Advertisement

மாயவனோ !! தூயவனோ – 10

 “ ஹலோ… மனு… “

“ ஹே !!!! மித்து… என்ன யாருக்கு ட்ரை பண்ண ??  யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேனே “ என்றான் மெல்ல சிரிப்புடன் மனோகரன்..

“ம்ம்ச்.. எனக்கு தான் தெரியும்ல.. அப்புறம் ஏன் வேற யாருக்கும் கால் செய்ய போறேன்.. எல்லாம் உன்கிட்ட பேச தான் கால் பண்ணேன் “ என்றாள் மித்ரா சற்றே கடுப்பாக…

“ ஆகா !! இன்னைக்கு புயல் மழை தான் வரும் போல.. இத்தனை நாளைக்கு அப்புறம் இன்னிக்கு தான் நீயா என்கிட்ட பேச ஆரம்பிச்சு இருக்க டியர்..”

“ஆமாமா !! அறிய கண்டுபிடிப்பு.. சரி சரி சொல்லு இப்ப எங்க இருக்க மனு ?? ”

“ இந்நேரம் நான் எங்க இருப்பேன் மித்து ஆபீஸல தான்.. ஏன் மா ??”

“ ஹ்ம்ம் சும்மா தான்.. கை சுளுக்கோட போனையே அதான் கேட்டேன்.. வேற எதுவும் இல்லை “ என்று மித்ரா கூறவும்

“அப்படியா ?? வேற எதுவுமே இல்லையா ?? ” என்றான் ஒரு மாதிரி அழுத்தமாக.. அவனது குரலின் வித்தியாசம் அவளுக்கு என்ன உணர்த்தியதோ ஆனால் அவனது குரல் இதயம் தொட்டது.. ஒரு நிமிடம் தன்னை அதில் தொலைத்தவள் “ என்ன ?? இப்ப ஏன் எப்படியோ பேசுற ??” என்று கேட்டாள் வேகமாக..

“ நான் எப்படி மித்து பேசுனேன் ?? எல்லாரையும் போல வாய்ல தான் “

“ ஹேய் !! இடியட்… இப்ப ஒரு செகண்ட் உன் டோன் மாறுச்சு…”

“ அப்படியா முதல் தடவ என்கிட்டே போன்ல பேசுறல அதான் உனக்கு அப்படி கேட்டு இருக்கும் “ என்று எதை எதையோ கூறி அவளை குழப்பிவிட்டு வேடிக்கை பார்த்தான்..

“ ஹ்ம்ம் இருக்கும்.. சரி நான் வைக்கிறேன்..” என்று கூறும் பொழுதே வாசலில் ரீனாவின் வந்து கார் நிற்பதை கண்டு  “ மனு.. அவ.. அந்த ரீனா வரா “ என்றாள் கம்மி போன குரலில்..

“ ரீனாவா?? அவ ஏன் இப்ப சம்பந்தமே இல்லாம வீட்டுக்கு வரணும்.. மித்து வேற தனியா இருக்காளே “ என்று யோசித்தவன் “ சரி மித்து நீ பார்த்து பேசி அனுப்பு.. நான் கொஞ்சம் சீக்கிரம் விட்டுக்கு வர பாக்குறேன் .. டேக் கேர் டியர்“ என்று கூறி பேச்சை முடித்துவிட்டான்..

“ இவ ஏன் இங்க வரா ?? ” என்று யோசித்தபடியே உள்ளே நுழையும் ரீனாவை பார்த்தாள்.. அவள் தெரு முனையில் வந்தாள் அவள் போட்டு இருக்கும் செண்டின் மனம் மறு முனைக்கு வரும் போல இருந்தது..

“ வா.. வாங்க.. ரீனா “ என்று வீட்டின் பெண்ணாய் இருந்து வரவேற்றாள் மித்ரா..

“ ம்ம்.. அதான் வந்துட்டேனே.. அப்புறம் என்ன வாங்கன்னு.. எனக்கு இந்த பார்மாலிட்டி எல்லாம் பிடிக்காது.. “ என்று கூறி கொண்டே உள்ளே வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள் இருக்கையில்.

 மித்ராவும் உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று கூறும் விதமாக மெத்திருக்கையில் அமர்ந்தபடி “ பொன்னி அக்கா… குடிக்க ரெண்டு கிளாஸ் ஜுஸ் கொண்டு வாங்க “ என்று அந்த வீட்டில் தன் அதிகாரத்தை ரீனாவின் முன் காட்டினாள் மித்ரா..                             

இதை காணும் போது ரீனாவிற்கு பற்றி கொண்டு வந்தது.. ஆனால் என்ன செய்வது வெளியே தன் கோவத்தை எல்லாம் காட்டினால் காரியம் எதுவும் நடக்காதே.. மெல்ல புன்னகைத்தபடி “ அப்புறம் மித்ரா.. எங்களுக்கு உங்க கல்யாணாம் நடந்தது தெரியாது சோ அதான் நேத்து வரும் போது ஏதும் பரிசு வாங்கி வரல.. ப்ளீஸ் டேக் திஸ் “ என்று கூறி தன் கையில் இருந்த பரிசை நீட்டினாள்..

இதை மித்ரா எதிர் பார்கவில்லை.. நேற்று இவள் நடந்து கொண்ட விதம் என்ன?? இப்பொழுது இவள் பேசும் விதம் என்ன என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டாள்.. ஆனாலும் அதை வெளி காட்டாமல் “ ஹ்ம்ம் இருக்கட்டும் ரீனா.. பரவாயில்ல “ என்றாள் மெதுவாக..

“ நோ நோ…. என்…. சாரி… எங்க மனோக்கு கல்யாணம் ஆகியிருக்கு அதுக்கு நான் கிப்ட் குடுக்கலைன்னா எப்படி ??” என்று கேட்டவாறே மித்ராவின் கரங்களை பற்றி அதில் அவள் பரிசை வைத்தாள்..

வேறு வழியில்லாமல் மித்ராவும் “ தேங்க்ஸ் “ என்று கூறி வாங்கி கொண்டாள்.. ஆனால் அவள் மனமோ “ இப்ப இவ என்ன சொல்ல வந்தா ?? என் மனோனு சொல்ல வந்தாளோ ?? ” என்ற யோசனையில் இருந்தது.

அவள் யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே பொன்னி வரவும் ரீனாவிற்கு பருக ஜூஸ் குடுக்குமாறு கை காட்டினாள் மித்ரா.. பொன்னியும் சரி என்று தலை ஆட்டிவிட்டு ரீனாவிற்கு குடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்..

பொன்னி உள்ளே செல்லும் வரை அமைதியாக இருந்த ரீனா “ அப்புறம் மித்ரா… உங்க கல்யாணம் அவசரமா நடந்ததா என்ன ?? “ என்று மெல்ல தான் வந்த வேலையை ஆரம்பித்தாள்.. மித்ராவிற்கு “ இவளுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும்னு தெரியலையே… எல்லாம் தெரிஞ்சு கேக்குராளா ?? இல்ல போட்டு வங்குராலான்னு தெரியல “ என்று எண்ணிக்கொண்டு

“ அப்படி எல்லாம் இல்ல ரீனா.. “ என்றாள் மொட்டையாக..

“ ஓ !! அப்புறம் ஏன் மா கிரான்ட்டா மேரேஜ் செய்யல.. யாருக்குமே சொல்லல ?? ”

“ அட அதெல்லாம் இல்ல ரீனா.. எங்க பாமிலி, மனோ பாமிலில எல்லாருக்கும் தெரியும்.. அப்பா அம்மா வேற வெளிநாடு கிளம்புற அவசரம் அதான் பெருசா எதுவும் செய்ய முடியல.. கொஞ்ச நாள் அப்புறம்  எல்லாருக்கும் சொல்லிக்கலாம்னு இருக்கோம் “ என்று அவளாக வாய்க்கு வந்ததை கூறி சமாளித்தாள்..

“ ஓ !! கொஞ்ச நாளா ?? இன்னும் எத்தனை நாள் மித்ரா.. ஆல்ரெடி ஒரு மாசம் ஆகபோதே??”

“ ஆமா.. இப்ப அவர் கொஞ்சம் பிசி அதான்..” என்று கூறியவள் “ அய்யோ !! இவ என்ன வந்ததுல இருந்து கேள்வியா கேட்டுகிட்டு இருக்கா ?? கிப்ட் கொடுத்தோமா போனோமான்னு இல்லாம இவ என்ன “ என்று எரிச்சல் வேறு வந்தது..

“ என்ன மித்ரா நான் கேட்கிறது உனக்கு கடுப்பா இருக்கா ?? ஆனா நான் உன் நல்லதுக்கு தான் கேட்டேன் மா “ என்றாள் ரீனா அன்பொழுக..

இது என்ன டா புது கதை என்பது போல பார்த்தாள் மித்ரா.. “ ஆமா மித்ரா மனோ பத்தி உனக்கு எவ்வளோ தெரியும்னு எனக்கு தெரியாது.. ஆனா நான் அவன் கூட சின்ன வயசுல இருந்து இருக்கிறவ.. அவனை பத்தி எல்லாமே நல்லா தெரியும் “ என்றாள் அந்த எல்லாமேயில் ஒரு அழுத்தம் குடுத்து..

மித்ரா பதில் எதுவும் கூறாமல் ரீனாவையே பார்த்தாள்.. ஆனால் மனதிற்குள் அவள் கூறுவதை எல்லாம் நன்றாக குறித்து கொண்டாள்.. மித்ரா மௌனமாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு ரீனா “ ஆமா மித்ரா உன் நல்லதுக்காக தான் உங்க கல்யாண விஷயம் பத்தி இவ்வளோ கேக்குறேன்..”

“ ஓ !! சரி ரீனா…” என்றாள் மித்ரா மெல்ல.. ஆனால் மித்ரா மனதில் என்ன ஓடி கொண்டு இருக்கிறது என்பதை அறிய தவறிவிட்டாள் ரீனா..

“ ம்ம் சொல்லு மித்ரா உங்க கல்யாணம் எந்த கோவில்ல நடந்தது ??” பதில் கூறினாள் மித்ரா..  ரீனாவும் தன் தாய் கூறி அனுப்பியபடி பேசிவிட்டு கிளம்பினாள்..

அங்கே அலுவலகத்தில் மனோவிற்கு இருப்பு கொள்ளவில்லை.. “ இந்த ரீனா ஏன் இப்ப வந்து இருக்கா ?? கடவுளே என்ன குழப்பம் செய்ய போறாளோ ?? ஏற்கனவே மித்துவ சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.. “ என்று அவன் தான் நெற்றியை தடவி கொண்டு இருக்கும் போதே அவனது உதவியாளர் உள்ளே வந்தார்..

“ சார் அமைச்சர் தர்மதுரையோட பையன் உங்களை பார்க்க வந்து இருக்காரு “ என்று கூறவும் மனோ அப்படியே ஒரு நிமிட திகைத்துவிட்டான்..

“ என்ன ??? என்ன சொல்றிங்க ?? யா.. யாருன்னு சொன்னிங்க ?? ” என்றான் தான் காதுகளில் விழுந்தது சரியான தகவல் தானா என்ற சந்தேகத்தில்

“ நேம் சுந்தர்னு சொன்னாரு சார்.. அமைச்சர் தர்மதுரையோட பையனாம்.. உள்ள அனுப்பவா சார் ?? ” என்றார் அவரோ மிக பவ்வியமாய்..

சில நொடிகள் யோசித்தவன் “ம்ம் அனுப்புங்க.. அவர் போற வரைக்கும் வேற யாரையும் உள்ள விட வேண்டாம்.. “ என்று கூறியவன், அவர் வெளியே கிளம்பவும் “ ஒரு நிமிஷம் நானே வரேன் “ என்று கூறிவிட்டு அவரோடு சேர்ந்து வெளியே சென்றான்..

அங்கே இருந்த மீட்டிங் அறையில் சுந்தர் அமர்ந்து இருந்தான்.. வயது ஐம்பதை நெருங்கினாலும் இன்னும் மும்பது வயது இளைஞன் போல தான் நடை உடை பாவனை அனைத்தும்.. மனோவிற்கு அவனது பெயரை கேட்டதுமே மனதில் கோவம் எழுந்தது.. ஆனால் அதை இப்பொழுது வெளியே காட்ட முடியாதே..

“ இவன் ஏன் இங்க வந்தான்.. கடவுளே ஒருவேளை எல்லாம் தெரிஞ்சிடுச்சோ ?? இல்ல வாய்ப்பே இல்ல.. நான் ஒரு ஒரு விசயமா திட்டம் போட்டு பண்ணது எல்லாம் ஒரு நிமிசத்துல இவனால கண்டு பிடிக்க முடியாது “ என்று எண்ணியவாறே “ அடடே வாங்க சார்.. வாங்க “ என்று முகத்தில் சிரிப்பை பூசி கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான் மனோகரன்..

மனோவை பார்த்த சுந்தரும் மெல்ல சிரித்து “என்ன தம்பி என்னைய யாருன்னு தெரியுதா ?? ” என்று கேட்டான் ஒய்யாரமாய்..

“ என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க?? உங்களை தெரியாம போகுமா ?? “ என்று அவனை பார்த்து கேட்டுவிட்டு தன் உதவியலாறை அழைத்து சுந்தருக்கு பருக குளிர் பானம் கொண்டு வருமாறு கூறினான்.. மனோவின் கவனிப்பை பார்த்து மனதில் மகிழ்ந்து கொண்டான் சுந்தர்..

“ அப்புறம் சார் இவ்வளோ தூரம் என்னைய தேடி நீங்க ஏன் வரணும் ?? கூப்பிட்டு இருந்தா நானே ஓடி வந்து இருப்பேனே ?? ” என்று கேட்டான் மனோ மிகவும் பணிவாக கேட்பது போல..

அவனது பணிவை பார்த்த சுந்தர் இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்து தன் கால் மேல் கால் போட்டபடி “ அது ஒன்னும் இல்லை தம்பி இந்த பக்கமா ஒரு வேலை.. அதுவும் இல்லாம நம்ம போக வேண்டிய வேளைக்கு நம்ம தானே போகணும்.. அதான் நானே வந்துட்டேன்.. எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரு விஷயம் தெரியனும் “ என்று கூறி தன் பேச்சில் ஒரு சிறு இடைவெளி விட்டான்..

அவன் இடைவெளி விட்ட நேரம் மனோவின் இருதயம் பந்தய குதிரை போல வேகமாக துடித்தது.. மனதில் இருக்கும் கலக்கத்தை வெளியில் காட்டாமல் “ சொல்லுங்க சார்.. உங்களுக்கு நான் என்ன செய்யணும் ?? எதுவா இருந்தாலும் நல்ல படியா முடிச்சுடலாம். உங்களுக்கு ஒரு விஷயம் செய்யாம நான் வேற யாருக்கு செய்ய போறேன் “ என்றான் அழுத்தமாக..

“ அது ஒண்ணுமில்ல மனோகரு… இந்த கணக்கு வழக்கு எல்லாம் பார்ப்பாரே… பேரு கூட ஆ…. ரவி.. ரவிச்சந்திரன்.. அவரு இங்க தான் உங்க கிட்ட தானே  வேலை செய்றாரு ??? ” என்று கேட்டான் எதுவும் தெரியாதவன் போல.. மனோவும் ஒன்றும் சளைத்தவன் இல்லையே..

“ ஆமா சார்.. இங்க தான் இருந்தாரு..” என்றான் மெல்ல..

“ என்ன இருந்தாரா ?? அப்போ இப்ப இல்லையா ?? ” என்று கேட்டான் சுந்தர் சற்றே ஒரு மாதிரியான குரலில்..

அவனது ஒவ்வொரு மாற்றத்தையும் கவனித்தபடி “ ஆமா சார்.. இங்க தான் இருந்தாரு.. நல்ல மனுஷன்.. அவர மாதிரி யாரும்  வேலை பார்க்க முடியாது.. ஆனா இப்ப இங்க இல்லை..” என்றான் மனோ..

“ ஓ !! ஏன் ?? ஏன் இங்க இல்லை ?? நீங்க வேலை விஷயமா எங்கயும் அனுப்பி இருக்கீங்களா என்ன ?? ” என்று கேட்டான் சுந்தர் மனதில் குழப்பத்துடன்..

“ இல்லை சுந்தர் சார்.. அவர் தான் ஒரு மாசம் முன்னாடி வேலைய ராஜினாமா செய்யுறேன்.. இதுக்கு மேல என்னால கூர்மையா வேலை செய்ய முடியல.. அப்படி இப்படினு நிறைய காரணம் சொல்லிட்டு ராஜினாமா லெட்டர் குடுத்துட்டு போயிட்டாரு..” என்றான் அப்பாவியாக..

“ என்ன இது இவன் வேற மாதிரி சொல்லுறான்” என்று எண்ணியபடி “ அது எப்படி தம்பி உடனே போக முடியும்.. ஒரு மாசம் நோட்டிஸ் அது இதுன்னு நிறைய வச்சு இருப்பிங்களே ?? அதெல்லாம் எதுவும் முடிக்காம எப்படி போக முடியும்..” என்றான் சற்றே கோவமாக..

மனோவும் “ என்னைய என்ன சார் பண்ண சொல்றிங்க?? போறேன்னு சொல்லுற மனுசனை கட்டி போட்டு வேலை வாங்க முடியுமா ?? அவரே முடியலன்னு சொல்லும் போது நான் என்ன சொல்ல முடியும்.. அதுவும் இல்லாம விருப்பம் இல்லாம வேலை பார்த்து என் ஆபீஸ கணக்குல குழப்படி நடந்துட்டா நட்டம் யாருக்கு சார் எனக்கு தானே “ என்றான் அவனும் மூச்சு விடாமல்..

மனோகரன் வேகமாக பேசிய விதமும் அவனது தோற்றமும் அவன் கூறுவது அனைத்தும் உண்மை என்பது போல இருந்தது சுந்தருக்கு.. “ என்னடா இது இப்படி எல்லாமே ரகசியமா இருக்கு.. ஹ்ம்ம் ஆனா கண்டு பிடிக்கிறேன்.. இந்த தம்பி பேசுறதும் உண்மையா தான் இருக்கு.. “ என்று யோசித்தபடி “ சரி தம்பி இப்ப அவரு எங்க இருக்காருன்னு தெரியுமா ?? அவரு அட்ரெஸ் குடுக்க முடியுமா ?? “ என்று கேட்டான்..

மனோவும் மிக நல்லவன் போல “ ம்ம்.. என்ன சார் நீங்க ஒரு விஷயம் கேட்டு நான் இல்லைன்னு சொல்ல முடியுமா ??அப்படி சொல்லிட்டு நான் இந்த ஊருல தொழில் செய்ய முடியுமா ?? இல்ல இருக்கதான் முடியுமா ?? ஆனா நான் ஒன்னு உங்க கிட்ட கேட்கலாமா ?? ” என்றான்..

மித்ராவின் தந்தை ரவிச்சந்திரனின் முகவரி தன் கைக்கு வர போகும் மகிழ்ச்சியில் சுந்தர் “ என்ன தம்பி எனக்கு எவ்வளோ பெரிய காரியம் செய்யுரிங்க.. என்ன வேணும் கேளுங்க?? ” என்றான்

“ அது ஒண்ணுமில்ல சார்.. அவர் அட்ரெஸ் கேட்டு நீங்களே இவ்வளோ தூரம் வந்து இருக்கீங்களே அதான் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா ?? இல்ல நான் கேட்டது தப்புன்னா சாரி சார் “ என்றான் உடனே..

மனோ இப்படி கேட்டதுமே சுந்தரின் முகம் ஒரு சில வினாடிகள் மாறின.. ஆனாலும் அதை உடனே சரி செய்து கொண்டு  “ அது… அது ஒண்ணுமில்ல மனோகரு.. பழைய கணக்கு எல்லாம் கொஞ்சம் பார்த்து முடிக்க வேண்டி இருந்தது.. அசோசியேசன்ல இவர் பேரு தான் சொன்னாங்க.. அதான் “ என்று வாய்க்கு வந்ததை கூறி மழுப்பினான்..

மனோவிற்கும் தெரியும் சுந்தர் கூறுவது அனைத்தும் முழு பொய் என்று.. மனதிற்குள் “ நானே உன்னை கொஞ்ச நாள்ல பாக்க வரணும்னு இருந்தேன்.. ஆனா நீயா வந்து சிக்கிட்டியே சுந்தர் “ என்று எண்ணி நகைத்தபடி “ ஒரு நிமிஷம் இருங்க சார் நானே போயி அட்ரெஸ் எழுதிட்டு வரேன்” என்று கூறி சென்றான்..

அவன் சென்றதும்  சுந்தர் “ என்கிட்டயா  எல்லாம் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுறிங்க ?? ஏய் ரவி.. இரு வரேன்.. உன்னைய உன் வீட்டுக்கே வந்து பாக்குறேன்..” என்று கருவி கொண்டான்..

மனோகரன் எழுதி கொண்டு வந்த முகவரியை பார்த்து மீண்டும் எரிச்சல் அடைந்தான் சுந்தர்.. “ என்ன தம்பி இது அவங்க வீட்டு அட்ரெஸ்ல?? ” என்றான் கடுப்பை மறைத்த குரலில்..

“ ஆமா சார்.. நீங்க அவங்க வீட்டு அட்ரெஸ் தானே கேட்டிங்க ?? ”

“ அட.. என்ன பா நீ… இப்ப அவங்க அங்க இல்ல.. வீடு பூட்டி கிடக்கு.. குடும்பமே இந்த ஊருல இல்ல போல.. அதான் இப்ப அவங்க எல்லாம் எங்க இருக்காங்கனு உங்கட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்..” என்றான் எரிச்சலாக..

மனோகரன் “ ஓ !! இங்க இல்லையா ?? அட கடவுளே.. ஒரு வேலை வெளியூர் எதாவது போயிருப்பாங்களோ என்னவோ சார்.. நீங்க ஏன் இவ்வளோ டென்சன் படுறிங்க சார்.. “

“ இவன் கிட்ட கேட்டு இனிமே வேளைக்கு ஆகாது போல. நம்மலே நேரா களத்துல இறங்க வேண்டியது தான் “ என்று எண்ணிகொண்டு “ சரி தம்பி மனோகரு அவங்கள பத்தி அடுத்து ஏதா விவரம் தெரிஞ்சா எனக்கு கண்டிப்பா சொல்லணும்.. இப்பதைக்கு நான் போய்ட்டு வரேன் “ என்று கூறி சென்று விட்டான்..

மனோகரனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.. “ யாருகிட்ட வந்து யார பத்தி கேக்குறான்.. கூமுட்டை.. இவன் எல்லாம் மினிஸ்டர் மகன்னு வேற சொல்லிக்கிறான்.. சுந்தர் உனக்கு இந்த மனோ பத்தி தெரியாது.. ஒரு நாள் நானே உன்னைய பாக்க வருவேன்..” என்று தனக்குள் கூரிக்கொண்டான்..

ஆனாலும் மனோவிற்கு மனதில் இனம் புரியாத ஒரு சஞ்சலம் இருந்து கொண்டே தான் இருந்தது.. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தான்.. உடனே தன் நண்பன் குமாருக்கு அலைபேசியில் அழைத்தான்..

“ ஹலோ குமார்.. எப்படி டா இருக்க ?? “

….

“ ஹ்ம்ம் நான் நல்லா இருக்கிறது எல்லாம் இருக்கட்டும் டா.. நான் சொன்னது என்ன ஆச்சு ?? “

….

“ என்ன மேன் நீ ?? நான் உன்கிட்ட சொல்லி எத்தனை நாள் ஆச்சு.. இன்னைக்கு அவன் மித்ரா அப்பா அட்ரெஸ் கேட்டு என் ஆபீஸ்கே வந்துட்டான்.. எப்படியோ பேசி சமாளிச்சு அனுப்பி இருக்கேன்.. அவன் போறத பாத்தா அடிகடி வந்து தொல்லை பண்ணுவான் போல “

…..

“ இங்க பாரு டா குமார்.. இந்த விஷத்தை நமக்காக மட்டும் செய்யல..  இவனால எத்தனை இப்ப கண்ணீர் விடுறாங்கனு உனக்கே தெரியும்.. நான் உன்கிட்ட குடுத்தது எல்லாம் பக்கா உண்மையான எவிடன்ஸ்..”

….

“ ஆமா டா.. முதல்ல பிரைவேட்டா ஒருத்தரை வச்சு தான் எல்லாம் ரெடி பண்ணேன்.. இருந்தாலும் உன்னைய மாதிரி பத்திரிக்கைகாரன் உதவி இருந்தா இன்னும் நல்லா இருக்குமேன்னு தான் உன்கிட்ட வந்தேன் “

…..

“ சரி டா.. ரொம்ப தேங்க்ஸ்.. வீட்டுக்கு ஒரு நாள் வா.. நம்ம நேருல பேசுனா இன்னும் நல்லா இருக்கும்.. அப்புறம் நான் ஒரு விஷயம் முடிவு செஞ்சு இருக்கேன் டா “ என்று தன் மனதில் இருப்பதை கூறினான் மனோகரன்.. அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ தெரியவில்லை..

மனோ “இல்ல குமார் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு.. இப்போ இது செஞ்சா தான் சரியா இருக்கும்… அதுவும் இல்லாம நான் மித்ராவை பத்தியும் கொஞ்சம் நினைக்கணும்ல டா.. இத்தனை நாள் அவ இவ்வளோ பொறுமையா இருக்கிறதே பெரிய விஷயம் “

…………

“ தேங்க்ஸ் டா.. சரி நம்ம நேருல பேசலாம்.. எனக்கு இனிமே தான் நிறைய வேலை இருக்கு” என்று கூறி வைத்தான்..

அதன் பிறகு அலுவலக வேலையை தொடர்ந்தவன் இன்னும் சிலருக்கு அழைத்து அலைபேசியில் பேசினான்.. பின் மெல்ல புன்னகைத்து கொண்டான்.. அப்பொழுது தான் ரீனா அங்கே அவன் வீட்டிற்கு வந்தது நினைவு வந்தது..

“ஸோ !!! இவ வேற வந்து என்ன பேசிட்டு போயி இருக்கான்னு தெரியலையே” என்று எண்ணியபடி வீட்டிற்கு சென்றான்..

அங்கே பிரபா மட்டுமே ஹாலில் அமர்ந்து இருந்தான்.. “ என்ன பிரபா நீ மட்டும் இருக்க ?? எங்க யாரையும் காணோம் “ என்று கேட்டபடி வீட்டையே தன் பார்வையால் அலசினான்.. எங்குமே மித்ரா இல்லை..

“என்ன அண்ணா இன்னைக்கு சீக்கிரம் வந்துடிங்க?? “ என்று கேட்டபடி “ அண்ணி மேல மாடியில இருக்காங்க” என்று கூறினான் பிரபா..

“ இந்த இருட்டுல மாடியில என்ன பண்ணுறா ?? ” என்று முனுமுனுத்தபடி மேலே சென்றான்.. அங்கே மித்ரா தன்னை மறந்து அமர்ந்து இருந்தாள்..  காற்றில் முடிகள் பறக்க கண்களில் எதோ யோசனையோடு வானில் தெரிந்த வெண்ணிலவை பெண்ணிலவானவள் வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்..

அவளது முகத்தை வைத்து மனதில் என்ன இருக்கிறது என்று மனோகரனால் கண்டுபிடிக்க முடியவில்லை.. “ மித்து “ என்று இரண்டு முறை அழைத்து பார்த்தான்.. அவளிடம் எந்த பதிலும் இல்லை.. 

மெல்ல அவளிடம் சென்று “ மித்து “ என்று அழைத்து அவளது தோள்களில் கை வைத்தான்.. அவனது தொடுகையில் திடுக்கிட்டு திரும்பியவள் “ மனு “  என்றாள் மெல்ல..

“ என்ன மித்து ஏன் இங்க வந்து உக்கார்ந்து இருக்க ?? ஆமா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கே ஏன் டா ?? என்னாச்சு “ என்று கேட்டான் கரிசனமாக.. அவனது முகத்தை பார்த்த மித்ரா பதில் எதுவும் பேசாமல் நின்று இருந்தாள்..

“ என்ன மித்து ?? ஏன் இப்படி அமைதியா இருக்க ?? ஏன் இங்க இருக்க..?? வா கீழ போகலாம் “ என்று கூறி அவள் கை பிடித்து அழைத்து சென்றான்..

அவளும் அவனது இழுப்பிற்கு பொம்மை போல சென்றாள்.. கீழே தங்கள் அறைக்கு அழைத்து வந்து “ மித்து இந்த பார்ம்ல ஒரு சைன் பண்ணு “ என்று ஒரு காகிதத்தை நீட்டினான்..

அவன் காட்டிய காகிதத்தை பார்த்தவள் ஒரு நொடி திகைத்து அவன் முகம் பார்த்தாள்.. மீண்டும் மீண்டும் அவனையும் அவள் கையில் இருந்த காகிதத்தையும் மாறி மாறி பார்த்தாள்.  அவனும் மெல்ல சிரித்தபடி “ சைன் பண்ணு மித்து..” என்றான்.. அவனது சிரிப்பை கண்டவளின் முகம் அத்தனை நேரம் இருந்த கலக்கம் நீங்கி தெளிவு அடைந்தது..

வேறு ஒன்றும் இல்லை அவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தான் அது.. அதில் தான் மனோ மித்ராவிடம் கையெழுத்து கேட்டான்.. அதை கண்டதும் மித்ராவிற்கு மனதில் இத்தனை நாள் இருந்த கலக்கம் எல்லாம் நீங்கியது போல இருந்தது.. அவன் கை காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு தந்தாள்..

மித்ராவின் முகத்தில் சிரிப்பும் மனதில் நிம்மதியும் வந்தது.. ” அப்புறம் மித்து, இது எப்படி இருக்குனு பாரு “ என்று ஒரு சிறு உரையை நீட்டினான்.. என்ன என்பது போல பார்த்தவள் அந்த உரையில் இருந்ததை கண்டு மீண்டும் திகைத்தாள்.. ஒரு பார்ட்டிக்கான அழைப்பிதல் தான் அது.. 

“ என்ன மித்து அப்படி பாக்குற.. நிஜம் தான் டா.. படிச்சு பாரு “ என்று மேலும் அவளை ஊகினான்.. அவளும் நம்ப முடியாதவள் போல திரும்ப திரும்ப அதை படித்தாள்..  

Mr & Mrs. மனோகரன் இன்வைட்ஸ் என்று ஆரம்பித்து இருந்தது.. அதை பார்த்து தான் மித்ரா திகைத்து விழித்ததே.. “ என்ன மித்து இந்த டிசைன் பிடிச்சு இருக்கா ?? இல்ல வேற எதா செலக்ட் பண்ணலாமா ?? உன்கிட்ட காட்டிட்டு பைனலைஸ் பண்ணனும் தான் வீட்டுக்கு சீக்கிரம் வந்தேன்” என்றான் தன் மாய புன்னகையை வீசி..

 இன்னுமே கூட மித்ரவால் இதை நம்ப முடியவில்லை.. “ திருமணம்  பதிவு செய்ய சைன் வாங்குறான், இப்படி ஒரு பார்ட்டிக்கு ரெண்டு பேரும் இன்வைட் பண்ணுறதா பத்திரிக்கை காட்டுறான்.. இவன் என்ன தான் செய்யுறான் ??“ என்று எண்ணினாள்..

“ என்ன மித்து பதிலே சொல்லாம இருக்க ? மித்து இந்த பார்ட்டி ஏறக்குறைய நம்ம ரிசப்ஷன் மாதிரி தான்.. எல்லாரும் வருவாங்க.. நீ  எப்படி எல்லாம் எதிர் பார்த்தியோ அப்படி எல்லாம் நடக்கும்.. ஆனா இப்போ இல்ல அடுத்த மாசம் தான் “ என்றான்

“ அடுத்த மாசமா ???ஏன் “ என்பது போல விழிகளில் வினா எழுப்பினாள் மித்ரா..

“ யெஸ் மித்து.. நீ இத்தனை நாள் பொறுமையா இருந்ததே பெரிய விஷயம்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனா ஐ ப்ராமிஸ் யு இனி வரபோற ஒரு மாசம் மட்டும் எனக்கு டைம் குடு.. எல்லாம்.. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, உன் மனசுல இருக்க எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன்.. “ என்றான் அவளது கைகளை பிடித்து..

மெல்ல சிரித்த மித்ரா ” இத்தனை நாள் எந்த நம்பிக்கைல நான் இப்படி நீ சொல்லுறதுக்கு எல்லாம் சரி சொல்லிட்டு இருந்தேன்னு தெரியல.. அதுக்கான காரணமும் எனக்கு புரியல.. இப்பயும் கூட நீயா வந்து தான் இதெல்லாம் சொல்லுற.. ஹ்ம்ம் பாக்கலாம்.. ஒரு மாசம் தானே.. நீ என்ன தான் செய்யுறன்னு நானும் பாக்குறேன் “ என்றாள்..

“ இல்ல மித்ரா இதுல நீ என்னைய கண்டிப்பா நம்பலாம்.. அடுத்த மாசம் இதே நேரம் உனக்கு எல்லாமே தெரிஞ்சு இருக்கும்.. ஆனா..”

“ என்ன ஆனா ??”

“இல்ல மித்து.. எல்லா பிரச்சனையும் முடிஞ்சு, உங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்துட்டா அப்போ…. அப்போ.. நீ.. நீ என்னைய விட்டு போயிடுவியா ??” என்று கேட்டான் குரல் கரகரக்க..

அவனது விழிகளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தாள் மித்ரா.. பின் “ நீ என் விசயத்துல இது வரைக்கும் எதுவா தப்பு செஞ்சு இருக்கியா ??” என்று கேட்கவும் அவன் தலை தானாக இல்லை என்று ஆட்டியது..

“ ம்ம் அப்புறம் ஏன் உனக்கு இந்த பயம் எல்லாம்.. ஹ்ம்ம் ஒருவேளை..” என்று எதுவோ கூறவந்தவள் அதை கூறாமல் “ சரி ஒரு மாசம் டைம் தான் இருக்கே அப்புறம் என்ன ??? எதுனாலும் இன்னும் ஒன் மன்த் அப்புறம் உனக்கும் தெரிஞ்சிடும் எனக்கும் தெளிஞ்சிடும்ல.. “

“அது வரைக்கும் இப்படியே யோசிச்சுகிட்டு இரு இவ இருப்பாளா ?? இல்ல போயிடுவாளான்னு?? என்ன பாக்குறா ?? என்னைய எப்படி இந்த ஒரு மாசம் மண்ட காய விட்ட.. இனி அடுத்து வர போற ஒரு மாசம் உன் டர்ன்.. ஓகே வா. “ என்று கூறி பழைய மித்ராவாக மாறி சிரித்தாள்..

அவளது சிரிப்பில் தன்னை தொலைத்தவன் “ ராட்சஸி..” என்று கடிந்து கொண்டு “ ம்ம் எல்லாம் என் நேரம்.. கலி காலம் நல்லதுக்கு கூட இந்த நாட்டுல.. இல்ல இல்ல.. இந்த வீட்டுல இடம் இல்ல…” என்று அவள் முன் நேராகவே  புலம்பினான்.. அதன் பின் நினைவு வந்தவனாக

“ ஆமா நான் வரும் போது ஏன் மாடில அப்படி உக்காந்து இருந்த ?? ” என்று கேட்டான்.

“ அதுவா.. ஹ்ம்ம் அது.. சொல்லியே ஆகணுமா ?? ”தலையை சரித்து தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.. அவளையே பார்த்தவன் “ஆமா “ என்றான் அதே போல..

“ அதான் ரீனா வந்தான்னு சொன்னேனே.. அவள் வந்து இலவசமா குடுத்துட்டு போன தலைவலி தான் நான் அப்படி இருந்ததுக்கு காரணம்”

“ஏன் ?? உனக்கு தலை வலி வர அளவுக்கு அவ என்ன சொல்லிட்டு போனா ??”

“ சொல்லிட்டு மட்டும் போகல மனு… நம்ம கல்யாணத்துக்கு கிப்ட் வேற மேடம் குடுத்துட்டு போயி இருக்கா..” என்றாள் நக்கலாக..

“ என்ன மித்து சொல்லுற ??”

“ ஆமா எல்லாம் என்னையவே கேளு..” என்று சலித்தவள் உடனே தன் முகத்தை கோவமாக மாற்றி “ உனக்கு என்ன தைரியம் அவளை காதலிச்சிட்டு என்னைய கல்யாணம் செஞ்சு இருப்ப ?? ” என்றாள் அவன் சட்டையை பிடித்து..

மித்ரா இப்படி எல்லாம் நடந்து கொள்ளும் ரகம் இல்லை என்று மனோவிற்கு தெரியும்.. ஆனாலும் இந்த ரீனா என்ன சொல்லி குழப்பி இருக்கிறாள் என்று புரியாமல் “ என்.. என்ன சொல்லுற மித்ரா ?? ” என்றான்

“ ஹா !!! சுரைக்காய்கு  உப்பு இல்ல.. கருவாடுக்கு காரம் இல்லைன்னு சொல்றேன்.. வந்துட்டான் கேட்க..” என்று பொரிந்தாள்..

மனோவும் சற்ற கடுப்பாகி “ஹேய் !! எதுனாலும் வெளிப்படையா சொல்லு டி.. அவ என்ன சொல்லிட்டு போனா?? நீ வேற நான் அவளை லவ் பண்ணேன்னு புது கதை சொல்லுற ??”

“ அட இந்த கதை நான் சொல்லல மனு.. ரீனா தான் சொன்னா.. சுத்தி சுத்தி வந்திங்க சுட்டு விரலால் தொட்டிங்கனு ரெண்டு பெரும் லவ் பண்ணிங்கலாம் அப்புறம் அவங்க அப்பா இறந்து போகவும் நீ யாரோ… இங்கு நான் யாரோன்னு கண்டுக்காம இருந்திங்கலாம்.. திடீர்னு பார்த்தா மாய மந்திரம் செஞ்சது போல நமக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் “ என்றால் தன் இரு கைகளையும் விரித்து நீட்டி முழக்கி ராகம் பாடினாள்..

அவள் கூறுவதை கேட்டு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ரீனா என்ன கூறி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.. மனதிற்குள் “ எப்படி தான் அந்த நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு மகளோ “ என்று நொந்து கொண்டான்..

“ ஏன் மித்து அவ இப்படி சொல்லும் போது உனக்கு கஷ்டமா இல்லையா ??” என்றான்

“ கஷ்டமாவா?? எனக்கா ?? இப்படி கேவலமா பொய் சொல்றதுக்கு அவளுக்கே கஷ்டமா இல்ல.. அப்புறம் நான் ஏன் கஷ்டபடனும் ?? ம்ம்”

“ இல்ல.. ரீனா சொன்னது எல்லாம் பொய்னு உனக்கு எப்படி தோனுச்சு..?? ”

“ என்னவோ தெரியல மனு.. அவங்க ரெண்டு பேரையும் முதல் நாள் பார்க்கும் போதே எனக்கு மனசுக்கு பிடிக்கல.. அதுவும் இல்லாம அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவங்க மனசுல இருந்து வரல.. இதெல்லாம் சேர்ந்து தான் அவ பேசுனதை என்னால நம்ப முடியல “

மனோவின் மனம் மித்ரவிடம் இருந்து வேறு பதிலை எதிர்பார்த்தது போல. ஆனால் மித்ராவோ அவன் எதிர் பார்த்த பதிலை கூறவில்லையே..  “ம்ம் அது மட்டும் தான் காரணமா மித்து ??” என்று கேட்டபடி அவளை நெருங்கி நின்றான் மனோ..

இத்தனை நேரம் சளைக்காமல் அவன் கேட்டதிற்கு எல்லாம் பதில் பேசியவள் அவன் நெருங்கி நிற்கவும் பேசவே திணறினாள்.. அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ என்.. என்ன.. என்ன காரணம் ?? ” என்று திக்கினாள்.. வார்த்தைகள் வெளி வருவேனா என்று அவள் தொண்டை குழியில் சிக்கி கொண்டன..

மேலும் அவளை ஒட்டி நின்று “ இல்ல நீ ரீனா சொன்னதை நம்பாம இருக்கிறதுக்கு இப்ப நீ மட்டும் தான் காரணமான்னு கேட்டேன்” என்றான் ஒவ்வொரு வார்த்தையாக..

“ இங்க பாரு.. இப்ப ஏன் இப்படி ஒட்டி நிக்கிற?? என்.. என்கிட்டே இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல “ என்று என்று அவன் மார்பில் கை வைத்து பின்னே தள்ளினாள்..

மனோவோ மித்ராவையே பற்றுகோலாக பற்றி நின்றான்… மித்ராவுக்கு மனம் தடா தடவென்று அடித்தது.. “ என்ன மனு “ என்று லேசாக சிணுங்கினாள்..

“ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மித்து” என்றான் அவன் தலையில் முட்டி.. 

“ அது அது எல்லாம் ஒண்ணுமில்ல.. ஆமா நீ என்ன இப்படி கேள்வியா கேக்குற?? போ… போயி வேற வேலை இருந்தா பாரு.. எனக்கு நெறைய வேலை இருக்கு.. நான் இதை போய் பிரபா கிட்ட காட்டுறேன் “ என்று அந்த அழைப்பிதழை எடுத்து கொண்டு ஓடினாள்..

அவனோ சிரித்தபடி அவளை பின் தொடர்ந்தான்.. அவன் பின் வருவதை பார்த்த மித்ரா “ ம்ம்ச்.. இப்ப ஏன் பின்னால வர.. போ “ என்று விரட்டினாள்..

“ ஹேய் !!! இது அநியாயம் மித்ரா.. என்னைய வீட்டுல நடக்க கூட விடமாட்ற “ என்றான் செல்லமாக முறைத்தபடி..

இங்கே இப்படி இருக்க அங்கே ரீனாவோ தன் அன்னையிடம் “ அம்மா நான் சொன்னதை அப்படியே அந்த மித்ரா நம்பிட்டா மா.. அவ முகத்தை பார்க்கணுமே.. நீ இருந்திருக்கணும் மா “ என்றாள்

“ ஹ்ம்ம் வெரி குட் ரீனு குட்டி.. இதே மாதிரி நம்ம ஒவ்வொரு விஷயமும் சரியா யோசிச்சு பண்ணுனா நீ தான் அந்த வீட்டோட மகாராணி “ என்று கூறி சிரித்தார் நிர்மலா..

“அம்மா ஆனா எனக்கு மனசு இன்னும் குழப்பமா தான் இருக்கு மா.. நம்ம திட்டம் எல்லாம் மனோ காதுக்கு போச்சுன்னா அவ்வளோ தான் நம்ம தெருவுல தான் நிக்கணும் “ என்று ராகம் பாடினாள் ரீனா..

“ அட நீ ஏன் கவலை படுற ரீனு.. நான் இருக்கேன்ல உனக்கு.. உங்க அப்பா தான் நேர்மை நியாயம்னு பேசி பேசி கழுத்து அறுத்தாறு.. ஆனா நான் அப்படி இல்ல.. அந்த மித்ராவ அங்க இருந்து காலி பண்ணிட்டு உன்னைய அந்த வீட்டுல நுழைக்கனும்.. அப்புறம் திவா அப்பாவி அவனாலா எந்த பிரச்சனையும் வராது.. ஆனா கடைசி ரெண்டு பேரு இருக்கானுங்களே அவனுங்கள தான் ஒரு வழி  பார்க்கணும்..”

“ என்ன மா இதெல்லாம் மனோக்கு தெரிஞ்சா “ என்று ரீனா கூறும்முன்னே

“ அடி கூறுகெட்டவளே நீ எதுக்கு இருக்க டி…?? எல்லாம் நானே தான் செய்யனுமா ?? இது எல்லாம் நம்ம தான் பண்ணலும் எதுவுமே மனோ மூளைக்கோ மனசுக்கோ தெரியாம நீதான் பார்த்துக்கணும் “ என்று கூறவும் நன்றாக தலையை உருட்டினாள் ரீனா..

அங்கே மனோவின் வீட்டில் திவா தனிமையில் தன் அண்ணனிடம் “ என்ன அண்ணா அவன் நேரா உங்களையே பார்க்க வந்தானா ??” என்று கேட்டான்

“ ஆமா திவா.. எனக்குமே முதல்ல கொஞ்சம் தினறால தான் இருந்தது.. ஆனா இதுல நம்ம முழுசா இறங்கிட்டோமே ஒரு கை பார்க்காம விட கூடாதே “ என்று கூறி சிரித்தான்..

“ அதெல்லாம் சரி தான் ணா..அவனுக்கு சின்ன புள்ளி அளவு விஷயம் தெரிஞ்சா கூட நாம இத்தனை நாள் அண்ணிய பாதுகாப்பா வச்சு இருக்கிறதே கேட்டு போயிடுமே.. அதும் இல்லாம நீங்க எப்படினா அடுத்த மாசம் பார்ட்டிக்கு வேற ரெடி பண்றிங்க ?? ” என்றான் சற்றே குழப்பமாய்..

“ ஹ்ம்ம் நீ சொல்லுறது சரிதான்டா.. ஆனா அவனை கூட இருந்தே குழப்புறதுக்கு ஒரு ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. அதுவும் இல்லாம இப்ப ரீனாவும் நிர்மலா ஆன்ட்டியும் சும்மா இருக்க மாட்டாங்க.. அதான் டா..”

“ அதுக்காக ஒரு மாசத்துல எப்படி ணா..???”

“ முடியும் திவா.. நான் எல்லா பிளானும் போட்டேன்..இன்னிக்கே ரீனா வந்து உங்க அண்ணிய அவ பாணியில குழப்பிட்டு போயி இருக்கா.. நல்ல வேலை மித்ரா அதை எல்லாம் நம்பலை.. ஆனா இதே எத்தனை நாளைக்கு தொடரும்னு தெரியாது.. அவ மனசுக்கும் ஒரு அமைதி வேணும்ல டா.. பாவம் அவ இவ்வளோ அமைதியா இருக்கிறதே பெருசு “ என்றான் தன் மனைவிக்கு ஆதரவாக..

“ ஹ்ம்ம் அதெல்லாம் சரி தான் அண்ணா.. ஆனா அந்த சுந்தர்…. அவனை எப்படி ணா நம்ம லாக் பண்ணுறது ?? ”

“ ஹ்ம்ம் கொஞ்சம் எவிடென்ஸ் இருக்கு திவா.. மினிஸ்டர் அடுத்த வாரம் ஊருக்கு வறாரு.. நான் நேத்தே அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன். சோ ஆண்டவனை நம்பலாம் “ என்றான் அவன் தோள்களை தட்டி..

இப்படி அண்ணனும் தம்பியும் பேசி கொண்டு இருக்க, திவா வந்ததை அறிந்த மித்ரா அவனிடம் அழைப்பிதழை காட்டவென்று வந்தவள் இவர்களின் பேச்சை கேட்டு சிலையென சமைந்து நின்றாள்..

அவள் மனமோ “ எல்லாம் என்னால தானா ?? எனக்காக தானா ?? கடவுளே… நான்.. மனு.. “ என்று அதற்குமேல் யோசிக்க கூட முடியாமல் தன் நெஞ்சில் கை வைத்து  சுவரில் சாய்ந்தாள்..

 

உன் பார்வைகள் என்னை

பருகினாலும் – உன் வார்த்தைகள்

என்னை வருடினாலும் – உண்மை

அறியாத ஊமை நெஞ்சம்

உழை கனலேன கொதிக்கிறதே

தணிக்க வருவாயோ ??

இல்லை தனித்து விடுவாயோ ??

 

                     மாயம் – தொடரும்

 

        

Advertisement