' உயிரில் உறைந்த உறவே !!' (UUU) - 1

Advertisement

Rudraprarthana

Well-Known Member
10251

ஹாய் ஹனிஸ்...


'உயிரில் உறைந்த உறவே!!' கதைமாந்தர்கள் இவர்கள் தான்...

நாயகன் - சரண்
நாயகி - கீர்த்தி

சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு பலருக்கு தெரியாததால், கதைக்குள்ள போகறதுக்கு முன்னாடி ஒரு சின்ன அறிமுகம்.

நம் நாயகன் சரண் வீட்டுக்கு ஓரே பிள்ளை கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவன் பெற்றோருக்கு நான்கு தமக்கைகளுக்கு பின் பல வருடங்கள் கழித்து பிறந்த ஒற்றை ஆண் வாரிசு. சரணுடைய முதல் அக்கா தான் வளர்மதி அவர் கணவர் அயவந்திநாதன், இவங்களை உங்களுக்கு நல்லாவே தெரியும் (தெரியாதவங்க 'நெஞ்சமெல்லாம் அலரே!!' பாகம் 2 படிச்சி தெரிஞ்சிகோங்க )

இவங்களை குறிப்பிட்டு சொல்றதுக்கான காரணம் என்னன்னு முதல் ஐந்து அத்தியாயங்களில் உங்களுக்கே தெரிய வரும். மற்ற அக்காக்கள் அவர்களுடைய கணவர்கள் பிள்ளைகள் எல்லாரையும் கதையின் போக்கில் அறிமுகபடுத்துகிறேன்.

அடுத்து நம் நாயகி கீர்த்தி, பிரகாசம் - தீபிகா தம்பதியரின் ஒரே மகள். பிரகாசம் நம் அயவந்திநாதனின் உடன் பிறந்த தம்பி. படித்து முடித்து சரண் பணிபுரியும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறாள். கீர்த்தியோட மற்ற உறவுகள் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.


இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும் அக்காதலின் வயது கிட்டத்தட்ட ஆறு என்பதும் உங்களுக்கே தெரிந்த ஒன்று. சோ அதை பத்தி சொல்ல வரலை பட் இந்த கதை இவங்களுடைய ஆறு வருடங்களையும் உள்ளடக்கியது என்பதால் இறந்தகாலம் நிகழ்காலம் இரண்டிற்கும் இடையில் பயணித்து நிறைய பிளாஷ்பாக் காட்சிகளை கொண்டது. non-linear முறையில் பயணிக்க கூடிய மிக மிக வித்யாசமான கதை களம். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் கதையின் போக்கில் உங்களுக்கு ஏற்படும் கேள்விகளை தயங்காமல் கேளுங்கள் பதில் அளிக்கிறேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top