Nee Enbathu Yaathenil 16

Advertisement

rathippria

Well-Known Member
A VERY SMALL DEDICATION FROM OUR (VIEWERS SIDE) TO MALLI MAM
THANK YOU FOR A NOVEL WHICH IS CLOSE TO OUR FEELINGS AND CULTURE


நீ என்பது யாதெனில்
அன்றிலிருந்து இன்று வரை
தந்தையின் வழி நடந்தேன்
தாரமாய் ஆனேன்
இந்த வழி உன் வழிஇல்லையோ
தனித்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
சிறு பொறி தீயகுமாம்
என் வாழ்வில் சிறு ஐயம் பொறியானது
அதுவே தீயானது வாழ்வின் எல்லையானது
விட்டு விலகிட சொன்னாய் வெறும் ஐந்து நாளில்
வாழ்வை தொலைத்தேனோ என இறுகினேன்
என்னுள் மறுகினேன் வெளியே இறுகினேன்
என் பட்டு குட்டி வந்தான் வாழ்வில்
அந்த நாட்களின் நினைவாக
இந்த நாட்களின் நிஜமாக
என் பூமி விட சொன்னாய்
உயிரை விட சொன்னாய்
விட்டேன் நான் வாழ்வை
உன்னுடனான வாழ்வை
உயிர் என் மண்
உணர்வு அதனுலுள்ள உயிர் (கள்)
உயிரையும் உணர்வையும் இன்று
தொலைத்தோர் உண்டு
உயிரற்ற பணியில்
அதன் வழியில்
வாழ்க்கையை செலுத்தி
வாழ்க்கையை தொலைத்தோருக்கு
என் வாழ்வு ஒரு மைல் கல்
தொலைத்தேன் நானும்
உறவையே தவிர
உயிரையோ உணர்வையோ அல்ல
வந்தாய் மீண்டும்
காடு மலை தாண்டி பறந்த நீ
மீண்டு வந்தாய்
என்னை மீட்க வந்தாயோ
வாழ்வில் மண்வளம் மட்டுமல்ல
பொன்வளம் மட்டுமல்ல
மகிழ் வளம் கொடுக்க வந்தாயோ

உன்னை மட்டுமல்ல
உறவுகளையும் கொடுத்தாய்
என்னை மட்டுமல்ல
இடத்தையும் வாழ்வின்
தடத்தையும் சீராக்கினாய்

நீ என்பது யாதெனில்
இன்று
நீ என்பது யாதெனில்
நான் அல்ல
நாம்
நாம் மட்டுமல்ல
நம் பூமி
நீ மீண்டும் வந்து
மீட்க வந்த பூமி
நீ கற்க வந்து
சிறக்க வைத்த மண்
நீ பார்க்க வந்த
இன்று பார்க்க வைத்த உயிர்கள்
இங்கே மண்ணுடன் கலந்த உயிர்கள்
இறுதியாய் நம் இளையதலைமுறைக்கு
சொல்லுவது யாதெனில்
பொன்னை விற்றாலும் மண்ணை விற்காதே
கண்ணை மறந்தாலும் மண்ணை மறக்காதே
விண்ணில் பறந்தாலும் மண்ணை மறக்காதே
மீண்டு வா இங்கே
நம்மை காக்க வா
நம் மண்ணை காக்க வா
பெருமை சேர்க்க வா
இங்கே வாழ்ந்து
பெருமை சேர்க்க வா
Semma meeru ......well summarized the whole story....super duper....unaaiyum fathi yum adichikka alle illai darlu;)
 

rathippria

Well-Known Member
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
Super da darlu;)
 

murugesanlaxmi

Well-Known Member
அருமையான கதை மல்லி.
மண் மணம் மறக்காத தலைவி..
தலைவனையும் ஈர்ததாளே...
தன்னையும் காத்து....
மண்ணையும் காத்து..
மரபை மீட்டவள்..
விலகிய கணவனை...
விலக்கி, நிமிர்ந்து ...
தேடி வர வைத்த..
பெண்மை..நேர்மை..
அழகான முடிவு....
மேலே படுக்கும் அபி...
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அருமையான கதை ப்பா...:)

நான் முதன் முதலா ஆன்லைன்ல படிச்ச உங்களோட கதையும் இதுதான்.....
இதுவரை புத்தக வடிவில் மட்டுமே படித்துள்ளேன்....

உங்க எல்லா கதைகளுமே படிக்க ஆரம்பிச்சதும் வைக்கணும்னு தோணாது! அதுதான் மல்லி ஸ்பெஷல்!;)


ஆனா இந்த கதை.... என்னைப் பொறுத்தவரை இன்னுமே ஸ்பெஷல்!!

ஏன்னா சிவகாமிக்கு பிறகு, இதுவரை ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே எந்த கதையிலும் என்னை இந்த அளவுக்கு அட்மைர் பண்ணதில்லை... but சுந்தரி made it happen again... bravo!! love her....
air-kiss-smiley-emoticon.gif


கண்ணனும் மாயக்கண்ணன்னா மனசை மயக்கிட்டான்தான்... வேண்டாம் என்று விட்டுச் சென்ற பின்னும், மண்ணின் பாரம்பரியம் தவறாதிருந்து திருந்தி வந்தான் அல்லவா?! அதனால்...:)

மண் மணத்தோடு மல்லிகையின் மணத்தையும், அதை போற்றி வாழும் மங்கையின் மனத்தையும் அவள் பொருட்டு மண்ணைப் புரிந்து கொண்ட மன்னனின் மனத்தையும் அழகாக வடித்துள்ளீர்கள்....

அழகான அருமையான கதையை கொடுத்தமைக்கு நன்றி.....
rose.gif
நிறைவாக சொல்லியீருக்கிர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லி சிஸ்:)
சிறப்பான கதை அழகான நிறைவு..
விமலா அம்மாவுக்கே வேலை வேண்டுமா??
நான் அவங்களும் சுந்தரியும் பேசும் ஒரு காட்சி எதிர்ப்பார்த்தேன்:)ஆனால் சிறிய கதையால் முடிந்து இருக்காது....இல்லை சுந்தரிக்கு நேரம் தேவை....அவங்ககிட்ட எல்லாம் பேசுவதற்கு...;)
வீட்டோட மாப்பிள்ளை ஆகிட்டார் கண்ணன்...
கண்ணன் சுந்தரி அபி மூவரும் மனதில் நின்றுவிட்டார்கள்...
நன்றி சிஸ்.
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
அருமை சகோதரி
 

malar02

Well-Known Member
Hi.....Malli....
இனிய காலை வணக்கம்......:)

"நீ என்பது யாதெனில்........
அவளுள் இருக்கும் அவளாக
தன்னுள் இருக்கும் தன்னை
நீயாகிய நான் என்று"
அறிந்துகொண்டு ,உணர்ந்து கொண்டு
அவளது பெண்மையை உயர்த்திய கண்ணன்
தானும் அவளுக்கு இணையாக உயர்ந்துவிட்டான்.....

எங்கெங்கும் காணினும் சக்தியடா.....
மல்லிகையின் சக்தி......

இனிவரும் காலங்களில்
முரண்பட்ட வித்தியாசமான
கதை களங்களில்
வீர்யமிக்க ,எழுச்சிமிக்க
சக்தியை வெளிப்படுத்தி
தலை சிறந்த எழுத்தாளராக
மேன்மேலும் வெற்றிப்பெற
என் இறைவியிடம் நானும்
்விண்ணப்பம் வைக்கிறேன்.....


வாழ்த்துகள்,MM


happpppppppy day....

எங்கும் சக்தி எதிலும் சக்தி
நீங்களும் இறைவியின் வழியா
அழகு வரிகள்

அருமையான சொற்கள்
 

murugesanlaxmi

Well-Known Member
hi friend MM
bien.jpg

சூப்பரா ஆரம்பம் சுந்தரியின் வாழ்க்கை பயணம்
பெண்களின் நிலைமை வலிமை எதில் என்று காட்டியுள்ளீர்கள்
ஐடி வாழ்க்கை முறைமையும் அதில் நிகழும் பின்னடைவும் விளக்கமும் அருமை


இனி இருவரும்......

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
அருமை சகோதரி
 

malar02

Well-Known Member
Beautiful!!! Straight forward story, we know the end from the beginning, still every episode interesting and enjoyable,this can only be done by certain writers and you have successfully done it again.kkm was another one like this. So kudos to you.
Dialogues about our culture,society and life everything were awesome. In fact I felt that the story laid down the facts of life in a very raw form in many places which was hard to digest though they are absolute truth.
This time I felt a difference in the writing, எழுத்துக்களில் மிகவும் ஒரு அழுத்தம் கதையின் நாயகியை போலவே. அருமை. நன்றி.
images
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top