UUU 3 - 4

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10516

"இப்போ உடம்பு எப்படி இருக்கு..??" என்று தன் மடியில் இருந்த குழந்தையை வருடியவாறே அலர் கேட்க


அவளையே ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தி "உனக்கு என் மேல கோபம் இல்லையா..??" என்று அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் பதில் கேள்வி கேட்க,

குழந்தை மீதே பார்வை பதித்திருந்தவளிடம் சில நொடி மௌனம், பின் நிமிர்ந்து அவளை பார்த்த அலர்,

நம்ம கை மீறி சில விஷயம் நடக்கும் போது நம்மையும் அறியாம நம்ம கைகள் கட்டப்பட்டு வெறும் பார்வையாளரா மட்டும் இருப்போமே அது மாதிரி இந்த குழந்தையோட அப்பா விஷ்வான்னு தெரியற வரை எனக்கு உன் மேல இருந்த கோபம் அது உனக்கே தெரியாம நடந்திருக்குன்னு தெரிஞ்ச போது போன இடம் தெரியல...,

சொல்லபோனா மனசெல்லாம் ஒருவிதமான நிம்மதி அது மாமா குழந்தை இல்லைன்னு தெரிஞ்சதாலயா..?? இல்லை உனக்கு இதை விட பெரிய தண்டனை இருந்திடாதுன்னு புரிஞ்ச காரணத்தாலாயா..?? ஏன்னு தெரியலை..!! ஆனா ஒரு பொண்ணா யாருன்னே தெரியாத ஒருத்தனோட குழந்தையை சுமந்து பெத்து இருக்க உன்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது, இப்படி சொல்றதால உன் மேல பரிதாபமோ, இரக்கமோ இருக்குன்னு அர்த்தம் இல்லை என்று இளக்கமற்ற குரலில் கூற,

விஷ்வா செஞ்சது சட்டப்படி வேணும்ன்னா மிகப்பெரிய குற்றமா இருக்கலாம் ஆனா தர்மப்படி இதுதான் நியாயம்..!! கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்களே அது போல உனக்கே தெரியாம இது நடந்து இருந்தாலும் விஷ்வா குழந்தையோட எதிர்காலத்தை கேள்வி குறி ஆக்காம காப்பாத்தி இருக்கார், உன்னோட அவசர புத்தியால ஒன்னும் அறியாத இந்த குழந்தை பழியில இருந்து தப்பிச்சது 'தேங்க் காட்' என்று இமைகளை இறுக மூடி கடவுளுக்கு நன்றி கூறியவள்,

உனக்கு ஒன்னு தெரியுமா ப்ரீத்தி, "நாம அடுத்தவங்களுக்கு என்ன கொடுக்கறோமோ அதுதானே நமக்கு வந்து சேரும் கீர்த்திக்கு துரோகம் செய்ய நினைச்ச ஆனா அது உனக்கே திரும்பிடுச்சி" என்றவள் ப்ரீத்தியின் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து,

நல்லவேளை எங்க நீ இது விஷ்வா குழந்தைன்னு தெரிஞ்சதும் இது மேலயும் உன்னோட வன்மத்தை காட்டிடுவியோன்னு நெனச்சேன் ஆனா பரவால்ல கல்லுக்குள் ஈரம் மாதிரி உனக்கும் ஏதோ மனுஷதன்மை இருக்கு என்று கூறவும் விரக்தி புன்னகை மட்டுமே ப்ரீத்தியிடம்.

'அலர் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்'

'என்ன..??'

"கீ.. கீர்த்தி என்னை மன்னிச்சிட்டாளா..??" என்று நேற்றில் இருந்தே மனதை கசக்கி கொண்டிருந்த கேள்வியை கேட்க,

'ஓஒ' என்ற புருவ தூக்கல் மட்டுமே அவளிடம்,

பரிதவிப்புடன் அவளை பார்த்தவள் “ப்ளீஸ் அலர் எனக்கு அவ முகத்தை பார்க்கிற தைரியம் இல்லை அட்லீஸ்ட் அவ மன்னிச்சிடான்னு தெரிஞ்சா...."

"தெரிஞ்சா...??? என்று சீற்றத்துடன் அவளை பார்த்தவள், நீ பண்ணினது மன்னிக்க கூடிய விஷயம்ன்னு இன்னும் நீ நம்புறியா..??" என்று அடக்கப்பட்ட குரலில் அலர் கேட்க,

உணர்வற்று அவளை பார்த்த ப்ரீத்தி, "நிச்சயமா இல்லை, ஆனா எனக்கு அப்போ... ப்ளீஸ் அலர் எனக்கு பிடிப்பு வேணும்ன்னு..." என்று தொடங்கியவள் முன் கரத்தை நீட்டி தடுத்த அலர்,

"அதுக்காக அடுத்தவளோட காதலன் தான் கிடைச்சாரா..?? என்றவள் தன் கோபத்தை அரும்பாடு பட்டு கண்களை இறுக மூடி கட்டு படுத்தியவள் 'வேண்டாம் உன்னோட விளக்கமே வேண்டாம் ப்ரீத்தி, முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் திரும்ப அதை பேசுறது இறந்த சடலத்துக்கு அறுவை சிகிச்சை செய்யற மாதிரி.., அதோட நீ கொன்னது உயிரை இல்லை மனசை..!! அதுக்கு எந்த கோர்ட்டும் தண்டனை கொடுக்க முடியாது ஆனா நம்ம மனசாட்சியை விட பெரிய நீதிபதி இல்லை அது கிட்ட கேளு நீ பண்ணினது மன்னிக்க கூடியாதா..??? இல்லையான்னு சொல்லும்.

'எனக்கும் மனசாட்சி இருக்கு அலர்'

'அப்படியா..??' என்று எள்ளலுடன் அவளை பார்க்க,

"ப்ளீஸ் அலர் ச... சரண் கீர்த்தி மேல ரொம்ப கோவமா இருக்கார், அவ.... அவ மேல எந்த தப்பும் இல்லை நான் தான் அவளை அந்த அளவு பேசியே பலவீனம் ஆக்கினேன்” என்று கூறும் போதே அவள் குரல் குறைந்து ஒலிக்க இப்போ எப்படி அதை... என்று தவித்தவள்,

"ப்ளீஸ் கீர்த்தி இப்போ எப்படி இருக்கா..??" என்றவளுக்குமே தான் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது என்று தெரிந்திருந்தாலும் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து அவர்களுக்கிடையிலான திரையை விலக்கி இருக்காதா..!! என்ற நப்பாசை தான்.

'அது தெரிஞ்சி நீ என்ன பண்ண போற..?? என்று ஒற்றை புருவம் ஏற்றி அவளை பார்த்த அலர்விழி குழந்தையை தட்டி கொடுத்தவாறே, "ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் நிச்சயமா அது நான் முன்ன பார்த்த கீர்த்தி இல்லை இப்போ அவ கிட்ட அதிகமான பயம், குற்ற உணர்வு, ஒருமாதிரி வெறுமை, விரக்தி, முக்கியமா அவளை நான் கடைசியா பார்த்தப்போ மாமா மேல அவளுக்கு இருந்த காதல் அது எங்கயோ ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி ஒரு பீல்" கண்டிப்பா இது உன்னோட மிகப்பெரிய சாதனை தான் யு ஹாவ் டு பீ பிரவுட் ப்ரீத்தி" என்று புன்னகைக்க,

அதை கேட்டு கொண்டிருந்த பரீத்திக்கு அவளையும் அறியாமல் கண்கள் குளம் கட்டிபோக, "ப்ளீஸ் அலர் எப்படியாவது கீர்த்தியை.." என்றவள் முடிக்கும் முன்னமே,

“அந்த எப்படி..!! எப்படின்னு நீயேதான் சொல்லேன்” என்று அலர் அழுத்தமாக பார்க்க,

பதிலில்லை ப்ரீத்தியிடம்

“என்னனு நெனச்சிட்ட சட்டை கரையானதும் வேற புதுசு எடுத்து மாட்டிக்கிற மாதிரி உன்னால ஏற்பட்ட கரையை மறக்க புதுசு எடுத்து மாட்டிக்க அது என்ன சட்டையா..??? மனசு ப்ரீத்தி..!!

எப்படி கரையும் காயமும் உடனே போகணும்ன்னு எதிர்பார்க்கிற..?? ஒருவேளை காலப்போக்கில் காயம் ஆறினாலும் அதோட வடு உன்னை நியாபகபடுத்திட்டு தானே இருக்கும்.., என்று வெறுப்போடு அவளை பார்த்தவள்,

“கல்யாணம் அவளுக்கு ப்ரீத்தி ஆனா யாருக்கோ வந்த விருந்து மாதிரி எதையோ பறிகொடுத்து உயிர்ப்பே இல்லாம இருக்கா, வாழற ஆசையே சுத்தமா இல்லை அவளுக்கு.., நேத்து முழுக்க அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க அம்மாவும் சித்தியும் எவ்ளோ போராடினாங்கன்னு தெரியுமா...?? இது மாமாக்கு தெரியாது, ஏற்கனவே கல்யாணத்துக்கு அவ மறுத்த கோவத்துல இருக்கறவர் இப்போ அடுத்தவங்க..." என்று நிறுத்த,

ப்ரீத்திகுமே அவள் கூற வருவது புரியத்தான் செய்தது ஆனால் எதையும் மாற்ற முடியாதே என்ற குற்ற உணர்வு அதிகரிக்க தலை குனிந்து நின்றிருந்தாள்.

"சின்ன வயசுல இருந்து பார்க்கிற எனக்கே இந்த மாமா ரொம்ப புதுசு" இதுவும் உன்னோட வாழ்நாள் சாதனை தான் ப்ரீத்தி இதுக்கு உலகத்துல இருக்க எல்லா அவார்டும் கொடுக்கணும் உனக்கு" என்றவளின் குரலில் அதிகப்படி கடுமை தெறிக்க,

"கோபம் இல்லையான்னு கேட்டியே இப்போ எனக்கு இருக்க கோபத்துக்கு உன்னை ஆயுசுக்கும் வெளியே வர முடியாத அளவு சார்ஜ் பண்ற அளவுக்கு கோபம் இருக்கு "

அதுநேரம் வரை குற்ற உணர்வில் உழன்று கொண்டிருந்தவள், 'ப்ளீஸ் அலர்' என்று கதறலுடன் முகம் பொத்திட,

'சிந்திய பாலுக்கு வருந்தி பயன் இல்ல விட்டுடு..!! ஆனா உனக்கு விளையாட மனுஷங்களோட உணர்வுகள் தான் கிடைச்சதா...?? ஏன் ?? ஏன் ப்ரீத்தி ?? நான் உன்ன ரொம்ப புத்திசாலின்னு நெனச்சேன் ஆனா வடிகட்டின முட்டாள் நீ..!!

அதுவும் நீ கீர்த்தியா மாமாக்கிட்ட போனது எவ்ளோ பெரிய முட்டாள் தனம் தெரியுமா..?? அதோட விபரீதம் புரியாம ஏதோ குருட்டு நம்பிக்கையில இறங்கிட்ட என்று வெறுப்புடன் பார்த்தவள்,

கீர்த்தி மாமாக்கு யாரோ இல்லை ப்ரீத்தி அவர் உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ணு..!! கொஞ்சம் யோசிச்சி பார்த்தியா மாமா கிட்ட அவரோட காதலியா நீ அங்க இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நீ எதை பேசி இருந்தாலும் செய்து இருந்தாலும் அது அவரை பொறுத்த வரை கீர்த்தியா தான் மனசுல பதிஞ்சி இருக்கும்" என்றபோதே,

கைகளில் முகம் பொத்தி அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து, "நா... நான் வேணும்ன்னா சரண் கிட்ட பேசட்டா..??" என்றவளின் வார்த்தைகள் திக்கி திணற

"நோ என்று தீர்க்கமாக மறுத்தவள், "எதுக்கு..??? அவரே ஏதாவது மறந்திருந்தா அதை நியாபகபடுத்தவா...??? வேண்டாம் , நீ அவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணனும்ன்னு நெனச்சா மொத்தமா அவங்க வாழ்க்கையில் இருந்து விலகிடு, இன்னொரு முறை உன்னை பார்க்கிற சந்தர்பத்தை அவங்களுக்கு கொடுத்துடாத" இதை சொல்ல தான் வந்தேன் என்றவள் குழந்தையை தொட்டிலில் கிடத்தி விட்டு அறையை விட்டு வெளியேற முயல,

'ஒரு நிமிஷம்' என்று அழுகையினூடே அவளை அழைக்க

கதவில் கரம் பதித்து அலர் அவளை திரும்பி பார்க்கவும்,

"உன்... உன்னால எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுக்க முடியுமா..??" என்றாள் உறுதியான குரலில்.

தலை சாய்த்து ப்ரீத்தியை பார்த்த அலரின் விழிகளில் ஆச்சர்யம், "என்ன பிரயசித்தமா..??" என்று உடனே வந்து வார்த்தைகள் விழ,

'அப்ப..' என்று பரீத்தி ஏதோ சொல்ல தொடங்கும் முன்னமே,

"உன் டிவோர்ஸ் இதுவரை நடந்ததை எல்லாம் இல்லைன்னு மாத்திட போகுதா..?? ஒருவேளை வருங்காலத்துல அதுக்கான வாய்ப்பு இருந்தா அப்போ வா நிச்சயமா பைல் பண்றேன், ஆனா எனக்கு தெரிஞ்சி அதுக்கு ஸீரோ பர்சென்ட் கூட வாய்ப்பு இல்லை" என்று கதவை சாற்றியவள் என்ன நினைத்தாளோ மீண்டும் திறந்து,

"திரும்ப முட்டாள்ன்னு நிருப்பிக்கிற..!! கிடைச்ச வாழ்கையை தக்க வச்சிக்கறது தான் புத்திசாலி தனம், உனக்காக இல்லாட்டியும் குழந்தைக்காக..!! பொதுவா இந்த மாதிரி கேஸ்ல நான் இப்படி சொல்லமாட்டேன் ஆனா இது நீ ஆரம்பிச்சது நீ தான் பேஸ் பண்ணனும் ப்ரீத்தி, மோரோவர் உன்னால விஷ்வாவை தடுக்க முடியும்ன்னு இன்னும் நம்புறியா..??" என்றபோதே அலரின் இதழ்கள் அழகாய் விரிய,

நீ சொன்னது தான் 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று கதவடைத்து விட்டு செல்ல,

சில நொடிகள் கதவையே உறுத்து விழித்தவள் அலரின் வார்த்தைகளில் சிலிர்த்து, "என்ன பெரிய விஷ்வா..??” என்று வாய்விட்டு கருவியவள்,


“நீ இல்லைன்னா வேற வக்கீலே இல்லையா..?? அவன் பண்ணின போர்ஜரியை வச்சே அவன் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கி காட்டலை என் பேரு ப்ரீத்தி இல்லை" என்று மனதினுள் சூளுரைத்து கொண்டவளுக்கு அப்போது தெரியவில்லை விஷ்வாவிற்கு எதிராக சுண்டு விரலை கூட அசைக்க முடியாத நிலையில் அவளை அவன் நிறுத்த போகிறான் என்பது..!!

**

'உள்ள வரலாமா..??' என்று தயங்கியவாறே நாதன் வளர்மதியின் அறையின் முன் வந்து நின்றார் வசுமதி.

நாதன் திருமண கணக்குகளை பார்த்து கொண்டிருக்க அவருக்கு தேவையானவற்றை எடுத்து கொடுத்து கொண்டிருந்த வளர்மதி வசுமதியை கண்டு ,

'ஏன் அங்கேயே நிக்கிற உள்ள வா வசு' என்று அழைக்கவும் அவர் முன் வந்து நின்றார் வசுமதி.

நேற்றில் இருந்தே நாதனிடம் பேச சமயம் பார்த்து கொண்டிருந்த வசுமதிக்கு இப்போது தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் அவர்களின் நிலை கண்டவர் வளரிடம், "முக்கியமான வேலையா இருக்கீங்க போல நான் வேணும்ன்னா அப்புறமா வரட்டுமாக்கா" என்று தயக்கத்துடன் கேட்க

'அதெல்லாம் ஒண்ணுமில்லை சொல்லும்மா என்ன விஷயம்" என்று நாதனிடம் இருந்து பதில் வரவும்,

எப்படி ஆரம்பிப்பது என்பதான சில நொடி மௌனம் அவரை ஆக்கிரமிக்க,

அதை கண்ட வளர், "எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு வசுமதி" என்றிட,

'எனக்கு பெருசா அவகாசம் இல்லை ஆனா என் பெண்ணை உங்களை விட வேற யாரும் நல்லா வாழ வச்சிட முடியும்ன்னு தோணலை அதான் உங்களை மலை மாதிரி நம்பி வந்திருக்கேன் என் பெண்ணை நீங்க தான் வாழ வைக்கணும்' என்று நேரிடையாக அவர் பேச்சை தொடங்க,

புத்தகத்தையும் பேனாவையும் மூடி வைத்த நாதன் வசுவிடம், "தெளிவா சொல்லும்மா நான் என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்கிற..??" என்று கேட்க,

"ப்ரீத்தி கீர்த்தியா மாறி இங்க வந்ததால மத்தவங்க நினைக்கிற மாதிரி அவ தப்பான பொண்ணு இல்லை, ரொம்பவே நல்ல மாதிரியா தான் அவளை வளர்த்தேன் ஆனா கொஞ்ச வருஷமாவே அவளுக்கு மனஅழுத்தம் அதிகமா இருந்தது எந்நேரமும் ஏதேதோ யோசனை கடைசியா உங்க தம்பியால அவரை பழி வாங்கறதுக்காக அவளோட குணத்துல இருந்து ரொம்ப மாறுபட்டு போயிட்டா... குற்றத்துல எனக்கும் பங்கு இருக்கிறதால என்னால அவளை கண்டிக்கவோ எதையும் தடுக்கவோ முடியலை ஆனா இப்படி சரண் மாப்பிள்ளை வாழ்க்கையில் நுழைஞ்சி கீர்த்திக்கும் அவருக்கும் ஒரு பிரிவை உண்டாக்குவான்னு நானே எதிர்பாக்கலை. எப்போ அவர் கீர்த்தியை காதலிக்கிறார்ன்னு தெரிஞ்சதோ அப்பவே விலகி இருக்கணும்" என்றவரின் வார்த்தைகளில் அத்தனை வலியும் வேதனையும் போட்டி போட்டது.

"நான் இப்படி சொல்றதால அவ பண்ணினதை நியாயபடுத்த நினைக்கிறதா அர்த்தம் எடுத்துக்காதீங்க ஆனா அவளோட இந்த மாற்றத்துக்கு உங்க தம்பியும் நானும் தான் மிகப்பெரிய காரணம். நாங்க சரியா இல்லாம போனதால என் பொண்ணுங்களோட வாழ்க்கையில என்னென்னமோ நடந்துடுச்சி. பழி வாங்கும்போது எதை பத்தின அக்கறையும் இல்லாம இருந்தவ இப்பவும் அதையே தொடர பார்க்கிறா அது அவளுக்கும் குழந்தைக்கும் நல்லது இல்லை".

"ஏன் என்னாச்சு..?? திரும்ப சரண்" என்று பதட்டத்துடன் வளர்மதி கேட்க,

"ஐயோ இல்லக்கா இப்போ சரண் மாப்பிள்ளையை அவளோட தங்கச்சி வீட்டுக்காரரா தான் பார்க்கிறன்னு சொல்றவ அவளோட மனசுல இப்போ அவரை பத்தின எந்த எண்ணமும் இல்லைன்னும் சொல்றா ஆனா அதே சமயம்..." என்று நிறுத்தியவர் நாதனையும் வளரையும் பார்க்க,

'அதே சமயம்' என்று நாதன் அவரை பார்க்க,

"நான் எதுவும் புதுசா சொல்ல போறது இல்லை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான் என்று இடை நிறுத்தியவர் முந்தானையை கொண்டு விழிகளில் வழிந்த நீரை துடைத்தவாறே,

"பலகாலமா ஏங்கியும் எனக்கெல்லாம் தாலிங்கிற வரம் கனவாவே போயிடுச்சி ஆனா யார் பண்ண புண்ணியமோ என் பொண்ணுக்கு ரெண்டாவது முறையா தாலி பாக்கியம் கிடைச்சி இருக்கு ஆனா அவளுக்கு அதோட மதிப்பு தெரியல" என்று வேதனையோடு கூறியவர்,

"இல்லல்ல தெரியலைன்னு சொல்ல முடியாது ஆனா அதுக்கு அவ தயாரா இல்லை நானும் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன் ரொம்ப பிடிவாதமா மாப்பிள்ளைகூட வாழ மாட்டேன்னு சொல்லி என் கூட சென்னைக்கு கிளம்புறதுலயே குறியா இருக்கா" என்று கூற,

'என்னம்மா சொல்ற' என்று நாதனின் வார்த்தைகள் திகைப்புடன் வெளிவர,

விழிகளில் நிறைந்த அச்சத்துடன் அவரை பார்த்தவர், "ஆமா அவ அப்படித்தான் சொல்லிட்டு இருக்கா..!! என்று நடுங்கும் குரலில் ஆரம்பித்தவர் சட்டென நாதனின் கால்களில் விழ,

'மா... என்னம்மா பண்றீங்க எந்திரிங்க' என்று நாதன் பின்னே நகர்ந்தவர்

'வளர் அந்த பெண்ணை எழுப்பி நிறுத்து' என்று கூறவும் வளர்மதியும் வசுமதியை தன் கைவளைவில் நிறுத்தினார்.

கண்ணீருடன் அவர் முன் கை கூப்பிய வசுமதி,"எனக்கு என் பொண்ணு வாழனும்..!! அவ அப்பாவால இத்தனை வருஷம் அவ இழந்தது போதும் அவர் மேல இருந்த கோபத்துல தப்பே பண்ணாத என் இன்னொரு பொண்ணு வாழ்க்கையில நுழைஞ்சி அவ பண்ணின பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் செய்யறதுன்னு புரியாம இருக்கேன் ஆனா இப்போ ப்ரீத்தி பேசுறதை பார்க்கும் போது அதுக்கு தண்டனையா அவ வாழ்க்கையையே பலி கொடுத்துடுவாளோன்னு எனக்கு பயமா இருக்கு"

"அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காதும்மா உங்க பயம் அனாவசியமானது..", என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே

பலமாக தலையை இரு மருங்கிலும் அசைத்த வசுமதி, "இல்லை உங்களுக்கு தெரியாதுங்க கீர்த்திக்கு பண்ணின பாவத்துக்கு இனி தனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்க கூடாது என்பதில் ப்ரீத்தி ரொம்ப பிடிவாதமா இருக்கா..!! எத்தனை பேசியும் என்னால என் பெண்ணை கட்டுபடுத்த முடியலை. ஆனா அவ உங்க வார்த்தைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுக்குறா அதான் உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் எப்படியாவது என் பெண்ணை வாழ வைங்க.., அவ வாழனும், கீர்த்தி கல்யாணத்தை நீங்க முன்ன நின்னு நடத்தின மாதிரி ப்ரீத்தி மனசை மாத்தி அவளை மாப்பிள்ளை கூட அனுப்பி வைச்சிடுங்க அது போதும் எனக்கு" என்றவரின் கண்களை மீண்டும் நீர் நிறைத்திருந்தது.

சில கணங்கள் நாதனிடமும் தவிர யோசனை, "
இங்க பாரும்மா எப்பவுமே எடுத்துகிட்ட பொறுப்பை தட்டி கழிச்சி எனக்கு பழக்கம் இல்லை என்னைக்கு என் கூட பிறந்தவனோட உண்மையான முகம் தெரிஞ்சதோ அப்போதில் இருந்தே எனக்கு ஒன்னு இல்லை மூணு பொண்ணுங்க அவங்க எல்லாரோட வாழ்க்கை மேலயும் எனக்கு அக்கறை இருக்கு. ப்ரீத்தியோட வாழ்க்கையை சரி பண்றது இனி என் பொறுப்பு நீங்க கவலையை விட்டுட்டு அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்புறதுக்கான ஏற்பாட்டை மட்டும் பாருங்க" என்று அவரை அனுப்பி வைத்தார்.
Nice
 

Rudraprarthana

Well-Known Member
ப்ரீத்தி மேலும் மேலும் தப்பு பண்ணிட்டே போற, கொஞ்சம் அடங்கு
அடங்குவா காத்திருங்கள்... மிக்க நன்றி சிஸ் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top