Advertisement

Thankyou geetha , sumathi , vij , sugi , meena , shereen , deebi , niran , suja , subhashankar , uma uday , uma manoj , ini , saji , kodi uma , sathya , selvi , j krithika , ezhil kailash , logavalli , krish ramesh , suganya , pons akka , sathya , shanthi , sri , naramatha , stulip , selvipandiyan, mathi , anita , jass , vijivenkat , cynthia , adhibala , nira , banu , priyagautham , gayattri , mythili , sruti , swapna ,

Thanks For the replies  

pons akkaa, malathy , SD , roney12 , rama akkaa lavanya , sathya , ugina , rathy , mystica , sswapna , malathimari , niran , malar30, thaamz , KG , mathi , deebi , selvi

Hope I haven’t missed anyone’s name. My thanks to all of those people who read and comment on my story.

Thankyou very much friends thankyou for the wonderful support…. and for the comments and feedbacks

Here comes the  6th episode

eagerly waiting to know from you all

———————————————————————-

Being left together to share and care at their abode, Vikram and Annakili have their own little moments that could probably bring them closer emotionally.
Vikram has always cared for her well bring where as she had always had  respect for Vikram as a relative before marriage and high regards for him as her husband after marriage.
For these two, who apparently have separated soon after marriage, destined to be away from each other for four years and who chose not to look for the other in their life during separation, now, the same destiny has forced them to choose to live under one roof.
Annakili gets to see the lighter side of Vikram, while Vikram is all smiles realizing her feminine grace.
Fireworks are yet to happen, for now at the least there is a sizzle. She feels the sizzle caused by his first touch, he knows her sizzling.
With having a past that is hard to be ignored, they both have a long way before they become ONE emotionally.

அத்தியாயம் ஆறு :

அன்னகிளி தனியாக அமர்ந்திருந்தது ஒரு அரை மணிநேரமே.. அதற்குள் டிரைவர் பன்னீர் வந்திருந்தார்…. விக்ரம் கோர்டில் இறங்கிய உடனே அவரை அனுப்பி இருக்க வேண்டும் என்று அன்னகிளி அனுமானித்தாள்.

“நான் இங்க வெளில உட்கார்ந்து இருக்கேனுங்க அம்மணி…. சார் இங்க இருக்க சொன்னார்….. ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க….. கதவை தாழ் போட்டுட்டு நீங்க ரெஸ்ட் எடுக்கறதுன்னா எடுங்க, நான் பார்த்துக்கறேனுங்க”, என்றார்.

தெரிந்தவர் இருக்கிறார் என்பது அன்னகிளிக்கு சற்று தைரியமாக இருந்தது.   

“இல்லைங்கண்ணா பரவாயில்லை…. ஏதாவது தேவைன்னா கூப்பிடறேன்……”, என்று சொல்லி கதவை தாழ் போட்டுக் கொண்டாள்.

மோட்டுவளையைப் பார்த்து எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பது….. டீ வீ போடவும் பிடிக்கவில்லை. அப்படியே தான் அமர்ந்திருந்தாள், விக்ரமின் எண்ணங்களே அதிகமாக ஆக்கிரமித்தது.

விக்ரம்…… அந்த பெயரை அவளின் இதழ்கள் மென்மையாக உச்சரித்தது. அவளின் கணவன். அவளின் கணவனான அந்த நிமிடத்தில் இருந்து அவனின் எண்ணங்களே எப்பொழுதும் அவளுக்குள்.

அதற்கு முன் கண்டிப்பாக கிடையாது, அண்ணியின் தம்பி என்ற முறையில் மட்டுமே தெரியும்….. அதுவும் அவளுக்கு பிரச்சனை வந்த போது…… எனக்கென்ன அன்னகிளியின் குடும்பம் இருக்கிறது என்று ஒதுங்கவில்லை.

இன்னும் பிரச்சனைகள் அதிகமாகாமல் அதிகம் வெளியே தெரியாமல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவனே……. இத்தனைக்கும் பிரச்சனையை வராமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கலாம்…… அவளுடைய முட்டாள் தனமே காரணம்.    

அவளுடைய குடும்பத்தினரை விட அந்த சமயத்தில் அன்னகிளியை அதிகம் புரிந்து நடந்து கொண்டான்.          

விக்ரம் என்ன தான் திட்டினாலும் அன்னகிளிக்கு அவன் மேல் கோபம் வரவே வராது…. வருத்தங்கள் இருக்கும்….. ஆனால் கோபம் இருக்காது. இப்படி யோசனைகள் ஓடும் போதே….. “ஏதாவது குடிக்க வாங்கிட்டு வரட்டுமாங்கம்மா”, என்று டிரைவர் வர…….. “வேண்டாமுங்கண்ணா”, என்றாள்.

“சாப்பிட என்ன வேணும்னு சொல்லிடீங்கன்னா, நான் சாருக்கு வாங்கிட்டு போய் குடுத்துட்டு, அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்துடுவேன்”, என்றார்.

“மதியம் சாப்பிடங்களா”

“ஆமாங்க அம்மணி, சாரு கேட்டுக்க சொன்னாருங்க”,    

“நீங்களே ஏதாவது வாங்கிட்டு வாங்க”, என்று முடித்துக் கொண்டாள்.

அவன் சென்றுவிடவும்.. வீட்டை மெதுவாக சுற்றி நடந்தாள்….  பன்னீர் மதியம் வாங்கி வந்த சாம்பார் சாதத்தை உண்டு முடித்தவளுக்கு, உட்கார்ந்து உட்கார்ந்து களைப்பாக இருந்தது…. ஆனால் படுக்க வழியில்லையே…..

இங்கே கட்டில் என்பது மாதிரி எதுவும் இல்லை… கீழே படுக்க முயன்ற போது கால்களுக்கு அதிகம் வெயிட் கொடுப்பது போல தோன்ற படுக்க முயலவில்லை, விட்டு விட்டாள்.

இவ்வளவு நாட்களாக படுக்கையில் ரெஸ்டில் இருப்பது போல இருந்துவிட்டு இப்போது உட்கார்ந்து கொண்டே இருப்பதில் இடுப்பே வலிப்பது போல இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

மாலை ஐந்தரை மணிக்கு மேல் விக்ரம் வரும் வரை அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.

அவனை பார்த்ததும் எழுந்து நின்றாள், வந்தவன் கோபமாக அன்னகிளியை பார்த்து முறைத்தான். அவன் எதற்கு முறைக்கிறான் என்று தெரியாமல்……

“நான் மட்டும் தான் வந்தனுங்க…. எதுவுமே எடுத்துட்டு வரலைங்க, டிரஸ் கூட எடுத்துட்டு வரலைங்க….”, என்றாள்….   

அப்போதும் அவன் முறைக்கவும்……. அன்னகிளி அமைதியாகிவிட….

“ஏண்டி, உன்னை திட்றேன்னு மட்டும் கோபம் வருதே, உனக்கு அறிவு ஏதாவது இருக்கா? இல்லையா?…….. என்னை எத்தனை தடவை இந்த மாதிரி கேட்க வைப்ப…..  டிரைவர் வந்து என்ன சாப்பிட வாங்கிட்டு வரட்டும்னு கேட்டா….. இது வாங்கிட்டு வான்னு சொல்லனும், அதை விட்டுட்டு ஏதாவது வாங்கிட்டு வாங்கன்னா…..”,

“அவன் அவனுக்கு பிடிச்சதையோ, தோணுனதையோ வாங்கிட்டு வருவான்…… அவனுக்கு பிடிச்சதை நீ சாப்பிடுவியா…..  முதல்ல எல்லார் கிட்டையும் அதிகாரமா பேச கத்துக்கோ…. இப்படி அசட்டு தனமா நடந்துக்கறதை விடு….”,

“ஜட்ஜ் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கோடி….. இன்னும் உங்க காட்ல, ஆளுங்க கிட்ட தட்டி குடுத்து வேலை வாங்கற மாதிரி பேசாத…. அதிகாரம் பண்ணி பழகு!”, என்றான் இவன் அதிகாரமாக. 

“ப்பா! எப்படி இப்படி இவரு யோசிக்கிறாரு!”, என்பது போல அன்னகிளி பதில் பேசாமல் விக்ரமை பார்க்க….

அவள் பார்ப்பதை பார்த்து, “என்ன?”, என்றான்.

“இல்லீங்க! நான் இந்த மாதிரி யோசிக்கலைங்க……”,

“வேற மட்டும் யோசிச்சிருவியா நீ…. நீ கிழிப்ப!”, என்றான்.

“வேறு என்ன யோசிக்கவில்லை, இந்த திட்டு எதற்கு”, என்பது போல அன்னகிளி பார்க்க…..

“சீர் வரிசை தான் வேண்டாம்னு சொன்னேன்…… அதுக்காக ஒரு ரெண்டு மூணு செட் டிரஸ் கூடவா எடுத்துட்டு வரமாட்ட…. எப்படி, என் முன்னாடி டிரஸ் இல்லாம சுத்தப் போறியா”, என்றான்.

அன்னகிளியின் கைகள் தானாக அவளின் வாயை மூடி அதிர்ச்சியாக அவனை பார்த்தது.

அவளின் பாவனையை பார்த்த விக்ரமின் முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது. ஒற்றை புருவம் உயர்த்தி, “எதுக்குடி, இப்படி ஒரு எக்ஸ்ப்ரஷன்”, என்று விக்ரமை கேட்க வைத்தது…..

விக்ரமின் பேச்சு வீரியத்தில் இருந்து வெளி வரும் முன்பே, இப்போது நம்மை பார்த்தா இவர் சிரிக்கிறார் என்று பார்த்தது பார்த்தபடி நின்றாள் அன்னகிளி…..   

“வாயில இருந்து கையை எடு…… சின்ன பசங்க மாதிரி  இது என்ன எக்ஸ்ப்ரஷன்….”,  என்று சொல்லிகொண்டே முகம் கழுவ நகர்ந்தான்.

அவன் திரும்ப வரும் வரை, அந்த பக்கம் இந்த பக்கம் என்று கொஞ்சம் நடை பயின்றாள்.

அவனின் வைட் அண்ட் வைட் உடையை களைந்துவிட்டு ஷார்ட்ஸ், டீ ஷர்ட்ட் அணிந்து வந்தவன், அவளைப் பார்த்துக் கொண்டே வந்து அங்கே ஹாலில் இருந்த கற்பக விநாயகக் கடவுளின் படத்தின் முன் கை கூப்பி வணங்கி நின்றான். ஒரு ஐந்து நிமிடமாவது நின்றிருப்பான்.

“இவ்வளவு நேரம் வேண்டும் அளவுக்கு எத்தனை பெரிய வேண்டுதல் லிஸ்டை இவர் வைத்திருப்பார்”, என்பது போல அன்னகிளி விக்ரமை பார்த்துக் கொண்டே நடை பயின்றுக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப நடக்காதடி கால் வலிக்க போகுது”, என்று அன்னகிளியை அதட்டிக் கொண்டே  டீ வீ யை போட்டுக் கொண்டு அமர்ந்தான் விக்ரம்.

“இவ்வளவு நேரமா உட்கார்ந்து தானுங்க இருந்தேன்”, என்றாள் சன்னக்குரலில்..

அது சரியாக விக்ரமிற்கு கேட்கவில்லை……. “சத்தமா பேசுடி! என் காதை கொண்டு வந்து உன் வாயிலையா வெக்க முடியும்……”, என்றான் கடுப்பாக.

“அதுங்க…….. இவ்வளவு நேரமா உட்கார்ந்து தானுங்க இருந்தேன்!”, என்றாள் அவனுக்கு நன்கு கேட்குமாறு….

“என்ன உட்கார்ந்துட்டே இருந்தியா…. கால் வீங்க போகுது… படுக்கலையா…..?”,

“இல்லை”, என்பது போல அவள் தலையாட்ட…

“ஏன்?”,

“கீழ படுக்க ட்ரை பண்ணும்போது கால்ல ரொம்ப வெயிட் குடுக்கற மாதிரி இருந்ததுங்க! அதானுங்க படுக்கலைங்க….”,

“ஒஹ்! நான் இதை யோசிக்கலை…. வா நான் ஹெல்ப் பண்றேன், கொஞ்ச நேரம் படுத்திரு….”,

“இல்லீங்க! எனக்கு தூக்கம் வரலீங்க….”, என்றாள் அவசரமாக….. இவ்வளவு நேரம் தனியாக உட்கார்ந்து இருந்துவிட்டு, இப்போது போய் தூங்குவதா என்பது போல அவளின் எண்ணமிருக்க…..

“நான் உன்னை படுத்துட்டு தான் இருக்க சொன்னேன்! தூங்க சொல்லலை…..! வா!”, என்று அவன் எழுந்து நடக்க……

வேறுவழியில்லாமல் முகத்தை தூக்கி வைத்தபடி மெதுவாக வாக்கரை பிடித்தபடி பின் தொடர்ந்தாள்.  ஹாலில் இருந்து சைடில் போகும் படி தான் அவன் உபயோகித்த ரூம் இருந்தது.

விக்ரம் உள்ளே சென்றவன்…… நான்கடி அகலம் இருந்த மெத்தையை ஒரு தட்டு தட்டி, அவள் படுப்பதற்கு ஏதுவாக தலையணையை வைத்து…. அவளின் கையை பிடித்து…… “என்னை பிடிச்சிகிட்டு அப்படியே அடிபட்ட காலை ஊனாம படு, நான் பிடிச்சிக்கறேன்”, என்றான்.

அவள், “எப்படி”, என்று தெரியாமல் முழிக்கவும்….. “ப்ச்! உன்னோட ஒரே இம்சைடி”, என்றவன்…. அவளின் முதுகிலும் இடுப்பிலும் அணைவாக இரு புறமும் இருந்து கையை கொடுத்தவன்….. “இப்போ படு!”, என்றான்.

அன்னகிளி இப்படி பட்டென்று விக்ரம் அணைத்த மாதிரி பிடிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை….. புதிதாக அன்னகிளி உணர்ந்த ஒரு ஆண்மகனின்  அருகாமை…. அவளை அணைத்திருந்த அவனின் தொடுகை…. ஒரு அவஸ்தையை கொடுக்க….. “கையை எடுங்க, நானே பிடிச்சிக்கறேனுங்க”, என்று சொல்ல வந்தவள்….   

சொன்னால்…… எங்கே திட்டுவானோ என்று பதட்டமாக விக்ரமின் முகத்தை பார்த்தாள்.

“ம், படு!”, என்று மறுபடியும் விக்ரம் சொல்ல….. 

நின்ற வாக்கில் அப்படியே எப்படி சாய்வது என்று இன்னும் அன்னகிளிக்கு பயமாக இருந்தது…

“இந்த பாலே டான்ஸ்ல நீ பார்த்ததில்ல அந்த மாதிரி….. அடிபட்ட காலை தூக்கிக்கோ”, என்று விக்ரம் விளக்கம் கொடுக்க….

இருந்த பதட்டத்தில் எந்த மாதிரியும் அன்னகிளியின் ஞாபகத்திற்கு வரவில்லை….  

திட்ட வந்தவன்…. அவளின் முகத்தை பார்த்து அடங்கினான்.

“என்ன…”, என்று சிறிது தணிவாக கேட்கவும்…. “அப்படியே சாய பயமா இருக்குங்க…..” என்றாள்.

“நான் தான் பிடிச்சிருக்கேனில்ல விழமாட்ட….”,

“நான் வெயிட்டா இருக்கனுங்க…… நீங்களும் சேர்ந்து விழுந்துட்டீங்கன்னா”, என்று ஒரு மகா சந்தேகத்தை அன்னகிளி எழுப்ப……

விக்ரமிற்கு சிரிப்பு வந்தது… “நீ எரும மாடு தான் ஒத்துக்கறேன்…. ஆனா நான் தாங்குவேன்…… நீ படுடி”, என்றான் சிரிப்போடே.

அப்போதும் அவளின் முகத்தில் ஒரு நம்பாத தன்மையை பார்க்கவும்….. “படுக்கறதுக்கு இவ்வளவு கலாட்டாவ பண்ணுவ நீ!”, என்று என்று அவளின் தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டி……. இன்னும் சிரிப்போடு அவளின் முன் நின்றவன்…. ஒரு கையால் அவளின் இடையை தன்னோடு சேர்த்தணைத்து, சற்றும் அவசரமில்லாமல் ஒரு அழுத்தம் கொடுத்தான்….. 

அன்னகிளி, “ஐயோ விடுங்க, எனக்கு படுக்கவே வேண்டாமுங்க”, என்று சொல்ல நினைத்தாலும்…… வார்த்தை எங்கே வந்தது வெறும் காற்று தான் வந்தது.

விக்ரமின் இந்த செய்கையில் இதுவரை உணர்ந்திராத ஒரு புதிய பதட்டத்தில் இருந்தாள் அன்னகிளி………

அன்னகிளியின் தடுமாற்றத்தை விக்ரம் ஒரு ரசனையோடு மனதிற்குள் ரசித்தாலும்…… அவளின் தடுமாற்றத்தை உணராதவன் போல….. மெதுவாக இன்னொரு கையை அவளின் முதுகை சுற்றி அணைவாக படர விட்டவன்…… அதைவிடவும் மெதுவாக “இப்போ படு!”, என்றான் ….

முற்றிலும் புதிய உணர்வு, அது கொடுத்த பதட்டம், ஒரு சிறு உணர்ச்சி கொந்தளிப்பு, அன்னகிளியை அவன் சொன்ன மாதிரி செய்ய வைத்தாலும்….. கண்கள் தானாக ஒரு புது மயக்கத்தில் மூடியிருந்தது…… அவளின் முக பாவங்களை பார்த்தபடி அப்படியே அவளை படுக்க வைத்தவன்…… “ஹப்பா! என்னை எக்சசைஸ் பண்ண வைக்கிறடி”, என்று நிமிர்ந்தான்.

இப்போது அவளின் முகத்தை பார்க்கவும்… விக்ரமை தான் பார்த்துக் கொண்டிருந்தாள், கட்டுக்குள் வந்திருந்தாள், முகத்தில் ஒரு பாவனைகளும் இல்லை. தடுமாற்றத்தை நொடிகளில் மறைத்த அவளின் மனதிடம் விக்ரமிற்கு நன்கு தெரிந்தது.

முகத்தில் ஒரு ரசனையான புன்னகையோடு, “நீயா எழுந்துடாத! என்னை கூப்பிடு!”, என்று சொல்லி சென்றான்.  

அவன் சென்றதும், “ஷ்! ஹப்பா!”, என்ற பெருமூச்சு அன்னகிளிடம் எழுந்தது.  இப்போது வேறொரு பதட்டம் சூழ்ந்தது… இவன் தெரிந்து செய்திருப்பானா? தெரியாமல் செய்திருப்பானா? தன் தடுமாற்றத்தை கண்டு கொண்டிருப்பானா? தன்னை தவறாக நினைத்திருப்பானா……? அதற்கும் ஏதாவது சொல்லி காட்டி திட்டிவிட்டால்…?

நிச்சயம் அவளால் தாங்க முடியாது!  

அந்த நினைப்பே கண்களில் மளமளவென கண்ணீரை வரவழைத்து…. சற்று நேரம் அவளையும் மீறி அழுதவள்….. வந்து அழுததை பார்த்தால் அதற்கும் திட்டுவானோ என்று அழுகையை முயன்று நிறுத்தினாள்.

ஒரே நாளில் சில நிமிடங்களில் எப்படி என்னை தொலைத்தேன்…. அந்த பேதை பெண்ணிற்கு புரியவில்லை…. திருமணம் என்ற ஒரு பந்தம், அதனோடு கூடிய என் கணவன் என்ற உரிமை….. இந்த தடுமாற்றத்தை திருமணம் நடந்த சில நிமிடங்களிலேயே கொடுக்க கூடியது…..  இவளுக்கோ விக்ரமுடன் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது…

இந்த நான்கு வருடமாக விக்ரம் அவள் கணவன் என்று அன்னகிளி நினைக்காத நாளில்லை…. அப்படி இருக்கும் போது இது ஒரு நியாயமான உணர்வு…… தவறில்லை என்று இன்னமும் அவளின் மூளைக்கு எட்டவில்லை….  

எப்போதும் இருக்கும் சோகத்தை விட இன்னும் சோக கீதத்தை மனம் பாடியது….. அவளின் கண்கள் அவள் அழுததை சிறிது நேரம் கழித்து விக்ரம் வந்து பார்த்த போது காட்டிக் கொடுத்தது.

“ஏய்! என்னாச்சு?”,  என்று பதட்டத்தோடு கேட்க வைத்தது.

அதற்கு அன்னகிளியின் மௌனமே பதிலாக கிடைக்க….. “கேட்டா பதில் சொல்லணும்!”, என்று கோபப்பட வைத்தது.

“கால் வலிக்குதுங்க!”, என்று ஒரு பொய்யான காரணத்தை அன்னகிளி சொல்ல….

“என்ன வலிச்சாலும் நீ தாங்குவ! அழமாட்ட! எனக்கு தெரியும்! உண்மையான காரணத்தை சொல்லு?”, என்று அவன் மிரட்டலாக கேட்கவும்…

“இல்லீங்க….. காலையில இருந்து தனியா இருந்தனுங்களா……. இப்பவும் தனியா படுத்திருந்தனுங்களா…….. அழுகை வந்துடுச்சுங்க! என்றாள் பாதி உண்மையும் பாதி பொய்யுமாக…

“நிஜமா அதுதானா?”, என்று விக்ரம் கேட்கவும்…

“நிசமாலும் தாங்க”, என்று அவனின் பார்வையை தாங்கி சொல்ல…..

“சரி! வா! ஹாலுக்கு போகலாம்!”, என்று அவளின் இடையை பற்றி தூக்கிவிட போக….

“கையையே குடுங்க….. நானா எழுந்துக்க பார்க்கறணுங்க”, என்று அவள் சொல்ல…

குனிந்த வாரே இடையை சுற்றி அழுத்தமாக கையை படர விட்டவன்.. “ஏன்?”, என்றான் கூர்மையாக அவளை பார்த்தபடி…

“எழ முடியுதான்னு பார்க்கலாம்னுங்க”, என்று அவள் கம்மிய குரலில் சொல்ல…….

“நீ ஒன்னும் பார்த்து கிழிக்க வேண்டாம்! வாயை மூடிட்டு இரு!”, என்று சொல்லி… முன்பை விட இன்னும் அழுத்தத்துடன், இடையில் படர விட்டு இருந்த ஒற்றைக் கையாலேயே ஒரே தம்மில் அவளை தூக்கி தன் மேல் சாய்த்தவாறு நிறுத்தினான்.

கீழே படுத்திருந்த அவளை அப்படி தூக்குவது சாதாரணமல்ல…. விக்ரம் அதை அனாயாசமாக செய்தான். 

அவன் தூக்கிய வேகத்திற்கு விக்ரம் மேல் சாய்வதை தவிர்க்க முடியாது….. சாய்ந்தாள்……. சாய்ந்தாலும் ஒரே நொடியில் தன்னை நிலைப்படுத்தியவள்… அவசரமாக விலக முற்பட்டாள்… ஆனால் விக்ரம் கையை தளர்த்தவில்லை.

“ஏதாவது உனக்கு கஷ்டம்னாலோ, தேவைனாலோ, உடனே என்கிட்டே சொல்லு சரியா…. நான் ஏதாவது யோசனையில இருந்தா கவனிக்க மறந்துடுவேன்…… நான் திட்டுறேன்னு சொல்லாம இருக்க கூடாது…. முடிஞ்ச வரைக்கும் திட்ட கூடாதுன்னு தான் நினைக்கிறேன்…… but i dont know at times what drives me….. என்னோட தான் உன் வாழ்க்கைன்னு ஆனதுக்கு அப்புறம் என்னை பழகிக்கோ சரியா….”, என்றான் நல்ல விதமாகவே.

அன்னகிளிக்கு அவன் பேசியது புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது…. அவன் அணைப்பை விலக்கினால் தானே அவள் மண்டையில் ஏறும்.   

“தனியா ஃபீல் பண்ணுனா சொல்ல வேண்டியதுதானே, பெட் தூக்கி ஹால்லயே போட்டிருப்பேன் தானே……”,

“ம்”, என்று சொல்ல நினைத்தாள்….. நினைத்தாள் மட்டுமே…. அந்த சத்தத்தை கூட அவளால் எழுப்ப முடியவில்லை.

அசையாமல் இறுக்கமாக அவன் அணைப்பில் நின்றிருந்தாள். அவளின் உடலின் இறுக்கத்தை உணர்ந்தவன் கைகளை தளர்த்தி, “சரி, வா! போகலாம்!”, என்று சொல்ல…..

“வாக்கர்ல வர்றேன்!”, என்று அன்னகிளி சொல்லவும்,

“ஓகே!”, என்று தோளை குலுக்கி சொன்னவன் முன்னால் செல்ல…..

மெதுவாக பின் நடந்தாள்……

அவள் ஹாலில் அமரவும், “சாரி…….. டீ கொஞ்சம் லேட் ஆகிடுச்சு!”, என்று சொல்லி… அவளிடம் டீ கப்பை நீட்டியவன்……

“லாஸ்ட் வீக் தான் கேஸ் அப்ளை பண்ணினேன்…. எப்படியும் இந்த வீக் எண்ட்ல வந்துடும்…… அதுக்கப்புறம் அடுப்பு, மத்த சாமான் எல்லாம் வாங்கிக்கலாம்….. ரொம்ப அவசியம் என்னவோ அதை மட்டும் இப்போ லிஸ்ட் பண்ணு வாங்கிடலாம்….  மத்ததெல்லாம் கூட லிஸ்ட் பண்ணி வெச்சிக்கோ… மெதுவா ஒன்னொன்னா வாங்கலாம்….”, என்றான்.

“ம்”, என்று தலையாட்டினாள்…. 

“அதுக்குள்ள உன் கால் சுமாராகிடும், உங்க வீட்ல இருந்து என்ன தான் எடுத்துட்டு வந்த”, என்றான் வேண்டுமென்றே அவளை சீண்டும் விதமாக….

“ஒன்னும் எடுத்துட்டு வரலீங்க, நான் மட்டும் தான் வந்தனுங்க”, என்றாள் ரோஷமாக.

“அப்படியா!”, என்று ஆச்சர்யம் போல உதடு பிதுக்கியவன்….. “உன் போன் எடுத்துட்டு வந்திருப்பியே…”,

“இல்லீங்க, நான் எடுத்துட்டு வரலீங்க”, என்றாள் மீண்டும் ரோஷமாக…..

“என்ன…… போனை….. எடுத்துட்டு……. வரலையா……. போச்சு! போச்சு!”, என்றான்.

அவனின் பாவனைகளை பார்த்து அவள் முழிக்கவும்…

“இந்நேரம் உங்க வீட்ல ஒரு பெரிய சண்டை நடந்துட்டு இருக்கும்……”,

விக்ரம் சொன்ன விதத்தில் அவள் கவலையாக விழிவிரித்து பார்க்கவும்….

“என்ன சண்டைன்னு கேளு”, என்றான் அதட்டலாக….

“என்ன சண்டைங்க?”,

“நான் உன்னை என்ன கொடுமை படுத்திட்டு இருப்பேன்னு….. காலையில இருந்து உன்கிட்ட அவங்க போன்ல கூட பேசலை தானே…. அனேகமா இந்நேரம் நம்ம வீட்டு வாசல்ல நின்னு உளவு பார்க்க வாய்ப்புகள் அதிகம்….”,

“செக்யூரிட்டி கிட்ட எதுக்கும் சொல்லி வெச்சிடனும்”, என்று விக்ரம் சொல்லும் போதே செக்யூரிட்டியின் போன் வர….. ஒரு பெரிய சிரிப்போடு போனை எடுத்தான்.

அவனின் இந்த புதிய பரிமாணத்தை விழியகற்றாமல் அன்னகிளி பார்த்துக் கொண்டிருந்தாள்…. இப்படி ஜாலியாக அவள் விக்ரமை பார்த்ததில்லை….. திருமணத்திற்கு முன் அன்னகிளியின் வீட்டிற்கு வரும்போது கூட அளவாக தான் பேசுவான்.

இதுதான் அவனின் நிஜ குணமா என்று அவனையே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.  

“யாரு? உள்ள அனுப்புங்க!”, என்று சொல்லி பெரிதாக சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் சிரிப்பதை இன்னும் விழியகற்றாமல் அன்னகிளி பார்க்க…… “நான் சொன்னேன் தானே! உங்க வீட்ல இருந்து ஒரு பெரிய மனுஷன் பார்க்க வந்திருக்கான்!”, என்று சொல்லி அவன் எழும்போதே…..

“அத்தை!”, என்று அழைத்துக் கொண்டே பிரபாகரன் வந்தான்.

பிரபாகரனின் குரல் கேட்கவும் தான் விக்ரமிடமிருந்து பார்வையை விலக்கினாள் அன்னகிளி.

“பிரபா!”, என்று வேகமாக போய் அவனை அணைத்த விக்ரம்……. “யாரோட வந்த”, என்றான்.

“சித்தப்பாவோட…”,

“எங்க இருக்கார் உங்க சித்தப்பா”,

“கார்ல…”,

“சித்தப்பாவோட”, என்றதும் முகம் மலர்ந்த அன்னகிளி, அவன் உள்ளே வரமாட்டான் என்றதும் முகம் சுருக்கினாள்.

முறை தெரியாதவனல்ல விக்ரம்….

“உங்க சித்தப்பா நான் கூப்பிட்டா பயங்கரமா அவருக்கு இல்லாத மூளையை கசக்கி உள்ள வரலாமா வேண்டாமான்னு யோசிப்பாரு, என்ன பண்ணலாம்…. உள்ள கூப்பிட்டே ஆகணுமா….. உங்க அத்தை கிட்ட கேளு”, என்றான் வேண்டுமென்றே அன்னகிளியை சீண்டியபடி.

அன்னகிளி அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்க்க….

“சும்மாவே உங்க அத்தை முகத்தை தூக்கி வெச்சா பார்க்க சகிக்காது…. இதுல உங்க சித்தப்பாவை ஏதாவது சொன்னா…… அவ்வளவுதான்…. அந்த முகத்தை பார்க்கறதுக்கு…… சான்சே இல்லை…. நைட் எனக்கு கண்டிப்பா தூக்கம் வராது… ஒரு பத்து பேய் படம் பார்த்த எஃபக்ட் இருக்கும்…. அதுக்கு பேசாம நாம அவரையே உள்ள கூப்பிடுவோம்”, என்று சொல்லிக்கொண்டே வெளியே போனான்.

இந்த விக்ரமின் புதிய பரிமாணம்….. ஏற்கனவே குறைவாக பேசும் அன்னகிளியை இன்னும் வாயடைக்க வைத்தது….. திட்டுகிறான்……. அதே சமயம் அக்கறையாக பார்க்கிறான்….. தன்னுடன் நிறைய நாட்கள் பழகியது போல சகஜமாக பேசுகிறான்.

“ஒன்னுமே புரியலையே”, என்று நொந்து கொள்ள தான் முடிந்தது.     

“உள்ள வாங்க!”, என்றான் காரில் அமர்ந்திருந்த கந்தசாமியிடம்….. அவன் யோசிக்கவும்……. “வாங்க, உங்க பாச மலர் உங்களை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கா”, என்று ஒரு சிறு புன்னகையோடு சொல்லவும்…… அதை ஆச்சர்யமாக பார்ததவாரே வேகமாக இறங்கினான் கந்தசாமி.

இறங்கியவன் விக்ரமிற்கு முன்னால் வீட்டிற்குள்ளும் சென்று விட்டான்…

விக்ரம் உள்ளே போகும்போது, “எப்படியிருக்கீங்க பாப்பா!”, என்று கந்தசாமி கேட்டுக் கொண்டிருந்தாலும் பார்வை வீட்டை அலசியது.

இயல்பான மனநிலையில் இருந்த விக்ரமிற்கு அது கோபத்தை கொடுக்க ஆரம்பித்தது.. இருந்தாலும் பிளாஸ்கில் இருந்த டீயை கந்தசாமிக்கு ஊற்றிக் கொடுக்க அவனும் மறுக்காமல் வாங்கிகொண்டான்.

அதன் பிறகு கந்தசாமியை கண்டு கொள்ளாமல் அவன் பிரபாகரனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“ஏன் பாப்பா சோர்ந்து தெரியறீங்க? ஏதாவது உன்ற வீட்டுக்காரர் திட்டுனாரா?”, என்று ரகசியமாக கந்தசாமி பேச……. அது துல்லியமாக விக்ரமின் காதுகளில் விழுந்தது……

“இல்லீங்கண்ணா! அதெல்லாம் இல்லீங்க!”, என்று அன்னகிளி அவசரமாக மறுத்தாள்.

“உன்ற ஊட்டுக்காரர் கிட்ட ஒரு விஷயம் பேசணுமே!”, என்றான் கந்தசாமி.

“என்னங்கண்ணா என்கிட்ட சொல்லுங்க! அப்புறம் நான் அவர்கிட்ட சொல்லிக்கறேனுங்க!”, என்றாள் சற்று பதட்டமாக அன்னகிளி…..

“அது சாமான்………!” என்று கந்தசாமி ஆரம்பிக்கும் போதே….

“இந்த பேச்சு வேண்டாம்னு நான் சொன்னேனே!”, என்று விக்ரம் இருந்த இடத்தை விட்டு கோபமாக எழ……

அவன் எழுந்த வேகத்தை பார்த்தால் எங்கே தன்னை வந்து அடித்தே விடுவானோ என்று தான் கந்தசாமிக்கு தோன்றியது.

“இருங்க! அண்ணா என்ன சொல்ல வர்றாருன்னு தெரியாம கோபப்படாதீங்க….. ஏதாவதுன்னா நானே வேண்டாம்னு சொல்லிடுவேனுங்க!”, என்றாள் அன்னகிளி.

விக்ரம் கந்தசாமியை முறைத்து பார்த்தாலும், மேலே பேசாமல் அமைதியாக  அமர்ந்தான்….. கந்தசாமி விக்ரமையும் அன்னகிளியையும் ஆச்சர்யமாக பார்த்தான்…..

பேசாமல் அமைதியாக இருக்கும் விக்ரமும், புதிது… இப்படி பேசும் அன்னகிளியும், புதிது…. 

அந்த நிமிடம் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் இருவரும் நன்றாக வாழ்வார்கள் என்று கந்தசாமிக்கு தோன்றியது.    

 

 

Advertisement