Advertisement

  மாயவனோ !! தூயவனோ !! – 9

 “அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை தான் கேட்பான்னு.. இப்போ பாரு கல்யாணமே பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான் “ என்று கோவத்தில் கத்தி கொண்டு இருந்தாள் ரீனா..

அவள் பேசுவதையே பார்த்து கொண்டு இருந்த நிர்மலா “ கல்யாணம் தான் ஆகி இருக்கு ரீனு.. இன்னும் குடும்பம் நடத்தலை “ என்றார் ஒரு புன்னைகயுடன்..

“ என்ன மா சொல்லுற ??”

“ ஆமா ரீனு.. நான் அந்த மித்ராவையும் மனோவையும் சில விசயங்கள் கவனிச்சேன்.. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கான எந்த அறிகுறியும் தெரியல..”

( ஓ!! புது கல்யாணம் ஆனவங்க கழுத்துல டேக் எதுவும் போட்டு இருப்பாங்களோ ??)

“ ம்ம்ச் அம்மா எனக்கு எதுவுமே புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லு”

“ நல்லா கேட்டுக்கோ ரீனு.. இவங்க கல்யாணமே ஒரு அரேஞ்மென்ட்னு நினைக்கிறேன்.. ரெண்டு பேருக்குள்ளையும் வேற எதோ பிரச்சனை இருக்கு.. அது என்னானு தெரிஞ்சுக்கிட்டா நமக்கு வெற்றி தான்..”

(இது அரேன்ஜிடு மேரேஜ் தானுங்கோ )

“ஆனா அம்மா மனோ அவளையே அப்படி பார்த்தானே??? அந்த கிறுக்கு பயலுங்க எல்லாம் அவ சொல்றபடி தானே கேட்கிறாங்க.. இதுல நம்ம எப்படி உள்ள நுழையுறது.. இத்தனை வருஷம் அப்பா பேரு சொல்லி ஓட்டியாச்சு.. எப்படியாவது நீ என்னைய மனோக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவன்னு நானும் கனவு கண்டுகிட்டு இருந்தேன்.. இப்ப எல்லாம் போச்சு… ” என்று மீண்டும் முராரி பாடினாள் ரீனா..

“ ஏய் ரீனா.. என்ன இது ?? நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல.. முதல்ல நான் சொல்லுறதை கேளு.. கொஞ்சம் இந்த விசயத்துல நம்ம பொறுமையா தான் போகணும்.. நீ முதல் வேலையா நாளைக்கு ஒரு நல்ல பரிசு வாங்கிட்டு மனோ வீட்டுக்கு போ..”

“ என்ன ?? நானா ?? முடியவே முடியாது மா.. அதுவும் கிப்ட் வேற வாங்கிட்டு போக சொல்லற.. அங்க போயி என்னால அவ மூஞ்சிய எல்லாம் பார்க்க முடியாது..”

“ நீயும் மனோகரனும் ஒன்னு சேரணும்னா நான் சொல்லுறதை கேட்டு தான்  ஆகனும்.. அங்க போயி நான் சொல்லுற மாதிரி அவகிட்ட பேசு “ என்று தன் மகளுக்கு சில விஷயங்கள் கூற ஆரம்பித்தார்..

அதை கேட்டதும் ரீனாவின் முகம் சந்தோசத்தை பூசிக்கொண்டது.. “ நெஜமாவா மா சொல்லுற.. ?? “

“நான் வக்கீல் பொண்டாட்டி டி.. இந்த அறிவு கூடையா எனக்கு இருக்காது.. நீ மட்டும் நான் சொன்னபடி செய்.. அப்புறம் அந்த வீட்டு மகாராணி நீ தான் “ என்று கூறி மகளின் முதுகில் தட்டி குடுத்தார்..

இப்படி இவர்கள் திட்டமிட அங்கே சுந்தர் வீட்டில் கண்கள் எல்லாம் சிவந்து  கோவமாக அமர்ந்து இருந்தான். அவன் எதிரில் நளினா பாவமாக நின்று இருந்தாள்..

“ என்ன டி ஒன்னும் தெரியாதது போல நின்னு இருக்க ?? பதில் பேசு.. நான் ஊருக்கு போயிருக்கும் போது மாணிக்கம் இங்க வந்தானா ?? என்னைய அவசரமா பாக்கணும்னு சொன்னானா ?? ” என்று உறுமினான்..

நளினாவோ அஞ்சியபடியே “ ஆமாங்க!!! “ என்று கூறி மிடறு விழுங்கினாள்.

“ ம்ம் அப்புறம் ஏன் மகாராணி என்கிட்டே சொல்லல?? திமிரு ஹா ??? உனக்கு எல்லாம் இவ்வளோ இடம் குடுத்தேனே அந்த திமிரு.. பொட்ட பிள்ளைய பெத்த உடனே போடி அப்பன் வீட்டுக்குன்னு அனுப்பி இருக்கனும்.. எல்லாம் எங்க அப்பன சொல்லணும்.. பேரு தான் பெரிய அமைச்சர்னு.. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை..” என்று கூறியபடி நளினாவிடம் வந்து

“ சொல்லு டி… ஏன் என்கிட்டே சொல்லல?? ” என்று கூறி தோள்களை பற்றி உலுக்கினான்..

“ இல்லைங்க நீங்க தானே எந்த தொல்லையும் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு போனிங்க.. அதான் நான் உங்ககிட்ட சொல்லல.. “ என்றாள் கண்ணீருடன்..

“ ஓ !!! அப்படியே நான் சொல்லுறதை தான் எல்லாம் கேக்குற மாதிரி.. என்ன டி பத்தினி வேஷம் போடுறியா ?? உன்னால.. உன்னால தான் டி.. இப்ப எல்லாம் போச்சு.. என் சந்தோசம், என் கனவு எல்லாமே போச்சு “ என்று முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்..

அடியையும் வாங்கி கொண்டு நளினா “ நீங்க சொன்னதை செஞ்சாலும் அடிக்கிறிங்க. ஏங்க என்னைய பாத்தா உங்களுக்கு மனுசியாவே தெரியலையா ?? ” என்று கதறி அழுதாள்.. ஆனால் இதை பார்த்தா அந்த அரக்கனின் மனம் மாறும்..

“ச்சே. எப்ப பாரு நீலி கண்ணீர்..” என்று கூறிவிட்டு தன் அலைபேசியை எடுத்தபடி வெளியே சென்று விட்டான்.. உடலில் படும் அடிகளை விட மனதில் வாங்கும் அடிகளின் வலி பலமாக இருப்பதால் நளினா இன்னும் அழுது கொண்டு தான் இருந்தாள்..

சுந்தர்” ஏய் மாணிக்கம்!!! என்ன விசாரிச்சு பாத்தியா?? “

…..

“ என்ன ??? இங்க யாருமே இல்லையா ?? என்ன டா புது கதை சொல்லுற ?? அதெப்படி முடியும்… நல்ல தான் பாத்தியா ?? எப்படி டா எப்படி?? நான் அவ்வளோ ஏற்பாடு செஞ்சு வச்சிட்டு போன அப்புறமும் இப்படி கை நழுவி போச்சு??”

….

“ யாரு அவன் ???”

“ முதல்ல அவன் யாருன்னு கண்டு பிடி.. அப்புறம் இன்னொன்னு எந்த காரணம் கொண்டும் விஷயம் எங்க அப்பா காதுக்கு போக கூடாது.. “

….

“ ம்ம்ம் சரி நான் நாளைக்கு வந்து உன்னைய பாக்குறேன்..” என்று கூறி போனை அனைத்தவன் “ யாரா இருக்கும் ?? இந்த சுந்தரையே சுத்தல்ல விடுறவன்.. ஆனா நான் சும்மா விடமாட்டேன் டா..  ஒரு ரெண்டு நாள் நான் இங்க இல்லை.. அதுக்குள்ளே சுண்டக்கா பசங்க எல்லாம் என்னைய கவுத்திடலாம்னு பாக்குறிங்களா ??? விடமாட்டேன் டா.. ஒருத்தனையும் விடமாட்டேன்.. “ என்று கருவி கொண்டான்…

மனோகரன் தன் அலுவலகத்தில் மேஜை மீது இருந்த கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தான்.. ஆனால் அவன் நினைவு எல்லாம் முதல் நாள் மித்ரா அவனிடம் கூறிய வார்த்தைகளையே சுற்றி வந்தது..

ஒருவேளை தன் பெற்றோர்களிடம் பேசினால் மித்ராவின் மனம் தெளிவு பெறுமோ என்று எண்ணினான்.. ” பிடிவாதக்காரி.. இத்தனை நாள் பெத்தவங்க கிட்ட கூட பேசாம இருக்கா ??அப்படி என்ன இவளுக்கு நெஞ்சழுத்தம் ” என்று கடிந்து கொண்டான். “ இவ தானே பேசமாட்டா.. அவங்க பேசுறதை கேட்க வைக்கலாம்ல “ என்று எண்ணியபடி அன்று இரவு வீட்டிற்கு சென்றான்..

( உன்கிட்ட பேசுறாலேன்னு சந்தோஷ படு மனோ )

“ ராங்கி பிடிச்சவ வேகமா போலைன்னா வெளிய வேற நிக்க வச்சிடுவா.. ச்சே இவளுக்கு எல்லாம் பயந்து சாக வேண்டியதா இருக்கு.. இதுல என் தம்பிங்க வேற எப்ப பாரு அவளுக்கே ஜால்ரா அடிக்கிறானுங்க..” என்று மித்ராவை மனதில் உருபோட்ட படி வீடு வந்து சேர்ந்தான்..

( எல்லாம் நீயா தேடிக்கிட்டது)

மனோகரனுக்கு என்னதான் வேகமாக அலுவலகம் விட்டு கிளம்பினாலும்  மித்ரா கூறிய நேரத்திற்குள் வீட்டில் இருக்க முடிவதில்லை.. ஒரு நிமிட தாமதம் என்றால் கூட சிறிது நேரம் அவனை வாசலில் நிறுத்திவிட்டு தான் உள்ளே விடுவாள் மித்ரா..

இன்றும் அப்படிதான் 8.30க்கு பதிலாக ஒரு பத்து நிமிடம் தாமதமாக வந்து விட்டான்..  எதோ கணவன் வரவுக்காக ஆசையாய் காத்திருக்கும் மனைவி  போல வாசலிலேயே நின்று இருந்தால் மித்ரா.. மனோகரனை பார்த்து “ ஹ்ம்ம் பத்து நிமிஷம் லேட் “ என்றாள் ஒரு பார்வையோடு..

“ இவ ஏன் இப்படி அடிகடி பார்க்குறா ?? ஒரு வேல சைட் அடிக்குறாளா ?? “ என்று அதி முக்கியமாய் அவன் மனதில் சந்தேகம் அழுந்தது.. அது எப்படி மித்ராவிற்கு தெரிந்ததோ தெரியவில்லை..

“ ஆமாமா இந்த மூஞ்சிய சைட் அடிச்சிட்டாலும்.. ஏன் லேட்டு ?? கேக்குறேன்ல உள்ளே வரணும்னு நெனப்பு இருக்கா இல்லையா ??” என்று எகிறினால்..

( சூப்பர் )

“ அடியே..!!! என் வீட்டுக்கு வரதுக்கு என்னயவே இத்தனை பாடு பாடுத்துறாலே..” என்று முனங்கியபடி “ கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்றான்..

“அதான் ஏன் லேட்…??? உங்க ஆன்ட்டியையும் ரீனாவையும் சமாதானம் பண்ணிட்டு வாரீங்களோ?? ” 

“ ஏன் இவ சம்பந்தமே இல்லாம அவங்களை பேசுறா?? “ என்று எண்ணியவனுக்கு ரீனா தன் அருகில் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் பொழுது மித்ரா பார்த்த ஒரு பார்வை நினைவு வந்தது..” ஆகா !!! அப்படி போகுதா விஷயம்.. அடியே மித்ரா.. மாட்டுன டி என்கிட்டே.. “ என்று எண்ணி மகிழ்ந்தவன் “ ஹ்ம்ம் நிர்மலா ஆன்ட்டி வரல ரீனா மட்டும் வந்து இருந்தா.. அவளை தான் சமாதானம் செய்ய கொஞ்ச நேரம் ஆகிடுச்சு “ என்றான் அவளது முகத்தையே பார்த்து..

( நீயும் கலக்கு )

இதை கேட்டதும் மித்ராவிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.. ஏன் அந்த கேள்வியை அவனிடம் கேட்டோம் என்றானது.. பதில் எதுவும் கூறாமல் “ம்ம் “ என்று மட்டும் கூறினாள்..

அப்பொழுது அங்கு வந்த கிருபா “ என்ன அண்ணா இன்னைக்கும் லேட்டா?? என்ன அண்ணா நீங்க ?? “ என்று சலித்து கொண்டான்.. மனோ “ சீக்கிரமா தான் கிளம்புறேன் டா.. ஆனா எப்படியோ நேரம் ஆகிடுது.. ஆனா இனிமே கொஞ்சம் நேரம் லேட் ஆகும்னு தான் நினைக்கிறேன் “ என்றான் மித்ராவின் முகம் பார்த்து..

கிருபாவிற்கு என்ன புரிந்ததோ “ என்னவோ பண்ணுங்க.. உங்க ரெண்டு பேர் விளையாட்டுக்கும் நான் வரலை “ என்று கூறி சென்று விட்டான்.. அவன் அந்த பக்கம் சென்றதும் மித்ரா “ஏன் ??” என்று கேள்வி எழுப்பினாள்..

மனோ “ என்ன ஏன் ?? ”

“ இல்ல இனிமே வீட்டுக்கு வர நேரம் ஆகும் சொன்னயே அதான் ஏன்னு கேட்டேன் “

“ ஓ!! ஏன் டா மித்து குட்டி.. என்னைய பாக்காம இருக்க முடியலையா ?? அதான் நான் எப்படா வருவேன்னு வாசல்லையே காத்து காத்து நிக்கிறியா ??” என்று கேட்டான் அவளை பார்த்து கண்ணடித்து..

மித்ரவோ இதை கேட்டு தலையில் அடித்து கொண்டாள்.. “ கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்றியா ??”

“ என்னைய உள்ள விடு அப்பதான் சொல்வேன்..”

“ம்ம்ச்.. நீ ஒரு நாள் கூட நான் சொன்ன நேரத்துக்கு வரமாட்டியா??”

“ ம்ம் வந்தா எனக்கு என்ன தருவ சொல்லு?? சொன்ன நேரம் என்ன எங்கயும் போகாம இங்கயே இருக்கேன் “ என்று மீண்டும் கண்ணடித்தான்..

( சரியாதான சொல்லுறான் )

“ ச்சே ச்சே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்ல.. உள்ள வந்து தொலை..”

“ ஏன் மித்து நான் இப்படி எல்லாம் உன்னைய சீண்டனும்னு தானே இவ்வளோ நேரம் என்னைய வெளிய நிறுத்துன?? என்று கேட்டபடி அவளை இடையோடு அணைத்தவாறு அறைக்கு அழைத்து சென்றான்..

அவனது கைகளை தட்டி விட்டபடி மித்ராவும் உடன் சென்றாள்.. “ இப்படி எல்லாம் தொட்டு பேசாதன்னு நான் சொல்லி இருக்கேனா இல்லையா ?? “ என்று கடிந்தாள்..

“ ஹேய்  மித்து !!! தினம் உன்னோட ஒரே காமடியா போச்சு.. என் பொண்டாட்டிய நான் தொட்டு கூட பேச கூடாதா?? என்ன கொடுமை மா இது ??” என்று விட்டதை பார்த்து கேள்வி கேட்டான்.. அவனது கைகளை ஒரு தட்டு தட்டிவிட்டு “ சாப்பாடு எடுத்து வைக்கிறேன் “ என்று கூறி சென்றாள்..

மனோவோ சிரித்தபடி “ இப்ப நீ மட்டும் ஏன் டி என்னைய தொடுற?? ” என்று கேட்டபடி முகம் கழுவ சென்றான்..

( அயேய்யே இதென்ன சின்ன புள்ளைங்க மாதிரி )

தன் தம்பிகளுடன் பேசியபடியே, மித்ராவை பார்த்து ரசித்தபடி, அவ்வப்பொழுது அவளை சீண்டியபடியே இரவு உணவை உண்டு முடித்தான் மனோகரன்.. முன்பெல்லாம் இரவு வீட்டிற்கு வருவது என்றாலே மனோகரனுக்கு பாகற்காயாய் கசக்கும்..

அலுத்து சலித்து வரும் பொழுது நின்று கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.. இவன் வரும் நேரத்திற்கு கிருபா, பிரபா இருவரும் உறங்கி இருப்பார். ஏதாவது வேலை மிச்சம் இருந்தால் மட்டுமே திவா முழித்து கொண்டு இருப்பான்.. தனியாய் வந்து இரவில் அமைதியாய் பறந்து விரிந்து இருக்கும் வீட்டை பார்க்கவே மனோகரனுக்கு தொண்டை அடைக்கும்..

பல நாட்கள் இரவு தனியாய் உணவு உன்ன பிடிக்காமல் உண்ணாமலே உறங்கி இருக்கிறான்.. ஆனால் இப்பொழுது எப்பொழுதடா வீட்டிற்கு செல்வோம் என்று அவன் மனம் ஏங்க தொடங்கி விட்டது.. வயிறோடு சேர்ந்து மனதையும் நிரப்ப மித்ரா வந்துவிட்டாளே..

என்னதான் மன கசப்பு, இருவருக்குள்ளும் விரிசல் இருந்தாலும் மித்ரா உணவு உண்ணும் நேரத்தில் மட்டும் அவனிடம் என்த பிணக்கும் செய்ய மாட்டாள்.. அது ஏனோ அவளுக்குமே அவன் முகம் பார்க்கும் பொழுது “ ச்சே எத்தனை அலுப்போ.. இவன் அம்மா இருந்தா இப்படி தான் பார்த்து பார்த்து கவனிப்பாங்க “ என்ற எண்ணம் தோன்றும்.. ஆனால் அதை வெளியில் சொல்ல மாட்டாள்.. மனோகரனை மட்டும் இல்லை மற்ற மூவரையும் கூட சாப்பாடு விசயத்தில் நன்றாக கவனிப்பால் மித்ரா..

அன்றும் அப்படிதான் அனைவரும் உண்டு விட்டு சிறிது நேரம் பேசி அளவளாவி அதன் பின் தங்கள் அறைக்கு சென்றனர்.. அறைக்குள் வந்து மித்ரா படுக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் கண்கள் மூடி.. மனோகரனோ மித்ராவின் முகம் பார்த்து கட்டிலின் இந்த புறம் சாய்ந்து அமர்ந்து இருந்தான்..

மித்ரா மனதிற்குள் “ இப்ப எதுக்கு இந்த லூசு இப்படி உக்காந்து இருக்கு?? நான் எப்படி படுத்து தூங்குவேன்.. அங்குட்டு போனா என் பக்கம் படுக்க உனக்கு அவ்வளோ ஆசையான்னு கேள்வி வேற கேட்பானே “ என்று எண்ணிக்கொண்டு வீம்பாக கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தாள்..

அவளது வீம்பை புரிந்தவன் “ அப்புறம் மித்து… இன்னும் எவ்வளோ நேரத்துக்கு எனக்கு காட்சி குடுக்கிறதா இருக்க ?? ” என்றான் நக்கலாக..

( எவ்வளோ அடிச்சாலும் தாங்குவ போல மனோ )

அவனது கேள்வியில் கண் விழித்தவள் “ இப்ப நீ எதுக்கு இப்படி உக்கார்ந்து இருக்க??” என்று கேட்கும் பொழுதே அவனது அலைபேசி அழைத்தது.. அதை எடுத்து பார்த்தவன் மித்ராவின் முகத்தை பார்த்தான் ஒரு நிமிடம்..

“ என்னைய எதுக்கு பாக்குற?? எடுத்து பேசு இல்ல என்னவோ பண்ணு “ என்று மீண்டும் எகிறினாள்.. அழைப்பை ஏற்றவன் “ மாமா சொல்லுங்க.. நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்.. நீங்க ??”

….

“ஆமா மாமா.. நீங்க சொன்னது மாதிரி தான் உங்க பொண்ணு ஒரே அடம் ஒரே பிடிவாதம்.. எப்படியோ சமாளிக்கிறேன் “ என்றான் பேரு மூச்சு ஒன்றை வேண்டும் என்றே வெளியிட்டு..

முதலில் மித்ரா போனில்  யாரோ என்று நினைத்தவள் மனோகரன் உங்க பொண்ணு என்று கூறியதும் விக்கித்து போயி திரும்பி பார்த்தாள்.. தன்னை அறியாமல் அவள் கண்கள் கலங்க, வாய் “ அப்பா “ என்று கூறியது..

அதை பார்த்த மனோகரனுக்கும் மனம் வலிக்க தான் செய்தது.. ஆனால் அவள் தான் பேசமாட்டேன் என்று பிடிவாதம் அல்லவா பிடிக்கின்றாள்.. அவள் தோள்களில் கை வைத்து பேசுகிறாயா என்று சைகை செய்தான்..

ஆனால் மித்ரவோ எந்த பதிலும் கூறாமல் அமர்ந்து இருந்தாள்.. அவளையே கூர்ந்து பார்த்தவன்பின்  “ மாமா அத்தை சரண் எல்லாம் என்ன பண்ணுறாங்க ?? அங்க எல்லாம் ஓகே தானே.. ?? ” என்று மேலும் தன் பேச்சை வளர்த்தான்..

முதலில் மித்ராவின் மனம் வலித்தாலும் பின் கோவம் வந்தது.. “ என்ன திண்ணக்கம் என் அப்பா அம்மா அண்ணன் கூட இவ்வளோ உரிமையா பேசிக்கிட்டு இருக்கான்.. ஆனா நான் யாரோ மாதிரி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கேன்.. “ என்று நினைத்தவாறு அவனை முறைத்தாள்..

( ஏன் நீயும் பேசு )

மித்ராவின் எண்ணம் மனோகரனுக்கும் புரிந்ததோ என்னவோ மெல்ல சிரித்தபடி “ மாமா உங்க பொண்ணுக்கு உள்ள வேகுது போல.. அப்படியே காளியாத்தா மாதிரி முறைச்சுக்கிட்டு இருக்கா “ என்று கூறி சிரித்தான்.. அதற்கு அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ  தெரியவில்லை..

ஒரு விநாடி அமைதியாக இருந்தவன் மீண்டும் பலமாக சிரித்தான்.. “ அட அத்தை இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. அடடா… நீங்க முன்னமே சொல்லி இருந்தா இத்தனை நாள் நான் மித்ரா கிட்ட அவ்வளோ திட்டு வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லையே..”

…..

“ ஹா !!! ஹா !!! சரி சரி அவகிட்ட பேசுறிங்களா ?? ” என்று கூறியபடி மித்ராவை நோக்கி தன் அலைபேசியை நீட்டினான்.. ஆனால் அவன் மனைவியோ அதை வாங்க மறுத்தாள்..

அலைபேசியின் கீழ் பாகத்தை கைகள் வைத்து மூடியவன் “ இங்க பாரு மித்து உனக்கு பேச மனசு இல்லைனாலும் அவங்க பேசுறதை கேளு.. அட்லீஸ்ட் அவங்க மனசாவது நிம்மதியா இருக்கும்ல.. அப்பா அம்மா கிட்ட பேச வாய்ப்பே இல்லாதவங்களுக்கு தான் அந்த வலி என்னானு தெரியும் “ என்றான் ஒரு மாதிரி குரலில்..

அவனது குரலில் மித்ரா என்ன உணர்ந்தாலோ அவனது முகத்தை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தாள்.. அவளது அமைதியே அவள் தன் பெற்றோர் பேசுவதை கேட்க போகிறாள் என்று கூறியது..

“ அத்தை போன் உங்க பொண்ணு கைல தான் இருக்கு.. நீங்க என்ன பேசணுமோ பேசுங்க..” என்று கூறிவிட்டு அவளது கைகளில் தன் அலைபேசியை திணித்துவிட்டு “ நான் வெளியே இருக்கேன் “ என்று கூறிவிட்டு சென்று விட்டான்..

அவனுக்கு தெரியும் மித்ரா எதுவும் பேசமாட்டாள் என்று.. ஆனாலும் அவர்கள் பேச்சாவது அவள் காதில் விழவேண்டுமே.. அதற்காகவே அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு தான் வந்து இருந்தான்..

கையில் இருந்த அலைபேசியை பார்த்தபடி சிலையென அமர்ந்து இருந்தாள் மித்ரா. அவள் அன்னை, தந்தை, அண்ணன் என்று மூவருமே மாறி மாறி பேசினர்.. முதலில் அவளது நலம் விசாரித்தாலும் அதன் பின் வந்த அனைத்து பேச்சுக்களுமே  மனோகரனை சுற்றியே வளம் வந்தது..

ஒரு பத்து நிமிடம் சென்று இருக்கும்.. மித்ராவிற்கு எரிச்சலே வந்துவிட்டது.. “ ச்சே பெத்த பொண்ணுக்கிட்ட பேசுறது அவளை பத்தி ஏதா கேக்குறாங்களா ?? எப்ப பாரு மாப்பிள மாப்பிளன்னு.. நல்ல வேலை இதை எல்லாம் இந்த நெட்ட கொக்கு கேட்கல.. இல்லாட்டி இன்னும் மேல பறப்பான்.. “ என்று நொடித்துகொண்டு போனை அனைத்து விட்டாள்..

ஆனாலும் அவள் மனம் ஆறவில்லை.. “ இத்தனை நாள் அப்புறம் பேசுறாங்களே ஒரு வார்த்தை ஒருவார்த்தை எனக்கு சாதகமா எதா சொல்றாங்களா ?? ஊரு உலகத்துல இல்லாத மாப்பிளையை பார்த்துட்டாங்க.. எல்லாம் என் தலை எழுத்து “ என்று நினைக்கும் பொழுதே அவள் மனம் “ நீ கூடத்தான் ஒரு வார்த்தை எப்படி இருக்கீங்கன்னு கேட்கல?? “ என்று இடித்தது..

“ ஹா !! அது நான் கோவமா இருக்கேன்னு எல்லாருக்கும் தெரியுமே “ என்று அவளே தன் மனதிற்கு சமாதானம் செய்துகொண்டாள்..

(ஆமாமா )

சிறிது நேரம் விட்டு மனோகரன் அறைக்குள்ளே வந்தான்.. அப்பொழுதும் மித்ரா கண்கள் மூடி சாய்ந்து தான் அமர்ந்து இருந்தாள்..

“என்ன மித்து குட்டி பேசி முடிச்சாச்சா ?? ரிலாக்ஸ்டா இருக்கா இப்போ கொஞ்சம் “ என்று வினவினான்..

அவன் குரல் கேட்டதும் அவனது அலைபேசியை தூக்கி அவன்புறமே எறிந்தாள்.. அதை சரியாக கையில் பிடித்தவன் “ நோ நோ மித்து மா… ரொமான்ஸ் பண்ண வேண்டிய நேரத்துல வையலன்ஸ் கூடாது..” என்று கூறி சிரித்தான்..

ஒரு நொடி அவன் சிரிப்பில் மனம் தடுமாறினாலும் “ ம்ம்ச் கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா ?? இப்ப நான் கேட்டேனா அவங்க கிட்ட பேசணும்னு.. இதுல பெரிய இவனாட்டம் எழுந்து வெளிய வேற போயிட்ட.. என்ன மனசுக்குள்ள ரொம்ப நல்லவன்னு நினைப்பா ?? ” என்று கத்தினாள்..

அவளது முகத்தில் இருந்தே மனோகரன் புரிந்து கொண்டான்.. மித்ராவின் பெற்றோர் ஏதோ அறிவுரை கூறியிருப்பார், அது அவளுக்கு மிகுந்த கோபத்தை குடுத்து இருக்கும் என்று..

ஆனாலும் அதை கேட்காமல் “ சரி ரொம்ப நல்லவன் இல்லை கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்னு வேணா நினைச்சுக்கட்டுமா ?? ” என்றான் அவள் வார்த்தைகளை கொண்டே..

ஆனால் மித்ரா மீண்டும் தன் பழைய பல்லவியை தொடங்கினாள் “ நான் கேட்டேனா ?? ” என்று..

“ நீ கேட்கல மித்து.. ஆனா உங்க அப்பா அம்மா கேட்டாங்களே.. அவங்க பொண்ணுகிட்ட பேசணும்னு.. பெரியவங்க பேச்சை எப்படி தட்ட முடியும் சொல்லு.. அப்புறம் பின்னால என் பொண்ண கல்யாணம் செஞ்சு குடுத்து மாபிள்ள பேச கூட விடலைன்னு என் மாமனார் சொல்லிட்டா “என்று கூறி சிரித்தான்.. அவனது சிரிப்பை பார்த்து மித்ராவிற்கு இன்னும் கடுப்பு கூடியது..

அவளது முக வாட்டத்தை கண்ட மனோ “ என்ன மித்து?? எல்லா விசயத்துக்கும் இப்படி முகம் சுளிச்சா எப்படி மா.. ப்ளீஸ் மித்து கொஞ்சம் என் நிலைமையையும் நினைச்சு பாரேன்.. அவங்க எல்லாம் உன்கிட்ட பேசணும்னு சொல்லும் போது நான் எப்படி முடியாதுன்னு சொல்ல முடியும் டா..” என்றான் கனிவாக..

எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்து இருக்கும் தன் மனைவியை பார்த்து “ மித்து, இங்க என்னைய பாரு.. இது எல்லாமே இன்னும் “ என்று அவன் கூறி கொண்டு இருக்கும் பொழுதே

“ இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்.. இதை தானே நீ இப்ப சொல்ல வந்த.. ” என்று வேகமாக கூறியவள் அவனை நேராக பார்த்து “இனிமே இதை நீ சொல்லாத.. கேட்டு கேட்டு எனக்கு சலிச்சு போச்சு.. என்னதான் கொஞ்ச நாளோ கொஞ்சாத நாளோ “ என்று வெடித்தாள்..

மித்ராவின் பேச்சை கேட்ட மனோகரனுக்கு அடம் பிடிக்கும் சிறு குழந்தை போல தான் இருந்தது.. “ நாள் எல்லாம் உன்னைய கொஞ்சாது மித்து.. வேணும்னா நான் தான் கொஞ்சனும்.. என்ன டி கொஞ்சவா ?? ” என்றான் மென்மையாக..

( ரைட்டு விடு )

அவனை ஒரு முறை முறைத்துவிட்டு போர்வையை இழுத்து போத்தி படுத்துவிட்டாள்.. மனோகரனும் தலையணையில் தலை சாய்த்தபடி “ யப்பா இன்னைக்கு இவளை சமாளிச்சாச்சு.. எல்லாம் கோவமா பேசுனா அடங்குவாங்கனு பார்த்தா இவ லவ் டயலாக் பேசுனா தான் அடங்குறா.. ஹ்ம்ம் ஸ்வீட் பொண்டாட்டி “ என்று அவனுக்குள் கூறிக்கொண்டு கண் மூடினான்..

எப்பொழுதும் மனோகரனுக்கும் தனக்கும் இடையில் தலையணைகளை அடுக்கி வைத்து ஒரு பாலமே கட்டி விடுவாள் மித்ரா.. ஆனால் இன்றோ அவன் பேசிய பேச்சில் படக்கென்று படுத்தவள் அதை செய்ய மறந்துவிட்டாள்..

நடு ஜாமத்தில் உறக்கம் கலைந்த மித்ராவிற்கு ஏதோ ஒன்று வித்தியாசமாக இருந்தது.. அவளால் புரண்டு படுக்க முடியவில்லை.. “ என்ன இது “ என்று கண்களை கசக்கியபடி விழித்து பார்த்தவள் அப்படியே உறைந்து விட்டாள்.. ஏனெனில் அவள் மனோகரனின் கைகளுக்குள் படுத்து இருந்தாள் அவன் தோள்களில் தலை வைத்து..

ஒரு நிமிடம் யோசித்தவளுக்கு இரவு நடந்தது நினைவு வந்தது.. அதன் பின் அவன் உறக்கம் கலையாதவாறு கைகளை எடுத்துவிட்டு அவள் இடத்தில் படுத்தாள் நடுவில் தலையணைகளை வைத்து..

இத்தனை நேரம் அவனது கைகளுக்குள் படுத்து இருந்தோமே என்ற கூச்சமோ, இல்லை வெட்கமோ வரவில்லை மாறாக “ ஒரு வேல கண்டு பிடிச்சு இருப்பானோ ?? ” என்று ஆராய்ச்சியில் இறங்கி இருந்தாள் மித்ரா..

“ நம்மலே தூக்கத்துல பெட் முழுக்க உருளுவோம்னு தான் இவ்வளோ பில்லோ வச்சேன்..  லூசு நான் தான் தினமும் வைக்கிறேனே இன்னைக்கு ஒரு அவசரத்துல தூங்கிட்டேன்.. இவனாவது வச்சிட்டு தூங்கி இருக்கலாம்ல… இப்ப இப்படி ஆகிடுச்சு” என்று தலையில் குட்டி கொண்டாள்..

( அவளா நீ ???? )

“ ஒரு வேலை நம்ம இப்படி படுத்து இவனுக்கு தெரியுமா?? தெரியாதா ?? கண்டுப்பிடிச்சிருவானோ ?? ஐயோ சும்மாவே இவன் பேசுவானே “ என்று மனோகரன் பக்கம் திரும்பி பார்த்தாள்.. ஆழ்ந்த மூச்சுகளை விட்டு நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தான்..

அவனது நிர்மலமான முகத்தையே பார்த்தபடி இருந்தாள் மித்ரா.. “ எப்படி இவனால மட்டும் இப்படி தூங்க முடியுது “ என்று எண்ணியவளின் எண்ணம் சிறிது சிறிதாக அவனது முகத்தை ஆராய்ந்தது..     

“ ஹ்ம்ம் சும்மா சொல்ல கூடாது.. ஆளு நல்லா தான் யா இருக்கான்.. என்ன கொஞ்சம் கலர் கம்மி.. பரவாயில்ல அதுவும் நல்லா தான் இருக்கு.. இவனுக்கு கொஞ்சம் திமிரு தான் ஜாஸ்தி.. பின்ன இருக்காதா சின்ன வயசுல இருந்து அவனா எல்லாம் பார்த்துல முன்னேறி வந்து இருக்கான்..” என்று அவளது மனமே கேள்வியும் கேட்டு விடையும் அளித்து கொண்டு இருந்தது.. இப்படியே நினைத்தபடியே மித்ரா எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை.. ஆனால் அவளது உதடுகளில் மட்டும் புன்னகை தொக்கி நின்றது..

விடியல் காலை எப்பொழுதும் மனோகரன் எழுந்த பின்னே எழுபவள் இன்று ஏனோ முன்னமே எழுந்து குளித்து அறையை விட்டு சென்றுவிட்டாள். உறங்கும் மனைவியின் முகம் கண்டே அன்றைய நாளை தொடங்குபவன் அவளை காணாமல் ஒரு நொடி தவித்துவிட்டான்.. “ எங்க போயிட்டா இவ ?? ” என்று சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு பூஜை அறையில் ஒலிக்கும் மணியின் ஓசை கேட்டது..

அதன் பிறகே ஒரு நிம்மதி வந்தது மனதில்.. “ ஹ்ம்ம் என்ன மேடம் இவ்வளோ சீக்கிரம் முளிச்சிட்டா” என்று எண்ணிக்கொண்டே கண்ணாடி பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. வேறு ஒன்றுமில்லை மித்ரா அவனது தோள் வளைவுகளில் முகம் வைத்து படுத்திருந்ததால், அவள் உச்சியில் வைத்து இருந்த குங்குமம் அவனது பனியனில் ஒட்டி இருந்தது..  “ஆகா!! இது தான் விஷயமா ?? இதுக்கு தான் இவ்வளோ ஓட்டமா ?? இரு டி உன்னைய எப்படி கவனிக்க போறேன் பாரு ”  என்று கூறி கொண்டே

“மித்து…. மித்து எங்க இருக்க இங்க வாயேன் சீக்கிரம்…” என்று அலறினான்.. மித்ரவோ சமையல் அறையில் மிக மும்புரமாக வேலை செய்து கொண்டு இருந்தாள்.. மனோகரனின் குரல் கேட்டதும் “ ஐயோ !! இப்ப ஏன் கூப்பிடுறான்?? ஒருவேலை கண்டு கிண்டு பிடிச்சுட்டானோ ?? ச்சே ச்சே இருக்காது.. நாம தான் அப்பயே தள்ளி படுத்தோமே “ என்று தனக்கு தானே கூறி கொண்டு சென்றாள்..

ஒன்றுமே நடக்காதது போல “ என்ன மனு .. ஏன் காலங்காத்தாலே இப்படி ஏலம் விடுற ?? எனக்கு எவ்வளோ வேலை இருக்கு தெரியுமா ??“ என்று கேட்டபடி உள்ளே சென்றால் அவனது கோலம் அவளை வாயடைக்க வைத்தது..

( ஆமாமா பெரிய கலக்டர் வேலை )

தன் கைகளை ஒரு பக்கமாகவே சாய்த்து வைத்து இருந்தான்.. அவனை பார்த்த மித்ரா சற்றே பதறி “ என்ன ?? என்ன மனு…” என்றாள் ..

“ தெரியல மித்து.. நைட்டு தூங்கும் போது ஒரே பக்கம் திரும்பி படுத்து இருந்தேன் போல.. பாரு கை இப்படி சுலுக்கிடுச்சு…” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து தன் வலது கையை காட்டினான்..

( அடேய் அடேய் )

“ஒரு வேலை எல்லாம் தெரிஞ்சு தான் இவன் இப்படி போட்டு வாங்குறானோ ??” என்று சந்தேகமாய் அவன் முகம் பார்த்தவளுக்கு அவன் வலி நிறைந்த முகமே பதிலாய் இருந்தது..

“ ச்சே இல்ல.. எல்லாம் என்னால வந்தது தான் “ என்று மனதில் எண்ணிக்கொண்டு “ நான்.. நான் வேணும்னா தைலம் தேச்சு விடவா ??” என்றாள் தயங்கியபடி..

ஒரு நொடி யோசித்தவன், “ வேணா மித்து நான் ஆபீஸ வேற போகணும்.. எனக்கு இந்த பிரஷ்ல பேஸ்ட் மட்டும் வச்சிவிடு “ என்றான் அப்பாவியாய்.. மித்ரா “ எவ்வளோ வலிக்கிறதோ “ என்று எண்ணியபடி அவன் கூறியதை செய்தாள்..

“ நான் வேணும்னா திவாவ கூப்பிடவா ?? நீ.. நீங்க.. எப்படி குளிக்க முடியும் கை இப்படி இருக்கும் போது ?? ”

“ அதெல்லாம் வேணாம்.. நானே எப்படியாது அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.. அந்த துண்டு எடுத்து போடு.. இந்த சோப்பு எடுத்து வை “ என்று கூறி அவளை ஒரு வழி படுத்தி விட்டான்..

“ யப்பா குளிக்க போயிட்டான்.. நம்ம போயி நம்ம வேலைய பார்க்கலாம் “ என்று எண்ணி நகர்ந்தாள் குளியலறையில் இருந்து “ மித்து “ என்று மீண்டும் அவன் அழைப்பு..

( மறுபடியுமா ???)

கதவிற்கு வெளியே நின்று “ என்னங்க ?? ” என்று வினவினாள்.. “ நான் வர வரைக்கும் வெளியவே நில்லு மித்து.. ஒருவேளை நான் விழுந்துட்டா” என்றான் சிறு பையன் போல.. தன் தலையில் அடித்து கொண்டு “ எல்லாம் என் நேரம் “ என்று தன் விதியை நொந்தபடி நின்று இருந்தாள்..

(கை சுளுக்குனா விழுவாங்களா என்ன ??? )

இடுப்பில் ஒரு பெரிய பூத்துவாலையை கட்டி கொண்டு தலையெல்லாம் ஈரமாக வந்து நின்றான் வெற்று உடம்போடு.. இந்த கோலத்தில் அவனை காண மித்ரா தான் கொஞ்சம் கூசிபோனாள்.. சற்றே திகைத்து “ என்.. என்ன ?? ” என்று கேட்டாள் வேறு எங்கோ பார்வையை பதித்து..

அவள் முன் வேறு ஒரு துண்டை நீட்டியவன் தன் தலையை துவட்டி விடு மாறு கூறினான்.. அவன் செய்வதை எல்லாம் பார்த்து மித்ராவிற்கு ஒருபுறம் கோவம் வந்தாலும் மறுபுறம் ஏனோ அவன் கூறுவதை எல்லாம் செய்ய தோன்றியது..

ஆனாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் வெடுக்கென்று துண்டை பிடுங்கி அவனது தலையை துவட்ட முயற்சி செய்தாள்.. ஆனால் அவனது உயரத்திற்கு மித்ரா அவனது தோள் அளவே இருந்தாள்..

“ இப்படி பனைமரம் மாதிரி வளந்து நின்னா நான் எப்படி துவட்டுறது ?? ”

“ ஹ்ம்ம் என்ன செய்ய என் பொண்டாட்டி குட்டசின்னு முன்னமே தெரிஞ்சு இருந்தா நான் கொஞ்சம் கம்மிய வளந்து இருப்பேன் “ என்று அவனும் பதில் குடுத்து கொண்டே அமர்ந்தான்..

“ என்ன நான் உனக்கு குட்டச்சியா ?? இருக்கும் இருக்கும்… உனக்கு எல்லாம் வாய்ல சுளுக்கணும் “ என்று கூறிக்கொண்டே அவனது தலையை துவாட்டினாள்.. முதலில் மனோகரன் விளையாட்டாய் தான் இப்படி ஆரம்பித்தான்.. ஆனால் மித்ராவுமே அவன் கூறுவதை எல்லாம் செய்யவும் அவன் மனம் அவளது நெருக்கதுக்காக ஏங்கியது..

“ஸ்ஸ் ஆடாம உக்காரு மனு” என்று கூறியபடி அவனது தலையை துவட்டினாள்.. மனோவின் அன்னையும் இப்படி தான் கூறுவார்.. ஏனோ மனோகரனுக்கு இந்த வார்த்தைகளை கேட்டதும் அவனது அன்னை நினைவு வந்துவிட்டது.. அவனது அன்னை இப்படி கூறவும் “ சரி நான் ஆடலை “ என்று கூறி அவரது வயிற்றில் முகம் புதைத்து கொள்வான்.. அதே நினைப்பிற்கு மித்ராவின் வயிறில் முகம் புதைத்தான்..

ஒரு நிமிடம் தன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது மித்ராவிற்கு.. அவனது ஈர தலையும், முகமும் அவளது சேலை கட்டிய வேற்று இடையில் பதியவும் செய்வது அறியாமல் திகைத்து அப்படியே நின்றுவிட்டாள்..

அவள் அசைவற்று நிற்பதை உணர்ந்த மனோ, அதன் பின்னே தன் செயலை உணர்ந்தான்.. வேகமாக அவளிடம் இருந்து விலகியவன் “ சா.. சாரி.. மித்ரா.. நான்… சாரி.. அம்மா இப்படி தான் சொல்வாங்க.. அதான் அந்த நினைப்புல..” என்று கூற வந்ததை கூட கூறாமல் சென்று விட்டான்..

அவன் சென்ற பிறகே அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் மித்ராவின் மனதில் பதிந்தது.. ஏனோ அவள் தொண்டை அடைப்பது போல உணர்ந்தாள்.. சற்றே திரும்பி பார்த்தாள் கண்ணாடி முன்னே நின்று தலை வாரி கொண்டு இருந்தான்..

மெத்தை மீது வைத்து இருந்த சட்டையை எடுத்து அவனிடம் சென்று “ ம்ம் சட்டை போட்டு அப்புறம் தலை சீவு.. இன்னும் ஈரம் அப்படியே இருக்கு பாரு.. என்ன அவசரம் உனக்கு ?? “ என்று அவனது முகம் பாராமல் சட்டையை மாட்டுவதில் கண்ணாக இருந்தாள் மித்ரா..

இம்முறை அதிர்ந்து நிற்க வேண்டியது அவனது முறை என்றானது.. “ என்ன இப்படி சிலை மாதிரி நிக்கிற ?? நான் தான் இருக்கேன்ல.. இது கூட செய்ய மாட்டேனா ?? “ என்று கேட்டபடி சட்டையின் பொத்தான்களை மாட்டினாள்.. மனோகரனின் மனமோ அவளது வார்த்தைகளில் மாட்டிகொண்டு முழித்தது..

 

தாரமாக  நீ வந்தாய்

தாயாக நான் உணர்ந்தேன்

உன் மனதை நீ

உணரும் நேரம்

என்னோடு தான்

இருப்பாயோ கண்மணியே??

 

 

                           மாயம் – தொடரும்

 

 

 

 

                                                                                        

 

                                                 

                                                                                                

                                 

               

                   

      

         

                                                                                   

Advertisement