இறைவழிபாடு

#1
#இறைவழிபாடு என்பது பெரிய விசயமில்லை!

எப்போது ஆலயம் சென்றாலும் ஒரு
குற்றவாளி போல் அவன் முன் கூனி
குறுகி நில்லுங்கள்.
ஏனெனில் உங்களின் அத்தனை
நடவடிக்கையும் உங்கள்
மனசாட்சி மட்டுமே அறியும்.

மனசாட்சியின் ரகசியங்களை
இறைவன் மட்டுமே அறிய முடியும்.

எதற்கு வந்தோம் என்பதை அவனறிவான். நம்வேண்டுதல்
ஆலயம் நுழையும் முன்னரே
அவனுக்கு தெரிந்து விடும்.

நம் நடவடிக்கைகள் கண்டே
தீர்வுகள் அவனிடம் கிடைக்கும்.

சில நேரம் ஆலயத்திற்க்குள் நுழைய கூட நம்மால் இயலாது
அது ஏன் தெரியுமா??

நமக்கு அவனிடமிருந்து அழைப்பு இல்லையென்பதே.

எத்தனை பணம் இருந்தாலும் அவனிடம் எளிமையை கொண்டாடடுங்கள். அதிகாரம்
பதவி பணம் மூலம் அவனை
எளிதில் தரிசிக்க நினைத்தால்
நிச்சயம் அவனின் அனுக்கிரகம்
கிடைக்காது.

உரிமையோடும் உள்ளன்போடும்
எளிமையோடும்
உண்மையோடும்
பக்தியோடும்
கருணையோடும்
இறைவனை இலகுவாக
நெருங்க முடியும்
முயற்சி செய்து பாருங்கள்..
ஓம் நமச்சிவாய

படித்ததில் பிடித்தது
 
Last edited:
#9

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement