Viral Theendidu Uyirae - 5 ( teaser )

Kani-hema

Writers Team
Tamil Novel Writer
#1
விரல் தீண்டிடு உயிரே“ஒரே நாள் கொஞ்சம் நேரத்துக்கே நமக்கு இப்படி இருக்கு. பாவம் வசீ அந்த பொண்ணுங்களும், அந்தம்மாவும்...” அம்பிகா சொல்ல அதை கேட்க பிடிக்காது குகன் எழுந்து சென்றுவிட்டார்.

“அவரை விடு, நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. நிஜமாவே வேண்டாமா உனக்கு. முடிவே பண்ணிட்டியா...” தவிப்பும் குழப்பமுமாய் தாய் கேட்க மகன் அவரின் முகத்தையே சலனமின்றி பார்த்துகொண்டிருந்தான்.

“கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னையே பார்த்திட்டிருக்க. இப்படியே பார்த்துட்டே இருந்தா போர் அடிச்சு தூக்கம் வந்திரும். பதில் சொல்லு...” என்றவரின் பேச்சில் வாய்விட்டு நகைத்தவன்,

“அந்தாளு அவ்வளவு பேசியும் அந்த வீட்டு பொண்ணுங்களை பத்தி இத்தனை கவலைப்படறீங்க? என்ன பீஸ் நீங்க?...”

“எல்லாம் மாஸ்டர் பீஸ் தான்...” என்றவர்,

“இங்க பாரு வசீ, என்னைக்கு உனக்கு அந்த பொண்ணை பிடிச்சதோ ஏனோ அவ மனசுக்கு நெருக்கமாகிட்டா. அவரோட குணமே இப்படித்தான்னு இருக்கும் போது யாரால மாத்த முடியும்? அதுக்குன்னு மன்னிக்கிற தியாகியெல்லாம் இல்லை நான். திருப்பி கேட்கிற நேரம் நானும் கேட்பேன். என்ன அவர் அளவுக்கு கேட்கமுடியாது...”

-------------------------------------------------------------

சிரித்தபடி சொன்னாலும் அவமானப்பட்டதின் சுவடுகள் இன்னமும் சாயம் கலையாமல் மிச்சமிருந்தது அவரின் முகத்தில்.
“சத்தியமா நான் அவர் சொன்ன அர்த்தத்தில் பார்க்கலைப்பா. அவங்க நம்ம குடும்பத்தையே அடிக்கடி பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு வேளை நம்மளை தெரிஞ்சவங்களோன்னு தான் பார்த்தேன். வேற ஒண்ணும் இல்லி. சத்தியமா இல்லை. நம்புங்கப்பா...”


முனீஸ்வரனின் களில் விழுந்து அழுதாள் சந்தியா. சந்நிதி பார்கவியின் கையை பிடித்துக்கொண்டு நடுங்கியபடி நின்றாள்.

“நான் கூட இருக்கும் போதே அவனை நீ பார்த்திருக்க. அதான் அவன் என்னை இளக்காரமா பேசிட்டு போறான். இத சொல்லித்தான் நான் உங்களை வளர்த்தேனா? சாந்தி சிரிச்சு போச்சு. ஊரே வாசல்ல வேடிக்கை பார்த்திருச்சு. இனி நான் எப்படி வெளில தலைகாட்டுவேன்...”

முனீஸ்வரனின் தீ பார்வை இப்பொழுது பார்கவியை சுட அவருக்கு அந்த நொடியே மரித்துவிடமாட்டோமா என்னும் அச்சம் கண்களை நிரப்பியது.

“பொம்பளைப்புள்ளையா போய்ட்டீங்க. இல்ல உரிச்சு உப்பு தடவியிருப்பேன். இனி அவன் இந்த ஊர்ல தட்டுப்பட்டான் நடக்கறதே வேற...” என்று எச்சரித்துவிட்டு நகரவும் தாயை கட்டிக்கொண்டு அழுதனர் சந்தியாவும் சந்நிதியும்.

---------------------------------------------------------------------------​

சற்றும் வசீகரனை சகோதரிகள் எதிர்பார்க்கவே இல்லை அந்த கோவிலில். பயத்தில் தொண்டை அடைக்க உயிர் பறவை எங்கே இதை தன் தந்தை பார்த்துவிடுவாரோ என்று அஞ்சியது.

வேகமாய் அந்த இடம் விட்டு ஓடப்பார்த்தவர்களை கண்டு உள்ளம் கடுகடுக்க மறைத்து சென்று நின்றான்.

“என்ன பூச்சாண்டியை பார்க்கிற மாதிரி இந்த ஓட்டம் எடுக்கறீங்க அக்காவும் தங்கச்சியும்? எத்தனை பாரதி வந்தாலும் உங்களை திருத்த முடியாது...” ஏளனமாய் சொல்ல,

“அப்பாக்கு தெரிஞ்சா கொன்னே போடுவாங்க...” சந்தியா சொல்ல,

“நீ இவளை விட பெரிய பொண்ணு தானே? தைரியமா இருக்கவேண்டியது தானே சந்தியா?...” வசீகரன் ஒருமையில் அழைத்துவிட,

“முன்னப்பின்ன தெரியாதவங்க இப்படித்தான் பார்த்ததும் பேர் சொல்லி சிங்குலர்ல கூப்பிடுவாங்களா? தப்பு...” முறைப்பாய் நிதி சொல்ல,

“தியா...” என வந்த பார்கவி வசீகரனை அங்கே எதிர்பார்க்கவில்லை. அய்யோ என பயந்தவர்,

“இங்க என்ன பேச்சு. வாங்க போகலாம்...” என்றவர் வசீகரனை இறைஞ்சும் பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

---------------------------------------------------------​

“தேங்க்ஸ் புகழ். நீங்களாவது என்னை புரிஞ்சதுக்கு...” வருங்கால மச்சானின் கையை பிடித்து குலுக்க,

“இது மட்டும் அந்த சனீஸ்வரனுக்கு தெரிஞ்சா என்னை என்ன கேள்விலாம் கேட்பார் தெரியுமா?...” புகழ் கேலியை சொல்ல,

“பொருத்தமான பேர் உங்க சித்தப்பாவுக்கு...” சூர்யா அவனுடன் சேர்ந்து சிரித்தவன்,

“வசீ இதுக்கு பேர் தான் சந்துல சிந்து பாடறதா?...” என நண்பனையும் சூர்யா விட்டுவைக்கவில்லை. ஆனால் வசீகரனின் முகம் தீவிரம் காட்டியது.
 
Joher

Well-Known Member
#3
:love::love::love:

அடேய் சரண் இன்னுமா யாருனு சொல்லலை........
FB யே களேபரம் இருக்கு Mrs வசீ யாருன்னு........
இப்போவும் சந்தியான்னு தான் தோணுது எனக்கு......

திரும்பவும் வந்துட்டான்னா.......
புகழ் வேற துணைக்கு வந்தாச்சு........
முனீஸ் சனீஸ் ஆகிட்டாரே....... இது அவருக்கு தெரிய வருமா???
 
Last edited:
#5
பார்கவி அம்மா பிள்ளைகளுக்காய் அம்பிகாவின் தாய் மனசு வருந்துது
காதல் மனைவி அவமானப்பட்டது குகனுக்கு பொறுக்கவில்லை

ஹா ஹா ஹா
முனீஸ்வரனே குலை நடுங்க வைக்கிறாரு
இதிலே சனீஸ்வரன் வேறயா?
அடேய் புகழேந்தி உனக்கு கொஞ்சம் கொலஸ்ட்ரால் ஓவராயிடுச்சு போலவே
இதை மட்டும் உன்னோட செத்தப்பா கேட்டால் நீ தீர்ந்தாய்டி மவனே புகழ்
 
Last edited:

Advertisement

New Episodes