Advertisement

உன் நினைவு – 16

 

சாட்டையால் அடித்து

பின் சமாதானம் கூறுகிறாய்

நானும் சிறு பிள்ளை போல்

நீ கூறும் அனைத்திற்கும்

சம்மதம் கூறுகிறேன்

இப்பொழுதாவது உன் மீது

நான் கொண்ட காதலை

அறிவாயா ???

“ என்ன மதி என்னவென்று கேட்கமாட்டாயா? ”

“ ஏன் இவ்வளோ நேரம் நான் கேட்டு தான் நீங்கள் ஜங்கு புங்கு என்று குதித்தீர்களா  ? இல்லை தானே இப்போ மட்டும் என்ன ?? ” சற்று காட்டமாகவே இருந்தது அவளது குரல்..

“ ஆகா கொஞ்சம் கொஞ்சமாய்  மலை ஏறுகிறாள் போல “ என்று நினைத்தவன் ” ஒன்றுமில்லை  டா மதி குட்டி “ என்று பேச்சை ஆரம்பித்தான்..

ஆனால் வசுமதியோ “ அதான் ஒன்றுமில்லையே பின்ன என்ன ?? நான் கீழே  போகிறேன் “ என்று நகர்ந்தாள்..

“ ஏய் ஏய் !! வசுகுட்டி … என் மொசக்குட்டி “ என்று அவளது கைகளை பற்றினான்.. “ கொஞ்ச நேரம் நான் சொல்வதை கேட்டுவிட்டு பின்  கோவப்படு… சரியா ? ”

“ ஆகா உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?? கொஞ்ச நேரத்திற்கு  முன்னாடி என்னை பேசவிடாமல் நீங்கள் மட்டும் என்ன ஆட்டம் ஆடினிர்கள் ? ”

“ ஹேய் !!! அதெல்லாம் வெறும் நடிப்பு டி எப்படி உன் அத்தான் நடிப்பு  சூப்பராய் இருந்ததா? ” என்று கூறி சிரித்தான்.. அவளோதான் இத்தனை நேரம் அவள் கட்டி காத்து வந்த அமைதி எல்லாம்  காற்றில் பறக்க விட்டாள்…

“ அடப்பாவி அத்தான் … இங்கு ஒருத்தி அழுது தவித்து துடித்து கொண்டு இருக்கேன்.. உங்களுக்கு நடிப்பு கேட்கிறதா ? ஏன் யாரும் உங்களுக்கு அவார்ட் எதும் தருவதாய் சொன்னார்களா ? ” என்று கூறி அவனது தோலில் நன்றாக சாத்தினாள்..

 “ மதி… மதி… என் செல்லம் ப்ளீஸ் டி … அவார்ட்காக நடிக்கவில்லை டி.. ஹேய் பொறு நான் சொல்வதை கேட்டு பின்  அடி “ என்று கூறி அவளது கைகளை பிடித்து அவளை தன் அருகில் நிறுத்தினான்…

அவனது கைகளை தட்டி விட்டு “ பின்ன எதற்காக அப்படி என்னை அழ வைத்தீர்கள்? எனக்கு எவ்வளோ கஷ்டமாக இருக்கு தெரியுமா ?? காலையில் இருந்து நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. அது சரி அதெல்லாம் உங்களுக்கு எங்ககே புரியபோகிறது.. ” என்று அவள் சுப்ரபாதம் படிக்க ஆரம்பித்தாள்..

கதிரவன் இரண்டு நிமிடம் பொருத்து பொருத்து பார்த்தான்.. அவள் வாயை மூடுவதாக இல்லை என்று தெரியவும் தன் வழியில் வசுமதியின் வாயை அடைத்தான்..

 “ ச்சி விடுங்க.. பேசுவது எல்லாம் பேசிவிட்டு இப்ப .. இப்படி … இப்படி “ என்று தயங்கினாள்.. அவனோ உல்லாசமாக சிரித்தபடி

“ எப்படி… எப்படி ??முழுதாய் சொல்லி முடி மதி .. ஏன் இப்படி திக்கி தினருகிறாய் ?? “

 “ இதுதான் நீங்க காரணம் சொல்கிற லட்சணமா “ என்று முகம் திருப்பினாள்..

“ சரி சரி வா சொல்கிறேன்.  மதி பொன்மலரும் மல்லிகா அத்தையும் நாம் பேசுவதை பார்த்து கொண்டு  இருந்தார்கள். அதான் உன்னை திட்டுகிற மாதிரியும் கோவமாய் பேசுகிற மாதிரியும் நடித்தேன். ஆனாலும் கொஞ்சம் கோவம் தான் நீ அழுகவும் அதெல்லாம் காணமல் போனது “

“ என்ன சொல்லறீங்க?? ”

“ ஆமாம் மதி உனக்கு இன்னும் புரியவில்லையா?? நான் அன்றே உன்னிடம் என்ன சொன்னேன் அவர்களை பற்றி சொன்னேன் இல்லையா.. நீ தான் அதை எல்லாம் மறந்துவிட்டாய் போல. உன்னையும் என்னையும் பிரிக்க தான் அவர்கள் இவ்வளோ பிளான் போட்டு இருக்கிறார்கள் புரிகிறதா ?? நீ அது தெரியாமல் பொன்மலர் மேல்  இறக்கப்பட்டு அவகிட்ட பேசிட்டு இருக்க.. உனக்கும்  எனக்கும்  நடுவில்  குழப்பம் செய்யதான் பொன்மலர் அப்படி உன்னிடம் பேசி இருக்கா “ என்றான்..

“ ஓ!!!!! ” என்று கூறி தன் பெரிய கண்களை விரித்தாள்..

“ ஆமாம் இப்போ விரி கண்ணை.. கொஞ்சம் விவரமாக இருக்க பார் மதி.. அவள் வந்து பேசினாலாம் அதை கேட்டு இவளும் மனம் குழம்பினாலாம் “ இப்பொழுது நிஜமாகவே அவனது குரலில் ஒரு கசப்பு இருந்தது..

அதை உணர்ந்த மதி அவனது கைகளை பிடித்து “ சாரி அத்தான்.. தப்பு தான். ஆனால்  நான் உங்களை சந்தேகம் எல்லாம் படவில்லை அத்தான் “ என்றவள் பின்

“ இதற்கு என்ன அத்தான் செய்வது.?? அவர்கள் மனசு நோகவும் கூடாது.. ஆனால்  நமக்குள்ளும் பிரச்சனை வரக்கூடாது “ என்று வினவினாள். 

“ இப்படி பட்ட நிலையிலும் அவர்கள் மனம் நோகக்கூடாது என்று எண்ணுகிறாளே.. இவளது மனம் தான் எத்தனை மென்மையானது “ என்று எண்ணியவன் அவளை சகஜமாக்க எண்ணி “ ஹ்ம்ம் இதை எல்லாம் சரி  செய்ய என்னிடம்  இரண்டு ஐடியா இருக்கிறது  மதி “ என்று கூறி சிரித்தான்..

“ என்ன அத்தான் ? ”

“ ஒன்று அவர்கள் வழியிலேயே போய் அவர்களுக்கு பல்பு குடுக்கனும் .. இன்னொன்று “ என்று கூறி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து சிரித்தான்..

ஆனால் அவனை பாராமல் “ ம்ம் அடுத்து என்ன அத்தான் ? ”

“ பேசாமல் வீட்டில் பேசி நாம்  கல்யாணம் பண்ணிக்கலாம் மதி??  எந்த பிரச்சனையும் வராது “ என்று கூறி சிரித்தான்..

“ ச்சு போங்கள் அத்தான் .. இப்பதான் காதலிக்கவே ஆரம்பித்து இருக்கிறோம்  அது சரி அவர்கள் வழிலேயே போயி எப்படி சரி பண்ணுவது ? ”

“ ம்ம் ஒரு இரண்டு நாளைக்கு அவர்கள் இரண்டு பேரு முன்னாடியும் நாம்  சண்டையில் இருப்பது மாதிரியே இருக்கலாம். அவர்களுக்கும்  அப்போ கொஞ்சம் அற்ப சந்தோஷம் இருக்கும்.. ஆனால்  இரண்டு நாள் கழித்து அவர்களுக்கு ஒரு ஷாக் சர்ப்ரைஸ், உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கிறது  “ என்று கூறி சிரித்தான்..

“ ஹா !!! சர்ப்ரைஸா ?? .. என்ன அத்தான் ப்ளீஸ் சொல்லுங்க சொல்லுங்க ” என்று அடம் பிடித்தாள்..

“ முடியவே முடியாது மதி தேவி…. “

அவள் அமைதியாக இருக்கவும் அவளது முகத்தை திருப்பி அவளது கண்களை உற்று நோக்கி “ டேய் மதி குட்டி நான் ஒன்று சொல்லவா ? ” என கேட்டான்..

அவளும் சர்ப்ரைஸ் என்னவென்று கூற போகிறான் போல என்று நினைத்து  “ ம்ம் சொல்லுங்க சொல்லுங்க “ என்று வேகமாக கேட்டாள்..

அவனோ ஆழ்ந்த குரலில் “  மதி எனக்கு அடுத்த  ஜென்மம் இருக்கா இல்லையா என்று  எல்லாம்  தெரியாது, ஆனால் இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்கு பொண்டாட்டி.. நான் உன்னை லவ்வரா நினைக்கவில்லை என் பொண்டாட்டியாய் தான் நினைக்கிறேன்.. அது மட்டுமில்லை கற்பு பெண்களுக்கு மட்டும் கிடையாது அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்று  நினைக்கிறவன் நான். உன்னோடு  இப்படி  நெருக்கமாய் பழகிவிட்டு நான் உன்னை விட்டு வேறு ஒருத்தியை கல்யாணம் செய்வேனா ? ” என்று அவளை பார்த்து கேட்டான்..

“ அத்தான் ஏன் இப்படி பேசுறிங்க ??? நான் உங்களை கொஞ்சம் கூட சந்தேகம் படவில்லை அத்தான்.. ஐம் ரியலி சாரி கதிர்.. “ என்று அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்… அவனது காதலின் ஆழம் அப்படி பட்டது என்று அவனது வார்த்தைகள உணர்த்திவிட்டது  அவளுக்கு..

அவனுக் கண்கள் மூடி நின்று இருந்தான்.. அதை பயன்படுத்திக்கொண்டு “ அத்தான் அப்படியே அந்த சர்ப்ரைஸ் என்னவென்று சொல்லுங்களேன் “ என்று கேட்டாள்…

“ நோ வே மதி.. “ என்று கூறி முடித்துவிட்டான்..

அவளுக்கு தெரியும் இதற்குமேல் இவனிடம் இருந்து எந்த விசயமும் வராது என்று.. “ ஹ்ம்ம் சரி உங்களிடம் இன்னொரு விஷயம் கேட்கவேண்டும்  “ என்று அழகேசனது விசயத்திற்கு வந்தாள்..

“ அட ராமா இன்னும் ஒன்றா ??? என்ன மதி இங்கு பார் என்னை பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா.. நான் காலையில் போனவன் இப்பொழுதுதான்  வருகிறேன்  உன் அருமை அண்ணன் அழகு வேறு இன்று டிமிக்கி குடுத்துவிட்டான்.. இன்னும் நான் குளிக்க கூட இல்லை மதி .. பசிக்க வேறு செய்கிறது,  நீ நன்றாய் உள்ளே தள்ளிவிட்டு  வந்து தெம்பாக பேசிகிட்டு இருக்க “ என்றான் அலுப்பான குரலில்..

அவனது பசி மற்றும் அலுப்பை உணர்ந்தவள் “ சரி சரி அத்தான் நீங்கள் சென்று குளித்து விட்டு வாருங்கள். நான் போய்  சாப்பிட எடுத்து வைக்கிறேன்”

“ சரி டா செல்ல குட்டி நைட் எல்லாம் தூங்கின பிறகு மாடிக்கு வா பேசலாம்.. ஆனால்  இப்போ  கீழே போனதும் சண்டை போட்ட மாதிரி இருக்க வேண்டும் சரியா “  என்று கூறி இறங்கி விட்டான்..

அவளும் சிறிது இடைவெளி விட்டு அமைதியாக முகத்தை கொஞ்சம் வருத்தமாக வைத்துகொண்டு கீழே இறங்கி வந்தாள்.. அவளை கண்டதும் மல்லிகாவும் பொன்மலரும் சந்தோஷ பட்டனர்..

சிறிது நேரத்தில் கதிரவன் அழகேசன் சிவா ராம் என அனைவரும் உண்ண வந்தனர்.. வசுமதி தான் அனைவருக்கும் பரிமாறினாள்.. ஆனால் மறந்தும் ஒரு பார்வை கூட கதிரவனை பார்க்க வில்லை.. அவனும் அப்படி தான் அவளிடம் எதுவும் பேச வில்லை.. அவள் இருப்பதையே அவன் கண்டுகொள்ள வில்லை.. மற்ற அனைவரிடமும் பேசி சிரித்து கொண்டு இருந்தான்..அவ்வளோ ஏன் மலரிடம் கூட ஓரிரு வார்த்தைகள் பேசினான்..

இதையெல்லாம் காண காண மல்லிகாவிற்கு மனதில் மகிழ்ச்சி அலை வீசியது.. அழகு இதை கவனித்து விட்டு

“ என்ன, என்ன ஆச்சு ?? அந்த பொண்ணும் இவனை பார்க்கவில்லை, இவனும் கண்டுக்காமல் இருக்கிறான்.  தேவையே இல்லாமல் மலரிடம்  வேறு பேசுகிறான் “ என்று எண்ணியவாறே எதுவோ தோன்ற கீழே குனிந்து பார்த்தான்.. பார்த்தவன் அதிர்ந்து விட்டான்..

அங்கே கதிரவன் தன் இடக்கரத்தால் வசுமதியின் வலது கையை பிடித்தபடி வெளியே ஒன்றும் தெரியாதவன் போல அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.. “ அடப்பாவி.. வெளியே என்னமா நடிப்பு இருவரும் “ என்று எண்ணியவன் அமைதியாக உண்ண தொடங்கினான்..

அப்பொழுது சிவாவும் ராமும் இன்னும் இரண்டு நாள் கழித்து ஊருக்கு செல்வதாக கூறினார்.. வசுமதி தானும் வருவதாக கூறவும் இருவரும் குழப்பமாக கதிரவனையும் வசுமதியையும் மாற்றி மாற்றி பார்த்தனர்..

ஆனால் கதிரவனோ எதையும் கண்டுகொள்ளாமல் உண்ணுவதே குறியாக இருந்தான்.. வசுமதி ஊருக்கு திரும்பி போவதாக கூறவும் அழகு , சிவா ராம் அனைவருக்கும் மனத்தில் குழப்பம்.. ஆனால் பொன்மலர் மற்றும் மல்லிகாவிற்கோ மனதில் அவர்கள் திட்டம் நிறைவேறி விட்டது என்ற பூரிப்பு..

அந்த பூரிப்புடனே உறங்க சென்றனர்.. அனைவரும் உறங்கிய பின் வசுமதி கதிரவன் இருவரும் அரவம் இல்லாமல் மாடி ஏறி சென்றனர்…

ஆனால் சிவாவோ தன் அக்காவிடம் பேசவென்று காத்திருந்தவன் இதை கண்டு விட்டான்.. அவனுக்கும் இங்கே வந்து இத்தனை நாட்களில் அங்கு இருந்த அனைவரை பற்றியும் தெரிந்து வைத்து இருந்தான்..

“ கூட்டு களவாணிகளா.. கீழே எதுவும் தெரியாத மாதிரி முகத்தை திருப்பிக இருந்துட்டு இப்ப ரகசியமா பேச போறிங்க ??? என்னவோ பண்ணி தொலைங்க” என்று மனதிற்குள் கடிந்துவிட்டு உறங்க சென்றான்..

“ சரி சொல் மதி உனக்கு என்ன கேட்க வேண்டும் என்னிடம்  ?? ” என்று நேராக விசயத்திற்கு வந்தான்  கதிரவன்..

வசுமதியும் அவனுக்கு சளைத்தவள் அல்லவே… “ மீனாட்சி யார் ??? அவளுக்கும்  அழகு அண்ணனுக்கு என்ன சம்பந்தம் ?? ” என்று நேராக கேட்டாள்..

வசுமதி இப்படி ஒரு விஷயத்தை தன் முன் நிறுத்துவாள் என்று கதிரவன் கனவில் கூட நினைக்கவில்லை… ஆச்சரியம்,, அதிர்ச்சி எல்லாமே அவன் முகத்தில் மாறி மாறி தோன்றியது..

“ மீன் …. மீனாட்சி .. அது … அந்த பொண்ணு … இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் “ என்று திக்கி திணறி கேட்டான்..

“ என்ன இப்ப நான் என்ன கேட்டேன் அத்தான்.. இப்படி திக்குறிங்க ?? ஜஸ்ட் மீனாட்சி யார் என்று மட்டும் தானே கேட்டேன் “ என்றாள் கூலாக..

“ முதலில் உனக்கு எப்படி தெரியும் என்று சொல் ? ” என்றான் கதிரவன். வசுமதியும் அன்று கோவிலில் அவளை பார்த்தது.. அழகேசனது முக மாற்றம் அனைத்தையும் கூறினாள்..

“ சரி சொல்லுங்கல் இப்போ  “ என்று அவனை கூர்ந்து பார்த்தாள்..

“ அது அது அந்த பொண்ணு … ”

“ அடடா அதான் யார் அந்த பொண்ணு ?? ”

“ மீனாட்சி அழகுக்கு நிச்சயம் செய்வதாய் இருந்த பொண்ணு ” என்றான் கதிரவன் அழுத்தம் திருத்தமாக..

“ என்ன நிச்சயம் செய்வதாய் இருந்த பொண்ணா ? ”

“ ஆமாம்… “

“ பின்னே ஏன் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை ?? ” என்று கேட்டாள் வசுமதி..              

“ ஹ்ம்ம் நிச்சயமே நடக்கவில்லை மதி .. பின்ன எப்படி கல்யாணம் நடக்கும் ? ” என்று பதில் கேள்வி கேட்டான் கதிரவன்…

 

“ ஏன் அத்தான் … ஏன் நிச்சயம் நின்று போனது ? ” என்றாள் வேகமாக

 

“ அது .. அது எதற்கு  மதி இப்ப உனக்கு தெரிந்து இப்ப நீ என்ன பண்ண போற ? ”

 

“ ம்ச் சொல்லுங்க அத்தான் .. ப்ளீஸ் .. நான் அழகு அண்ணனோட நன்மைக்கு தான் கேட்கிறேன்.  அந்த மீனாட்சியை  பார்த்த உடனே அண்ணன் முகம் எப்படி எப்படி மாறினது தெரியுமா ?? ”

 

“ ஹ்ம்ம் அவன் அப்படித்தான் மதி எதையும் வெளிய சொல்லமாட்டான்..”

 

“ அவர் மனதிற்குள்ளே போட்டு வைத்துக்கொள்ளட்டும்  இல்லை வெளிய போட்டு வைக்கட்டும்.. நீங்கள் என்னிடம்  சொல்ல போரிங்களா இல்லையா அத்தான் “ என்று அவனை பார்த்து முறைத்தாள்..

 

ஒரு சிறிய மௌனத்தின் பின் “ அழகுக்கும் மீனாட்சிக்கும் ஜாதகம் பொருத்தம் எல்லாம் பார்த்து தான் மதி நிச்சயத்திற்கு நாள் எல்லாம் குறித்தார்கள்.  அழகுவின் அப்பா அம்மா குல சாமி கோவிலுக்கு போயி பூஜை பண்ணிட்டு திரும்பி வரும்போது தான் வண்டி ஆக்ஸிடென்ட் ஆகி இரண்டு பேருமே அந்த இடத்திலேயே இறந்து போனார்கள்.. அதனால் தான் அவன் நிச்சயமும் நின்று போனது” என்றான் கவலையான குரலில்..

 

அவனது குரலில் இன்னும் அந்த வேதனை தெரிந்தது.. “ இவனுக்கு இப்படி என்றால்  அழகு அண்ணன் எத்தனை கஷ்டமாக இருக்கும் “ என்று எண்ணினாள்.. அவள் எண்ணியதை கதிரவனிடமும் கூறினாள்..

 

“ ஆமா மதி .. அவன் மிகவும் துடித்து போயிவிட்டான்.. முதல் நாள் தான் நானும் அவனும் போய் புது டிரஸ், மீனாட்சிக்கு குடுக்க என்று கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்தோம்… அவ்வளோ சந்தோசமாக வந்தான்.. ஆனால்  அதெல்லாம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை “  என்று கூறியவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்..

 

 

“ எல்லாமே சரி ஆகிவிடும் அத்தான்..நாம்  எல்லாரும் இருக்கோம்.. அழகு அண்ணனை  இப்படியேவா விட்டுவிட போகிறோம்.. நீங்கல் கவலை படாதீங்க அத்தான்…” என்றாள் ஆறுதலாக..

 

“ நானும் அப்படித்தான் மதி நினைத்தேன் எல்லாமே சரி ஆகிவிடும் என்று.. அவன் அப்பா அம்மாவின்  முதல் மாத திதி முடியவும் அவன் சொந்தகாரங்க எல்லாம் சென்று மீனாட்சி வீட்டில் பேசினார்கள், கெட்டது நடந்த வீட்டில் ஒரு நல்லது நடக்கவேண்டும் அதனால் பேசினது மாதிரி நிச்சயம் பண்ணிக்கலாம் என்று கேட்டார்கள்” 

 

“நல்லது தானே அத்தான் பின்ன அவர்கள் வீட்டில் என்ன சொன்னார்காலம்  ?”     

 

“ மீனாட்சியின் அம்மா, அப்பா அம்மா இல்லாத அனாதைக்கு நாங்கள் பெண்  குடுக்க மாட்டோம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.. அனாதை என்கிற வார்த்தை தான் அவனை  மிகவும் நோகடித்து விட்டது.  அதிலிருந்து அவனை மீட்டு கொண்டு வரத்தான் நான் இங்கு கூட்டி வந்து தங்க வைத்தேன்.  ஆனால் அவன் என்ன நினைத்தானோ மறுபடியும் அவர்கள் வீட்டுக்கே போய்விட்டான்.. இப்ப நீ சொல்லவும் தான் இங்கு வந்திருக்கிறான்  ஹ்ம்ம்    ”

 

“ என்ன அத்தான் சொல்லுறீங்க இப்படி எல்லாம் கூட பேசுவார்களா?? ஆனாலும் இன்னும் அந்த பெண்ணிற்கும் கல்யாணம் ஆன  மாதிரி தெரியவில்லையே அத்தான் ”


“ ஆமா மதி அந்த பெண்ணும் கல்யாணம் செய்யவில்லை.. இவனும் இப்படியே இருக்கிறான் “

 

“ ஏன் அத்தான்.. அண்ணனுக்கு மீனாட்சியை மிகவும் பிடித்து இருந்ததா ? ”

 

“ ஆமா மதி.. மிகவும் .. போட்டோ பார்த்ததுமே பையன் பிளாட்… இரண்டு மூணு முறை  நேரில் பார்த்து வேறு பேசுனாங்க.. அந்த பெண்ணுக்கும் இவனை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால்  என்ன செய்ய விதி இப்படி நடந்து விட்டது  ” என்று பெருமூச்சு விட்டான்..

 

இதை அனைத்தையும் கேட்ட மதி “ நீயெல்லாம் ஒரு பிரின்ட்டா??” என்பது போல பார்த்தாள்..

 

“ ஏய் என்னை ஏன் டி இப்படி பார்க்கிற நான் என்ன செய்தேன் ?? ”

 

“ எதுவுமே செய்யவில்லை அதான்.. நீங்கள் ஏன் அழகு அண்ணனிடம் மேற்கொண்டு இதைபற்றி பேசவில்லை.. அவர்கள் இரண்டு பேருக்குமே பிடித்திருக்கே அடுத்து அடுத்து பேசி இருக்கவேண்டும் அத்தான்.. அப்படி இல்லை என்றால் அந்த பெண் வீட்டிலாவது  சென்று பேசி இருக்கவேண்டும்  “ என்றாள் சற்று கோவமாக..

 

“ ஹே மதி நான் பேசவில்லை என்று நீ பார்த்தாயா ? அழகு கிட்ட நிறைய தடவை  கேட்டு பார்த்துவிட்டேன்.. ஆனால் அவன் பிடிகுடுத்தால் தான.. என்ன கேட்டாலும் ஏதாவது சொல்லி நழுவிவிடுகிறான்.. என்னாலும் அவனிடம் மிகவும் ஹார்சா பேச முடியவில்லை மதி  ” என்றான் சலிப்பாக..

 

இதை கேட்ட வசுமதி மீண்டுன் அவனை முறைத்தாள்..

 

“ ஏன் டி எப்ப பாரு முட்ட கண்ணா வச்சு என்னையவே முறைக்கிற ? ” என்று லேசாக அவளை இடித்தான்..

 

“ பின்ன முறைக்காமலா.. உங்களை கூடத்தான் அத்தை இரண்டு வருடமாய் கேட்டுக்கொண்டு இருக்கார்களாம் கல்யாணம் செய் என்று.  நீங்களும் வேண்டாம் என்று  நல்ல பையனாட்டம் சொல்லிவிட்டு, இப்ப மட்டும் சார் எப்படி தொபுக்கடீர் என்று காதல் கடலில் விழுந்து… கல்யாணத்திற்கும் ரெடி ஆகி நிக்கிறிங்க ?? ”  என்று நக்கலாக கேட்டாள்..

 

இவள் இப்படி தன்னை இந்த விஷயத்தில் இழுத்துவிடுவாள் என்று கதிரவன்  கனவிலும் நினைக்கவில்லை.. வசுமதி ஏதோ அழகுவை பற்றி தெரிந்துகொள்ள கேட்கிறாள் என்றுதான் முதலில் நினைத்தான்.. ஆனால் அவளோ இதை பற்றி தீவிரமாக பேசவும் சற்று அதிர்ந்து போனான்.. மனதிற்குள்..

 

“ அம்மா இப்படி என்னை பற்றி அனைத்தையும் இவளிடம் சொல்லி என் இமேஜ் டேமேஜ் அகிற மாதிரி பண்ணிடிங்களே “ என்று புலம்பினான்..

 

ஆனால் வசுமதியோ “ என்ன அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம் அத்தான் நான் கேட்டதிற்கு பதில் சொல்லுங்க “ என்றாள் கறாராக..

 

“ நான் என்ன டி இதில் பதில் சொல்ல முடியும் இது அழகு வாழ்க்கை .. அவன் தான் இதற்கு ஒரு முடிவு சொல்லவேண்டும்.. அவன் மீனாட்சியை மறக்கின்ற மாதிரியும் தெரியவில்லை.. அந்த பெண்ணும் வேறு யாரையும் கல்யாணம் செய்கின்ற மாதிரியும் தெரியவில்லை” என்றான் வருத்தமாக..

 

இதை எல்லாம் கேட்ட வசுமதி ஒரு நிமிட மௌனத்திற்கு பின் அவனிடம் ஒரு திட்டத்தை கூறினாள்.. அவள் பேச பேச கதிரவனின் கண்கள் விரிந்து முகத்தில் ஒரு ஆச்சர்யம் குடிகொண்டது… முகத்தில் ஒரு தெளிவு,  நம்பிக்கை பிறந்தது..

 

 “ வாவ் மதி .. சூப்பர் டி .. சூப்பர் ஐடியா … கண்டிப்பாக  இது வொர்க் அவுட்  ஆகும்.. இது எப்படி எனக்கு தோனாமல் போனது  ?? ” என்று அவளை பாராட்டி அவனிடமே கேள்வி கேட்டு முடித்தான்..

 

“ அதுக்கெல்லாம் கொஞ்சம் இங்கு ஏதாவது இருக்கவேண்டும்  “ என்று சிரித்தபடி தலையை தொட்டு காட்டினாள்..

 

அவனும் சிரித்தபடி “ ஆமா மதி அது இருந்தால் நான் ஏன் இப்படி  உன்னிடம் மாட்டிகிட்டு முழிக்க போகிறேன் “ என்று அவளை மீண்டும் வம்பிலுதான்.. ஆனால் பின் சற்று கவலை வாய்ந்த குரலில்..

 

“ மதி இதில் நம்ம எப்படியாவது ஜெயிக்க வேண்டும்.. அழகு வாழ்கை சந்தோசமாய்  அமையவேண்டும் டி.. ஆனால் நம்ம செய்ய போகிற இந்த முயற்சியில் எந்த சூழ்நிலையிலும் அழகு மனம் மேலும் கஷ்டபடுகிற மாதிரி ஆகிட கூடாது டி .. அதை அவனால தாங்கிக்கவே முடியாது… “ என்றான்

 

“ அத்தான் நீங்க கவலையே படவேண்டாம் சரிய .. எல்லாமே நல்லது தான் நடக்கும்.. “ என்று அவனுக்கு தைரியம் கூறினாள்..

 

“ ஹ்ம்ம் என்னவோ நீ சொல்கிறாய் … பட் மதி மிகவும் தேங்க்ஸ் டி “

 

“ தேங்க்ஸ் … எனக்கு எதற்கு அத்தான் ??? “ என்றாள் ஒரு குழப்பத்துடன்..

 

“ அப்படி இல்லை மதி அழகு எனக்கு பிரின்ட் தான்.. நீ என் மேல் அக்கறையாய்  அன்பாய் இருக்கிறதெல்லாம் சரி ஆனால்  அவன் வாழ்கை மேல் இவ்வளோ அக்கறை எடுத்து இதெல்லாம் பண்ணறப்போ எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு டி.. அதான் தேங்க்ஸ் சொன்னேன்… நான் மிகவும் கொடுத்துவைத்தவன் மதி அதான் எனக்கு நீ கிடைத்து இருக்க ” என்றான் அவள் தோலில் சாய்ந்தபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..

 

“ ச்சு போங்க அத்தான்… என்ன நீங்க இப்படி பேசுறீங்க ?? உங்களுக்கு வேண்டியவர்கள்  எனக்கு வேண்டாதவர்களா ஆகிடுவாங்களா என்ன ?? ஒரு வேலை ராம்க்கு இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால்  கூட நான் இப்படி தான் நடப்பேன்  “ என்றாள் சிரித்தபடி..

 

இப்படியே இருவரும் சிறிது நேரம் பேசி சிரித்துவிட்டு உறங்க சென்றனர்… மறுநாள் பொழுது விடிந்து எழும் பொழுதே வசுமதி மனதிற்குள் ஆண்டவனை வேண்டிக்கொண்டே எழுந்தாள்.. பின் முதல் வேலையாக அவள் செய்தது நேரே சென்று அவள் மாமா சிவபாண்டியன் அத்தை காமாட்சியை பார்த்ததுதான்..

 

அவள் அவர்களின் அறைக்கு செல்லும் முன்பே கதிரவனுக்கும் கூறிவிட்டு தான் சென்றாள்.. அவனும் அங்கே வந்து விட்டான்.. இருவரும் இணைந்து அதுவும் இந்த காலை வேலையில் தங்களின் அறைக்கே வந்து இருப்பதை பார்த்து மனதில் குழப்பம் வந்தது காமாட்சி மற்றும் சிவபான்டியனுக்கு…

 

காமாட்சி “ என்ன வசும்மா … என்ன கதிரவா ?? இந்த நேரத்தில் என்ன பிரச்சனை ?? ஏன் டா மறுபடியும் வசுமதியை ஏதாவது சொல்லி சண்டை போட்டாயா ? ” என்று கேட்டார்..

 

“ அம்மா உங்களுக்கு தான் என் மேல் என்ன ஒரு நம்பிக்கை ஆகா நினைத்தாலே  சந்தோஷம் பொங்குகிறது “ என்று சற்று கடுப்பாக கூறிவிட்டு “ எல்லாம் இவள்  சொன்னதினால் தான் இங்கு வந்தேன் “ என்று வசுமதியை கை காட்டிவிட்டு இவன் தப்பித்து கொண்டான்..

 

சிவபாண்டியன் “ என்ன வசும்மா என்ன முக்கியமான விஷயமா ?? “

 

அவளும் சிரித்து கொண்டே“ ஆமா மாமா மிகவும் முக்கியமான விஷயம் .. சந்தோஷமான விசயமும் கூட  ” என்றாள். இவர்கள் இருவரின் வரவும் , முகத்தில் இருக்கும் சந்தோசமும் பெரியவர்களுக்கு நிம்மதியை தந்தாலும் மனதில் ஒரு ஆவலையும் தோற்றுவித்தது “ ஒரு வேலை அவர்களது கல்யாணம் சம்பந்தப்பட்டதாக இருக்குமோ ? ” என்று எண்ணினார்..

 

“ சந்தோஷமான விஷயமா என்ன வசுமதி அது??? ” என்று கேட்டபடி அவளது கைகளை பற்றினார் காமாட்சி..

 

“ ஆமா அத்தை கல்யாணம், சந்தோஷமான விசயம்தான ? ” என்று கேள்வியோடு நிறுத்தினாள் சின்னவள்..

 

சிவபாண்டியனோ “ கல்யாணமா ?? என்ன டா வசு அன்று  நான் கேட்டபோது  வேண்டாம் மாமா என்று சொன்ன.. இப்ப என்ன காலங்கார்த்தால வந்துஇருவரும் நிற்கிறீர்கள்  “ என்று கிண்டல் செய்தார்..

 

ஆனால் காமாட்சியோ “ சும்மா இருங்க.. எதோ பிள்ளைகள் சந்தோசமா வந்து இருக்குங்க நீங்க வேறு கிண்டல் செய்துகொண்டு டேய் கதிரவா நீ இப்பதாண்டா உருப்படியா நல்ல வேலை செய்து இருக்க ” என்று தன் கணவரை திட்டி மகனை பாராட்டினார்..

 

ஆனால் சுதாரித்து கொண்ட கதிரவனோ “ ஆகா அம்மா நம்மை பற்றி தெரிந்து  வைத்திருக்காங்க போலையே.. அதான் இப்படி பேசுறாங்க.. இவள் வேறு எதையும் உளறாமல் இருக்கவேண்டுமே  ” என்று எண்ணியவரே

 

“ அம்மா நாங்கள் வந்தது அழகு கல்யாண விஷயம் பற்றி பேச “ என்றான் அழுத்தமாக..

 

“ என்ன அழகேசன் கல்யாணம் பற்றியா?? ” இரண்டு பெரியவர்களுக்கும் மனதில் சற்று ஏமாற்றம் தான் ஆனால் வெளியே காட்டவில்லை.. “ ஆமா மாமா “ என்று கூறி இத்தனை நாள் நடந்தது எல்லாம் வசுமதி கூறினாள்..

 

காமாட்சி “ ஏன் டா கதிரவா இத்தனை நாளா ஏன்டா இதை எங்களிடம்  சொல்லவில்லை.. சொல்லி இருந்தால் இதற்கு அப்பயே ஒரு வழி செய்து  இருக்கலாம் “ பெரியவர்கள் இருவரும் இந்த விஷயத்தில் உதவுவதாக உறுதி அளித்தனர்..

 

வசுமதி கதிரவனை பார்த்து “ எப்படி “ என்பது போல புருவம் தூக்கினாள்.. அவன் எதுவும் கூறாமல் அவாளை பார்த்து கண் சிமிட்டி, முத்தம் குடுப்பது போல் வாயை வைத்தான்..

 

“ எப்படி சேட்டை செய்கிறான் அதுவும் அவனது அப்பா அம்மா இருக்கும் பொழுதே “ என்று கடிந்து கொண்டாள் மனதிற்குள்..

 

 பின் “ எப்படியாவது அழகு அண்ணனை சம்மதம் சொல்ல வைக்க வேண்டும் “ என்று எண்ணிக்கொண்டாள்.. அழகேசன் பிரச்சனை ஒரு புறம் இருக்க கதிரவனுக்கு தன் அம்மா பேசியது எல்லாம் சற்று வித்தியாசமாக தோன்றியது…

 

கதிரவன் ராம் மற்றும் சிவாவுடன் பேசி கொண்டு இருந்தான்.. அன்னபூரணி தன் பேத்தியுடன் கொஞ்சி கொண்டு இருந்தார்.. சிறிது நேரத்தில் வசுமதி “ அம்மாச்சி நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனதே இல்லை “ என்று சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள்..

“ இப்போ எதற்கு சம்பந்தமே இல்லாமல் இதை பேசுகிறாள் “ என்பது போல பார்த்தனர் சிவாவும் ராமும்.

மீனாட்சி என்ற பேரை கேட்டதுமே அழகேசன் திடுக்கென்று வசுமதியை திரும்பி பார்த்தான்.. “ என்ன அண்ணா நான் சொன்னது மதுரை மீனாட்சியை ஹி ஹி “ என்று இளித்து வைத்தாள்..

“ எப்படி தான் இப்படியெல்லாம் பேசி சமாளிக்கிறாலோ.. சரியான குட்டச்சி.. கண்ணை  பார் அதை உருட்டி உருட்டி பேசியே எல்லாரையும் சாய்த்துவிடுகிறாள்“ என்று அவளை ரசித்து கொண்டு இருந்தான் கதிரவன்..

ஆனால் இது புரியாத சிவாவோ கதிரவனிடம் மெல்ல  “ ஏன் அத்தான் இந்த சுமதிக்கு எதுவும் மறை கழண்டு விட்டத ?? ஏன் இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசிட்டு இருக்கா.. ஒரு வேலை காதல் முத்தி போனதா  ?? ” என்று ரகசியமாக கேட்டான்..

இதை கேட்ட கதிரவன் “ இந்த சந்தேகத்தை உன் அக்காவிடமே கேளு டா. நன்றாய்  பதில் குடுப்பாள் “ என்றான் சிரித்தபடி.. ஆனால் இதை எல்லாம் வசுமதி கண்டுகொள்ளவே இல்லை.. திடீரென்று

 “ மீனாட்சி மீனாட்சி அண்ணே காதல் என்னாச்சு.. மீனாட்சி மீனாட்சி … ” என்று பாட ஆரம்பித்தாள்.. இது கதிரவன் கூட எதிர் பார்க்கவில்லை..

அழகேசனோ “ என்ன இது நேற்று இருந்து வசுமதி பேச்சு ஒரு தினுசாகவே இருக்கே.. இந்த கதிரவன் எதுவும் உளறி வைத்துவிட்டானோ ?? “ என்று திரும்பி கதிரவனை பார்த்தான்.. ஆனால் கதிரவனோ மிக முக்கியமாக ராம் சிவா உடன் பேசுவது போல திரும்பிகொண்டான்..

அழகேசனிடம் இருந்து தப்பிக்கவே கதிரவன் வேகமாக தோட்டத்திற்கு சென்று விட்டான்.. வசுமதி வீட்டில் வேலை செய்வது போல பாசாங்கு செய்தபடியே அழகேசனை கவனித்து கொண்டு இருந்தாள்.. அங்கு வந்த சிவபாண்டியன் “ அழகு இங்க வா தம்பி “ என்று அழைத்தார்..

எதுவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டும் தான் சிவபாண்டியன் கதிரவனிடமே பேசுவார்.. அப்படி இருப்பவர் அழகேசனை அழைக்கவும் அவனுக்கு ஆச்சரியம்..

“ என்னங்க அப்பா ? என்ன விஷயம் “ என்றான் மரியாதை கலந்த குரலில்..

“ அழகு நானும் காமாட்சியும் எது செய்தாலும் அது உன் நன்மைக்கே தான் செய்வோம்கிற  நம்பிக்கை இருக்குதானே ? ”

“ இப்பொழுது ஏன் இப்படி சம்பந்தமே இல்லாமல் இப்படி கேட்கிறார் “ என்று எண்ணியபடி “ என்ன பா .. இப்படி கேட்டுடீங்க ?? உங்களை நம்பாமல்  யாரை நம்ப போகிறேன் “ என்றான் குழப்பமாக..

“ ஏன் கேட்கிறேனா இப்போ உனக்கு அப்பா அம்மா ஸ்தானத்தில் நாங்கள் தான் இருக்கோம்.. உனக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் நாங்கள் தான் பொறுப்பு..  எங்களுக்கு நீ வேறு கதிரவன் வேறு இல்லை அழகேசா.. அதான் கேட்டேன் மத்தபடி ஒண்ணுமில்ல..” என்று கூறி வெளியே சென்று விட்டார்..

“ அழகு வான்னு கூப்பிட்டார்.. எதோ கேள்வி கேட்டார்.. இப்ப ஒண்ணுமில்லன்னு அவருபாட்டுக்கு போறார்.. என்னடா நடக்குது இங்க ” என்று புலம்பி தவித்தான்..  

இதை எல்லாம் கவனித்த வசுமதி “ ஆகா !! நம்ம பிளான் வேலை செய்ய ஆரம்பம் ஆகிவிட்டது போலவே.. அழகு அண்ணா உங்களுக்கு இருக்கு…  “ என்று மகிழ்ந்தாள்..

சிவபாண்டியனும் காமாட்சியும் வெளியே செல்வதாக கூறி சென்று விட்டனர்.. அழகேசனுக்கு எதுவும் புரியவில்லை.. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட அவனுக்கு புரியவில்லை.. அவனுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது..

 

 

 

             உன் நினைவு –17

 

எத்தனை தடைகள் வந்தாலும்

தடைத்தெறிவேன் – உன்னை சேர…

 

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

துணிந்து நிற்பேன்- உன்னை சேர…

 

எத்தனை முறை மடிந்தாலும் 

உயிர்த்தெழுவேன் – உன்னை சேர …..  

 

மீனாட்சி அமைதியாக வீட்டு வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாள்.. வெளியே எதுவோ வண்டி வந்து நிற்கும் சத்தமும் பின்னே வீட்டின் உள்ளே ஆட்கள் பேசும் சத்தமும் கேட்டது.. புதிய குரல்கள் கேட்டன..

“ வாங்க வாங்க பெரிய வீட்டு மனுசங்க எல்லாம் வந்து இருக்கீங்க.. மிகவும் சந்தோசம் “ என்று மலர்ந்த முகத்துடன் கேசவன் ( மீனட்சியின் அப்பா ) சிவபாண்டியன் காமாட்சியை வரவேற்றார்..   

“ வசந்தா ( மீனாட்சியின் அம்மா ) வசந்தா .. எங்க இருக்க?? இங்கு வா யார் வந்து இருகாங்க பாரு …” என்று தன் மனைவியை அழைத்தார்..

“ ஏங்க என்னை இப்படி கூப்பிடுறீங்க???  யார் வந்து இருகாங்க “ என்று கேட்டபடி உள்ளே இருந்து வெளியே வந்தார் வசந்தா.. வந்தவர்களை பார்த்த உடன்

“ வாங்க வாங்க .. நீங்க எல்லாம் எங்கள் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்கவில்லை “ என்று வாய் நிறைய பல்லாக வரவேற்றார்..

வசந்தாவிற்கு மனதில் சந்தேகம் “ என்றும் இல்லாத திருநாளாய் பெரிய வீட்டு ஆளுங்க ஏன் இங்க நம்ம வீட்டுக்கு வந்து இருகாங்க.. என்ன காரணமாய் இருக்கும்” என்று யோசித்தபடி தன் கணவருக்கு

“ ஏன் வந்திருக்காங்க “ என்று கண் ஜாடை காட்டினார்.. அவரும் அதை புரிந்து கொண்டு

“ என்றும்  வராதவர்கள் எல்லாம் வந்து இருக்கீங்க .. மிகவும் சந்தோஷம்.. ஆனால்  என்ன விஷயம் என்று  தெரிஞ்சுக்கலாமா ? ” என்றார் பவ்வியமாக..

காமாட்சி மெல்ல புன்னகைத்தபடி “ எல்லாம் நல்ல விஷயமா தான் பேச வந்து  இருக்கோம் “

இதை கேட்டது வசந்தா மனதிற்குள் “ ஆகா .. நல்ல விசயம் என்றால் இப்ப என்ன கல்யாண விஷயம் தான்.. அன்று சிவன் கோவிலில் இவங்க எல்லாம் வந்து இருந்தாங்களே.. ஒரு வேலை மீனாட்சியை பார்த்து பிடித்து போயி இவங்க பையன்னுக்கு பெண் கேட்டு வந்து இருக்காங்களோ ?? ” என்று மிகவும் சந்தோசப்பட்டார்..

உடனே “ அடி மீனாட்சி .. மீனாட்சி இங்கு வா .. எப்ப பார் உள்ளே என்ன செய்கிற  வந்தவங்கள வாங்கன்னு கேட்கமாட்டியா ?? “ என்று தன் மகளை அழைத்தார்.. வெளியே வந்தாள் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.. அவளுக்கு தெரியும் வந்து இருப்பது கதிரவனின் அப்பா அம்மா என்று.. முன் ஒரு நாள் அழகேசனிடம் பேசியபொழுது இவர்களை பற்றி எல்லாம் கூறி இருக்கிறான்..

“ ஏய் ஏன் டி அப்படியே நிற்கிற?? வா இங்க.. அவள் இப்படிதாங்க, மிகவும் கூச்சம் ஜாஸ்தி பேச மாட்டாள் ” என்று தன் மகளை அழைத்தபடி காமாட்சியிடம் கூறினார் வசந்தா..

“ இந்த அம்மா வேறு “ என்று எண்ணியபடியே “ வாங்க “ என்று வந்த இருவரையும் பார்த்து காரம் குவித்தாள்..

சிவபாண்டியன் ஒரு தலை அசைப்புடன் இருந்து விட்டார்.. காமாட்சி தான் “ இங்கே வா மா “ என்று அவளை அருகில் அழைத்தார்.. மீனாட்சி மெல்ல தயங்கியபடி செல்லவும் “ சும்மா சங்கடபடமால்  வா மா “ என்று அன்பாக அழைத்தார்..

வசந்தா மீண்டும் கேசவனை பார்த்து ஜாடை காட்டினார்.. கேசவன் “என்ன விசேஷம் ?? ” என்று பொதுவாக கேட்டார்..

சிவபாண்டியானோ “ விசேஷமா ?? நீங்க சரி என்று சொன்னால் அடுத்த மாதமே கூட விசேஷம் தான் “ என்றார்.  இதை கேட்ட வசந்தாவிற்கு மிகுந்த சந்தோஷம்.. தன் மகள் இத்தனை பெரிய இடத்தில மருமகளாக போகிறாளா ?? நம்பவே முடியவில்லை..

ஆனால் மீனட்சிக்கோ மனதிற்குள் நிலநடுக்கம் வந்தது போல நடுக்கம் ஏற்பட்டது.. “ ஆண்டவா இது என்ன புது சோதனை.. இத்தனை நாளாய் எப்படியோ என் அம்மாவை  கட்டு படுத்திட்டேன்.. ஆனால்  இந்த விசயத்தில் என் பேச்சு எதும் ஏடுபடாது போலவே.. கடவுளே ஏன் எனக்கு மட்டும் இவ்வளோ சோதனை.. மனதார ஒருவரை விரும்பி அவருக்காக காத்து இருக்கிறது தப்பா “ என்று மானசீகமாக ஆண்டவனிடம் முறையிட்டாள்..

கேசவன் “ தப்பா நினைக்காதிங்க எதையும் கொஞ்சம் தெளிவா பேசிட்டால்  நல்லது  “

சிவபாண்டியன் தன் மனைவியை பார்த்து “ நீயே கூறு “ என்பது போல சிரித்தார்.. காமாட்சியும் அதை ஆமோதித்து “ நாங்கள் எங்கள் பையனுக்கு உங்கள் பெண்ணை கேட்டு வந்து இருக்கோம்.. எங்கள் கூட சம்பந்தம் செய்ய உங்களுக்கு சம்மதமா “ என்றார் புன்னகைத்தபடி..

இதை கேட்ட மீனாட்சியின் பெற்றோருக்கு வானில் பறக்காத குறை தான்.. கனவில் கூட கற்பனை செய்ய முடியாத அளவிற்க்கு அல்லவா தன் மகளுக்கு வாழ்கை அமைய போகிறது.. இருவரும் மெய் மறந்து நின்றனர்..

ஆனால் மீனாட்சியோ “ அட கடவுளே.. என்ன இது .. கதிரவன் எனக்கு அண்ணன் மாதிரி அல்லவா.. இந்த அம்மா அப்பா என்னிடம் திரும்பி கூட பார்க்க வில்லையே “ என்று மனதில் குமுறினாள்..

கேசவனோ “ என்ன இப்படி கேட்டுடீங்க ?? உங்கள் கூட சம்பந்தம் வைத்துக்கொள்ள  நாங்க குடுத்து வைக்கணுமே.. நீங்களே வீடு தேடி வந்து பேசும் போது நாங்கள் எப்படி முடியாதுன்னு சொல்லுவோம்.. என் பொண்ணு மிகவும் குடுத்து வைத்தவள் ” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தன் சம்மதத்தை கூறினார்..

வசந்தவோ “ என்ன டி மீனா… என்ன பார்த்துகிட்டு இருக்க ,, முதலில் அவர்கள் காலில்  விழுந்து ஆசீர்வாதம் வாங்கு “ என்று மகளை முடுக்கினார்.. ஆனால் காமாட்சி முந்தி கொண்டு ” அதெல்லாம் எதுவும் வேண்டாம் மீனாட்சிக்கு எங்கள் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும்.. “ என்றார்..

மீனாட்சி இத்தனை நாட்களை சந்தோஷம் இன்றி கழித்தாலும் அவள் மனதின் ஒரு மூலையில் தான் எப்படியாவது அழகேசனுடன் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.. அந்த நம்பிக்கை தான் அவளை இத்தனை நாட்கள் பொறுமையாக இருக்க வைத்தது.. ஆனால் இன்று அவள் கொண்ட நம்பிக்கை , அவளது பொறுமை , அவளது காத்திருப்பு இது எதற்குமே அர்த்தமில்லாமல் போக போகிறதே..

இதை எல்லாம் எண்ண எண்ண மீனாட்சிக்கு ஐயோ என்று வந்தது.. “ இனி என்ன செய்வது.. எல்லாம் என்னால் தானோ ?? அன்றே அவர் சொன்னதை கேட்டு இருந்தால்  இன்று இப்படி நான் தவித்து நிற்கும் நிலைமை வந்து இருக்காதே.. இனி நான் என்ன செய்ய ???  “ என்ற எண்ணமே அவளை அப்படியே சிலையென நிற்க வைத்து விட்டது.. அவளையறியாது அவள் மனம் பின்னோக்கி சென்றது.. 

அன்று அழகேசன் மீனாட்சியின் நிச்சயம் நின்ற மறு நாள்.. அழகு அவளிடம் பேசவேண்டும் என்று கோவிலுக்கு வர சொல்லி இருந்தான்.. அவனை பார்க்கும் பொழுதே மீனாட்சிக்கு மனதில் வருத்தம் , அழுகை ஏக்கம் குடி கொண்டது..ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளாத அழகேசனோ 

 “ இங்க பாரு மீனாட்சி இதற்கு மேல் உங்கள் வீட்டில் உன்னை எனக்கு  கட்டி குடுப்பாங்க என்று நம்பிக்கை இல்லை.. ஆனா என்னால் உன்னை மறந்துவிட்டு இன்னொரு வாழ்கை வேறு ஒருத்தி கூட ஆரம்பிக்க முடியாது.. சோ பேசாமல்  இப்பயே கிளம்பி என்கூட வந்துவிடு “ என்றான்

இதை சற்று எதிர் பாராத மீனாட்சியோ அவனை திகைத்து பார்த்தாள்.. ஆனால் அழகேசனோ மீனாட்சி வீட்டினரின் பேச்சில் தான் அடைந்த மன வருத்தத்தை எல்லாம் மீனாட்சியிடம் கோவமாக இறக்கி கொண்டு இருந்தான்.. 

“ என்ன என்ன அப்படி பார்க்கிற ?? ஒரு வேலை உன் வீட்டில் இருப்பவர்கள் சொன்னது தான் உன் மனதிலும் இருக்கா .. அப்பா அம்மா இல்லாத அனாதை பெரிதாய் எந்த வேலையும் இல்லை.. ஏதோ கொஞ்சம் நிலத்தை வைத்து பிழைப்பு நடத்திட்டு இருக்கான்.. இவன் கூட எப்படி நம்ம வாழ முடியும்ன்னு தோணுகிறதோ “ என்றான் குத்தலாக..

அவனுக்கு புரியவில்லை தன் மனதில் இருக்கும் வேதனை தானே அவள் மனதிலும் இருக்கும்..காதல் கொண்ட மனம் பிரிவை தாங்க முடியாமல் ஏற்றுகொள்ள முடியாமல் தன் நேசத்திற்கு உரியவள் மீதே கோவத்தை வெளிப்படுத்தி மேலும் அவளை காய படுத்தியது…

மீனாட்சியோ “ ஏங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க ?? நான் ஏன் உங்களை இப்படி நினைக்க  போகிறேன். அப்படி நினைத்து இருந்தால் நான் ஏன் இப்ப உங்கள் முன்னாடி  வந்து நிக்க போகிறேன் .. ப்ளீஸ் இனிமே இப்படி பேசாதீங்க.. நான் இருக்க வரைக்கும் நீங்க அனாதை இல்லை புரிகிறதா ?? ” என்றாள் கண்ணீர் மல்க..

“ ஓ!! அப்படியா சந்தோஷம் அப்ப என் கூட வா.. இப்பயே நான் உன்னை கல்யாணம் செய்து கூட்டி போகிறேன்.. நான் கடைசி வரைக்கும் உன்னை நல்லா பார்த்துப்பேன்.. கிளம்பு கிளம்பு “ என்று அவளை யோசிக்க விடாமல் அவசர படுத்தினான்..

ஆனால் மீனாட்சியோ அசராமல் நின்றாள்.. “ என்ன அசையாமல் நிக்கிற இப்ப புரிகிறது நீ இவ்ளோ நேரம் பேசினது எல்லாம் வெறும் வாய் வார்த்தை தான்.. இப்படியே பேசி இவனை அனுப்பிவிடலாம்.. கொஞ்சநாள் ஆனபிறகு வீட்டில் வேறு நல்ல மாப்பிள்ளை பார்ப்பார்கள் அவனை கட்டிகிட்டு நிம்மதியா இருக்கலாம் என்று  நினைச்சிட்டியா ? ” என்றான் கோவமாக..

ஏற்கனவே ரணமாகி இருந்த மீனாட்சியின் மனதை வார்த்தை என்னும் திருகு கத்தியால் மீண்டும் மீண்டும் திருகி திருகி ரணமாக்கினான்.. ஆனால் அவளோ இதை எல்லாம் பொறுக்க முடியாமல்

“ போதும் நிறுத்துங்க.. உங்களுக்கு தான் பேச தெரியுங்கிற மாதிரி பேசாதிங்க.. இங்க பாருங்க என்னால் உங்கள் கூட வீட்டை விட்டு வர முடியாது.. என்ன அப்படி பார்க்குறீங்க?? நிஜமா தான் நான் வரமாட்டேன்.. ஆனால்  அதற்காக நான் வேறு யாரையும் கல்யாணமும் பண்ணமாட்டேன்.. இது சத்தியம்.. “ என்று கோவமாக பேசியவள் பின் தணிந்த குரலில் அவனது கைகளை பற்றியபடி 

“ ப்ளீஸ் அழகு நம்ம கொஞ்ச நாள் பொறுமையா இருக்கலாம். கொஞ்ச நாள் போனதும் நான் எங்கள் வீட்டில் பேசுகிறேன்.. எனக்காக நீங்க பொருத்து போக முடியாதா ?? “ என்றாள் கெஞ்சாத குறையாக..

அழகேசன் இதை கேட்டதும் அவளது கைகளை உதறியபடி “ ச்சி நிறுத்து.. இப்பயே உன்னால உங்கள் வீட்டில் எதும் பேச முடியவில்லை.. இதில் கொஞ்ச நாள் பிறகு நீ பேச போகிறயா ? இதை நான் நம்பனும் ?? இங்க பாரு என் முடிவு இது தான் என் மேல் நம்பிக்கை இருந்தா இப்பவே இங்கயே என் கூட வா .. இதே கோவில்ல வைத்து உன்னை தாலி கட்டி கூட்டி போகிறேன்.. இல்லாட்டி என்னை மறந்துவிடு..” என்றான் உணர்ச்சி அற்ற குரலில்..

மீனாட்சிக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரியவில்லை.. ஒரு சிறு அமைதியின் பின் ” இங்க பாருங்க.. எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கு.  ஆனால்  உங்களுக்கு தான் என் மேலையும் , என் காதல் மேலயும் நம்பிக்கை இல்லை போல அதான் இப்படி அவசரப்படுறீங்க.. ஆனால்  நான் உங்களை மாதிரி அவசரபட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன்.. நம் காதல் உண்மையானதாக இருந்தால் இதோ இந்த சாமியே நம்மை சேர்த்து வைக்கும்.. அது வரைக்கும் நான் உங்களுக்கு காத்து  இருப்பேன்.. இது சத்தியம்.. “ என்றாள் உறுதியாக..

“ நல்லா யோசித்துக்கொள் இது தான் உன் முடிவா ? ” என்றான் கோவமாக அழகேசன்.. “ இது மட்டும் தான் என் முடிவு.. “ என்றாள் மீனாட்சி.. அவள் மனதிலும் இவன் என்னை நம்பவில்லையே என்ற கோவம் இருந்தது..

இதை கேட்டு கோவமாக அழகேசன் “பார்க்கலாம் பார்க்கலாம்.. இந்த சத்தியம் நம்பிக்கை எல்லாம் எத்தனை நாளைக்கு என்று. ஆனால்  ஒன்று  இனிமே நானா உன்னை தேடி வரமாட்டேன்.. எப்படியும் நீ கொஞ்ச நாள்ள வேறு ஒருத்தனை தான் கட்டிக்க போற…. இதில் காதலாம்.. நம்பிக்கையாம்.. போ டி “ என்று  கோவமாக சொல்லிவிட்டு சென்று விட்டான்..

இந்த விஷயம் மட்டும் கதிரவனுக்கு தெரியாது.. அன்றிலிருந்து இன்று வரை அழகேசணும் மீனாட்சியும் எங்கு பார்த்தாலும் மனதில் காதலை வைத்துகொண்டு முகத்தில் கோவத்தை காட்டி கொண்டு இருந்தனர்.. ஆனால் இன்று வரை மீனாட்சி அவள் சத்தியத்தை நிறைவேற்றி வருகிறாள்.. இதனாலயே மீனாட்சிக்கும் அவள் அம்மாவிற்கும் நிறைய சண்டை வந்தபடி இருந்தது.. ஆனால் எதற்கும் அசறாமல் தன் காதல் மேல் கொண்ட நம்பிக்கையால் இறைவனை வேண்டியபடி அமைதியாக பொறுமையாக இருந்தாள் மௌனமாக கண்ணீர் வடித்தபடி..

“ ஏய் ஏய் மீனாட்சி என்ன டி.. கனவு கண்டு நிற்கிற.  போ போ போய் நல்ல சேலை கட்டிக்கிட்டு வா “ என்று வசந்தா அவளை அதட்டவுமே தான் மீனாட்சி நிகழ் காலத்திற்கு வந்தாள்..

தன் அம்மா என்ன சொல்கிறார் என்றே முதலில் அவளுக்கு புரியவில்லை.. அதற்குள் வசந்தா காமாட்சியிடம் சென்று விட்டார்.. “ எனக்கு மிகவும் சந்தோஷம்.. என் பொண்ணு மிகவும் குடுத்து வைத்தவள். அதான் உங்கள் வீட்டுக்கு மருமகளாய் வர போறா.. ” என்றார்

காமாட்சி சற்று சுதாரித்து “ ஆமா.. அழகேசன் மாதிரி ஒரு நல்ல பையன் புருஷனா கிடைக்க குடுத்து தான் வைத்து இருக்கவேண்டும் “ என்று மெல்ல வசந்தா மற்றும் கேசவன் தலையில் இடியை இறக்கினார்.. 

அழகேசன் என்ற பெயரை கேட்டதுமே மீனாட்சிக்கு முதலில் எதுவும் விளங்கவில்லை.. அதன் பின் தான் சுய நினைவிற்கு வந்தவள் போல காமாட்சி என்ன கூறினார் என்று அவள் மனம் புரிந்தது.. ஆனந்தமாக மிக உற்சாகமாக காமாட்சியை திரும்பி பார்த்தாள்..

“ என்ன அழகேசனா ? ” என்று கேசவனும் வசந்தாவும் ஒரு சேர கம்மிபோன குரலில் கேட்டனர்..

“ ஆமா.. அழகேசன் தான்.. அவனுக்கு தான் இப்ப நாங்கள் பெண் கேட்டு வந்து இருக்கோம்  “ என்றார் சிவபாண்டியன்..

வேகமாக வசந்தா “ ஆனால்  நீங்க, நீங்க எதற்கு அந்த பையனுக்கு பெண் கேட்டு வரவேண்டும்?? அவனுக்கு ஏற்கனவே பொண்ணு குடுக்க மாட்டோம் என்று முடிவு செஞ்சுட்டோம்.. இது அந்த பையனுக்கும் தெரியும் “ என்றார் ஏமாற்றம் நிறைந்த குரலில்..

ஆனால் மீனாட்சியோ சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தாள்.. “ இத்தனை நாள் நான் கண்ட கனவு , நான் ஆசை பட்ட வாழ்கை.. இத்தனை நாள் நான் காத்த பொறுமைக்கு பலன்.. என் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு.. “ என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தாள்.. ஆனாலும் ஒரு பயத்தோடு தன் அப்பா அம்மாவை பார்த்தாள்….

சிவபாண்டியன் கேசவனோடு எதுவோ பேசி அவரை சம்மதிக்க வைத்து கொண்டு இருந்தார்.. ஆனால் வசந்தாவிற்கு இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை.. ஊரில் செல்வாக்கு வசதி படைத்த பெரிய வீட்டு மனிதர் இப்படி தன் மகனின் நண்பனுக்காக தன் வீட்டு வாசல் படி ஏறி வந்து பெண் கேட்கிறார் என்றால் எத்தனை உயர்ந்த உள்ளம் இருக்க வேண்டும்.. அந்த பையன் அழகேசணும் இத்தனை பாசத்தை சம்பாதிக்கும் அளவிற்க்கு எத்தனை நல்லவனாக இருக்க வேண்டும் என்று சிறிது நேரம் யோசித்து சம்மதம் கூறினார் கேசவன்..

கேசவன் சம்மதம் கூறவும் வசந்தா “ என்னங்க என்ன சொல்லுறீங்க.. என்னை ஒரு வார்தை கூட கேட்காமல் நீங்களா முடிவு சொல்லிடீங்க ? ” என்றார் அதிர்ச்சியுடன்..

“ ஆமா வசந்தா நம்ம பொண்ணு வழக்கையும் கொஞ்சம் நினைத்து பார்க்கவேண்டும்  பார் அவள் முகத்தில இப்ப எவ்வளோ சந்தோசம் என்று .. அவளும் இத்தனை நாலா பொறுமையா எப்படி இருந்தா.. இவ்வளோ பெரிய ஆளுங்க வீடு தேடி வந்து எவ்வளோ மரியாதையா பொண்ணு கேட்கிறாங்க. அந்த மரியாதையை நாமும் காப்பாற்ற வேண்டாமா ?? இது தன் என் முடிவு..” என்று கூறிவிட்டார்..

ஒரு சிறு அமைதிக்கு பின் வசந்தா தன் மகளின் சந்தோசதிர்காகவும் , தன் கணவரின்  வார்த்தையை மீற முடியாமலும் சரி என்று கூறினார்.. மீனாட்சி தன் அம்மா எப்படியும் ஏதாவது வம்பு செய்வார் என்று எதிர் பார்த்து கவலையுடன் காத்திருந்தாள் ஆனால் அவரும் சரி கூறவும் சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது..

“ நல்ல விஷயம் பேசும் போது அழ கூடாது.. நீ எப்பொழுதும் சந்தோசமா இருக்கணும் “ என்று காமாட்சி கூறி தான் கையோடு கொண்டு வந்து இருந்த வெள்ளி குங்கும சிமிழில் இருந்த குங்குமத்தை அவளது நெற்றியில் பூசி விட்டார்.. மீனாட்சியும் அவரது காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.. “தேங்க்ஸ் மா “ என்றாள் உற்சாகமாக..

காமாட்சி சிரித்தபடி “ தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் மீனா.. அப்படி நீ தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என்றால் எங்கள் வீட்டுக்கு மருமகளா வரப்போகிற என் நாத்துனார் மகள் வசுமதிக்கு தான் நீ நன்றி சொல்லணும்.. அவளும் என் பையனும் தான் எங்களை இங்கு அனுப்பி வைத்தாங்க. இன்னும் அழகேசனுக்கு கூட இது தெரியாது ” என்றார்..

முகமறியாத வசுமதியை இப்பொழுதே பிடித்து விட்டது மீனாட்சிக்கு.. ஆனால் அழகேசனை எண்ணி தான் மனதில் கலக்கம் ஏற்பட்டது..  நல்ல நாள் பார்த்து வந்து பூ வைத்து நிச்சயம் செய்வதாக பேசி முடித்து சென்றனர்.. மீனாட்சிக்கு பரிசாக தன் கையில் அணிந்து இருந்த தாங்க வளையலை கழட்டி அணிவித்தார் காமாட்சி..

அந்த வளையலை தொட்டு பார்த்தவாறே “ என்ன இருந்தாலும் பெரிய மனுசங்க பெரிய மனுசங்க தான் ” என்று சந்தோஷ பட்டார் வசந்தா..

மீனாட்சியோ நடப்பது எல்லாம் கனவா நிஜமா என்று புரிந்து கொள்ள முடியவில்லை.. ஆனாலும் மனதில் அழகேசன் ஒரு வேலை முடியாது என்று கூறி விட்டால் என்ன செய்வது என்று எண்ணி தவித்தாள்..

காரில் செல்லும் பொழுதே வசுமதி மற்றும் கதிரவனுக்கு காமாட்சி நடந்த அனைத்தையும் போனில் தெரிவித்து விட்டார்.. வசுமதி அன்னபூரணியிடம் தெரிவித்துவிட்டாள் . அவள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது..

இதை கண்ட மல்லிகா “ என்ன கொஞ்ச நேரம் முன்னாடி சோகமா இருந்தா. இப்ப போன் வந்ததும் பேசிவிட்டு அந்த கிழவி ரூம்க்கு போனா.. பார்த்தால் இப்படி ஆடி குதிக்கிறாள்.. என்ன நடத்து இருக்கும்?? யார் பேசி இருப்பாங்க ?? ஒரு வேலை கதிரு தம்பியா இருக்குமோ ?? இரண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்களா ??.. கூடாது.. ” என்று மனதில் கருவிக்கொண்டு தன் அடுத்த திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தார்..

நேரே வசுமதியிடம் சென்று “ என்னமா வசுமதி.. ஊருக்கு கிளம்பவும் சந்தோஷம் தாங்களை போல “ என்றார் சிரித்தபடி..

“ ஊருக்கா யார் ஊருக்கு ?? ” என்று யோசனை செய்தபடி “ என்ன சித்தி சொல்லுறீங்க ? ” என்றாள்

“ அட என்ன வசுமதி நாளைக்கு சாயங்காலம் உன் தம்பி அந்த பையன் ராம் எல்லாரும் ஊருக்கு போவதா சொன்னாங்களே. நீயும் போகிறேன் என்று சொன்னியே ?? அதான் ஊருக்கு போகிற சந்தோசமா ?? டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா ?? இல்லை நான் எதாவது உதவி செய்யவா ?? ” என்றார் மிக அக்கறையாக..

 “ ஓ !! என்னை  பேக் பண்ண தான் இத்தனை அக்கறையா “ என்று மனதில் எண்ணி கொண்டு “ ட்ரெஸ் எல்லாம் அவ்வளவா இல்லை சித்தி.. இங்கேயே வைத்துவிட்டு போக போகிறேன்.. அடுத்து வரும்பொழுது போட வேண்டும் தானே.  சும்மா எதற்கு அங்கயும் இங்கயும் தூக்கிட்டு அலையணும் “ என்றாள் கூலாக..

“ என்ன அடுத்தும் இங்கே வருவாளா ?? இந்த முறை இவளை நகட்டவே பேரும் பாடா இருக்கு..” என்று மனதில் லேசாக பயம் வந்தது..

“ என்ன சித்தி எதுவும் பேசாமல் இருக்கீங்க ? ” என்றாள் வசுமதி..

“ ஹா !! ஒண்ணுமில்ல வசுமதி.. ஆமாமா அடுத்து நீ எப்படியும்  இங்கு வரவேண்டும் மலரு, கதிரு தம்பி கல்யாணம் நடக்கும் போது நீதானா இங்கு எல்லாம் முன்ன நின்னு பார்க்கவேண்டும் ..” என்றார் அவளை கடுப்பேத்தும் விதமாக..

ஆனால் வசுமதியோ “ ஏன் சித்தி என் கல்யாணம் நடந்தா கூட நான் இங்க தான் வருவேன்.. ஏன்னா என் கல்யாணம் இங்க தான் நடக்கும்..” என்று மெல்ல கூறியபடி நகர்ந்தாள். அவளையே போவதையே  முறைத்தபடி அமர்ந்து விட்டார் மல்லிகா.. 

இது அல்லாம் ஒரு புறம் இருக்க அங்கு அழகேசனோ வேலை எதிலும் மனம் செல்லாமல் எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தான்… கதிரவன் தான் அவனை அவ்வப்போது உலுக்கி உலுக்கி பேசி கொண்டு இருந்தான்..

மீனாட்சியின் மேல் இருக்கும் காதல் ஒரு புறம்.. தான் அழைத்து அவள் வரவில்லை தன்னை உதாசீனம் செய்துவிட்டாள் என்ற கோவம் மறுபுறமும் சேர்ந்து அழகேசனை மிகவும் வாட்டியது.. வசுமதி இப்பொழுதே யோசிக்க ஆரம்பித்து விட்டாள் அழகேசன் மீனாட்சி நிச்சயத்திற்கு என்ன சேலை கட்டலாம்?? என்ன நகை போடலாம் ?? என்ன பரிசு வாங்கலாம் என்று…

கதிரவனுக்கோ அங்கே வேலை நெட்டி முறித்து… அழகேசன் எதிலும் பிடியில்லாமல் இருந்ததால் , சரி அவனை தொல்லை செய்ய வேண்டம் என்று அவனது வேலைகளையும் தானே இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தான்.. அனைத்து இடங்களுக்கும் தானே ஓடிக்கொண்டு இருந்தான்..

 

அன்னபூரணி, காமாட்சி , சிவபாண்டியன் மூவரும் தங்கள் குடும்ப ஜோசியரிடம் நல்ல நாள் குறிக்க சென்று இருந்தனர்.. ஆனால் இதை எல்லாம் அறியாத அழகேசனோ தன் நினைவுகளில் மூழ்கி இருந்தான்.. அவனுக்கு காலையில் சிவபாண்டியன் பேசியதே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது…

 

“ ஏன் அப்படி நம்மை கூப்பிட்டு கேட்டாரு ??.. ஒரு வேலை நமக்கு தெரியாமல்  எதுவும் எல்லாம் ஒன்று  சேர்ந்து பிளான் பண்றாங்களோ ?? ச்சே ச்சே இருக்காது… அப்படி எதாவது இருந்தால் கண்டிப்பா கதிரு சொல்லி இருப்பான்  ”             

 

 “ ஆனாலும் இந்த வசுமதி பொண்ணு வேறு ஏதோ சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருந்ததே. ஒரு வேலை நமக்கு தான் இப்படி தோன்றுகிறதோ எல்லாம் இந்த மீனாட்சியால் வந்தது.. அன்றே நான் கூப்பிட்டதும் வந்து இருந்தா இந்நேரம் இப்படி நான் குழம்பி தவிக்க வேண்டியது இல்லை.. எல்லாம் அவளால வந்தது ” என்று அனைத்திற்கும் மீனாட்சியை காரணமாக்கி கோவப்பட்டு கொண்டு இருந்தான்..

மீனாட்சிக்கு சந்தோஷம் ஒரு புறமும் இருந்தாலும் மனதின் ஒரு மூலையில்  “ அழகேசன் என்ன நினைத்து கொண்டு இருப்பான்.. அவனுக்கு இதில் முழு சம்மதம் இருக்குமா ??? இல்லை கட்டாயத்தின் பேரில் வந்து திருமணம் செய்து கொள்வானோ ?? ” என்றெல்லாம் பலவாறாக எண்ணங்கள் தறி கேட்டு ஓடியது….

இப்படி அனைவரும் தங்களின் எண்ணங்களில் மூழ்கி இருக்க.. மல்லிகாவும் பொன்மலரும் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.. அவர்களது ஒரே நோக்கம் வசுமதியை எப்படியாவது ஊருக்கு அனுப்பி விடவேண்டும்..

சும்மா இல்லை கதிரவனுக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு மன பிணக்கு  ஏற்பட்டு அவள் ஊருக்கு செல்ல வேண்டும்.. அப்பொழுதுதான் அவள் மீண்டும் இங்கு வரமாட்டாள் என்று எண்ணினார்..

அவர்களின் எண்ணத்திற்கும் விதியும் உதவி செய்தது… மல்லிகாவின் மனதில் தோன்றியது எல்லாம் ஒரே திட்டம் தான்.. எப்படியும் நாளை வசுமதியை தன் தம்பியோடு கிளப்பியாக வேண்டும்.. ஆனால் அவள் போவதற்குள் அவளுக்கும் கதிரவனுக்கும் மறுபடியும் ஏதாவது ஒரு சிறு சண்டை, வாக்குவாதம் வந்தாள் கூட போதும்…

அவள் ஊருக்கு செல்வது உறுதி ஆகிவிடும்.. இவர் எண்ணத்திற்கு ஏற்றவாறு வீட்டிலும் யாரும் இல்லை.. பொன்மலரை அழைத்து எதுவோ கூறினார்.. அவளும் சிரித்தபடி தலை ஆட்டி சென்று விட்டாள்..       

கதிரவனுக்கு வேலையின் காரணமாக உடல் மிகவும் அலுப்பாக இருந்தது.. சற்று நேரம் ரிலாக்ஸ்டாக அமர்ந்து இருந்தான்….

“ காலையில் இருந்து குட்டச்சி கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவில்லை அடுத்து அவளும் போன் பண்ணவில்லை.. நான் பேசலைனா மட்டும் திட்டுவது.. இனி வீட்டுக்கு போனாலும் சரியா பேச முடியாது.. என்ன பண்ணிட்டு இருக்கா என்று  கேட்கலாம் “ என்று எண்ணி அவளுக்கு செல்லில் அழைத்தான்..

போன் செய்து பார்த்தான்.. ரிங் போய் கொண்டே இருந்தது… வசுமதி எடுக்கவே இல்லை..  “ சரி ஏதா வேலையா இருப்பா “ என்று நினைத்தவன் ஒரு ஐந்து  நிமிட இடைவெளி விட்டு மீண்டும் அழைத்தான்.. அப்பொழுதும் எந்த பதிலும் இல்லை..

“ எங்க போய்விட்டாள் ?? என்ன வேலையாய் இருந்தாலும் போன் கைல தான வைத்திருப்பாள்?? “ என்று யோசித்தவாறே “ ஏய் குட்டச்சி எங்க டி போயிட்ட .. போன அட்டென்ட் பண்ணி பேசு டி மதி “ என்று குறுந்தகவல் அனுப்பினான்..

அவளிடம் இருந்து பதில் வரும் என்று போனையே பார்த்த வன்னம் அமர்ந்து இருந்தான் .. ம்ம்ஹும் அவன் போனை நோக்கியது மட்டும் தான் மிச்சம்.. மனதில் லேசாக எரிச்சல் மூண்டது.. “ என்ன பண்ணி தொலைக்கிறா ?? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை அவளுக்கு .. ஒரு போன் கூட எடுத்து பேச முடியாதாமா ?? “ என்று பொருமினான்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின்னே மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்து பார்த்தான்.. அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..

இப்பொழுது மனதில் கதிரவனுக்கு ஏனென்று அறியாத ஒரு பதற்றம் “ என்ன ஆச்சு இவளுக்கு ?? ஒரு வேலை ஏதாவது பிரச்னையா ?? உடம்பு எதுவும் சரி இல்லையோ ?? “ என்று எண்ணியவன் வேகமாக தன் அன்னைக்கு அழைத்தான்..

“ ஹலோ அம்மா .. எங்க இருக்கீங்க ?? ”

…..

“ இல்லை மா வீட்டுக்கு போன் போட்டேன் .. யாரும் எடுக்கவில்லை.. அதான் “

 “ என்ன வசுமதி வீட்டில் தான் இருக்கிறாளா??ம்ம் சரி மா.. இல்லை வேறு ஒண்ணுமில்லை .. சரி மா… இல்லை அவன்கிட்ட எதும் சொல்லவில்லை .. சரி வாங்க  “ என்று தன் அன்னையிடம் பேசி விட்டு போனை வைத்து விட்டான்..

அடுத்து சிவாவிற்கு அழைத்தான்.. ஒருவேலை அவனது அறையில் இருப்பாள் என்று நினைத்து..

“ ஹலோ சிவா .. என்ன டா பண்ற ?? எங்க இருக்க ?? ” என்றான் மிக சாதாரணமாக பேசுவது போல்..

….

 “ ஓ!! சரி சரி வேலையை முடித்துவிட்டு வாங்க.. இல்லை சிவா சும்மாதான் கூப்பிட்டேன்.. ம்ம் வேறு ஒண்ணுமில்லை “

“ அடடா அதெல்லாம் இல்லை டா.. யப்பா சாமி தெரியாம உனக்கு போன் பண்ணிட்டேன் தப்பு தான்.. வைக்கிறேன் “ என்று வைத்துவிட்டான்..  

சிவாவை சமாளித்து போன் வைப்பதுக்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது கதிரவனுக்கு.. “ அக்கா பேசாமல் கொல்கிறாள் தம்பி பேசியே கொல்கிறான் “ என்று நினைத்தான்..

அவன் மனம் பதறியது.. “ வீட்டில் யாருமில்லை.. அவள் மட்டும் தனித்து இருக்கிறாள் .. ஏதாவது ஆகி இருக்குமோ.. ” அவன் எண்ணியது எல்லாம் அவளுக்கு உடம்பு முடியாமல் எதாவது மயங்கி விழுந்து விட்டாளோ ??

“ கடவுளே என் மதிக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது “ என்று மனதில் உருப்போட்டபடி வேகமாக வீட்டை நோக்கி தன் புல்லட்டில் பறந்தான் இருக்கும் வேலையை எல்லாம் அப்படியே விட்டு விட்டு.. 

மனதினுள் அவளுக்கு என்ன ஆயிற்றோ ஏதோ என்ற எண்ணமே அவனை பாடாய் படுத்தியது.. “ ஆண்டவா என் மதிக்கு எதுவும் ஆக கூடாது ” என்று வேண்டியபடியே வீட்டிற்குள் சென்று பதற்றமாக அனைத்து இடங்களிலும் தேடினான்… கிறுக்கு பிடித்தவன் போல வீட்டையே சுற்றி சுற்றி வந்தான்… ஆனால் வசுமதி இருப்பதற்கான ஒரு சிறு அறிகுறி கூட இல்லை 

 

Advertisement