Advertisement

அத்தியாயம் – 11

“பஸ்லையோ, ட்ரைன்லையோ கூட போயிருக்கலாம். இப்படி கார்ல போகலாம்னு சொல்லி டூ போரிங்..”என்றுஉதடு சுளித்தவளை, சிரித்தபடி முறைத்தான் ரவிப்ரதாப்.

“உங்களுக்கு டிரைவ் பண்றப்போ பேசினா பிடிக்காது. எனக்கு பேசாம இருந்தா பிடிக்காது..” என்று ஆரம்பித்தவளை, இப்பொழுது நன்றாகவே முறைத்தான்.

“ம்ம்ச் ரவி.. திஸ் இஸ் டூ பேட்யா.. அவனவன் பொண்டாட்டி கூட கார்ல தனியா  போனா எப்படி என்ஜாய் பண்றான்.. நீங்க இருக்கீங்களே..”

“ம்ம்.. பைவ் ஹவர்ஸ் டிராவல்ல டூ ஹவர்ஸ் பேசலாம். ஆனால் பைவ் ஹவர்சுமே பேசணும்னா எப்படி திவ்ஸ்..” என்று பாவமாய் கேட்டவனை பார்த்து, பதில் பேசாமல் முகத்தை திருப்பி ஜென்னல் பக்கம் தன் பார்வையை பதித்துக்கொண்டாள்.

இது எப்பொழுதுமே இருவரும் எங்காவது செல்லும்போது நடக்கும் சண்டை தான். அவளுக்கு ஓயாது பேசவேண்டும், அவனுக்கோ வாய்க்கும் காதுக்கும் ஓய்வு வேண்டும்.

ஏற்கனவே ப்ரியாவின் திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாய் தான் கிளம்புகிறான், இதில் இவளும் அங்கே வந்து அப்படி இருக்க வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்க, அவ்வளோதான் போதுமடி நீ பேசியது என்று இவன் நிறுத்திவிட்டான்.

அவனது கோவமும் நியாயமானது தான்.ப்ரியா செய்த செயல் யாராலும் மன்னிக்க முடியாதே. ஆனால் ரவியோ அந்த புகைப்படங்களை வேறு எடுத்துக்கொண்டு வருகிறான். திவ்யாவின் மனதில் அது வேறு பயமாய் இருந்தது. நிச்சயம் ரவி வேறுவிதமாய் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டான். ஆனால் அது தேவையில்லாமல் யார் கண்ணிலும் பட்டுவிட்டால்.

அன்று இதையெல்லாம் கிழித்து போட்டு விடும்படி அனைவரும் கூறினார்கள், ஆனால் ரவி தான் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். ரவிப்ரதாப் திவ்யபாரதி திருமணம் முடிந்து அனைவரும் ரவியின் ஊருக்கு கிளம்ப, திவ்யாவின் பெற்றோர்களை இரண்டொரு நாள் கழித்து அங்கே பிரச்சனைகள் எல்லாம் முடிந்தபின் வருமாறு ரவியின் அப்பா சொல்ல, அவர்களுக்கும் அதுவே  சரியென பட்டது.

வசுந்தரா இந்த திருமணத்தை ஏற்றுகொண்டதன் அடையாளமாய், ஓரிரு வார்த்தை திவ்யாவிடம் பேச, அதுவே அவளுக்கு மகிழ்வாய் இருந்தது.அவர் பேச்சில் இருந்தே திவ்யா வேலைக்கு செல்வதில் அவருக்கு உடன்பாடில்லை என்று அவளுக்கு புரிய, ரவியிடமும் இதை பற்றி லேசாய் கூற அவனோ முறைத்தான்.

“ப்ளீஸ் ரவி நான் ஆன்லைன் ஜாப் எதா பார்த்துக்கிறேன். முதல்ல எல்லாம் சரியாகட்டும்…” என்றுதான் அவனோடு ஊருக்கு சென்றாள். ஆனால் அங்கேயோ இவர்கள் போய் வீட்டில் இறங்கும் முன்னரே ப்ரியா, அவளின் வீட்டாட்கள் கூடியிருந்தனர்.

“என்னங்க நீங்க,மகனை கூட்டிட்டு வருவீங்கன்னு நம்புனா இப்படி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரீங்க. அப்போ எங்க பொண்ணு நிலைமை…” என்று ப்ரியாவின் அப்பா எகிறிக்கொண்டு வர, ரவி தான் முன்னே வந்து நின்றான்.

“உங்க பொண்ணு நிலைமை?? சொல்லுங்க உங்க பொண்ணு நிலைமைக்கு என்ன?? பண்ணது அத்தனையும் பிராடுதனம்.நானும் திவ்யாவும் தான் காதலிச்சோம். இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுல உங்க மக எங்கிருந்து வந்தா??” என்று அவன் பேசிய தோரணையிலேயே அனைவரும் திகைக்க, திவ்யாவோ ப்ரியாவை ஒரு புழுவை பார்ப்பதை போல் பார்த்தாள்.

“பொய் எல்லாமே பொய். நீங்க என்னை தான் லவ் பண்ணீங்க. இதோ இவதான் நடுவில புகுந்து உங்க மனசை மாத்திட்டா..” என்று கத்திய ப்ரியாவை ரவி சிறிதும் சட்டை செய்யவில்லை. அவள் முகத்தை காண கூட அவனுக்கு இஷ்டமில்லை.

திவ்யா தான், “ச்சி வாய மூடு. நீ எதுக்குமே, யாருக்குமே உண்மையா இல்ல ப்ரியா. அதுனால தான் இப்போ இப்படி நிக்கிற. உண்மை என்னனு உனக்கும் தெரியும், எல்லாருக்கும் தெரியும். பிரச்சனை பண்ணாம ஒழுங்கா போ.. ” என்று கூற, ப்ரியாவோ தன் வீட்டினரை பார்த்தாள்.அவர்களோ ரவியிடம் வசமாய் சிக்கி நின்றனர்.

“இங்க பாருங்க, உங்க பொண்ணு பண்ணது ஒரு க்ரைம். இப்போ கூட என்னால இதெல்லாம் பொய்னு நிரூபிச்சு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண முடியும். தெரிஞ்சவங்களாச்சேன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன். உங்க மகளுக்கு எதிரா எங்க ஆபிஸ்ல இருந்து ஒரு கூட்டமே வரும். என்ன சொல்றீங்க, இதை இங்கோட முடிப்போமா இல்லை போலீஸ் ஸ்டேசன்ல பேசிப்போமா..” என்று கேட்க,

இதற்கு மேலும் அவர்கள் பிரச்சனை செய்வார்களா என்ன??

ப்ரியாவிற்கு இப்பொழுதும் கூட தான் தோற்று போவது பிடிக்காமல் மீண்டும் பேச ஆரம்பிக்க, “ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேச கூடாது..”என்று அவளது அம்மா அவளை அறைந்து இழுத்துச் சென்றார்.

அந்த புகைப்படங்களை எல்லாம் கொடுத்துவிடும் படி இரண்டு வீட்டு பெரியவர்களும் கூற, ரவியோ முடியவே முடியாது என்று மறுத்துவிட்டான்.

“எப்போ ப்ரியானால எங்க லைப்ல பிராப்ளம் வராதுன்னு தோணுதோ அன்னிக்கு இதை நானே கிழிச்சு போட்டுடுவேன். அதுவரைக்கும் இது என்கிட்டே தான் இருக்கும்..” என்றவன் இன்றளவும் அதை பாதுகாத்து தான் வைத்திருந்தான்.

ப்ரியாவின் திருமணம் நிச்சயம் ஆனதுமே அவர்கள் வீட்டினர் வந்து முறையாய் ரவியின் வீட்டில் மன்னிப்பு கேட்டு தான் சென்றனர். அவர்களது பயமே இந்த புகைப்படங்கள் தான். வசுந்தராவும் திவ்யாவிடம் அதை பற்றி பேச, ரவியும் அதை எடுத்துக்கொண்டே ஊருக்கு கிளம்ப, இவளுக்கோ மனதில் என்ன செய்ய போகிறான் என்று தோன்றியது.

“ரவி அந்த போட்டோஸ்…” என்று  இழுத்தாள்.

“அந்த போட்டோஸ்க்கு என்ன??”

“இல்ல இப்போ எதுக்கு அது. டிஸ்போஸ் பண்ணிடலாமே..”

“ஹ்ம்ம் செய்வோம் செய்வோம்..” என்றவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

ஆனால் ஊருக்கு சென்றதும் முதல் வேலையாய் ப்ரியாவி தந்தையை அழைத்து அவர் கண் முன்னே அதை எல்லாம் சுக்குநூறாய் கிழித்து ஏரித்துவிட்டான்.

“ரொம்ப நன்றி தம்பி..” என்று கரம் குவித்தவரை,

“இதை நான் இவ்வளோ நாள் வச்சிருந்ததே ப்ரியா இனியாவது திருந்தனும்னு தான்..” என்றவன் மேலும் அவரிடம் பேசி அனுப்பி வைத்தான்.

ப்ரியாவின் திருமணத்திற்கும் சென்று வந்தான். ஆனால் மேடைக்கு எல்லாம் செல்லவில்லை. போனான் வந்தான் அவ்வளவு தான். திவ்யா போய் வாழ்த்திவிட்டு வந்தாள். ப்ரியாவின் முகத்தில் தான் இவர்களை பார்த்ததும் ஈ ஆடவில்லை. 

“நீங்க ரொம்பதான் ரவி பண்றீங்க…” என்று திவ்யா கூட திரும்ப சென்னை செல்லும் போது சலித்தாள்.

“அப்படி என்ன டி பண்ணேன்..”

“பின்ன மேரேஜ் வந்தீங்க தானே. ஒருவார்த்தை விஷ் பண்ணிட்டு வந்திருக்கலாம்..”

“நான் விஷ் பண்ணலைனா என்ன ஆகிட போகுது. சில விசயங்களை அப்படியே விட்டிடு திவ்ஸ். போர்ஸ் பண்ணாத..”

“நம்மை பத்தி எல்லாம் என்ன நினைப்பாங்க..”

“முதல்ல இந்த எண்ணத்தை தான் எல்லாருமே மாத்தனும் திவ்ஸ். நம்மை பத்தி எல்லாம் என்ன நினைப்பாங்க??. யார் வேணா என்ன வேணா நினைக்கட்டும். நம்ம சரியா இருக்கணும் அவ்வளோதான். லைப்ல நிச்சயம் நம்மை பத்தி எல்லாருமே நல்லவிதமா திங் பண்ண மாட்டாங்க. யாரோ ஒருத்தர் நல்லவிதமா நினைச்சா இன்னொருத்தர் ரொம்ப மோசமா நினைப்பாங்க. இல்லையா நம்மை பத்தி நினைக்க நேரமில்லாம எல்லாம் அவங்க லைப்ல பிசியா இருப்பாங்க.. சோ நம்ம சரியா இருக்கணும்னு ஒவ்வொருத்தரும் நினைச்சாலே போதும் டா..” என்று கூறியவனை கண்டு விழிகள் விரித்து பார்த்தாள் திவ்யா.

“என்ன டி ??!!!”

“பிராடு. எனக்கு தெரியாம நீங்களும் அந்த புக் படிச்சீங்களா???” என்று அவன்தோளில் இரண்டு தட்டு தட்ட, அவனுக்கோ கண்டுகொண்டாளே என்று இருந்தது.ஆனாலும் சமாளிப்பாய் அவனும் சிரிக்க, திவ்யாவும் அதே புன்னகையை அவனுக்கு பதிலளித்தாள்.   

உண்மை தான் ஊருக்கு போவதற்குள் திவ்யா விழுந்து விழுந்து படித்து முடித்ததை கண்டு அப்படி என்னதான் இருக்கிறது என்று தோன்றவே அவள் உறங்கிய நேரங்களாய் பார்த்து இரண்டே நாளில் ரவியும் அந்த புத்தகத்தை படித்தவனுக்கும் சில விஷயங்கள் தங்கள் வாழ்வோடு ஒன்றிவிட முழுதாய் படிதான்.

அதில் இதே போல தான் திவ்யாவிடம் தெய்வேந்திரணும் கூறுவார்.

“பாப்பா முதல்ல இந்த எண்ணத்தை தான் எல்லாருமே மாத்தனும். நம்மை பத்தி எல்லாம் என்ன நினைப்பாங்க??. யார் வேணா என்ன வேணா நினைக்கட்டும். நம்ம சரியா இருக்கணும் அவ்வளோதான். லைப்ல நிச்சயம் நம்மை பத்தி எல்லாருமே நல்லவிதமா நினைக்க மாட்டாங்க. யாரோ ஒருத்தர் நல்லவிதமா நினைச்சா இன்னொருத்தர் ரொம்ப மோசமா நினைப்பாங்க. இல்லையா நம்மை பத்தி நினைக்க நேரமில்லாம எல்லாம் அவங்க லைப்ல பிசியா இருப்பாங்க.. சோ நம்ம சரியா இருக்கணும்னு ஒவ்வொருத்தரும் நினைச்சாலே போதும் டா..” என்று மகளின் கரங்களை ஆதரவாய் பற்றியவரை ஆச்சரியமாய் பார்த்தாள் திவ்யா.

ரவி வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருப்பதை கண்டு, மகேஸ்வரி கணவரிடம் என்னவென்று விசாரிக்க, அவரும் உண்மையை சொல்லிவிட்டார். வீட்டினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. எல்லாருமே இதில் இனி திவ்யாவின் முடிவு தான் என்று இருக்க, அவளோ முடிவெடுக்க முடியாது திண்டாடி நின்றாள்.

நிச்சயமாய் ரவி மீது காதல் இல்லை. ஆனால் அவனை எவ்வொரு சூழலிலும் விட்டுக்கொடுக்கவோ, விட்டு பிரிந்தோ இருக்க முடியாது. இது அவள் மனம் கூறிய நிதர்சனம்.ரவியை வெறுக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தவித்து தான் போனாள்.

அவனோ வாழ்வையே வெறுத்த சூழலில் நின்றிருந்தான். தர்மலிங்கமோ மகேஸ்வரியோ மகனிடம் எதுவும் கேட்பதாகவும் இல்லை. ஆனால் விசாலமோ முழு மனதாய் ரவி திவ்யா திருமணத்திற்கு ஆதரவு கொடுத்தார். மகளது வாழ்வு அவனோடு என்றால் பாதுகாப்பாய் இருக்கும் என்று அந்த தாயின் மனம் எண்ணியது. வேறொருவன் என்றால் பழையதை கிண்டி கிளறி எதிர்காலத்தில் பிரச்சனை செய்வானோ என்று அஞ்சினார்.

ரவி, அவனை பற்றி குறையென்று சொல்ல ஒன்றுமில்லை. தன் மகளுக்காக தானே இத்தனையும் என்று நினைக்கும் பொழுது, இனி எல்லாமே திவ்யாவின் கையில் என்று தெய்வேந்திரன் கூற,

அவளுக்கோ நெஞ்சில் பாரம் கூடியது.

இப்படி அனைவருமே தன் முகத்தை எப்பொழுதும் கேள்வியாய் பார்ப்பது அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. சொந்த வீட்டிலே மூச்சு முட்டும் நிலை. எல்லாம் இவனால் தான் என்று எண்ணும் பொழுது, அவனது ஏக்க பார்வையும் இவளை கொன்றது.

அப்படி என்ன கண்டான் என்னிடம் என்று நினைக்கும் அதே நேரம், இத்தனை நாள் நான் கண்ணுக்கு தெரியவில்லையோ திடீரென்று தான் புத்தி உரைத்ததோ என்ற எண்ணமும் எழ, அவளுக்கே தன் எண்ணம் போகும் விதம் ஆச்சரியம்.

ஆம் சில நேரங்களில் திவ்யாவின் மனம் அப்படிதான் நினைத்தது. பிறந்ததில் இருந்து பார்க்கிறான் தானே அப்பொழுதெல்லாம் இவனது மனம் மயங்கவில்லையா. இப்பொழுது என்னவாம், இன்னொருவன் பெண் பார்த்து வந்த அன்றுதானா இவனுக்கு மனம் சலனமிட வேண்டும் என்று தோன்றியது.

அப்படியே ரவியை தான் ஏற்றுக்கொண்டாலும், ப்ரியாவிற்கு இது தெரியவரும் பொழுது அவள் என்ன நினைப்பாள், தன்னையும் தவறாய் தானே நினைப்பாள் என்று கலங்கி இருந்த பொழுது தான் தெய்வேந்திரன் மகளிடம் அப்படி கூறியது.

“ஆனா அப்பா… என்ன இருந்தாலும்..”

“எதுவுமே இல்லடா. உன்னை யாரும் கட்டாய படுத்த போறதே இல்ல. எதுவா இருந்தாலும் உன் முடிவு மட்டும் தான்..” என்றவர் யோசிக்கும் படி கூறி சென்றுவிட்டார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரவி வேலையை விட்டது தெரியவும் எப்படியோ ஆகிவிட்டது இவளுக்கு.

“ஏன் ரவி இப்படி பண்ற.. எதுக்கு நீ பிரச்சனை மேல பிரச்சனை பண்ற..?”

“என்னைய வேற என்ன பண்ண சொல்ற திவ்ஸ்.. எனக்குமே நிஜமா தெரியலை. என்ன பண்ணனும்னு.. நீ சொல்லு நான் செய்றேன்..” என்றவன் அவளது விழிகளை ஆராய,

அத்தனை நெருக்கத்தில் அவன் நின்றது, அவள் மனதில் இருந்த குழப்பம், அவனது கண்களின் பாசை, கவலையில் சுருங்கியிருந்த அவன் முகம், அவனது வாசம் என்று அனைத்தும் சேர்ந்து திவ்யாவினுள் எதுவோ உடைந்தது. 

“நா.. நான் என்ன சொல்லட்டும்…??” தெளிவாய் பேசியவளின் வார்த்தை திக்கியது.

“ஏதாவது சொல்லு திவ்ஸ். ஆமா இல்லை ரெண்டுல ஏதாவது ஒன்னு. எதுவுமே தெரியாம எனக்கு பைத்தியம் பிடிக்குது. இப்போ எனக்குனு எதுவுமே இல்லை.. வேலை, சம்பாத்தியம் எதுவுமே இல்லை..

ரவி இப்போ உன் முன்னாடி ஒண்ணுமே இல்லை. ஆனா அவன் கூட திவ்யா இருந்தா எல்லாமே இருந்த மாதிரி. உலகமே அவன் காலடில இருக்கிற மாதிரி..” என்று நின்றிருந்தவளின் காலடியில் மடங்கி சரிந்து அமர்ந்தான்.

இந்த ரவி முற்றிலும் புதிது. அவனுக்கு கெஞ்சி பழக்கமில்லை. ஒன்று தனக்கு வேண்டுமென்றால் அதனை தானே கைக்கு கொண்டு வந்துவிடுவான். காரியங்களை எப்படியேனும் சாதித்து விடுவான்.

ஆனால் இன்று, அனைத்தையும் இழந்து, தன் கண் முன்னே காலடியில் மடங்கி அமர்ந்திருப்பவனை காண அவளுக்கு நிஜமாகவே நெஞ்சம் எதுவோ செய்தது. மூச்சு முட்டியது. இதயத்தை யாரோ இறுக்கி பிடிப்பது போல இருந்தது. அவனது கைகளில் முகம் புதைத்து அழ வேண்டும் போல் இருந்தது. இனியும் இவனை கலங்க செய்ய கூடாது என்ற எண்ணம்.

அவளுமே அவனோடு இணைந்து அமர்ந்தாள். மெல்ல அவனது கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவளை, ஆச்சரியமாய் பார்த்தான்.

“என்ன அப்படி பாக்குற?? நிஜமா சொல்லவா இப்போ கூட உனக்கு இருக்க பீல் எனக்கு இருக்கான்னு சொல்ல தெரியலை. ஆனா கண்டிப்பா எந்தவொரு நிலையிலும் உன்னை என்னால விட்டுக்குடுக்க முடியாது ரவி. உன் நிலைய கீழ இறக்க முடியாது. அது ஏன்னு தெரியலை. அது முடிஞ்சிருந்தா அன்னிக்கே சரிதான் போடான்னு கிளம்பி வந்திருப்பேன். ஆனா முடியலை..”

“ம்ம்..”

“ஒரு முடிவ நம்மனால எடுக்க முடியாட்டி நமக்கு நம்பிக்கையானவங்க கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைக்கணும்னு. இப்போ இந்த நிமிஷம் நான் உன்னை நம்புறேன் ரவி. என்னை விட உன்னை நம்புறேன்.என் வாழ்க்கைக்கும் சேர்த்து முடிவு எடுக்கிற உரிமைய உனக்கு குடுக்குறேன்.. இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லனும்னு தெரியலை ரவி நிஜமா..”

அவளது வார்த்தைகள் புரிய அவனுக்கு நேரம் ஆனது. ஆனால் புரிந்ததும், அவன் உணர்வுகளை சொல்லி மாளாது. இதற்கு என்ன அர்த்தம், இதன் அர்த்தமெல்லாம் ஒன்றே ஒன்றுதானே, திவ்யா இத்தனை நடந்தபின்னும் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்றாள் என்ன அர்த்தம் என்று அவன் எண்ணங்கள் ஓட, அவனது கரங்களோ திவ்யாவை அவன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டது..

“உன் நம்பிக்கையை நான் எப்பவுமே காப்பாத்துவேன் திவ்ஸ்..” என்றவனின் கண்களும் லேசாய் கலங்க, அவன் முகத்தை கண்டவளும் கண்ணீரோடு புன்னகைத்தாள்.

ஒரு உறவிற்கான அடிபடையே நம்பிக்கை தான். அது இருப்பின் நேசமும் காதலும் தானாய் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருவருக்குமே மனதில் இருக்க, புன்னகையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மயக்கம் கொண்டேனடி தோழி… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement