என்னுள் சங்கீதமாய் நீ 14

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 14



ஜெய்.. இந்த மாசம் தானே இன்டெர் காலேஜ் மீட் இருக்கும்., டேட் அனோன்ஸ் பண்ணிட்டாங்களா என்ன..? என்று மூர்த்தி கேட்கவும்

இன்னும் இல்லடா.. மே பி.. இந்த மந்த் எண்ட்ல தான் இருந்தா இருக்கும் போல, என்று விடேற்றியாகவே ஜெய் சொல்லவும்,

என்ன இப்படி சொல்றான்..? டான்ஸன்னாலே விட மாட்டானே..? என்று அனைவரும் அவனை குழப்பமாக பார்த்தனர்,

பாட்டு செலக்ட் பண்ணிட்டியா ஜெய்..? எப்போ ப்ராக்டிஸ் ஆரம்பிக்க போற..? என்று குமார் மேலும் கேட்கவும்,

ச்சு.. இனிமேல் தாண்டா பாக்கணும்.. அயர்ச்சியுடன் சொன்னான் ஜெய்.

அவனின் ஏனோ தானென்று பேச்சில்.. என்ன ஜெய் இது.. ஏன் இந்த டைம் இவ்வளவு லேட்.. ? என்ன ஆச்சு உனக்கு ..? என்று குமார் யோசனையாக கேட்கவும்,

ஆமாடா.. கொஞ்ச நாளா நீ சரியே இல்ல.. அடிக்கடி அமைதியாகிடுற.. என்ன தான்டா ஆச்சு உனக்கு..? செல்வமும் ஆராய்ச்சியாக கேட்டான்.

ச்சு.. ஒண்ணுமில்ல விடுங்கடா..

என்ன ஒண்ணுமில்ல .. ஏதோ இருக்கு..

நீ நார்மலாவே இல்ல..

எதாவது பிரச்சனையா ஜெய்..? அனைவரும் மாற்றி, மாற்றி கேட்கவும், இவங்க விடமாட்டாங்க.. என்று புரிந்து கொண்ட வன், எனக்கு தலை வலிக்குது.. நான் கேன்டீன் போறேன்.. என்று கிளம்பிவிட்டவனின் எண்ணங்கள் முழுவதும் ஹர்ஷினியே..!.

ஹர்ஷினி.. மனதுக்குள் பேரை சொல்லும் போதே இவ்வளவு உணர்வு என்னுள் கொந்தளிக்குமா..?

ஒரு பொண்ணால என்னை முழுசும் மாற்ற முடியுமா..? அதுவும் பார்த்த இரண்டு மாசத்திலே..! நான் இவ்வளவு வீக்கா..? என்னாலே நம்பமுடியல.. இது நான்தானா..? என்னை எனக்கே அந்நியமா மாத்திட்டா..!

பார்த்த முதல் நாளே ஏதோ ஒரு விதத்தில டிஸ்டர்ப் பண்றான்னு தான் நினைச்சேன் ஆனா போக போக தான் எனக்கே புரியுது.. அவ அப்பவே என் மனசுல நச்சுன்னு நங்கூரமா இறங்கிட்டான்னு..!

நாளுக்கு ஒரு முறையாவது அவளை பாக்கலைன்னா அந்த நாளே முடிய மாட்டேங்குது.. காலேஜ் லீவ் விட்டா.. ஏன் தான் லீவ் விட்றாங்கன்னே எரிச்சலா வருது.. லீவ் முடிஞ்சு மறுபடியும் அவளை பாக்கறதுக்குள்ள.. "ஒரு யுகமே கடந்த மாதிரி தோணுது.."

எப்போ..? எப்படி..? எதனால..? அப்படின்னு எந்த விதமான கேள்விக்கும் பதில் இல்ல என்கிட்டே..

ஆனா ஒன்னும் மட்டும் தெரியுது.. அவளுக்கான என் உணர்வு நாளாக நாளாக இன்னும் தீவிரமாதான் ஆகுது.. இது கண்டிப்பா மாறவே மாறாதுன்னும் புரியுது..

இந்த உணர்விற்கு பெயர் தான் "காதல்.." அப்படின்னா இருந்துட்டு போகட்டுமே.. எனக்கு அவ மேல இருக்கிற பீலிங்குக்கு பேர் என்ன..! அப்டிங்கிறதெல்லாம் விஷயமே இல்ல..

என்னோட எண்ணமெல்லா.. “எனக்கு தோண்றதை போல அவளுக்கும் எப்போ தோணும்..” இது தான்..

ஏன்னா “நான் கண்டிப்பா என்னுடைய காதலை அவகிட்ட சொல்ல போறதில்ல..! சொல்லியோ.. கேட்டோ.. வரும் உணர்வு காதல் இல்லையே..”

எனக்கு தானாகவே அவ மேல காதல் வந்த மாதிரி, அவளுக்கும் என் மேல தானாக தான் காதல் வரணும்.

ஆனால் இது எப்போ நடக்கும்..? இதுதான் அவனுடைய தீவிர எண்ணமாகவே இருந்தது.

அந்த "அழகு ராட்சசி" என்னை இப்படி முற்றும் முழுசா ஆட்டிப்படைக்கும் போது, என்னால எப்படி நார்மலாக இருக்க முடியும்..? என்று நினைத்து கொன்டே கேன்டீன் சென்றவன் பேருக்கு ஒரு டீ வாங்கி கொண்டு அமரும் பொழுது,

அவனின் "அழகு ராட்சசியான ஹர்ஷினியே...!" கேன்டீனுக்குள் வந்துகொண்டிருந்தாள். க்ளாஸ் டைம் ஆச்சே.. இப்போ ஏன் கேன்டீன் வந்திருக்கா..? கூடவே இருக்குற அந்த ஒட்டுப்புல்லு ஜோதியை வேற காணோம் என்று யோசித்தவாறே அவளை பார்த்தவன், அவளின் கண்கள் சிவந்து இருந்ததிலே, மேடம் நைட் தூங்கலை போலே என்று நினைத்து கொண்டான்,

அவனின் எண்ணம் சரியே தான். நைட் முழுவதும் யாருக்கும் தெரியாமல் சுபத்ராவும், இவளும் படம் பார்த்து கொண்டிருந்து விட்டு விடிய காலையில் தான் படுத்ததால், காலையில் இருந்தே தலை வலி மண்டைய பிளந்தது.

ரேணுகாவிற்கு தெரிந்தால் கண்டிப்பாக டின் கட்டிவிடுவார் என்பதால் சொல்லாமலே காலேஜ் வந்துவிட்ட ஹர்ஷினியால் சமாளிக்க முடியாமல் கேன்டீனிக்கு காஃபி குடிக்க வந்துவிட்டாள்.

வேகமாக காபி வாங்கி குடித்து முடித்த பிறகே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல் இருந்தது.

ஆனால் அதை கெடுப்பது போல் “ஹாய் ஹர்ஷி..” என்று வந்து நின்றான் மெக்கானிக்கல் பைனல் இயர் ராஜீவ். கடந்த ஒரு மாதமாக அவளை சுற்றி வந்து தொல்லை தருபவன். அவனை பார்த்தவுடன் கடுப்பானவள்,

“கால் மீ ஹர்ஷினி..” சீனியர், என்று முகத்தை கடினமாக வைத்து கொண்டு சொல்லவும்,

ஏன் ஹர்ஷின்னு கூப்பிட்டா என்ன தப்பு..? உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் அப்படித்தானே கூப்புடுறாங்க.. என்று அடாவடியாக கேட்டான் ராஜீவ்.

நீங்களே சொல்லிட்டீங்க அவங்க என் ப்ரண்ட்ஸ்ன்னு.. ஆனா நீ யார் என் அப்படி கூப்பிட..? என்ற கேள்வியை முகத்தில் காட்டிட,

அதை புரிந்து கொண்ட ராஜீவ், கரெக்ட் நான் தான் உன் ப்ரண்ட் இல்லையே.. அதுக்கும் மேல என்று சொல்லும் போதே, அதற்கு மேல் பொறுக்க முடியாத ஜெய்.. “ஹர்ஷினி..” என்று சத்தமாகவே கூப்பிட்டவும்,

அவன் குரலில் கொஞ்சம் வேகமாகவே திரும்பி பார்த்த ஹர்ஷினி, பக்கத்து டேபிளில் அமர்ந்து தன்னையே முறைத்து கொண்டிருந்த ஆகாஷை கண்டவுடன் தானாகவே எழுந்து நின்றவள்,

அவன் இங்க வா.. என்பது போல் கையை அசைக்கவும், அமைதியாகவே அவனிடம் சென்றவள், அவனின் முகத்தை பார்க்காமல் அவன் டேபிளில் இருக்கும் டம்ளர்களை பார்த்தவாறே நின்றாள்.

தன் முகத்தை பார்க்காமல் நிற்கும் ஹர்ஷினியை பார்த்த ஆகாஷ… இதோ இப்படித்தான்.. என் முகத்தையே பார்ப்பதில்லை.. நான் அவளை பார்க்கும் பார்வையிலே என் மன உணர்வுகளை புரிந்து கொண்டவளின் மவுனத்தாலே தான் நான் இன்னும் இன்னும் என்னுடனே போராடுகிறேன். அதோடு இந்த ராஜீவின் தொல்லை வேறு..

அவன் அவளிடம் வழிந்ததை பார்த்து கொண்டிருந்ததால் கடுப்பாகியவன், கிளாஸ்ல இல்லாம இங்க என்ன பண்ற..? என்று அதட்டவும்,

காபி குடிக்க வந்தேன்..

குடிச்சு முடிச்சிட்டா கிளம்ப வேண்டியது தானே.. அவன்கிட்ட என்ன பேச்சு உனக்கு..

நானா போய் பேசல.. என்று கொஞ்சம் கோவமான குரலுடன் சொல்லவும்,

அவன் வந்து பேசினா.. உடனே நீயும் அவன்கிட்ட பேசிடுனுமா என்ன..? என்று அடக்கப்பட்ட குரலில் சீறலாக கேட்டான் ஜெய்,

அவனின் பேச்சு பிடிக்காமல் கண்கள் சுருங்கி, மூக்கு விடைக்க கோவமாக நின்றாள் ஹர்ஷினி,

அவளின் கோவத்தை புரிந்து கொண்டவன், இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை, அவன் பேச்சும், பார்வையும் சரியில்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்பறமும் அவன்கிட்ட பேசினா என்ன அர்த்தம்..?

அப்பறம் அவன் அதையே சாக்கா வச்சிக்கிட்டு பார்க்கற இடமெல்லாம் உன்கிட்ட வந்து பேசத்தான் செய்வான், என்று அவளை முறைத்தவண்ணம் சொன்னவன், இப்போ முதல்ல கிளாஸ்க்கு கிளம்பு போ.. என்று அதிகாரத்துடன் சொல்லவும்,

எதுவும் பேசாமல் அவளுடைய டேப்ளேக்கு சென்று புக்ஸை எடுத்து கொண்டு உடனடியாக கிளம்பியும் விட்டாள்.

அவர்கள் இருவரும் பேசுவதை கடுப்புடன் பார்த்து கொண்டிருந்த ராஜீவ். ஹர்ஷினி தன்னை ஏனென்றும் கவனிக்காமல் செல்லவும், திரும்பி ஜெய் முறைத்த பார்த்த வேகமாக ஹர்ஷினியின் பின் சென்றான்.

அவன் ஹர்ஷினியின் பின்னாடியே போவதை கண்ட ஜெய்க்கு சுர்ரென்று கோவம் உச்சிக்கே ஏறியது. ஒரு மாசமா அவ பின்னாடி சுத்தறதே வேலையா வச்சிருக்கான்,

ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவன் என்கிட்ட செமத்தியா வாங்க போறான் என்று மனதுக்குள் கொதித்த ஜெய் தானும் எழுந்து கிளாஸ்க்கு செல்லும் வழியில் அவர்கள் எங்காவது தென் படுகிறார்களா என்று பார்த்து கொன்டே தான் சென்றான்.

டேய் பசங்களா.. உங்களை எங்க எல்லாம் தேடுறது.. வெளியே ஒரு மணிநேரமா பெரிய ரணகளமே நடந்துட்டு இருக்கு.. நீங்க என்னடான்னா லேப்ல உட்காந்து வெட்டி கதை அடிச்சுட்டு இருக்கீங்க.. என்று பரபரப்புடன் மூர்த்தி கேட்கவும்,

அப்படி என்னடா ரணகளம் ஆச்சு..? சொன்னதான்டா தெரியும் கிண்டலாக செல்வம் சொல்லவும், அசோக் சிரித்து கொன்டே ஹை பை போட்டுக்கொண்டான்.

போங்கடா நான் சொல்ல போற விஷயத்தை மட்டும் கேட்டா நீங்க எல்லாம் ஷாக் ஆயுடுவீங்க..

பில்ட் அப் பண்ணாம சீக்கிரம் சொல்லி தொலைடா.. இம்சை.. என்று குமார் எரிச்சலாக சொன்னான்.

டேய் அந்த மெக்கானிக்கல் குரங்கு ராஜீவ் இருக்கானில்ல.. அவன் இந்த டைம் செமயா மாட்டினாடா எனவும்,

அதுவரை எனக்கென இருந்த ஜெய்.. ராஜீவ் பேரை கேட்டவுடன், குமார் என்ன சொல்ல வருகிறான் என்று படபடக்கும் மனதுடன் கேட்க ஆரம்பித்தான்.

ஆமா அந்த சீன் பார்ட்டி கொரில்லவா.. MLA மகன்னு ஏகப்பட்ட திமிரு அவனுக்கு.. எங்க மாட்டினான்..? என்ன ஆச்சு.. என்று ஆர்வத்துடன் அனைவரும் கேட்கவும்,



எல்லாரும் பாக்க நடு கிரவுண்ட்லே..! செமயா பளீர்ன்னு ஒன்னு கன்னத்திலே கொடுத்தா பாரு.. ஒரு பர்ஸ்ட் இயர் பொண்ணு.. அதுவும் நம்ம டிபார்ட்மென்ட் பொண்ணு… என்னா சீன் தெரியுமா..? கண் கொள்ளா காட்சிடா அது.. சந்தோஷமாக சொல்லவும்,

என்னடா சொல்ற.. யாருடா.. டேய் அந்த அம்மினியா..? ஆமாடா கண்டிப்பா அவளாத்தான் இருக்கும்.. கரெக்ட்தானே மூர்த்தி என்று ஆளாளுக்கு அதிர்ச்சியாக கேட்கவும்,

பின்ன “நம்ம தில்லானா..” அம்மிணி தவிர வேற யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கு.. என்று மூர்த்தி சொல்லவும்

என்னடா சொல்ற.. ஏன்..? எதனால் அடிச்சா..? அதிர்ச்சியுடன் அசோக் கேட்கவும்

அவன்தான் ஹட்ச் டாக் மாதிரி அவ பின்னாடியே சுத்திட்டுருந்தான் இல்ல.. இன்னிக்கு டக்குன்னு அவ கையை புடுச்சிட்டான்..

சொல்லவா வேணும் நம்ம அம்மிணியை.. உட்டா பாரு ஒரு அறை.. என்னா சவுண்ட்.. கண்டிப்பா அவனுக்கு குறைந்த பட்சம் நாலு நாளைக்காவது காது கேட்காது..

அதை பார்த்துட்டுருந்த எங்களுக்கே காதுகிட்ட கொய்ங்ன்னு சத்தம் கேட்கற மாதிரி இருந்துச்சுன்னா பாத்துக்கோ.. என்று பிரமிப்புடன் குமார் சொல்லவும்

மூர்த்தி சொன்னதை கேட்டவுடன் அதிர்ச்சி கலந்த ஆத்திரத்துடன் எழுந்து வேகமாக நடக்கவே ஆரம்பித்துவிட்ட ஜெய்க்கு அவனை கொன்று விடும் வேகம் வந்தது.. ராஸ்கல்.. எவ்வளவு தைரியம் இருந்தா அவ கையை புடிச்சுருப்பான்..?

இன்னிக்கு தொலைஞ்சடா நீ..? என்று மனதுக்குள் கருவியவாறே வேகமாக அவனின் டிபார்ட்மென்டை நோக்கி செல்லும் வழியில் உள்ள பிரின்சிபால் அறைக்கு வெளியே இருபுறமும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றிருந்த ஹர்ஷினி, ராஜீவை பார்த்துவிட்டவன்..

இன்று அவனை ஒரு வழி செய்திடும் எண்ணத்துடன், ஆத்திரமாக அவனை நெருங்கும் சமயம், திடிரென்று ராஜீவ் வலியில் கத்திக்கொன்டே கீழே விழவும், என்ன நடந்ததென்று ஒரு நொடி புரியாமல் நின்ற ஜெய், பின் நன்றாக பார்க்கும் பொழுது தான் புரிந்தது,

கோவத்தில் முகம் சிவக்க.. 70 வயது மதிக்க கூடிய ஒரு பெரியவர் ராஜீவை கொலை வெறியுடன் பார்வையாலே எரித்து கொண்டிருப்பதை பார்த்தான், யாரு இவர்..?

உனக்கு எவ்வளவு தைரியம்.., நெஞ்சழுத்தம் இருந்திருந்தா.. “என் பேத்தி..” கையை புடிச்சிருப்ப.. என்று சிங்கம் போல் கர்ஜித்த ஆச்சார்யா.. “பெரியவனே..” இன்னும் 5 நிமிஷத்தில இவன் இந்த காலேஜை விட்டே போயிருக்கணும்.. சீக்கிரம் என்று உட்ச கட்ட கோவத்தில் கத்தவும்,

இதோ உடனேப்பா.. என்று சந்திரன் சொல்லும் போதே, அங்கு வேகமாக வந்த காலேஜ் சேர்மன் சார்.. வாங்க சார்.. உள்ளே போய் பேசலாம் என்று மரியாதையுடன் அழைக்கவும்,

அதெல்லாம் அப்பறம்.. முதல்ல இந்த பையனோட TC கொண்டு வாங்க..

சார் உட்காந்து பொறுமையா பேசலாம்..

என்ன..? எதுக்கு உட்காந்து பேசணும்..?, ஆச்சார்யா கூர்மையான பார்வையுடன் கேட்கவும், அவரின் பார்வையில் தெரிந்த தீட்சண்யத்தில் என்ன பார்வைடா இது..! என்று அசந்தே நின்றுவிட்டான் ஜெய்.

அது.. அது.. அவன் நம்ம MLA வோட மகன் என்று திக்கி திணறி சொன்னார் காலேஜ் சேர்மன்.

பெரியவனே.. அந்த MLA க்கு போன் போட்டு உடனே இங்க வர சொல்லு.. என்று கட்டளையாக சொன்ன ஆச்சார்யா,

இறுகி போய் நின்றிருந்த ஹர்ஷினியிடம் சென்று அவளின் கையை பற்றி கூட்டிட்டு வந்து அங்கிருக்கும் சேரில் அமரவைத்து.., தானும் பக்கத்தில் அமர்ந்து கொள்ளவும்,

அவரின் தோளில் சாய்ந்து கண்மூடி அமர்ந்துவிட்ட ஹர்ஷினியின் எண்ணம் முழுவதும், தங்களை பார்த்து கொண்டிருக்கும் ஜெயிடமே இருந்தது..!

.......................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 14 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ். சாரி ப்ரண்ட்ஸ் இந்த டைம் நாள் ஆயிடுச்சு.. பொங்கலுக்காக ஊருக்கு போயிருந்தேன்.. லேப்டாப்ஐ தொட கூட டைம் கிடைக்கல ப்ரண்ட்ஸ்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top