Advertisement
உன் நினைவு – 26
உன் கைகள் கோர்த்து..
உன் தோள் சாய்ந்து..
உன் மார்பில் முகம் புதைத்து..
உன் முத்தத்தில் நான் கறைந்து..
உனக்குள்ளே நான் தொலைந்து..
உன் உணர்வுகளில் நான் உறைந்திட
என் உயிரினில் நீ உருகிட…
தவமிருந்தேன்….. உன்னிடமே..
நீயோ சாபம் தந்து சென்றாய்………
வசுமதிக்கு அன்று காலையில் இருந்தே ஒன்றும் மனதிற்கு சரியில்லை.. இரண்டு நாட்களாக கதிரவனிடம் இருந்து ஒரு மெசேஜ் ஒரு போன் கால் எதுவும் வரவில்லை.. முதலில் இதை கண்டுகொள்ளாத வசுமதி பின்னே தவித்துவிட்டாள்..
“ என்ன ஆனது இவனுக்கு ??? ”
“ ஏன் ஒரு மெசேஜ் கூட பண்ணவில்லை…?? ”
“ ஒரு வேலை சிவா சொன்ன மாதிரி என்னை வெறுத்துவிட்டானோ??.. ” என்றெல்லாம் யோசித்தபடி போனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.. இதை கண்ட வசந்தி சிவாவிற்கு கண் ஜாடை காட்டினார்.. அதை புரிந்து கொண்ட சிவா
“ ஹே பாசுமதி… உன் போன் குடு.. என் செல்லில் சார்ஜ் இல்லை..” என்று கேட்கவும்.. வசுமதி “ சார்ஜ் இல்லாட்டி சார்ஜ் போட்டு அதற்கு பிறகு என்னவோசெய் அதற்கு எதற்கு என் போன் கேட்கிற ?? ” என்றாள் அழுத்தமாக..
“ அது எனக்கு தெரியாதா ?? இப்ப என் பிரன்ட்க்கு போன் செய்யவேண்டும் குடு “ என்று கூறியவாறே வேகமாக அவளது செல்லை எடுக்க போனான். ஆனால் அவள் முந்திகொண்டாள்… வேகமாக அவனிடம் திரும்பி “ எனக்கு இப்ப போன் வரும்.. “ என்றாள் வெடுக்கென்று..
ஏற்கனவே கதிரவனிடம் இருந்து எதுவும் வரவில்லை என்ற கடுப்பு வேறு.. ஒரு வேலை தன்னை வெறுத்துவிட்டானோ என்ற பயம் வேறு.. அவனுக்கு என்ன ஆகியதோ என்ற தவிப்புமாக அவள் குழம்பி நின்றாள்..
ஆனால் சிவாவோ “ ஹா !! ஹா !! என்ன ஜோக்?? உனக்கு போன் வருமா ?? யார் கிட்ட இருந்து ??? ஹ ஹ !!! உனக்கு தினமும் போன் கிசெய்ற ஒரே ஜீவன் அத்தான் மட்டும் தான்.. நீ கண்டுக்கவே இல்லை.. இப்ப அவரும் பண்ணுவது இல்லை.. இதில் உனக்கு கால் வரும் என்று எப்படி சொல்ற..?? போ காமடி பண்ணாதே… நான் சொன்னதுதான் நடக்க போகிறது.. நீ இப்படியே இருந்தால் அத்தான் உனக்கு டா டா சொல்லிவிட்டு வேற பொண்ணுக்கு டும் டும் டும் தான் ” என்றான் கிண்டலாக.. ஆனால் உள்ளே உதறல் எடுத்தது அவனுக்கு..
இதை கேட்டதும் வசுமதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவனை முறைக்க ஆரம்பித்தவள் முடியாமல் கண்ணீர் வடித்தாள்.. ஆனாலும் இது எல்லாம் தன் அக்காவின் நன்மைக்கு தானே என்று சிவா பொறுமையாக இருந்தான்.. இது போதாது என்று வசந்தி வேறு ஆரம்பித்தார்..
“ அடடா என்னடா நீ எதற்கு இவளிடம் வாய் குடுத்து அவளை அழுக வைக்கிறாய்?”
“ நான் எதுவும் சொல்லவில்லை மா.. போன் குடு ஒரு கால் பண்ணிவிட்டு குடுக்கிறேன் என்று சொன்னேன்..” என்றான் அப்பாவியாக..
வசுமதிக்கு கண்ணீர் நின்ற பாடு இல்லை.. “ ஏய் சுமதி எதற்கு இப்படி அழுதுகிட்டு இருக்க?? அவன் என்ன போன் தானே கேட்டான் ?? ” என்று மகளின் பக்கம் திரும்பினார் வசந்தி..
“ அம்மா இல்லை மா.. அவன் என்ன சொன்னான் தெரியுமா …” என்று தன் அன்னை தனக்கு ஆறுதல் கூறுவார் என்று நம்பி சிவா பேசியதை கூறினாள்.. ஆனால் இதை எல்லாம் பொறுமையாக கேட்ட வசந்தியோ
“ அவன் சொன்னதில் என்ன தப்பு இருக்கு ?? ”என்று கேட்டு மேலும் அவளை அதிர வைத்தார்..
“ அம்மா ….” என்று திகைத்துவிட்டாள்..
“ என்ன டி அம்மா ??.. அவன் சொன்னதில் என்ன தப்பு இருக்கு.. எந்த ஆம்பிளை தான் டி கோவத்தில் வார்த்தையை விடாமல் இருக்காங்க.. அதான் அந்த தம்பி எல்லாரிடமும் மன்னிப்பு வேறு கேட்டதே. தினமும் உன்னிடம் கெஞ்சிவிட்டு வேற இருக்கு. உனக்கு இப்ப எல்லாம் ஏற்றம் ஜாஸ்தியாய் இருக்கு ” என்று இன்னும் எகிறினார்..
“நான் மட்டும் …..” என்று எதுவோ பேச ஆரம்பித்தாள் ஆனால் வசந்தி விடவில்லை..
” போதும் நிறுத்து.. உன் இஷ்டத்திற்கு விட்டு தான் இப்ப இப்படி உட்கார்ந்து இருக்க.. உன்னை பார்க்கும் போது எல்லாம் அப்படியே அடிவயிறு நடுங்கிகிறது டி… உனக்கு உன் விருப்பப்படி வாழ்கை அமைக்க ஒரு வைப்பு கிடைத்தது ஆனால் அதை நீ விட்டுவிட்ட.. இனிமே நாங்க சொல்வதை தான் நீ கேட்கவேண்டும் “ என்றார் கறாராக..
வசுமதிக்கோ மேலும் மேலும் அதிர்ச்சி கூடியது இத்தனை நாள் அமைதியாக இருந்த தன் குடும்பம் இன்று தனக்கே எதிராய் திரும்புவதாய் நினைத்தாள் “ அம்மா என்ன ?? ”
வசந்தி “ உன்னை அமைதியாய் நான் சொல்வதை கேள் என்று தானே சொன்னேன்.. இங்க பாரு நானும் உன் அப்பாவும் பேசி ஒரு முடிவு எடுத்து இருக்கோம்.. அழகு கல்யாணத்திற்கு போய்விட்டு வந்து உனக்கு வரன் பார்க்கலாம் என்று இருக்கோம் “ என்று அவளது மனதில் இடியை இறக்கினார்..
இதை கேட்ட வசுமதி “ அம்மா “ என்று அலறியேவிட்டாள்…
அவளது முகம் பார்த்து சிறிது இலகியவர் வெளியே காட்டாமல் “ அட.. எதற்கு இப்படி அம்மா அம்மா என்று சத்தம் போடுகிறாய் ?? இது தான் எங்கள் முடிவு.. இது படி தான் நீ நடக்கவேண்டும் ..” என்றார் உறுதியாக..
வசுமதியும் சளைத்தவள் அல்லவே “ என்னால் வேறு யாரையும் கல்யாணம் பண்ண முடியாது..” என்றாள் அவளும் உறுதியாக..
“ வேறு யாரையும் பண்ணமுடியாது என்றால் அப்ப கதிரவனை கட்டிக்கோ “ என்றார் வசந்தி கூலாக.. வசுமதியோ தன் அம்மாவையும் முறைத்தாள்..” என்ன டி முழிக்கிற.. நீ இப்படியே இருப்ப அதை நாங்கள் எல்லாம் பார்த்துசும்மா இருக்கவேண்டுமோ நான் என் முடிவை சொல்லிவிட்டேன் “ என்று அவளது பதிலுக்கு காத்திராது உள்ளே சென்று விட்டார்..
இன்னும் சிறிது நேரம் அங்கு மகள் முன்னே இருந்தால் எங்கே தன் மனம் இளகி விடுமோ என்று சென்று விட்டார்.. மருந்து கசப்பாக தானே இருக்கும்.. ஆனால் நோய் குணமாக வேண்டுமென்றால் கசப்பு மறந்து தானே நல்லது..
வசுமதி வேகமாக தன் அறைக்குள் வந்து யோசித்தாள் “ இதென்ன புதிதாய் எல்லாரும் இப்படி நடந்துக்கிறாங்க. ஒருவேளை மறுபடியும் எல்லாரும் பிளான் பண்ணுறாங்களோ.. ஆனால் அம்மா ஏன் இப்படி பேசினாங்க இந்த கதிர் வேற இரண்டு நாளா எதுவும் பண்ணாமல் உயிரை வாங்குகிறானே “ என்று வருந்தினாள்.. வசந்தி பேசியதே அவளது மனதில் மீண்டும் மீண்டும் வந்தது… நீண்ட நேர யோசிப்பிற்கு பின்னே தன் மடி கணினியில் எதுவோ பார்த்தாள்..
சிறிது நேர தேடலுக்கு பின் அவளது முகத்தில் ஒரு சிறு நிம்மதி பரவியது.. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு கட்டுமான கம்பனியில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று விளம்பரம் படித்தாள் வசுமதி இரண்டு நாட்கள் முன்னே.. இன்று அது நியாபகம் வந்து தான் அந்த கம்பனியின் வலைத்தளத்தில் பார்த்தாள்.. அனைத்தும் அவளுக்கு திருப்தியாக இருந்தது.. தன்னுடைய ரெஷ்யூம்மை அனுப்பி வைத்தாள்..
அவர்களும் இன்னும் இரண்டொரு நாளில் பதில் கூறுவதாக கூறினர்.. அங்கே வேலை உறுதி என்றால் அவர்களே விசா ஏற்பாடு, தங்குவதற்கு எல்லாம் செய்து விடுவர்..
” நான் இங்க இருந்தால்தானே மா என்னை இப்படி எல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் செய்ய முடியும்.. நீங்க எல்லாரும் அழகு அண்ணன் கல்யாணத்திற்கு போகவும் நான் இங்க எல்லா ஏற்படும் பண்ணிவிட்டு, நீங்க வந்த உடனே நான் கிளம்பிவிடுவேன்..” என்று முடிவு எடுத்து கொண்டாள்..
கதிரவன் ” இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு டா.. நீயும் எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை. நானும் அவளுக்கு போன் செய்றதை நிறுத்திவிட்டேன்.. அம்மாவும் எதுவும் என்னிடம் சொல்லவில்லை.. அவள் வருவாள மாட்டாளா டா அழகு ?? ”
அழகேசனோ “ டேய் ஏன் டா தினமும் இதையே கேட்கிற. நீ சும்மாவே இருக்க மாட்டியா ??? போ வேலையை பாரு.. எனக்கு மீனாட்சிகிட்ட இப்ப பேச வேண்டும் ” என்று நகர்ந்து விட்டான்..
கதிரவனோ “ இந்த பயலுங்க பேச்சை கேட்டு நாம் அவளிடம் பேசாமல் இருந்தது தப்போ “ என்று யோசித்தான்..
இரண்டு நாட்கள் கழித்து…
அங்கே சென்னையில் வசுமதிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கால் வந்தது.. அவளை தேர்வு செய்து விட்டதாகவும்.. அணைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு மீண்டும் தொடர்ப்பு கொள்வதாகவும் கூறினர்.. எப்படியும் இந்த மாத இறுதிக்குள் கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.. வசுமதி அனைத்தையும் கணக்கு போட்டு பார்த்து சரி என்று சம்மதம் கூறிவிட்டாள்.. தன் அறையில் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள் வசுமதி.. காலிங் பெல் சத்தம் கேட்டது..
“ இந்த நேரத்தில் யாராக இருக்கும் ?? ” என்று யோசித்தபடியே கதவு திறந்தவள் திகைத்து விட்டாள்… ஏனெனில் கதவிற்கு பின்னே நின்று இருந்தது அழகேசன்.. இன்னும் நாளே நாளில் கல்யாணம் ஆக போகும் கல்யாண மாப்பிள்ளை..
“ அண்ணா … நீங்க .. இங்க …” என்று தடுமாறியவள் பின்னே ..” உள்ளே வாங்க ” என்று அழைத்தாள்..
அழகேசணும் “ஏன் மா நான் இங்க வர கூடாதா ??” என்று கேட்டவரே உள்ளே வந்தான்..
பேச்சு குரல் கேட்கவும் வசந்தி சிவா சண்முகநாதன் அனைவரும் ஹாலிற்கு வந்தனர்.. அவர்களுக்கு முன்பே தெரியும் இவன் இங்கு வருவான் என்பது.. ஆனாலும் வெளியே காட்டிகொள்ளாமல் பேசினர்.. சிறிது நேர நல விசாரிப்புகளுக்கு அழகேசன் குளித்துவிட்டு வந்து உண்டான்.. அதன் பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தான்..
பின் வசந்தி தான் மீண்டும் ஆரம்பித்தார் “ என்ன அழகு இன்னும் நான்கு நாளில் கல்யாணம் இருக்கு இவ்வளோ தூரம் வந்து இருக்க ?? ”
அழகேசனோ “ அது ஒன்றுமில்லை மா.. எனக்கு சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லை.. நான் என் கூட பிறந்த தங்கச்சியா நினைக்கிறது வசுமதியை தான்.. ஆனால் அவளே என் கல்யாணத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் .. ஆனால் எனக்கு மனம் கேட்கவில்லை “ என்றான் பாவமாக..
வசுமதி “ என்ன அண்ணா என்னை பார்கவா வந்தீங்க, அதுவும் இன்னும் நாலு நாளில் கல்யாணம் வைத்துகொண்டு “ என்றாள் கேள்வியாக..
“ ஆமா வசும்மா உன்னை பார்க்க தான் வந்தேன்.. எனக்கு உன்னை பார்க்க வேண்டும் போல இருந்தது சரி நீயும் போடிக்கு வர மாட்ட.. இனி எனக்கு எப்ப சென்னை வர வாய்ப்பு கிடைக்குமோ அதான் உன்னை பார்த்துவிட்டு அப்படியே உனக்கு கல்யாணத்திற்கு நான் எடுத்த புடவையை குடுத்துவிட்டு போகலாம் என்று வந்தேன்” என்று ஒரு புது பட்டு சேலை கொண்டு வந்து தந்தான்..
வசுமதிக்கோ மனம் மிகவும் சங்கடப்பட்டத ” என்ன இது அழகு அண்ணா இப்படி பேசுறாங்க.. கல்யாணத்துக்கே போகாமல் நான் எப்படி இதை வாங்குவது.. ” என்று யோசித்தவள் தயங்கினாள்..
“ என்ன வசும்மா.. நியாயமாய் பார்த்தால் நான் உன்னிடம் பேசவே கூடாது.. மீனாட்சிக்கு நாத்துனார் முடிச்சு நீ தான் போடுவ என்று சொல்லி இருந்தியாம்.. இப்ப நீ வரலை என்று தெரியவும் அவளுக்கும் மிகவும் சங்கடமாகி போனது. எப்படியாவது உன்னை கூப்பிட்டு வர சொல்லி தான் சொன்னாள்.. நான் தான் அவளை நல்லா திட்டிட்டு வந்துவிட்டேன்” என்றான் முகத்தை ஒரு மாதிரி வைத்துகொண்டு..
“ஏன் அண்ணா அண்ணி என்ன செய்தார்கள் பாவம் ”
“ பின்ன என்னமா சூழ்நிலை தெரியாமல் பேசினால் நீ எப்படி அங்கு வரமுடியும் அங்க வந்தால் அவன் முகத்தில் முழிக்க வேண்டும் .. சும்மாவே அவன் முன்ன விட மிகவும் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.. எங்களுக்கு இரண்டு நிமிஷம் மேல் அவனை பார்த்து பேச முடியவில்லை.. நீ அங்க வந்தா இதை எல்லாம் பார்த்து வருத்தப்படுவாய் இதை விட உனக்கு என் கல்யாணம் தானா முக்கியம் “ என்றான் அவளது முகத்தை கூர்ந்து பார்த்து..
வசுமதியின் முகத்தில் குழப்ப ரேகை படிந்தது. ” என்னாச்சு கதிர் உங்களுக்கு.. அழகு அண்ணன் என்னவோ சொல்லுறாங்களே … ” என்று யோசித்தவளுக்கு எதுவுமே புலப்படவில்லை..
அப்பொழுது பார்த்து மீனாட்சி போன் செய்தாள் வசுமதிக்கு.. “ ஹலோ வசு உன் அண்ணன் அங்கு வந்து இருக்காங்களா ?? ”
“ ஆமா அண்ணி.. ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க ?? ” என்றாள் வசுமதி..
“ ஒன்றுமில்லை வசுமதி.. என் கொடுப்பினை அவ்வளோ தான்.. இத்தனை வருஷம் கழித்து எங்க கல்யாணம் கூடி வந்து இருக்கு ஆனால் பாரு மனசு விட்டு பேசி சந்தோசப்பட நீயும் இங்க இல்லை.. இவரும் முன்ன மாதிரி இல்லை.. எப்ப பாரு கதிரு அண்ணன் கூடவே இருக்காங்க.. இதை எல்லாம் கேட்டால் என்னை முறைக்கிறாங்க.. ” என்று சோக கீதம் பாடினாள்..
வசுமதிக்கோ தலையே வெடித்து விடும் போல இருந்தது.. ” என்ன அண்ணி இப்படி சொல்லுறீங்க ?? ” என்றாள் வசுமதி அழகேசனை பார்த்தபடி .. அழகேசன் அமைதியாக இருந்தான்…
அதன் பிறகு மீனாட்சி என்ன கூறினாலோ தெரியவில்லை.. வசுமதி “ நீங்க எதுவும் கவலை படவேண்டாம் அண்ணி.. நான் பேசுகிறேன் அண்ணனிடம்” என்று கூறி போனை வைத்தால்.. பின் அழகேசனிடம் “ என்ன அண்ணா ஏன் அண்ணி மனம் கஷ்டபடுவது மாதிரி நடந்துகுறிங்க?? பாருங்க எவ்வளோ வருத்தப்படுறாங்க “ என்றாள் கவலையாக..
அழகேசனோ சலிப்பாக “ நான் என்னமா பண்ணுவது?? நீ வேற என்னிடம் சத்தியம் வாங்கிட்ட கதிரவன் கூடயே இருங்க என்று நான் என்ன செய்ய நீயே சொல்ல. அவனும் பீல் பண்ணுறான்.. இதுக்கு மேல் வேலை வேற நிறைய இருக்கு.. இதில் நீ வரலை என்று வேறு எல்லாருக்கும் கவலை “
“ ம்ம் “ என்றாள் வசுமதி.. இதற்கு அவள் என்ன பதில் கூறுவாள்.. அனைவரும் தன்னை நெருக்குவது போல இருந்தது.. மூச்சு முட்டுவது போல இருந்தது..
“ அட அழகேசா நீ ஏன் இப்படி அவளிடம் தொண்டை தண்ணி வற்ற வற்ற பேசிக்கொண்டு இருக்க.. போ போய் ரெஸ்ட் எடு.. நீ என்ன பாசமாக இருந்தாலும் அவளுக்கு பிடிவாதம் தான் முக்கியம்.. உன் கல்யாணமா முக்கியம்..?? நீ வேறு இவளுக்காக உருகிட்டு இவ்வளோ பெரிய பொண்ணுக்கு தெரிய வேண்டாம் நமக்காக எல்லாம் இப்படி வருத்தமாக இருக்காங்களே சரி ஒரு நாள் கல்யாணத்திற்கு போய்விட்டு வரலாம் என்று. நீ தான் தங்கச்சி தங்கச்சின்னு உறுகுற.. அவள் வரமாட்டாள்.. “ என்றார் கோவமாக..
வசுமதிக்கோ கோவம் தலைக்கு ஏறியது.. “ அம்மா போதும் இப்ப என்ன நான் போடிக்கு வரவேண்டும் அவ்வளோதானே.. அண்ணா உங்க கல்யாணத்திற்கு நான் வருகிறேன் இப்ப சந்தோசமா?? அண்ணி கிட்டயும் சொல்லிடுங்க.. என்னால் யாரும் கஷ்டப்படவேண்டாம்” என்று பொரிந்து விட்டாள்..
இந்த பதிலை கேட்டதும் வசந்தி அமைதியாகி விட்டார்.. ஆனால் அழகேசனோ “ இல்லை வசும்மா.. கல்யாணத்திற்கு சந்தோசமாய் வரவேண்டும் நீ இவ்வளோ கோவமாய் பேசிவிட்டு எல்லாம் வர வேண்டாம். உனக்கு எதற்கு சங்கடம் “ என்றான் மீண்டும்..
சிறிது நிதானத்திற்கு வந்த வசுமதி “ அட அண்ணா நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க?? நான் சந்தோசமாய் தான் சொல்கிறேன். நான் போடிக்கு வருகிறேன் போதுமா ?? “ என்று கூறி தன் அறைக்கு சென்று விட்டாள்..
உடனே போடிக்கு தகவல் சொல்லப்பட்டது.. இப்பொழுது தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.. ஆனால் வசுமதியோ தன் நிம்மதியை துளைத்து நின்றாள்… ஆனாலும் அவளது மனதில் ஒரு மூலையில் ஒரு மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தாள்.. பின் அவளே அவளை சமாதானம் செய்து கொண்டாள்..
“ எப்படியும் ஆஸ்திரேலியா போவதற்கு முன்னாடி எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும்.கதிரவனையும் பார்த்துவிடாலம்..” என்று அவளே அவளுக்கு கூறிக்கொண்டாள்..
“ அவன் அங்க இருப்பானோ ??? என்னை பார்த்தால் வந்து பேசினால் ?? ஒருவேலை அவன் பேசினால் நான் என்ன பண்ணுவது…” இப்படி எல்லாம் தனக்குளே யோசித்து மூழ்கிவிட்டாள்..
“ ச்சே எல்லாரும் சந்தோசமாக இருக்காங்க.. நான் தான் இப்படி புலம்பி தவிக்கிறேன்.. எல்லாம் அவனால் வந்தது…” என்று இன்னும் தன் மனதில் கோவத்தை கூட்டி கொண்டாள்..
வசுமதி அங்கே வருகிறாள் என்றதும் கதிரவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. ஆனால் சிவாவும் அழகேசணும் அவனிடம் கண்டிப்பாக கூறிவிட்டனர் இரண்டு நாளைக்கு வசுமதியின் கண் முன்னே வாராதே என்று.. கார் வரும் சத்தம் கேட்டு காமாட்சி சிவபாண்டியன் அன்னபூரணி என்று அனைவருமே வாசலுக்கு வந்த விட்டனர்….
அனைவரின் பார்வையும் வசுமதியை தான் சுற்றி வந்தது.. அன்னபூரணி “ கண்ணம்மா வா டா இந்த அம்மாச்சியை கூட உனக்கு வந்து பார்க்க தோன்றவில்லை “ என்று கூறி உச்சி முகர்ந்தார்..
“ ஷ் !!! அம்மாச்சி அதான் இப்ப வந்துவிட்டேன்” என்று கூறி வீட்டை நிமிர்ந்து பார்த்தாள்.. மனதில் பல நினைவுகள் முட்டி கொண்டு மோதி கொண்டு கண் முன்னே வந்தன.. கண்களில் நீர் கோர்த்தது..
அவளிடம் வந்த காமாட்சி “ வசும்மா.. நீ எதுவும் கலங்காதடா. இனி ஒருதரம் உன் மனம் கஷ்டபடுகிற மாதிரி இங்க எதுவும் நடக்காது “ என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றார்.. உள்ளே சென்று அனைவரும் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தனர்..
இத்தனை நாட்கள் அவள் இருந்த வீடு தான் இன்று முற்றிலும் அந்நியமாய் தோன்றியது.. வசந்தி காமாட்சியிடம் கண்களிலே “ எப்படியோ ஊருக்கு கூட்டி வந்துவிட்டேன் அண்ணி.. இனிமேல் நீங்கதான் பார்த்துக்கவ வேண்டும் “ என்று கூறினார்..
வசுமதியோ கதிரவனை தேடினாள் “ எங்கே இவனை??.. ஒரு வேலை நான் வருவது யாரும் சொல்லவில்லையோ ?? ச்சே இவன் இருந்தாலும் கஷ்டம்.. இல்லை என்றாலும் தவிப்பாய் இருக்கு “ வீட்டையே பார்வையால் அலசினாள்..
வீட்டில் இருந்த அனைவரும் அவளது முக பாவனைகளை பார்த்தும் பார்க்காதபடி தான் இருந்தனர்.. சிவா தான் வேண்டும் என்றே அவளை சீண்டினான்.. “ என்ன பாசுமதி இந்த வீட்டை நீ இதற்கு முன் பார்த்தது இல்லையா இப்படி பார்த்துகிட்டு நிற்கிறாய் “ என்றான் நக்கலாக..
ஆனால் இதற்கு எந்த பதிலும் அவள் கூறவில்லை.. “ ஒரு வேலை நிஜமவே அத்தான் நம்மை மறந்துவிட்டானோ ?? ஆண்டவா அவன் நம்மை அந்நியமா பார்ப்பதை நான் எப்படி தாங்குவேன்.. இல்லை இல்லை அழகு அண்ணன் கல்யாணம் முடிந்து மறுநாளே சொல்லிவிட்டு கிளம்பிவிட வேண்டும் .. “ என்று அவளாக முடிவு எடுத்து கொண்டாள்..
அவள் அமைதியை கண்ட காமாட்சி “ வசும்மா மேல் உன் ரூமில எல்லாம் சுத்தம் செய்து தான் இருக்கு.. போ டா போய் குளித்துவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு “ என்றார் அன்பாக..
“ இல்லை அத்தை மேலே எதற்கு ?? கீழ கெஸ்ட் ரூம்ல தங்கி கொள்கிறேன்.. இரண்டு நாள் தானே..” என்றாள்.. அதாவது நான் இங்கே ஒரு விருந்தாளியாக தான் வந்து இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் கூறாமல் கூறினாள்..
காமாட்சி “இன்று சாயங்காலம் இருந்து வீட்டிற்கு ஆளுங்க எல்லாம் வந்திடுவார்கள்.. அவர்கள் எல்லாம் பின்ன எங்கள் தங்குவார்கலாம் ?? போ.. போ போயி மேலே உன் ரூம்கே போ..” என்று அவளை அனுப்பி வைத்தார்..
எங்கே இன்னும் நின்றால் இவள் வேறு எதாவது கூறுவாள் என்று சிவா “ அக்கா வா.. எவ்வளோ நேரம் இப்படியே நிற்ப“ என்று மேலே இழுத்துக்கொண்டு சென்றான்.. ஒவ்வொரு படியாய் ஏற ஏற அவளுக்கு உள்ளே பகீர் பகீர் என்று அடித்தது..
எத்தனை நினைவுகள்.. எந்தனை காதல் மொழிகள்.. இந்த அறையிலும் மாடி படிகளிலும் பேசி இருப்பார்கள்.. ஆனால் இன்று அதெல்லாம் நினைவுகளில் மட்டும் தான் நிஜத்தில் இல்லை.. மனம் ஒரு புறம் ஏங்கி தவித்தது.. இன்னொரு புறம் வேதனையில் வெந்து அவிந்தது.
எதுவும் பேசாமல் அமைதியாக தன் அறைக்கு சென்று கதவை சாத்திகொண்டாள்.. கத்தி கதறி அழ வேண்டும் போல தோன்றியது.. ஆனால் அத்தனையும் தன் நெஞ்சில் புதைத்து கொண்டாள்.. இங்கு இருக்கும் இந்த மூன்று நாட்களும் சந்தோசமாக் கழிக்க வேண்டும்..
எதிர் அறையில் சிவாவும் கதிரவனும் பேசும் குரல் கேட்டது..
“ஆக!! அறையில் இருந்து கொண்டு தான் கீழே வரவில்லையா ?? திமிர்.. பேசுவதை எல்லாம் பேசிவிட்டு இப்ப நல்லவன் மாதிரி ஒதுங்கி நிற்கிறானோ ?? இருக்கட்டும் “ என்று கருவிகொண்டாள்..
இப்படியே கண்ணாமூச்சி ஆட்டம் போல இரண்டு நாட்கள் சென்று விட்டன.. கதிரவன் குரல் கேட்கும் ஆனால் அவனை காண முடியாது.. அவளை தவிர அனைவருக்கும் கதிரவன் காட்சி தந்தான்.. ஆனால் இவள் இருக்கும் பக்கம் அவன் நிழல் கூட வரவில்லை… இப்படியே செல்ல செல்ல “ அவன் என்னை மறந்துவிட்டான் “ என்ற எண்ணமே அவளுக்கு மனதில் வேரூன்றியது..
அழகேசன் மீனாட்சியின் கல்யாண நாள் அழகாக விடிந்தது.. மலைகோவிலில் தான் திருமணம்..
அனைவரும் தயாரகி கொண்டு இருந்தனர்.. வசுமதியோ தவிப்பு ஒரு புறமாகவும் கவலை ஒரு புறமாகவும் அதை எல்லாம் மறைக்க அவள் படும் பாடு ஒரு புறமாகவும் திண்டாடி கொண்டிருந்தாள்..
அழகேசன் எடுத்து குடுத்த அழகிய அடர் ரோஜா நிற பட்டு புடவையில் தேவதை போல மிளிர்ந்தாள்.. தலையை தளர பின்னை குண்டு மல்லிபூ சூடி மிதமான ஒப்பனையில், கழுத்திலும் காதிலும் கையிலும் அணிகலன் பூட்டி அசல் தேவலோக சுந்தரியாக தான் மாடி படிகளில் இறங்கி கொண்டு இருந்தாள்..
வசந்திக்கு ஒரு நிமிடம் தன் மகளை இப்படி அலங்கார ரூபிணியாக பார்க்கவும் மனம் மகிழ்ச்சியில் பொங்கியது.. அவளிடம் வந்து அவளுக்கு நெட்டி முறித்து “ அவளை மேலிருந்து கீழ் பார்த்து ரசித்தார்.. பின்னே எதுவோ உறுத்த வசும்மா இந்த சின்ன சங்கிலியை கழட்டு டா.. அட்டியல் எடுப்பாகவே இல்லை” என்று கதிரவன் அவளுக்கு பிறந்தநாள் அன்று போட்டுவிட்ட செயினை கழட்ட போனார்..
ஆம் அது இப்போவரைக்கும் அவளது கழுத்தில் தான் இருக்கிறது.. அவளுக்கு ஏனோ அதை கழட்டவே மனம் வரவில்லை..
“ அம்மா என்ன?? அது அந்த செயின் இருக்கட்டும்.. எனக்கு அட்டியல் கூட வேண்டாம்..” என்று கூறவும் அவள் எதற்கு கூறுகிறாள் என்பதை புரிந்துகொண்ட வசந்தி மனதிற்குள் நகைத்து சென்று விட்டார்.. இதை மேலே இருந்து இரண்டு விழிகள் பார்த்து கொண்டு தான் இருந்தன..
ஆனால் இன்று இந்த நிமிடம் வரை கதிரவன் அவள் கண்களில் படவில்லை.. அனைவரும் கிளம்பிவிட்டனர்.. சிவா ராம் இருவரும் அன்று போல போட்டோ எடுப்பது தங்கள் பொறுப்பு என்று கூறிவிட்டனர்.. பொன்மலர் மல்லிகா முன் போல அல்லாமல் இப்பொழுது அனைவரிடமும் நன்றாக பழகினர்.. வசுமதியிடம் நிஜமான சிநேகத்தோடு பேசினாள் பொன்மலர்..
வசுமதிக்கு திடீரென்று நாசியில் அவனது வசனையை உணர்ந்தாள்.. ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அவளது இதயம் துடிப்பதை நிறுத்தி மீண்டும் துடித்தது.. கதிரவன் தான் மேலே அவனது அறையில் இருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தான்,,
இளம் பச்சை நிற சட்டை அணிந்து, அதை முழங்கை வரை மடக்கி விட்டு, பட்டு வேட்டி கட்டி, கம்பீரமாக இறங்கி வருபவனை கண் இமைக்காமல் பார்த்தபடி நின்றே விட்டாள் வசுமதி..
கிட்டதட்ட பார்த்து இரண்டு மாதங்கள்.. முழுதாக அறுபது நாட்கள்.. இவனை பாராமல் இவனிடம் பேசாமல்… முதலில் அவளை கவனிக்கவில்லை கதிரவன்.. பின்னே தான் எதுவோ தோன்ற திரும்பி பார்த்தான்.. அவனின் சரி பாதி.. அங்கே சிலையென நின்று இருந்தாள்.. இருவரின் பார்வையும் ஒருவர் மீது ஒருவருக்கு நிலைத்து இருந்தது..
சுற்றம் மறந்தது.. சூழ்நிலை மறந்தது.. அவர்கள் காதல் மட்டுமே நினைவில் இருந்தது.. சிறிது நேரம் இப்படியே போனால் இருவரும் மனம்விட்டு கூட பேசி இருப்பார்கள்.. அழகேசன் தன் அறையில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் வருவதை சிவா வீடியோ எடுத்தபடி பின்னேயே நகர்ந்து வந்து நேராக கதிரவன் மீது மோதினான்..
அவ்வளோ தான் இருவரும் ஒரு நொடியில் தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு பார்வையை விலக்கி தங்கள் வேலையில் மூழ்கிவிட்டனர்.. வசுமதிக்கோ இத்தனை நாட்கள் கழித்து அவனை காண்பதால் நெஞ்சம் பட படவென்று அடித்து கொண்டது.. “ அவனுக்கும் இப்படி தான் இருக்குமோ “ என்று கதிரவனை கண்டாள் அவன் சாதரணமாக பேசிக்கொண்டு இருந்தான்.. அங்கு அவனோ சிவாவிற்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தான் கரடி வேலை பார்த்ததற்கு..
மீனாட்சி அழகிய மஞ்சள் நிற பட்டில், மனபெண்ணுக்கே உரிய அலங்காரத்துடன் சிறிது வெட்கம் கலந்து தலை குனிந்து நின்று இருந்தாள்.. வசுமதி நேரே சென்று அவள் அருகில் நின்று கொண்டாள்.. மாப்பிள்ளை தோழனாக கதிரவனும் மணப்பெண் தோழியாக வசுமதியும் நின்றனர்..
அய்யர் மந்திரம் சொல்லி கெட்டிமேளம் கொட்டவும் அழகேசன் பொன் மஞ்சள் தாலியை மீனாட்சியின் கழுத்தில் கட்டினான்.. வசுமதி தான் நாத்துனார் முடிச்சு போட்டாள்.. மீனாட்சிக்கோ வார்த்தைகள் வரவில்லை.. கண்களில் எல்லையில்லா காதலுடன் அழகேசனை பார்த்தாள்.. அழகேசனும் யாரும் அறியாவண்ணம் அவளது கைகளை பிடித்து கொண்டான்..
அழகேசன் தாலி கட்டும் பொழுது தங்களை அறியாது கதிரவனும் வசுமதியுன் பார்த்து கொண்டனர்.. அழகேசன் மீனாட்சியை அழகேசனது சொந்த வீட்டில் குடி வைத்தனர் பெரியவர்கள்.. செய்ய வேண்டிய அணைத்து சடங்குகள் எல்லாம் செய்து அவர்கள் புது வாழ்க்கைக்கு வழி வகுத்து ஆசிர்வாதம் தந்து வாழ்த்தினர்.. அழகேசன் மீனாட்சிக்கு இடையில் ஒரு அழகிய இல்லறம் தொடங்கியது..
வசுமதியோ அங்கே இருக்க முடியாமல் தவித்தாள்.. “ கல்யாணம் தான் முடிந்ததே ஊருக்கு போகலாம் ” என்று நச்சரித்து கொண்டு இருந்தாள்.. அன்று அனைவரும் ஊருக்கு கிளம்புவதாக இருந்தது.. காமாட்சி அன்றே அழகேசனுக்கும் மீனாட்சிக்கு கறி விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்.. அனைவரும் இருக்கும் பொழுது அங்கு இவர்களும் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணியே இதை செய்தார்..
ஒரு வழியாக வேலை அனைத்தும் முடிந்து விருந்தும் முடிந்து அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. எல்லாருக்குமே மனதில் இவர்களை எப்படி பேச வைப்பது என்பது தான் ஓடிக்கொண்டு இருந்தது.. அந்நேரம் பார்த்து வசுமதிக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து போன் வந்தது.. இன்னும் ஒரு வாரத்தில் அவள் அங்கு வருவதற்கு விசா ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினர்..
மீனாட்சி தான் கேட்டால் “ என்ன வசு யார்??”
வசுமதியோ “ என்று இருந்தாலும் இதை சொல்லிதானே ஆக வேண்டும் “ என்று எண்ணி “ தன் வேலை பற்றியும் ஆஸ்திரேலியா போக போவது பற்றியும் கூறி முடிக்கவும் அனைவரும் ஒரு சேர குரலில்
“ என்ன ??? ஆஸ்திரேலியாவா?? ” என்று கூறினார்..
கதிரவனோ தன் மீது நேரே இடி இறங்கியது போல உணர்ந்தான்.. அவனை தவிர அனைவரும் வசுமதியிடம் போராடி கொண்டு இருந்தனர். அனைவரும் வித விதமாக வசுமதியை ஊருக்கு போக கூடாது என்று கூறி அவளை மூளை சளைவை செய்தனர் எதற்கும் பலனில்லை.. யார் என்ன கூறினாலும் அதற்கு ஏற்ப அவள் ஒரு பதில் கூறிக்கொண்டு இருந்தாள்..
இவனோ அப்படியே சிலையென அமர்ந்து இருந்தான்.. அவனது மனதில் “ மதி என்னை விட்டு போக கூடாது.. போகாதே மதி “ என்றே ஒலித்து கொண்டு இருந்தது.. அவனது எண்ணம் எல்லாம் “ வசுமதி இன்று போடியில் இருந்து சென்றால் அவளை அவன் அடைவது கஷ்டம்.. இனி அவளை பார்க்வே முடியாது.. இனி வசுமதி எனக்கு கிடைக்கவே மாட்டாள் “ தோன்றியது அவனுக்கு.
“ மதி … நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்..”
“ மதி நீ என்னை விட்டு போக கூடாது…”
“ நீ எனக்கு மட்டும் தான்.. உன்னை நான் உனக்கே கூட விட்டு குடுக்கமாட்டேன் மதி.. “
“ மதி….. மதி…. மதி…. நீ என் கூட தான் இருக்கவேண்டும் உனக்கும் எனக்கும் நடுவில் இனி யாரும் வர முடியாது… கடவுளே எனக்கு ஒரு வழியை காட்டு என் மதி என்னை விட்டு போக கூடாது “ என்று உறுப்போட்டவன் திடிரென்று உறுதியுடன் எழுந்து பூஜை அறைக்கு சென்றான்..
அவன் எழுந்து செல்வதையோ, ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரும்பி வருவதையோ யாரும் கவனிக்கவில்லை.. அனைவரும் வசுமதியுடன் போராடி கொண்டு இருந்தனர்..
பூஜை அறையில் இருந்து வந்த கதிரவனோ நேராக வசுமதியிடம் சென்று “ மதி திரும்பு “ என்று கூறி அவளை தன புறம் திருப்பினான்..
கதிரவன் என்ன செய்கிறான் என்று அனைவரும் உணரும்முன்னே, ஏன் வசுமதி கூட இவன் என்ன செய்ய போகிறான் ஏன் நம்மை திருப்பினான் என்று உணர்வதற்குள் ஒரு நொடியில் மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கு கட்டிய தாலியை வசுமதியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டான் வசுமதியின் கதிரவன்…
உன் நினைவு – 27
ஏனடி என்னை கொள்கிறாய் …
வார்த்தைகள் தேடாதே
என்னை வதைப்பதற்கு..
உன் மௌனம் ஒன்றே போதும்
நான் மரணிப்பதற்கு….
நொடி நொடியும்…..
யுகம் யுகமாய்…
சிறு பொழுதும் பெறும்
வலியாய்….
வந்து சேர்ந்துவிடு
என்னை வாழவிடு…
கதிரவன் அமைதியாக கை கட்டி அமர்ந்து இருந்தான்… அவன் முகத்தையே பார்த்தபடி அனைவரும் அவனை சுற்றி அமர்ந்து இருந்தனர் வசுமதியை தவிற.. கண் இமைக்கும் நேரத்தில் கதிரவன் திடிரென்று வசுமதியின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்..
அவனுக்கு வேண்டியது எல்லாம் வசுமதி அவனோடு பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி.. சண்டை போட்டாலும் சரி சமாதானமாக போனாலும் சரி.. எது எப்படி ஆனாலும் சரி வசுமதி கதிரவனோடு இருக்க வேண்டும்.. அவளை பிரிந்து அவனால் இனிமேல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.. ஏற்கனவே பட்டது எல்லாம் போதும்…
அதனால் தான் இறுகி போய் அமர்ந்து இருந்தவன், யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, யார் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை, என்ன வந்தாலும் பார்த்து கொள்ளலாம். எனக்கு என் காதல் முக்கியம்.. வசுமதி மிகவும் முக்கியம்.. அவளை அவளுக்காக கூட நான் விட்டுகுடுக்க மாட்டேன் என்று அவளது கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு விட்டான்..
தாலி என்னவோ கண் இமைக்கும் பொழுதில் கட்டிவிட்டான்.. ஆனால் அதன் பிறகு அவனுக்கு என்னவோ மனதில் கொஞ்சம் நடுக்கமாக தான் இருந்தது,, அதுவும் வீட்டில் அனைவரும் கூடி இருக்கும் இவ்வேளையில், இப்பொழுது தான் அவள் மனம் கொஞ்சம் இறங்கி வீட்டிற்கு வந்து இருக்கும் இப்பொழுதில் கதிரவன் இப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது..
யாருக்குமே என்ன பேசுவது ?? எப்படி எதை ஆரம்பிப்பது ?? என்று எதுவும் புரியவில்லை..
அழகேசன் தான் மனதில் எண்ணினான் “ செய்வதை எல்லாம் செய்துவிட்டு எப்படி பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கான் டேய் கதிரவா உன்னை நம்பி வசுமதியை நான் கூட்டி வந்தேன் பாரு என்னை சொல்லவேண்டும் ஹ்ம்ம் இனி என்னையும் வசுமதி மதிக்காது “ என்று புலம்பிக்கொண்டு இருந்தான்..
சிவாவோ “ அத்தான் உங்களை நாங்கள் என்ன செய்ய சொன்னால் நீங்க என்ன செய்து இருக்கீங்க??? ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. கடவுளே நான் வேறு உங்களுக்கு சப்போர்ட் பண்ணி அக்கா கிட்ட நிறைய பேசி இருக்கேன்.. இனி என் நிலைமை என்னவோ தெரியவில்லையே “ என்று மனதில் தன்னை எண்ணி நொந்து கொண்டான்..
வீட்டின் மூத்த தலைமுறையாக அனைவருக்கும் வயதில் மூத்தவராக இருந்த அன்னபூரணி தான் முதலில் ஆரம்பித்தார்.. “ எல்லாரும் இப்படி அமைதியா உட்கார்ந்து இருந்தால் என்ன அர்த்தம் ??? பெண்ணை பெற்றவர்கள் பிள்ளையை பெற்றவர்கள் யாராவது முதலில் பேசுங்கள் “ என்று நாட்டாமை ரேஞ்சுக்கு பேசினார்..
சிவபாண்டியன் தான் பேச ஆரம்பித்தார்.. தன் மகன் மீண்டும் இப்படி அவசரபடுவான் என்று அவர் கனவில் கூட எண்ணவில்லை.. அதுவும் இப்படி அனைவரின் முன்னும் தாலி கட்டுவான் என்று யார் தான் எதிர்பார்த்தார்கள்..
“ என்ன மா பேச சொல்லுறீங்க ?? ” என்று கவலையாக கூறினார்..
சிவபாண்டியன் இவ்வாறு கூறவும் அன்னபூரணி வசந்தியையும் சண்முகநாதனையும் பார்த்தார்.. வசந்தி என்ன பேசுவார் ?? யாருக்கு சாதகமாக பேச முடியும் ?? இத்தனை வருடம் கழித்து ஒன்று சேர்ந்துள்ள தன் பிறந்த வீட்டிற்கு ஏற்றுக்கொண்டு பேசுவாரா ?? இல்லை தன் மகளுக்கு துணை நிற்பாரா ??வசந்தி அமைதியாக தன் கணவரின் முகத்தை பார்த்தார்..
சண்முகநாதனுக்கு மனதில் சிறு வருத்தம் இருந்தது தான்.. இப்பொழுதுதான் தன் மகள் சிரித்து பேசுகிறாள் என்று நிம்மதியாக இருந்தவர் இன்று நடந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியாக இருந்தார்..
“இதை இன்னும் என்னால நம்ப கூட முடியவில்லை ஆனால் நாம இப்படி உட்கார்ந்து பேசிகொண்டு இருப்பதற்கு பதிலாய் போய் வசுமதி என்ன செய்கிறாள் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொண்டால் நாம மேற்கொண்டு அதை முடிவு எடுக்கலாம் “ என்றார் சண்முகநாதன்…
அவர் கூறுவதும் சரிதான் என்பது போல அனைவரும் எழுந்து வசுமதியிடம் செல்ல கிளம்பினர் “ ஒரு நிமிஷம்… நான் கொஞ்சம் பேசலாமா “ என்று கதிரவனின் குரல் அனைவரையும் மீண்டும் அவரவர் இடத்தில் அமர செய்தது..
காமாட்சியோ ” ஏன் தான் இந்த கதிரவனுக்கு இப்படி புத்தி போகிறதோ ?? ஆண்டவா இனி என்ன பேசி உள்ளதையும் கெடுத்து வைக்க போகிறானோ ?? எனக்கு என்று வந்து இப்படி பிறந்து இருக்கானே ” என்று மனதில் புலம்பியவர்..
“ என்ன டா இன்னும் பேச உனக்கு என்ன இருக்கு.. அதான் பண்ணுவது எல்லாம் பண்ணிட்டியே… ஏன் டா உனக்கு இவ்வளோ அவசரம் ?? வசுமதி கிட்ட பேசி நாங்க எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணி இருகமாட்டோமா ??? அதுக்குள்ள உன்னை யார் இப்படி பண்ண சொன்னது “ என்று மற்றவர்கள் கதிரவனை திட்டுவதற்க்கு முன் அவரே திட்ட ஆரம்பித்தார்….
கதிரவன் தன் தாயை ஒரு பார்வை பார்த்து பின் எழுந்து நேரே வசந்தி மற்றும் சண்முகநாதனிடம் சென்றான் ” அத்தை மாமா என்னை தயவு செய்து மன்னிக்கவேண்டும். நான் வேண்டும் என்றே இப்படி பன்னவில்லை.. வசுமதியை விட்டு ஒரு நிமிஷம் கூட இனிமே இருக்க முடியாது என்னால்.. உங்கள் இரண்டு பேருக்கும் காதல், அதோட வலி அதோட ஆழம், எல்லாம் புரியும்.. புரியும் என்று சொல்வதை விட நீங்கள் அதை உணர்ந்தவர்கள்.. அந்த உணர்வை அனுபவித்தவர்கள். வசுமதி ஆஸ்திரேலியா போவதை சொன்னதுமே என் மனம் என்ன பாடு பட்டு இருக்கும் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை “ என்று கூறி அவர்கள் முகத்தை பார்த்து நின்று விட்டான்..
“ ஆகா அத்தான் கரெக்டான பாயிண்டை போட்டு இப்படி அப்பாவையும் அம்மாவையும் லாக் பண்ணிட்டாரே… எப்படி தான் இவ்வளோ தைரியமா பேச முடியுதோ ??? “ என்று நினைத்தது வேறு யாருமில்லை, நம் சிவா தான்…
அழகேசனோ ” டேய் கதிரவா உனக்குள்ள இப்படி ஒரு அந்நியன் இருப்பான் என்று நாங்க யாரும் எதிர்பார்க்கவில்லை டா “ என்று புலம்பிக்கொண்டு இருந்தான்..
சண்முகநாதன் தான் கதிரவனிடம் பேசினார் “ இங்க பாரு கதிரவா நாங்க எல்லாருமே உனக்கும் வசுமதிக்கும் கல்யாணம் செய்து வைக்க தான் இருந்தோம்.. அதை நாங்க வசுமதி கிட்ட பேசி எடுத்து சொல்லி இருப்போம்.. என்ன கொஞ்ச நாள் ஆகி இருக்கும்.. இப்படி நீ திடீர் என்று வசுமதி கழுத்தில் வந்து தாலி கட்டவும் கொஞ்சம் எல்லாருக்கும் அதிர்ச்சியாய் இருக்கு அதான்.. “ என்று தயக்கமாக பேசினார்..
“ மாமா நீங்க சொல்வதும் சரிதான் நான் பண்ணது தப்பு தான் ஆனால் தப்பான விஷயம் பண்ணவில்லை.. எனக்கு மதி போகிறேன் என்று சொன்னதுமே, தோணினது எல்லாம் மதி என் கூட இருக்கவேண்டும் அவள் எனக்கு கிடைக்க வேண்டும்.. இது மாட்டும் தான் மாமா என் மனதில் இருந்தது வேறு எதுவுமே எனக்கு தோணவில்லை அவளை எப்படியாவது இங்கு இருக்க வைக்க தான் நான் நினைத்தேன் ஆனால் எதுவுமே நான் பிளான் பண்ணி எல்லாம் பண்ணவில்லை மாமா “ என்றான் கெஞ்சாத குறையாக..
“ திடீர்னு செய்ததற்கே எல்லாம் இப்படி விக்கி விறைத்து நிற்க்கிறோம் இதில் இவன் பிளான் போட்டு வேற பண்ணவில்லை என்று வருத்தபடடுகிரானே… “ என்று அழகேசன் நினைத்தான்…
அவன் துணிந்து அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டு இப்படி எதற்கும் அசராமல் பேசும்போதே அனைவரும் புரிந்து கொண்டனர்.. அவனது மன நிலைமை எப்படி இருக்கிறது என்று.. அனைவரும் எதிர்பார்த்ததும் ஆசை பட்டதும் கதிரவன் வசுமதி இனைய வேண்டும் என்பது தானே.. ஆனால் இது வேறு விதமாக நடந்து உள்ளது.. இதை நேர் செய்ய வேண்டும்..
அப்படியே இதை இந்த திருமணத்தை நிராகரித்தாலும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை தானே வீணாகும் என்றெல்லாம் எண்ணி இனி நடக்க போவது என்ன ?? வசுமதியின் கருத்து என்ன ??? என்று தெரிந்த பிறகு இது பற்றி முடிவு எடுக்கலாம் என்று எண்ணினர் அனைவரும்..
கதிரவன் பேசிய பின் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் ” கதிரவா நீ சொல்லுறது எல்லாம் ஒரு பக்கம் சரி தான்… அது எல்லாம் உன் பக்கம் நியாயம் தான்.. ஆனால் இதில் நீ மட்டும் சம்பந்த படலை.. நாங்கள் எல்லாரும் உன்னை புரிஞ்சு மன்னிச்சாலும், இதில் வசுமதியோட கருத்தும் மிகவும் முக்கியம்.. அதுனால இனிமே வசுமதி என்ன முடிவு பன்னுறாலோ அது தான் “ என்றார் உறுதியாக..
“ ஹ்ம்ம் சரி மாமா.. அவள் வெளிநாடு போக கூடாது இங்க என் கூடவே இருக்கவேண்டும் என்று தான் நான் இப்படி பண்ணிவிட்டேன் மாமா.. அவள் போகிறே என்று சொன்னதையே என்னால தாங்க முடியவில்லை.. நான் எப்படி அவளை விட்டு இருக்க முடியும் மாமா.. அத்தை நீங்களே சொல்லுங்கள் அன்று உங்களால் மாமாவை விட்டு இருக்க முடிந்ததா ??”” என்று இப்பொழுது தன் அத்தைக்கு தூண்டில் போட்டான்..
“ போச்சு போச்சு இப்படி பேசி பேசியே எல்லாரையும் கவுத்துவிட்டானே ” என்று ராம் நினைத்தான்…
வசந்தி பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.. இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் கதிரவன் “ என்ன அத்தை அமைதியாய் இருக்கீங்க.. எனக்கு தெரியும் நீங்க என் உணர்வுகளை புரிந்துகொல்விர்கள் என்று. உங்களால் எப்படி மாமாவை விட்டு அப்ப இருக்க முடியாமல்,சொந்தம் எதுவும் வேண்டாம் போனிர்களோ அதே மாதிரி தான் அத்தைஇன்று என்னாலும் மதி இல்லாமல் இருக்க முடியாது என்று இப்படி பண்ணிவிட்டேன் “ என்றான் அழுத்தமாக…
இதற்கு மேல் வசந்தி சண்முகநாதன் என்ன பேச முடியும்.. அவர்கள் வாயை தானே சரியாக பேசி அடைத்து விட்டானே.. அவர்கள் முகத்தில் என்ன தோன்றியதோ ஆனால் நிச்சயமாக கதிரவன் மேல் கோவம் இல்லை என்பது மட்டும் காட்டியது.. இதை தானே அவனும் எதிர்பார்த்தான்..
ஆனாலும் கதிரவனுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது… “ எல்லாரையும் அது இது என்று ஏதாவது பேசி சமாளித்து விடலாம் ஆனால் இந்த மதி சும்மாவே அருள் வந்து இருக்காள்.. இதில் நான் மஞ்சள் தண்ணி வேறு ஊத்தி இருக்கிறேன் ஆடு ஆடுன்னு ஆடுவாளே.. எதுக்கும் எல்லாரையும் சரி பண்ணிட்டு தான் அவளிடம் பேசவேண்டும் அப்ப தான் எல்லாரும் நமக்கு துணையாய் இருப்பாங்க” என்று முடிவு செய்த பின்னே இப்படி எல்லாம் பேச ஆரம்பித்தான்..
சண்முகநாதன் வசந்தி அமைதியாகி விடவும் தன் அம்மா அப்பா பக்கம் திரும்பினான்… முகத்தை பாவமாக வைத்துகொண்டு “ அப்பா அம்மா உங்களுக்கு நான் பண்ணது எவ்வளோ கஷ்டமாய் இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.. அவள் எல்லா ஏற்பாடும்செய்துவிட்டு நம்ம கிட்ட சொன்னால் ஆஸ்திரேலியா போகிறேன் என்று.. இப்ப வேண்டாம் சொன்னா அவள் கேட்பாளா ??? அதான் இப்படி பண்ணிவிட்டேன்… நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏற்றுகொள்கிறேன் “ என்றான்..
“ உலக நடிப்பு டா சாமி… எப்படினாலும் எல்லாரும் கூடி சேர்த்து வைத்து விடுவார்கள் என்று அத்தான் எப்படி எப்படி பிட் போடுறாரு “ என்று சிவா மனதிற்குள் பேசிக்கொண்டான்..
சிவபாண்டியன் ஒரே முடிவாக பேசினார் “ இங்க பாரு கதிரவா நாங்க உனக்கு தண்டனை குடுத்து என்ன அக போகிறது சொல்லு.. நீ இப்படி பண்ணது ஏற்றுகொள்ள முடியவில்லை தான்… ஆனால் நீ பண்ணது பெருசா இல்லை உங்கள் இருவரின் வாழ்க்கை பெருசா என்று நாங்கள் யோசித்தால் எங்களுக்கு உங்க வாழ்கை தான் முக்கியம்… இனி அதற்கு என்ன செய்வது தான் பார்க்கவேண்டும்.. முக்கியமா வசுமதி என்ன முடிவு சொல்கிறாளோ அதை வைத்து தான் எதுவும் நாங்கள் பண்ண முடியும் “ என்றார் உறுதியாக…..
அவன் எதிர்பார்த்ததும் அதை தானே… “ யப்பா.. ஒருவழியா அப்பாவும் பேசிட்டார் இனி அம்மா தான் “ என்று நினைத்தவாறே காமாட்சியை பார்த்து “ அம்மா ….” என்றான் மிகவும் பாவமாக…
காமாட்சிக்கோ “ எல்லாருகிட்டயும் வாய் கிழிய பேசிட்டு இப்ப என்னிடம் வந்து இப்படி பாவமா பேசுகிறானே “ என்று எண்ணியவாறு “ என்ன டா அம்மா என்று சொல்லி நிறுத்திட்ட.. எல்லாருக்கும் ஒரு ஒரு பாயின்ட் போட்டு லாக் பண்ண மாதிரி என்னை என்ன சொல்லி வாயடைக்கிரது என்று தெரியவில்லையா ??? ” என்றார் குத்தலாக..
“ ஆக அம்மா புல் பார்ம்ல இருக்கு போலயே “ என்று ஒரு நிமிடம் தயங்கிய கதிரவன் பின் தன்னை திட படுத்தி கொண்டான்.. ஏனென்றால் வசுமதி காமாட்சி கூறினால் மட்டுமே சிறிது மனம் இலகுவால்.. அவள் அப்பா அம்மா கூறுவதை எல்லாம் ஒரு நொடியில் எதிர்த்து பேசிவிடுவாள் என்று அவனுக்கு தெரியும்..
“ என்ன அம்மா இப்படி சொல்றிங்க.. அட்லீஸ்ட் நீங்களாவது என்னை திட்டுங்க மா.. இப்படி எல்லாரும் அமைதியா இருப்பது த எனக்கும மிகவும் கஷ்டமாக இருக்குமா.. உங்களுக்கு நல்லா தெரியும் மதி என்னை எவ்வளோ விரும்புறா என்று .. அப்படி இருக்கும் போது அவள் எப்படி மா அங்க தனியாய் இருப்பாள்… அவள் கஷ்டப்படுறதை பார்த்து நான் எப்படி மா இங்க நிம்மதியாய் இருக்க முடியும்… நீங்களே சொல்லுங்க மா??? “ என்றான் ஒன்றும் தெரியாத அப்பாவியாய்..
காமாட்சியோ ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு “ நீ என்ன சொன்னாலும் சரிதான் கதிரவா நீ அவசர பட்டு இருக்க கூடாது… நாங்க தான் எல்லாம் அவகிட்ட பேசிட்டு இருந்தோமமே.. உனக்கு கல்யாணம் தாலி இது எல்லாம் வேடிக்கையாய் போச்சா ?? ” என்றார் சற்று காட்டமாக…
இதற்கு அவன் என்ன பதில் கூற முடியும்.. இல்லை என்றாலும் பின் ஏன் இப்படி செய்தாய் என்ற கேள்வி வரும்.. ஆமாம் என்று கூறவே முடியாது.. இத்தனை ஆட்களையும் தன் வார்த்தைகளில் தன் வசத்திற்கு கொண்டு வந்தவன் தன் அன்னை கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறமுடியாமல் திணறினான்..
இருக்காதா பின்னே அவனையே பெற்றவர் அல்லவா..” என்ன டா பதில் பேசாமல் இருக்க இன்னும் என்ன பண்ணலாம் என்று திட்டம் போட்டுகிட்டு இருக்கியா ?? ”
கதிரவன் “ அம்மா ப்ளீஸ் என்னை புரிந்துகோங்க நான் திட்டம் போட்டு எல்லாம் எதுவும் பண்ணவில்லை.. அந்த நேரத்தில் எனக்கு மதியை எப்படி இங்க இருக்க வைப்பது என்பதை தவிர வேறு எதுமே எனக்கு தோணவில்லை மா… ப்ளீஸ்… ஏன் யாருமே என் காதலை மாட்டும் புரிந்துகொள்ள மட்டேங்கிறிங்க?? யாராவது வேண்டும் என்றே இப்படி பண்ணுவாங்களா மா..” என்றான் காமாட்சி கைகளை பிடித்து கொண்டு…
இங்கே இத்தனை களேபரம் நடந்து கொண்டு இருக்க, வசுமதி மாடியில் இருக்கும் தன் அறையில் கண்ணாடி முன்பு அமர்ந்து இருந்தாள். அவளது மனம் என்ன உணர்கிறது என்பதை அவளால் எண்ண முடியவில்லை.. இனி என்ன செய்வது என்று யோசிக்க முடியாத நிலையில் அமர்ந்து இருந்தாள்…
அவளது கரங்கள் கதிரவன் கட்டிய தாலியை பிடித்து இருந்தது.. கண்கள் இமைக்க மறந்தது… இதயம் துடிக்க மறுத்தது. யாராவது பார்த்தால் வசுமதியை சிலை என்றே எண்ணுவார்கள்.. அப்படி அமர்ந்து இருந்தாள் எந்த அசைவும் இன்றி… ஆனால் கண்கள் வழியாக தானே காதல் இதயத்திற்கு நுழையுமாம்… அதை அவளது மை விழியும் உணர்ந்து இருந்ததோ என்னவோ ?? கண்கள் மட்டும் கண்ணீர் சிந்தியபடி இருந்தது…
எத்தனை நேரம் அப்படி அமர்ந்து இருப்பாளோ தெரியாவில்லை.. உடல் எல்லாம் தகிப்பது போல இருந்தது வசுமதிக்கு… மனதில் ஏதோதோ எண்ணங்கள் வலம் வந்தன.. அனைத்திலும் நடுநாயகமாக வந்தது அவளது கதிரவனே… அவளுக்கு இப்பொழுது அவள் மீதே கோவம் வந்தது.. “ ச்சே என் மனசு கூட நான் சொல்வத கேட்கவில்லை… எல்லாம் இவன் இஷ்டதுக்கே நடக்க வேண்டும்… ” என்று நினைக்கும் பொழுதே அவளுக்கு ஓ !!!! என்று கத்தி அழவேண்டும் போல இருந்தது..
“ உங்களுக்கு என்ன அத்தான் நான் பாவம் செய்தேன் .. இப்படி என்னை தினம் தினம் நொடிக்கு நொடி அழ வைக்கிறிங்க?? அப்படி என்ன நான் உங்களுக்கு தப்பு பண்ணிவிட்டேன்.. உங்களை காதலித்தேன் இப்ப வரைக்கும்.. இனிமேலும்.. அது தான் நான் செய்த தப்பா ??? நீங்க என்ன பண்ணி இருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியுதா ?? தாலி கல்யாணம் எல்லாம் உங்களுக்கு விளையாட்டா தெரியுதா ?? ” என்று குமுறி கொண்டு இருந்தாள்..
மீண்டும் மீண்டும் அவள் மனம் “ ஏன் அத்தான் இப்படி பண்ணிட்டிங்க ??? ” என்று கேட்ட படி இருந்தது.. இதை விட்டு வேறு எதுவும் அவளால் யோசிக்க முடியவில்லை.. தன்னை பலவந்தமாக இந்த திருமண உறவிற்கு தள்ளியதை போல உணர்ந்தாள்.. அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும் கதிரவன் மீது கோவமாக மாறியது..
அதே நேரம் கீழே கதிரவன் ஒரு வழியாக அனைவரிடமும் பேசி முடித்து விட்டான்.. காமாட்சியும் வசந்தியும் தாங்கள் சென்று வசுமதியிடம் பேசுவதாக கூறினர்.
கதிரவனோ “ இல்லை அத்தை.. ஒரு நிமிஷம் அம்மா.. நான் தான் அனைத்திற்கும் காரணம்.. அதுனால நானே மதியிடம் பேசுகிறேன் “ என்றான்..
“ இல்லை கதிரவா… “ என்று இரு பெண்களும் கூறும் போதே “ இல்லை மா.. ப்ளீஸ் நீங்க போய் பேசுனா நிச்சயமா அவள் மனசுல என்ன இருக்குனு சொல்ல மாட்டா.. நீங்க சொல்லுறதுக்கு மறு பேச்சு பேசமாட்டா.. ஆனால் நான் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று முழுதாய் தெரியவேண்டும் சோ ப்ளீஸ் நானே போயி பேசுகிறேன்.. அவள் எது சொன்னாலும் அப்படியே ஏற்றுகொள்கிறேன் ” என்று உறுதியாக கூறினான்..
என்னதான் கீழே வீரமாக பேசிவிட்டு வந்தாலும் மேலே ஒரு ஒரு படியும் ஏற ஏற உள்ளே உதறல் எடுத்தது கதிரவனுக்கு.. “ வீட்டில் எல்லாரையும் சரி பண்ணிவிட்டோம்.. ஆனால் இவள் ஒருத்தியை சரி பண்ண இவ்வளோ பதற்றமா இருக்கே “ என்று எண்ணியபடி ஆழ்ந்த மூச்சுகளை விட்டு பின் உள்ளே சென்றான்..
வசுமதிக்கோ அவன் உள்ளே வந்தது தன்னை கண்டபடி நிற்பது இதுவும் அவளுக்கு தெரியவில்லை.. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணரும் நிலையில் இல்லை அவன் “ மதி “ என்று அழைக்கும் வரை.. இரண்டு நிமிடம் நின்று பார்த்தான் கதிரவன்.. அவள் திரும்புவாள் என்று எதிர்பார்த்தான்.. ம்ஹு !!! அவளோ இன்னும் தான் அமர்ந்த மோன நிலையிலேயே அமர்ந்து இருந்தாள்…
மெல்ல “ மதி “ என்று அழைத்தான்.. எங்கே தான் சத்தமாக அழைத்தால் கூட அவளுக்கு வலித்து விடுமோ என்றே மெல்ல அழைத்தான் போல.. மீண்டும் “ மதி ” என்று கூறி அவளது தோளில் கை வைத்தான்…
அவனது கை பட்டதும் எங்கு இருந்து தான் வசுமதிக்கு அத்தனை கோவமும் வேகமும் வந்ததோ தெரியவில்லை.. அவனது சட்டையை கொத்தாக பிடித்து நின்றாள் அவனையே முறைத்து பார்த்தபடி.. அவளுக்கும் பார்வையில் எரிக்கும் சக்தி இருந்தாள் இந்நேரம் அதையும் செய்து இருப்பாள்..
அவனோ இதை சற்றும் எதிர்பார்க்காமல் திகைத்து நின்றான் மீண்டும்
“ மதி “ என்று அழைத்து…
ஆனால் அவளோ “ ச்சி !!! அப்படி கூப்பிடாதிங்க அப்படி கூப்பிடுகிற உரிமை உங்களுக்கு இல்லை… என்ன தைரியம் உங்களுக்கு ??? “ என்றாள் ஆங்காரமாக.
“ மதி … நான் சொல் ……. ” என்று அவன் முடிப்பதற்குள்..
“ போதும்… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நீங்க சொல்ல வேண்டியது எல்லாம் என்றோ முடித்தாகிவிட்டது என்ன செய்யவேண்டுமோ அதையும் மிகவும் அழகா இப்ப செய்தாகிவிட்டது இனி நான் தான் பேசுவேன்…” என்றாள் உறுதியாக அவனது முகத்தை நேராக பார்த்தபடி.
இத்தனை நாள் வெட்கத்தில் சிவந்த மதியின் முகமே கண்டு பழகிய அவனுக்கு இன்று கோவத்தில் கொதித்து நிற்கும் தன்னவள் முற்றிலும் புதிதாக தெரிந்தாள்.. ஆனாலும் அவன் வாய் சும்மா இருக்குமா ??
“ மதி ப்ளீஸ்… நான்… “
“ போதும் என்று சொன்னேன்… இனி நீங்க ஒரு வார்த்தை பேச கூடாது.. என்ன நினைத்துகொண்டு இருக்கீங்க உங்க மனதில்?? ஹா !!! நீங்க இரு என்று சொன்னால் நான் இருக்கவேண்டும் கண்ணில் பட கூடாது என்று சொன்னா நான் இருக்க கூடாது மறுபடியும் வா என்று கூப்பிட்டால்வந்துவிட வேண்டும் காதலிக்கிறேன் என்று சொன்ன உடனே நானும் காதலிக்க வேண்டும்.. “ என்று சிறிது நேரம் மூச்சு வாங்கியவள் அவனை முறைத்தபடி நின்றாள்…
“ யப்பா !!! நிறுத்திட்டா “ என்று கதிரவன் நினைக்கும் பொழுதே “ நான் என்ன நீங்க சின்ன பிள்ளையில் வைத்து விளையாடிய பொம்மையா ??? நீங்க வேண்டாம் என்றால் தூக்கி எறியவும் வேண்டும் என்றால் தூக்கி கொஞ்சவும், ஏன் இப்படி பண்ணிங்க ??? அன்னிக்கு அவளோ பேசிட்டு இப்ப … இப்ப.. இப்படி… இது …” என்று அதற்கு மேல் பேச முடியாமல் திணறியவள் தன் விரல் கொண்டு அவன் கட்டிய தாலியை அவன் முன் உயர்த்தி காட்டினாள்…
அவள் படும் அவஸ்தையை காண பிடிக்காமல் அவன் தவித்தான்.. “ மதி ப்ளீஸ் டி.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு.. நான் கொஞ்ச நேரம் கழித்து வந்து கூட பேசுகிறேன் “ என்று கூறி முடிக்க வில்லை அவளோ மீண்டும் சாமியாட ஆரம்பித்து விட்டாள்..
“ ஓ !!! ரிலாக்ஸ்.. என்ன திமிர் உங்களுக்கு.. நீங்க செய்த வேலைக்கு நான் என்னை ரிலாக்ஸ் செய்யணுமோ?? இப்படி எல்லாம் எப்படி உங்களால் கூசாமல் பேச முடிகிறது“
அவன் எதுவோ கூற வந்தான் போல.. இவளோ “ போதும் வாயே திறக்க கூடாது “ என்று கூறி மீண்டும் தாளிக்க ஆரம்பித்தாள்..
“ அன்று நீங்க பேசின வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா ??? இல்லை இப்படி நீங்க பண்ணி இருக்கீங்களே ஒரு வீர தீர காரியம் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா ?? என்னை இப்படி எல்லாம் துடிக்க வைக்க தான் எல்லாம் பண்ணிங்களா???” என்று துடித்தவள் அவனது மார்பிலேயே சாய்ந்து அழ தொடங்கினாள்…
கோவத்தில் அடிப்பாள் என்று எதிர்பார்த்து வந்தவனோ திகைத்து நின்றன் ஒரு நிமிடம்… தன் மீது அவள் சாய்ந்து அழுவதே அவனுக்கு சற்று தைரியம் தந்தது… அதிர்ச்சியில் வந்த கோவம் அதனால் தான் இப்படி பேசுகிறாள் என்று எண்ணியவன் அவள் சிறிது அழுது தன் மனதில் இருக்கும் சுமை குறையட்டும் என்று எண்ணினான்..
அமைதியாக அவளை அழ விட்டு அவள் முதுகில் ஆதுரமாக தடவி கொடுத்தான்.. அவளது அழுகை நின்ற பாடில்லை..” மதி ப்ளீஸ் டி அழுகாத..” என்று கூறி கொண்டே இருந்தான்..
அவனது தொடுகையில் என்ன உணர்ந்தாளோ தெரியவில்லை அவனது மார்பில் சாய்ந்தபடி “ என்னால் சத்தியமாய் முடியவில்லை அத்தான்… நீங்க ஏன் அன்று அப்படி என்னை கேவலமாய் பேசுனீங்க… உங்கள் பார்வையில் நான் அவ்வளோ மோசமாக தெரிந்தேன். சொல்லுங்க அத்தான். நான் உங்களுக்கு அப்படி என்ன தப்பு பண்ணேன்.. ஏன் அத்தான் அப்படி பேசுனீங்க ??? ”
தான் பேசிய வார்த்தைகள் வசுமதியின் மனதில் எத்தனை ஆழமான காயத்தை உண்டு பண்ணி இருக்கிறது என்பதை கதிரவன் உணர்ந்து கொண்டான்… “ மதி ப்ளீஸ் டி.. அழுகாத.. என்னால நீ இப்படி துடிப்பதை தாங்க முடியவில்லை.. தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடு மதிம்மா… நான் கோவத்தில் முட்டாள் தனமா பேசிவிட்டேன்.. ” என்று கூறியவன் முகத்தில் அப்பட்டமாக வேதனை தெரிந்தது..
நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “ இப்ப எதற்கு இங்கு வந்திங்க?? ” என்றால் மொட்டையாக..
அவளை ஒரு வேற்று பார்வை பார்த்தான். அவளோ அவனை வார்த்தைகளில் குத்தி கிழிக்கும் வேகத்தில் இருந்தாள்.. “ என்ன அப்படி பார்த்தால்??? இந்த வசுமதி உங்களுக்கு மிகவும் வித்தியாசமாய் இருக்காளா ??? இது வரைக்கும் இருந்த மதி உங்கள் காதலை மட்டும் அனுபவித்தவள் ஆனால் இப்போ உங்களால் காயம் பட்டு, வேதனையில் புழுங்கி, கண்ணீர் மட்டுமே விட்டு என்னோட எல்லா சந்தோசத்தையும் தொலைத்து இதோ உங்கள் முன்னாடி துடித்து கொண்டு நிற்கிறேன்.. ” என்று கோவத்தில் பேச ஆரம்பித்தவள் திடீரென்று,
“ ஏன் அத்தான் உங்களுக்கு நிஜமாகவே நான் படுகிற பாடு தெரியவிலையா ?? உங்களையும் மறக்க முடியாம, நீங்க பேசுனதையும் மறக்க முடியாம நான் கிடந்தது தவிக்கிறது உங்களுக்கு நிஜமவே புரியலையா ?? ” என்றாள் அழுகையோடு..
அவளது வேதானை தங்காது அவளை இழுத்து மீண்டும் தன் மார்பில் சாய்த்துகொண்டான் கதிரவன்.. அவளும் ஒன்றிகொண்டாள்..
“ மதி.. எனக்கு சாரி கேட்க கூட அருகதை இல்லை என்று எனக்கு தெரியும் டி.. ஆனால் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை டி.. பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்தேன் டி நீ இங்கு இல்லாத ஒரு ஒரு நிமிசமும். நான் எவ்வளோ முட்டாளா இருந்து இருக்கேன் என்று அப்பத்தான் டி நல்லா புரிந்தது. ஆனால் நீ ஆஸ்திரேலியா போகிறேன் என்று சொன்னதும் எனக்கு வேறு எதுவுமே தோணவில்லை டி உன்னை தவிற.. நிஜமா சொல்கிறேன் டி நான் வேண்டும் என்றே எதுவும் பண்ணவில்லை மதி “ என்று அவனும் வருந்தினான்..
அவனது தவிப்பை அவளும் உணர்ந்தாள்… நிமிர்ந்து அவனது முகத்தையும் கண்களையுமே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள்.. தன் கண்ணீரையும் துடைத்து கொண்டாள்..
“ நீங்க சொல்வது எல்லாம் சரி தான் நான் இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் என்னை கொஞ்சம் நினைத்து பார்த்திங்களா?? எதை ப்ரூப் பண்ணுவதற்காக இப்படி அவசர அவசரமாய் என் கழுத்துல தாலி கட்டுனீங்க ??? எனக்கு கொஞ்சமாது ஸ்பேஸ் குடுத்திங்களா ?? “
என்ன பதில் கூறுவான் இதற்கெல்லாம் கதிரவன்.. அவனிடம் எந்த பதிலும் இல்லை.. அமைதியாக அவளையே பார்த்தபடி நின்று இருந்தான்..
“ என்ன பேச்சு வரவில்லையா ?? ஏன் உங்களுக்கு தான் அடுத்தவங்களை பேச விடாமல் பேச தெரியுமே இப்ப என்ன அமைதியாய் இருக்கீங்க ?? அன்று நானும் உங்கள் முன்னாடி இப்படி தானே இருந்தேன் ஒரு நிமிசம் என்னை ஏதா பேச விட்டிங்களா ?? துடித்தேனே கதறினேனே கேட்டிங்களா “ என்று மீண்டும் துடித்தால்..
அவனுக்கோ அவளது வேதனையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.. அவன் என்ன கூறி ஆறுதல் படுத்துவான்.. ஆறாத காயமே அவனால் தானே வந்தது.. “ மதி “ என்றான் எதுவும் கூற தோன்றாமல்..
“ எனக்கு இங்க இருக்க முடியவில்லை .. என்னால் என் வலியை கூட வெளிய சொல்ல முடியவில்லை அப்படியே அழுகையை அடக்கி அடக்கி தொண்டை எல்லாம் வலிக்கும் தெரியுமா?? எங்கே நான் கொஞ்சம் டல் அடித்தால் கூட எல்லாரும் வருத்தப்படுவாங்க என்று எதையுமே வெளி காட்டமால் இருந்தேன்.. எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று தோணியது அதான் நான் ஆஸ்திரேலியா கிளம்பினேன்.. “ என்று பேசியவள் ஒரு சிறு நேரம் பின் மீண்டும் அவளே தொடர்ந்தாள்..
அவளே பேசி முடிக்கட்டும் என்று அமைதியாக நின்றான்..
“ ஒருவேலை அங்க போயிருந்தால் கூட எனக்கு நிம்மதி இல்லை என்றாலும் ஒரு அமைதியாவது கிடைத்திருக்கும் சந்தோசமாய் இல்லை என்றாலும் ஒரு மன அமைதி இருக்கும். ஒரு தெளிவு கிடைத்திருக்கும். ஒரு வேலை அந்த தெளிவே மறுபடியும் உங்களை பற்றி யோசிக்க வைத்து இருக்கும்.. ஆனால் இப்படி எதுக்குமே இடம் குடுக்கமால் இப்படி என்னை ஏன் உங்கள் இஸ்டத்திற்கு பொரட்டி போடுறிங்க ?? ”
அவள் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்தது… ஒரு சிறு அமைதிக்கு பின் “ மதி.. நான் பண்ணது தப்பு தான்.. ஆனால் ஒரு நிமிஷம் யோசித்து பார் உன்னை விட எனக்கு இரண்டு மடங்கு வேதனை.. உன்னை இப்படி பேசிவிட்டேனேன் என்று எனக்கு குற்ற உணர்வு வேற… ஆனால் அதெல்லாம் நான் இப்ப எதுவும் சொல்ல போவது இல்லை… ”
இவன் என்ன கூற வருகிறான் என்பது போல பார்த்தாள்… அவனது முகத்திலும் கண்களிலும் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டாள்..
“ இனி … இனிமேல்.. நான்.. உன்னை எதற்கும் கட்டாய படுத்த போவது இல்லை மதி.. இனிமேல் எதுனாலும் உன் முடிவு தான்.. நான்.. எனக்கு என்று இனி எதுவும் இல்லை.. நீ என்ன சொன்னாலும் அது தான் எனக்கும் ” என்றான் கதிரவன்.
“ அட அட அட !!! என்ன பேச்சு…. என் முடிவு தான இனி … ஆகா !! அப்படியே மிகவும் சந்தோசமாய் இருக்கு… இப்படி என் கழுத்தில்தாலி கட்டி நிற்க வைத்து பின்ன இனி என் முடிவில் என்ன இருக்கு ??? ” என்றால் விரக்தியாக..
“ இல்லை மதி.. எனக்கு இப்ப நீ பேசினதற்கு பிறகு தான் புரிகிறது. உனக்கும் கொஞ்சம் யோசிக்க அவகாசம் குடுத்து இருக்கவேண்டும் நான்… நான் தான் மிகவும் அவசர பட்டுவிட்டேன்.. இனிமேல் நீ எடுக்கிற முடிவு தான்.. நீ எங்க போகவேண்டுமோ போ.. எப்ப வர தோன்றுகிறதோ வா மதி.. நான் வீட்டில் பேசிக்கிறேன்…” என்றான் குரல் கம்மி போய்..
அவளோ அவனையே பார்த்தபடி நின்றாள்.. “ என்ன மதி, உனக்கு ஆஸ்திரேலியா போக வேண்டும் என்றால் போய்விட்டு வா மதி.. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. உன் மனதிற்கு எப்ப அமைதி கிடைக்கிறதோ அப்ப வா.. எதுனாலும் உன் முடிவு தான் மதி ” என்றான் உறுதியாக..
வசுமதி “ அப்படியா ??? இனிமேல் எதுனாலும் என் முடிவு தானா ?? ” என்றாள் அழுத்தமாக..
ஆமாம் என்பது போல தலையை ஆட்டினான்…
“ ஹ்ம்ம் !!! சரி பேச்சு மாற கூடாது….. ”
“ இல்லை மதி.. நீ சொல் உன் மனதில் என்ன இருக்கோ அதை சொல் மதி “
“ ம்ம் சரி நீங்க போகலாம்…”