Advertisement

மாயவனோ !!தூயவனோ – 6

 “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..”

“அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “

“ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “ என்று கூறி தங்கள் வருகையை மித்ராவிடம் பதிவு செய்து கொண்டு இருந்தனர் பிரபா, கிருபா, திவா மூவரும்..

(என்ன நடக்குது இங்க?? )

மித்ரா இதை எல்லாம் கேட்டு கொண்டே கடிகாரத்தை பார்த்தாள். இரவு 8.25 என்று காட்டியது.. அதை பார்த்ததும் மித்ராவின் முகம் வாசலையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்க்க ஆரம்பித்தது..

திவா இதை கவனித்தும் பேசாமல் அமர்ந்து இருந்தான்.. கிருபாவிற்கு தான் வாய் மூடாதே “ என்ன அண்ணி இன்னைக்கு அண்ணா தான் அவுட்டா.. முதல் விக்கெட்டே அண்ணன் தான் போல ??” என்றான் கிண்டலாக.. திவாவோ தன் அண்ணன் மனோகரனுக்கு அலைபேசியில் அழைக்க முயற்சி செய்து தோற்று கொண்டு இருந்தான்..

(அதான் உங்க அண்ணன் என்னைக்கோ கிளீன் போல்ட்டே )

கிருபா கேட்ட விதத்தில் மித்ராவும் பிரபாவும் சிரித்து விட்டனர்.. பிரபா சிரிப்பதை வாஞ்சையுடன் பார்த்த மித்ரா “ என்ன பிரபா உங்க அண்ணன வெளிய நிப்பாட்டிடலாமா ?? ” என்றாள் தன் இரு புருவங்களையும் உயர்த்தி அபிநயம் பிடித்து ..

அதற்கும் சிரித்தான் பிரபா.. சிறு வயதில் இருந்தே அன்னை இல்லாத ஏக்கம் பிரபாவை நத்தை கூட்டிற்குள் சுருண்டு விடுவது போல அவனுக்குள்ளேயே சுருட்டிவிட்டு இருந்தது. மித்ரா வந்த பிறகு தான் அவனிடம் இப்படி அடிக்கடி சிரிப்பை காண முடிகிறது.. அதை உணர்ந்த மித்ராவும் அவனை தன் பேச்சில் முக்கால் வாசி நேரம் இழுத்து கொள்வாள்..

அதே போல கிருபாவிடம் டா போட்டு பேசும் அளவு ஒரு நட்பு உருவாகியிருந்தது..  திவா மரியாதையாக அதே நேரம் அன்பாக பொறுப்பாக பேசுவான்.. ஆகையால் அவளும் அவனிடம் அப்படிதான் நடந்து கொள்வாள்..

மித்ரா அங்கே மனோகரனின் இல்லத்திற்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டது.. அன்று அவன் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது, போனை தொட கூடாது, அவன் சொல்வது தான் கேட்கவேண்டும் என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதித்து, திட்டிய பிறகு மனதிற்குள் நிறைய யோசித்தாள்..

(எந்த கோட்டையை பிடிக்க ???)

அதன் பிறகு வந்த இரண்டு நாட்களும் வீட்டில் நடப்பவற்றை கூர்ந்து கவனித்தாள்.. மனோகரனின் ஆராய்ச்சி பார்வையை உணர்ந்தபின்னும் அவள் அமைதி நீடித்தது..  

“ என்னையயா கண்டிசன் போடுற.. இரு மனு உனக்கு இருக்கு.. என்னைய நீ ரொம்ப சாதரணமா நினைச்சுட்ட போல “ என்று கருவியவள் தன் திட்டத்தை நேற்றிலிருந்து செயல் படுத்த தொடங்கினாள்.. அதன் விளைவு தான் இப்படி அனைவரும் தங்கள் வீட்டிற்கு எத்தனை மணிக்கு வந்தோம் என்று அவளிடம் தெரிவித்தது..

முதல் நாள் நடந்ததை எல்லாம் மித்ரா நினைத்து பார்த்தாள்.. அன்று புதன் கிழமை என்பதால் அனைவரும் அலுவலகம், கல்லூரி, பள்ளி சென்றுவிட்டனர். தனிமையில் இருந்த மித்ரா தான் என்ன செய்ய வேண்டும் எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டாள்.

மாலை அனைவரும் வீட்டிற்கு வரவும், அண்ணன் தம்பி நால்வரையும் அழைத்த மித்ரா சிறிது நேரம் பேசவேண்டும் என்று கூறவும் மனோகரன் “ இப்ப என்ன குண்டு போட போறாளோ ?? ரெண்டு நாலா அமைதியா வேற இருந்தாளே..” என்ற யோசனையோடு பார்த்தான்..

( இப்ப யோசனை செஞ்சு என்ன செய்ய மனோகரா ??)

மித்ரா “ திவா, கிருபா, பிரபா  நீங்க மூணு பெரும் என்னய நிஜமாவே உங்க அண்ணியா தானே நினைக்கறிங்க?? அதவாது உங்க வீட்டுல ஒருத்தியா தானே “ என்று பேசி கொண்டு இருக்கும் பொழுதே

“ என்ன அண்ணி இப்படி கேக்குறிங்க?? “ என்றனர் மூவரும்..

“ பதில் சொல்லுங்க“

“ ஆமா அண்ணி.. நீங்க வந்த அப்புறம் தான் இந்த வீடே முழுமையானது போல இருக்கு.. “

“அப்போ நான் சொல்லற பேச்சுக்கு மதிப்பு குடுப்பிங்க இல்லையா  “ என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள் அனைவரையும் பார்த்து.. மனோகரன் எதுவும் கூறவில்லை மனதிற்குள் “ இப்ப எதுக்கு இப்படி பேசுறான்னு தெரியலையே.. என்னானு தெரியாம இவ பேச்சுக்கு பிடி குடுக்க கூடாது “ என்று இருந்தான்..

“ கண்டிப்பா அண்ணி “ என்றனர் மூவரும்.. “ நீங்க சொல்றிங்க.. ஆனா உங்க அண்ணன் என்ன பதிலே பேசாமா இருக்காரு?? ஒரு வேலை அவர் என்னைய அப்படி நினைக்கலையோ ?? ” என்றாள் வருத்தமாக..

திவா “ அண்ணா!! என்ன இப்படி அமைதியா இருக்கீங்க?? பாருங்க அண்ணி எவ்வளோ வருத்தமா பேசுறாங்கன்னு.. சரி சொல்லுங்க ணா.. ” என்று மனோகரனின் கைகளை பிடித்து அழுத்தவும் மனோ மனதிற்குள் “ அவ விரிக்கிற வலையில நீங்க விழறதும் இல்லாம என்னய வேற துணைக்கு விழ சொல்றானுங்களே” புலம்பியபடி  வேறு வழியில்லாமல் “ ம்ம் என்ன சொல்லு “ என்றான் தன் மனைவியை பார்த்து..

(சரி திமிங்கலமும் விழுந்திடுச்சு …..)

“ அப்படி வா வழிக்கு..” என்று மனதிற்குள் நகைத்தபடியே “ ஹ்ம்ம் நான் இந்த ரெண்டு நாலா வீட்டுல நடக்குற எல்லாத்தையும் கவனிச்சேன்.. ஒரு விஷயம் என் மனசை உறுத்திகிட்டே இருந்தது.. அதை நான் சொல்லலாம் தானே “ என்று கேட்டாள் மிகவும் பவ்வியமாக..

“ ஆகா இப்ப ஏன் டி இவ்வளோ பதுங்குற??? “ என்று எண்ணியபடியே மித்ராவை பார்த்துகொண்டு இருந்தான்.. கிருபா “ அண்ணி நீங்க எங்ககிட்ட பெர்மிசன் எல்லாம் கேட்கணுமா ?? உங்களுக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு அண்ணி.. நீங்க பாத்து நில்லுன்னு சொன்னா நிக்க போறோம் உக்காரு சொன்னா உக்கார போறோம் “ என்றான் வரப்போகும் ஆப்பை உணராமல்..

(கிருபா உன்  நாக்குல சனி சால்சா ஆடுது போல.. )

புன்னகைத்து கொண்டே மித்ரா ” தேங்க்ஸ் கிருபா.. ஆனா நான் அவ்வளோ கொடுமைகாரி எல்லாம் இல்லை.. நான் பார்த்த அளவுல யாருமே இந்த வீட்டுல ஒருவேளை கூட ஒன்னா ஒரே நேரத்துல உக்காந்து சாப்பிடுறது இல்லை.. இது தான் கஷ்டமா இருக்கு.. குடும்பம்னா என்ன அட்லீஸ்ட் ஒரு நேரமாவது ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துக்கனுமா இல்லையா ?? ” என்றாள் அனைவரையும் பார்த்து..

அவள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது… காலை அனைவரும் ஒவ்வொரு நேரத்தில் கிளம்புவதால் அந்த நேரத்திற்கு ஏற்றவாறு உண்ணுவர்.. மதியம் கிருபாவும் பிரபாவும் மெஸ்ஸில் உண்டுவிடுவர்..

மனோவும் திவாவும் ஆபீஸ் காண்டீன் இல்லை ஏதாவது தொழில் முறை மீட்டிங் இருந்தால் அங்கே உண்டு விடுவர்.. இரவு கிருபா பிரபா இருவரும் ஒன்றாய் உண்ணுவர்.. மனோவும் திவாவும் ஒரே நேரத்தில் வீட்டில் இருந்தால் தங்கள் தொழிலை பற்றி பேசிக்கொண்டே உண்ணுவர் இல்லையென்றால் அதுவும் இல்லை..

மித்ரா கேட்ட கேள்விக்கு “ ஆமா அண்ணி “ என்றனர் மூவரும்.. “ அப்போ சரியா காலையில எட்டு மணிக்கு எல்லாம் டைனிங் டேபிள்கு வந்திடனும் சரியா.. ?? கொஞ்சம் எல்லாம் டைம் அட்ஜஸ்ட் பண்ணா ஒரே நேரத்துல சாப்பிடலாமே.. இது எல்லாருக்கும் சந்தோசம் தானே ?? ” என்றாள் தன் குரலில் பாசத்தை தடவி..

இதை கேட்ட நால்வரின் முகத்திலும் என்ன உணர்வு என்றே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை…. கிருபா எதுவோ கூற வருவது போல இருந்தாலும் “ பொறு கிருபா நான் இன்னும் பேசி முடிக்கல..” என்று கைகளை உயர்த்தியவள்

“ மதியம் சாப்பாடு உங்களுக்கு மார்னிங் நானே சமையல் பண்ணி தரேன்.. இனிமே கிருபா பிரபா ரெண்டு பேரும் மெஸ்ல சாப்பிடவேண்டாம்.. அதே மாதிரி மனு, திவா ரெண்டு பேரும் வெளிய சாப்பிட வேண்டாம் மதியம் டிரைவர் கிட்ட லஞ்ச் குடுத்து விடுவேன்..”

நால்வரும் அமைதியாக மறுத்து பேசாமல் தான் கேட்டு கொண்டு இருந்தனர். மனோகரனும் “ சரி இவள் நல்லது தானே கூறுகிறாள் “ என்று எதுவும் கூறவில்லை.. ஆனால் அடுத்து அவள் கூறியது தான் அனைவரையும் திகைப்பில் ஆற்றியது..

“ தென்.. நைட்டு ஷார்ப்பா எல்லாரும் 8.30க்கு வீட்டுல இருக்கனும்.. பிரபா பத்தி கவலை இல்லை ஸ்கூல் முடிச்சு நேரா வீட்டுக்கு தான் வருவான்.. மத்த மூணு பெரும் நல்லா கேட்டுகோங்க.. நைட்டு டிபன் கண்டிப்பா வீட்டுல தான் சாப்பிடனும்.. “

“ என்ன பிசினஸ் பார்ட்டி, மீட்டிங்.. பிரண்ட்ஸ், இப்படி  எந்த  வேலை என்ன காரணமா இருந்தாலும் அதெல்லாம் 8.30க்கு முன்னாடி தான்.. பிகாஸ் இது வீடு சத்திரம் இல்லை.. ஆளாளுக்கு ஒவ்வொரு நேரத்துக்கு வரதுக்கு.. குடும்பம்னா ஒரு கட்டுப்பாடு இருக்கனும்..” என்றாள் கறாராக..

(அப்படி போடு அருவாள… )

“ ஆகா!! நான் தினம் தினம் ஒவ்வொரு நேரத்துக்கு வரேன்னு தான் இவ இப்படி சொல்லுறா.. டி… மித்ரா…” என்று பற்களை கடித்தான் மனோ..

திவாவும் பிரபாவும்  நல்ல பிள்ளைகள்  போல அவள் சொல்வதற்கு எல்லாம் தலையை உருட்டி கொண்டு இருந்தனர்.. ஆனால் கிருபா.. கல்லூரி மாணவன் அல்லவா

 “ அண்ணி என்ன இப்படி சொல்றாங்க.. ஆப்பு வைக்க போறங்கன்னு தெரியாம நான் பாட்டுக்கு பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிட்டேனே.. ஐயோ !!” என்று தன் விரல் நிகத்தை கடித்தபடி அமர்ந்து இருந்தான்..

“ என்ன கிருபா எதுவும் பதிலே பேசாம இருக்க ?? “

“ ஹா!! என்ன அண்ணி.. என்ன சொன்னிங்க ?? ”

“ இல்ல நான் சொன்னது எல்லாம் உங்க எல்லார் காதிலையும் விழுந்தது தானே ??”

“ ஹா !! காதுல விழுந்து இதயத்துல ஈட்டியா குத்திடுச்சு அண்ணி.. “ என்று கூறியவன் திவா முறைப்பை பார்த்து “ ஏன் அண்ணி சப்போஸ் கொஞ்சம் லேட்டா வந்துட்டா என்ன பண்ணுவீங்க??”

“  அது ஒன்னும் இல்ல கிருபா…. லேட்டா வந்தா நம்ம கூர்காக்கு போயி கம்பனி குடுக்கணும் “ என்றாள் மெல்ல சிரித்து..

“ வாட் அண்ணி புரியல…” எனவும் திவா “ அதாண்டா நம்ம கூர்க்கா, அவருகூட நீயும் காவல்க்கு வெளிய நிக்கனுமாம்.. மவனே இனிமே நீ லேட்டா வருவ?? “ என்று அவன் காதில் ரகசியம் பேசினான்.. இதை கேட்கவும் கிருபா அரசியல்வாதி போல தன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வணக்கம் கூறி

 “ அண்ணி எப்பையுமே நான் உங்கள் கட்சி தான்.. என் எல்லா ஆதரவும் உங்களுக்கு தான்.. நான் மட்டும் இல்லை இங்க இருக்க எல்லாருமே நீங்க சொல்றதுக்கு கட்டுப்பட்டு, உடன்பட்டு.. காஞ்சிபுர பட்டு … சரி சரி நோ முறைப்பு… நடக்கிறோம்  “ என்று கூறவும் மித்ரா நன்றாக சிரித்தே விட்டாள்..

(என் சோக கதைய கேளு தாய் குலமே….)

அவள் சிரித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் “ என்னால இதுக்கு எல்லாம் ஒத்துக்க முடியாது.. நான் அப்படி எல்லாம் ஒரு நேரத்துக்கு வர முடியாது.. என் பிசினஸ் அப்படி.. “ என்று அவன் பேசி கொண்டு இருக்கும் பொழுதே மித்ரா

“ என்ன பிசினஸ் மீன் பிடிக்கிற வேலைதானே ?? அதை பகல் நேரத்துல பிடிக்கலாம்.. ஒருவேளை உங்க அம்மா எல்லாரும் அதான் என் அத்தைங்க எல்லாரும் இருந்திருந்தா இதை தானே சொல்லி இருப்பாங்க.. குடும்பத்தை விட தொழில் ரொம்ப முக்கியம் இல்லை.. நீங்க தானே சொன்னிங்க முதல் நாள் நீ தான் இங்க எல்லாம் பொறுப்பா பார்த்துக்கணும்னு.. அப்படி சொல்லிட்டு இப்போ நீங்களே இப்படி பேசுனா அப்புறம் மத்தவங்க எப்படி என்னைய மதிப்பாங்க?? ” என்றாள் கண்களில் நீர் வராத குறையாக..

(நியாயமான கேள்வி தானே )

இதற்கு மேல் மறுத்து பேசுவார்களா மனோவின் தம்பிகள்.. ஆனால் மனோவிற்கு தான் ஏனோ இவள் கூறுவதற்கு சரி கூற முடியவில்லை.. “ இல்ல அது.. நான்… எனக்கு இந்த கண்டிசன் எல்லாம் ஒத்துவராது”

“ அப்படினா தினமும் நீங்க வெளிய தான் நிக்கணும் மனு.. நீங்க தானே சொன்னிங்க இது நிஜ கல்யாணம்னு.. அப்போ எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்குல.. அதை ஏன் என்னைய செய்ய விடமாற்றிங்க “ என்றாள் மிக பாவமாக..

(வாஸ்தவமான பேச்சுதானே )

இதற்கு மேல் தன் தம்பிகள் முன் மறுத்து பேச முடியாதே அவனால்.. அவனே தன் மனைவியின் பேச்சை மதிக்கவில்லை என்றால் நாளை குடும்பத்தில் யார் மதிப்பர்.. “ ஹ்ம்ம் ஒரு 9 மணி வரைக்கும் சொல்ல கூடாதா ?? ” என்றான்..

(மனோ கடைசியில உன் நிலைமை இப்படியா போகணும் )

“ ஏன் 9 மணி வரைக்கும் உங்களுக்கு வெளிய என்ன வேலை… சாயங்காலம் ஆபீஸ் 6 மணிக்கு முடியுது. அதுக்குமேல உங்களுக்கு ரெண்டரை மணி நேரம் குடுத்து இருக்கேன் போதாதா ?? என்ன திவா நீ இதெல்லாம் கேட்க மாட்டியா ?? ” என்று திவாவை மித்ரா இதில் இழுக்கவும்

திகைத்து விழித்த திவா “ அண்ணா அண்ணி சொல்றதும் சரிதானே ணா.. அம்மா எல்லாம் இருந்திருந்தா கண்டிப்பா இப்படி தான் சொல்லி இருப்பாங்க.” என்றான்..

“ ராங்கி பிடிச்சவ.. சரியான பாயின்ட்ட பசங்க முன்னாடி சொல்லி என்னையும் வாய் அடைச்சுட்டா..” என்று அவளை திட்டி கொண்டே “ ம்ம்ம் “ என்று மட்டும் கூறினான்..

இதை எல்லாம் பேசும் பொழுது மித்ரவிற்கும் மனதில் நடுக்கம் தான்.. ஆனால் இந்த மனோகரனை படுத்துவதற்கு வேறு வழிகள் இல்லையே.. வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் உள் இருந்தே வேறு என்ன என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டே இருந்தாள்..

“ அப்புறம் சண்டே சண்டே வீட்டில் தான் எல்லாரும் இருக்கனும்.. வேலைகாரங்க எல்லாருக்கும் அன்னைக்கு லீவ் குடுத்துடலாம்.. அன்னிக்கு மட்டும் நம்ம வேலைய நாமலே சேர்ந்து செய்யலாம்.. தோட்ட வேலை பண்ணலாம், நமக்கு பிடிச்சதை நம்மாலே சமைக்கலாம்.. இப்படி “ என்று மித்ரா கூறும் பொழுதே பிரபா “ அண்ணி கேம்ப்ல எல்லாம் பண்ணுவாங்களே அது போலவா ?? ” என்றான் சந்தோசமாக..

(மித்ரா உனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள் )

“ஆமா டா பிரபா.. அதே போல தான்.. அப்ப தான் நமக்குள்ள இன்னும் புரிதல் ஆழமா இருக்கும். நமக்கும் ஒரு மாற்றமா இருக்கும் “ என்றாள் சிரித்தபடி.. திவாவிற்கும் மித்ரா கூறியது அனைத்தும் சரியென படவும் வேகமாக சம்மதம் கூறினான்..

மித்ரா போடும் அனைத்து  கட்டுபாடுகளிலும் பாதிக்க படுவது கிருபாவும் மனோவும் தான்.. கிருபாவை எப்படி சமாளிப்பது என்று அவளுக்கு தெரியும்.. மனோவின் அமைதியே அவளை உள்ளுர நடுங்க செய்தது.. “ இவன் என்ன இப்படி அமைதியா இருக்கான்.. ஒருவேளை தனியா கவனிப்பானோ??? ” யோசித்தவள் “ இல்லை இல்லை மித்ரா நீ எதுக்கும் தயங்காதே..” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு

“ தென் வீட்டுக்கு வந்துட்டா யாரும் ஆபீஸ் பத்தி பேசக்கூடாது.. ஏதா முக்கியமான விஷயம்னா மட்டும் பேசிக்கலாம்.. இன்னொரு விஷயம் வீட்டுக்கு வந்ததும் யாரும் லேப் டாப்ப தூக்க கூடாது..” என்றாள் மனோகரனை பார்த்து..

கிருபா “ யப்பா இது அண்ணனுக்கு தான் நமக்கு இல்லை” என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான்..

“ அப்படி எல்லாம் இருக்க முடியாது.. வீட்டில வந்து முடிக்க வேண்டிய வேலைன்னு சிலதும் இருக்கும்.. அதெல்லாம் யார் பாப்பாங்கலாம்..??” என்று கடுகடுத்தான் மனோ..

(ஆமா யாரு பாப்பாங்கலாம் ??)

“ நீங்க ரூம்குள்ள லேப் டாப்போட வந்தா நான் வெளிய வந்திடுவேன்.. இதுல உங்களுக்கு எது பெட்டர்னு சொல்லுங்க மனு ..” என்றாள் அவனை பார்த்து சிரித்தபடி..

“ ராட்சஸி” என்று கடிந்தவன் “ அவ்வளோதானா இன்னும் இருக்கா ?? ” என்றான்..

“ ஹ்ம்ம் இன்னைக்கு இவ்வளோ தான்.. இதை நீங்க எல்லாம் எப்படி பாலோ செய்றீங்கன்னு பார்த்திட்டு தான் அடுத்து முடிவு எடுக்கணும் “ என்றாள் கெத்தாக..

“ ஏன் அண்ணி இந்த சட்ட மசோதா எல்லாம் எப்ப இருந்து அமலுக்கு வருது ?? ” என்று பாவமாக கேட்டது வேறு யாரும் இல்லை கிருபா தான்..

“ நாளைக்கு காலை ஷார்ப்பா 8 மணிக்கு இருந்து.. ” என்று கூறிவிட்டு “ சரி குட் நைட்.. எல்லாரையும் நாளைக்கு காலைல பாக்குறேன்” என்றவள் யார் பதிலையும் எதிர் பார்க்காமல் தன் அறைக்கு சென்று விட்டாள்..

திவா “ சரியா 6 மணிக்கு உங்க ரெண்டு பேரையும் எழுப்பி விடுறேன் டா.. அப்பத்தான் சரியா இருக்கும் நேரம் “ என்று பேசிக்கொண்டே அவர்கள் மூவரும் தங்கள் அறைகளை நோக்கி சென்றனர்..

ஆனால் மனோகரனுக்கோ கடுப்பு, எரிச்சல், என்று எந்த உணர்வையும் கட்டுக்குள் அடக்க முடியவில்லை..

“ ஏய் என்ன டி நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசிகிட்டே போற.. நான் இதெல்லாம் கேட்க மாட்டேன்… நான் எப்பயும் போல தான் இருப்பேன். கல்யாணம் ஆகிட்ட உடனே எல்லாம் நீ சொல்லுறபடி கேட்கணுமா ?? ” என்று எகிறியபடி அறைக்குள் நுழைந்தான்..

ஆனால் மித்ராவோ மெல்ல இதழ்களில் புன்னகையை தடவி “ அப்போ நான் மட்டும் ஏன் மனு நீ சொல்லறது எல்லாம் கேட்கணும் ?? ” என்றாள் கூலாக.. இதை மனோ எதிர் பார்கவில்லை போல. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவனின் விழிகள் பளிச்சிட்டன..

“ நீ எதோ மனசுல வச்சுக்கிட்டு தான் இதை எல்லாம் செய்யுற “ என்றான்..

(எல்லாம் உன்னைய மனசுல வச்சுதான் )

“ ஏன் நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா ?? இல்லை நான் எதுவுமே சொல்ல கூடாதா?? “

“ ஹ்ம்ம் நான் அப்படி சொல்லல மித்து ஆனாலும்….”

“ என்ன ஆனா ஆவன்னான்னு இழுக்குற ?? இங்க பாரு நீதானே சொன்ன நான் உன் பொண்டாட்டி அதுக்குனு இருக்குற எல்லா பொறுப்புகளையும் நீ தான் பார்த்துக்கணும்னு இப்ப என்ன ??”

“ மவளே சிக்குன டி..” என்று எண்ணியவன் “ ஆமா டியர்.. நீ தான் என் பொண்டாட்டி.. அதுல எந்த மாற்றமும் இல்லை.. எனக்கு மனைவியா வந்ததுனால தான் இந்த வீட்டுக்கு நீ மருமக.. என் தம்பிகளுக்கு அண்ணி.. அப்போ முதல்ல நீ என்னைய தானே பொறுப்பா கவனிக்கணும்.. அதை நீ பண்ணலையே.. ஹ்ம்ம் உனக்கு என்ன தண்டனை குடுக்கலாம் “ என்றான் கிண்டலாக..

(அப்படி பேசுடா தங்கம்… )

அவன் கூறுவது மித்ராவிற்கு முதலில் புரியவில்லை..” நீ.. நீ என்ன சொல்லுற..?? ”

“ நான்.. நான் உண்மைய தான் மித்து டியர் சொல்றேன்.. முதல்ல உன் புருஷனை பொறுப்பா கவனி.. அப்புறம் அடுத்ததை எல்லாம் யோசிக்கலாம்” என்று கூறியபடியே அவளை நெருங்கினான்.. அப்பொழுது தான் மித்ராவின் மூளைக்கு எட்டியது அவன் என்ன கூறுகிறான் என்று..

“ ஏய் இங்க பாரு ஒரு இடத்துல நின்னு பேசு.. இப்ப ஏன் கிட்ட வர..?? நான்.. நான் என்ன கெட்டதா சொன்னேன்.. நில்லுன்னு சொல்றேன்ல..” என்றாள் பின்னால் நகர்ந்தபடி நடுங்கிய குரலில்.. ஆனால் இதெல்லாம் கேட்க மனோ தயாராக இல்லை.. அவளை பின்னால் நகர்த்தியபடி தானும் முன்னேறினான்.. இறுதியில் கட்டில் கால் தடுக்கி அதன் மேல விழுந்தாள் மித்ரா.. ஆனால் அவள் கணவனோ அவள் எழுந்து விலகாதவாறு அவளை பிடித்தபடி அமர்ந்தான்..

“ ஹேய் கைய விடு.. இப்ப ஏன் இப்படி என்னைய பிடிச்சு வச்சிருக்க??”

“ ஹா!!! உன்னைய எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு அதான்.. என்ன சொன்ன நான் லேப்போட ரூம்க்கு வந்தா நீ வெளிய போயிடுவியா ?? ஏன் செல்லம் நான் உன்னைய கவனிக்காம வேலை பாக்குறது உனக்கு ஏக்கமா இருக்கா ??”  என்றான் அவளது கைகளை எடுத்து தன் தோள்களில் போட்டு..

(மித்து மாட்டுனியா ??)

“ அட கடவுளே இவனை இம்சை பண்ணுறதுக்காக நான் சொன்னது இப்படி எனக்கே திரும்பிடுச்சே.. ஐயோ இவன் வேற இப்படி க்ளோஸா பாக்குறானே.. இடியட்..” என்று மனதிற்குள் திட்டியவளால் வெளியே எதுவும் கூற முடியவில்லை..

“ என்ன மித்து டியர் இப்படி அமைதியா இருக்க  ?? உன் மனசுல இருக்கிறத கண்டு பிடிசுட்டேன்னு தான வாயடைச்சு போயிட்டயா?? “ என்றான் அவள் கூந்தலை வாசம் பிடித்து.. மித்ராவோ சற்றும் எதிர் பார்கவில்லை இவன் இப்படி எல்லாம் செய்வான் என்று..

மனோவின் அருகாமையும் ஸ்பரிசமும் ஒரு பக்கம் கூச்சத்தை குடுத்தாலும் மறுபக்கம் கோவத்தையும் குடுத்தது.. அவளை அறியாமல் சிவக்க தொடங்கிய முகத்தையும் உள்ளே படபடத்து கொண்டு இருந்த இதயத்தையும் எத்தனை முயன்றும் அவளால் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.. இதை அவனும் கண்டுகொண்டான் போல..

(பேஸ்மென்ட் ஸ்ட்ராங்… பில்டிங் வீக் ) 

மித்ரவோ உள்ளே நடுங்கி தவித்தாள்..” ஐயோ நம்ம வேற பொண்டாட்டி, மருமக அப்படின்னு ரொம்ப ஓவரா பேசிட்டோமோ..??” என்று எண்ணி பயந்தபடி நடந்தாள்..

“ என்ன மித்து குட்டி பயந்துட்டியா ?? ” என்றான் நக்கலாக சிரித்தபடி.. அவனது சிரிப்பை கண்டதும் தான் இத்தனை நேரம் இவன் தன்னிடம் விளையாடி இருக்கிறான் என்றே புரிந்து கொண்டாள்.. அவனை பார்த்து முறைத்த மித்ரா “இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை ?? ” என்றாள் கோவமாக..

“ ஹ்ம்ம் அதை ஏன் கேட்கிற மித்து.. கல்யாணம் ஆகி இருபது நாள் ஆகபோது இன்னும் என் பொண்டாட்டி ஒரு காபி கூட எனக்கு போட்டு குடுக்கல.. “ என்றான் சோகமாக.. இத்தனை நேரம் மனோகரன் நடந்துகொண்ட விதத்தில் மித்ரா ஏற்கனவே மிகவும் கோவமாக இருந்தாள்.  இதில் இவன் இப்படி வேறு பேசவும் அவள் மனதில் வேகமாக பல யோசனைகள் தோன்றியது..

தன் முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டே “ ஹ்ம்ம் இது மட்டும் தான் உன் கவலையா மனு.. வேற எதுவும் இல்லையா ??” என்றாள் மிக அக்கறையாக.. அவளது முகமும் குரலும் மனோவிற்கு என்ன உணர்த்தியதோ “ ஆகா மனோ உன் பொண்டாட்டி அடுத்த பிளான் போட ஆரம்பிச்சுட்டா போல.. சோ அடக்கி வாசி “ என்று எச்சரிக்கை செய்த மனதை அடக்கி

“ இன்னைக்கு இவ்வாளோ போதும் மித்து.. தூங்கலாம்.. காலையில சீக்கிரம் வேற எந்திரிக்கணும்..” என்று கூறிக்கொண்டே இழுத்து போர்த்தி உறங்கிவிட்டான்.. இப்பொழுது பே என விழிப்பது மித்ராவின் முறை ஆகியது..

“ என்ன டா இது இவனா பேச ஆரம்பிச்சான் இப்ப டபக்குனு தூங்குறான்..” என்று எண்ணியவள் அவன் மீது இருந்த போர்வையை விளக்கி “ நான் ஷாப்பிங் போகணும் “ என்றாள்..

“ இப்படி படுத்துறாளே “ என்று புலம்பியபடி எழுந்து அமர்ந்தவன் “ என்ன மித்ரா உனக்கு வேணும் எனக்கு நிஜமாவே ரொம்ப அலுப்பா இருக்கு “ என்றான்.. ஆனால் இதற்கெல்லாம் இறங்கி வருவாள மித்ரா

(மித்ராவ கல்யாணம் பண்ணிட்டு அலுப்பு சலிப்புன்னு எல்லாம் சொல்லகூடாது மனோ )

“ நான் ஷாப்பிங் போகணும் “ என்றாள் மீண்டும்..

“ ஏன்…?? ”

“ என்ன ஏன் ?? எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்…”

“சரி எல்லாம் லிஸ்ட் போட்டு குடு நாளைக்கு நீ கேட்டது எல்லாம் உன்கிட்ட இருக்கும் “ என்று கூறிக்கொண்டே மீண்டும் படுத்தான்.. ஆனால் மித்ராவோ மறுபடியும் அவன் போர்வையை இழுத்து “ எல்லாமே லிஸ்ட்ல சொல்ல முடியாது..  சில.. சிலது எல்லாம் நேருல போயி தான் பார்த்து வாங்கணும் “ என்றாள் காட்டமாக..

“இவ இப்படி சொன்னா கேக்கமாட்டா.. நம்ம பாணியில தான் சொல்லணும்.. இரு டி வரேன் ” என்று மனதிற்குள் கூறிக்கொண்டே “ டி மித்து என்னைய தூங்கவே விடமாட்டியா ?? ”

“ ம்ம்ச் இப்ப உனக்கு தூக்கம் தான் ரொம்ப முக்கியமா ?? எனக்கு எனக்கு சில திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்… “

“ நான் தான் லிஸ்ட் போட்டு குடு சொல்றேன்ல “

“ நான் தான் சொல்றேன்ல எல்லாமே லிஸ்ட்ல சொல்லிட முடியாது.. உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா??? ச்சே ஒரு நைட் டிரஸ் கூட இல்ல. நான் நேருல தான் போயி வாங்குவேன்.. “

“ ஏய் சொன்னா கேக்கமாட்ட… உனக்கு என்னென்ன தேவையோ எல்லாம் நாளைக்கு உன் கைக்கு வரும்.. பேசாம படுத்து தூங்கு..”

“ எனக்கு என்ன தேவைன்னு உனக்கு எப்படி தெரியும்??

“ நான் உன்னைய வீட்ட விட்டே வெளிய போககூடாது சொல்லி இருக்கேன்.. இதுல நீ ஷாப்பிங் வேற போகணும் சொல்லுற ?? உனக்கு என்ன வேணும் வேணாம்னு எனக்கு தெரியாது. ஆனா என் பொண்டாட்டிக்கு எது எல்லாம் வாங்கி குடுக்கணும்னு எனக்கு நல்லா தெரியும்.. இப்ப அமைதியாக தூங்கு “ என்று கத்திவிட்டு படுத்து உறங்கிவிட்டான்..

(விவரமா தான் யா பேசுறான் )

அவனது பதிலில் ஒரு நொடி திகைத்தவள் இருந்தவள் “ இரு மனு.. நாளைக்கு நீ என்ன வாங்கிட்டு வரன்னு நானும் பாக்குறேன்… அதை வச்சே உன்னைய நல்லா சுத்த விடுறேன்..” என்று கருவிக்கொண்டு அவளும் படுத்து உறங்கினாள்..

அவள்  நினைத்து கூட பார்க்காத பொருட்கள் எல்லாம் வாங்கிகொண்டு தன் இரு கைகளிலும் பைகளை பிடித்தபடி மறுநாள் இரவு மித்ரா கூறிய நேரத்திற்கு சுமார் இருபது நிமிடங்கள் தாமதமாக வாசலில் வந்து நின்றான் மனோகரன்..

அத்தனை நேரம் அண்ணன் சரியான நேரத்திற்கு வந்துவிடுவான் என்று சவடால் பேசிய அவனது தம்பிகள் மூவரும் இப்பொழுது மித்ராவின் கேலி பார்வைக்கு ஆளாகினர்..

வாசலின் அந்த பக்கம் மனோகரன்.. நடுவில் மித்ரா சுவரில் சாய்ந்து தன் இரு கைகளையும் கட்டி சிரித்தபடி நின்று இருந்தாள்.. அவளுக்கு இந்த பக்கம் மனோவின் தம்பிகள்.. மூவர் முகத்திலும் ஈயாடவில்லை..

“ என்ன திவா எல்லாம் சொன்னிங்க எங்க அண்ணன் சரியான நேரத்துக்கு வந்திடுவாருன்னு ?? இப்ப என்ன சொல்றிங்க ?? “ என்றாள் நக்கலாக.. மனோ மனதிற்குள் “ டி மித்ரா என் தம்பிங்க முன்னாடியே என்னைய கிண்டல் பண்றியா ?? நல்லா பேசிக்கோ டி.. ஏன்னா இனிமே தான் இருக்கு உனக்கு கச்சேரி..” என்று எண்ணிகொண்டான்..

“ என்ன கிருபா உங்க அருமை அண்ணன் இன்னைக்கு கூர்க்காக்கு காவலா ?? ஆமா இதென்னடா போர்ட்டர் போல வந்து நிக்கிறாரு “ என்று கூறி சிரிக்க தொடங்கவும் “ மித்து டியர் எல்லாம் நீ ஆசையா கேட்ட திங்க்ஸ் தான் டா.. உனக்காக நானே போயி வாங்கிட்டு வந்தேன் அதான் டார்லிங் லேட் “ என்றான் சிரித்தபடி..

இதை கேட்டதும் அவனது தம்பிகள் மூவரும் “அண்ணி பாருங்க அண்ணி அண்ணன்க்கு உங்க மேல எவ்வளோ பாசம்.. உங்களுக்காக தான் அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டு வந்து இருக்காங்க.. அதுவும் இல்லாம இன்னைக்கு முதல் நாள் தானே சோ டுடே மட்டும் உள்ள விடுங்க “ என்றனர்..

(நல்லா போடுறீங்கடா ஜால்ரா )

“ என்னடா இது அவங்க அண்ணன் ஒரு வார்த்தை பேசுனா அதை கப்புன்னு பிடிச்சு இப்ப என்னைய டீல்ல விடுறானுங்க.. ஹ்ம்ம் பரவாயில்ல உங்க வழிக்கு வந்தே உங்களை வழிக்கு கொண்டு வரேன் ..” என்று நினைத்தபடி

“ நீங்க மூணு பெரும் சொல்லுறதுனால தான் உள்ள விடுறேன்.. நாளைக்கும் இப்படியே செஞ்சா வெளிய தான் நிக்கணும் “ என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

மனோவோ “ ரூம்க்கு தானே போற இரு டி வரேன் “ என்று தனக்குள் கூறி சிரித்தபடி உள்ளே சென்றான்.. ஆனால் அங்கே மித்ரா இல்லை.. அனைவரையும் உண்ண வருமாறு அழைத்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.. மனோகரனும் அவளது ஆட்டத்திற்கு எல்லாம் தன் அமைதியான சிரிப்பை மட்டுமே பதிலாக குடுத்தபடி உணவு அருந்தினான்.. கிருபா அவனிடம்

 “ அண்ணா தயவு செஞ்சு நாளைக்கு இருந்து சரியா வந்திடுங்க ப்ளீஸ்.. அண்ணி கிண்டல் பண்ணியே கொல்லுரங்க “ எனவும் “ டேய் தம்பி உங்க அண்ணிய எப்படி சரி பண்றதுன்னு எனக்கு தெரியும்.. சோ யு டோன்ட் வோரி மேன் “ என்றான் அவனது அருமை அண்ணன்.. 

சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் தங்கள் அறைக்கு செல்லவும் மித்ரா மனோகரனாவ்ருய் முறை முறைத்துவிட்டு எழுந்து சென்றாள்..” பாத்து பாத்து கண்ணு தெரிச்சு கீழ விழுந்திட போது… உன்கிட்ட அழகா இருக்கிறதே அது ஒண்ணுதான் “ என்று அவளை வம்பிளுத்தபடி அவனும் பின்னே சென்றான்…

அறைக்குள் ஒரு இருபத்தி ஐந்து வயது பெண்ணுக்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவையோ அது அனைத்தும் கடை பரப்பபட்டு இருந்தது.. இதை மித்ரா சிறிதும் எதிர்பார்கவில்லை.. ஏதோ வங்கி வருவான் அதைவைத்து அவனை நன்றாக சுற்ற விடலாம் என்று எண்ணியிருந்தவள் வாயடைத்து நின்றாள்..

“ என்ன மை  டியர் பொண்டாட்டி எல்லாம் சரியா இருக்கா?? “

“ இது இதெல்லாம் நீ… நீயா போயி வாங்குன ?? ”

(பின்ன துணைக்கு நாலு பேரா போவாங்க?? )

“ சிலது நான் நேருல போயி வாங்குனேன்.. சிலது ஆன்லைன்ல பார்த்து பார்த்து என் மித்துகாக நானே செலக்ட் பண்ணேன்.. எப்படி டியர் இருக்கு…??”

அவள் என்னவென்று கூறுவாள்.. தலைக்கு போடும் ஷாம்பூவில் இருந்து காலுக்கு போடும் செருப்பு வரை அனைத்தும் இருந்தன.. அவள் அடிகடி அணியும் காட்டன் குர்தா, இரவு உடைகள், ஸ்கர்ட், சேலைகள், இது தவிர அவனது விருபத்திற்கும் ஏற்ப சில உடைகள், அதற்கு ஏற்ற உள்ளாடைகள் வேறு…

அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தவள் திகைத்தேவிட்டாள்..   “ என்ன தைரியம் இவனுக்கு?? இதெல்லாம் எனக்கு வாங்கிட்டு வந்து இருக்கான்..  நான் நினைச்சதை விட ஸ்பீட்டா  இருக்கானே..” என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் உரைத்தது..” இவனுக்கு எப்படி என் அளவு தெரியும்..?? “ என்று நினைக்கும் பொழுதே அவளுக்கு கோவம் வந்துவிட்டது..

“ என்ன டியர்.. இதெல்லாம் பார்த்ததும் என்னைய ஓடி வந்து கட்டிபிடிப்பன்னு பாத்தா இப்படி முறைச்சுகிட்டு நிக்கிற?? ” என்று சீண்டினான்..

“ உன்னைய.. இது இதுல்லாம் வாங்க சொன்னேனா ???உன்.. உனக்கு எவ்வளோ தைரியம் ??  “ என்றாள் ஆங்காரமாக..     “ இதுல தைரியம் எங்க இருந்து வந்தது மித்து ?? நீ என் மனைவி.. அதுவும் நான் காதலிச்சு கல்யாணம் பண்ணவ.. நான் உனக்கு இதெல்லாம் வாங்க கூடாதா ?? சரி சரி சீக்கிரம் எல்லாம் போட்டு காட்டு  ” என்றான் உள்ளே நகைத்தபடி..

“ திமிர் பிடிச்சவன்.. எப்படி பேசுறான்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா ?? ஒரு பொண்ணுகிட்ட இப்படியா பேசுறது??  இவனுக்கு பெரிய இவன்னு நினைப்பு” எண்ணியதை கோவத்தில் வாய் விட்டே சொல்லியும் இருந்தாள் மித்ரா.. அதை கேட்ட மனோகரனோ சிரித்தேவிட்டான்..

“ மித்து நான் என் மனைவிக்கு இதெல்லாம் வாங்கி தார நான் ஏன் வெக்கப்படனும்.. இதை எல்லாம் போட்டு என் முன்னால நீ தான் அப்படியே கொஞ்சமா வெக்கப்பட்டு, அப்படியே லேசா முகம் சிவந்து நடந்து வரணும் நான் அதை பார்த்து ரசிக்கணும் “ எனவும்

(அவ உன்னைய அடிக்காம இருந்தா சரி )

“ கனவுல கூட அதெல்லாம் நடக்காது..”

“ ஏன் ஏன் நடக்காது… என் கனவுல என்னென்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா ?? ஒன்னொன்னா சொல்லவா?? ” என்றான் உல்லாசமாக.. “ டி என்னைய நேத்து தூங்கவிடாம எப்படி படுத்துன ?? ” என்று மனதில் நினைத்துகொண்டு..

“அய்யோ !! இவன் என்ன இப்படி பேசுறான்… இவன் முன்னே நிக்கவே கூடாது” என்று முடிவெடுத்தவள் அவன் வாங்கி வந்து இருந்த இரவு உடையில் ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள் வேகமாக..

மனோ சந்தோசமாக சிரித்தபடி “ மித்து எனக்கு தெரியும் உனக்கு கோவம் வரும்னு.. ஆனா எனக்குள்ள வந்த காதல் உனக்குள்ளையும் வரணும்.. நம்ம கல்யாணத்தோட ரகசியம் உனக்கு தெரிஞ்சா நீ என்னைய சாதாரணமா புருசனா ஏத்துக்கலாம்.. ஆனா நான் எதிர் பாக்குறது எல்லாம் உன்னோட காதலை தான் மித்து.. சோ டெய்லி டெய்லி இப்படி தான் எதா ஒரு லவ் அட்டாக் நடக்கும்..” என்று கூறிக்கொண்டே அவள் வரவுக்காக காத்திருந்தான்..

இளம் ரோஜா வண்ண நிறத்தில் அடர் ரோஜாக்கள் இட்ட இரவு உடை.. மித்ராவின் நிறத்தை இன்னும் தூக்கி காட்டியது.. குளியறைக்குள் அதை அணிந்து கண்ணாடி பார்த்த மித்ரா ஒரு நிமிடம் திகைத்துவிட்டாள்.. அவள் மனதிற்குள் இருந்த ரசிக மனம் தலை தூக்கியது..” நல்லா தான் வாங்கி இருக்கான்.. “ என்று என்னும் பொழுதே “ அய்யயோ அவசரப்பட்டு இன்னிக்கே இதை நான் போட்டேனே.. கோவமா இருக்குறது போல இருக்கனும் நினைச்சேன். கிறுக்கு பைய பேசியே கொல்றான்..  அவன் முன்னாடியே இதை போட்டு போனா என்ன நினைப்பான்…” என்று யோசித்தவளுக்கு வெளியே செல்வதை தவிர வேறு வழி இல்லை..

மனோகரன் உறங்கிவிட்டானா இல்லையா என்று பார்த்தவாறே மெல்ல மெல்ல வெளியே சென்றாள்.. அவனின் விசில் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவள் அவனது பார்வையில் பேச்சற்று நின்றாள்..

“ வாவ்..!!! பிங்க் பியூட்டி…. நான் எதிர் பார்த்ததை விட இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு மித்து.. சரியான சைஸ்ல  பிட்டா இருக்கு…” என்று கூறி அவளை ஒருமுறை சுற்றி வந்தான்.. அவனது பார்வையில் பேச்சற்று நின்றவள் அவனது வார்த்தையில் வேகுண்டு அவனை எரித்துவிடுவது போல பார்த்தாள்.

“மித்து பாப்பா… உன் மனசுல என்ன கேள்வி ஓடுதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. அதுக்கு நானே பதிலும் சொல்லட்டுமா ?? ” என்று கூறியபடியே அவளை மேலிருந்து கீழாக ஒருமுறை பார்த்து ரசித்தவன் “ ஏன் மித்து டியர் கண்ணு அளந்திடாத அளவையா கை அளந்திட போகுது ?? ” என்றான் கரகரப்பான குரலில்..

அவனது பதிலை கேட்டு திகைத்த மித்ரா தன் முகம் சிவந்து உடல் முழுவதும் இனம் புரியாத ஒரு உணர்வு பரவுவதை உணர்ந்தாள்.. 

கண் மூடி கண்

திறக்கும் நேரம் – என்

கனவுகள் எல்லாம் கலைந்து போனதே.

என் மனதை மயக்க – நீ

செய்யும் மாயமெல்லாம்

மாயமாகுமோ ??

கண் வழியே காதல் – நுழையுமாம்

உன் கண்டிப்பில் காதல்

மலருமோ ???                          

                                மாயம் – தொடரும்.

Advertisement