தான் பீஷ்மன்.

 

                 “கையை எடு பீம்…” என்று அவள் மெல்லிய குரலில் முனக, உடனே கைகளை எடுத்துவிட்டான் அவன். ஆனால், அடுத்த கணம் அவள் மடியில் தலைவைத்து படுத்துவிட, சகலமும் உறைந்து போனது சாஷாவுக்கு. என்ன செய்கிறான் இவன்?? என்று பதட்டமானாள் சாஷா.

 

                 பீஷ்மன் சட்டமாக அவள் மடியில் தலை சாய்த்து அவள் கைகளை எடுத்து தன் தலையில் வைக்க, அவள் கைகளில் அசைவே இல்லை. பீஷ்மன் அவள் கையை எடுத்து வைத்ததோடு சரி. அதற்குமேல் அவளைப்பற்றி கவலை கொள்ளாமல் தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

                  சாஷா மெல்லிய பதட்டத்துடன் அசையாமல் அமர்ந்திருக்க,அவளைப்பற்றிய எண்ணமே இல்லாதவன் போல் ஒய்யாரமாக பள்ளி கொண்டிருந்தான் அவள் பீமன். சாஷாவுக்கு மருத்துவமனையில் இருக்கிறோம் என்பது வேறு உறுத்தலாக இருக்க, அவள் கண்கள் அறையின் கதவை நோக்கியது.

 

                 உள்ளே நுழையும்போதே அதெல்லாம் விவரமாக தாழிட்டு இருந்தான் அவன். இருபது நிமிடங்கள் கழிந்தும் அவன் அமைதியாகவே இருக்க, சாஷாவால் பொறுக்க முடியவில்லை. கால்களை அசைக்காமல் அமர்ந்திருப்பது வேறு வலி கொடுக்க, “பீம் எழுந்திரு..”என்றாள் மெல்லியகுரலில்.

 

                  பீஷ்மன் அலைபேசியில் இருந்து பார்வையை நீக்கி அவள் முகம் பார்க்க, பார்வை அவனையும் மீறி அவள் உடையில் பதிந்தது. இரவு உடையில் தான் இருந்தாள் இதுவரை. அவளது முன்னழகு பார்வைக்கு விருந்தாக, மற்ற நேரமாக இருந்திருந்தால் காட்சியே வேறு. ஆனால், இந்த நிமிடம் அவனுக்கே தன் பார்வை தவறாக தோன்றியது.

 

                  அவன் சுதாரிப்பதற்குள் சாஷாவும் அவன் பார்வையை உணர்ந்து கொள்ள, மீண்டும் விரக்தியான ஒரு புன்னகை தான் அவளிடம். பீஷ்மன் அவள் சிரிப்பை கண்டுகொள்ள, “ப்ளீஸ் பீம்.. வலிக்குது எனக்கு.. எழுந்துக்கோ.” என்றாள் மீண்டும்.

 

                  பீஷ்மன் நிதானமாக எழுந்து அமர்ந்தான். சாஷா எதுவும் பேசாமல் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ளநீ உறுதியா இருக்கியா.. உனக்கு கண்டிப்பா இந்த குழந்தை வேணுமா..” என்றான் பீஷ்மன்.

 

                     அவள் பார்வை வேகமாக அவனை நோக்கி திரும்ப, அப்படி ஒரு எதிர்பார்ப்பு அவள் முகத்தில். அந்த நிமிடம் அவளை முத்தமிடத்தான் தோன்றியது பீஷ்மனுக்கு. அது என்னவோ அவளைப் பார்த்தாலே அவளைத் தொட்டுக் கொண்டும், உரசிக் கொண்டும் இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறது அவன் மனது.

 

                    அவனிடம் கோளாறா இல்லை இப்படி அறியாதப் பிள்ளையைப் போல் பார்த்து வைக்கும் அவளிடம் கோளாறா என்று சத்தியமாக புரியவில்லை அவனுக்கு. அவனைப் பொறுத்தவரை அவளைப் பிடித்திருந்ததுபார்த்த முதல் பார்வையிலேயே பிடித்திருந்தது. நல்லவனாக இருந்திருந்தால் காதல் மலர்ந்திருக்குமோ என்னவோ.

 

                அந்த சுத்தமான கெட்டவனுக்கு அவள் இரையாகவே தெரிந்தாள். வேடனாக அவன் வலைவிரிக்க புள்ளிமான் அழகாக மாட்டிக் கொண்டது. ஆனால், அவளை வளைக்க எந்த விதத்திலும் பெரிதாக மெனக்கெடவில்லை அவன். அவன் பணமும், அவனது பெயரும் மட்டுமே போதுமாக இருந்தது அவள் அன்னைக்கு.

 

                சாஷாவைப் பற்றியும் பெரிதாக நல்லெண்ணம் எல்லாம் அப்போது இருந்ததில்லை பீஷ்மனுக்கு. “என்ன அம்மாதானே அனுப்பி வைக்கிறா.. ஒண்ணுமே தெரியாதா இவளுக்கு.. நடிக்கிறா..” என்று ஏளனமான எண்ணம் தான். ஆனால், முதல்முறை அவளைத் தொடும்போதே அவளின் பயத்திற்கான காரணம் புரிந்துவிட்டது அவனுக்கு. அவளைப் பொறுத்தவரை அவளது முதல் உறவு பீஷ்மனோடு தான் என்பது, கலவியில் கரை கண்ட பீமனுக்கு உடனே புரிந்தது.

 

                 அந்த நேரம் அது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்ததே தவிர்த்து, பரிதாபத்தை எல்லாம் கொடுக்கவில்லை. “என்ன நான் இல்லையென்றால் இன்னொருவன்அதற்கு என்னோடே இருக்கட்டும்..” என்று பெரிய மனது வைத்தான் அவன்.

 

                 அவளைத் தொடத்தொட, அவளின் மீது இருட்னஹா ஆசையும், மோகமும் பெருகியதே தவிர எங்குமே அலுத்து போகவில்லை அவனுக்கு. அதுதான் அவனை விடாமல் அவளிடம் இழுத்து நிறுத்தியது. சாஷாவின் வெகுளித்தனமும், அவளின் பயந்த சுபாவமும் பழகிய சில நாட்களிலேயே புரிந்து போக, அவளை மொத்தமாக தன் ஆதிக்கத்தின் கீழ் பொம்மையாக நிறுத்திக் கொண்டான் அவன்.

 

               பொம்மை என்பது அவனிடம் மட்டுமே. மற்றவர்களிடம் அவள் அதிகாரம் செலுத்தும்படி தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் இன்றுவரை. ஆனால், அவளின் சுபாவமோ என்னவோ,மறுப்பைக் கூட சத்தமாக சொல்ல தெரியாது அந்த கோழைக்கு.

 

                 அவளுக்கு கீழ் வேலையாட்கள், அவளின் உதவியாளன், அவளின் மேனேஜர் என்று அத்தனைப் போரையும் தன் ஆட்களாக நிறுத்தியவன் அவள் அன்னையை கொஞ்சம் கொஞ்சமாக தூர நிறுத்தி அவளைப் பாதுகாத்திருக்கிறான் இன்றுவரை. அவளின் வருமானத்தில் ஒரு சொற்ப பகுதி தான் இன்றுவரை அவர்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.

 

                 மற்றது அனைத்தும் பீஷ்மனின் மேற்பார்வையில் அசையும் சொத்தாகவோ, இல்லை அசையாத சொத்தாகவோ அவளின் பெயரில் தான் முதலீடு செய்யப்படும். ஆனால், அந்த விவரங்கள் கூட எதுவும் இன்றுவரை முழுதாக தெரியாது அவளுக்கு. பீஷ்மன் நீட்டிய இடங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறாள். இதுவரை ஏன், எதற்கு என்று ஒரு கேள்வியும் எழுந்ததே இல்லை பொம்மைக்கு.

 

                  ஆனால், மொத்தத்திற்குமாக சேர்த்து அவளின் பிடிவாதத்தை காட்டிக் கொண்டிருக்கிறாள் இன்று. பீஷ்மனின் எண்ணங்கள் இப்படி சாஷாவை சுற்றி சுழன்றுக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்டவள் அவன் அடுத்து என்ன சொல்வானோ என்று அவன் முகத்தை ஆவலாக நோக்கி கொண்டிருந்தாள்.

 

                     அவள் பார்வையில்அப்படி என்ன குழந்தை மேல பைத்தியம் இவளுக்கு..” என்று ஆச்சர்யமானது பீஷ்மனுக்கு. பாவம்அவனுக்கு புரியவில்லை, அது அவன் குழந்தை என்பதால் வந்த ஆர்வம் என்று. அவனைப் பிரிய அவள் தயாராகிவிட்டதால் தான் அவன் குழந்தையை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறாள் என்பது அந்த மடையனுக்கு எப்போது புரியுமோ??

                   

 

                  இதோ இப்போதும் ஆர்வமான அவள் முகத்தைப் பார்த்தவன்உனக்கு கண்டிப்பா இந்த குழந்தை வேணுமா..” என்று அழுத்திக் கேட்க, பதில் கூறாமல் வேகமாக தலையாட்டி வைத்தது அவனின் தலையாட்டி பொம்மை

 

               அதில் சிரித்தவன்குழந்தை சாதாரண விஷயம் இல்ல சாஷா. நல்ல யோசிச்சுக்கோ. நாளைக்கே உனக்கு இது தேவையில்லாத தலைவலியா தோணலாம்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க

 

                “அப்படியெல்லாம் நினைக்கவே முடியாது என்னால. எனக்கு இவனை பிடிச்சிருக்கு. நான் நல்லபடியா வளர்த்துவேன். எனக்கு கிடைக்காத அத்தானையும் என் குழந்தைக்கு கொடுப்பேன். நான் நல்ல அம்மாவா இருப்பேன்..” என்று அடுக்கியது அந்த வளர்ந்த குழந்தை.

 

                பீஷ்மனுக்கும் அப்போது அதே எண்ணம் தான். “உன்னையே இன்னும் முழுசா வளர்த்து முடிக்கலையேடி.. நீயே  வளரனும். இதுல குழந்தையை வளர்த்த போறியா…” என்று தான் எண்ணம் ஓடியது அவனுக்கு.

 

                ஆனால், என்னவானாலும் அவளைத் தனியாக விடும் எண்ணமெல்லாம் வரவே இல்லை அவனுக்கு. இரண்டு நாட்கள் போராட்டத்தின் முடிவாக, பெரிய மனது வைத்திருந்தான்.

 

                 ம்ம்ம்.. சாஷாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தான் அவன். அதையே அவளிடம்என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. குழந்தை பெத்துக்கலாம்..” என்று கூற 

 

                 சாஷா முகம் மலர்ந்து போகவில்லைபட்டென மௌனமாகி விட்டாள். அவள் பேசட்டும் என்று பீஷ்மன் காத்திருக்க, குனிந்து கொண்ட அவளின் தலை மறுப்பாக அசைந்தது. பீஷ்மனுக்கு அதுவரை இருந்த நல்ல மனநிலை மாறிப்போக, அவள் முகத்தை கடினமாக பிடித்து நிமிர்த்தினான் அவன்.

 

                   சாஷா இப்போது பயந்து போக, “என்கிட்டே சொல்லுஎன்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா, முடியாதா..” என்று இக்கட்டில் நிறுத்தினான் அவளை.

 

                   சாஷா மெல்லிய குரலில் என்றாலும், சட்டென சொல்லிவிட்டாள். “எனக்கு நீங்க வேண்டாம். எனக்கு கல்யாணம் வேண்டாம். என்னை என் குழந்தையை மட்டும் விட்டுடுங்க.” என்றாள் வேண்டுதலாக 

 

                  “ஏன் கல்யாணம் வேண்டாம்..”

 

                 “வேண்டாம்என்னால முடியாது..”

 

                  “அதுதான் ஏன்னு கேட்கிறேன்…” என்று பீஷ்மன் குரல் கடினமுற 

 

                “எனக்கு நீங்க வேண்டாம்..” என்றாள் மீண்டும்.

 

                அவள் மறுப்பில் அவனுக்கு சித்தம் கலங்கஎன்னைவிட எவண்டி கிடைப்பான் உனக்கு. கொஞ்சம் இறங்கி வந்தா, என்னை இளிச்சவாயனா நினைப்பியா நீ..” என்று அவள் முழங்கையை பற்றியவன் அவளை ஒரு உலுக்கு உலுக்க, அவன் கோபத்தில் நடுங்கிப் போனாள் சாஷா.

 

                  “பீம் ப்ளீஸ்..” என்று அவள் வார்த்தைகள் தடுமாற. “ஏய்.. நான் வேண்டாம்.. ஆனா, என் குழந்தை மட்டும் வேணுமா உனக்கு. இந்த நிமிஷம் நான் சொல்றேன் கேட்டுக்கோ. நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணியாகணும்என்னோட வாழ்ந்தே ஆகணும் நீ.. அதுதான் உன் தலையெழுத்து..”

 

                  “மீறி முடியாது.. வேண்டாம் ஏதாவது சொல்றதா இருந்தா, என் பிள்ளையை பெத்து என்கிட்டே கொடுத்துட்டு கிளம்பிட்டே இரு..” என்றான் முடிவாக 

 

                   “இது என்னோட குழந்தை மட்டும்தான்..” என்று சாஷா சத்தமிட 

 

                   “குந்திதேவியா நீமந்திரம் சொல்லி, பிள்ளை வாங்கினாயா..” என்றான் கொஞ்சமும் தயக்கமில்லாமல்.

 

                   சாஷா அவனைப் போல கீழிறங்கிப் பேச முடியாமல் அமைதியாக, “நீ சொல்ற அதே டயலாக் தான். எனக்கு என் குழந்தை வேணும். பெத்து என் கையில கொடுத்துட்டு போயிட்டே இரு நீ.” என்றான் மீண்டும்.

 

                  “ஏன்.. இன்னொரு பீஷ்மனா வளர்த்தப் போறியா அவனை.” என்று சாஷாவும் கோபம் கொள்ள 

 

                 “ஏன் பீஷ்மன் இப்போ கசக்கிறானா உனக்கு..” என்றான் அவன்.

 

                 சாஷா அவனை வெறித்து நோக்க, “என்ன சொல்ற.. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடவா..” என்று அவனே தொடர 

 

                 “இது என்னோட குழந்தை பீம். சட்டப்படி கூட குழந்தை என்கிட்டே இருக்கணும்னு தான் சொல்வாங்கஎன்று தகவலாக அவள் கூற 

 

                  “உன்னை கோர்ட்டுக்கு போக விடுவேன்னு நினைக்கறியா நீ.. அடுத்த பத்து மாசமும் இந்த ரெண்டு நாள் போலவே உன்னை இங்கே வைக்க முடியாதா என்னால.. சரி,.. அப்படியே நீ கோர்ட்டுக்கு போய்ட்ட ன்னு வைய்யேன்.. நீ என் பிள்ளைக்கு வாடகைத்தாய் ன்னு சொல்லி சிம்பிளா முடிச்சிடுவேன்டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவா இருக்கும் .. பார்க்கறியா..” என்று வில்லனாக சிரித்தான் பீஷ்மன்.

 

                    சாஷாவுக்கு அவனைக் கொன்று  விட வேண்டும் போல் ஆத்திரம் வர, தனது இயலாமையை நினைத்து அழுகைப் பெருகியது. அவள் கண்களை அழுத்தமாக துடைத்து விட்டவன்இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். தயாரா இரு… ” என்று அவள் கன்னத்தில் முத்தமிட 

 

                    “ஏன் கல்யாணம் வேண்டாம் ன்னு என்னைக் கேட்கக்கூட மாட்டியா பீம்..” என்றாள் வேதனையுடன்.

 

                   “ஏன் கேட்கணும்.. நீதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறியே..” என்றான் நம்பிக்கையாக 

 

                   “எனக்குன்னு எந்த விருப்பமும் இருக்கக்கூடாதா… “

 

                   “கூடாது ன்னு நான் எப்போ சொன்னேன்.. நீ என்னை விரும்பிடு.. அதுதான் வளைக்க நினைச்சேன் ன்னு சொன்னியே.. வளைச்சுக்கோ..” என்றான் அழகான சிரிப்புடன்.

 

                    “எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைச்சது, இந்த நிமிஷமே நான் உன்னை கொன்னுடுவேன்உன்னைப் பார்க்கவே பிடிக்கல எனக்கு..” என்று அழுதாள் மீண்டும்.

 

                   “என்னை கட்டிக்கோ.. ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம்..” என்று சிரித்தவன், அவளை சட்டையே செய்யாமல், “இன்னும் ஒரு வாரம் பொம்மை.. நீ மொத்தமா என் கையில.” என்று அவள் கன்னத்தை தீண்டி விடைபெற்றுக் கொண்டான்.

 

           

Advertisement