UVVP 04

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ்....

அடுத்த அத்தியாயம் ...

உங்கள் லைக்குகளும் .. கமெண்டுகளும் வரவேற்கப்படுகின்றன...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
UVVP 04

"ஈஷாவின் ஈசன் வந்தான் .....".., சுதா ரகுநாதன் மயிலிறகாய் மனதை வருடினார்..மாமா-வை [வாசுவாசன்] அலைபேசியில் மாயா அழைக்க.... அவரின் காலர் ட்யூன், அவளை சிவனில் மூழ்கடித்து கொண்டிருந்தது.......

"சொல்லும்மா மாயா, நானே கால் பண்ணனும்-னு நினைச்சேன்.... , இப்போதான் உன்னோட பேட்டியை பார்த்துட்டு இருந்தேன்.,என்ன விஷயம்மா ?, நியூஸ்ல நம்ம பேரு ஏன் அடிபடுது?, இங்க உங்க அத்தை போன் மேல போன் போட்டுட்டு இருக்கா?", எதிர்முனையில் மாமனார் கொஞ்சம் பதட்டத்துடனே கேட்டார்..

"வாசுமாமா, எதுவும் பிரச்சனை இல்லை.... நான் கார்ல கிளம்பிட்டேன்...நேர்ல வந்து சொல்றேன், நீங்களும் பார்க்கணும்னு சொன்னீங்க இல்லையா?",

"அதெல்லாம் இப்போ முக்கியம் இல்லடா, நீ நேர்ல வா.. நான் சரஸ்வதி-ய பசங்களை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போக சொல்லிட்டேன்..."

சரஸ்வதிம்மா.. ,மாயாவின் அப்பாவின் ஒன்று விட்ட தங்கை... 7-8 வருடங்களுக்கு முன் கணவனை இழந்து வாரிசுகளும் இல்லாது நிர்கதியாய் நின்றவரை, பாட்டியின் சம்மதத்துடன் , கூட்டிவந்து வீட்டில் வைத்துக்கொண்டனர் .... தற்போது பேர பிள்ளைகளை மாயா இல்லாத நேரத்தில் பார்த்துக் கொள்கிறார்.. மற்ற நேரங்களில் கணேஷுடன் இருந்து தாயில்லா குறையை போக்கினார்...

“ஓகே...அப்ப நானும் வீட்டுக்கே வந்துடட்டுமா?”,

“ஒயெஸ், வந்துடேன், நானும் கொஞ்சம் சீச்கிரமா வீட்டுக்கு போனா மாதிரியும் ஆச்சு".

"சரி மாமா வந்துடறேன்....வைக்கிறேன் மாமா, பை... "

சொன்னவாறே, பத்து நிமிட்த்தில் அவர் வீட்டில் இருந்தாள். “வாம்மா, இப்போ தான் வழி தெரிஞ்சதா?”, என மங்கை வரவேற்க, “ஹாய்.. மாம்....”, ஓடிவந்து கட்டிகொண்டனர் பிள்ளைகள் இருவரும்... பத்து நிமிட நடை தூரத்தில் தான் மாயாவின் வீடு.., ஆனாலும் தனித்தனியாகவே இருக்கின்றனர்... "எலி வளையானாலும் தனி வளை.... “

“கொஞ்சம் பிஸி அத்தை... நீங்க சொல்லுங்க..”

"நோ . மாம்.. இன்னிக்கு ஸ்கூல்-ல நடந்தது நாங்க சொல்றோம் .. பாட்டி அப்பறமா நீங்க.... சொல்லிக்கோங்க....", என்று ஸ்ருதி வளவளத்தாள் ..

“வாலுங்க”, செல்லமாய் அலுத்துகொண்டார்.. மங்கை..மருமகளை பிடிக்காதுதான், அவள் இவரின் மாமியாரின் தேர்வு என்பதாலேயே... மற்றபடி இவளது தனிப்பட்ட கருத்துக்களை அவர் எப்போதும் மறுத்ததில்லை. ஆனால் அவளை ஆதரிப்பதை சொன்னவரும் இல்லை.... இவர் மட்டுமல்ல... உலகின் நிறைய மாமியார்கள் அப்படித்தான்... ...

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த வாசுவாசன், "வாம்மா, இந்த ட்ராபிக் தாண்டி வர்றதுக்கு, இவ்வளவு நேரமாயிடுச்சு.." என..

"பரவால்ல மாமா, நானும் இப்போதான் வந்தேன்."

"இரும்மா ரெப்ஃரேஷ் பண்ணிட்டு வர்றேன்..., மங்கா காஃபி ", சொல்லியவாறே அவரது அறைக்கு சென்றார்...

ஐந்து நிமிடத்துள் அவர் கேட்ட காஃபியுடன் மங்கையும் , மாயாவும் ஹாலில் காத்திருந்தனர். பொதுவான குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை, அவர்களின் சேட்டைகளை பேசிக்கொண்டு இருந்தனர். வாசு உடை மாற்றி வந்து உட்கார, "சொல்லும்மா.... என்ன விஷயம்?"

"ஒரு சின்ன கேஸ் மாமா..., நல்ல ஸ்டராங் எவிடென்ஸ் கிடைச்சது... ரகோத்தமன்ணா கிட்ட சொன்னேன்... தவிர, அவரோட அரசியல் செல்வாக்கை வச்சு ...கொஞ்சம் மிரட்டினார் , இதை எழுதாத, அதை செய்யாத-ன்னு ",

"ஹா ஹா ஹா ... அந்தாளுக்கு தெரியாது போல, எம்மருமகளுக்கு செய்யாத-ங்கிற வார்த்தைதான் தமிழ்-ல புடிக்காத வார்த்தை-ன்னு ", சிரித்துக் கொண்டே இடையிட்டார்.. சிறுவயதில் இருந்து கண் முன்னால் வளர்ந்த தங்கை பெண்ணல்லவா? அவளின் பிடிவாதமும், வேகமும் இவர் அறியாததா?

மங்கையின் முகத்திலும் புன்னகை...

"மாமா.... ", சிரிப்போடு மாயா மிரட்ட... "மங்கா .... அங்க இருக்கிற பேப்பர் வெயிட்டை எடுத்திடு ... பறந்தாலும் பறக்கும்...", என அவர் மேலும் கிண்டல் செய்ய.... காலையில் இருந்த இறுக்கமும் டென்ஷனும் மாயமாய் மறைந்திருந்தது... அனைவரிடமும்...

சிரிப்பினூடே கேட்டாள் , "நீங்க கூப்பிட்டு இருந்தீங்களே மாமா ...",

"ஆமாம்மா , ஒரு சேனல் நல்ல விலைக்கு வருது.. நீ மீடியா ஆளாச்சே?, உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?,

"எஸ் மாமா, நானும் கேள்விப்பட்டேன், ராஜன் டிவி -யை தானே சொல்றீங்க...?

" ம்ம்ம்..., நீ என்ன நினைக்கிற?",

"இப்போதைக்கு அதோட TRP worst , கிட்டத்தட்ட scrap . முதல்லேர்ந்து ஆரம்பிக்கறா மாதிரிதான்.., ஆனா நல்ல விலைக்கு வந்தா நிச்சயமா வாங்கலாம்னு தோணுது... "

"கணேஷுக்கு மீடியா தான்-னு அவன் முடிவு பண்ணிட்டான்.. இப்போல்லாம் மார்னிங் காபியோட பேப்பரை பார்க்கிற ஜெனெரேஷன், கம்மியாயிட்டு இருக்காங்க... சுடச்சுட லைவ்-வா நியூஸ் கொடுக்கறதுதான்... இப்போதைய ட்ரென்ட்...."

"அப்ப வாங்கிடலாமா?"

"மாமா, உங்களுக்கு தெரியாததில்ல, ஆனாலும் ஷிவத்தானையும், கணேஷையும் கன்சல்ட் பண்ணிட்டு செய்யலாம்... "

" கண்டிப்பா.... அப்பறம் இதை, தனியா கணேஷ் பேர்ல மட்டும் வாங்கலாம்-னு, நினைகிறேன், நாளைக்கு கல்யாணம் பண்ண பேசணும்-னா, மீடியா இவனோடதுன்னு சொன்னா ஒரு தனி மதிப்பு இல்லையா?"

அமைதியாய் புன்முறுவலுடன், "சொத்துபத்து பார்த்து வர்ற பொண்ணை அவன் கட்டுவான்-னு எனக்கு தோணலை மாமா", என்றாள் மாயா...

"ஓ , பய எங்கயாவது மாட்டிகிட்டானா?, சொல்லு .. உனக்கு தெரியாம இருக்காதே?, பொண்ணு நல்ல பொண்ணு தானே?", இதுவும் இலகுவாகவே கேட்டார்... அவரின் இயல்பே அதுதான்... மங்கை தனித்தீவாய் இருந்து பழகுவார் என்றால், அவரின் கணவரான வாசுவாசன் பிள்ளைகளுடன் ஒருவராய், அவர்களுக்கு இணையாய் பேசுபவர்..

"ஐயையோ... மாமா... நானா யோசிச்சு தான் சொன்னேன்.. ஒரு சின்ன டவுட் இருக்கு..", என இழுத்தது மாயா...

இங்கு இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க... DCP அலுவலகத்தில், DCP ரகோத்தமன் & கணேஷ் ஒரு அறையில் இருந்து பக்கத்துக்கு அறையில் நடக்கும் அமைச்சருடனான விசாரணையை பார்வையிட்டு கொண்டிருந்தான்... அவர் திரும்ப திரும்ப "எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை, நீங்க தப்பான ஆளு மேல கை வச்சிருக்கீங்க, ", பாட்டு பாடிக் கொண்டு இருந்தார்..

ரகோத்தமன் பொறுமை கரைந்து, "இரு வர்றேன்.", என்று கணேஷிடம் சொல்லி, அடுத்த அறையில் நுழைந்திருந்தார்...
"யோவ்.. கரெக்டாதான் சொல்ற..தப்பான ஆளுமேலதான் கை வச்சிருக்கோம், அதான் கேக்கறேன், சரியான ஆளு எங்க?", என சிம்மக் குரலில் வினவ.. அமைச்சர் வெலவெலக்க ஆரம்பித்தார்...

"என்ன சொல்றீங்க ?"

"அமைச்சர் மணிவேல் எங்க?", இன்னமும் புரியலைன்னா , தெளிவா கேக்கறேன் "உங்க அண்ணன் மணிவேல் எங்க?"...

"என்கிட்டயே நான் எங்கன்னு கேக்கற. லூசாய்யா நீ?"

"ஆஹாங் ... அப்படியா? ஒரு சின்ன விஷயம் .... ஞாபகப்படுத்தறேன்...உங்க தம்பி விநாயகத்துக்கு ஒரு 14 - 15 வயசு இருக்கும்போது, மரத்துலேர்ந்து கீழ விழுந்து அடிபட்டது, அதுல அவரோட தொடை எலும்பு முறிஞ்சு போச்சு.. பிளேட் வச்சு அவருக்கு ஆப்பரேசன் பண்ணினாங்க... நீங்க மணிவேல்-னா அந்த பிளேட் எப்படி உங்க தொடைல இருக்க முடியும்?",

"பிளேட் இருக்குன்னு உனக்கு தெரியுமா ?, இல்லன்னு நான் ப்ரூவ் பண்றேன்... என் டாக்டரை கூப்பிடு",

"எதுக்கு?, இப்போ அதை ரிமூவ் பண்ணி டிராமா பண்ணவா?",

"இந்தாங்க லைவ் ஸ்கேனிங், பாக்கறீங்களா?" என்று அவரின் அலைபேசி பதிவை காண்பித்தார். அதில், அமைச்சர் மாயாவின் அலுவலகம் உள்ளே நுழையும் காட்சி, தொடர்ந்து அவரை ஸ்கேனர் சோதித்து அனுப்பிய பதிவு.. அதில், அவர் தொடை எலும்பில் இருந்த... பிளேட்... பளிச்-சென தனித்து தெரிந்தது...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
"இரட்டுற மொழிதல்" அழகிய
நாவலின் அடுத்த லவ்லி
அப்டேட், எப்போத் தருவீங்க,
ஆதிலக்ஷ்மி டியர்?
கொஞ்சம் வேலை அதிகம் பானுமா .. இன்னிக்கு குடுத்துடுவேன்-னு நினைக்கிறேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top