Advertisement

மாயவனோ !! தூயவனோ – 22

மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம் மனதில் வந்து வேதனை அளித்தது..

ஒவ்வொரு நிகழ்வுகளும் அவள் கண் முன்னே வந்து போனது.. திருமணமான முதல் நாள் இருந்து இப்பொழுது வரை. அவள் நடந்து கொண்ட அத்தனை முட்டாள் தனமான விசயங்களும் அவளுக்கு தெரிய வந்தன..

“ இந்த மனுக்கு ஒரு தடவ கூட என் மேல கோவமே வரலியா ?? ச்சே நான் எப்படி எல்லாம் அவனை படுத்தி எடுத்தேன்” என நினைத்தாள்.   

தன் மன நிம்மதிகாகவே அனைத்தையும் மறைத்து இருக்கிறார்கள் என்ற உண்மை அவள் மனதை மேலும் வருத்தி எடுத்தது.. தன் பெற்றோர்கள் தான் மகள் மீது இருக்கும் பாசத்தில் இப்படி செய்தார்கள் என்றால், இந்த மனோ அவள் மீது கொண்ட காதலினால் அல்லவா வம்பை விலைகுடுத்து வாங்கி உள்ளான்..

அடுத்தது என்ன நடக்கும் என்பதை நினைக்கும் பொழுதே மித்ராவின் மனம் அஞ்சியது.. “ கடவுளே.. இந்த மனு இப்படியா இருப்பான்?? பாம்பு புத்துக்குள்ள கை விட்ட கதையால இருக்கு.. இது எல்லாம் அந்த சுந்தர்க்கு மட்டும் தெரிஞ்சா.. ஐயோ !!! மனு “ என்று தன் நெஞ்சை பிடித்துகொண்டாள்..

எத்தனை நேரம் இவ்வாரே அமர்ந்து இருப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. இரண்டு முறை பொன்னி வந்து அழைத்தும் அவளிடம் பதில் இல்லை..

ஏன் மித்ரா இப்படி இருக்கிறாள் என்று அறியாத பொன்னி உடனே மனோவிற்கு அழைத்துவிட்டாள்.. மனோவோ அங்கே மறுநாள் அமைச்சரை பார்க்க போகும் ஏற்பாடுகளில் இருந்தான்..

“ ஹலோ!! என்ன பொன்னிக்கா ??”

………

“ என்னாச்சு?? உடம்பு எதா சரியில்லையா ?? நல்லாதானே இருந்தா காலையில ??”

……

“ ஹ்ம்ம் சாப்பிட்டாளா ??”

…..

“ சரி இருங்க நான் வரேன்.. “ என்று பேசி முடித்தவன்.. “ என்னாச்சு இவளுக்கு.. நல்லா தானே இருந்தா ?? இப்ப ஏன் இப்படி இருக்கா ??” என்று எண்ணிக்கொண்டு குமாரிடம் பேசிவிட்டு தன் இல்லம் நோக்கி பயணித்தான்.  மனோவின் மனதெல்லாம் மித்ராவிற்கு என்ன ஆனது என்ற கேள்வியே நிறைந்து இருந்தது..

அங்கே மித்ரவோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணராதவளாய் அமர்ந்து இருந்தாள்.. மனோவின் கார் சத்தம் கேட்டு தான் சுய உணர்வு அடைந்தாள்.

அரக்க பறக்க சுற்றும் முற்றும் பார்த்து வேகமாக தன் கையில் இருந்த கோப்புகளை எல்லாம் இருந்த இடத்தில வைத்துவிட்டு, அனைத்தையும் முன்பிருந்தது போலவே எல்லாம் மாற்றிவிட்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்துவிட்டாள்..

அறைக்குள் நுழைந்த மனோ, அங்கே மித்ராவை காணாது  “ மித்து… மித்து ….” என்று அழைத்து பார்த்தான்.. அவன் குரலை கேட்டதும் ஓடி சென்று அவனை அணைத்துக்கொள்ள வேண்டும், அவன் கைகளுக்குள் பாதுகாப்பாய் அடைந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றிய எண்ணங்களை பின்னால் தள்ளி   “ நான் இங்க இருக்கேன் மனு” என்று உள்ளே இருந்து பதில் கூறினாள் மித்ரா..

“ என்ன இது இவ குரலே ஒருமாதிரி இருக்கே ??? அழுதாலோ ?? இல்லையே கொஞ்ச நாளாவே நல்லா தானே இருக்கா ??” என்று யோசித்தபடி “ சரி மித்து “ என்று பதில் கூறினான்..

“ இந்த மனு எதுக்கு இப்ப வந்தான்.. ச்சே நிம்மதியா அழகூட விடமாட்டங்க போல.. ஐயோ என் முகம் என்ன இப்படி சிவந்து இருக்கு.. பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவானே..” என்று தனக்கு தானே பேசியவள், அழுகையை அடக்கி  தண்ணீரை முகத்தில் அடித்து தெளித்தாள்..

ஓரளவு தன்னை சமன் செய்துக்கொண்டவள் கதவை மட்டும் திறந்து வெளியே எட்டி பார்த்தால் மனோ இருக்கிறானா என்று. அவனோ அந்த அலமாரியை குடப்பிகொண்டு இருந்தான்..

“ அடகடவுளே ஒருவேளை கண்டு கிண்டு பிடிச்சுட்டானோ.. சந்தேகம் வந்து தான் இந்நேரம் இங்க வந்தானோ.. “ என்று அஞ்சியவள் மெல்ல

“ மனு “ என்று அழைத்தாள். அவளது குரலை கேட்டவன் வேகமாக அந்த அலமாரியை தாழிட்டு திரும்பினான்.. அவன் செய்த செயலே மித்ராவிற்கு மனோ எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று உணர்த்தியது..

மனதிற்குள் “ அதெல்லாம் நான் எப்பையோ எல்லாத்தையும் படிச்சுட்டேன்.. பக்கி இப்பவந்து வேகமா அலமாரியை க்ளோஸ் பண்ணுது “ எண்ணிக்கொண்டு அவனை பார்த்தாள்..

“ மித்து.. என்ன மித்து ?? என்னாச்சு உனக்கு ??? காலையில இருந்து எதுவும் சாப்பிடலையாம், ரூம் வேற ரொம்ப நேரமா அடைச்சே இருந்ததாம், என்ன மித்து என்ன ஆச்சு உனக்கு “

இதை கேட்கும் பொழுது அவனது கண்களில் நிஜமான அக்கறையும் பதற்றமும் தெரிந்தது..  இத்தனை நாள் இவனது அன்பை கண்டுகொள்ளாமல் விட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்தாள் மித்ரா.. ஆனால் இந்த அன்பு நேசம் காதல் எல்லாம் கடைசி வரைக்கும் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்தது. அவனது கேள்விகளுக்கு பதில் கூறாமல் அவனது முகத்தையே பார்த்துகொண்டு இருந்தாள்.

நிமிடத்திற்கு நூறு வார்த்தைகள் பேசுபவள் இன்று அமைதியாய் இருக்கவும் நிஜமாகவே பயந்துவிட்டான் மனோகரன்.. “ என்னாச்சு மித்து ??” என்று அவளது தோள்களை பிடித்து உலுக்கினான்..

“ ஹா!!! ஒன்.. ஒண்ணுமில்ல மனு. நான்.. நான் நல்லா தூங்கிட்டேன்.. அதான்..” என்று கூசாமல் பொய் கூறினாள்..

“ தூக்கமா ??? இந்த நேரத்துலையா ??” என்று சந்தேகமாய் கேட்டான்..

“ ஆம்.. ஆமாம் மனு.. தூங்கிட்டேன்.. ரூம் கிளீன் பண்ணேனா அதான் அலுப்பா இருந்தது..” என்று சமாளித்தாள் ஆனாலும் அவள் குரல் உடைவதை அவளால் தடுக்க முடியவில்லை..

அவள் படும் தவிப்பை கண்டு “ என்ன மித்து ??” என்றான் அன்பாக.. “ ஹ்ம்ம் ஒண்ணுமில்ல “ என்றாள் சிறுபிள்ளை போல மூக்கை உறிஞ்சி..

“ என்னன்னு சொல்லு டி “அடுத்த நிமிடமே அவனிடம் அதட்டல் தொனித்தது.. திகைத்து பார்த்தாள்.. “ அதான் ஒண்ணுமில்லன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன ??” என்று அவளும் எகிறினாள்..

“ ஏய் என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு ஹா ?? என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சு ஓடி வந்தா மேடம் கதை சொல்லுற தூங்குனேன் அப்படி இப்படின்னு.. எனக்கு என்ன தூங்குன முகத்துக்கும் அழுத முகத்துக்கும் வித்தியாசம் கூடவா தெரியாது ???” என்று கூறியபடி அவளது முகத்தை இறுக பற்றினான். 

“ ம்ம்ச்.. மனு.. நான் நிஜமாவே தான் தூங்குனேன்.. நம்பலைனா உக்காரு மறுபடியும் தூங்கி காட்டுறேன். அதுக்காக இப்படி எல்லாம் கேள்வி மேல கேள்வி கேட்காத “  

“ வேண்டாம் மித்து  என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.. கேட்டா கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.. நீ இப்படி இருக்குறது உனக்கு நல்லதுக்கு இல்லை “ என்று உறுமினான்..                                 

“ என்ன பண்ணுவ ?? இல்ல என்னைய என்ன பண்ணுவன்னு கேட்டேன் ??” என்றாள் அவளும் பதிலுக்கு.. மித்ராவிற்கு ஏனோ மனோவை இப்படி சீண்டி பார்ப்பது மிகவும் உற்சாகம் தந்தது.. மனம் மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்ந்தாள்..

“ அட இவன் கூட பதிலுக்கு பதில் சண்டை போட்டு வம்பிழுத்து, இதெல்லாம் நல்லா இருக்கே. இத்தனை நாள் இதை எல்லாம் உணராம போனோமோ.. இல்ல வந்த அன்னிக்கே வேலைய ஆரம்பிச்சு இருப்பேன் “ என்று தனக்கு தானே கூறிக்கொண்டாள்..

அவளது முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தவனுக்கு எதுவும் புரியவில்லை. “ என்ன இது இவளா பேசிக்கிறா ?? கிறுக்கு எதுவும் பிடிச்சுருச்சா ???” என்று சந்தேகமாய் அவள் முகம் நோக்கினான்..

“ என்ன அப்படி பாக்குற.. கவலை படாத மனு எனக்கு கிறுக்கெல்லாம் பிடிக்காது..”

“ அதானே நீ எல்லாம் மத்தவங்களுக்கு தானே பைத்தியம் பிடிக்க வைப்ப “

“ அப்படியா ?? அப்படி யாரை நான் பைத்தியமா சுத்த விட்டேன் ??” என்றாள் கோவமாக..

“ அதான் உன் கண்ணு முன்னால நான் நிக்கிறேனே.. தெரியல.. இல்ல என்னைய பார்த்தா லூசு மாதிரி இருக்கா உனக்கு ?? நான் வரதுக்கு முன்ன வரைக்கும் அழுதுகிட்டு இருந்த.. என்ன ஏதுன்னு கேட்டா தூங்குனேன்னு கதை அளக்குற. என்ன டி என்ன ஆச்சு உனக்கு ??” என்று மீண்டும் கர்ஜித்தான்.

“ஐயோ முதல்ல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கிறானே “ என்று எண்ணிக்கொண்டு அவனையே ஆழ்ந்த பார்வை பார்த்தாள்..

“ நீ மட்டும் என்கிட்டே எல்லாம் சொல்லிட்டு தான் செய்யுறையா ?? இதுவரைக்கும் நீ என்கிட்டே எல்லாம்.. எல்லாத்தையும் சொல்லி இருக்கியா ?? அப்புறம் எப்படி என்னைய மட்டும் கேள்வி கேட்க தோணுது உனக்கு ??” என்றாள் திடமான குரலில்..

அவள் தன்னை பதிலுக்கு இப்படி கேட்பாள் என்று மனோ அறியவில்லை.. அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் நின்றுவிட்டான்.. ஆனால் அவன் மனமோ  “ எல்லாம் இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாளைக்கு தான் மித்து “ என்று கூறியது..

அவனது முகத்தை பார்த்த மித்ரா “ யப்பாடி.. சைலன்ட் ஆகிட்டான்.. இனிமே இப்படிதான் எதாவது எடக்கு மடக்கா கேட்டு எஸ்கேப் ஆகிடனும் “ என்று நினைத்துக்கொண்டே வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்..

இன்று ஏனோ மனோவிற்கு மித்ராவின் பார்வையும், பேச்சும் செய்கையும் வித்தியாசமாக இருந்தது.. எப்பொழுதும் கிருபா வந்துவிட்டால் மித்ராவிற்கும் கிருபாவிற்கும் பஞ்சாயத்து செய்தே மற்ற மூவரும் அசந்துவிடுவர்.. ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தாள்..

திவா கூட “ என்ன அண்ணி உடம்பு சரியில்லையா ??” என்று விசாரித்தான். பதில் கூறாமல் மறுப்பாக தலை மட்டும் இல்லையென்று ஆட்டினால்..

“ ச்சே இங்க இருந்தா நம்மளை யோசிக்க கூட விடமாட்டானுங்க” என்று மொட்டை மாடிக்கு சென்றாள்.. அவளது மனமோ மிகவும் குழப்பமாக இருந்தது.. மனோவின் பார்வையை சமாளிக்கவே அவளுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது..

தனிமையில் அமர்ந்து பல விசயங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து பிரித்து என சிந்தனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்தாலும் இதில் மனோவிற்கு ஆபத்து இருப்பது மட்டும் அவளுக்கு ஊர்ஜிதமானது..

“ கடைசிவரைக்கும் நம்ம இப்படியே யார் கண்ணுக்கும் படாம கூட இருந்திடலாம்.. எனக்கு வெளி உலகமே கூட வேண்டாம்.. இந்த வீடும், இங்க இருக்குறவங்கலுமே போதும்.. ஆனா என்.. மனுக்கு மட்டும் எதுவும் ஆகா கூடாது.. “

“ அப்படி என்ன காதல்?? அதுவும் என்மேல?? நான் இதுவரைக்கும் அவனுக்கு எந்த ஒரு சந்தோசத்தையும் குடுக்கல. படுத்தி தான் எடுத்தேன்.. ஆனா என் மனு என் நிம்மதிக்காக, என் சந்தோசத்துக்காக தானே இவ்வளோ ரிஸ்க் எடுக்கிறான்..”

“ இதுல மட்டும் மனுக்கு ஏதாவது ஆனா, ஐயோ!!! என்னால நினைச்சு பார்க்கவே முடியலையே “ என்று கண்ணீர் வடிதாள்..

“ இந்த மனுவ நான் எப்படி இதுல இருந்து டைவெர்ட் பண்ணுறது… சொன்னாலும் கேட்கமாட்டானே.. மீறி வீம்பா தான் செய்வான்.. ச்சே இந்த அப்பா அம்மாக்கு ஏன் இதை எல்லாம் யோசிக்க தோனல.. அவங்களுக்கு அவங்க பொண்ணு நல்லா இருந்தா போதும். ஆனா மனு??” என்று எவன் மீது இருந்த காதலில் தன் பெற்றோர்களையும் திட்டி தீர்த்தாள்..

“ இதுக்கு நான் ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. இதை விட்ட பெருசா ஏதாவது ஒன்னு நடந்தா மட்டும் தான் மனு வேற யோசிப்பான் “ என்று யோசித்து கொண்டு இருந்தவளை மனோவின் குரலே கலைத்தது..

கீழ் மாடி பால்கனியில் நின்று அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தான்.. மித்ரா மேலே இருப்பது அறியாமல் அவன் எப்பொழுதும் போல நல்ல சத்தத்துடன் பேசினான்..

“ ஓகே டா குமார் நாளைக்கு சாயங்காலம் சரியா நான் எட்டு மணிக்கு அங்க இருப்பேன். நீயும் வந்திடு”

“எட்டு மணிக்கு இவன் எங்க போறான் ??? “ என்று நினைத்தாள் மித்ரா..

“ கண்டிப்பா டா.. உனக்கு ஒரு மெயில் பண்ணிருக்கேன் பாரு. வரும்போது அதை பிரிண்ட் போட்டு கொண்டுவா டா.. மறந்திடாத.. அது எல்லாம் பக்கா எவிடன்ஸ். “

மித்ரா “ எவிடன்சா ??? நமக்கு தெரியாம போலிஸ் வேலை எதுவும் பாக்குரானோ ??”

“ இல்ல குமார். மித்ராக்கு இப்போ எதுவும் சொல்லுறதா இல்லை. எதுவா இருந்தாலும் நாளைக்கு மினிஸ்டரை பார்த்து பேசுனதுக்கு அப்புறம் தான் “

“ அடப்பாவி மனு.. “ என்று நெஞ்சில் கை வைத்துகொண்டாள்..  “ அப்போ அப்போ நாளைக்கு தான் இவன் எல்லாம் செய்ய போறானா?? கடவுளே மனு தான் எல்லாம் பண்ணான்னு தெரிஞ்சா அவனை சும்மா விடமாட்டாங்களே..”

“ இல்லை.. இல்லை மனுவ நான் போக விடக்கூடாது.. வேற ஏதாவது செய்யணும்.. இதை விட முக்கியமா அவனுக்கு வேற ஒரு சூழ்நிலையை உருவாக்கணும் “ என்று யோசித்தவளுக்கு சட்டேன்று மின்னல் வெட்டுவது போல ஒரு யோசனை தோன்றியது.

“ உன்னைய விட உனக்கு நான் தான் முக்கியம்னு சொன்னயே மனு.. அதே போல தானே எனக்கும்.. எனக்கு… என்னைய விட நீ தான்.. நீயே தான் ரொம்ப முக்கியம்.. இதுல எனக்கு என்ன ஆனாலும் சரி.. உன் காதலை நீ எப்படி எனக்கு புரியவச்ச?? அதே போல நானும் என் காதலை உனக்கு உணர்த்த வேணாமா ??”

“ நீ நாளைக்கு கண்டிப்பா மினிஸ்டரை பாக்க போகமாட்ட மனு “ என்று கூறி கண்ணீர் வடித்தாள்.. அவனுக்காக தான் எடுத்த இந்த முடிவு ஒருபுறம் மகிழ்ச்சியை குடுத்தாலும் அதே நேரம் இதயத்தில் தாங்க முடியாத வலியை குடுத்து..

“ இதுதான் காதலா ??? கண்ணீரையும் சிரிப்பையும் ஒரே நேரத்தில் ஒன்றாய் குடுக்கும் போல. எனக்கு மனோ கூட வாழனும்னு அவ்வளோ ஆசையா இருக்கு.. ஆனா என்னோட ஆசையே அவனுக்கு வில்லங்கமா மாறிடும் போலவே. ஆனா நான் இருக்குற வரைக்கும் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் மனு.  “ என்று ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்..    

மித்ரா என்னவோ யோசித்து முடிவு எடுத்து எடுத்துவிட்டாள் தான். ஆனால் அதை எல்லாம் செயல் படுத்தும் வழி அவளுக்கு இன்னும் புலப்படவில்லை.. “ ஆண்டவா எனக்கு ஒரு நல்ல வழிய காட்டு. என் மனுக்கு எதுவும் ஆக கூடாது.. நான் எப்படியாவது இங்க இருந்து வெளிய போகணும் “ என்று இறைவனை துணைக்கு அழைத்தாள்..

“ என்ன செய்யலாம்.. என்ன செய்யலாம் “ என்று யோசித்தவளுக்கு படக்கென்று ஒரு விஷயம் நினைவு வந்தது “ நாளைக்கு தானே ரீனா வீட்டுல விருந்துக்கு கூப்பிட்டாங்க. சூப்பர்.. இதை நம்ம மிஸ் பண்ண கூடாது.. எப்படியாவது மனு மினிஸ்டரை பாக்க போகுறதுக்கு முன்னாடி நான்.. நான்  மனுவை விட்டு,  இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு கிளம்பனும் “ என்று எண்ணினாள்.

மனோகரனை விட்டு பிரிவதை நினைத்தாலே மித்ராவிற்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.. காதலை உணர்ந்து சில நாட்களே ஆனா அவளுக்கே இப்படி இருந்தால், மனோ அவளை காதலித்தே கை பிடித்தவனாயிற்றே.. அவனுக்கு எப்படி இருக்கும்???       

“மனு.. நான் இப்படி பண்ணுறது நிச்சயமா உனக்கு கஷ்டத்தை தான் குடுக்கும். எனக்கு தெரியும்.. ஆனா நீ எப்படி என் நல்லதை மட்டும் யோசிச்சையோ அதுபோல தான் நானும் இப்போ உன் நல்லதை மட்டும் யோசிக்கிறேன். எனக்கு வேற வழி தெரியல மனு. ஐம் ரியலி சாரி…” என்று மானசீகமாக அவனிடம் மன்னிப்பு கேட்டாள்..

அதான் பிறகு தான் என்னென்னே செய்ய வேண்டும் என்பதை முடிவு படுத்திக்கொண்டாள். தன் மீது யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் வந்துவிடாதபடி எழுந்து தன் அறைக்கு சென்றாள் மித்ரா..

சுந்தர் பலத்த யோசனையில் இருந்தான்.. “ ஒரு அழகான கன்னி பொண்ணு வேணும்னு கேட்டு மூணு மாசம் ஆகபோது.. இன்னும் நான் லேட் பண்ணுனா அவ்வளோ தான் வேற எவனாவது இந்த வாய்ப்பை தட்டிக்கிட்டு போயிடுவான். இதுல என் அப்பா வேற நாளைக்கு வறாரு..  என்ன செய்யலாம் ” என்று சிந்தித்தவன்

“ ஏய் நளினா… இங்க வா  “ என்று அதட்டலாக அழைத்தான்.. எந்த பதிலும் இல்லை.. “ எங்க போயி தொலைஞ்சா இவ.. எனக்குன்னு வந்து வாய்ச்சாலே.. ஏய் நளினா.. எங்க டி போய் தொலைஞ்ச” என்று மீண்டும் கத்தினான்..

“ இதோ வந்துட்டேங்க..” என்று பதறி அடித்து ஓடி வந்தாள். “ கூப்பிட்டா உடனே வந்து நிக்க தெரியாதா ?? அங்க என்ன டி கலட்டி கிழுச்ச ??” என்று அரட்டல் போட்டான்..

“ இல்லங்க.. மிக்சி சத்தத்துல நீங்க கூப்பிட்டது கேட்கலை. அதான் “

“ ம்ம் நாளைக்கு அப்பா வராங்க தெரியும்ல.. “ நளினா ஆம் என்பதுபோல தலையை உருட்டினாள்..

“ எப்படி நடதுக்கணும்னு தெரியும்ல ??” அதற்கும் அவள் மண்டையை உருட்டி வைத்தாள்.. “ என்ன டி வாய திறந்து மகாராணி பதில் சொல்ல மாட்டியோ “ என்று அவள் மென்னியை பிடித்து அமுக்கினான்..

“ இல்லைங்க.. இல்ல.. நான்.. நான் நீங்க சொன்னது போலவே நடந்துப்பேன் “ என்று வலியில் துடித்தாள்..

“ ம்ம் அது… “ என்று உருமியவன் நொடியில் தன் முகத்தை கனிவாய் மாற்றி கொண்டான்.. “ நான் கூப்பிட்டதும் நீ வரலையா அதான் நளினா கோவம் வந்திடுச்சு “ என்றான் தன்மையாக.. நளினாவோ எட்டாவது உலக அதிசயத்தை கண்டது போல பார்த்தாள்..

“ என்ன அப்படி பாக்குற.. வீட்டுல வந்தா பொண்டாட்டி நீ தானே கவனிக்கணும். வெளிய மனுசனுக்கு ஆயிரம் டென்சன் இருக்கும். அதான் “ என்று அன்பொழுக பேசினான்..

பேசுவது தன் கணவன் தானா என்றே அவளால் நம்ப முடியவில்லை.. திறந்த வாய் மூடாமல், கண்கள் இமைக்காமல் பார்த்தபடி நின்றாள்.. “ இவருக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா என்ன ??” என்று கேள்வி எழுந்தது..

“ என்ன நளினா அப்படி பாக்குற??? என்னடா இவன் ஆளே மாறிட்டானேன்னு தானே யோசிக்கிற ?? ஹ்ம்ம் ஆமா மா.. மாறித்தான் போயிட்டேன்.. அது ஒண்ணுமில்ல யாருக்காக நம்ம இப்படி ஓடி ஓடி உழைக்கிறோம்னு  ஒரு எண்ணம் வந்துச்சு.. பணம் மட்டும் தான் வாழ்கையா ?? இல்லையே  அதையும் தாண்டி இன்னும் எவ்வளோ இருக்கு.. அதெல்லாம் இந்த முட்டாளுக்கு இப்ப தான் புரிஞ்சது” என்று கூறியபடி அவள் கைகளை பாற்றினான்..

அவளுக்கு சிறிதும் நம்ப முடியவில்லை.. சாத்தான் வேதம் ஓதுவது போல தோன்றியது. ஆனால் ஒருநாள் கூட தன் கணவனின் வாயிலிருந்து இப்படி எல்லாம் வார்த்தைகள் வந்தது இல்லையே.. எப்பொழுது அரட்டல், மிரட்டல் அராஜகம், ஆணவம் இப்படிதானே அவளுக்கு அவளுடையே கணவனை பற்றி தெரியும்.  அதனால் உண்மை எது பொய் எது என்று அந்த நளினாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.. பதில் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள்.                                                               

“ என்ன நளினா இப்படி பாக்குற.. ஒன்னும் இல்லாதவன் கூட தன் பொண்டாட்டி பிள்ளைன்னு சந்தோசமா இருக்கான்.. ஆனா நான் கோடி கோடியா சம்பாதிக்கிறேன்.. வீட்டு சொத்தே ஏக பட்டது இருக்கு.. ஆனா மனசுல நிம்மதி இல்ல. என்னனு யோசிக்கும் போது தான் நம்ம பொண்ணு நியாபகம் வந்தது..”

“ நம்ம பொண்ணு … “  காவேரி பிறந்து பத்தொன்பது ஆண்டுகள் ஆனாலும் இன்றுவரை அவளை  சுந்தர அவள் மகன் என்று கூறியதே இல்லை.. ஆனால் இன்று அவன் வாயில் இருந்து அப்படி ஒரு வார்தைவரவும் நளினா மகிழ்ச்சியில் அதை நம்பவே செய்தாள்.. ஆச்சரியமாக, மகிழ்ச்சியாக தன் கணவனை பார்த்தாள்..

“ என்ன நளினா அப்படி பாக்குற.. அவளுக்கு படிப்பு முடிஞ்சு லீவ்ல தானே  இருக்கா ?? ஆனா பாரு என்னால தான் என் மக, நம்ம மக வீட்டுக்கு கூட வரது இல்ல.. எவ்வளோ பாவி இல்ல நான்.. ச்சே.. “ என்று கூறி வராத கண்ணீரை துடைத்து கொண்டான்.

ஆனால் இதை எல்லாம் கவனிக்கு எண்ணத்தில் நளினா இல்லை.. தன் கணவன் தன் மகளை ஏற்றுக்கொண்டான் என்ற எண்ணமே அவளுக்கு நிறைவை தந்தது.. அவளது முகமே சுந்தருக்கு வேண்டிய பதிலையும் தந்தது..

“ ஆமா நளினா. அதுனா இனிமே நம்ம பொண்ணு அங்க ஹாஸ்டல்ல இருக்க வேண்டாம். இங்க வர சொல்லு.. இன்னிக்கு நைட்டே நான் மாணிக்கத்தை அனுப்புறேன். நாளைக்கு அப்பா வரவும் காவேரிய பாத்தா ரொம்ப சந்தோச பாடுவாரு “ என்றான் உற்சாகமாய்.

நளினாவிற்கு தானும் தன் மகளும் இழந்த அத்தனை மகிழ்ச்சியும் மறுபடியும் கைக்கு கிடைத்தது போல இருந்தது. “ இன்னிகேவா ??” என்றாள் மகிழ்ச்சியில்

“ ஆமா நளினா.. இன்னிக்கேதான். நம்ம வீட்டுல ரெண்டு நாள் இருக்கட்டும். அப்புறம் அவளுக்கு ஒரு வெளிநாடு டூர் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. நல்லா போயி சுத்தி பார்க்கட்டும்.. “ என்று கூறும் பொழுதே நளினாவின் முகம் இருண்டது..

சுந்தர் சுதாரித்து கொண்டான்.. “ என்ன நளினா அப்படி பாக்குற.. என் மக கூட நான் கொஞ்ச நாள் இருக்கணும்னு நினைக்கிறேன்.. நீ தான் எப்பயுமே அவகூட இருந்திருக்க.. ஒருநாள் கூட நான் அவகிட்ட பேசுனது கிடையாது. அதுனால தான் சொல்றேன், அவ வரட்டும் நானும் என் மகளுமா சேர்ந்து வெளிநாட்டுக்கு டூர் போக போறோம்.. நீ எங்க கூட இருந்தா அவ உன்கிட்டே தான் ஒட்டுவா.. என்னைய கண்டுக்கமாட்டா  அதான். அடுத்த நம்ம எல்லாம் குடும்பமா ஒண்ணா போகலாம்  “ என்று பேசி பேசியே தன் மனைவியின் மனதை கரைத்தான் சுந்தர்..

 

போகதே கண்மணியே

என் நெஞ்சம் தாங்காதே

என் மீது நீ கொண்ட

காதலை உணர்த்த உனக்கேதும்

வழிகள் தெரியாதா ??

விலகி போனால் நான்

மருகி போவேனே….

 

                           மாயம் தொடரும். 

 

 

                       

                  

 

 

   

                       

Advertisement