Advertisement

மாயவனோ!! தூயவனோ – 5 

மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம் உண்மை போல தான் இருக்கு.. நான் ராஜகுமரியாமே?? ஒருவேள நிஜமாவே நம்மல லவ் பண்றானோ??” என்று மனோகரனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள்..

அவளது சிந்தனையை தவறாக புரிந்து கொண்ட மனோகரன் “ என்ன மித்து இங்க எல்லாம் ஓகே தானே?? ” என்றான் கேள்வியாக..

“ ஹா !! என்ன மனு ?? ” என்றாள் பதிலுக்கு..

“ சரியா போச்சு போ.. இங்க இந்த ரூம் எல்லாம் ஓகே தானே.. இது என் ரூம் தான் மித்து. நீ வரதுனால கொஞ்சம் அல்டெர் பண்ணோம்” என்றான் மென்மையாக.. அவனையே விழி விரித்து பார்த்தபடி இருந்தாள் மித்ரா..

“ என்ன மித்து இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே பட பட பட்டாசு மாதிரி தம்பிங்க கிட்ட பேசுன?? இப்போ என்ன ?? ” என்றான்..

“ இல்ல.. அது.. அது வந்து.. உன்.. உங்க அப்பா அம்மா.. சித்தி சித்தப்பா எல்லாம் “என்று மேலும் கேட்க தயங்கி வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

இதை கேட்டு அவன் முகம் கருத்து சிறுத்தது.. ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன் “ ஹ்ம்ம் இதை எல்லாம் சொல்லி தான் உன்னைய இங்க நான் கூப்பிட்டு வந்து இருக்கனும்.. ஆனா இங்க வந்த பிறகு சொன்னதான் உனக்குமே கொஞ்சம் புரியும்னு தான் சொல்லல”

“ம்ம்ம் “

“ பத்து வருசத்துக்கு முன்ன அப்போ தான் நான் காலேஜ் முதல் வருஷம் மித்து.. தம்பிங்க எல்லாம் குட்டி குட்டி பசங்க.. எப்பையுமே வருசத்துக்கு ஒரு தடவ நாங்க எல்லாரும் சேந்து ஒரு பத்து நாள் விடுமுறைக்கு ஊட்டி போவோம்..”

“ அப்படிதான் அப்பையும் கிளம்பினோம்.. சந்தோசமா.. ஆரவாரம கிளம்பினோம்.. பசங்க நாங்க எல்லாம் ஒரு வண்டிலையும், பெரியவங்க எல்லாம் முன்ன ஒரு வண்டிலையும் கிளம்பினோம்.. இந்த பிரபாக்கு அப்போ தான் அஞ்சு வயசு.. அவனும் எங்க கூட ஒட்டிக்கிட்டான்..”

“ பெரியவங்க போன வண்டி திடிர்னு மலை மேல ஏறும் போது பிரேக் பிடிக்கல போல..  டிரைவர் சைட்ல இருந்த பாறைல முட்டி நிறுத்த முயற்சி செஞ்சு இருப்பார் போல.. ஆனா விதி அந்த பாறை இருந்தது மலையோட இன்னொரு முடிவுல அது தெரியாம டிரைவர் ஒட்டி வண்டிய கொண்டு போக வண்டியும் சேர்ந்து உருண்டிருச்சு..”

“ பின்னால வந்த எங்களுக்கு எதுவும் புரியல.. சரி கொஞ்ச நேரம் வண்டிய நிறுத்தி வியு பாக்க போறாங்க போலன்னு தான் நாங்க எல்லாம் நினைச்சோம்.. ஆனா கண்ணு முன்னாடி என்ன நடக்குதுன்னு எங்களுக்கு புரியுறதுக்குள்ள பாறையோட சேந்து வண்டியும் விழுந்திடுச்சு..”

“ தம்பிங்க எல்லாம் அழ ஆரம்பிச்சுடாங்க.. ஆனா கார் விழுந்தது ரொம்ப ஆழமான இடம். எல்லாருக்கும் நல்ல அடி.. அங்க பக்கத்துல இருந்த ஆளுங்க தான் உதவி பண்ணாங்க. ஆனா எல்லாரையும் பள்ளத்துல இருந்து தூக்கவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு ”

“ அவசர அவசரமா  எல்லாரையும் ஹாஸ்பிட்டல்கு கொண்டு போனோம்.. கொண்டு போகும் போதே திவா ஓட அம்மா இறந்துட்டாங்க.. அப்படியே கிருபா ஓட அப்பாக்கும் மூச்சு நின்னு போச்சு.. இதை… இதை எல்லாம் நான் கூட இருந்து பார்த்துகிட்டு தான் போனேன் மித்து “ என்று கூறும் பொழுதே மனோகரன் கண்கள் கலங்கிவிட்டன..

மித்ரா இப்படி ஒரு சோகத்தை எதிர் பார்க்கவில்லை.. ஆனால் அந்த பதினெட்டு வயதில் குடும்பத்தின் ஒட்டு மொத்த மரணத்தையும் கண்ணில் பார்ப்பது என்றால் இவன் எப்படி ஒரு துன்பத்தை அனுபவித்து இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.. ஆனாலும் அவனே பேசி முடிக்கட்டும் என்று அமைதியாக இருந்தாள்..

மனோகரனின் கலங்கிய முகத்தை கண்டவள் தான் இந்த விஷயத்தை கேட்டே இருக்க கூடாது போல என்று எண்ணினாள்.. அவனது கைகளை தொட்டு “ சாரி “ என்றாள் குரல் கம்ம..  

ஒரு இரண்டு வினாடி கண்கள் மூடி இருந்தவன் அவளது தொடுகையை உணர்ந்து அவளது கரங்களை பற்றியவாறே மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் ” பசங்க எல்லாம் பயத்துலையும், என்ன நடந்ததுன்னு தெரியாமையும் ஒரே அழுகை.. பிரபாவை சமாதனம் செய்யுறது தான் ரொம்ப கஷ்டமா போச்சு. அப்புறம் அவங்களை மேனேஜர் கிட்ட சொல்லி வீட்டுல கொண்டு போயி விட சொன்னேன்”

“ டாக்டர்ஸ் எல்லாம் இனிமே எதுவும் செய்ய முடியாது சொன்னாங்க. கடைசியா உயிர் ஓட்டிகிட்டு இருந்தது என் அம்மாவுக்கும் பிரபா ஓட அம்மாக்கும் தான்.. கடைசி நேரத்துல என் அம்மா என்கிட்டே பேசணும் சொன்னாங்க.. ஆனா அவங்கனால சரியா பேச கூட முடியல..”

“இ.. இங்க பாரு ம.. மனோ.. இனி.. மே.. நம்.. குடும்பம்.. உன் பொ.. றுப்பு.. தம்பி.. ங்க.. எல்லாம்.. நீ பாத்து.. னும். எல்லாமே உன் கைல.. தா.. இருக்கு.. நீ பொறு. ப்பா நடந்துக்கணும்.. உனக்.. சரியான வயசு வரும்.. போது நல்ல பொண்ணா பாத்து கல்… ணம் பண்ணு.. நீங்க ரெண்டு பேரும் தான் குடும்பத்த நல்லா பாத்துக்கணும்.. சத்தியம் பண்ணு “ இது தான் மனோகரனின் அன்னை கடைசியாக கூறியது..

இன்று வரை மனோகரனும் தான் செய்து குடுத்த சத்தியத்தை இம்மி அளவு கூட பிசகாமல் நிறைவேற்றி வருகிறான்..

இதை எல்லாம் கேட்டு மித்ரா என்ன கூறுவது என்று கூட தெரியாமல் திகைத்து போய் அமர்ந்து இருந்தாள். ஆனால் அவள் கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்த படி இருந்தது.. மனோகரனும் அமைதியாக கண்கள் மூடி அமர்ந்து இருந்தான்..

அவன் கண்கள் முன் நடந்த அனைத்தும் காட்சிகளாக தெரிந்தனவோ என்னவோ.. முகத்தில் வேதனை அப்படியே தெரிந்தது.. மித்ரா தான் முதலில் சுதாரித்தாள்..

“ ஒரு பத்து நாள் என் அப்பா அம்மா இல்லாம என்னால இருக்க முடியல.. ஆனா மனு.. எப்படி எல்லாத்தையும் தாங்கினான்?? எப்படி அவ்வளோ பெரிய இழப்பை தாங்கிட்டு இவ்வளோ பெரிய நிலைமைக்கு வந்தான் “ என்று நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டாள்.. தன் மனதில் தோன்றியதை கேட்டுவிட்டாள்.

அவள் இத்தனை தூரம் தன்னிடம் ஒன்றி பேசுவதே பெரியது என்று தோன்றியது அவனுக்கு.. மெல்ல தலை அசைத்தபடி “ கிட்ட தட்ட ஒரு நாலு வருஷம் நான் சரியா தூங்க கூட இல்ல மித்து.. திவாவும் கிருபாவும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா பிரபா அவன் தான் ரொம்ப அம்மா அம்மான்னு அடம் பிடிப்பான்..”

“ என் படிப்பையும் விடாம, பிஸினசையும் பார்த்து, குடும்பத்தையும் பார்த்து.. இப்ப நினைச்சா கூட எனக்கு மலைப்பா இருக்கு மித்து.. ஆனா இதுக்கு எல்லாம் எனக்கு ரொம்ப துணையா இருந்தது எங்க வக்கீல் அங்கிள் தான்.. அத்தனை அன்பா, பொறுப்பா எனக்கு ஒவ்வொரு விசயத்தையும் சொல்லி குடுத்தாரு.. ஆனா இப்ப அவரும் எங்க கூட இல்லை ”

“ படிப்பு முடியவும் காட்டுத்தனமா உழைச்சேன்.. வீட்டுக்கு வரவே மனசு வராது. ஆனா பசங்க இங்க தனியா இருப்பாங்களே.. நானும் இல்லைனா அவங்க என்ன செய்வாங்க?? இந்த இழப்பு எல்லாம் மீறி தொழில்லையும் முன்னேறி ஒரு நிலைமைக்கு வரதுக்குள்ள யப்பா” என்று கூறி தன் தலையை உலுக்கினான்..

இதை எல்லாம் அவன் கூறி முடிக்கும் போது மித்ரா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.. “ ஹேய் மித்து.. இப்ப.. இப்பதான் எந்த பிரச்சனையும் இல்ல டா.. ஏன் அழுகுர.. இப்ப எல்லாம் சரியா இருக்கு இங்க மா.. “ என்று தவித்தான்  தன் கவலைகளை மறைத்து அவள் ஏன் அழுகிறாள் என்று புரியாமல்.

“ இல்ல.. இல்ல.. எனக்கு ஒரு பத்து நாள் என் அப்பா அம்மாவை விட்டு இருக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கே.. நீ அந்த சின்ன வயசுல எவ்வளோ கஷ்ட பட்டு இருப்ப?? திவா, கிருபா, பிரபா எல்லாம் எப்படி அழுது இருப்பாங்க.. “ என்று அன்று அவர்கள் வேதனை பட்டதை  இன்று நினைத்து அழுதாள்.

அவள் காரணத்தை கூறவும் மனோகரனுக்கு லேசாக சிரிப்பு எட்டி பார்த்தது “ லூசு அதான் எல்லாம் சரி ஆகிடுச்சுல.. இப்ப தான் எங்களை எல்லாம் ஆட்டி படைக்க நீ வந்துட்டியே.. அழுகாத..” என்று கூறி அவள் தலையில் முட்டினான்..

அவளுமே கொஞ்சம் சமாதனம் ஆனவள் “ இங்க பாரு ஏதோ நீ சொன்னது கொஞ்சம் என்னைய மனசு இலக வச்சிடுச்சு. ஆனா அதுக்காக எல்லாம் நீ என்கிட்டே இப்படி ஒட்டாத என்ன..?? “ என்று பழைய மித்ராவாக பேசியவளை ஆச்சரியமாக பார்த்தான் மனோகரன்..

“ என்ன அப்படி பாக்குற ?? ” என்றாள்..

“ இல்ல நான் சொன்னதை கேட்டு இவ்வளோ பீல் பண்ணுரையே, உங்க அப்பா அம்மா கிட்ட பேசணும் தோணலையா ?? ”என்றான் ஒரு மாதிரி குரலில்..

அவன் கேட்ட கேள்வியில் திடுக்கிட்டவள், அதன் பிறகே தான் எடுத்த முடிவை நினைவு கூர்ந்து “ அவங்களை பத்தி என்கிட்டே பேசாத மனு “ என்றாள் அழுத்தமான குரலில்..

இப்போது அவன் திடுக்கிட்டான் “ ஏன் மித்து ?? ”

“ ம்ம்ச்.. உனக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல..” என்றால் மித்ரா சற்றே கோவமாக..

“ ஏனோ ?? ” அவனும் காட்டமாக..

“ ஏன்னு உனக்கு தெரியலையோ ?? நீ இப்பவரைக்கும் நம்ம விஷயம் பத்தி ஏதா என்கிட்டே சொல்லி இருக்கியா ?? அப்போ நான் மட்டும் ஏன் உன்கிட்ட எதுவும் சொல்லணும் ?? ” என்றாள் பதில் கேள்வியுடன்..

அவளது பதிலில் எரிச்சல் அடைந்தவன் “ அதுக்காக உன்ன பெத்தவங்க எங்க இருக்காங்க?? எப்படி இருக்காங்க ?? இதெல்லாம் உனக்கு தெரியவேணாமா ??”

“ வேண்டாம்.. அதான்.. அதெல்லாம் உனக்கு தெரியும்ல.. ஏதோ என்கிட்டே சொல்லிட்டு தான் எல்லாம் செய்யுற மாதிரி.. இப்போவே சொல்லிட்டேன் அவங்ககிட்ட பேச சொல்லி என்னைய எப்பையும் சொல்லிடாத..  அப்புறம் நான் உன்கிட்டயும் பேசணுமா இல்லையான்னு யோசிக்க வேண்டியது வரும் “ என்றால் தன் ஆங்காரத்தை எல்லாம் அடக்கிய குரலில்..

“ ப்ளீஸ் மித்து.. இப்படி எல்லாம் சொல்லாத.. அவங்க உனக்கு..” என்று கூறும் பொழுதே “ எனக்கு நல்லது தான் பண்றாங்க.. எல்லாமே என் நல்லதுக்கு தான்.. இதை தானே சொல்ல வர.. என் லைப்ல எப்படி ஒரு நல்லது நடந்திருக்குன்னு எனக்கும் தெரியுமே.. “ என்றாள் நக்கலாக..

அவளது பதிலில் இருந்த உண்மை அவனுக்கும் உணர்த்தியதோ என்னவோ அமைதியாக “ என்ன இருந்தாலும் அவங்க உன் பேரெண்ட்ஸ் மித்து..”

அவன் முன் போதும் என்பது போல கையை காட்டி “ என் அப்பா அம்மாகிட்ட எப்போ பேசணும்னு எனக்கு தெரியும். நீ சொல்லி தான் நான் அவங்ககிட்ட பேசணும்னு இல்லை. புரியுதா?? வந்துட்டான் பெரிய இவன்னாட்டம் “ என்று சொல்லி கொண்டே அறையை விட்டு சென்று விட்டாள்.. மனோகரனும் ஒன்றும் செய்ய இயலாதவனாய் அமைதியாக நின்றான்.   

(கல்யாணம் ஆகிட்டாலே இப்படி தான் மனோகரா )

“ என்ன அண்ணி பேசி முடுச்சுட்டிங்களா ?? ” என்று கேட்டபடியே வந்தனர் மனோகரனின் அன்பு தம்பிகள்.. அவர்களை பார்த்ததும் மனதில் எழுந்த பாரத்தை முயன்று ஒதுக்கி வைத்தாள் மித்ரா.. “ இல்ல இவங்களுக்கு ஆறுதல் சொல்றேன்னு நான் எதா பேசி பழையது எல்லாம் நியாபக படுத்திட கூடாது” என்று எண்ணினாள்..

(நீ கூட நிதானமா யோசிக்கிற மித்து )

அவர்கள் கேட்டதுக்கு பதில் கூறாமல் மெல்ல நகைத்தபடி “ அப்புறம் உங்களுக்கு எல்லாம் உங்க அண்ணன் கிளாஸ் எடுக்கலையா ?? ” என்றாள்..

கிருபா தான் சட்டேன்று புரிந்து கொண்டான் “ அண்ணி உங்களுக்குமா ?? ” என்றான் ஐயோ பாவமாக.. அவளும் ஆமாம் என்று தலையசைக்கவும் திவா “ அப்போ அந்த கடுப்புல தான் அண்ணி காலையில நம்மல போட்டு  தாக்கிட்டாங்க போல “ எனவும் அவகே ஒரு சிரிப்பலை பரவியது..

( டேய் தம்பிங்களா உள்ள உங்க அண்ணி நடத்துற பரேட் எல்லாம் உங்களுக்கு தெரியல )

மித்ராவும் அவர்களுக்கு தக்க பதிலடி குடுத்து பேசவும் அங்கே ஒரு நீண்ட பேச்சுவார்த்தை தொடங்கியது..

ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் கேலி செய்து பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர்..

அப்பொழுது தான் அங்கே வந்து சேர்ந்தனர் மருதுவும் பொன்னியும்.. பொன்னிக்கு இவர்கள் அனைவரும் ஒன்றாய் பேசி சிரிக்கும் காட்சியை பார்க்கவும் கண்களில் நீர் கசிந்தது..

“ மித்ராமா.. இப்படி ஒரு சிரிப்பு சத்தம் இந்த வீட்டுல கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா.. எல்லாம் நீங்க வந்த நேரம் தான் மித்ராமா .. இந்த சந்தோசம் எப்பையும் இங்க நிலைச்சு நிக்கணும் “ என்று கூறவும் மித்ரவிர்கே மனம் ஏனோ செய்தது..

மருதுவும் மனோகரனும் பேசியபடி வெளியே சென்றுவிட்டனர்… அவர்கள் முகமே மித்ராவிற்கு உணர்த்தியதோ ஏதோ விஷயம் இருக்கிறது என்று… ஆனால் அவளால் தைரியமாக கேட்க முடியாதே..

( ஆமாமா மித்ரா ரொம்ப பயந்த புள்ள தான் )

மனதில் தோன்றிய கலகத்தை மறைத்து மீண்டும் மனோகரனின் தம்பிகளுடன் பேச ஆரம்பித்தாள்..  அனைவரோடு சேர்ந்து வீட்டை சுற்றி பார்த்தாள். பிரபா தான் அவள் கைகளை பிடித்து கொண்டு “ அண்ணி அண்ணி “ என்று மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தான்.. ஏனோ அவனை காணும் பொழுது மித்ரா தனக்குள் தாய்மை உணர்வு தோன்றுவதை உணர்ந்தாள்..

திவா அளவாக பேசினாலும் அவன் ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் மேல் இருக்கும் அன்பு வெளி பட்டது.. கிருபா தான் அருந்த வாலாக இருந்தான்.. வார்த்தைக்கு வார்த்தை அவளோடு வாதாடினான்.. கிண்டல் செய்தான்..            

என்னதான் வசதியாக வளர்ந்தாளும் தங்களிடம் பாசம் காட்ட, கண்டிப்பு செய்ய, வீட்டில் அனைத்தையும் பொறுப்பாய் நின்று கவனிக்க ஒரு பெண் இல்லையே என்றுதான் அண்ணன் தம்பி நால்வரும் ஏங்கி இருந்தனர்..

ஆனால் இன்று மித்ரா அந்த வீட்டிற்கு வரவும் அந்த குறை தீர்ந்தது போல உணர்ந்தனர் அனைவரும்.. மனோகரன் எப்படி நினைத்தானோ ஆனால் அவன் தம்பிகள் மூவரும் மித்ராவை முழுமனதுடன் அண்ணியாக ஏற்றுகொண்டனர்.

அவளுக்குமே இப்பொழுது அவர்களை பார்க்கும் பொழுது மனதில் இனம் புரியாத ஒரு பந்தம் உருவாவதை உணர்ந்தாள்..  அது அவர்களை பற்றி தெரிந்ததாலா இல்லை இறக்கத்தில் வந்ததா என்று எதுவும் புரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு நான்றாக புரிந்தது..

மனோகரனை போல இல்லை அவனது தம்பிகள்.. அவனோ முரடன், முன்கோபி, எப்பொழுதும் அரட்டலும் மிரட்டலும் தான் அதிகம்.. ஆனால் இவர்கள் அப்படி இல்லை.. அண்ணி என்று அழைப்பதே நிஜமான அன்போடு உரிமையோடு அழைக்கிறார்கள்.. அதை மித்ராவின் மனம் உணர்ந்தே இருந்தது..

ஆகையால் அவளும் அவர்களிடம் நன்றாகவே பழகவேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.. “ ஏன் அண்ணி எங்களை எல்லாம் காலையில அப்படி கிண்டல் பண்ணிங்க. ஆனா அண்ணனை மட்டும் நீங்க எதுவுமே சொல்லல “ என்று குறைபாடிகொண்டே  இருந்தான் கிருபா..

( மித்ரா எப்பயுமே மனோ கூட ஸ்ட்ரைட் டீலிங் தான் கிருபா )

 திவா அவனை பார்த்து முறைத்து “ டேய் டேய் உனக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் வந்திட்ட உடனே தைரியம் கூடிருச்சு போல.. அண்ணனையே இழுக்குற “ என்றான்.. இதை எல்லாம் அமைதியாக பிரபா மித்ரவிடம் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்..

“ டேய் திவா நான் என்ன அண்ணனை கைய பிடிச்சா இழுத்தேன்.. அதெல்லாம் அண்ணியோட வேலை.. நான் கேட்டது அண்ணிக்கு அண்ணன் என்ன பிசினஸ் செய்யுறார் என்ன எதுன்னு தெரியவேண்டாமா ?? எப்படினாலும் இந்த பத்து நாளுல இவங்க அதெல்லாம் பேசி இருக்க மாட்டாங்க “ என்றான் கிண்டலாக..

மித்ராவும் அவனது கிண்டலை உணர்ந்து “ கிருபா… உன் ப்ராஜெக்ட்கு எனக்கு ஒரு சுடி தச்சு குடேன் “ என்றாள் கிண்டலாக.. “ அண்ணி நான் சரண்டர்..” என்று இரு கைகளை தூக்கி ஒரு கும்பிடு போட்டான்.. திவாவும் பிரபாவும் “ அண்ணி நீங்க வந்ததுனால தான் இவனை சமாளிக்க முடியுது.. இல்லை மொக்கை போட்டே எங்களை கொன்னுடுவான்” என்று குற்ற பத்திரிக்கை வாசித்தனர்..

( உனக்கு இது தேவையா கிருபா.. உங்க அண்ணனே அவளை பத்தி தெரிஞ்சு தானே அடக்கி வாசிக்கிறான்  )

மித்ராவிற்கு இதெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. வந்த ஒரே நாளில் என்னை அவர்கள் உறவாக மனதில் ஏற்றுக்கொண்டு இப்படி எந்த வித பேதமும் இல்லாமல் பேசி பழகுவதை எண்ணி வியந்தாள்.. தன் மனதில் தோன்றியதை கூறவும் செய்தாள்..

திவா “ அண்ணி உங்களுக்கு தான் நாங்க புதுசு.. ஆனா உங்களை எங்களுக்கு கிட்ட தட்ட ஆறு மாசமா தெரியும்.. சோ எங்களுக்கு நீங்க புதுசாவே தெரியல.. அதுனால தான்.. “

“ என்ன ஆறு மாசமா ?? “ என்றால் திகைத்து..

(அதானே )

“ ஆமா அண்ணி அண்ணன் உங்களை பார்த்து ஸ்லிப் ஆகி ஆறு மாசம் ஆச்சு.. அப்போ இருந்தே உங்களை தெரியும்.. அது மட்டும் இல்ல அண்ணி நான் போன செம்ல நல்ல பெர்செண்டேஜ் வாங்குனதே உங்கனால தான் “ என்றான் கிருபா புதிதாக..

இதென்ன புது கதை என்பது போல பார்த்தாள் மித்ரா..” ஆமா அண்ணி.. நீங்க புக் எடுக்க லைப்ரரி வருவீங்க.. நாங்க குடும்பத்தோட உங்களை பொண்ணு  பாக்க அங்க வருவோம்.. வந்த இடத்துல பஜ்ஜி சொஜ்ஜி கிடைக்காது.. ஆனா நெறைய புக்ஸ் இருக்குமே.. அண்ணன் உங்களை பார்ப்பான்.. நான் நோட்ஸ் எடுப்பேன்.. இவனுங்க ரெண்டு பெரும் எங்க ரெண்டு பெருகும் ஹெல்ப் பண்ணுவானுங்க “ என்று கூறவும் மித்ராவிற்கு மேலும் மேலும் ஆச்சரியம் கூடி கொண்டே போனது..

“ இந்த கிருபா கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா எல்லா விசயமும் வெளிய வந்திடும் போலவே “ என்று எண்ணி கொண்டு இருக்கும் அதே நேரம் மனோகரன் குரல் கேட்டது “ மித்து உள்ள வா.. “

( அதானே பார்த்தேன்…. வந்துட்டான் )

அவனது அழைப்பு வரவுமே மித்ரா மற்ற மூவரையும் திகைத்து போய் பார்த்தாள்.. அவர்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்தனர்.. “ இவன் எப்ப உள்ள வந்தான்?? நான் பாக்கலையே “ என்று எண்ணியவள் அனைவர்க்கும் இரவு வணக்கம் கூறி உள்ளே சென்றாள்.

மனோகரன் தங்கள் அறையில் அமர்ந்து எதோ கோப்புகளை பார்த்தபடி வெளியே நடந்த பேச்சுகளை எல்லாம் கேட்டு கொண்டு தான் இருந்தான்.. ஒரு பக்கம் மனதில் பொறாமையாக கூட இருந்தது.. தன் தம்பிகளுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லையே..

திருமணம் முடிந்து இத்தனை நாளில் ஒரு முறை கூட அவள் அவனிடம் சிரித்து பேசவில்லை.. அவ்வளோ ஏன் முகம் குடுத்து சரியாக ஒரு சாதாரண பேச்சுவார்த்தை கூட அவர்களிடம் இல்லை.. ஆனால் வந்த ஒரே நாளில் தன் தம்பிகள் அனைவரும் அவளிடம் நன்றாக பழகும் போது மனதில் மகிழ்ச்சி தோன்றினாலும் பொறாமையையும் தடுக்க முடியவில்லை..

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எங்கே தன் தம்பிகளிடம் பேசியே விசயத்தை கரந்து விடுவாளோ என்ற பயமும் இருந்தது.. அதானால் தான் அவளை உள்ளே அழைத்தான்..

உள்ளே வந்தவள் “ உனக்கு கொஞ்சம் கூட மண்டையில எதுவும் இல்லையா.. பசங்க கூட பேசிக்கிட்டு இருக்கேன்ல. அவங்க முன்னாடி கூப்பிடுற.. என்ன நினைப்பாங்க “ என்று பொரிந்தாள்..

(அப்படி ஏதாவது இருந்திருந்தா உன்னைய ஏன் மா அவன் கல்யாணம் செய்ய போறான் )

அவனோ கோப்புகளில் இருந்து பார்வையை திருப்பாமல் “ உனக்கு என்ன விடிய விடிய கூட பேசுவ..  நாளைக்கு அவங்க மூணு பேரும் நேரத்துக்கு கிளம்பி ஆபீஸ், காலேஜ், ஸ்கூல் எல்லாம் போகவேண்டாமா ?? ” என்று கேட்கவும் தான் அவளுக்கு உண்மை உரைத்தது..

மனதில் தான் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டாள்.. ஆனாலும் இவன் சொல்லி தான் கேட்பதா என்ற எண்ணமும் தோன்றியது..

“ நிஜமாவே அதுமட்டும் தான் காரணமா ?? ” என்றால் கிண்டலாக.. கண்டுகொண்டாலோ என்று ஒரு நொடி தயங்கியவன் வெளியே காட்டாமல் “ என்ன ?? ” என்றான் கடுப்பாக..

“ சரியான கடுவன் பூனை “ என்று கடிந்தவள் குளியறைக்குள் சென்று முகம் கழுவி வந்தாள்.. “ நான் வீட்ட சுத்தி ஒரு வாக் போகணும் “ என்றாள் எங்கோ பார்த்தபடி.. மனோகரன் கடிகாரத்தை பார்த்தான்.. அது இரவு பத்து என்று காட்டியது..

“காலையில போகலாம்.. இப்போ பேசாம தூங்கு “ என்றான் கண்டிப்பாக.. அவனது ஒவ்வொரு வார்த்தையையும் தட்டி பேசவேண்டும் என்று முடிவு செய்து வந்தவள் இதையா கேட்கபோகிறாள்..

“ ம்ம்ச்.. எனக்கு எப்படியோ இருக்கு.. நான் கொஞ்ச நேரம் நடக்கணும் “ என்று கூறி நடந்தவளை கை பிடித்து இழுத்து நிறுத்தினான்.. உடும்பு பிடி கூட இத்தனை இறுக்கமாக இருக்காது போல.. மித்ராவின் முகத்தில் அவள் உணரும் வலி தெரிந்தது..

“ நான் சொன்னா கேட்கணும்.. புரியுதா.. இப்ப படு “ என்று கூறி அவளை இழுத்து வந்து மெத்தையில் கிடத்தினான்.. மித்ரா நடக்க வேண்டும் என்று கிளம்பியதே இதனால் தான்..

(அரம்பிசுட்டங்கய்யா… )

அங்கே தோப்பு வீட்டில் மித்ரவோடு மனோகரன் இருந்தது என்னவோ இரண்டு நாட்கள் தான். மற்ற நாட்கள் எல்லாம் அவள் தனியாக தான் இருந்தாள்.. ஆனால் இன்று அவன் வீட்டிற்கே வந்து அவனது அறையில் தங்க நேர்கையில் அவளது மனம் சற்று முரண்டியது..

அத்தனை பெரிய அறையில் அவ்வளோ பெரிய மெத்தையில் அவனுடன் படுக்க ஏனோ மித்ராவின் மனம் இடம் தரவில்லை.. இதை கூறினால் அவன் நிச்சயம் கத்துவான் என்று அவளுக்கு தெரியும். அதனால் அவன் உறங்கும் வரை வெளியே நடந்துவிட்டு வந்து அங்கே இருக்கும் ஒரு சிறு படுக்கையில் படுத்து கொள்ளலாம் என்று இருந்தாள்.. ஆனால் மனோகரனோ அவளை நகர கூட விடவில்லை..

அவனையே முறைத்தபடி அமர்ந்து இருந்தாள்.. இரவு உடைக்கு மாறியவன் மெத்தையில் சாய்ந்து மிகவும் ரிலாக்ஸ்டாக அமர்ந்து இருந்தான்..

அவளை பார்த்து கண்ணடித்து “ என்ன மித்து இன்னும் கோவமா ?? “ என்றான் சிரித்தபடி.. “ ரெண்டு நிமிசத்துக்கு முன்ன என்கிட்டே கோவபட்டது என்ன இப்ப சிரிக்கிறது என்ன.. “ என்று எண்ணியவள் முகத்தை திருப்பினாள்..

(வேற வழி இல்லையே அவனுக்கு )

அவனும் சிரித்தபடி “ என்கிட்டே இப்படி முகம் திருப்புற வேலை எல்லாம் வேணாம் சொல்லி இருக்கேன்ல..” என்றான் சற்றே கண்டிப்புடன்..

அதற்கும் அவள் முறைப்பே பதிலாய் வந்தது.. அவனோ அமைதியாக அவளை  எதிர்கொண்டான்.. திடீரென மித்ராவிற்கு சிரிப்பு வந்தது.. அவளையே கேள்வியாக பார்த்தவனிடம் “ என்கிட்டே இருந்து என் செல்ல வாங்கிட்ட.. ஆனா இங்கதான் இத்தனை போன் இருக்கே.. நீ வெளிய போன அப்புறம் நான் அதுல இருந்து யாரு கூடவும் பேசமாட்டேனா ?? ” என்றாள்.

இப்பொழுது அவளை பார்த்து நக்கலாக சிரிப்பது அவனது முறை ஆனது.. “ ஆமா நீ யாருக்கு பேச போற ?? உனக்கு தான் சொல்லிக்கிற மாதிரி பிரண்ட்ஸ் கூட இல்லையே “

(ரொம்ப கஷ்டம் தான்.. )

“ ம்ம்ச்.. எப்படியும் போன் இருக்குல.. ஏன் போலீஸ்க்கு கூட பேசுவேன்.. “ என்றாள் அவளும் திமிராக.. அவளை பார்த்து சிரித்தபடி அங்கு இருந்த வயர்லெஸ் போனை எடுத்து அவளிடம் நீட்டினான்.. “ இந்தா டயல் பண்ணு.. உனக்கு என்ன நம்பர் நியாபகம் வருதோ அதுக்கு டயல் பண்ணு “ என்றான் அவளையே பார்த்து..

அதை வாங்கி அவள் ஆன் செய்யவும் மனோகரனின் அலைபேசி ஒலித்தது.. அதை எடுத்தவன் “ என்ன மித்து டார்லிங்.. என் நம்பருக்கே லாஸ்ட்ல கால் பண்ணிட்ட “ என்றான் நக்கலாக.. அவள் அப்படியே திகைத்து அமர்ந்து இருந்தாள்..

(விஷம் விஷம் அம்புட்டும் விஷம் )

“ என்ன அப்படி பாக்குற..?? இங்க இருக்க எந்த போனை நீ ஆன் பண்ணலும் அது முதல்ல எனக்கு தான் லைன் வரும்.. அப்புறம் நான் ஐயோ பாவமேன்னு மனசு வைச்சு பெர்மிட் செஞ்சாதான் வேற லைன் மாறும் “ என்றான் வில்லன் போல..

மித்ராவின் கடைசி நம்பிக்கையும் தகர்த்து எறியப்பட்டது.. தான் இருக்கும் சூழ்நிலையை எண்ணி அவள் கண்களில் நீர் வழிந்தது.. அமைதியாக கண்களில் நீர் வழிந்தபடி அமர்ந்து இருந்த தன் மனைவியை பார்க்க பாவமாக தான் இருந்தது..

“ ஐம் சாரி மித்து.. எனக்கு மட்டும் உன்னைய இப்படி எல்லாம் கஷ்டபடுத்த ஆசையா என்ன..?? ” என்று ஒரு நொடி இலக ஆரம்பித்த தன் மனதை கடிவாளம் இட்டு நிறுத்தினான்.

“ மித்ரா நான் சொல்லறதை நல்லா கேளு.. “ என்று ஆரம்பித்தவன் அவள் திகைத்த முகத்தை கண்டு வருந்தினாலும் “ இந்த வீட்டை விட்டு நீ எங்கயும் போக முடியாது.. உனக்கு தேவையானது எல்லாம் இங்கயே உனக்கு கிடைச்சிடும்..”

“ அப்புறம் எனக்கு தெரியாம எதுவும் செய்யலாம்னு நீ நினைச்சாலும் அது எல்லாம் இங்க செல்லுபடி ஆகாது.. உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு தெருஞ்சுகிட்டே இருக்கும் புரியுதா..?? ”

“என் தம்பிங்க கிட்ட பேச்சு குடுத்து நீ எதையும் தெரிஞ்சுக்க முடியாது.. ஏன்னா அவங்க எல்லாம் நான் வளர்த்த பசங்க.. ஒவ்வொருத்தனும் விடாகண்டன் கொடாக்கண்டன்… “ என்று அவன் பேச பேச மித்ராவின் முகம் மாறியது..

(அது சரி எல்லாம் உன் தம்பிங்க தானே )

அவள் மனதில் சூறாவளி, சுனாமி அனைத்துமே ஏற்பட்டது..  தன் வாழ்கையை எண்ணி முதல் முறையாக பயந்தாள்.. எத்தனை நாட்களுக்கு இந்த கொடுமையை தாங்குவது என்று எண்ணியவளுக்கு கிடைத்த  விடை என்னவோ பூஜ்யம் தான்.

மித்ராவின் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கூற வேண்டியது அவளது பெற்றோரும் அவளது கணவனும்.. அவர்களோ எங்கே என்றே தெரியவில்லை. இங்கே கண் முன்னே அமர்ந்து இருப்பவனோ எதுவும் கூறுவதாக இல்லை..

அவள் மனதில் ஒட்டி கொண்டு இருந்த சிறு நம்பிக்கையையும் மனோகரன் தான் வார்த்தையால் துடைத்து எறிந்தான்.. தேம்பி அழ கூட தெம்பில்லாமல் மௌனமாக கண்ணீர் வடித்தாள்.. அது கூட அவனுக்கு பொறுக்க வில்லை போல..

“ ம்ம்ச் இப்ப ஏன் இப்படி வாட்டர் பால்ஸ் ஓப்பன் பண்ணுற.. எனக்கு இப்படி சும்மா சும்மா அழுதா பிடிக்காது.. இங்க என் பேச்சை கேட்டு நடந்தா உனக்கு நல்லது.. கேட்டு தான் ஆகனும்.. இல்ல, வேற வழியில உன்னைய அடக்க வேண்டியது வரும் ” என்று கூறி விட்டு விளக்கை அணைத்துவிட்டு படுத்தும் விட்டான்..

“ இனி என்ன செய்ய போகிறாய் மித்ரா?? “ என்று அவள் மனம் அவளிடம் கேட்ட கேள்வியே பூதாகரமாக இருந்தது.. இனி என்ன செய்ய முடியும்..?? தங்க கூண்டில் அடைபட்ட கிளி தான் இனி மித்ரா..

இதோ இத்தனை பெரிய கோடீஸ்வரனின் மனைவி.. சொடுக்கு போட்டால் உடனே வந்து முன்னே நிற்க வேலையாட்கள்.. எண்ணியதை வீட்டிற்கே கொண்டு வரும் வசதி.. ஆனால் இத்தனை இருந்து என்ன பயன்??  இப்படி ஒரு மனைவி இருக்கிறாள் என்றே ஊர் உலகிற்கு தெரியாது..           

குடிசையில் வாழும் பெண்ணுக்கு கூட கணவனின் அன்பும் நேசமும் அக்கறையும் கிடைக்கும்.. இங்கே ஒரு நேரம் பனி துளி மறுநேரம் தணல் மழையாக பொழிபவனை  என்னவென்று நினைப்பாள் அந்த பேதை..

எதுவும் பேச தோன்றாமல் அமைதியாக அவன் உறங்குவதையே கண் இமைக்காமல் பார்த்தாள்.. “ நீ என்னைய நிஜமாவே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணியா ?? உன் தம்பிங்க சொல்லும் போது கூட என் மனசுல லேசா நம்பிக்கை வந்தது.. ஆனா நீ இப்போ பேசுன பாரு பேச்சு..”

“ சத்தியமா உன் மனசுல என் மேல காதல் இருந்திருக்காது.. ஏன்னா உண்மையா காதலிச்சு கல்யாணம் பண்ணவன் இப்படி இருக்க மாட்டான்.. பாவம் உன் தம்பிங்க நீ சொன்ன பொய் எல்லாம் உண்மைன்னு நம்பிகிட்டு இருக்காங்க..” என்று எண்ணியவளுக்கு தன் வாழ்க்கை வெறும் இருட்டு அறையாக பட்டது..           

ஆனாலும் தன் திடத்தை அவள் விட தயாராய் இல்லை.. கண்களை அழுந்த துடைத்தவள் எழுத்து சென்று முகம் கழுவி வந்தாள்.. ஜன்னல் பக்கம் நின்றாள் சிறிது நேரம்.. சில்லென்று வந்த காற்று அவள் முகத்தில் பட்டு மித்ராவின் மனதிற்கும் சேர்த்து ஒரு தெளிவை தந்தது..

அப்படியே நின்று முகத்தில் காற்று வாங்கியவள் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.. அவள் யோசனையின் முடிவில் புன்னகை வந்து அவள் தேன் சிவப்பு நிற இதழ்களில் ஒட்டி கொண்டது..

(காத்து வாங்குன சரி கவிதை எதுவும் வாங்குனியா ??)

“ எனக்கா கண்டிஷன் போடுற..?? உனக்கு நாளைக்கு இருந்து இருக்கு மனு “ என்று தனக்குள் கூறியவள் சிரித்தபடி சென்று படுத்து உறங்கியும் விட்டாள்.. விடியல் அவர்கள் வாழ்வில் என்ன வைத்து இருக்கிறது.     

மாயம் செய்தவனே- என்

நெஞ்சை காயம் செய்தவனே…

மூன்று முடிச்சு போட்டதினால்

என் மூச்சு காற்றும் – உன்

சொந்தமாகுமோ ??

கனவு காணாதே..

கானல் நீராகி போகும்.                                                                                                            

                          

மாயம் – தொடரும்       

                                                                                        

                               

Advertisement