Advertisement

                     மாயவனோ !! தூயாவனோ – 18

 “அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி நிறைந்த முகத்துடன் பார்த்தபடி இருந்தான் மனோகரன்..

“ நான் என்ன தப்பா பண்ணிட்டேன் “ என்பது போல இருந்தது அவன் பார்வை. அவன் மனமோ கூற முடியாத வேதனையை அனுபவித்து.. தன் காதலை விட கடமையும், பொறுப்பும், குடும்பமும் தான் முக்கியம் என்று, எப்பொழுது  முடிவு எடுத்தானோ அன்றிலிருந்தே அப்படிதான் இருக்கிறன்..

எதிலும் பற்றில்லை.. இயந்திரம் போல எதையோ உண்டேன், ஏதோ செய்தேன் என்ற பெயரில் அல்லாடிகொண்டு இருந்தான்..

“என்ன அண்ணா இப்படியே இருந்தா என்ன அர்த்தம், வீட்டுக்கு சரியா வரது இல்ல, சரியா சாப்பிடுறது இல்ல.. என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கீங்க ணா??” என்று திவா அதட்டவும் அதிர்ந்து பார்த்தான் மனோ..

தன் முன்னால் குரல் உயர்த்தி பேச கூட தயங்கும் திவா இன்று அவனையே கேள்வி கேட்கிறான் என்று.. “ அண்ணா உங்களுக்கு எப்படி எங்க மேல பாசம் இருக்கோ, அதே பாசம் எங்களுக்கும் உங்க மேல இருக்கு.. சோ நாங்களும் கேள்வி எல்லாம் கேட்போம் “ என்று கூறியபடி அருகில் அமர்ந்தான் கிருபா..

பிரபா சிறுவன் என்பதால் எதுவம் பேசாமல் அமைதியாய் இருந்தான்.. அவனை கண்ட மனோ “ நீ ஏன் சும்மா இருக்க நீயும் ஏதாவது பேசு “ என்பது போல பார்த்தான்..

“ நான் சொல்ல வேண்டியதையும் இவங்களே சொல்லுவாங்க “ என்று கெத்து காட்டினான் பிரபா..

“ பதில் பேசுங்க ணா.. ஏன் இப்படி இருக்கீங்க ??? உங்க முகமே சரியில்ல.. நாங்க எதுவா இருந்தாலும் உங்ககிட்ட தானே சொல்லுறோம்.. அப்புறம் ஏன் நீங்க மட்டும் எங்களை விலக்கி வச்சு பாக்குறிங்க “ என்று திவா கேட்கவும்

“ டேய் திவா அதெல்லாம் ஒண்ணுமில்ல.. எனக்கு எல்லாத்தையும் விட நீங்க மூணு பேரும் தான் டா முக்கியம் “ என்றான் உறுதியான குரலில்..

“ அது சரி தான்.. ஆனா அதை நீங்க முழு மனசோட சொல்லுறது மாதிரி எங்களுக்கு தெரியலையே..” என்று அங்கலாய்த்தான் இளையவன்..

“ என்னடா இப்படி பேசுறிங்க?? என்.. எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி .. அதான் உங்ககூட எல்லாம் ஸ்பென்ட் பண்ண முடியல “ என்று கூசாமல் பொய் கூறினான் மூத்தவன்..

கிருபா பொருத்து பொருத்து பார்த்தவன் “ டேய் திவா இது வேலைக்கு ஆகாது.. நானும் பிரபாவும் ஏதா ஹாஸ்டல் போறோம், நீ ஏதா மேன்சன்ல போய் இருந்துக்கோ “ என்று கூறவும் மனோ இம்முறை பலமாக அதிர்ந்தான்..

“ டேய் என்னடா பேசுறிங்க ??இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க ” என்று அரட்டவும்

“ எதுவும் நடக்கலையே.. அதான் இப்படி “ என்று நக்கலடித்தான் கிருபா..

அவன் பேச்சு பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தது… இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பிரபா

 “ அடடா நேரா விசயத்துக்கு வரமாட்டிங்க போல.. அண்ணா எங்களுக்கு அண்ணி வேண்டும்.. சோ நீங்க ஒரு கல்யாணம் செய்யணும் வெரி சிம்பிள்.. இதை சொல்ல இந்த ரெண்டு தடியனுங்களும் பக்கம் பக்கமா வாசனம் பேசிட்டு இருக்காங்க “   என்று பட்டென்று பேசி முடித்தான்..

“ என்ன கல்யாணமா ??” என்று மனோ ஆச்சரியமாய் கேட்கவும் மூவரும் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினார்.. அப்பொழுதுதான் மனோவிற்கு முழுவதும் விஷயம் புரிந்தது.. இந்த கிருபா அனைத்தையும் போட்டு உடைத்துவிட்டான் என்று.. திரும்பி கிருபாவை பார்த்தான்..

அவனோ தன் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரித்துவைத்தான்.. “ அவனை என்ன ணா பாக்குறிங்க ??? எங்க லைப் எப்படி உங்க பொறுப்போ அதே மாதிரி உங்க லைப்பும் எங்க பொறுப்பு.. சோ நீங்க கல்யாணம் பண்ணனும் அதுவும் மித்ராவ “ என்று திவா உறுதியாய் கூறவும் தலையில் கை வைத்தே அமர்ந்துவிட்டான் மனோ..                                      

“ ஹ்ம்ம் இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் ??” என்று மனோ ஒரு கலைப்பான குரலில் கேட்கவும்

“ அவசரம் இல்லைணா அவசியம்… இந்த வீட்டுக்கு ஒரு மருமக வரணும், எங்களுக்கு அண்ணி வரணும்”  என்று உறுதியாய் மூவரும் கூறவும் மனோ

“ டேய் புரியாம பேசாதிங்க டா.. நீங்க நினைக்கிறது மாதிரி எல்லாம் இது அவ்வளோ ஈஸி இல்லை.. எனக்கு இப்போ இதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல “ என்று மறுத்துவிட்டான்..

“ இன்ட்ரெஸ்ட் இல்லாம தான் இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற லைப்ரரில கார்ட் போட்டிங்களா அண்ணா “ என்று அப்பாவியாய் திவா கேட்கவும் மறுபடியும் மனோவின் முகம் கிருபாவை பார்த்து முறைத்து..

“ ஹி ஹி என்ன அண்ணா!!! நோ முறைப்பு.. எனக்கு தெரியும் ணா நீங்க கண்டிப்பா எங்களை மனசுல வச்சுக்கிட்டு தான் இந்த முடிவு எடுத்து இருப்பிங்கன்னு. அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் “

அனைவர்க்கும் அனைத்தும் தெரிந்தவிட்டது என்று தெரிந்தபின் மனோவால் மேலும் சமாளிக்க முடியாமல் போனது.. “ டேய் அதுக்கில்லடா…”

“ போதும் ணா.. அதுக்கில்ல இதுகில்லன்னு.. இப்போ நாங்க சொல்லும் போது கல்யாணம் பண்ணா உங்களுக்கு நல்லது “

“ இல்லாட்டி “

“ இல்லாட்டி நிச்சயமா நாங்க மூணு பேரும் நீங்க சொல்லுற பொன்னை கல்யாணம் செய்ய மாட்டோம்.. எப்படி வசதி ??” என்று கிருபா மிரட்டினான்..

அவன் கூறுவதை கேட்டு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் மனம் இவர்கள் செய்தாலும் செய்வர் என்றே கூறியது. ஆனாலும் எதையும் வெளிகாட்டாமல் “ நீங்க நினைக்கிறது போல கல்யாணம் ஒன்னும் அவ்வளோ ஈஸியான விஷயம் இல்ல டா..” என்று கூற வரும் போதே

“ அண்ணா இப்போ நாங்க கேட்கிறது உங்களோட சம்மதத்தை.. சரின்னு மட்டும் தான் சொல்லணும் “ என்று பிரபா கூறவும் மனோவிற்கு தன் நிலையை எண்ணி சிரிப்பு தான் வந்தது..

பெரிய பெரிய ஆட்கள் கூட தன் முன்பு நின்று பேச பயப்படும் காலத்தில் தன் தம்பிகள் முன்னால் பதில் பேசமுடியாமல் தவித்து கொண்டு இருப்பதை காண அவனுக்கே புதுமையாய் இருந்தது..

“ இப்ப என்னைய என்னதான்டா  பண்ண சொல்றிங்க ??” என்று சலிப்பை கொட்டினான் மனோகரன்..

“ ரொம்ப சிம்பிள் அண்ணா நீங்க மித்ராவ கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லணும் அவ்வளோதான் “ என்று கூறினார் மூவரும்..

“ டேய் இதுல நான் சரி சொல்லுறது எல்லாம் இருக்கட்டும், முதல்ல அவங்க வீட்டுல சரி சொல்லணும், அதைவிட அந்த பொண்ணு சரி சொல்லணும்.. உங்க அவசரத்துக்கு இதெல்லாம் நடக்குமா டா “ என்று தம்பிகளுக்கு புரியவைத்துவிடும் வேகத்தில் பேசினான்..

“ எல்லாம் நடக்கும்.. அவனவன் லவ் பண்ணுற பொண்ணுக்காக என்னென்ன பண்ணிட்டு இருக்கான், நீங்க என்னடான்னா இப்படி இருக்கீங்க “ என்று கிருபா கூறவும் மற்ற மூவரும் அவனை ஒரு சந்தேக பார்வை பார்த்தனர்..

அவர்களின் பார்வையை உணர்ந்த கிருபா “ ஹேய் ஹேய் இப்போ என்ன பால் என் பக்கம் திரும்புது.. நான் ஜஸ்ட் உலகத்துல நடக்கிறதை தான் சொன்னேன்.. சரி சரி அண்ணன் சரி சொல்லியாச்சு.. இனிமே ஆகா வேண்டிய வேலைய பார்க்கலாம் ” என்று வேகமாக மழுப்பினான்..

“நான் எங்கடா சரி சொன்னேன் “ என்று மனோ கேள்வி எழுப்பவும்

“ அதெல்லாம் அப்படிதான்.. உங்களுக்கு சரி சொல்லுறதை தவிர வேற சாய்ஸ் இல்ல.. “

“ ஹ்ம்ம் புரியாம பேசிட்டு இருக்கீங்க டா எல்லாம்.. நானும் அதை கேட்டுகிட்டு இருக்கேன்” என்று அலுப்பாய் கூறினான் மனோ..

இப்படி இவர்கள் அண்ணன் தம்பி நால்வரும் மனோவின் காதலை பற்றி பேசி கொண்டு இருக்க, விதி அவர்கள் பேசுவதை எல்லாம் நன்றாய் காதை தீட்டி கேட்டுவிட்டு வழக்கம் போல தன் வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்தது..

மித்ராவிற்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியவில்ல.. அவள் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.. எப்பொழுதும் போல காலையில் எழுந்து தன் அன்னையுடன் சண்டைபோட்டு அவரை வம்பிளுத்தபடி வேலைக்கு செல்வதும்  மாலை வீடு வருவதும், மீண்டும் தன் சேட்டைகளை தொடர்வதும், தந்தையுடன் பொழுதை போக்குவதும், தன் அண்ணனுடன் கணினியில் பேசுவதும் தன் நாட்களை கழித்தாள்..

தன்னை சுற்றி விதி ஒருபக்கம் கரிய மேகங்களை பரப்பிக்கொண்டு தன்னை அதற்குள் இழுக்க வருகிறது என்று அறியாமல் ஒவ்வொரு நொடியையும் எப்பொழுதும் போல துள்ளலுடன் போக்கி கொண்டு இருந்தாள்..

அப்படி ஒருநாள் மாலை தன் அன்னையுடன் வாயடிதுகொண்டு வீட்டில் தொலைக்காட்சி முன் அமர்ந்து இருந்தாள்.. தாமரையோ வாசலை பார்ப்பதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தார்.. அவரை கண்ட மித்ரா

“ என்ன மா யார எதிர்பாக்குற ?? யாரும் நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்களா என்ன ?? “

“ இல்ல டி மித்ரா உங்க அப்பா எப்பையும் இந்நேரம் எல்லாம் வீட்டுல இருப்பாரு. இன்னைக்கு என்னவோ ஆளை காணோம்.. போன் பண்ணலும் எடுக்கலை “

“ ஹ்ம்ம் அப்பா வேலை பத்தி தான் உனக்கு தெரியுமேமா.. எதா கணக்கு டேலி ஆகம இருக்கும். அதை போட்டு உருட்டிட்டு இருப்பார்.. வந்திடுவாங்க மா “

மகள் கூறுவதில் உண்மை இருந்தாலும் தாமரையின் மனம் அதை ஏற்கவில்லை.. சில நேரங்களில் ரவிச்சந்திரன் தாமதமாக வருவதும் உண்டுதான் ஆனால் இன்று ஏனோ தாமரையின் மனம் மிகவும் குழப்பத்துடன் இருந்தது.. தன் கணவரின் வருகைக்காக காத்து இருந்தார்..

சோர்ந்த முகத்துடனும், தளர்ந்த நடையுடனும் வீட்டினுள் நுழைந்த ரவிச்சந்திரனின் முகத்தை கண்டதுமே தாமரையின் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.. அவர் உள்ளம் என்னவோ நடந்து இருக்கிறது என்று கூறிக்கொண்டே இருந்தது..

எதோ கேட்க வந்தவரை ரவிச்சந்திரனின் பார்வை தடுத்து நிறுத்தியது..  அப்படியே அமைதியாக உள்ளே சென்று விட்டார்..     

“ வாங்கப்பா வந்துட்டிங்களா ??? இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணி இருந்தா கூட அம்மா அவ்வளோ தான் என்னைய ஒரு வழி பண்ணி இருப்பாங்க “ என்று சிரித்தபடி கூறும் தன் செல்ல மகளின் தலையை ஆதுரமாக வருடினார் ரவிச்சந்திரன்.. அவர் முகமோ வேதனையை பிரதிபலித்தது.. 

“ என்னப்பா டல்லா இருக்கீங்க ??”

“ ஹா !!! என்ன டா கேட்ட ??” எதோ யோசனையில் இருந்தவர் திடுக்கிட்டு மீண்டும் தன் மகளிடம் திரும்பினார்

“ஹ்ம்ம் டல்லா இருகிங்கலேன்னு கேட்டேன் பா ??”

“ அது ஒண்ணுமில்ல டா ஒரு கணக்கு ரொம்ப பிரச்னை பண்ணிடுச்சு. அதான் கொஞ்சம் டல்னஸ்“

“ பாத்தியா மா நான் தான் சொன்னேன்ல.. பட் அப்பா.. என்ன பிரச்னையானா கணக்கா இருந்தாலும் என் அப்பா அதை சரி பண்ணிடுவாருன்னு நான் நம்புறே “ என்று மீண்டும் சிரித்தாள்..

கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்.. சிறிது நேரம் மகளிடம் பேசிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டார்.. தாமரையோ தன் வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மித்ரா உறங்கிவிட்டாள் என்ற உறுதியுடன் மாடிக்கு சென்றார்..

அங்கே ரவிச்சந்திரனோ இருளை வெறித்தபடி அமர்ந்து இருக்க “என்னங்க ??? ரொம்ப ஒரு மாதிரி இருகிங்களே ??” என்று கனிவாய் கேட்கும் மனைவியின் முகத்தை பாவமாக பார்த்து வைத்தார் மனிதர்..

இத்தனை வருட திருமண வாழ்வில் ரவிச்சந்திரனுக்கு தாமரையிடம் பிடித்த குணமே இதுதான்.. கணவரின் முகம் பார்த்தே, ஏன் கண் அசைவிலேயே அவர் மனதை அறிந்துவிடுவார்..   

“ என்னங்க இப்படி பார்த்தா என்ன நினைக்கிறது ?? எதாவது பேசுங்க “ என்று ஊக்கவும்

“என்ன பேச சொல்ற தாமரை… ஹ்ம்ம் குடியே முழுக போகுதுன்னு நினைக்கிறேன் “ என்று கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றார்..

“ என்.. என்னங்க.. என்ன சொல்றிங்க??? வருண்… அவனுக்கு எதாவதா ??” என்று கேட்பதற்குள் தாயுள்ளம் பதறி துடித்தது.. அவரோ இல்லை என்பது போல தலையாட்டவும்

“ஐயோ !!! என்னன்னு தான் கொஞ்சம் சொல்லுங்களேன்.. “

“ஸ்ஸ்ஸ் மெல்ல தாமரை மித்ரா முழிச்சு வந்திட போறா.. அவளுக்கு இந்த விஷயம் மட்டும் தெரியவே கூடாது.. தெரிஞ்சா அவ்வளோதான் “ என்று பீடிகை போட்ட கணவரை ஒருவித பயத்துடன் பார்த்தார் தாமரை.

“ என்ன சொல்றிங்க ??? மித்ராக்கு தெரிய கூடாதா ??? ஏன் ?? அவளுக்கு தெரியாம நம்ம இங்க என்ன பண்ணிட முடியுங்க?? முதல்ல நீங்க விஷயம் என்னன்னு சொல்லுங்க”

“ ஹ்ம்ம்” என்ற பெரு மூச்சு மட்டுமே பதிலாய் வந்தது.. சிறிது நேரம் கணவரின் முகம் பார்த்து தாமரையும் அமைதி காத்தார்.. பின் ரவிச்சந்திரன் பேச ஆரம்பித்தார்..

“ அன்னிக்கு நம்ம ஜோஸ்யர் வீட்டுக்கு போகும் போது மினிஸ்டர் பையன்னு ஒருத்தன் வந்து இருந்தான்ல.. எல்லாம் அவனால வந்தது ” என்று இறுகிய முகத்துடனும் கம்மிய குரலுடனும் கூறும் கணவனை கேள்வியாக பார்த்தார்..

“ ஆமா தாமரை.. அவன்… அவனுக்கு நம்ம மித்ராவ கட்டி குடுக்கணுமாம் “ என்று கூறி முடிப்பதற்குள்

 “ என்ன ??? என்ன சொல்றிங்க ??? அவன்..  அவனுக்கே மித்ரா வயசுல பொண்ணு இருக்கும் போலையே ?? அவனுக்கு என் பொன்னை குடுக்கணுமா ?? என்ன தைரியம் ??” என்று பொரிய ஆரம்பித்துவிட்டார்..

“ தாமரை.. தாமரை.. கொஞ்சம் கொஞ்சம் அமைதியா பேசு.. அக்கம் பக்கம் யாரவது கேட்டா கூட பிரச்சனை.. எல்லாம் அந்த ஜோசியக்காரனால வந்தது”

“ என்ன சொல்றிங்க ?? ஜோசியரா ??? அவர் என்ன பண்ணாரு??”

“ அந்த ஜோசியர் தான் இந்த சுந்தர, அதான் அந்த மினிஸ்டர் மகன் கிட்ட உங்க ஜாதகப்படி ரெண்டாவது கல்யாணம் பண்ணனும் அப்படி இப்படின்னு ஏதோ எடுத்துவிட்டு இருக்கான்.. அதையும் கேட்டிட்டு இவன் வந்து நிக்கிறான்“

“  அதெல்லாம் சரிங்க.. ஜோசியர் சொன்னா ஊரு உலகத்துல பொண்ணா இல்லை.. இல்ல அவன் பொண்டாட்டி என்ன முடியாம இருக்காளா ?? நம்ம மித்ராவை ஏன் கேட்கணும்”

“ அந்த ஜோசியர் தான் நம்ம மித்ரா ஜாதகத்தை பார்த்து யோகம் அது இதுன்னு எடுத்து விட்டு இருக்கான்.. நீ தான் போட்டோவ வேற குடுத்துட்டு வந்தியே.. அதையும் இந்த பாவி பாத்து தொலைச்சிட்டு தான் வந்தானாம்.. பார்த்ததுமே பிடிச்சு போச்சாம்.. என்கிட்டையே சொல்லுறான் “

இதை கேட்ட பின்பு தான் தாமரை தான் செய்த முட்டாள் தனத்தை உணர்ந்தார்.. தான் மட்டும் அன்று அந்த புகைப்படத்தை கொண்டு போகாமல் இருந்திருந்தால் இன்று இந்த பிரச்சினையே வந்து இருக்காது.. தலையில் அடித்து கொண்டார்..

“ எல்லாம் என்னால தானங்க… நீங்க அன்னிக்கே சொன்னிங்களே.. நான் தான் கேட்காம விட்டேன்… “ என்று அழுது புலம்பும் மனைவியை என்ன கூறுவது என்று தெரியாமல் பார்த்து வைத்தார்..

“என்னங்க பண்ணுறது இப்போ?? ஆமா அவன் எப்படி உங்களை தேடி வந்தான் ?? நம்ம உடனே வருண்க்கு போன் பண்ணி வர சொல்லலாமா ??”

“ம்ம்ச்.. கண்டுபிடிக்கிறது என்ன அவ்வளோ கஷ்டமா தாமரை.. ஆள் விட்டு கூப்பிட்டு அனுப்புனான்.. சரி நானும் ஏதாவது கணக்கு விஷயமா இருக்கும்ன்னு போனா இப்படி ஒரு குண்டை தூக்கி நெஞ்சுல இறக்குறான்.. என்னால முதல்ல இதை எல்லாம் நம்ப கூட முடியல.. வேண்டாம் வருண் கிட்ட இப்போ இதை சொல்ல வேண்டாம்“

“ ம்ம்.. கடவுளே நல்ல இருந்த குடும்பத்துல ஏன் இப்படி ஒன்னு நடக்கணும்.. ஆண்டவா “ என்று கடவுளை துணைக்கு அழைத்தார் தாமரை..

“ ஏங்க நம்மலே எப்படி சமாளிக்க முடியும்.. சரி நீங்க எப்படி பதில் என்ன பதில் சொல்லிட்டு வந்திங்க ??”

“  என்ன பதில் சொல்ல சொல்ற தாமரை.. சுத்தி ஒரு பத்து பதினைஞ்சு பேரு நின்னு இருக்கானுங்க தடி தடியா… நான் யோசிச்சு சொல்லுராவ்ம்ன்னு நல்ல விதமா பேசிட்டு வந்து இருக்கேன்.. இல்லாட்டி அங்க இருந்து என்னால வந்தே இருக்க முடியாது போல “ என்று ஒரு கையாலாகாத தனத்துடன் கூறும் தன் கணவரை வலி நிறைந்த பார்வை பார்த்தார் தாமரை ..

“ என்னங்க எதுக்கும் நம்ம வருண்கிட்ட”

“ வேண்டாம் தாமரை.. அவன் இங்க இப்ப வரவும் வேண்டாம் அவன்கிட்ட எதுவும் சொல்லவும் வேண்டாம்.. நமக்கு எது ஆனாலும் நம்ம புள்ளைங்க ரெண்டும் நல்லா இருக்கனும்.. முடிஞ்சா மித்ராவ அங்க அனுப்ப ட்ரை பண்ணனும்..”

“ அது எப்படிங்க.. அவகிட்ட எதுவும் சொல்லாம நாம எப்படி அனுப்ப முடியும்??”

“ம்ம் எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்கும்… பார்க்கலாம்.. ஆனா எந்த காரணத்தை கொண்டும் இந்த கல்யாணம் மட்டும் நடக்காது..” என்று உறுதியாக கூறினாலும் பெற்றவர்கள் மனம் இரண்டும் நெருப்பில் இட்ட புழுவாய் துடித்தது..

தாமரையோ உலகத்தில் உள்ள அத்தனை கடவுளுக்கும் வேண்டுதல் வைத்தார்.. ரவிச்சந்திரனோ யாரிடம் இதை பற்றி கலந்து பேசுவது, யாரின் உதவியை நாடுவது என்ற யோசனையில் இருந்தார்.. மகளின் எதிர்காலம் அவர் முன்னே நடனமாடியது..

இப்படியாக ஒருவழியாக பொழுது விடிய, தன் அன்னை தந்தை இருவரின் முகமும் சரியில்லை என்பதை உணர்ந்தாள் மித்ரா..

“ என்னமா ரெண்டு பேருமே டல்லா இருக்கீங்க ??? என்ன விஷயம் ??” என்று வினவும் மகளிடம் என்ன கூற முடியும் அந்த தாயினால்..

“ ஒண்ணுமில்ல மித்ரா.. ராத்திரி எல்லாம் உங்க அப்பா உக்காந்து கணக்கு பாத்தாரு.. ரூம்ல லைட் போட்டே இருந்தனால நானும் தூங்கல.. அதான் “ என்று எதையோ கூறி சமாளித்தார் தாமரை..

மித்ரா வேளைக்கு கிளம்பும் நேரம் ரவிச்சந்திரன் “ இரும்மா மித்ரா நானும் அந்த பக்கம் தான் போறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம் “ என்று கூறி மகளுடன் கிளம்பினார்..

இத்தனை நேரம் மித்ராவை எப்படி தனியாய் அனுப்புவது என்று தவித்து கொண்டு இருந்த தாமரையின் மனம் உடன் அவர் கணவரும் செல்வதை பார்த்து சற்றே நிம்மதி அடைந்தது..

அவர்கள் செல்லவும் சிறிது நேரம் அமைதயாய் அமர்ந்து இருந்தவரின் அமைதியை தொலைபேசியின் சத்தம் கலைத்தது..  “ லேண்ட் லைன்க்கு கூப்பிட்டு இருக்காங்க.. யாரா இருக்கும் ??” என்று யோசித்தபடி சென்று காதில் வைத்தார்..

“ ஹலோ “

“ ஹலோ வணக்கமா…”

“ வணக்கம்… யாரு பேசுறிங்க ??”

“ என்னங்கம்மா.. என்னைய தெரியலையா…??? நான் தான் சுந்தர்.. அமைச்சர் தர்மதுரையோட மகன்.. உங்க வருங்கால மருமகன் “ என்று கூறவும் தாமரைக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது..

“ சொ… சொல்லுங்க…”

“ சொல்லுங்க மாப்ளைன்னு வாய் நிறைய சொல்லுங்க அத்தை” என்று அந்த பக்கம் சிரித்தான் சுந்தர்.. அந்த சிரிப்பு தாமரைக்கு நாராசமாய் இருந்தது.. அமைதியாய் இருந்தார்..

“ என்ன அமைதியா இருக்கீங்க ??? ம்ம் எனக்கும் உங்க நிலைமை புரியுது.. ஆனா பாருங்க என்ன பண்ணுறது எனக்கு உங்க பொன்னு தான் ரொம்ப பிடிச்சு இருக்கு.. “

…..

“ இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ??” என்று கேட்கவும் தாமரைக்கு அவனை கொன்று போட்டுவிடும் ஆவேசம் வந்தது..

“சொல்லுங்க “

“ நான் என்ன சொல்ல??? இனிமே நீங்க தான் சொல்லணும்.. மாமா உங்ககிட்ட எல்லாம் சொல்லி இருப்பார்ல.. அப்புறம் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ??”

தைரியத்தை வரவழைத்து கொண்ட தாமரை “ இல்ல இன்னும் நாங்க எந்த முடிவும் எடுக்கல. கொஞ்சம் யோசிக்கணும்..”

“ தாராளமா யோசிங்க.. நான் வேண்டாம்னு சொல்லவே மாட்டேன்.. ஆனா முடிவும் மட்டும் சரின்னு தான் சொல்லணும்.. அப்புறம் எங்க மித்ரா ??? வேலைக்கு போயிருக்காளா ??”

“ம்ம்”

“ நல்லது.. அப்புறம் மாமாக்கு தான் போன் செய்யனும்னு நினைச்சேன்.. சரி வேலைக்கு போற மனுசனை ஏன் தொல்லை பண்ணனும் அதான் அத்தை உங்ககிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன்.. நல்ல முடிவா சொல்லுங்க “ என்று கூறி சுந்தர் வைத்துவிட்டான்..

அவன் வைத்தபின்னும் கூட தாமரையால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.. அப்படியே கையில் தொலைபேசியை பிடித்தபடி நின்று இருந்தார்.. அவர் மனமோ

“என்ன தைரியம் இவனுக்கு.. நான் அத்தையாம்,, அவர் மாமாவாம்.. ச்சே.. வருங்கால மருமகனாம்.. கடவுளே.. நாங்க யாருக்கு என்ன செஞ்சோம்.. இப்படியா என் பொண்ணு தலையில விதி இருக்கனும் “ என்று எண்ணியவர் உடனே தன் கணவருக்கு அழைத்து விஷத்தை கூறலாம் என்று எண்ணியவர் உடனே தன் எண்ணத்தை மாற்றி கொண்டார்..

“ இல்ல வேண்டாம்.. இதை நான் சொன்னா அவருக்கு ஒழுங்கா வேலை ஓடாது..” என்று முடிவு செய்து அமைதியாக இருந்தார்..

அங்கே மித்ரா தன் தந்தையோடு வண்டியின் பின் பக்கம் அமர்ந்து சென்று கொண்டு இருந்தாள்..

“ அப்பா என்னப்பா ??? இப்படி ஆமை வேகத்துல ஓட்டுனா எப்படி சரியான நேரத்துக்கு போறது.. அப்புறம் ஆபிஸ்ல இருந்து என்னைய ஓட்டிருவான்..” என்று தந்தையின் வேகத்தை அதிகப்படுத்தினாள்..

ஆனால் வால் நேரம் சாலையில் சிகப்பு விளக்கு எறியவும் வண்டி நின்றே விட்டது.. “ ஹ்ம்ம் இதுக்கு தான் நான் சொன்னேன் ஒரு ரெண்டு நிமிஷம் வேகமா வந்து இருந்தா நம்ம போயிருக்கலாம் “ என்று சலிக்கும் மகளை வலியுடன் பார்த்தார் தந்தை..

“ என் பொண்ணு தான் எத்தனை சந்தோசமா நிம்மதியா இருக்கா.. அவளுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சது அவ்வளோதான்.. அவ சந்தோசம் நிம்மதி எல்லாமே காணாம போயிடும்.. கடைசி வரைக்கும் மித்ராக்கு இது தெரியவே கூடாது..” எண்ணின்கொண்டார்..

மனோகரனோ தம்பிகளின் சம்மதம் கிடைத்தபின்னும் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான்.. இவ்வளோ பெரிய ஊரில் அவளை எங்கு சென்று தேடுவான்.. “ மித்ரா “ என்ற பெயரை மட்டும் வைத்துகொண்டு அவனால் என்ன செய்ய முடியும்..

இது என்ன சினிமா கதையா வாழ்க்கையல்லவா.. எதையும் சிறிது யோசித்தே செயல்படவேண்டும் என்று இருந்தான்.. ஆனால் என்ன யோசித்தும் அவனுக்கு தான் அடுத்து செல்ல வேண்டிய வழி மட்டும் தெரியவில்லை..

கிருபா தான் படுத்தி எடுத்துவிட்டான்.. “ என்னன்னா நீங்க.. இப்படி ஸ்லோ மோசன்ல இருக்கீங்க.. உங்க கல்யாணம் முடிஞ்சு அடுத்து இந்த திவாக்கு முடிஞ்சு… அப்புறம் எனக்கு நடந்து… டேய் பிரபா உனக்கு எல்லாம் நேரா அறுபதாம் கல்யாணம் தான் டா  “ என்று கிண்டல் வேறு செய்வான்.. 

மனோகரனுக்கு தன் நிலையை எண்ணி சிரிப்பாக தான் இருந்தது.. எதையும் நினைத்தமாத்திரத்தில் செயல் படுத்துபவன் என்று பெயரெடுத்த மனோகரன் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான்..

இப்படியாக தன்னுடைய சிந்தனையில் மூழ்கி இருந்தான் அவனுடைய காருக்குள் மனோகரன்..

“ இப்ப பார்த்து தான் சிக்னல் எல்லாம் போடுவாங்க.. “ என்று நொந்துகொண்டே பக்கவாட்டில் ஜென்னல் வழியாக திரும்பி பார்த்தான்..

பார்த்தவனின் விழிகள் அப்படியே திகைத்து, பின் மகிழ்ச்சியில் விரிந்தது.. “மி… மித்ரா ..” என்று அவனது உதடுகள் அவனை அறியாமல் அவளுடையே பெயரை ஜபித்தது..

அதன் பிறகே மித்ராவோடு வந்த மனிதரை பார்த்தான்.. பார்த்தவன் இன்னும் இன்னும் மகிழ்ச்சியானான்.. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருந்தது..

அவன் பார்க்கும் பொழுது மித்ரா தன் தந்தையுடன் பேசி கொண்டு இருந்தாள்..” ரவி சார்… மித்ரா…”

“ இவங்க ரெண்டு பேரும் எப்படி… ???”

“ ஒருவேலை ரவி சார் பொண்ணா இருக்குமோ??” என்று யோசித்தவனுக்கு எப்பொழுதோ ஒருமுறை ரவிச்சந்திரன் தன் குடும்பத்தை பத்தி கூறும் பொழுது மகள் பெயர் மித்ரா என்று கூறியது நினைவு வந்தது.. உடனே தன் காதல் கை கூடிய மகிழ்வும் வந்தது மனோகரனுக்கு..

தன் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தும் அவனுக்கு புலப்பட்டது.

 

என் பார்வை உன் விழியில்

என் வார்த்தை உன் மொழியில்

என் இதயம் உன் துடிப்பில்

என் காதலோ ????????

                             

                           மாயம் – தொடரும்                                               

                                                 

                                      

 

     

                                                       

Advertisement