கண்ணீரிலே கண்ணீரிலே என் காதல் கரைகின்றதே-intro

Advertisement


sundarnithu

Writers Team
Tamil Novel Writer
எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நான் கோயம்பத்தூர் ஆளுங்க

மண் வாசம் கூட சேந்து
மரியாதையும் வீசும்ங்க
எங்க ஊரு வாண்டு கூட
வாங்க போங்கன்னு பேசும்ங்க
மச்சான் இது சக்கரையா இல்ல
சிறுவாணி தண்ணீர் டா
சும்மா இந்த அக்கறையா
எங்காளுங்க குணமே இது தான் டா
நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து பரம்பரை டா
சாதிய தூக்கி போடு
இந்த உலகமே நம்ம உறவுமுறை டா
கோவை'னா கெத்து
கோவை'னா கெத்து
கோவை'னா கெத்து
எங்க ஊரு கோயம்பத்தூர்...


Marudhamalai-1.jpg

நம்ம கோவை தாங்க நித்துவோட ஊரு ..நித்து ராஜன் வேணி தம்பதியின் மகள்.காலேஜ் முடித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக மென்பொருள் பொறியாளர் பணியில் இருக்கிறாள் .TNPSC தேர்வு எழுதி அரசு வேலைக்கு போவதே நம்ம அம்மணியோட கனவு.அப்பா விவசாயி.துளசி வாசம் மாறுனாலும் மாறும் இந்த தவசி வார்த்தை மாறாதுன்னு வாழறவர் தான் நம்ம ராஜன் ..அந்த கொள்கையால் நம்ம நித்து நல்லா இருப்பாளா ..கதையில் பார்ப்போம்.. .அம்மா குடும்ப தலைவி ..நித்து பார்க்க பேரழகு இல்லங்க ஆனா அவளோட அன்பான மனசால எல்லாரையும் கவரும் பேரழகு ..அப்பாவோட இளவரசி ..ரொம்ப சுட்டி .. ..ரொம்ப பாசக்காரி ..ஒருத்தரு மேல பாசம் வச்சுட்டா அவங்களுக்காக உயிரே கொடுப்பாள் ..ரொம்ப உண்மையா இருப்பாள்.கொலை பண்ணா கூட மன்னிச்சுருவாங்க ஆனா ஏமாத்துனா அவ்ளோ தாங்க மூஞ்சிலயே முழிக்கமாட்டாள் ...


k.jpg
நித்து

பேட்ட
உடுமலைப்பேட்ட
இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட
பேட்ட
உடுமலைப்பேட்ட இது வீரத்த ஊட்டுற கொங்கு நாட்டுக் கோட்ட
கரும்பு, வெல்லம் விளையுற பூமி
எங்க மண்ணு இனிக்குமடா
இரும்பு உள்ளம் தெறிக்குற வீரம்

சீரிப்பாஞ்சா எரிமலைடா
மரியாதையெ கொடுப்போமட
எல்லோரும் எப்போவும் ஜெயிப்போமடா

பேட்ட
உடுமலைப்பேட்ட
இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட


udt.png

ஹீரோயின் ஊருக்கு மட்டும் பாட்டு வச்சா நம்ம ஹீரோ கோச்சுப்பாருங்க...பாட்டுலயே தெரிஞ்சுருக்கும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தான் நம்ம ருத்ரன் கோட்டை ..அப்பா சிவபாலன்,அம்மா தேவி.அப்பா ஊர்த்தலைவர்..குடும்ப கௌரவம் தான் பெரிசுன்னு நினைப்பவர்.ருத்ரன் கொங்கு நாட்டு சிங்கம் ..ரொம்ப கோவக்காரன் ..ரொம்ப பிடிவாதக்காரன் ..ஒரு வரில சொல்லனும்னா கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன் ..இந்த சிங்கம் அன்புக்கு மட்டுமே அடிமை ...ருத்ரன் நம்ம நித்து பணிபுரியும் கம்பெனியின் மேனேஜர் ..ருத்ரன் அடங்கி போற ஒரே ஆளு அவன் தங்கச்சி அன்புச்செல்வி தான் ..பேருக்கு ஏத்த மாறி அன்பு காட்டறதுல அவள மாறி யாரும் இல்ல ..ஊருல எல்லாரும் இவங்கள பாசமலர் அண்ணன் தங்கச்சின்னு சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன் ..நம்ம அன்பு கோவை PSG கல்லூரியில் B.E computer science இரண்டாம் வருடம் படித்துக் கொண்டு இருக்கிறாள்.


sk.jpg
ருத்ரன்-அன்புச்செல்வி

நித்துக்கும் ருத்ரனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னனு அடுத்த எபிசோடில் சொல்ற ....





 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top