UUU part - 3 முன்னோட்டம்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
10453

ஹாய் செல்லகுட்டீஸ்,

அடுத்து என்ன கதை ஆரம்பிக்கட்டும் என்று பேஸ்புக் மற்றும் பார்மில் நடத்திய வாக்கெடுப்பில் நான் அளித்த மூன்று கதைகளில் மற்ற இரு கதைகளை விடவும் நான்கு மடங்கு வாக்குகள் (120+) பெற்று "உயிரில் உறைந்த உறவே !!" பாகம் 3 முதல் இடம் பெறுவதால் வாசகர்களின் விருப்பமான இக்கதையுடன் இம்மாத இறுதியில் உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். இப்போது உங்களுக்காக கதையில் இருந்து சிறு முன்னோட்டம் பதிவிடுகிறேன் படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.


அவனோ ஒற்றை விரலால் அவள் முக வடிவை அளந்தவாறே "எதுக்கு டார்லிங்" என்று கேட்க

தன் முகத்தில் ஊர்வலம் சென்ற அவன் விரலை நெருக்கி பிடித்தவள் குறையாத ஆக்ரோஷத்துடன், "தேவ் திஸ் இஸ் தி லிமிட்..!! என் பொறுமையை சோதிக்காத" என்று எச்சரித்தவள் அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றவாறே,

"வந்த இடத்திலும் பிரச்சனை வேண்டாம்ன்னு நான் பொறுத்து போனா என்று விழிகள் சிவக்க அவனை பார்த்தவள் ஆ... ஆனா நேத்து இருந்தே நீ என்னை ரொம்ப சோதிக்கிற, டோன்ட் ட்ரை டு டேக் அட்வான்டேஜ்" என்று கடுமையுடன் முடிக்க,

விஸ்வதேவோ அவள் வார்த்தைகள் எதையும் காதில் வாங்கினான் இல்லை..!!! அதுநேரம் வரை படபடத்து கொண்டிருந்த அவள் செவ்விதழ்களில் தன் பார்வையை ரசனையுடன் நிலைக்கவிட்டவன் அவள் பேசி முடித்த போது அவன் பார்வையும் ப்ரீத்தியின் கரத்தில் சிறைபட்டிருந்த தன் விரல் மீது ஒரு கணம் படிந்து மீள, 'விரல் போனால் என்ன விழி இருக்கிறதே..!!; என்று தோள்களை குலுக்கி கொண்டவனின் பார்வை ப்ரீத்தியின் மேனியில் தறிகெட்டு அலைபாய தொடங்கியது

அவன் பார்வையை கண்டு 'தேவ்' என்று அவள் கர்ஜிக்க,

அவனோ நிதானமாக தன் விரலோடு கோர்த்திருந்த அவள் கரங்களை தூக்கி முத்தமிட்டவன் அவள் உயரத்திற்கு குனிந்து செவியோரம் தன் அதரங்களை பொருத்தி "நோ பேபி இப்படி மோகினி மாதிரி அலங்காரம் பண்ணிட்டு வந்து நீதான் என்னை ரொம்பவே சோதிக்கிற" என்று கூறியவன் மீண்டும் அழுத்தமாக அவளை தலை முதல் கால்வரை நிதானமாக அளவெடுக்க தொடங்கினான்.

அவன் விழியில் வழிந்த அப்பட்டமான தாபத்தில் கூசி போன ப்ரீத்தி விழிகளை எவ்வாறு கட்டுபடுத்த என்று புரியாமல் மேலும் மேலும் உரிமையுடன் தன் மீது படியும் அவன் விழிகளை தடுக்கும் மார்க்கம் அற்று அவன் விரலை உதறி திரும்பி நின்றாள்.

அதை கண்டு அட்டகாசமாக சிரித்தவாறே பின்னிருந்து அவளை அணைத்து "என்ன பேபி வெட்கமா..???" என்று அவள் தோளில் தன் தாடையை பதித்தவன், "நிஜமாவே மயக்குற ஸ்வீட்ஹார்ட்" என்று கிறக்கத்துடன் கூறியவனின் மீசை ரோமங்கள் அடுத்த நொடியே தூரிகையாய் மாறி அவள் கழுத்து வளைவில் வர்ணம் தீட்ட தொடங்கியது.

சில நாட்களாகவே அத்து மீறிக்கொண்டு இருப்பவனின் இன்றைய செயல்களை அறவே வெறுத்து போனவளாக 'ஸ்டாப் இட் தேவ்' என்று அவனை உதறியவள்,

"யு ரோக்..!!" என்று அவன் சட்டையை பிடித்தவள்,

"எத்தனை முறைடா சொல்றது உனக்கு..??" என்று அவன் விழிகளை பார்த்தவள்,

"எனக்கு உன்னை பிடிக்கலை, பிடிக்கலை, பிடிக்கலை நான் சொல்றது புரியுதா..??" என்று சீறிட

"ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருக்கே டார்லிங்" என்று சளைக்காமல் அவள் விழிகளை ஊடுருவியவாறு அவன் கூற,

"ஓஓ காட்ட்ட்டட்ட்" என்று கண்களை இறுக மூடி திறந்தவள் தன் மார்பில் உறவாடி கொண்டிருந்த தாலியை எடுத்து அவன் முன் நீட்டி,

"இதை கட்டிட்ட ஒரே காரணத்துக்காக உன் இஷ்டத்துக்கு விருப்பம் இல்லாத பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்குறது உனக்கே அசிங்கமா இல்லை ச்சை மனுஷனாடா நீ..?? என்று வெறுப்பை உமிழ்ந்தவள் இதுல நீ எல்லாம் டாக்டர் வேற மை பூட்" என்று அவள் முகம் திருப்ப,

திரும்ப முயன்ற அவள் முகத்தை ஒரு கரத்தால் தடுத்து பிடித்தவன், "என் பொண்டாட்டி, என் சொத்து, என் விருப்பம் இதுக்கு எதுக்கு நான் அசிங்கபடனும், ஏன் டாக்டர்ஸ் எல்லாம் பொண்டாட்டியை கொஞ்ச கூடாதுன்னு சட்டமா என்ன..??" என்றவனின் மறுகரமோ அவள் தேகத்தில் அத்து மீறி தன் உரிமையை பறைசாற்ற தொடங்கியது.

அவன் பிடியில் தாடை எலும்புகளே நொறுங்கி போய்விடுமோ என்ற அச்சம் ஊற்றெடுக்க அவனை பார்த்தவளுக்கு தன் மேனியில் மேலும் முன்னேறி கொண்டிருக்கும் மற்றொரு கரத்தை தடுக்க முடியாமல் இயலாமையில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கவும், "என்னோட விருப்பம் பத்தி யோசிக்க மாட்டியா தேவ்..??" என்றிட,

"நீயும் நானும் வேற வேற இல்லை எனும்போது உனக்கு தனியா விருப்பம் எதுக்கு..??" என்று அவளை இழுத்து தன்னோடு அணைத்து கொள்ள,

"நோ நீயும் நானும் ஒன்னு இல்லை" என்று இதழ் துடிக்க கூறியவள், "யு ஆர் அஸால்டிங் மீ தேவ்..!! திஸ் இஸ் இன்ஹுமன்...!! ஜஸ்ட் லீவ் மீ " என்று அவனிடம் இருந்து விடுபட போராட

அவள் இமைகளில் இதழ்களை ஒற்றி எடுத்து "நோ ஸ்வீட்டி திஸ் இஸ் தி எபிடோம் ஆப் லவ், டோன்ட் யு அண்டரஸ்டான்ட்" என்றிட,

"எது இதுவா..??" என்று தன் மீதான அவன் ஆதிக்கத்தை சுட்டி காட்டி அவள் கர்ஜிக்க

"ஒஹ் கம் ஆன் பேப் திஸ் இஸ் தி வைல்ட் பார்ம் ஆப் லவ்..!! உன்மேல எனக்கு இருக்க கட்டுக்கடங்காத காதலின் வெளிபாடு அது கூடவா உனக்கு புரியலை" என்று அவள் செவிமடலில் முத்தமிட,

"லவ்..!! லவ்..!! லவ்..!! மை பூட் என்று கத்தியவள் அவனிடம்,

"வந்த நாளில் இருந்து இதை சொல்லியே என்னை கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கிற" என்று நொந்து போனவள், "ஆனா எனக்கு உன் மேல லவ் இல்லை இடியட்" என்று ப்ரீத்தி சீற,

"சோ வாட் பேப்" என்று அலட்சியமாக கேட்டவனின் இதழ்கள் அவள் செவியிலிருந்து நேர்கோட்டில் பயணித்து கன்னத்தில் தன் தடத்தை அழுத்தமாக பதித்து, "நான் ஏற்கனவே சொன்னது தான் ஸ்வீட்டி,

"உனக்கு லவ் இல்லைன்னா என்ன அதான் உனக்கும் சேர்த்து இப்போ நான் லவ் பண்றேனே அது போதாதா..???" என்று அவள் கூர் நாசியில் இதழ்களை குவித்து முத்தமிட்டவன்,

"உனக்கு எப்போ தோணுதோ அப்போ நீயும் லவ் பண்ணு.., ஆனா அதுவரை என்னை தள்ளி நிற்க சொல்லாத அதுக்கு உனக்கு உரிமை இல்லை" என்றவனின் குரலில் சிறு கடுமை எட்டி பார்க்க, முயன்று அதை மறைத்தவனின் குரல் இப்போது ஏகத்திற்கும் குழைய மேலும் அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைத்தவன்,


"இன்னும் எத்தனை நாளைக்கு நானும் விரதம் இருக்க..?? என்னை பத்தி நீ யோசிக்க மாட்டியா பேபி" என்று ஏக்கத்துடன் கேட்டவனின் இதழ்கள் அடுத்த நொடி தன் இணையை வன்மையாக சேர அதை தடுக்க முடியாது தன் தோல்வியை அவனுக்கு காட்ட கூடாது என்ற வைராக்கியத்துடன் நின்றிருந்தவளுக்கு என்ன முயன்றும் விழியோரம் ஈரம் கசியத்தான் செய்தது.

நன்றி


ருத்ரபிரார்த்தனா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top