Advertisement

மாயவனோ !! தூயவனோ – 15

“நேற்று இல்லாத மற்றம் என்னது ???

காற்று என் காதில் எதோ சொன்னது

இது தான் காதல் என்பதா ??”

என்று பாடி கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை திருமதி. மனோகரன் தான். எப்பொழுது மித்ரா மனோகரன் மீது தனக்கு இருக்கும் காதலை உணர்ந்தாளோ அப்பொழுது இருந்து இப்படிதான் மாறிவிட்டாள்..

முன்பெல்லாம் மனோகரனோடு எப்போதடா சண்டை போட வாய்ப்பு கிடைக்கும் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்ப்பது போல பார்த்து கொண்டு இருந்தவள் இப்பொழுது எல்லாம் மனோவை கண்டாலே சந்திரனை கண்டு மலரும் அல்லியாய் மாறிவிடுகிறாள்..

வேளைக்கு ஒரு உடை மாற்றுவது, தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுப்பது, முக்கியமாக மனோகரனின் முகம் பார்த்து பேசுவதை தவிர்த்தாள்.  

ஆனால் இவளது இந்த திடீர் மாற்றத்தில் வீட்டில் இருக்கும் உடன் பிறப்புகள் நால்வருக்கும் தான் மண்டை காய்ந்தது.. அதிலும் மனோகரன் தான் மிகவும் பாவம்..

தன் மனைவியின் முகமும்,  கண்களும் அவளது காதலை உணர்த்தினாலும் இன்னும் வாய் திறந்து மனதில் இருப்பதை கூறவில்லையே என்ற ஏக்கம் எட்டி பார்தது.. சரி ஒரு வேலை தான் நெருங்கினால் அவளும் உள்ளத்தில் உள்ளதை கூறுவாள் என்று அவளிடம் நெருக்கம் காட்டினால் முறைப்பே பதிலாய் வந்தது..

“ என்ன டா இது கிட்ட போனா முட்டி நிக்கிறா.. எட்டி போனா கிட்ட முட்டுறா ??” என்று குழம்பி தவித்தான்..  

தூரத்தில் இருக்கும் பொழுது குளிர் நிலவென காய்பவள் அருகில் வந்தால் கூடை கூடையாய் தணலை வாரி கொட்டினாள்.. ஆனால் மனோவிற்கு தெரியவில்லை, எங்கே இவன் மித்ராவின் அருகில் நெருங்கினால் அவள் தன் வசம் இழக்கிறாள் என்றே அவள் இவனை அவ்வப்போது முறைப்பது என்று.

அப்படித்தான்  இவளை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல்  சிந்தனையோடு தன் அறைக்கு சென்றவனை மித்ராவின் உற்சாக குரலும் அவளது பாட்டுமே வரவேற்றது.. ஒரு நிமிடம் நிஜமாகவே மித்ரா தான் படுகிறாளா என்று தோன்றியது மனோவிற்கு..

“ அட இவ பாட கூட செய்வாளா ?? ஹ்ம்ம் “ என்று யோசித்தபடி

“ என்ன மேடம் பாட்டு எல்லாம் பலமா இருக்கு ??” என்று கேள்வியோடு அவளை பார்த்தான்..

“ ஏன் பாட கூடாதா ??” என்று பதில் கேள்வி எழுப்பினாள்..

“ பாடலாம்  பாடலாம்.. தரலாமா பாடலாம்.. தனியா பாடுனா இன்னும் நல்லா இருக்கும். ஏன்னா கேக்குறது நாங்க தானே அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்றான் அவளை சீண்டும் நோக்கத்தில்..

“ ஓ !! சாக்ர்கு பொண்டாட்டியோட பாட்ட கேக்குறது அவ்வளோ கஷ்டமா இருக்கோ ?? இருக்கும் இருக்கும் ஏன் இருக்காது யாராவது மன்னோ… அப்படின்னு ராகம் பாடுனா பிடிக்கும்.. ஹ்ம்ம் “ என்று நொடித்தாள்..

“ ஆரம்பிச்சுட்டாளா “ என்று எண்ணியவன் “ இப்ப ஏன் ரீனாவ இழுக்குற ?”  என்றான் கடுப்புடன்..

“ உங்களுக்கு ஏன் வலிக்கிது ??” என்றாள் அவனை முறைத்து.. “ ஹ்ம்ம் நீ திருந்தவே மாட்ட..” என்று அவனும் பதிலுக்கு முறைத்தான்.. மனதிற்குள்

“ சும்மா பாடிக்கிட்டு இருந்தவ கிட்ட வாய குடுத்து சண்டைய இழுத்துக்கிட்டோமோ??” என்று நினைத்தான்.. ஆனால் மித்ராவின் முகபாவம் வேறு மாதிரி இருந்தது..

“ என்ன இவ?? ரியாக்க்ஷனை மாத்திட்டா.. அப்பாடி இனிமே சண்டை போட மாட்டா” என்று நினைக்கும் பொழுதே “ மனு நான் சொல்லவே மறந்து போயிட்டேன் “ என்று கூறி மேலே கூறாமல் பாதியில் நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்..

“ என்ன சொல்ல போறாளோ கடவுளே “ என்று இறைவனை துணைக்கு அழைத்துக்கொண்டு அவளை என்ன என்பது போல பார்த்து வைத்தான்..

“ அது மனு… அன்னிக்கு நிர்மலா ஆன்ட்டி வந்து உன்னையும் என்னையும் விருந்துக்கு இன்வைட் பண்ணிட்டு போனாங்க.. சாரி மனு நான் சொல்லவே மறந்துட்டேன் “ என்றாள் ஒரு மாதிரி குரலில்..

“ ஹ்ம்ம் எப்போ வந்தாங்க??”

“ அதான் நீ கூட என்னைய அடுச்சியே அன்னிக்கு தான்..” என்றாள் சிறிது குற்றம் சாட்டும் குரலில்..

“ அடிப்பாவி.. அது நடந்து டென் டேஸ் ஆகுது.. இப்ப தான் சொல்ற ?? “ என்றான் அவள் கணவன்..

“ இல்ல.. மறந்துட்டேன் “ என்று அவளோ வெகு சாதரணமாக கூறினாள்..

“ என்ன மறந்துட்ட?? ஹா.. வீட்டுல எல்லார் கிட்டயும் வாய் அடிக்க மட்டும் தெரியுதுல?? நம்மலை மதிச்சு கூப்பிட்டு போயி இருகாங்க, அதுக்கு இப்படிதான் நீ ரெஸ்பெக்ட்  பண்ணுவியா ??” என்று அதட்டினான்..

மித்ராவிற்கு மனதில் கோவம் கனன்றது.. “ என்னைய அடிச்சதை பத்தி சொல்றேன் அதை கண்டுக்காம இவன் விருந்துக்கு போக துடிக்கிறான் “ என்று கருவினாள்..

“ என்ன  டி, இப்படி அமைதியா நின்னு இருக்க.. பதில் சொல்லு.. சும்மாவே அவங்களை நான் கவனிக்கிறது இல்லைன்னு நினைக்கிறாங்க.. இதுல சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு கோவம் வேற.. அப்படி இருந்தும் வீடு தேடி வந்து இன்வைட் பண்ணிட்டு போயி இருக்காங்க.. அப்படி என்ன உனக்கு அசால்ட் ??”

மனோகரன் கூறுவது எல்லாம் சரியென பட்டாலும், இதுவரை அவன் அடித்ததற்கு ஒரு சமாதானம் கூட கூறவில்லை என்று எண்ணினாள்.. ஆனாலும் அவனிடம் இப்பொழுது சண்டை போடும் மனநிலை இல்லை.

 ” ம்ம்ச் சும்மா கத்தாத.. இப்போ என்ன?? நான் மறந்துட்டேன். அவ்வளோதான்.. இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுற..  நீ என்னைய அடிச்சதுக்கும்  இதுக்கும்  சரியா போயிடுச்சு போ “ என்றாள் உலகில் இல்லாத பேரம் பேசி  சிறு குழந்தை போல..

“ அடிப்பாவி எதுக்கும் எதுக்கும் ரிலேட் பண்ணுறா ?? ஹ்ம்ம் இப்ப நானும் வெள்ளை புறா பறக்க விடணுமா “ என்று யோசித்தபடி “ ஹ்ம்ம் இப்போவாது சொன்னியே.. அந்த அளவுக்கு சந்தோசம்..  “ என்றான் மெல்ல..

“ இருக்கும் இருக்கும் சந்தோசமா தான் இருக்கும்.. ஏன்னா அங்க தான் உனக்கு நல்ல கவனிப்பு கிடைக்குமே..” என்றாள் விஷமமாக..

“ எங்க இருந்து தான் இப்படி எல்லாம் பேச பழகினையோ?? கடவுளே “ என்று கூறிக்கொண்டே “ சரி நான் ஆபிஸ் கிளம்புறேன்.. நாளைக்கு வரோம்னு நிர்மலா ஆன்ட்டி கிட்ட சொல்லிடவா ??” என்று  கேட்டான்.. ஆனால் அவளோ காதிலே எதுவும் விழாதது போல இருந்தாள்..

“ ம்ம்ச்.. மித்ரா… ஐம் டாக்கிங் டு யூ ஒன்லி..” என்றான் பற்களை கடித்தபடி…

“ ஹ்ம்ம் கேட்குது.. நீயா நாளைக்கு போகணும்னு முடிவு பண்ணி சொல்லட்டுமான்னு மட்டும் ஏன் என்கிட்டே கேட்கிற ?? சொல்ல கூடாதுன்னு சொன்னா நீ சொல்லாம இருப்பியா ??” என்றாள் ஏகத்தாளமாக..

அவளையே ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி “ முன்னெல்லாம் இப்படி பேசமாட்டாளே??? “ என்று யோசித்தவன் “ சம் திங் செஞ்சட் “ என்றான்..

அவன் பார்வையை உணர்ந்தவள் “ என்ன என்ன ?? அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீ சொன்னதுக்கு தான் பதில் சொன்னேன்..” என்றாள்

“ நான் கேட்டதுக்கு இது பதில் இல்ல மித்து.. சரி விடு நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகலாமா வேணாமா ??”

“ ஹ்ம்ம் போகலாம்…” என்றாள் ஏதோ நீ கேட்கிறாய் நான் சரி என்கிறேன் என்ற தினுசில்.. ” எல்லாம் என் நேரம் டி… சரி டிபன் எடுத்து வை நான் நிர்மலா ஆன்ட்டி கிட்ட போன் பேசிட்டு வரேன்” எனவும் சரி என்று வெளியே சென்றாள் மித்ரா..

மனோகரன் உண்ண வருவான் என்று பத்து நிமிடங்களாக காத்து இருந்தது தான் மிச்சம்.. அவன் இன்னும் வந்த பாடில்லை.. “ என்ன பண்ணுறான் ?? இன்னுமா பேசிக்கிட்டு இருக்கான்.. நாளைக்கு வரோம்ன்னு சொல்ல இவ்வளோ நேரமா ?? ” என்று கடிந்தபடி அறையை அடைந்தவளை மனோவின் குரல் நிறுத்தியது

“ சாரி ஆன்ட்டி நான் தான் சொல்றேனே.. என் தப்பு தான்.. மித்ரா அன்னிக்கே என்கிட்டே சொல்லிட்டா, பட் நான் தான் டென்ஷன்ல மறந்து போயிட்டேன்.. உங்களை அவாய்ட் பண்ணனும்னு எல்லாம் இல்லை.. “

………

“ ஹ்ம்ம் எத்தனை தடவ சொன்னாலும் நீங்க இப்படிதான் சொல்றிங்க ஆன்ட்டி.. அவ மேல எந்த தப்பும் இல்லை.. சொல்ல போனா இப்போ மறுபடியும் எனக்கு நியாபக படுத்தியது மித்ரா தான்.. “

……….

“ சியூர் ஆன்ட்டி.. கண்டிப்பா நாளைக்கு நைட் டின்னெர்க்கு வரோம்.. கண்டிப்பா வந்திடுவோம்.. தென் இப்பவே சொல்றேன் ஆன்ட்டி பெருசா எந்த ஏற்பாடும் வேண்டாம்.. சிம்பிளா இருந்தா போதும்.. “

………….

“ ஹ்ம்ம் பசங்களையா.. நான் அவங்க கிட்ட சொல்லி போக்குறேன்.. வந்தா கூட்டி வரோம் “ என்று கூறி பேசி முடித்தான்.

மித்ராவிற்கு ஏனோ சங்கடமாக இருந்தது.. தன்னால் தானே மனோ நிர்மலா ஆன்ட்டியிடம் பேச்சு வாங்குகிறான் என்று நினைத்தாள்.. நிஜமாகவே அவள் மனம் இதை எண்ணி வருந்தியது..

தன் கணவனிடம் “ சாரி மனு “ என்றாள் வருத்தம் தேய்ந்த குரலில்

அவளை ஆச்சரியமாக பார்த்து “ எதுக்கு மித்து ??” என்றான்.

“இல்ல என்னால தானே நீ அவங்க கிட்ட இப்போ பேச்சு வாங்குன.. பட் நிஜமாவே எனக்கு மறந்திடுச்சு மனு.. நீ ஏன் அப்படி சொன்ன நான் தான் மறந்துட்டேன்னு ??”

“ ஹ்ம்ம் அவங்க உன்னைய தப்பா நினைப்பாங்க மித்து அதான் “ என்றான் அவளையே பார்த்து

“ நினைச்சா நினைக்கட்டும்.. அதுக்காக நீ பழிய உன்மேல போட்டுக்கலாமா ?? இட்ஸ் நாட் பேர் “ என்றாள் முகம் சுளித்து..

மனோவோ சிரித்தபடி அவளது தலையில் முட்டி “ எவரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார் மித்து “ என்றான் காதலை தேக்கி..

“ வாட் ??”

“ என்ன டி உனக்கு இங்கிலீஷ் தெரியாத ?? அய்யயோ பெரிய படிப்பெல்லாம் படிச்சு இருக்கனுன்னு உங்க அப்பா பொய் சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்டாரா ??” என்று மீண்டும் நக்கலடித்தான்..

“ மனு “ என்று பல்லை கடித்தாள் மித்ரா..

“ சரி சரி கூல் பேபி.. அது ஒண்ணுமில்ல நிர்மலா ஆன்ட்டி என்னைய எப்பையும் குறை சொல்வாங்க. ஏதாவது பேசுவாங்க அது எனக்கு பழகி போன விஷயம். ஆனா நீ என் பொண்டாட்டி.. எனக்கு என்னைய விட நீ தான் ரொம்ப முக்கியம் மித்து.. உன்னைய யாரும் தப்பா பேசவும் விடமாட்டேன், அவ்வளோ ஏன் உன்னைய தப்பா நினைக்க கூட விடமாட்டேன் “ என்று கூறவும் அவன் குரலில் ஏதோ மாற்றம் இருந்ததோ என்று தோன்றியது மித்ராவிற்கு.

இப்படி வெளிபடையாக தன்னிடம் அவன் மனதில் இருப்பதை கூருபவனிடம் என்னவென்று கூறுவாள். ஏற்கனவே அவள் மனம் அவனிடம் சாய்ந்து விட்டது..

“ ஹ்ம்ம் என்னைய யாரும் தப்பா நினைக்க கூட கூடாதாமே.. “ என்று பெருமையாக எண்ணியவள், அதே பெருமிதத்தோடு தான் கணவனையே பார்த்து கொண்டு இருந்தாள்  பதில் கூற தெரியாமல்.

இவர்கள் இப்படி கண்ணும் கண்ணும் நோக்கியவாக இருக்க இவர்களை நோக்கிய மனோவின் தம்பிகளோ “ அண்ணி இன்னைக்கு மாட்டுனிங்க “ என்ற குஷியில் தங்கள் கிண்டல் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தனர்..

முதலில் ஆரம்பித்தது கிருபா தான் “ அண்ணனும் நோக்கினார், அண்ணியும் நோக்கினார், அடியேனும் நோக்கினேன்… ஆனா பேச்சு வரலையே “ என்று நடிகர் திலகம் சிவாஜி பேசுவது சத்தமாக பேசினான்.. பாவம் அவனுக்கு தெரியவில்லை மித்ரா ஏற்கனவே அவனுக்கு ஒரு ஆப்பு தயார் செய்து வைத்து இருக்கிறாள் என்று..

கிருபா இப்படி ஆரம்பிக்கவும் திவாவும் பிரபாவும் கை தட்டி சிரித்தனர்.. திவா “ டேய் கிருபா அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாம் டா.. உனக்கு தெரியுமா ??? இந்த காலத்துல கூட பேசாமையே எப்படி பெர்பார்ம் செஞ்சு இருக்காங்க பாரேன் “ எனவும் மீண்டும் அங்கே ஒரு சிரிப்பலை பரவியது..

பிரபா “ ஹ்ம்ம் சின்ன பசங்க இருக்க வீட்டுல இப்படி எல்லாம் ப்ரீ ஷோ நடக்குது.. பப்ளிக் பப்ளிக் என்று கத்தினான் “ அதன் பிறகே மனோவும் மித்ராவும் தங்களின் பார்வை கட்டில் இருந்து வெளியே வந்தனர்..

தங்களை சுற்றி இத்தனை நேரம் என்ன நடந்து இருக்கும் என்பதை அறிந்து இருந்தாலும் அதை எல்லாம் தூக்கி கிடப்பில் போட்டு விட்டு மித்ரா

“ ஹே எல்லாம் வந்துட்டிங்களா ?? குட்.. நானே வந்து கூப்பிடனும்னு இருந்தேன் “ என்று கூறியபடி பரிமாற ஆரம்பித்தாள்..

மனோவும் அவளது வழியையே பின்பற்றி “ என்ன திவா இன்னைக்கு அந்த ஆர்டர் நமக்கு கிடைச்சிடுமா ??” என்று கேட்கவும், ஆமாம் என்பது போல தலையாட்டிவிட்டு கிருபாவிடம் “ டேய் நான் சொல்லல படம் நல்லா போகும்னு “ என்றான் நக்கலாக..

கிருபாவும் அதை புரிந்துகொண்ட நகைத்தான்.. மித்ரா “ என்னங்க வர வர இந்த கிருபா சரியாவே சாப்பிடுறது இல்லை…” என்று புதிதாய் ஆரம்பித்தாள்.. உடனே திவாவும் பிரபாவும் சுதாரித்து கொண்டனர்..

“ என்ன இது புதுசா?? “ என்பது போல மித்ராவை பார்த்தான் கிருபா.. “ என்ன டா அண்ணி சொல்றது உண்மையா ??” என்று மனோ கேட்கவும்

“ அவனை என்ன கேட்கிறிங்க ?? நான் தான் சொல்றேனே.. அதான் இன்னுக்கு அவனுக்கு பிடிச்ச பூரி செய்ய சொன்னேன்.. இந்த கிருபா இன்னும் ரெண்டு சாப்பிடு “ என்றால் பாசமாக தன் கணவனிடம் ஆரம்பித்து கொழுந்தனிடம் முடித்தாள்..

“நிஜமாவா அண்ணி ??” என்றான் கிருபா..

“ ஆமா.. உனக்கு ப்ராஜெக்ட் நடக்குது.. எப்ப பாரு பிசியாவே இருக்க.. சரியா சாப்பிடுறதே இல்லை.. கண்ணாடி பாரேன் ஒரு சுத்து இளைச்சு போயிட்ட “ என்றாள் நிஜ அக்கறையோடு..

அப்படியா என்பது போல பிரபாவும் திவாவும் பார்த்துகொண்டனர்.. ஆனால் கிருபாவோ “ இருக்குமோ.. அதான் காலையில டி ஷர்ட் கூட கொஞ்சம் லூசா இருந்த மாதிரி இருந்துச்சோ.. ச்சே இந்த அண்ணிக்கு தான் நம்ம மேல எவ்வளோ பாசம்” என்று எண்ணினான். அவன் முகத்தை வைத்தே கவிழ்ந்துவிட்டான் என்று நினைத்தாள் மித்ரா

“ மவனே என்னையவே கிண்டல் பண்ணுறையா ?? இருக்கு உனக்கு “ என்று எண்ணிக்கொண்டு “ இன்னும் ரெண்டு சாப்பிடு “ என்று அதட்டினாள்..

“ போதும் அண்ணி முடியல.. உங்க பாசத்துலையே வயிறு மனசு ரெண்டு நிரம்பி வழியுது “ என்றான்..

“ அப்புறம் கிருபா எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுவியா ??” என்றாள் பாவமாக முகம் வைத்து.. மனோகரன் கூட என்னவென்று கேட்பது போல பார்த்தான்.. அதன் பிறகு தான் அவனுக்கு புரிந்தது இன்றைக்கு சிக்கியது கிருபா என்று.

“ என்ன எண்ணி, இத பண்ணுடா கிருபான்னு சொன்னா பண்ண போறேன். அதை விட்டு , பண்ணுவியான்னு தயக்கமா கேட்குறிங்க ?? இது எல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்ல ஆமா” என்றான் அவனும் உரிமையாக..

“ ஹ்ம்ம் எனக்கு உன்னைய பத்தி தெரியும் டா.. அதான் உன்கிட்ட கேட்டேன்.. இல்ல வீட்டுல இத்தனை தடி.. இல்ல இல்ல இத்தனை பேர் இருக்கும் போது உன்கிட்ட வந்து கேட்பேனா ??” என்றாள் கிருபாவை பெருமையாக பார்த்து..

“ சொல்லுங்க அண்ணி, நான் என்ன செய்யணும் ??”

“ இல்ல உனக்குதான் இந்த துணி வகை  அது இது எல்லாம் தெரியும்.. நீ தான் டெக்ஸ்டைல் எஞ்சினியர்ல.. அதுவும் இல்லாம, உனக்கே தெரியும்ல  என்னால எங்கயும் வெளியவும் போக முடியாது.. சோ நீதான் இதுல எனக்கு ஹெல்ப் பண்ணனும் “ என்று பயங்கர பீடிகை போட்டாள்.

“ அட அண்ணி.. ஏன் இவ்வளோ தயக்கம்.. தாராலாமா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன் “ என்றான்..

“ அப்படியா ஒரு நிமிஷம் இரு “ என்று கூறிவிட்டு வேகமாக அவர்களது அரை நோக்கி ஓடினாள்.. சென்ற வேகத்தில் திரும்பியும் வந்தாள்.

“ இங்க பாரு கிருபா என் கர்சீப் ஓரத்துல கிழுஞ்சிடுச்சு… உனக்கு தான் இந்த மெட்டீரியல்ஸ் பத்தி எல்லாம் தெரியும்ல.. அதான் இதை கொஞ்சம் சரி பண்ணி குடேன் “ என்று நீட்டினாள்.. கிருபாவை தவிர மற்ற அனைவரும் பலமாக சிரித்தனர்.. கிருபாவோ பாவமாக பார்த்தான்..

“ ஏன் அண்ணி ஏன் ?? நல்லாதானே போயிட்டு இருக்கு.. இது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல..” என்றான் அழாத குறையாக..

“ அதான் கிருபா சரி பண்ணி குடுன்னு உன்கிட்ட கேட்கிறேன் “ என்றாள் மீண்டும்..

“ அண்ணி ப்ளீஸ்.. உங்க கால்ல கூட விழறேன் “ என்று குனியவும் “ சரி சரி பொழைச்சு போ “ என்று விட்டாள்..

திவா “ ஏன் அண்ணி எப்பையுமே உங்க டார்கெட் நானும் கிருபாவும் தானா ?? இந்த பிரபா எல்லாம் உங்க கண்ணனுக்கு தெரியமட்டானா ??” என்று அவனை இதில் இழுத்தான்..

அதானே என்பது போல பார்த்தான் கிருபா.. ஆனால் இந்த கேள்விக்கு பதில் பிரபாவிடம் இருந்து வந்தது “ டேய் அண்ணா !! ஏன் உனக்கு இந்த கொலைவெறி.. நீங்க ரெண்டு பேராவது எப்பையாவது தான் சிக்குறிங்க, ஆனா நான் தான் எப்பையுமே சிக்குறேன்.. அது தெரியாம பேசாதிங்க டா “ என்றான்..

“ என்னடா சொல்லுற ??” என்றனர் மற்ற மூன்று அண்ணன்களும்..

“ ஆமா, டெய்லி ஈவ்னிங் அண்ணி எனக்கு பாடம் சொல்லி தரேன்னு பாடா படுத்துறங்க “ என்றான் துன்பம் நிறைந்த குரலில்..

“ ஹப்பா இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்று கிருபாவும் திவாவும் ஒரு குரலில் கூறவும் அங்கே மீண்டும் ஒரு சந்தோஷ அலை பரவியது..

இப்படி இங்கே மனோவின் குடும்பத்தில் மகிழ்ச்சி மழை பொழிந்து கொண்டு இருக்க, அங்கே சுந்தரோ மனதில் அடக்கமாட்டாத ஆக்ரோசத்துடன் இருந்தான்..

கூண்டில் சுற்றி திரியும் புலிபோல வீட்டில் நடந்து கொண்டு இருந்தான்.. முகம் கருத்து கண்கள் சிவந்து இருந்தன.. அங்கும் இங்கும் ஏதோ யோசனையோடு நடந்து கொண்டு இருந்தான்.. மனதில் கட்டுகடங்காத கோவம் இருப்பது அவனை பார்த்தாலே யாரும் கூறிவிடுவர்..

“ என்ன தைரியம் அவனுக்கு.. அவன் மட்டும் என் கண் முன்னால வரட்டும்.. அப்புறம் இருக்கு.. இந்த சுந்தர் யாருன்னு தெரியாம விளையாடி பாக்குறான்.. நேரா வர பயந்துக்கிட்டு பின்னால நின்னு எல்லா வேலையும் பாக்குறான்.. “

“ டேய்.. நீ மட்டும் என்கிட்டே மாட்டு அப்புறம் உனக்கு இருக்குடா கச்சேரி.. என்கிட்டையே உன் வேலைய காட்டிடேலே.. நான் ராஜ நாகம் டா  சீண்டுனவங்களை கொத்தி கொலை பண்ணாம விடமாட்டேன்..” என்று கண்ணில் சிக்காத அவன் எதிரிக்கு சவால் விட்டு கொண்டு இருந்தான்..

“ ஏய் நளினா… எங்க டி இருக்க ??? இங்க வா… “ என்று கத்தவும் நடுங்கியபடி அவன் முன்னே வந்து நின்றாள் நளினா..

“ என்ன டி அப்படியே பயந்து நடுங்கிற மாதிரி படம் காட்டுற.. போ.. போயி உன் நகை எல்லாம் எடுத்துகிட்டு வா…” என்று நளினாவை பிடித்து தள்ளினான்..

அவளோ சுவறில் இடித்துவிடாத வாறு  நகர்ந்து “ எதுக்குங்க ??” என்றாள் மெல்ல..

“ என்ன ?? எதுக்குன்னா கேள்வி கேட்கிற ?? “ என்று கேட்டபடி பட்டென்று ஒரு அரை விட்டான்.. அவளோ பாவமாக பார்த்தாள்.. “ எதுக்குன்னு தான கேட்டேன்??” என்றாள் மெல்ல கண்ணீருடன்..

“ ஏன் எதுக்குனு உன்கிட்ட காரணம் சொன்னா தான் குடுப்பியோ ?? நகை வாங்கி தரும் போது எதுக்குன்னு கேட்டியா இல்லையே.. இப்ப மட்டும் ஏன் கேட்கிற ?? போ.. போயி எடுத்துகிட்டு வா  ” என்று மீண்டும் தள்ளினான்..

நளினா சென்ற பிறகு தன் கைபேசியில் “ டேய் மாணிக்கம், வீட்டுக்கு வா.. ஹ்ம்ம் உடனே “ என்று அதிகாரமாக பேசினான்..

….

“துறை ஏன்னு சொன்னாதான் வருவிங்களோ ?? கிளம்பி வான்னு கூப்பிட்ட உடனே வரணும் புரியுதா..” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டான்..

“ நாய்ங்க.. என்கிட்டே பிச்சை காசு வாங்குறவன் எல்லாம் கேள்வி கேட்கிறான்.. வரட்டும்.. ச்சே என் நேரம் இந்த பேங்க்ல இப்ப பார்த்தா எல்லா வேலையும் நிறுத்தனும்.. இங்க மட்டும் தான் ஒரு கணக்கு வெளிய தெரியாம வச்சு இருக்கேன்.. அதுக்கும் இப்படியா வேட்டு வரணும் “ என்று தன் போக்கில் பேசி கொண்டு இருந்தவனை

“ என்னங்க “ என்று நளினாவின் பலகீனமான குரல் திரும்ப வைத்தது.. அவள் கையில் இருந்த நகை பெட்டியை பார்த்ததும் புன்னகைத்தவன் “ குடு” என்று அவள் பிடுங்காத குறையாக பிடுங்கினான்..

“ ம்ம் “ என்று நகையை பார்த்து மனதில் கணக்கு போட்டவன்.. “ எப்படியும் ரெண்டு கோடி தேறும் “ என்று கூறிக்கொண்டே மாணிக்கத்தின் வரவுக்காக காத்து இருந்தான்..

நளினா அங்கேயே நகராமல் நிற்கவும் “ என்ன டி.. உன் வேலை முடிஞ்சதுல அப்புறம் என்ன நிக்கிற ?? போ.. இல்ல இன்னொரு அடி வேணுமா ?? “ என்று அரட்டவும், வேகமாக தன் நடையை காட்டினாள்..

சிறிது நேரத்தில் மாணிக்கம் வரவும் அவனுக்கு ஆரம்பித்தது மண்டகபடி.. “ என்ன டா மாணிக்கம் முன்னெல்லாம் காலங்காத்தாலே வீட்டு வாசல்ல நாய் மாதிரி நின்னுகிட்டு இருப்ப.. இப்ப துறைக்கு போன் பண்ணி கூப்பிட்டா தான் வர.. என்ன டா என்ன விசயம்??” என்றான் ஒரு மாதிரி..

“ அய்யோ அண்ணே!! அப்படியெல்லாம் இல்லைங்க அண்ணே.. உங்க உப்பு தின்னு வளர்ந்தவன் நான்.. வீட்டுல சம்சாரத்துக்கு கொஞ்சம் முடியல அதான் வரல..” என்றான் மிக பணிவாக..

“ ஹ்ம்ம் என்னவோ சொல்லுற.. ஆனா வேற மாதிரி எதாவது நான் கேள்விபட்டேன் உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் தெரியும்ல “

“ இல்லைண்ணே.. அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. உங்களை பத்தி எனக்கு தெரியாதா.. நான் கடைசி வரைக்கும் உங்க நன்மைக்கு தான் வேலை செய்வேன் “ என்றான் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு.

“  அதனால தான டா நான் எந்த வேலைனாலும் உன்னைய கூப்பிடுறது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் “ என்று கூறிவிட்டு யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

“ இந்த நகை எல்லாம் போய் நம்ம பாய் கிட்ட கொடுத்துடு.. அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்துக்கு இதுவே அதிகம்னு சொல்லு.. அப்புறம் இன்னும் ஒரு ரெண்டு நாளுல சரக்கு எல்லாம் நேரா குடோனுக்கு வந்திடும்னு சொல்லு..” என்றான் கட்டளை இடும் குரலில்.                          

அதை பார்த்து மாணிக்கம் திகைத்தவனாய் “ அண்ணே என்னண்ணே நகை எல்லாம் குடுக்குறிங்க.. ??? “ என்றான் தயக்கமாய்..

“ ம்ம் எல்லாம் என் நேரம் டா.. அந்த ஜோசியர் சொன்னதை மட்டும் நான் செஞ்சு இருந்தேன்னா இப்போ என் நிலைமையே வேற.. மயில் இறகு போடும்ன்னு காத்து இருந்தது தான் தப்பா போச்சு.. சரி அதை எல்லாம் விடு, முதல்ல போயி இதை குடுத்துட்டு வா.. அப்புறம் நான் பீச் ஹவுஸ்ல இருக்கேன் அங்க வந்து சேறு “ என்றான்..

மாணிக்கமும் சரி என்று கூறிவிட்டு சுந்தர் கூறிய வேலையை செய்ய சென்றான். சுந்தர் கூறியதையும் செய்தான். மனோகரனிடம் தான் வாங்கிய பணத்திற்கும் விசுவாசமாக இருந்தான்.. முதல் வேலையாக சுந்தரின் அந்த குடோன் முகவரியை மனோகரனுக்கு குறுந்தகவலில் அனுப்பி வைத்தான்..

மனோகரனும் பதில் அனுப்பினான் தன்னை மாலை வந்து அலுவலகத்தில் சந்திக்கும்படி.. இப்படியாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் சுந்தர் அங்கே கடற்கரை வீட்டில் உல்லாசமாக பொழுதை கழித்தான் அவனை விட பத்து பதினைந்து வயது சிறு பெண்ணுடன்..

மாணிக்கம் நன்றாக அறிந்து வைத்து இருந்தான் சுந்தர் கடற்கரை வீட்டிற்கு செல்வது என்றால் இந்த மாதிரி ஒரு ஏற்பாடோடு தான் செல்வான்  என்று. ஆகையால் அவன் கூறிய வேலைகளை முடித்துக்கொண்டு சுந்தருக்கு அழைத்தான் “ அண்ணே நீங்க சொன்ன வேலை முடிஞ்சது..”

“ம்ம்ம் சரி நான் சொன்ன இடத்துல தான் இருக்கேன்.. அங்க வா “ என்றான் சுந்தார்.

“ இல்லைண்ணே அது…”

“ ஹா ஹா.. டேய் எல்லாம் முடிஞ்சது வா.. கொஞ்சம் பேசணும்.. அப்புறம் உன்னைய யாரும் பாக்கலையே..??”

“ இல்லண்ணே.. நான் வரேன் “ என்று கூறிவிட்டு முதல் வேலையாக தன அலைபேசியில் இருந்த குறுந்தகவல்களை எல்லாம் அழித்தான்..     

அங்கே கடற்கரை வீட்டில் “ என்ன டா ஏன் இப்படி தயக்கமா வர.. அந்த குட்டி அப்பவே போயிடுச்சு.. செம பீசு டா.. மொசக்குட்டி மாதிரி  “ என்று உல்லாசமாக சிரித்தான் சுந்தர்..

மாணிக்கமோ மனதில் “ ஹ்ம்ம் அந்த பொண்ணுக்கு இவர் மக வயசு இருக்குமா?? இவருக்கே ஐம்பது ஆக போகுது.. இதுல இந்த கூத்து “ என்று எண்ணியபடி அவனும் சந்தோசமாக சிரிப்பது போல சிரித்தான்..

“ என்ன டா அந்த பாய் என்ன சொன்னான்..??”

“ ஒன்னும் சொல்லல அண்ணே.. அப்புறம் ஒரு தகவல் வந்து இருக்கு “ என்று தலையை சொரிந்தான்..

“ என்னடா என்ன தகவல். அந்த ஆடிட்டர் எங்க இருக்கான்னு தெரிஞ்சிடுச்சா ??” என்று கேட்கும் பொழுதே சுந்தரின் கண்களில் ஒரு வெறி இருந்ததை மாணிக்கம் உணர்ந்தான்..

“ இல்லைண்ணே.. அவங்களை பத்தி எந்த தகவலும் இல்லை.. ஆனா நம்ம அய்யா நாளைக்கு சாயங்காலம் இங்க நம்ம வீட்டுக்கு வறாராம்..”

“ என்னடா சொல்லுற ??”  என்று அதிர்ந்து கேட்டான் சுந்தர்..

“ ஆமாண்ணே. இப்பதான் அய்யாவோட டிரைவர் போன் பண்ணாப்ள.. “

“ டேய் டேய்.. இப்ப ஏன் டா அந்தாளு வரான்.. ச்சேய்.. இன்னும் ரெண்டு நாளுல நம்ம சரக்கு கை மாத்தனுமே டா.. எங்க அப்பா வீட்டுல இருந்தா என்னைய கேள்வி மேல கேள்வி கேட்டு கொள்ளுவானே “ என்று சுவற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்..

“ இல்லண்ணே அது ஒன்னும் பெரிய விசயம் இல்லை.. அப்போதைக்கு வேற எதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிச்சுடலாம்..”

“ ஹ்ம்ம் சரி சரி விடு.. இது என்ன எனக்கு புதுசா.. அப்புறம் இன்னொரு விஷயம் “ என்று அவனிடம் சுந்தர் ரகசியமாய் கூறவும் மாணிக்கம் திகைத்து போய் பார்த்தான்..

“ என்ன டா பாக்குற.. எல்லாம் சரியா நடக்கும்.. நடக்கணும்.. போ.. போய் ஆகவேண்டியதை பாரு.. இப்போதைக்கு இது வெளிய தெரியவேண்டாம் “ என்று கூறி அவனை அனுப்பிவைத்தான்..

சுந்தர் கூறியதை கேட்டு மாணிக்கம் “ என்ன மனுஷன் இவன்.. ச்சி.. இவனை போட்டு குடுக்கிறதுல தப்பே இல்லை.. ஆங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில அவன் பொன்னையே பலி குடுக்க பாக்குறானே..” என்று எண்ணிக்கொண்டு மாலை மனோகரனை சந்திக்க காத்து இருந்தான்..

மாணிக்கம் வரும் பொழுது தன்னோடு குமாரும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தான் மனோ.. உடனே தன் நண்பனிற்கும் அழைத்து விஷயத்தை கூறவும் அவனும் வருவதாய் ஒப்புக்கொண்டான்..

மாணிக்கம் கூறிய விசயங்களை கேட்டு மனோ, குமார் இருவரின் முகமும் கோவத்தில் ஜொலித்தது..

“ என்ன மாணிக்கம் சொல்லறிங்க இன்னும் ரெண்டு நாள்ல எப்படி இதை எல்லாம் அவனால செய்ய முடியும் நான் அவனோட எல்லா பண புழக்கத்தையும் முடக்கி வச்சு இருக்கேனே “ என்று சற்றே கோவமாக விசாரித்தான் மனோ..

“ சார் நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான்,. ஆனா அவரு பொண்டாட்டி கிட்ட நகைய எல்லாம் வாங்கி செட்டில் பண்ண வேண்டியவங்களுக்கு குடுத்து முடிச்சுட்டாரு.. அப்புறம் இன்னொரு விஷயம் “ என்று அவன் கூற தயங்கவும்

குமார் “ நீங்க எங்களை நம்பி எதுவேணும்னாலும் சொல்லலாம்.. உங்க பேர் வெளிய வராது “ என்று தைரியம் குடுக்கவும்

“ சார் நான் அவன் கூட சேர்ந்து எல்லா கேட்ட காரியமும் பண்ணி இருக்கேன்.. ஆனா அவன் எப்ப செஞ்ச புண்ணியமோ நளினாம்மா அவனுக்கு பொண்டாட்டியா வந்தது.. அப்புறம் அவங்க பொண்ணு காவேரி, தங்கமான பொண்ணு சார்.. சின்ன வயசுல இருந்து நான் தான் தூக்கி வளர்த்தேன்.. கடைசியில அந்த பொன்னையே பலி குடுக்க துனிஞ்சுட்டான் சார்.. அதான் என்னால தாங்கவே முடியல “ என்றான் மாணிக்கம்..

இதை கேட்டு நண்பர்கள் இருவரும் “ வாட் ??” என்று அதிர்ந்து கேட்டனர்..

“ ஆமா சார்.. இன்னைக்கு காலையில தான் இந்த விசயத்தை முடிவு பண்ணி சொன்னான்.. எனக்கு மனசே ஆரலை.. படுபாவி யாரவது இப்படி பணத்துக்காக சொந்த பொன்னையே படுகுழியில தள்ளுவாங்களா சார்.. “ என்று மாணிக்கம் நிஜமான வருத்ததோடு பேசவும்

“ ஹ்ம்ம் சரி மாணிக்கம்.. எங்கட்ட சொல்லிட்டிங்கள்ள, இனிமே பொறுமையா இருக்கிறதுல அர்த்தமே இல்லை.. மேற்கொண்டு என்ன பண்ணணுமோ அதை நாங்க பாத்துகிறோம்.. ஆனா அப்பப்போ சுந்தர் பத்தி எனக்கு தகவல் குடுத்துகிட்டே இருங்க “ என்று கூறிவிட்டு தன் மேஜையில் இருந்து ஒரு பணக்கட்டை எடுத்து குடுத்தான் மனோகரன். அதை பார்த்து

“ வேண்டாம் சார்.. நான் இதை இப்போ காவேரி பாப்பாக்காக தான் பண்ணுறேன்.. “  என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்..

மனோவும் குமாரும் தாங்கள் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுத்தனர்..

குமார் “ மனோ மினிஸ்டர் நாளைக்கு சரியா இங்க ஆறு மணி ப்ளைட்ல லான்ட் ஆகுறாரு.. ஆனா சாயங்காலமா தான் அவர் மகன் வீட்டுக்கு போறாரு. அதுக்கு முன்ன அவரை நம்ம சந்திக்கணும்..”

மனோ “ நீ சொல்லுறது சரி டா.. இன்னைக்கு அந்த குடோனுக்கு உன் ஆளுங்களை அனுப்பி என்ன நடக்குதுன்னு பாக்க சொல்லு.. அப்புறம் என்ன ஆனாலும் சரி நாளைக்கு நம்ம மினிஸ்டரை  பாக்கணும்.

இப்படியாக இரு நண்பர்களும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி கொண்டு இருந்தனர். அங்கே வீட்டில் மித்ராவோ பொழுது போகாமல் நேரத்தை நெட்டி தள்ளி கொண்டு இருந்தாள்..

“ ச்சே இப்படியா… பொழுதே போகல.. ஹ்ம்ம் இந்த மனு பழைய ஆல்பம் எல்லாம் எங்கயோ இருக்கு சொன்னானே..” என்று அவர்களது அறையில் இருக்கும் அலமாரிகள் அனைத்தையும் மீண்டும் திறந்து பார்க்க ஆரம்பித்தாள்..

அப்படி பார்த்துகொண்டு இருக்கும் பொழுதுதான் ஒரு அலமாரியின்னுள்ளே  ஒரு சிறு பெட்டி மட்டும் அவளது கண்ணில் வித்தியாசமாக பட்டது. அதை திறந்து பார்த்தாள்.. ஆனால் திறக்க முடியவில்லை.. அப்பெட்டியை இப்புறமும் அப்புறமும் திருப்பி திருப்பி பார்த்தாள்..

“ என்ன இது திறக்க முடியல?? ஹ்ம்ம் இவன் அப்படி என்ன ரகசியம் வச்சு இருக்கான்?? “ என்று கூறியபடி அப்பெட்டியை உலுக்கினாள்.. “ உள்ள எதோ இருக்கு போலவே “ என்று மீண்டும் திறக்க முயற்சித்தாள், ஒருவழியாக பெட்டி திறந்துகொண்டது.

“ அப்பாடி” என்று பெருமூச்சு விட்டு உள்ளே பார்த்தால் ஒரு சிறு பொட்டலம் போன்று காகிதம் அழகாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது..              

“ அட என்ன இது ??” என்று அதை திறந்து பார்த்தவளுக்கு உள்ளே கிடைத்தது ஒரு சாவி..

“ இதென்ன இந்த லூசு ஏன் சாவிய போய் இப்படி மறைச்சு வச்சு இருக்கான்” என்று யோசிக்கும் பொழுதே அவள் மூளையில் பொறி தட்டியது.. வேகமாக அந்த சாவியை எடுத்து மனோ எப்பொழுதும் நொண்டிக்கொண்டு இருக்கும் அந்த அலமாரியை திறந்து பார்த்தாள்..

முதல் முயற்சி தோல்வி அடைந்தது.. இரண்டாவது முறையும் துளையினுள்ளே சாவியை விட்டு திருகினாள் அதுவும் தோல்வி.. “ ச்சே என்ன இது?? எல்லாமே இப்படி மக்கர் பண்ணுது.  “ என்று யோசித்தபடி சாவியை உருவி பார்த்தாள் வரவில்லை..

வெளியே சாவியை எடுக்கும் பொருட்டு எதிர்புறமாக சாவியை திரும்பினாள் ஆனால் சாவி வராமல் அலமாரி திறந்தது.. உள்ளே இருந்ததோ வெறும் இரண்டு கோப்புகள்..

ஒன்றின் மீது மித்ரா என்று எழுதப்பட்டு இருந்தது.. மற்றொன்றின் மீது சுந்தர் என்று எழுதியிருந்தது.. இரண்டையும் எடுத்து பார்த்தவள் ஒன்றும் புரியாமல் அதிர்ந்து நின்றாள்.. பின் வேகமாக தங்கள் அறையின் கதவை சாத்திவிட்டு  கையில் இருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக படிக்க தொடங்கினாள்..

 

காலம் போடும் கணக்கில்

யார்தான் தப்புவார்??

காலத்தின் பிடியில் காதல்

சிக்கும் பொழுது கண்ணீர்

தான் மிச்சமோ ??

நல்லவரோ தீயவரோ

திட்டம் தீட்டி – காய்கள்

நகர்த்தினாலும் நடப்பதுதானே

நடக்கும்..

 

                           மாயம் –  தொடரும்

 

 

               

      

                 

                                                              

 

                                                

                        


Advertisement