E100 Sageetha Jaathi Mullai

Advertisement

arunavijayan

Well-Known Member
:)
முகமறியா நண்பர்கள்..
பல்வேறு தேசங்களில்
இருந்து..
பல்வேறு எண்ணங்கள்
கருத்துக்கள்..

எங்களை ஒன்றிணைத்தது
தமிழ் மொழியும்
மல்லி கதையும்...

கதை படிக்க படிக்க
ஆர்வம் மேலிட
கருத்துக்கள் பதிய
தொடங்கி..

கருத்துக்கள் மூலம்
சில விவாதங்கள்..
பல கொண்டாட்டங்கள்..

என எங்களின்
நேரங்களில் பாதியை
ஆக்ரமித்து
எங்கள் நெஞ்சங்களில்
வாழ்ந்த வாழும்
கதையாகி போனது..

எங்களின் தனிமையை
போக்கிய
கதை இனிமையாய்
முடியும் போது...

சுகமான சோகத்தோடு
எங்களைவிட்டு
பிரிகிறது..

பல சோதனை கடந்து
100 பதிவுகளோடு
வெற்றி பெற்று
பல வெற்றி மேலும்
பெற வாழ்த்துகிறோம்...
images (11).jpg
 

arunavijayan

Well-Known Member
படிச்சு முடிச்ச உடன் கண் கலங்கிடுச்சு .....என்னமோ நானே ஏதோ சாதிச்சு முடிச்ச மாதிரி
ஒரு உணர்வு ....நெகிழ்ச்சி ... ...
நிறைவு ...அழகான நிறைவு....முழு மனநிறைவு ....


நீண்ட பயணம் ...11/2வருட மிக நீண்ட பயணம் ......
உங்களுடன் மற்றும் பொன்ஸ் , தங்கமலர், பானு, மணி, பாத்திமா,மீரா, ரதி, ஜோ ,ஹேமா உமா.M
,jass,பொற்செல்வி அருணாவிஜயன், மைதிலி ,விஜி ,அரசிச்செல்வன்,சிந்து , பூவிழி, ராணி , அன்சா,
லட்சுமி சிவகுமார், லலிதா, முருகேசன் ப்ரோ,கயல்முத்து ,சித்ரா கணேசன் ,சசிதீரா ,Harishan என்று
அனைவருடனும் பயணித்த ஒரு சந்தோஷமான பயணம் .....


கதை படித்த நேரங்கள் குறைவு....அனைவருடனும் கதை விவாதித்து மகிழ்ந்த நேரங்கள் தான் அதிகம் ....
இனிமையான அனுபவம் ....once in a lifetime erperience .....அனால் பயணங்கள் முடிவதில்லை இல்லையா ....
உங்கள் உடனான என்னுடைய பயணமும் தொடரும்....


அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....
மறக்க முடியாத ஒரு கதையை இனிமையான , இதமான அனுபவங்களுடன் கொடுத்த உங்களுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ....மல்லிகா :):):)
அடுத்த பயணம் எப்போது என்று தகவல் கொடுங்கள் ......
images.png same feeling Uma sis
 

arunavijayan

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
உங்கள் கடுமையான உழைப்பு 100 எப்பி :)
ரொம்ப சந்தோசம் முதல் எப்பியில் ஆரம்பித்த சிவப்பு வரிகள் ....கடைசி எப்பியில் அதையே கொண்டு வந்து முடித்தது ரொம்ப சூப்பர்...
விஷ்வேஸ்வரன் இப்படி ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் எங்காவது வாழுவார்....அப்படி ஒருத்தர எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு ரொம்பபபபப நன்றி...
சங்கீதவர்ஷினி மாதிரி பெண்...
இவர்கள் இருவரும் வெவ்வேறு குணம், குடும்ப பராம்பரியம்,எல்லாத்திலும் வேறா இருந்தவங்களை நிறைய கஷ்டத்திற்கு பிறகு இணைத்துவிட்டீங்க... பெண்களின் சார்பா பொதுவெளியில் பேச முடியாத பேச கூடாது என்று போதித்த ஒரு விசயத்தை கதைக்கருவா எடுத்து நீங்கள் இந்த கதையை கையாண்டது மிகச்சிறப்பு...நிஜ வாழ்க்கையில் எந்த புரட்சி
பேசுகிற பெண் என்றாலும்...சாதாரண பெண் என்றாலும் பேச முடியாத ஒன்றை ரொம்ப தரமான எழுத்து மற்றும் பாடல் வரிகளால் உணர்த்தியிருப்பீங்க....மிகச்சிறப்பு சிஸ்.
ஆண் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கிற பெண் உலகத்தில் உள்ள பெண் சார்பாக மிக்க நன்றி.
இது அத்தனையும் புரிந்து தன்னை திருத்திக்கொண்ட ஒரு நாயகன்....கனவு நாயகன் எங்க விஷ்வேஸ்வரன்...
images (9).jpg
 

arunavijayan

Well-Known Member
காதல் பித்தன்
காதல் கள்வன்
காதல் மன்னன்
காதல் கணவன்....

அழகி
ஆசை காதலி
இனிய தாய்
ஈன்ற நீல கண்ணன்
உவகை கொண்டு

ஊருக்கும் நல்லவை செய்தே
எளிமையை பழக்கியே
ஏற்றமிகு வாழ்வில்
ஐவரும்

ஒற்றுமையாய் வாழும்
ஓர் நல் குடும்பம்
ஔபரிதிகம்(ஈடு) இல்லா காதல்
அஃதே அவளை மலரச் செய்ததே
images (8).jpg
 

malar02

Well-Known Member
HI FRIEND MM,

என்ன சொல்ல எது சொல்ல புரியல MM...... வார்த்தைகள் இல்லை பெரிய பெரிய கமெண்ட் எழுதுவேன் இப்பொழுது எதுவும் வரமாட்டேங்குது....
பொழுது போக்கு என்று அல்லாமல் உங்கள் இந்த கதை இன்று என் தின வாழ்க்கையையோடு ஒன்றிவிட்டது.....


நான் எப்போதோ சொல்லிவிட்டேன் இந்த கதை உங்களுக்கு ஒரு மைல் கல்கள் ............என்று மிக லாவகமாக அழகு குறையாமல் கதையை முடித்துவிட்டீர்கள்...........

நீங்கள் சொல்லிக்கிறீர்கள் இன்னும் நல்லா கொடுத்திருக்கலாமோ இதை...... என்ற உங்கள் எண்ணம் இன்னும் ஒரு அழகான கதையை எங்களுக்கு வழங்க போகிறது தெரிவிக்கிறது

பெண்களின் உணர்வுகளையும் மரியாதையையும் தன்மானத்தையும் தூக்கி நிறுத்தும் உங்கள் கதை எப்போதும்.........
அதுவும் இங்கு வர்ஷ் ஒரு மாறுபட்ட பிறப்பு வளர்ப்பு அவளுடைய கேரக்ட்டரை நீங்கள் கொண்டு போன விதம் அப்பா ஒரு கம்பி மேல் நடப்பது போல் மிக சிறப்பாக நுணுக்கமாக கையாண்டுள்ளீர்கள்........I AM SOOOOOOOOO HAPPPY YYYYYYYY FOR that


உங்கள் கதையை படித்து கொண்டிருக்கும் போதெல்லாம் எந்த பெண்ணை பார்த்தாலும் உற்று நோக்க சொல்லுகிறது மனது.......

என் பசங்க சொல்லிகிறார்கள் வர வர நான் பெண்களை ரொம்ப சைட் அடிக்கிறதா என்று....... மானஸீகமாக எல்லோருடனும் நட்புணர்வு வருகிறது எல்லோருரையும் ரசிக்கிறேன் இன்று நிலையில் அதன் முழு கிரெடிட்டும் உங்களுக்குத்தான்.........

எப்பொழுதும் என் ஓட்டு பெண்கள் பக்கம் தான் எனினும்....... பராபட்ச்சமில்லாமல் எல்லோருரையும் ஏற்று ரசிக்கும், முகஉண்ர்வை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் தன்மையை வழங்கியது உங்கள் எழுத்து என்னுள் நன்றி நன்றி நன்றி .........

முக்கியமாக ஒரு ஒரு எபியிலும் வந்த அதனை ரெட் கோட்டட் வரிகள் அத்தனையும் அழகு அருமை.............

உங்கள் எழுத்து என்றும் சிறக்க வாழ்வு வளம் பெற என் இறைவி உங்களுடன் எப்போதும் துணையிருக்க வேண்டி கொள்கிறேன்............ &
மற்றும் இங்கு இந்த கதையுடன் பயணித்த அதனை தோழமைகளின் வாழ்வும் வளம் பெற
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top