கதைப்போமா ❤️

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Happy new year @mithrabarani . Each good writer will have a unique identity. அப்படி நா உங்ககிட்ட பாக்கறது உங்களோட மொழி நடை. அப்பா என்ன ஒரு நளினம் உங்க தமிழ் ல. சொல்ல வார்த்தையே கிடையாது. அண்ட் உங்க கதை சொல்ற பாங்கு அலாதி. ஒவ்வொரு கதை லையும் மெருகு கூடிட்டே போகுது Thank you for giving such wonderful stories and the spread of positivity through them. Unga kitta kekkanumna unga thamizh eppidi ivalo azhaga irukku. Adhukku edhum thani payirchi edutheengala? Sama kala writers la yaaru unga favourite. Ellarume nu solli thappikka koodadhu. And eppidi telugu vum romba nalla theriyidhu. Unga mother tongue tamil a telugu va? Both of you will think of a plot and ezhudhum podhu portions pirichippingala? You are gifted writers. Best wishes ❤
hello rianya ! :love::love:
welcome !
thank you so much for sharing this :love::love:
கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அடுத்த கதையை இன்னும் செம்மையாக செதுக்க உதவி செய்யுது. அதிலும் உங்களைப் போன்ற ரீடர்ஸ் இருக்கவும் அந்த ரசனையும் மிளிர்கிறது. :love:

எங்கள் தமிழ் எப்படி இவ்வளவு அழகா இருக்கு ?

நம்ம தமிழ் மொழியோட அழகுக்கு நிகரே இல்லையே இங்கே. அதில் கொஞ்சம் எங்க எழுத்தில் இருக்கிறது :love: அதற்கு முக்கிய காரணம், எங்களின் தமிழ் ஆசிரியர்.
தமிழும் சுதேசியும் (made in india) அவரது இரு கண்கள். அவர்கிட்ட இருந்து தான் மொழியை நேசிக்க கத்துகிட்டோம். அதன் பிறகு நம் முண்டாசு கவிஞன் :love:அவருக்கும் அதில் மிகப் பெரிய பங்கு இருக்கு !
தனி பயிற்சினு எதுவும் இல்லை ரியன்யா.. சித்திரமும் கை பழக்கம் போல.. எழுத எழுத மொழி செழிக்கும் :love:
அடுத்தது சம கால எழுத்தாளர்களில் பிடித்தவர்?
உண்மையில் நிறைய பேர் இருக்காங்க :love: ஆனா யாராவது ஒருத்தர்னு கேட்டதாலே நாங்க ஒருத்தரை மட்டும் இப்போ சொல்றோம்.
just favorite மட்டும் கிடையாது. ஒரு வகையில் எங்க மானசீக குரு அவங்க
வத்சலா ராகவன் மா !
அவங்ககிட்ட இருந்து தான் கதையை எப்படி கண்ணியமாக எழுதணும்னு கத்துகிட்டோம்.
தெலுங்கு ?
தாய்மொழி னு சொல்ல முடியாது. ஏன்னா தமிழை தவிர வேற எந்த மொழிக்கும் அந்த ஒரு இடத்தைக் கொடுக்க முடியாது. ஆனா தெரியும். :love:
தென் கதை plot ?
யாருக்கு plot முதலில் தோன்றினாலும் இரண்டு பெரும் விவாதித்து முடிவு செய்வோம்:love: ஒவ்வொரு கதையிலும் சம பங்கு இருக்கும்.

thank you so much riyanya :love::love:
 

Nirmala senthilkumar

Well-Known Member
தமிழ் வணக்கம் !

கொஞ்ச நேரத்தில் 2022 க்கு விடை கொடுக்கப் போகிறோம். 2023 ஐ நிறைய ஆசைகளோடும் கனவுகளோடும் வரவேற்கப் போகிறோம்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் வருடம் வளமாக, மகிழ்ச்சியாக, நிறைவாக இருக்கட்டும்:love::love:

நியு இயர் ஈவ்.. ரொம்ப நாளா கேட்கணும் சொல்லணும்னு டிராப்ட்-ல இருக்கிற விஷயங்களை இன்றைக்கு செய்யலாம்னு வந்திருக்கோம் மக்களே.

First of All,

Thank you god for your blessings ❤

Thank you MM @mallika ❤ for this wonderful platform and healthy environment.

Thank you dear readers ❤ you guys are the energy boosters.


2018 ! எங்க வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமான வருடம். எங்களுக்குன்னு ஒரு அடையாளம் தந்த வருடம்.

ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு பேஷன் இருக்கும். சிலர் அதை தேடி அவங்களா போவாங்க. சிலருக்கு அதுவே அவங்களைத் தேடி வரும். எங்களுக்கு அதுவாகவே வந்ததுன்னு தான் சொல்லணும். எஞ்சினியரிங் படிச்ச எல்லாருக்குள்ளேயும் எக்ஸ்ட்ராவா ஒரு திறமை இருக்கும். அது தான் அவங்களை வழி நடத்தும். வாழ்விக்கும். எங்களுக்கு அப்படியான ஒன்று,

எழுத்து !

ஆரம்பத்துல இது ஜஸ்ட் ஹாபி ! ஆனா இப்போ நிச்சயம் அப்படி இல்லை.

ஆறுதல்
நட்பு
காதல்
தொழில்
தியானம்
பொழுதுபோக்கு

இப்படி அதோட பரிமாணங்கள் வேற.

பொழுதுபோக்காக தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது. காலேஜ்ல கிடைத்த பசுமையான நினைவுகளை கொஞ்சம் கற்பனை சேர்த்து 'சிறகு விரிக்கும் காதல் பறவைகளாகத் தீட்டினோம்.

பென்சில் பிடித்துப் பழகாத பிள்ளையிடம் வண்ணத்தைக் கொடுத்து வரையச் சொன்னால், ஒரு வெள்ளைத் தாள் என்னாகுமோ அப்படித் தான் அந்தக் கதையும் எங்களுக்கு.

எந்தக் கவலையும் இல்லாமல் மனம் சொல்லிய கதையை அப்படியே செதுக்கியிருந்தோம் ❤

எமுதியாச்சு. யாராவது படிக்கணுமே இப்போ..

வீட்ல?

நோஓஓஓஓ !

ப்ரெண்ட்ஸ்?

தமிழ் சரியா வராது.

அப்போ வேற ?

Mallikamanivannan. Com !

இங்கே எப்படி லேண்ட் ஆனோம் அப்படிங்கிறது இப்போ வரை எங்களுக்கு ஆச்சரியமான மகிழ்ச்சி !

கடவுள் தான் சரியான இடத்தில் தளத்தில் தரை இறக்கி இருக்க வேண்டும். Grateful !

Thank you MM for supporting and guiding us ! @mallika :love:

முதல் கதையோட வரும் போது இங்கே இருக்கிற மக்கள் பற்றி தளம் பற்றி எதுவுமே தெரியாது.

யாருகிட்டயும் அதிகம் பேச மாட்டோம். கொஞ்சம் ஷை ! வேறு எதுவுமில்லை.

ஆனால் அதையும் தாண்டி சிலரோடு மெல்ல மெல்ல நட்பு மலர்ந்தது.

எல்லாவற்றையும் விட மக்களோட ரசனைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நமக்குப் பிடித்த கதைகளை ரசிக்கும் மக்களைச் சந்திப்பது ஒரு வகை சினேகம் :love:

ஒத்த ரசனைகள் ஒத்த சிந்தனைகள் தானே நட்பின் வாயில்கள்.

இரண்டாவது கதை எழுதுவோமா இல்லையாங்கிறது கூட நாங்கள் யோசித்தது இல்லை. ஆனால் இந்தக் களமும் மனிதர்களும் அதன் சாத்தியத்தில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.:love:

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் கதையோடு வரும் போது நிறைய வாசகர்களோடு பழக முடிந்தது. நிறைவான பயணம் அது ❤

அது முதலே ஒவ்வொரு கதைக்கும் புதுப்புது வாசகர்கள்.. வாழ்த்துகள்.. கருத்துகள்.. எதிர்பார்ப்புகள்..

கொஞ்சம் கொஞ்சமாய் பென்சில் பிடித்துப் பழக ஆரம்பித்தோம். நிறைய கற்றுக் கொண்டோம்.

கற்றுக் கொண்டிருக்கிறோம்.

Feel good stories என்பது தான் எங்களது நோக்கம். ஏற்கனவே வாழ்க்கை எல்லொரையும் ஏதாவது ஒரு விதத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த ரியாலிட்டியில் இருந்து விலகி வருபவர்களுக்கு ஒரு அழகான மனதிற்கு இதமான கதையை அளிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இனியும் அது தொடரும்.

இந்த நான்கரை வருடங்களில் 9 நாவல்கள் எழுதியிருக்கிறோம். அவை வெறும் கதைகள் மட்டும் அல்ல, நாங்கள் காட்ட விரும்பிய வாழ்வியல் ! அதை எங்கள் வரையில் சிறப்பாகவே செய்திருக்கிறோம்

இதில் அந்த வாழ்வியலைக் கொண்டாடும் விதமாக 'மனதோடு மண்வாசம்' கனவுப் பட்டறை கதைத் தொழிற்சாலையில் முதல் பரிசை வென்றது மிக நிறைவு ❤

இனி உங்களிடம் !

மித்ரா & பரணி

சிலருக்கு நாங்க twin writers னு தெரிஞ்சிருக்கும். சிலருக்கு தெரியாம இருக்கும்.

நாங்களும் இங்கே யாரோடும் அதிகமாக அளவளாவியதில்லை.

So let's chat !:love:

எங்களைப் பற்றி இல்லை எங்களிடம் கேட்க சில கேள்விகள் உங்களிடம் இருக்கலாம். அப்படிக் கேட்க விரும்பிய கேள்விகளை இங்கே கேட்கலாம். கேள்விகளே இல்லை.. இதை சொல்லணும் என விரும்பினால் சொல்லலாம்.
Nirmala vandhachu
Nichayama feel good story ma
Unghaloda writing m appadi taan
Happy new year both of you
Neraya story innum rendu perum ezhuthungha
 

ThangaMalar

Well-Known Member
மகிழ்ச்சி மலர் அக்கா :love::love:
ஏன் இந்த நடை ?
முதல் காரணம் மொழி ! நம் தாய் மொழி.. தமிழ் மொழி ! அதோட ஆழமும் அழகும் நிகர் இல்லாதது. அது நம்மோட கலையில் உயர்வாக இருக்கணும்னு தான் இந்த நடை தேர்வு செய்தோம்.
அடுத்தது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனி நடை இருக்கணுமே. அதுக்காக இதைத் தேர்வு செய்தோம் கா :love:

நாங்க படிக்கிற கதைகள் இதே போல இருக்கணும்னு இல்லை.. சுவாரசியமா.. கண்ணியமா இருந்தா போதும் கா :love:

நன்றி கா <3
:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top