Women's day special..... Paavai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
பூவாய் பிறந்த பாவையவளின் வாழ்வில்!!!

தலைவனாய் தடுமாறி வாழ்க்கைத் தடம் மாற்றிய தந்தை!!!

அரணாய் இருந்தும் ஆளுமையில்லாத அன்னை!!!

சேயாய் மாறிய உடன்பிறப்புகள்!!!

ஏக்கம் நிறைந்த ஆசைகள்!!!

அன்பின் விலை பணம் என நிர்ணயித்து விலகிய உறவுகள்!!!

ஆசைகள் துறந்த வயது!!!

கானலாய் கலைந்த கனவுகள்!!!

தோள் கொடுத்த தோழமைகள்!!!

வாழ்க்கையை வழிநடத்திய கல்வி!!!

பயத்தை மறைத்த திடம்!!!

கை கொடுத்த நல்ல உள்ளங்கள்!!!

சொத்தாய் குவிந்த நம்பிக்கைகள்!!!

கண்ணீர் மறைத்த கவலைகள்!!!

பொக்கிஷமாய் சேர்ந்த சந்தோஷங்கள்!!!

இயலாமையை ஆளும் அதிகாரங்கள்!!!

ஏளனம் நிறைந்த சுற்றங்கள்!!!

வேலியாக இருந்த மனபலம்!!!

நேர்மைக்கு கிடைத்த அடிகள்!!!

வலிகள் நிறைந்த சிரிப்பு!!!

உணர்வுகளை பறித்த சூழ்நிலைகள்!!!

திறமையை சோதித்த தோல்விகள்!!!

வரலாறாய் அமைந்த வெற்றிகள்!!!

வாழ்க்கையில் இத்தனை படிகளைத் தாண்டி வெற்றியின் களிப்பில் பாவையவள் தலைநிமிரும் போது இந்த சமூகம் அவளுக்கு சூடும் முதல் பட்டம், புகழாரம்!!!

யாருக்கும் அடங்காத திமிர் பிடித்தவள்!!!

தான் என்ற கர்வம் படைத்தவள்!!!

ஆனால் பாவையவள் சூடியதோ!!!

சூழ்நிலையை காரணமாக வைத்து இன்றும் அடிமைப்படுத்தும் இந்த ஏளன உலகை எதிர்க்க அவளுக்கு திமிர் அதிகம் தான்!!!

தன் பெண்மைக்கு அடைக்கலம் தர வேண்டிய உலகமே அவளை வேட்டையாட எண்ணுகையில் தனக்கு வேலியிடுபவள் யாருக்கும் அடங்காதவள் தான்!!!

தான் என்ற தனது அடையாளத்தை இந்த சமூகத்தில் நிலைநிறுத்தும் போராட்டத்தில் அவள் கவசமாய் அணிந்தது தான் என்ற கர்வம் தான்!!!

ஆம்! எனக்கு கர்வம் அதிகம் தான்!!!

சசி.
அருமை சகோ.
 
S

semao

Guest

Super da sasi
Arumai
Kalakitta
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top