UUU 3 - 2

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10507


மேளச்சத்தங்களுக்கு இடையில் குழந்தையுடன் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் பார்வை மேடையில் இருந்த சரண் கீர்த்தியின் மீது படிய என்ன முயன்றும் எண்ணங்களுக்கு கடிவாளமிட முடியாமல் அதன் போக்கில் சென்றவளுக்கு சரணுடனான நாட்கள் கண்முன் வலம் வர மனதில் சுருக்கென்ற வலி பரவிட தொடங்க இதழ்களில் அவளையும் அறியாமல் ஒரு கசந்த முறுவல்.

நினைவுகளுக்கு தான் எத்தனை சக்தி சில நேரம் வரமாய் சில நேரம் சாபமாய்..!!

சரணுடனான அவள் நினைவுகளே சாபமாய் மாறி இருக்க பிரகாசத்தின் பாவங்களை பட்டியலிட்டு அதன் தண்டனையை நிர்ணயித்தவளுக்கு காலாத்தால் அழிக்க முடியாத பாவத்தில் இருந்து எவ்வாறு விமோச்சனம் பெறப்போகிறாம் என்ற எண்ணம் மனதை கசக்கி பிழிய அச்சத்தில் அவளுடலில் பெரும் நடுக்கம் பரவ கையில் இருந்த குழந்தையை இறுக்கி பிடித்து தன்னை நிலை படுத்த முயன்றாள்.

ஆத்திரத்தில் அறிவிழந்து அவள் செய்த தவறால் இன்று இரு தூய காதல் நெஞ்சங்கள் பலமாக காயப்பட்டு மீளவே முடியா நிலையில் சிக்கி தவிப்பதை கண்டவள் தன்னையே வெறுத்து போனாள்.

ஆம் ஐந்து வருடத்திற்கு முன்பான கீர்த்தி சரணின் காதலை கண்டிருந்தவளுக்கு அப்போது இருவரின் விழிகளிலும் வழிந்த காதலும் நேசமும் இன்று கீர்த்தியிடம் அச்சமாகவும் சரணிடம் சீற்றமாகவும் வடிவம் பெற்று இருப்பதை கண்டு நெஞ்சம் விண்டு போனது.

அவளுக்கு மட்டும் காலத்தை மாற்றும் வல்லமை இருந்தால் முதல் வேலையாக கீர்த்தியாக அவனுடன் கழித்த கடந்த கால நாட்களை அவன் வாழ்வில் இருந்து அழித்து விடுவாளே..!!

ஆனால் அத்தகைய சக்தி தான் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் அவள் துயரை போக்க எண்ணங்களை மறக்கும் கலையை கற்றிருந்திருக்கலாமோ அல்லது மற்றவரின் நினைவுகளை வசப்படுத்தி மாற்றும் முறை அறிந்து வைத்திருக்கலாமோ என்ற ஆதங்கம் எழாமல் இல்லை அவளுக்கு..!!

பின்னே..!! சரணின் கோபத்தின் அளவை அது ஏற்படுத்த கூடிய காயத்தின் வலியையும் ஏற்கனவே கண்டிருந்தவளுக்கு தன் செயல்கள் மீதான அவன் கோபம் இப்போது திசை மாறி கீர்த்தியின் மீது படிந்திருப்பதை கண்டவளுக்கு மெல்லிய மனம் கொண்ட கீர்த்தி அதை எங்கனம் எதிர்கொள்வாள் என்ற எண்ணமே வாட்டி வதைத்து கொண்டிருந்தது.

தன் பழிவாங்கும் படலத்தில் தவறே இழைக்காதவர்களிடையே தேவையற்ற விரிசலை உண்டாக்கி அவர்கள் காதலை கேள்வி குறி ஆக்கியதோடு வாழ்க்கையையும் திசை மாற்றியதில் ப்ரீத்தியின் மனமே அவளை மன்னிக்க தயாராக இல்லை.

அவள் எய்த அம்பு தான் அதுவும் அவர்கள் காதலை சீர்குலைக்கவே பிரத்யேகமாக எய்தது மறுப்பதற்கில்லை, ஆனால் அது ஏற்படுத்தியிருக்கும் ரணத்தை இப்போது அவளாலேயே கண்கொண்டு காண முடியவில்லையே..!!

ஆம் எப்போதும் எய்தவனுக்கு அம்பின் வேகம் அது ஏற்படுத்தும் ரணம் குறித்த கணிப்பு இருக்குமே அது கொடுக்கும் வலி பற்றிய சிந்தனை இருக்காது. ஆனால் இப்போது அதன் ஆழத்தை புரையோடி போயிருக்கும் ரணத்தை கண்டவளுக்கும் நெஞ்சம் கனத்து போனது.

எய்த தனக்கே இத்தகைய வலி என்றால் காயப்பட்டவர்களின் நிலை அதை அவர்கள் இருவரும் எவ்வாறு கடப்பார்கள் என்ற சிந்தனை மேலோங்க அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் கலங்கிய விழிகளுடன் குழந்தையோடு தன் அறைக்கு திரும்பி விட்டிருந்தாள்.

அத்தனை சத்தத்திற்கு இடையிலும் தன் கைசூட்டிலேயே உறங்கி விட்டிருந்த குழந்தையை ப்ரீத்தி தொட்டிலில் கிடத்தும் போது அலங்காரமாய் அவள் முன் வந்து விழுந்தது மஞ்சள் கயிறில் கோர்த்து விஷ்வா கட்டி இருந்த பொன் தாலி.

அதை கண்டவளின் விழிகளில் ஒரு வித வெறுமை பரவ தன் கழுத்தில் அது ஏறிய நொடிகளை எண்ணி பார்த்தவளுக்கு அதை கட்டியவன் மீது வெறுப்பும் ஆவேசமும் பெருக தொடங்கி சில கணங்களிலேயே அது குற்ற உணர்வாக வடிவம் பெற்றிருந்தது.

ஆம் சில நாட்களுக்கு முன்பு வரை குழந்தை குறித்த கவலை அவளை கொன்று கிழித்திருக்க இன்று அதற்கான அங்கிகாரம் கிடைத்து விட்ட நிலையில் இத்தோடு அனைவர் வாழ்வில் இருந்தும் ஒதுங்கி குழந்தையோடு எளியவர்களுக்கு சேவை செய்து காலம் கழிப்பது தான் தனக்கான தண்டனை. எக்காரணம் கொண்டும் கணவன், குடும்பம் என்பதான வாழ்க்கை அமைந்து விடகூடாது என்பதில் மிகவும் திடமாக இருந்தாள்.


கணவன் என்று நினைத்த கணமே அவள் பார்வை மீண்டும் கழுத்தில் இருந்த தாலியில் பதிந்தது, "தனக்கே தெரியாமல் அவன் குழந்தையை சுமக்க செய்திருந்தவனின் மீது ஏனோ நல்ல எண்ணம் வர மறுத்தது ப்ரீத்திக்கு. எத்தகைய பச்சை துரோகத்தை முன் பின் தெரியாத அவளுக்கு இழைத்திருக்கிறான், செய்வதை எல்லாம் செய்துவிட்டு தாலி கட்டிவிட்டால் தவறெல்லாம் சரியாகி விடுமா..???

குழந்தைக்கான அங்கிகாரத்தை இது பெற்று தந்திருந்தாலும் தன் வாழ்க்கையையே ஒரு நொடியில் மாற்றி விட்டதல்லவா..?? என்ற எண்ணம் வலுக்க அவள் உடல்மொழியில் திடீர் மாற்றம்..!! மற்றவர்களின் வாழ்க்கையை தன் கையில் எடுத்து அவர்களை விளையாட்டு பொம்மையாய் ஆட்டி வைத்தவளுக்கு இன்று தன் வாழ்வே அவள் கை நழுவி போன நிஜத்தையும், அது விஷ்வதேவ்வின் கரங்களில் சிக்கி இருப்பதையும் ஏற்க முடியாமல் தத்தளித்து போனாள்.

யாரிவன்..?? இத்தனை நாட்கள் எங்கு இருந்தான்..??? எதற்க்காக தனக்கே தெரியாமல் அவன் குழந்தையை சுமக்க செய்தான்...?? காதல் என்று அவன் கூறும் காரணத்தை ஏற்க அவள் முட்டாள் இல்லை அதே சமயம் அவனை இதற்கு முன் எங்கும் பார்த்த நினைவே அவளுக்கு இல்லை பின் எதற்காக அவன் தாலியை சுமக்க செய்து இத்தனை பெரிய தண்டனையை அளித்து அடுத்து என்ன என்று கூட யோசிக்க விடாமல் தடுக்கிறானே, அவன் நோக்கம் தான் என்ன...??? காதல் என்ற பெயரில் அவளை செயல்பட விடாமல் எதையும் செயல் படுத்த விடாமல் செய்பவன் மீது எல்லையில்லா சினம் மேலிட்டது.

அதே நேரம் இத்தகைய மோசமான நிலை தன் எதிராளிக்கு கூட வரக்கூடாது என்று நினைத்தவளுக்கு அல்லவா தெரியும் பிரகாசம் மட்டுமல்லாது கீர்த்தியின் வாழ்க்கையை தட்டி பறிக்க நினைத்த தனக்கான தண்டனையையும் அவளே நிர்ணயித்து இருப்பதையும் அதை செயல் படுத்த விடாமல் அவன் கட்டிய தாலி அவளை கட்டி போட்டு இருப்பதையும்.

நடுங்கும் கரங்களால் தாலியை உயர்த்தி பிடித்தவளுக்கு ஏனோ தன் விருப்பம் இன்றி தன் முடிவை மாற்றி அமைத்த விஷ்வாவை மன்னிக்கவே முடியவில்லை. அவள் செய்த தவறுக்கு அவளே தண்டனை ஏற்க தயாராக இருக்கையில் அதை மாற்றி அமைக்க இவன் யார் என்ற கேள்வியுடன் சேர்த்து விஷ்வாவை நினைத்த மாத்திரத்தில் கடந்த இரு நாட்களாக அவனுடனான நிமிடங்கள் மனதை சூழ அவள் உடல்மொழியில் அசாதாரண நிமிர்வு வந்து சேர்ந்தது.

இந்த ப்ரீத்தியை எத்தனை எளிதாக கணித்து விட்டான் என்று விழிகள் சிவந்தவள்,

"இனி நீயே நினைச்சாலும் என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது விஷ்வதேவ், என் அனுமதி இல்லாமல் என் வாழ்க்கையை உன் கையில எடுத்தது எவ்ளோ பெரிய தப்புன்னு உனக்கு புரிய வைக்கலை நான் ப்ரீத்தி இல்லைடா" என்று மனதினுள் சூளுரைத்தவளுக்கு தெரியவில்லை யார் யாரிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தத்தளிக்க போகிறார்கள் என்று..!!

**

குழந்தையின் அழுகுரல் அவள் சிந்தனையை தடை செய்ய ஓடோடி சென்று குழந்தையை அள்ளி எடுத்து கட்டிலில் அமர்ந்து அதன் பசியை போக்க முற்பட குழந்தையோ ஒழுங்காக குடிக்க முடியாமல் திண்டாடிபோனது. நேற்றிலிருந்தே இதே நிலை தான் என்றாலும் ப்ரீத்தியும் தன்னால் இயன்ற வரை பெரும் முயற்சி செய்து அதை குடிக்க வைக்க முயற்ச்சித்து கொண்டு தான் இருக்கிறாள்.

அடுத்த சில நொடிகளில் தட்டப்படாமலே அவள் அறைக்கதவு திறக்கப்பட்டு 'டார்லிங்' என்ற ஆர்பாட்ட அழைப்போடு கம்பீரமாக விஷ்வதேவ் உள்ளே நுழைந்தான்.

அந்நேரத்தில் அவனை எதிர்பாராது விழி விரித்து அவனை பார்த்த ப்ரீத்தி முகத்தில் அப்பட்டமான திகைப்பு.

அவள் பார்வையை கண்டுகொண்ட அவனோ இதழ்களை விரித்து மென்சிரிப்பை உதிர்த்தவாறே, "என்னை அப்புறம் சைட் அடிக்கலாம் குழந்தைக்கு ஒழுங்கா பீட் பண்ணு பேபி" என்று கூறவும் தான் அவனை பற்றிய யோசனையிலும் அவள் மட்டுமே அறையில் இருக்கும் காரணத்தாலும் சற்று அலட்சியமாக இருந்தவள் அப்போது தான் தன் நிலையை உணர்ந்து அவசர அவசரமாக முந்தானையை இழுத்து போர்த்த முற்ப்பட அதுவோ அவள் அதன் மீதே அமர்ந்திருந்த காரணத்தால் எத்தனை இழுத்தும் வர மறுத்தது.

தாலி கட்டி இருந்தாலும் அவளை பொறுத்தவரை அவன் யாரோ முன்பின் அறியாத அந்நியன் தானே..!! அவன் முன்னிலையில் இத்தகைய நிலையில் அமர்ந்திருப்பதில் பெரும் சங்கடம் எழ, குழந்தையை ஒரு கையால் பற்றியவாறே முந்தானையை எடுக்க முற்ப்பட அவள் முயற்சி புரியாத குழந்தை பசியில் அழ தொடங்கியது.

உடனே தன் முயற்சியை நிறுத்தியவள் குழந்தையின் பசி ஆற்ற தொடங்க, அதற்குள் அலமாரியில் இருந்த பூத்துவாலையை எடுத்த விஷ்வா அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்க,

அவன் காலடிகளின் சத்தத்தில் அவளை நெருங்குவதை உணர்ந்தவள் குழந்தையை பற்றியவாறே, "ஹே..!! ஸ்டாப் டோன்ட் ஈவேன் ட்ரை.., யு டாம்னிட்" என்று ஆற்றாமையால் இதழ்கள் துடிக்க கூறிட,

அதை அலட்சியபடுத்தி அவளை நெருங்கிய விஷ்வா துவாலையை கொண்டு அவள் தோளில் போர்த்த,

"யு ராஸ்கல்....!!" என்று அவனை தீயாய் முறைத்தவள் மறுகணமே அவன் கையில் இருந்த துண்டை பிடுங்கி கீழே வீசியவள் குறையாத ஆக்ரோஷத்துடன் , "ஹூ தி ஹெல் ஆர் யு...?? யாருடா நீ..?? கதவை தட்டிட்டு வரணும் என்ற பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா..?? ஜஸ்ட் கெட் அவுட் ஆப் தி ரூம் அன்ட் மை சைட்" என்று கர்ஜிக்க,

அதற்கெல்லாம் கட்டுபடுபவனா விஷ்வதேவ் !! அதுநேரம் வரை அவள் பிடுங்கி வீசிய டவல் மீது பார்வை பதித்திருந்தவன் ஓர் அலட்சிய பார்வையை அவள் மீது வீசி தோள்களை குலுக்கியவாறே ,

"சீ ஐ ஹாவ் நோ ப்ராப்ளம்..!! உனக்கு எம்பாரசிங்கா இருக்கும்ன்னு தான் டவல் கொடுத்தேன் பட் ஹஸ்பன்ட் அண்ட் வைப்குள்ள எந்த ஒளிவும் மறைவும் வேண்டாம்ன்னு நீ நினைக்கிறது ரியலி வாவ் !! ஜஸ்ட் வாவ் பேபி !! இப்படி ஒரு ஓபன் ஹார்டட் வைப் கிடைச்சதுல நான் ரொம்ப லக்கி" என்று உல்லாசக் குரலில் கூறியவனின் பார்வை அவள் மடியில் இருந்த குழந்தையின் மீது படிந்திட அதை கண்ட ப்ரீத்திக்கு தூக்கி வாரி போட்டது...., பதறிக்கொண்டு அருகே இருந்த போர்வையை எடுத்து தன்னை மறைத்தவள்,

"ச்சை வாயை மூடுடா பொறுக்கி..!! யாரை கேட்டு உள்ள வந்த..??? கொஞ்சமும் அசிங்கம் இல்லாம திறந்த வீட்டுக்குள் ஏதோ நுழைந்த மாதிரி ரூம்க்குள்ள நுழைஞ்சிட்டு..." என்றவளுக்கு தன்னை கட்டுபடுத்துவது பெரும் சவாலாக இருந்தது. "வெளியே போடா முதல்ல " என்றவாறே கொதிப்புடன் எழ முயன்று தோற்றுபோனாள்.

ஆம் !! அவளனுமதி இன்றி அத்துமீறி வாழ்விலும் அறையிலும் நுழைந்து இருப்பவனை கொல்லும் வெறியே கிளம்பி இருந்தாலும் அதை செயல் படுத்த விடாமல் அங்கு அவளிடம் நிம்மதியாய் பாலருந்தி கொண்டிருந்த குழந்தை தடுத்திருந்தது.


அவள் முயற்சியை கண்டவனிடம் மீண்டும் புன்னகை எழ, "என் பொண்டாட்டி குழந்தையை பார்க்க நான் எதுக்கு பேபி கதவை தட்டனும்" என்று கர்வத்துடன் கேட்டவாறே அவளருகே சுவரில் ஒற்றை காலை பதித்து நின்றவன்,

"இட்ஸ் நாட் தட் ஈசி ஸ்வீட்ஹார்ட் சோ முயற்சி பண்ணாத" என்றிட,

'பொண்டாடியா...??' என்று கண்கள் சுருங்க அவனை பார்த்தாள் ப்ரீத்தி.

பின்னே அவளை இக்கட்டான நிலையில் இருத்தி தாலி கட்டி விட்டதாலேயே அவன் கணவன் ஆகிவிட முடியுமா..??? அதிலும் அவனை சந்தித்த கணத்தில் இருந்தே அவள் விருப்பிற்கு மதிப்பளிக்காமல் அனைத்தையும் நிர்பந்திப்பவனை எங்கிருந்து அவளும் கணவனாக வரிக்க..!!

அவள் இத்தனை ஆட்சேபித்தும் குழந்தைக்கு பசியாற்றும் போது உரிமையுடன் அவன் அங்கு நிற்ப்பதை பொறுக்க முடியாதவள், 'யாருக்கு யாருடா பொண்டாட்டி, யு ஸ்கவுண்டரல் !! ஜஸ்ட் கெட் லாஸ்ட்" என்று கத்த,

"மெதுவா பேசு பேபி குழந்தை பயப்பட போறான் அதோட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் எனக்கு சவுண்ட் அலர்ஜி, சோ என் முன்னே சத்தமா பேசினா என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும்.. இருந்தும் விஷபரிட்சை எடுக்கிறியே டார்லிங்" என்றவாறே சுவரில் பதித்திருந்த காலை கீழே இறக்கி அவளை நோக்கி விஷ்வா முன்னேற அதை கண்டவளுக்கு அன்று இதையே கூறி அவளுக்கு முத்தமிட்டது நினைவு வர,

"ஸ்டாப் விஷ்வா டோ..." எனும்போதே அவள் முகத்திற்கு அருகே வந்தவன் அவள் விழிகளில் தெரிந்த அச்சத்தில் நிறைவு கொண்டவனாக அவள் போர்த்தி இருந்த போர்வையை விலக்க முற்ப்பட,

பதறிக்கொண்டு அதை இறுக்கி பிடித்தவள், "ஏய் என்ன... என்ன பண்ற" என்று கரத்தை ஒங்க முற்ப்பட அதற்குள் பிடிமானம் இல்லாமல் போர்வை நழுவுவதை கண்டவள் இயலாமையில் மீண்டும் அதை பற்றி கொண்டு,

"யு ராஸ்கல் என்னடா பண்ற..?? போ வெளியே" என்று கர்ஜித்தவளின் கண்களில் ஏன் என்றே தெரியாமல் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது,


*

"அதுவா டார்லிங்..." என்று கேட்டவாறே சாவதானமாக அவளருகே அமர்ந்தவன்,

"குழந்தை ஒழுங்கா பால் குடிக்கிறானா..?? சக்ஷன்ல எந்த பிரச்னையும் இல்லையே" என்று நேற்று மருத்துவமனையில் குழந்தை குறித்து மருத்துவர் கூறியதை பற்றி அக்கறையுடன் அவன் கேட்க

"தட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ் விஷ்வா ஜஸ்ட் கெட் அவுட்" என்று சீற்றம் மட்டுமே ப்ரீத்தியிடம்.

என்ன பேபி இப்படி சொல்லிட்ட பிறந்த குழந்தைக்கு தாய் பால் எவ்ளோ முக்கியம்ன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்ல, ஆனா அவனால... என்றவனை இடையிட்ட ப்ரீத்தி,

'என் குழந்தையை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும், யு டோன்ட் டீச் மீ இடியட் ' என்று அவனை கண்களாலேயே ப்ரீத்தி எரிக்க முற்ப்பட

அதையும் சிறு புன்னகையில் கடந்தவன் அவளிதழில் சுட்டுவிரலை பதித்து, "டீச் பண்ண வரலை செல்லம் ஹெல்ப் பண்ண வந்திருக்கேன்"

'ஹெல்ப்' என்று புரியாமல் அவள் பார்க்க,

'எஸ்' என்று தலையை இடப்புறமாக சாய்த்து அவளை பார்த்து புன்னகைத்தவன்,

'உனக்கு தெரியாததா ஸ்வீட்ஹார்ட் வழக்கமா புதுசா பிறந்த சில குழந்தைகளுக்கு பாலை சக் பண்ண தெரியாது அதனால குடிக்க முடியாம திணறும் ஒருவேளை என் பையனுக்கு குடிக்க தெரியாம பசியில அவன் தவிச்சு போன என்ன பண்றது அதனால.." என்று தன் பேச்சை நிறுத்தி ஒற்றை புருவம் தூக்கி அவளை விஷ்வா பார்க்க,

ப்ரீத்தியோ அச்சம் கவ்விய விழிகளுடன் 'அதனால..??' என்று கேட்டவளுக்கு மெல்ல அவன் கூற வருவது புரிபட தொடங்க அவள் முகம் அச்சத்தில் வெளிறிப் போனது.

அதே நேரம் விஷ்வாவும், "அதனால என் பையனுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன் பேபி" என்று தந்தையாக மட்டுமல்லாது மருத்துவனாகவும் குழந்தையின் நலனை மட்டுமே முன் நிறுத்தி அவன் கூற,

'வ்ஹாட்டட்ட்ட்' என்று உச்சபட்ச அதிர்ச்சியுடன் ப்ரீத்தி அவனை பார்த்தாள்.

'எஸ் மை ஸ்வீட்ஹார்ட்' என்று விஷ்வா கண்மூடி திறக்கவும்,

வெறித்த பார்வையுடன் அவனை பார்த்தவளின் இதழ்களோ பல நல்ல வார்த்தைகளை கொண்டு அர்ச்சிக்க தொடங்க, ஒரு கட்டத்தில் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு, 'வெளிய போ' என்று உச்சபட்ச ஆவேசத்தையும் அடக்கிய குரலில்,

'ஏன்...??'

"விஷ்வா நான் இப்போ ஆர்கியூ பண்ற நிலையில இல்லை சோ ப்ளீஸ்..." என்று வெளியே செல்லுமாறு கை காட்ட,

அவள் வார்த்தையை லட்சியமே செய்யாமல் அவள் புறம் திரும்பி அமர்ந்தவன்,

"லிசன் ப்ரீத்தி சின்ஸ் யு ஆர் அ டாக்டர்..!! உனக்கு நான் டீடெயிலா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை பட் எனக்கு என் பையனுக்கு தாய் பால் முழுமையா கிடைக்கிறதுல எந்த பிரச்சனையும் இருந்திட கூடாது அவளோதான் " என்று தோள்களை குலுக்கியவன்

'சோ தட் ஐ கேன் டூ எனிதிங்' என்றவனின் குரலில் கடுமை விரவி இருந்தது.


அவன் கூற்று புரிந்தாலும் அதை ஏற்றுக்கொண்டாளோ ஆமோதித்தாலோ அது ப்ரீத்தி இல்லையே..!!

'லிசன் விஷ்வா யு ஆர் ரியலி டெஸ்டிங் மை டாலரென்ஸ் வெரி பேட்லி (என் பொறுமையை நீ ரொம்பவே சோதிக்கிற) என் குழந்தையை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும் உனக்கு அந்த கவலை தேவை இல்லை..., சோ ஜஸ்ட் ஸ்டாப் ஆல் தீஸ் நான்சென்ஸ்' என்றவளுக்கு பொறுமை முற்றிலுமாக அற்று போயிருக்க,

"உலகத்துலேயே இந்த நிமிஷம் நான் அதிகமா வெறுக்க கூடிய ஒரு நபர்ன்னா அது நீ தான்" என்றவளின் உதடு துடித்து அடங்க,

கண்களை இறுக மூடியவள், "சோ ஜஸ்ட் ஜஸ்ட் கெட் அவே ப்ரம் மை லைப், ஐ டோன்ட் வான்ட் டு சீ யு எனிமோர்" (போ என் வாழ்க்கையை விட்டு போ..!! இனி எப்பவும் நான் உன்னை பார்க்க விரும்பலை) என்று கத்த தொடங்கிய நேரம் அறையினுள் நுழைந்தார் வசுமதி.

அங்கு விஷ்வா இருப்பதை கண்டவர் மன்னிச்சிடுங்க என்றவாறே திரும்ப முற்ப்பட, "பரவால்ல அத்தை உள்ள வாங்க என்று அவரை அழைக்க,

இல்லைல்லா நீங்க பேசுங்க நான் வெளியே இருக்கேன் என்று அவர் மீண்டும் வெளியேர் முற்பட,

ப்ச் அத்தை உங்களை தான் சொல்றேன் உள்ள வாங்க என்று விஷ்வா அழைக்க மறுக்க முடியாமல் உள்ளே வந்தவர் கரத்தில் இருந்த தட்டில் பார்வையை பதித்தவாறே, " காலைல எழுந்ததுல இருந்து எதுவும் குடிக்க கூட இல்லை அதான் ப்ரீத்திக்கு டிபன் கொண்டு வந்தேன்" என்றவருக்கு மாப்பிள்ளை விடுத்து மகளை மட்டும் கவனிப்பதில் மெல்லிய குற்ற உணர்வு மேலோங்க, உங்களை தேடி பார்த்தேன் மாப்பிள்ளை நீங்க வெளியே இல்லை, இருங்க உங்களுக்கும் எடுத்துட்டு வந்துடுறேன் என்று கரத்தில் இருந்த ட்ரேயை மேஜையில் வைத்து விட்டு அவர் திரும்ப,

அத்தை எதுக்கு இந்த அவசரம், ஒன்னும் பிரச்சனை இல்லை நான் மெதுவா சாப்பிடுறேன் நீங்க அவளுக்கு கொடுங்க என்றவன் மீண்டும் ப்ரீத்தியை நெருங்கி, அவள் வலக்கரத்தை எழுத்து எடுத்து அவள் கையில் ஒரு பெட்டியை வைத்தவன்,


‘முன்ன சொன்னது தான் எனக்கு என் பையனுக்கு தாய் பால் முழுசா கிடைக்கணும் அதான் இந்த ப்ரெஸ்ட் மில்க் பம்ப் கொடுக்க வந்தேன் ’ என்று அவள் கையில் வைத்த பெட்டியை கண்ணால் காண்பித்தவன், குழந்தைக்கு குடிக்க முடியலைன்னு அப்படியே விட்டுடாத இப்போதைக்கு அப்பப்போ இதுல பாலை எடுத்து அவனுக்கு கொடு போக போக அவனே உன்கிட்ட குடிக்க பழகிடுவான்" என்று கூறவும்

ப்ரீத்தி முகத்தில் ஈயாடவில்லை


அதை கண்டவனின் இதழ்களுக்குள் மீண்டும் சத்தம் இல்லாத ஒரு சிரிப்பு, "என்ன டார்லிங் பேச்சு மறந்து போச்சா..?? இவ்ளோ நேரம் நான் ஸ்டாப்பா பேசிட்டு இருந்த இப்ப பண்ணின ஹெல்ப்க்கு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டேன்கிற..?? இதானா மேனர்ஸ்" என்று அவளை சீண்டியவன் அவள் செவியோரம் தன் அதரங்களை பொருத்தி,

"ஹெல்ப் பண்ண வந்தேன்னு சொன்னதும் மேடம்க்கு கற்பனை எங்கெங்கேயோ போயிடுச்சி போல" என்றவன் ஒற்றை கண் சிமிட்டியவாறு அவளை பார்க்க

இறுகி போய் அமர்ந்திருந்த ப்ரீத்தியிடம் அசைவில்லை

"இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கலை போல" என்றவனின் புன்னகை இப்போது இதழ்களை நிறைத்திருந்தது.

ஹாய் செல்லகுட்டீஸ்...

கதையின் அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிருங்கள். சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ருத்ரபிரார்த்தனா...
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top