கீதமாகுமோ பல்லவி - 19 Pre Final

Advertisement

chitra ganesan

Well-Known Member
சுந்தரேசன்,சிவகாமி இவர்களின் தோழமையுடன் கூடிய பாசத்தை சொல்ல வார்த்தை இல்லை.மிக அருமையான உணர்வு.
பல்லவியின் அடிமனதில் உள்ள ஆசையை அழகாக நிறைவேற்றி கொடுத்து தன் மனைவியின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தி அவள் வெற்றிக்கு ஒரு காரணமாய் இருக்கிறான் ஸ்வரன்.அற்புதமான உணர்வு.

ஸ்வரன் ஓடி ஓடி உழைப்பதை பார்த்து அவனுக்கு தோள் குடுக்கும் வகையில் பிளான் செய்து அவன் வாழ்க்கையில் மென்மேலும் வளர ஒரு தூணாக தாங்கி நிற்கும் பல்லவி.அழகான உணர்வு.

அம்பிகா தன் மகனிடம் தவற விட்ட பாசத்தை சரண் இடம் திரும்ப பெற்றது ஒரு வகையில் சரண் அவன் அம்மாவிற்கான ஏக்கத்தை தீர்த்து விட்டது.இது அன்பான உணர்வு.

இப்படி உணர்வுகளின் அற்புத கலவை கீதமாகுமோ பல்லவி
அனைவரின் மனதிலும் கீதமாய் தொடர்ந்து ஒலிக்கும்.
அருமை மித்ராபரணி
 

banumathi jayaraman

Well-Known Member
அடங்கொன்னியா
இந்த சரண் பயலுக்கு அக்காளையும் பாட்டியையும் கண்ணு தெரியலை அம்பிகா அத்தையை முட்டும்தான் கண்ணு தெரியுதோ
இங்கே பார்றா
ஆப்பிள் சூஸு அம்மா குடிக்கட்டுமுன்னு ஸ்வரன் பார்க்குறான்
ஆதீஸ் பையன் சூப்பர்
உன் காட்டில் மழைதான் அம்பிகா
ஆளாளுக்கு உன்னைக் கொண்டாடுறாங்கோ
வாவ் அனுபல்லவி சூப்பரா ஐடியா செய்யுறாளே
"சிவகாமி மெஸ்"
பொருத்தமான சூப்பரான பெயர்தான், மித்ராபரணி டியர்
இந்த சிவகாமி மெஸ் கோயம்புத்தூரில் இருக்காப்பா?
நானும்தான் போய் சுந்தரேஸ்வரனின்
நள பாகத்தை கொஞ்சம் ரசித்து ருசித்து விட்டு வர்றேனே
எம்புட்டு நாளைக்குத்தான் நானே சோறாக்கி அல்லாரும் சாப்பிடறது?
கொஞ்சூண்டு நாளைக்கு மித்தவைய்ங்க ஆக்கி நானும் சாப்பிடணும்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top