Advertisement

மாயவனோ !! தூயவனோ – 14

 எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி, அடித்து பிடித்து வெளிய ஓடி வந்து பார்த்தனர்..

மித்ராதான் மிகவும் படபடப்பாக நின்று இருந்தாள் தோட்டத்தில்.. அப்பொழுதுதான் இரவு உணவை முடித்து வேலை ஆட்களை எல்லாம் அனுப்பிவிட்டு அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்..

கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்துவிட்டு வருகிறேன் என்று கூறி சென்ற மித்ரா தான் சிறிது நேரத்திலேயே இப்படி கத்தியது..

மனோ “ என்ன மித்து ?? எதுக்கு கத்துன ?? என்ன ஆச்சு உனக்கு ??” என்று கேட்டான்..

“அது.. அது மனு.. அது நம்ம வீடு இடியப்போது மனு.. அதான் எல்லாரயும் வெளிய கூப்பிட்டேன் “ என்றாள் அதே கலக்க குரலில்..

“ வாட் வீடு இடிய போகுதா?? என்ன மித்து கனவு கினவு எதுவும் கண்டாயா ??” என்றான் மனோகரன் சற்றே எரிச்சல் கலந்த குரலில்..

தம்பிகள் மூவரும் என்ன நடக்கிறது இங்கே என்பது போல பார்த்து கொண்டு இருந்தனர்.. “ ம்ம் நீ சொன்னா நம்ப மாட்ட.. ஹே திவா நீ கொத்தனார் தானே  என்கூட வா” என்று அவனை இழுக்காத குறையாக இழுத்து சென்றாள்..

அவனோ தன் அண்ணனை திரும்பி திரும்பி பார்த்தபடி வேறு வழியில்லாமல் சென்றான்.. மற்ற மூவரும் அவரகளை பின் தொடர்ந்து சென்றனர்..

ஒரு இடத்தில் நின்றவள், மதில் சுவரை காட்டி  “ பாரு திவா இங்க” என்று கை காட்டினாள்.. திவகரனுக்கு தன் அண்ணி கை நீட்டிய இடத்தில் உற்றுப்பார்த்தும் ஒன்றும் தெரியவில்லை.. என்னவென்றும்  புரியவில்லை..

ஆனால் மித்ராவோ தன் கணவனிடம் திரும்பி “ என்னைய என்னவோ சொன்னிங்க நல்லா பாருங்க நீங்களும் “ என்று அவனையும் இழுத்தாள்..

“ என்ன டி நீ “ என்று சலித்தபடி அவனும் பார்த்தான், அவனுக்கும் புரியவில்லை.. ஆனால் கிருபா தன் அண்ணியின் எண்ணத்தை புரிந்துகொண்டான்.. “ஆகா இன்னைக்கு டார்கெட் திவாவா… சூப்பர்… “ எண்ணிக்கொண்டு மெல்ல நகர்ந்து வீட்டிற்குள் சென்றுவிட்டான்..

பிரபா அவன் போவதை பார்த்து அவனோடு செல்வதா இல்லை இவர்களோடு இருப்பதா என்ற குழப்பத்தில் இருபுறமும் பார்த்தபடி  நின்று இருந்தான்..

மனோ “ மித்து என்ன இருக்கு அங்க.. வெறும் சுவர் தானே இருக்கு.. “ என்றான் கடுப்பேரிய குரலில்…

“ சுவர் தான் எனக்கும் தெரியும்.. நல்லா உத்து பாருங்க.. விரிசல் இருக்குல “ என்று கூறவும் மனோவிற்கும் திவாவிற்கும் அதே சுவரில் முட்டிகொள்ளலாம் போல இருந்தது..

“ இதுக்கா அண்ணி நீங்க வீடு இடிய போகுதுன்னு சொல்லி சத்தம் போட்டிங்க ??” என்று வினவினான் அப்பாவியாய்.. ஏனெனில் எந்த சுவரில் இருந்த விரிசல் சிறு நூல் அளவு கூட இல்லை.. மனோகரனோ அவளை கொலைவெறியில் முறைத்தான்..

ஆனால் இதற்கெல்லாம் அயர்ந்தால் அவள் மித்ரா அல்லவே.. திவாவை பார்த்து “ என்ன திவா, பாரு இப்பயே இப்படி விரிசல் விட்டு இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல இது பெருசாகி , சுவரெல்லாம் இடிஞ்சு அப்புறம் வீடு அப்படியே ரெண்டா பிளந்து, படபடன்னு இடிஞ்சு விழுந்துட்டா.. அதான் “ என்று மிகவும் அப்பாவியாய் பேசினாள்..

திவாவோ என்ன கூறுவது என்று தெரியாமல் தன் அண்ணனை பார்த்தான்..

“ என்ன திவா நான் உன்கிட்ட பேசுனா நீ உங்க அண்ணனை பாக்குற.. நீ எல்லாம் என்ன கொத்தனார்.. அடுத்தவனுக்கு வீடு கட்டி குடுக்கிற. சொந்த வீட கண்டுக்காம இருக்க ?? நாளைக்கு முதல் வேலை நீ என்ன செய்யுற “ என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே

திவா “அண்ணி ப்ளீஸ்” என்று கை எடுத்து கும்பிட்டுவிட்டான்…. மித்ராவிற்கு இதற்குமேல் சிரிப்பை அடக்க முடியவில்லை..

 மனோ “ ஏய் லூசு.. இதுக்கு தான் கூப்பிட்டையா ?? நாங்க என்னவோ ஏதோன்னு வந்தா எங்களையே நக்கல் பண்ணுறையா ??” என்று திட்டினான்..

அதற்கும் அவள் “ பாரு திவா” என்று திவாவை துணைக்கு அழைக்கவும், திவா “ அண்ணி என்னைய ஆள விடுங்க.. உங்களுக்கு கோவில் கூட காட்டுறேன் “ என்று காலில் விழாத குறையாக கெஞ்சிவிட்டு “ டேய் வாடா “ என்று பிரபாவையும் அழைத்துக்கொண்டு ஓடிவிட்டான்..

“ஆமா இந்த கிருபா எங்க “ என்று தேடியவள் “ எஸ்கேப் ஆகிட்டானா ?? இருக்கட்டும் அவனுக்கு வேற கச்சேரி இருக்கு “ என்று எண்ணிக்கொண்டு,

அவர்கள் செல்வதை பார்த்து கலகலவென்று சிரித்தபடி நின்று இருந்தாள்.. “ நான் கை நீட்டி சுவரை காட்டவும் உங்க எல்லார் முகத்தையும் பாக்கணுமே.. ஐயோ !! கடவுளே “ என்று தன் வயிற்றை பிடித்து கொண்டு பலமாக நகைத்தாள்..

ஆனால் மனோவோ கடுப்புடன் “ ஏய் ஏன் டி?? இப்படி பாடா படுத்துற ?? “ என்று கேட்கவும்..

“ நான் என்ன படுத்துனேன்.. ஆமா என்ன நீ என்னைய டி போட்டு பேசுற ?? இது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல “ என்று உதட்டை சுளித்தாள்.. அவளது முக பாவத்தில் தன் கோபத்தைவிட்டு

“என் பொண்டாட்டி நான் டி போடுவேன்.. டா போடுவேன்… உனக்கு என்ன ??” என்றான் அவளை தன் புறம் இழுத்து..

“ ஹேய் என்ன பண்ணுற?? கைய விடு.. இதென்ன பழக்கம்.. இப்படி எல்லாம் என்கிட்டே பேச கூடாது சொல்லி இருக்கேன்ல “ என்றாள் அவளும் பதிலுக்கு..

“ ஹ்ம்ம் அப்புறம் ஏன் மேடம் அன்னிக்கு ஷவர்ல நிற்க்கும் போது மட்டும் அப்படியே நகராமா என்னையவே ஒட்டி நின்னு இருந்திங்க ??” என்றான் அவளையே பார்த்து..

“ எருமை எருமை என்னைய பிடிச்சி நிக்க வச்சிட்டு என்னையவே கேள்வி கேட்கிறானே “ என்று கருவியவள் “ ஹா… எனக்கு ஆசையா இருந்துச்சு அதான்.. சும்மா சும்மா அதையே சொல்லாத..  “ என்று தன்னை அறியாமல் வார்த்தையை விட்டாள்..

“ என்ன ஆசையா இருந்துச்சா ?? என்ன டியர் நீ இதை இப்ப சொல்லுற ?? ச்சே நம்ம பாரு எத்தனை நாளை வேஸ்ட் பண்ணிட்டோம் “ என்று கூறி கொண்டே அவளை அணைக்கவும்

“ ஏய்!! மனு !! ச்சி என்ன பண்ணுற ?? இப்படி வெட்ட வெளியிலையா  கட்டி பிடிப்ப ??” என்று கோவமாக கேட்டாள்..

“ அப்போ ரூம்ல கட்டி பிடிக்கவா ?? நான் ரெடி டா செல்ல குட்டி “ என்று கொஞ்ச ஆரம்பிக்கவும் “ உனக்கு வேற வேலையே இல்லை “ என்று ஓடிவிட்டாள்..

இப்படிதான் மித்ரா தன் பெற்றோர்களிடம் பேசிய பிறகு மிகுந்த சேட்டை செய்ய ஆரம்பித்து விட்டாள்.. அன்று மனோகரன் கூறியது போல அவன் அலைபேசியில் மித்ராவின் பெற்றோர்கள் அழைக்கும் பொழுது அவன் இல்லை என்பதால் தான் எடுத்து பேசியதாக கூறி ஒருவழியாக மித்ரா பேச ஆரம்பித்துவிட்டாள்..

ஆனால் அவள் அறியாத ஒன்று மித்ரா தன் பெற்றோர்களிடம் பேசுகிறேன் என்று கூறிய சில நேரங்களிலேயே மனோ அதை அவர்களிடம் தெரிவித்துவிட்டான்..

ஆனால் அவன் கண்டிப்பாக கூறிய விஷயம் எக்காரணம் கொண்டும் மித்ராவிற்கு அப்படி இரு இப்படி இரு என்று அறிவுரை கூற கூடாது என்பது தான்..

மித்ராவின் பெற்றோர்களும் மனோகரன் எதற்காக இப்படி கூறுகிறான் என்பதை புரிந்துக்கொண்டு அதே போல தன் மகளிடம் பேசினார்.. முதலில் மித்ராவிற்கு என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கினாலும் அதன் பிறகு சிறிது நேரத்திலேயே சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள்..

அன்றிலிருந்து தினமும் இரவு உறங்க போகும்முன் மித்ரா தன் தாய் தந்தை அண்ணனிடம் பேசிவிட்டு தான் உறங்குவாள்.. ஆனால் இது மனோகரனை வயிர் எரிய செய்தது..

இருக்காதா பின்னே தன் அருகில் கணவன் என்று ஒருவன் இருக்கிறன் அவனோடும் சிறிது நேரம் பேசவேண்டும் என்ற எண்ணமே இல்லாதவள் போல அவள் பாட்டுக்கு அவர்களோடு பேசி களித்தாள்..

“ அடியே ஐ.எஸ்.டி கால் டி… ஏதோ அடுத்த வீட்டுல இருக்கிறவங்க கூட பேசுறது போல மணிக்கணக்கா பேசுறாளே.. “ என்று மித்ராவையே பார்த்தபடி இருப்பது மனோவின் வேலையானது தினமும் ..

இதை எல்லாம் நினைத்து பார்த்தவன் “ இன்னிக்கு இதுக்கு ஒரு வழி செய்யணும் “ என்று மித்ரா வை தொடர்ந்து வீட்டினுள் சென்றான் மனோ..

ஆனால் அவன் நேரம், மனோகரன் தங்கள் அறையினுள் நுழைவதற்கு முன்பே மித்ரா அலைபேசியில் தன் பெற்றோர்களிடம் கதைக்க ஆரம்பித்து இருந்தாள்..

“ ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டா போலையே… இனி இவ வாய் மூட மாட்டாளே.. கடவுளே இதுக்கு இவள பேச வைக்காமையே இருந்து இருக்கலாம்.. எல்லாம் என் நேரம். ஒருத்தன் பக்கத்துல இருக்கிறதே அவளுக்கு தெரியாது “ என்று புலம்பியபடி அவளை முறைத்தபடி முகம் கழுவி வந்து படுத்தான்..

“ ஏன் முறைக்கிறான்.. இவ்வளோ நேரம் நல்லா தானே இருந்தான்..” என்று அவனையே கேள்வியாய் பார்த்தபடி பேசி கொண்டு இருந்தாள்..

“ பாக்குறா பாரு பார்வை.. இப்படி தான் பார்ப்பா ஆளை முழுங்குற மாதிரி, ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுவா “ என்று அவன் எண்ணி முடிக்கும் முன்பே அலைபேசியை துண்டித்துவிட்டு

“ என்ன முறைப்பு ??” என்று கேள்வி எழுப்பினாள்..

“ அதான பாத்தேன் “ என்று நினைத்தவன் “ நான் எங்க முறைச்சேன்??” என்று பதில் கேள்வி கேட்டான்..

“ ஓ !! அப்போ சார், நீங்க இப்ப அப்படியே ரொமான்டிக்கா பாத்திங்களோ ??” என்று நக்கலிடத்தாள்..

“ஆமாமா அப்படியே உன்னைய பார்த்துட்டாலும் “ என்று பதிலுக்கு அவன் வம்பிளுதான்..

“ ஏன் ஏன் ? எனக்கென்ன குறைச்சல்.. நீதானே என் பின்னால ஆறு மாசமா சுத்துன ??”

“ அம்மா தாயே தெரியாம சுத்திட்டேன்.. போதுமா ?? ஏன் டி இப்படி கத்துற.. வெளிய பசங்க இருங்காங்க..”

“ ஓ !! பசங்க இருக்கிறது உனக்கு இப்பதான் தெரியுமா ?? ஏன் தோட்டத்துல என்னைய எப்படி படுத்துன அப்ப எல்லாம் தெரியலையா ??” என்று அவள் கேட்டு கொண்டு இருக்கும் போதே மனோவின் அலைபேசி மீண்டும் தான் இருப்பதை காட்டியது..

குமாரிடம் இருந்து அழைப்பு வருவதை பார்த்த மனோ “ இந்த நேரத்துல கூப்பிடுறான் “ என்று யோசித்தபடி அதனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்..

மித்ராவோ “ என்னாச்சு இவனுக்கு.. ச்சே.. நல்லா சண்டை போடாலாம்னு பார்த்தா சரியாய் இந்த நேரத்துக்கு தான் போனுக்கு மூக்கு வேர்க்கும்..” என்று தன் போக்கில் எண்ணியவள்

“ யாரா இருக்கும் ?? போனை பார்த்ததும் மனு முகம் மாறுச்சே…. ம்ம் “ என்று யோசித்தாள்.. ஆனால் அவள் என்ன யோசித்தும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை..

மித்ராவின் கண் பார்வையில் இருந்து தள்ளி வந்தவன் “ சொல்லு குமார் என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?? எனி திங் சீரியஸ் ??”

…..

“ ம்ம் ஆமா டா.. நான் தான் பேங்க் மேனேஜர் கிட்ட பேசுனேன்.. சுந்தரோட எல்லா டிரான்சாக்சனையும் கொஞ்சம் நாள் ஹோல்ட் பண்ணி வைக்க சொன்னேன்.. இது பண்ணா மட்டும் தான் டா அவனை கொஞ்ச நாளைக்கு எதுவும் செய்ய விடாம பண்ண முடியும்..”

…………..

“ ஆமா குமார் நீ சொல்லுறது சரிதான்.. இன்னும் ரெண்டு நாள்ல மினிஸ்டர் வராரு தானே.. அவர்கிட்ட எல்லாம் காட்டலாம்.. அதுக்குள்ள அவன் வேற எதுவும் பண்ணாம இருக்கனும்.. அதுக்கும் நான் ஒரு ஏற்பாடு செஞ்சு இருக்கேன்..”

…………..

“ பின்ன என்ன டா பணத்தை வச்சு அவன் மட்டும் தான் விளையாடுவானா ?? அதே பணம் என்கிட்டயும் இருக்குல.. அதன் அவன் அல்லக்கை மாணிக்கம் இப்போ நம்ம பக்கம்.. அப்ரூவரா மாற சம்மதம் சொல்லி இருக்கான்”

…………                                                   

“ ஹ்ம்ம் இல்லை டா.. அவன் உண்மைய எல்லாம் ஒத்துகிட்டு என்கிட்டே பேசுன எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வச்சு இருக்கேன்.. அதுவும் இல்லாம டாக்குமென்ட்டாவும் டைப் பண்ணி அவன் கிட்ட சைன் வாங்கி இருக்கேன்.. ஆனா இதை விட சுந்தர் ஓட மனைவி கிட்ட பேச வாய்ப்பு வந்தா இன்னும் நல்லா இருக்கும் “

……..

“ தேங்க்ஸ் டா மாப்பள.. பட் நான் பெருசா எதுவும் செய்யல.. இதுல என் சுயநலமும் அடங்கி இருக்கு.. அதே நேரம் அவனால எத்தனை பேர் பாதிக்கபட்டு இருக்காங்கன்னு நம்ம நேராவே பார்த்தோமே டா “

…….

“ ஆனா இத்தனை கொடுமைக்கும் அவன் பொண்டாட்டி எப்படிதான் அமைதியா இருக்காங்களோ தெரியல.. ஹேய் அவனுக்கு ஒரு பொண்ணு இருக்குல ??”

……

“ சரி டா.. ஆனா பொண்ணு மைனர்.. அவங்க குடுக்கிற ஸ்டேட்மெண்ட் செல்லுமா ?? “

….

“ சரி டா ட்ரை பண்ணலாம்.. என்னால எங்கயும் நேரடியா பேசி விசாரிக்க முடியல.. எங்க போனாலும் ஒரு பக்கம் மீடியா இல்லாட்டி யாராவது பிஸினஸ் பெர்சன் தெரிஞ்சவங்க இருக்காங்க டா. அதான் இந்த பிரச்சனை முடிக்க இத்தனை நாள்”

………..

“ ஒக்கே மேன்.. நீ உன் சைடு ல எல்லாம் பண்ணு.. நான் என்ன செய்யணுமோ எல்லாம் செய்யுறேன்.. ஒக்கே.. குட் நைட் “ என்று குமாரிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்தான்..

கட்டிலில் நிம்மதியாக தலையணையை கட்டிக்கொண்டு உறங்கும் மனைவியை பார்த்தான்..

மெல்ல அவள் தலை கோதி “ நீ தினமும் இப்படியே நிம்மதியா தூங்கனும் மித்து.. எந்த காரணத்தை கொண்டும் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.. எனக்கு நீ எவ்வளோ முக்கியம்னு உனக்கு தெரியாது மித்து.. உன் முகத்துல எப்பையுமே நான் சந்தோசத்தை மட்டும் தான் பாக்கணும்.. அதுக்காக நான் எந்த ரிஸ்க்கும் எடுப்பேன் மித்து.. “ என்று கூறிவிட்டு அவனும் கண்கள் மூடி படுத்துக் கொண்டான்..

அவன் படுக்கவும் இந்த பக்கம் மித்ரா கண் விழிக்கவும் சரியாக இருந்தது,, இத்தனை நேரம் அவள் தன் கணவன் கூறியதை எல்லாம் கேட்டபடி தான் அமைதியாக படுத்து இருந்தாள்..  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது..

ஆனாலும் அவளால் சத்தம் போட்டு அழ கூட முடியவில்லை.. எங்கே தான் அழும் சத்தம் கேட்டு மனோவின் உறக்கம் கெட்டுவிடுமோ என்று அழுகையை தொண்டையின்னுல்லே விழுங்கினாள்..

அமைதியாக மனோவின் முகத்தை பார்த்தபடி படுத்து இருந்தாள். ஆனால் அவள் மனதில் துளி கூட அமைதி இல்லை.. “ தனக்காக ஒருவன் இத்தனை பாடுபடுகிறான்.. “ என்ற எண்ணமே அவளை பாடாய் படுத்தியது..

மனதிற்குள்ளே “ ஏன் மனு.. உனக்கு நான் என்ன பண்ணிட்டேன்னு நீ என்மேல இவ்வளோ பாசம் வச்சு இருக்க ?? நான் உன்கிட்ட இது வரைக்கும் நல்லபடியா கூட நடந்துக்கல.. அவ்வளோ ஏன் ஒரு புருசனுக்கு குடுக்க வேண்டிய அடிப்படை மரியாதையை கூட நான் உனக்கு குடுக்கல.. ஆனா எந்த நம்பிக்கையில நீ என்னைய கல்யாணம் பண்ண ??” என்று உறங்கும் அவன் முகம் பார்த்து மனதிற்குள்ளே கேள்வி கேட்டாள்..

இப்படியெல்லாம் தன் மனமே கேள்வி கேட்க  தொடங்கவும் மித்ராவிற்கு ஏனோ அந்த நொடியே மனோவை கட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது.. ஆனால் அதுவும் அவளால் முடியவில்லை..

“ பெரிய இவ மாதிரி அன்னிக்கு அவன்கிட்ட நான் இனிமே எதுவும் கேட்கமாட்டேன்னு முட்டாள் மாதிரி சொல்லிட்ட.. இப்ப பாரு நீ தான் தூங்காம தவிக்கிற “ என்று தன்னை தானே வேறு திட்டிக்கொண்டாள்..

 

அப்பொழுது மித்ராவிற்கு என்றோ தான் படித்த கவிதை நினைவு வந்தது.

உன்னை நீயே

முட்டாளாக நினைக்கும் தருணம்

காதலில் நடக்கும்..     

இக்கவிதை நினைவு வந்த மறு நொடியே மித்ரா படக்கென்று மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.. “ காதலா?? எனக்கா ?? அதுவும் மனு மேல யா ??” இது என்ன புதுசா இருக்கே ??” என்று எண்ணினாள்..

அத்தனை நேரம் மௌனமாக கண்ணீர் வடிதவள் காதல் என்ற வார்த்தை மனதில் பிறந்ததும் மற்ற அனைத்தையும் மறந்து போனாள்..

“ ஐயோ !! இது நிஜமா ?? நான் சும்மா கவிதைய தானே நினைச்சு பார்த்தேன்.. ?? “ என்று நினைத்தவளிடம் அவள் மனமே மீண்டும் கேள்வி கேட்டது

கவிதை காதலை பற்றியது தானே?? அந்த காதல் கவிதை ஏன் உனக்கு இந்த அர்த்த ஜாமத்தில் அதுவும் உன் கணவன் முகம் பார்க்கும் பொழுது நியாபகம் வந்தது?? என்று அவள் மனம் கேட்கவும்.. மீண்டும் திகைத்தாள்..

“ என் கணவன் ??? மனோ என் ஹஸ்பன்ட்… “ என்று நினைக்கும் பொழுதே இந்த எண்ணம் தன் மனதில் தோன்றி வெகு நாட்கள் ஆகியது போல இருந்தது மித்ராவிற்கு..

“ இதுனால தான் இவன் கிட்ட நான் ரொம்ப கோவமா எல்லாம் பேசமா இருந்தேனா ?? அன்னிக்கு அடிச்சானே.. அப்போகூட நான் எதுவும் பதில் பேசலையே.. அட மித்ரா போயும் போயும் இந்த நெட்ட கொக்கையா லவ் பண்ணுற ??” என்று எண்ணினாள்..

“ உனக்கு வேறு வாய்ப்பே இல்லை..” என்று அவள் மனம் பதில் அளித்தது..

“ பனை மரம்.. எப்படியோ கல்யாணம் செஞ்சு, அப்படி இப்படின்னு ஏதோ பண்ணி, என்னென்னவோ பேசி கடைசியில என்னைய கரக்ட் பண்ணிட்டான்.. ரௌடி.. “ என்று தன் கணவனுக்கு புகழ் மாலை சூடினாள்..

தன் காதலை உணர்ந்த நேரம் இந்த அர்த்த ஜாமம் என்று என்னும் பொழுதே அவளுக்கு சிரிப்பு வந்தது.. சிறிது நேரத்திற்கு முன் மனோ பேசியதை கேட்டு  அழுதது என்ன, இப்பொழுது அதே மனோவை நினைத்து சிரிப்பது என்ன ?? எல்லாம் காதல் படுத்தும் பாடு..

மனோகரனின் உறக்கம் கெடாதவாறு மெல்ல எழுந்து சென்று கண்ணாடி முன்னால் நின்றாள்.. தன்னையே புதிதாய் பார்ப்பது போல இருந்தது..

“அன்னிக்கு அம்மா கூட சொன்னாங்களே மாப்பள உன் மேல ரொம்ப பாசமா இருக்கார்னு.. ஒருவேல நான் தான் அவனை சரியாய் புரிஞ்சுக்கலையோ ?? “

“ பின்ன இந்த காட்டான் என்னைய என்ன பாடு படுத்தினான்.. அதுவும் முதல் நாள் எல்லாம் எப்படி அரட்டினான்.. இருக்கட்டும்.. இப்படியே கொஞ்ச நாளைக்கு சுத்தல்ல விடுவோம்.. அவன் கேட்ட ஒன் மன்த் டைம் முடிய இன்னும் இருவது நாள் இருக்கே…”

“ஹ்ம்ம் அதுக்கப்புறம் நானா சொல்லவா உன்னைய லவ் பண்ணறேன்னு.. ம்ம்ஹும் வேணவே வேண்டாம்.. அப்புறம் ரொம்ப ஓட்டுவான்.. எப்படியும் அவனே கேட்பான்ல.. அப்போ சொல்லலாம்..” என்று மீண்டும் கண்ணாடி முன் தன்னை ஒருமுறை பார்த்து கொண்டாள்..

“ ஹ்ம்ம் அழகா தான் இருக்கேனோ..?? இருக்கும் இருக்கும்.. இல்லாட்டி என் மனு “ என்று நினைக்கும் பொழுதே

“ ஏய் லூசு இந்நேரம் என்ன செய்யுற கண்ணாடி முன்னால நின்னு??” என்று மனோவின் குரல் தூக்க கலக்கத்தில் கேட்டது.. அவனது குரல் வந்ததும்  மித்ரா திடுக்கிட்டு அடித்து பிடித்து திரும்பினாள்..

“ ஐயோ நம்ம பேசுனதை எல்லாம் கேட்டு இருப்பானோ ??” என்று திரு திருவென முழித்தாள்.. அவள் முழியே அவனை நன்றாய் விழிப்படைய செய்தது.. அவனும் எழுந்து அமர்ந்து

“  என்னடி பண்ணுற தூங்காம ?? மணி பாரு மூணு.. இந்நேரம் கண்ணாடி பார்த்துகிட்டு இருக்க ??” என்றான் அவளை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்து..

“ ஹா !! அது மனு.. இல்ல அது..” என்று என்ன கூறுவது என்று தெரியவில்லை அவளுக்கு.. கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்.. அவளது திகைப்பும், திணறலும் மனோவிற்கு என்ன உணர்த்தியதோ எழுந்து அவள் அருகில் வந்தான்.. அவன் வருவதை பார்த்து

“ இப்ப ஏன் கிட்ட வர.. போ உனக்கு தூக்கம் வந்தா தூங்கு. அதை விட்டு என்னைய ஏன் ஆராய்ச்சி பண்ற?? என் முகம்.. நான் கண்ணாடி பாப்பேன்.. உனக்கு என்ன?? அதை ஏன் நீ பாத்த??  கொஞ்சம் கூட வெட்கமா இல்ல ஒரு பொண்ணு கண்ணாடி பாக்குறதை பாக்குற ?? போ நீ ரொம்ப மோசம் “ என்று வாய்க்கு வந்ததை கூறி விட்டு இல்லை இல்லை உளறி கொட்டி விட்டு  மனோ அவளை நெருங்கும் முன் அவள் மெத்தையை நெருங்கிவிட்டாள்..

மித்ராவின் பேச்சையும், அவளது பாவங்களையும் பார்த்து கொண்டு நின்றவன் “ என்னடா ஆச்சு இவளுக்கு “ என்று யோசித்தபடி நின்றே விட்டான்..

அதன் பிறகே தான் இப்படி சிலையென நிற்பதை உணர்ந்த மனோ “ ச்சே “ என்று தலையை உலுக்கி கொண்டு படுக்க வந்தான்..

“ யப்பா ஒருவழியா சமாளிச்சுட்டோம்.. ஹ்ம்ம் இந்நேரம் இவன் ஏன் முழிச்சான்.. ச்சே.. ஒரு நிமிஷம் எப்படி பயந்துட்டேன்.. இதுல இவன் கிட்ட வேற வந்து இருந்தான் அப்புறம் அவ்வளோ தான் அன்னிக்கு ஷவர்ல நிக்கும் போது சாஞ்ச மாதிரி சாஞ்சிருப்பேன்.. சரியான மாயாவி எப்படியோ என்னைய மயக்கிட்டான்.. களவாணி “ என்று அருகில் படுத்து இருக்கும் தன் கணவனை மனதிற்குள்ளே செல்லமாக கடிந்தபடி படுத்து இருந்தாள்..

லேசாய் சிவந்து இருந்த அவள் முகமும், இதழில் உறைந்து கிடக்கும் புன்னகையும், கண்கள் மூடி இருந்தாலும் அவளது கருவிழிகள் இங்கும் அங்கும் அசைந்து கொண்டு இருக்கும் விதமும் மனோகரனுக்கு முற்றிலும் புதிதாய் இருந்தது..

இம்முறை அவள் முகத்தை பார்த்து மனதிற்குள் கதைப்பது மனோவின் முறையானது.. “ ஹ்ம்ம் ஏன் டி இப்படி என்னைய பாடா படுத்துற.. நீ பாக்குற பார்வையில உன் காதல் அப்பட்டமா தெரியுது.. நீ பேசுறதும் அப்படிதான் இருக்கு.. ஆனா நான் கிட்ட வந்தா மட்டும் ஒண்ணுமே தெரியாத மாதிரி என்னைய திட்டி அனுப்புற.. ஹ்ம்ம் “

“ காதலிச்சேன், கல்யாணமும் பண்ணேன்.. ஆனா இப்படி அர்த்த ராத்திரில உன் முகத்தை மட்டும் பார்த்துகிட்டு மனசுக்குள்ள பேசிக்கிட்டு படுத்து இருக்கேன்.. வெளியே தான் பெத்த பேறு பெரிய பிஸினஸ் மேன்னு.. வீட்டுக்குள்ள நீ அரட்டிக்கிட்டு இருக்க.. “ என்று புலம்பியபடி படுத்து இருந்தான்..

மித்ராவோ “ இவன் கண்ணு மூடி தூங்க மாட்டானோ ?? இப்படியே பார்த்துகிட்டு இருக்கான்.. இப்படி பார்த்தா நான் என்ன செய்ய ?? எவ்வளோ நேரம் தான் நான் தூங்குற மாதிரியே நடிக்கிறது” என்று என்னும் பொழுதே

“ நீ இன்னும் தூங்கலைன்னு எனக்கு தெரியும் மித்து.. சோ நீ நடிக்க வேண்டாம் “ என்று மனோ கூறவும் மெல்ல கண் திறந்து அசடு வழியே ஹி ஹி என்று தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி சிரித்தாள்..

அதை பார்த்து மனோ மெல்ல பயந்தவன் போல “ அய்யோ !! அம்மா பேய்.. இதுக்கு நீ கண்ணு மூடியே தூங்குமா “ என்று அலறினான்.. அதை கேட்டு வெகுண்டு எழுந்தவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்..

“ நான்.. நான்.. உனக்கு பேயா?? நான் பேயின்னா அப்புறம் என்னைய கல்யாணம் பண்ண நீ என்ன ?? “ என்று கூறிக்கொண்டே அவனை அடிக்க தொடங்கினாள்..

“ ஹேய் !! வலிக்குது டி.. ராட்சஸி… டி மித்து.. போதும் “ என்று அவளது அடிகளை சமாளித்து கொண்டு அவளை தன் பக்கம் பிடித்து இழுத்தான்.. இவன் இழுப்பான் என்று அறியாததால் மித்ரா படக்கென்று அவன் மீதே விழுந்து வைத்தாள்..

“ அட இவ்வளோதான் உன் ஸ்ட்ரெந்தா?? இழுக்கவும் உடனே கவுந்துட்ட ??” என்று அவளை வாரியபடி இறுக அணைத்து கொண்டான்..   

அவனது அணைப்பு மித்ராவிற்கு மகிழ்ச்சியை குடுத்தாலும் “ ம்ம்ச் மனு விடு.. என்ன பண்ணுற ?? ஐயோ விடு மனு.. “ என்று திமிரவும் இன்னும் தன் அணைப்பை இறுக்கிக்கொண்டு

“ ம்ம் அப்படிதான் பண்ணுவேன்.. ஏன்னா நீ தானே என் பொண்டாட்டி… பேசாம தூங்கு “ என்று அவளை அணைத்தபடி அவனும் உறங்கினான்.. மித்ராவும் மகிழ்ச்சியாக கண்கள் மூடினாள்..

 

“ ஹலோ மீரா.. இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு ?? “ என்று மதர் கேட்கவும்

“ இப்போ நல்லா இருக்கேன் மதர்.. காய்ச்சல் இல்ல.. தனம் அக்கா நல்லா பாத்துகிட்டாங்க “ என்று தன் கைபேசியில் பதில் அளித்தாள்..

“ குட் மா.. அப்புறம் லீவ் எல்லாம் எப்படி போகுது மீரா…?

“ நல்லா போகுது மதர்.. ஆனா என்ன தனம் அக்கா தான் காய்ச்சல் வந்தது இருந்து என்னைய ஒரு வேலை கூட செய்ய விடல..” என்று தன் அருகில் இருக்கும் தனத்தை புன்னகையோடு ஒரு பார்வை பார்த்தபடி கூறினாள்..

“ ஹ்ம்ம் தனம் எப்பையும் அப்படித்தான்.. வெரி கேரிங்.. அப்புறம் மி… மீரா.. நான் இங்க சென்னைக்கு வந்து இருக்கேன்..” என்று அவர் கூறவும் மீராவிற்கு பக்கென்று ஆனது..

“ மதர் “ என்றாள் மெல்ல..

“ டோன்ட் வொர்ரி மீரா.. இது அபிசியல் ட்ரிப்.. தென் இன்னும் த்ரீ டேஸ்ல அங்க வந்திடுவேன்.. அப்புறம் இன்னொரு விஷயம் “

ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டபடி “ என்ன மதர் ??” என்று கேட்டாள் மீரா..

“ இன்னும் அஞ்சு நாள்ல நம்ம ஸ்கூலுக்கு கேம்ப்புக்கு வராங்க மா.. இயர்லி ஒன்ஸ் இப்படி கேம்ப் கண்டக்ட் பண்ணுறது தான்.. இந்த வருஷம் தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. சோ நான் வந்த பிறகு நீ, நான், தனம் அப்புறம் இன்னும் ரெண்டு ஸ்டாப்ஸ் எல்லாம் சேர்ந்து ஸ்கூல ரெடி பண்ணும் கொஞ்சம் “ என்று அவர் கூறவும் சரி என்று கூறி வைத்துவிட்டாள்..

அதன் பிறகு மதர் கூறிய விவரங்களை தனத்திடம் கூறினாள்.. தனம் “ இது வருசா வருஷம் நடக்கிறது தான் கண்ணு.. எல்லாம் பணக்கார வீட்டு பசங்க, பிள்ளைங்க தான் வரும்.. பரிட்சை லீவ்ல அதான்.. இங்க வந்து நிறைய வேலை செய்வாங்க..”

“ மலை மேல ஏறுவாங்க, அப்புறம் ஊருக்குள்ள மரம் நடுவாங்க, இப்படி நிறைய ஆனா நல்லா இருக்கும்.. அதுக்கு ஏற்பாடு பண்ண தான் மதர் அங்க போய் இருக்காங்க போல “ என்று தனக்கு தெரிந்த விவரம் கூறினார் தனம்..

“ ஓ !!” என்று மட்டும் பதில் கூறினாள் மித்ரா.. ஆனால் அவளுக்கு தெரியவில்லை.. தான் வாழ்வில் தவிர்க்கவே முடியாத நபர்கள் எல்லாம் வரப்போகிறார்கள் என்று.. 

இப்படியாக தனமும் மீராவும் பேசியபடி படுத்து இருந்தனர்.. “ மீராக்கண்ணு பாரு நேரம் ரொம்ப ஆச்சு.. நான் போய் தூங்குறேன்.. நீயும் தூங்கு கேம்ப் ஆரம்பிச்சுட்டா வேலை நிறைய இருக்கும்.. பேச ஆரம்பிச்சா நேரம் காலம் தெரியாம பேசுறது இந்த புள்ள.. இல்ல அமைதியா இருக்குறது” என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டு சென்று தன் படுக்கையில் படுத்தார் தனம்..

மீராவிற்கு இரவு இத்தனை நேரமா முழித்து கொண்டு இருந்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது.. அவள் மனமோ “ ஏன் நீ முழித்ததே இல்லையோ ??” என்று கேள்வி கேட்டது.. ஏதோ நினைவு வந்து தன் கணவனின் புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்..

அவனுடைய காதலும், அவள் தன் காதலை உணர்ந்த தருணமும் சொல்லாமல் கொள்ளாமல் அவள் நினைவுகளில் வந்தது.. காதல் நினைவு வந்த பிறகு அங்கு நித்திரைக்கு இடம் இருக்குமா என்ன ??

அவள் கணவனின் படத்தை மார்போடு அணைத்தபடி கண்களில் அவனது நினைவுகளை தேக்கி வெளியே கரிய வானில் தெரியும் அந்த ஒற்றை நிலாவை பார்த்தபடி படுத்து இருந்தாள் மீரா..

 

கண்ணாலே காதல் மொழி

பேசும் உன்னை

கணவன் என்று கூறவா ??

காதலன் என்று சொல்லவா ?? – நான்..

 

நீ என்ன கூறினாலும்

சரிதான் ஏனெனில்

எப்பொழுதும் என்னவள் என்கிறாய் – நீ.. 

               

                           மாயம் – தொடரும்..                                                                                           

                                                                

 

                       

                

      

                       

         

 

Advertisement