UUU 3 - 19.1

Advertisement

keerthukutti

Well-Known Member
விஷ்வா பாவம் ப்ரீத்தி எதனால இப்படி நடந்துக்குற வெளியில கொடுக்குற மரியாதையை தனிமையிலும் கொடு உன்னை பிடிக்கும் இல்ல வெறுத்துதுவா
 

Priyaasai

Active Member
உறவு - 19.1

View attachment 10781

ப்ரீத்தியிடம் குழந்தையை பெற்றுக்கொண்டு தன் அறைக்கு சென்ற விஷ்வதேவ் குழந்தையை பத்திரமாக தொட்டிலில் கிடத்தி அதன் பத்திரத்தை உறுதி செய்து மீண்டும் வெளியே வந்தவன் அங்கு வர்ஷு செல்வதை யோசனையாக பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தியை 'யாரை தேடுற ஹனி..??' என்றவாறே அவளை பின்புறம் இருந்தே அணைத்து கொண்டு,

'இது நம்மோட சாம்ராஜ்ஜியம் அனாவசியமா யாரும் இங்க வரமாட்டாங்க ஏதாவது வேணும்ன்னா இன்டர்காம்ல சொன்னா போதும் அவங்களே கொடுத்து அனுப்புவாங்க ' என்று அவள் கூந்தலில் முகம் புதைக்க,

'லீவ் மீ தேவ்' என்றாள் தன் பொறுமையை இழுத்து பிடித்து

என்ன நினைத்தானோ இப்போது அவள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவளிடம் இருந்து விலகி நின்று கைபிடியில் சாய்ந்து கைகளை மார்பின் குறுக்காக கோர்த்து கொண்டு அவளை தீவிரமாக பார்த்தவன், 'யு வான்ட் டு சே சம்திங் பேபி '

சளைக்காமல் அவன் கண்களை பார்த்த ப்ரீத்தியும், " என்ன இதெல்லாம்..?? "என்று ஒரு முறை விழிகளால் தன் இருப்பை சுட்டி காட்டியவள் "நீ அதிகமா படம் பார்ப்பியா அதான் இப்படி பண்ணிட்டு இருக்கியா..?? ஆர் யூ ட்ரையிங் டூ இம்ப்ரெஸ் மீ " என்று நேரடியாக விஷயத்திற்கு வர,

அவனோ 'நான் இன்னும் எதுவும் பண்ண ஆரம்பிக்கலையே பேபி..??' என்று கண்கள் சுருக்கி அவளை பார்த்தவன் பின் கைகளை தூக்கி நெட்டி முறித்தவாறே..,

"அப்போ ஜஸ்ட் ஹக் பண்ணினதுக்கே இம்ப்ரெஸ் ஆகிட்டன்னு சொல்லு ..??'என்று கண்களால் சிரித்தவன் 'வாவ் தேவ் !! பிரில்லியண்ட் மேன்' என்று தன்னை தானே தட்டி கொடுத்து 'அப்போ மத்ததுக்கு..??' என்று அவளை பார்க்க,

ப்ரீத்திக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை காந்தியது.., இருப்பினும் பொறுமையை இழக்க கூடாது என்று தனக்கு தானே உருபோட்டு கொண்டவள்,

"உனக்கு நான் என்ன பேசறேன்னு தெரியும்" என்று பல்லை கடித்து கொண்டு அவனை பார்த்தவள் ஒரு நொடி கண்களை இறுக மூடி திறந்து, "ok I don't want to make it complicated anymore..!! லிசன் தேவ் இந்த படங்கள்ல கதைகள்ல வர மாதிரி இக்கட்டுல மாட்டிட்டு இருக்க ஹீரோயினை ஹீரோ காப்பாத்தி அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இப்படி பணம், பங்களா, ஆடம்பரம் காண்பிச்ச உடனே அந்த ஹீரோ மேல ஹீரோயினுக்கு லவ் வருமே அப்படி எனக்கு வரும்ன்னு எண்ணம் வச்சி இருந்தா அதை அழிச்சிடு. I am not that kind இன்பாக்ட் இதை எல்லாம் பார்த்து எனக்கு கில்ட் தான் அதிகமாகுது" என்றபோதே அவளை நெருங்கி நின்று
தன் கைஅணைப்பில் நிறுத்தியவனோ ஒற்றை விரலால் அவள் முக வடிவை அளந்தவாறே "அது எதுக்கு டார்லிங்" என்று கேட்க

தன் முகத்தில் ஊர்வலம் சென்ற அவன் விரலை நெருக்கி பிடித்தவள் குறையாத ஆக்ரோஷத்துடன், "தேவ் திஸ் இஸ் தி லிமிட்..!! என் பொறுமையை சோதிக்காத" என்று எச்சரித்தவள் அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றவாறே,

"வந்த இடத்திலும் பிரச்சனை வேண்டாம்ன்னு நான் பொறுத்து போறேன்" என்று விழிகள் சிவக்க அவனை பார்த்தவள்..,

"ஆ... ஆனா நீ என்னை ரொம்ப சோதிக்கிற, டோன்ட் ட்ரை டு டேக் அட்வான்டேஜ்" என்று கடுமையுடன் முடிக்க,

விஷ்வதேவோ அவள் வார்த்தைகள் எதையும் காதில் வாங்கினான் இல்லை..!!! அதுநேரம் வரை படபடத்து கொண்டிருந்த அவள் செவ்விதழ்களில் தன் பார்வையை ரசனையுடன் நிலைக்கவிட்டவன் அவள் பேசி முடித்த போது அவன் பார்வையும் ப்ரீத்தியின் கரத்தில் சிறைபட்டிருந்த தன் விரல் மீது ஒரு கணம் படிந்து மீள, 'விரல் போனால் என்ன விழி இருக்கிறதே..!! என்று தோள்களை குலுக்கி கொண்டவனின் பார்வை ப்ரீத்தியின் மேனியில் தறிகெட்டு அலைபாய தொடங்கியது

அதை கண்டு பொறுக்க முடியாமல் 'தேவ்' என்று ப்ரீத்தி கர்ஜித்தாள்,

வரும்போது அணிந்திருந்த பட்டுப்புடவையை மாற்றி வேறு இலகுவான காட்டன் புடவையில் இருந்தாள் முதல் நாள் என்பதாலும் பெரியவர்கள் இருப்பதாலும் தான் எடுத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் செயல்படுபவளை கண்டு சிலாகித்தவனின் முகம் கனிந்து போனது. சில நொடியிலேயே தன் மாற்றத்தை உணர்ந்து அவள் குறித்த எண்ணத்தை தட்டி வைத்தவன் நிதானமாக தன் விரலோடு கோர்த்திருந்த அவள் கரங்களை தூக்கி முத்தமிட்டு மீண்டும் அழுத்தமாக அவளை தலை முதல் கால்வரை நிதானமாக அளவெடுக்க தொடங்கினான்.

அவன் விழியில் வழிந்த அப்பட்டமான தாபத்தில் கூசி போன ப்ரீத்தி விழிகளை எவ்வாறு கட்டுபடுத்த என்று புரியாமல் மேலும் மேலும் உரிமையுடன் தன் மீது படியும் அவன் விழிகளை தடுக்கும் மார்க்கம் அற்று அவன் விரலை உதறி திரும்பி நின்றாள்.

அதை கண்டு அட்டகாசமாக சிரித்தவாறே பின்னிருந்து அவளை அணைத்து "என்ன பேபி வெட்கமா..???" என்று அவள் தோளில் தன் தாடையை பதித்தவன், "நிஜமாவே மயக்குற ஸ்வீட்ஹார்ட்" என்று கிறக்கத்துடன் கூறியவனின் மீசை ரோமங்கள் அடுத்த நொடியே தூரிகையாய் மாறி அவள் கழுத்து வளைவில் வர்ணம் தீட்ட தொடங்கியது.

'ஸ்டாப் இட் தேவ்' என்று அவனை உதறி, "யு ரோக்..!! நீ மாறவே மாட்டியா, இங்க வந்த பிறகு நீ நடந்துக்குறதை வச்சி நல்லவனோன்னு ஒரு நிமிஷம் நெனச்சிட்டேன் ஆனா நீ அப்படி இல்லை" என்று அவன் சட்டையை பிடிக்க,

"நான் எப்போ பேபி நல்லவன்னு சொன்னேன்..?? எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு தானே சொல்லிட்டு இருக்கேன்"

இப்போது அவன் சட்டையை விட்டவள், "எத்தனை முறைடா சொல்றது உனக்கு..??" எனக்கு உன்னை பிடிக்கலை, பிடிக்கலை, பிடிக்கலை நான் சொல்றது புரியுதா..??" என்று சீறிட

"ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருக்கே டார்லிங்" என்று சளைக்காமல் அவள் விழிகளை ஊடுருவியவாறு அவன் கூற,

"ஓஓ காட்ட்" என்று கண்களை இறுக மூடி திறந்தவள் தன் மார்பில் உறவாடி கொண்டிருந்த தாலியை எடுத்து அவன் முன் நீட்டி,

"இதை கட்டிட்ட ஒரே காரணத்துக்காக உன் இஷ்டத்துக்கு விருப்பம் இல்லாத பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்குறது உனக்கே அசிங்கமா இல்லையா..?? என்று வெறுப்பை உமிழ்ந்தவள் "அதுவும் நான் இப்போ இருக்க நிலையில நீ செய்றது எல்லாம் மனுஷதன்மையே இல்லாத செயல் இதுல நீ எல்லாம் டாக்டர் வேற மை பூட்" என்று அவள் முகம் திருப்ப,

திரும்ப முயன்ற அவள் முகத்தை ஒரு கரத்தால் தடுத்து பிடித்தவன், "என் பொண்டாட்டி, என் சொத்து, என் விருப்பம் இதுக்கு எதுக்கு நான் அசிங்கபடனும், ஏன் டாக்டர்ஸ் எல்லாம் குழந்தை பெத்த பொண்டாட்டியை கொஞ்ச கூடாதுன்னு சட்டமா என்ன..??" என்றவனின் மறுகரமோ அவள் தேகத்தில் அத்து மீறி தன் உரிமையை பறைசாற்ற தொடங்கியது.

அவன் பிடியில் தாடை எலும்புகளே நொறுங்கி போய்விடுமோ என்ற அச்சம் ஊற்றெடுக்க அவனை பார்த்தவளுக்கு தன் மேனியில் மேலும் முன்னேறி கொண்டிருக்கும் மற்றொரு கரத்தை தடுக்க முடியாமல் இயலாமையில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கவும் அதற்க்கு அணை போட்டவள்,

"யு ஆர் அஸால்டிங் மீ தேவ்..!! திஸ் இஸ் இன்ஹுமன்...!! ஜஸ்ட் லீவ் மீ " என்று அவனிடம் இருந்து விடுபட போராட,

அவள் இமைகளில் இதழ்களை ஒற்றி எடுத்து "நோ ஸ்வீட்டி திஸ் இஸ் தி எபிடோம் ஆப் லவ், டோன்ட் யு அண்டரஸ்டான்ட்" என்றிட,

"எது இதுவா..??" என்று தன் மீதான அவன் ஆதிக்கத்தை சுட்டி காட்டி அவள் கர்ஜிக்க

"ஒஹ் கம் ஆன் பேப் திஸ் இஸ் தி வைல்ட் பார்ம் ஆப் லவ்..!! உன்மேல எனக்கு இருக்க கட்டுக்கடங்காத காதலின் வெளிபாடு அது கூடவா உனக்கு புரியலை" என்று அவள் செவிமடலில் முத்தமிட,

"லவ்..!! லவ்..!! லவ்..!! ப்ளடி லவ்..!! வந்த நாளில் இருந்து இதை சொல்லியே என்னை கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கிற" என்று நொந்து போனவள், "ஆனா எனக்கு உன் மேல லவ் இல்லை இடியட்" என்று ப்ரீத்தி சீற,

"சோ வாட் பேப்" என்று அலட்சியமாக கேட்டவனின் இதழ்கள் அவள் செவியிலிருந்து நேர்கோட்டில் பயணித்து கன்னத்தில் தன் தடத்தை அழுத்தமாக பதித்து, "நான் ஏற்கனவே சொன்னது தான் ஸ்வீட்டி,

"உனக்கு லவ் இல்லைன்னா என்ன அதான் உனக்கும் சேர்த்து இப்போ நான் லவ் பண்றேனே அது போதாதா..???" என்று அவள் கூர் நாசியில் இதழ்களை குவித்து முத்தமிட்டவன்,

"உனக்கு எப்போ தோணுதோ அப்போ நீயும் லவ் பண்ணு.., ஆனா அதுவரை என்னை தள்ளி நிற்க சொல்லாத அதுக்கு உனக்கு உரிமை இல்லை" என்றவனின் குரலில் சிறு கடுமை எட்டி பார்க்க, முயன்று அதை மறைத்தவனின் குரல் இப்போது ஏகத்திற்கும் குழைய மேலும் அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைத்தான்.

*

அதேநேரம் ப்ரீத்தியின் கைபேசி ஒலித்திட அதன் சத்தத்தில் தன்னை மீட்டு கொண்ட விஷ்வதேவ் 'சீக்கிரம் பேசிட்டு வா பேபி ஐ வில் பீ வைட்டிங்' என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி செல்ல.... அவள் பேச நினைத்ததை எல்லாம் மறக்கடித்து செல்பவனை ஆற்றாமையுடன் பார்த்தவள் கைபேசியை உயர்த்தி பார்க்க எழிலின் அழைப்பு என்றதும் உடனே எடுத்து குரலை செருமி,

' சொல்லுங்க மாமா ..' என்றது தான் தாமதம் மறுபுறம் இருந்த அலர்விழியோ அவள் வார்த்தையை முடிக்க விடாமல், "ஏய் மனுஷியாடி நீ ...?? எப்போ தான் உன்னோட.." என்று ஆரம்பிக்க

'பட்டு நான் தான் சொல்லிட்டு இருக்கேனே இதுக்கும் ப்ரீத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு, சொன்னா கேளு எதுவும் பேசாத போனை வை' என்று அருகே இருந்த எழில் கண்டிப்புடன் அவளை தடுப்பதும் ப்ரீத்தியின் காதில் விழ,

'வேண்டாம் மாமா தயவுசெஞ்சி நீ தலை இடாத' என்று ஆவேசமாக எழிலிடம் கூறியவள், "இப்போ உனக்கு சந்தோஷமா பரீத்தி இது ஒன்னு தான் நீ பாக்கி வச்சி இருந்த இப்ப அதுவும் நடக்கபோகுது உன்னோட..." எனவுமே ப்ரீத்திக்கு பதட்டம் தொற்றிக்கொள்ள,

'அலர் என்ன ஆச்சு..?? என்ன நடக்கபோகுது..?? எதனால கோவமா இருக்க யாருக்காவது ஏதாவது... ப்ளீஸ் எதுவும் தெளிவா சொல்லு' என்றாள் ப்ரீத்தி

அதற்குள் கைபேசியை வாங்கிய எழில், 'அதெல்லாம் ஒண்ணுமில்லை ப்ரீத்தி நீ சாப்ட்டியா..?? குழந்தை என்ன பண்றான்..?? விஷ்வா வந்தாச்சா..??? நாம பயந்த அளவுக்கு இல்ல எல்லாரும் ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்க இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் உங்க அம்மா மாமி எல்லாரையும் கூட்டிட்டு வரேன்' என்றிட,

'மாமா என்ன ஆச்சு..?? எதுக்கு அலர் கோவமா இருக்கா..?? என்ன நடந்தது நீங்க அதை முதல்ல சொல்லுங்க'

போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் ப்ரீத்தி கூறியதை கேட்ட அலர் 'நான் சொல்றேன்' என்று எழிலின் கையை பிடித்து போனை தன் புறம் இழுத்து ,

'மாமாவும் கீர்த்தியும் வாழவே கூடாதுங்கிறதுல நீ ரொம்ப தீர்மானமா இருக்க போல அதான் இங்க இல்லைன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி எல்லாமே நடத்துறியே எப்படி ப்ரீத்தி..?? இதுவும் ஏற்கனவே நீ ப்ளான் பண்ணி இன்னைக்கு அங்க இருந்தே இப்ப எக்சிகியூட் பண்ணிட்டு இருக்கியா..?? இல்ல ஆளுங்களை செட் பண்ணி வச்சிட்டு தான் இங்க இருந்து கிளம்பினியா..??'

"அலர் என்ன ஆச்சு..?? எதுக்கு இப்படி பேசுற..?? நான் எதுவும் ப்ளான் பண்ணலை, அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாது, நான் தான் தெளிவா சொல்லிட்டேனே இனி அவங்க வாழ்க்கையில வரமாட்டேன்னு திரும்ப இப்படி பேசினா என்ன அர்த்தம் ப்ளீஸ் அலர் நான் அந்த அளவுக்கு மோசமானவ இல்லை நீ என்னை தப்பாவே புரிஞ்சிருக்க" என்றவளின் கண்கள் அலரின் குற்றசாட்டில் கலங்கிவிட்டது.

அதை கேட்ட எழில் 'விடுடி' என்று அலரிடம் இருந்து கைபேசியை பறித்தவன் மறுபுறம் இருந்தவளிடம், "ப்ரீத்தி நீ எமோஷனல் ஆகாத முதல்ல கண்ணை துடை அது குழந்தைக்கும் உனக்கும் நல்லது இல்லை... இங்க சின்ன பிரச்சனை எதுவும் பயப்படற மாதிரி இல்லை நாங்க பார்த்துக்குறோம்..." என்றவனை இடை மறித்த ப்ரீத்தி,

"மாமா சத்தியமா நான் எதுவும் ப்ளான் பண்ணலை நீங்களாவது நம்புங்க " என்று அழுகையினூடே தன்னை நிருபிக்க முயல,

எழிலோ அலரை முறைத்தவாறே, "மப்ச் அழாதன்னு சொல்றேன் இல்லை முதல்ல கண்ணை துடை ப்ரீத்தி எனக்கு நம்பிக்கை இருக்கு..!! நிச்சயமா நீ அவங்களுக்கு நல்லதை மட்டும் தான் நினைப்பன்னு அமுலு பேசினதை பெருசா எடுத்துக்காத அவளுக்கு அவங்க மாமன் மேல பாசம் அதிகம் அதான் அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா சின்ன விஷயத்துக்கு கூட பெருசா ரியாக்ட் பண்றா" என்றான்

"மாமா சின்ன விஷயத்துக்கு அலர் இப்படி ரியாக்ட் பண்ண மாட்டா எனக்கு தெரியும் ப்ளீஸ் நீங்க சமாளிக்க பார்க்காதீங்க சரணுக்கு என்ன பிரச்சனை..?? சொல்லுங்க" என்று பிடிவாத குரலில் கேட்க

அலரோ எழிலிடம் இருந்து கைபேசியை பிடுங்கி மாலை கோவிலில் நடந்ததை விளக்கி அதன் தொடர்ச்சியாக சரணை தேடி போலீஸ் சென்றிருப்பதாக கூறியவள், ' உன்னால கல்யாண நாள் அதுவுமா இன்னைக்கு அவங்க நிம்மதி மொத்தமா போச்சு' என்று கூறவுமே பரீத்தி கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கி விட்டது.

"ப்ச் செல்லம் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருடி" என்று கலங்கிய அலரை அணைத்து எழில் தேற்ற முயல,

அவளோ, "எப்படிடா அமைதியா இருக்க சொல்ற அம்மா கொஞ்சம் முன்னாடி தான் கீர்த்தியை மாமா ரூம்க்கு அனுப்பினேன் சொன்னாங்க இப்போ அப்பா கால் பண்ணி போலீஸ் வந்திருக்குன்னு சொல்றார் எப்படி அமைதியா இருக்க சொல்ற" என்று எழிலிடம் கேட்க,

அவனோ, 'பட்டு எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற கொஞ்சம் நிதானமா யோசிடி அதுக்கு முதல்ல மிஸ்டர் மித்ரனுக்கு கால் பண்ணு 'என்று அவள் கைபேசியை எடுத்து கொடுத்தவன் ப்ரீத்தி காத்திருப்பதை உணர்ந்து,

'ப்ரீத்தி கொஞ்சம் முன்ன தான் எங்களுக்கே தகவல் கிடைச்சது இவ ரொம்ப டென்ஷன் ஆகிட்டு உனக்கு கால் பண்ணிட்டா.., ஊருல இப்படி பேச்சு தவிர்க்க முடியாதது சரண் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் ஆனா அவசரப்பட்டு அடிச்சிருக்கான் காயம் பெருசு, நாங்க பேசிட்டு இருக்கோம் இன்னும் ஒரு மணி நேரத்துல ரீச் ஆகிடுவோம் அவ பேசினதை வச்சி நீ எதுவும் நினைக்காத அவ கோபத்துல இப்படி தான் கத்தி தீர்த்திடுவா அதுக்காக உன்னை தப்பா எடுத்துகிட்டதா அர்த்தம் இல்லை' என்றபோதே எழில் என்ன தான் சமாதானம் சொன்னாலும் சரண் கீர்த்திக்கு இடையிலான விரிசலுக்கு அவள் காரணமாக இருக்கும் பட்சத்தில் காலத்துக்கும் தன்னை துரத்தும் என்பது ப்ரீத்திக்கு புரிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது அவளுக்காக இல்லை அவர்களுக்காக..!!

தொடர்ந்த எழிலோ, "நான் கிளம்பும் போதே கவனிச்சேன் ப்ரீத்தி உன் முகத்துல இன்னும் தெளிவு வரலை ஏதோ குழப்பம் இருந்துட்டே இருக்கு புது இடம் புது மனுஷங்க எனக்கு உன் நிலைமை நல்லாவே புரியுது ஆனா யார் செஞ்ச புண்ணியமோ நாங்க பயந்த அளவுக்கு இல்லை உனக்கு அழகான குடும்பம் கிடைச்சி இருக்கு இங்க சரண் கீர்த்தி அவங்க வாழ்க்கையை பார்த்துபாங்க, நாங்க எல்லாம் கூட இருக்கோம் அதனால நீ பழசை போட்டு குழப்பிக்காம உன்னோட வாழ்க்கையை நல்லபடியா தொடங்கு அது தான் எல்லாருக்கும் சந்தோஷம்..!!

"விஷ்வா குடும்பத்தை உன்னோட குடும்பமா ஏத்துகிட்டு நீ அங்க வாழ ஆரம்பிச்சிட்டாளே இந்த மாதிரி கேள்வி எதுவும் வராது புரியுதா..?? என்று கேட்கவும் மெல்லிய தலை அசைப்பு பிரீத்தியிடம் அதை மனதார உணர்ந்த எழில் அவளிடம், மணி என்ன ஆகுது இன்னும் தூங்கலையா நீ..?? இவ்ளோ நேரம் முழிச்சி இருக்காத வேளையோடு தூங்கு' என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்துவிட உறையாத கண்ணீருடன் ப்ரீத்தி அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

எத்தனை நேரம் என்று தெரியாது ஆனால் மனம் பாறையாய் கனக்க பார்வை சுவரை வெறிக்க அமர்ந்திருந்தவள் கடிகார சத்தத்தில் தன் நிலை திரும்பினாள்.

கண்களை அழுந்த துடைத்தவள் முதல் வேலையாக கரம் கூப்பி கண்மூடி கடவுளிடம் அவசர வேண்டுதல் வைத்தவளுக்கு குழந்தையின் நினைவு வர உடனே எழுந்து விஷ்வா சென்ற அறையை நோக்கி நடந்தாள்.


'நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்

மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்....'


என்று பாடியவாறே மெத்தையில் பூக்களை தூவ தொடங்கியவன் வாசனை மிகுந்த ரூம் ஸ்ப்ரேயை எடுத்து ஆங்காங்கு அடித்து அதன் பின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அறை முழுக்க மெழுகுவர்த்திகளை ஏற்ற தொடங்கினான். அவ்வப்போது அறையில் இருக்கும் மானிட்டரில் உள் அறையில் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையின் உறக்கத்தையும் கண்காணித்து கொண்டான்.

'
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்


இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு.. '


என்று பாடிகொண்டிருக்கும்போதே கதவை திறந்து ப்ரீத்தி உள்ளே நுழைவதை கண்டவன் அவளை நெருங்கி 'வெல்கம் டார்லிங்' என்று கையோடு கொண்டு வந்த மலரிதழ்களை அவள் மேல் தூவி வரவேற்று அதிர்ந்து நின்ற ப்ரீத்தியை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் சற்று குனிந்து மீசை உரச அவள் காதில் கிறக்கமான குரலில்,

'
இன்று முதல் இரவு.. நீ என் இளமைக்கு உணவு'

என்று ராகத்தோடும் மோகத்தோடும் பாட ப்ரீத்தி கொண்ட அதிர்ச்சியை வார்த்தையில் வடிக்க இயலாது, சத்தியமாக இத்தகைய நிலையில் தன்னை அவன் கொண்டு நிறுத்துவான் என்பதை எதிர்பார்க்காது விழிகள் தெறிக்க ஸ்தம்பித்து போய் அவனை பார்த்தாள் ப்ரீத்தி.

அறையின் மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் ஊடே அலங்காரமாய் இருந்த கட்டிலை அடைந்தவன் ப்ரீத்தியை அமர்த்தி அவள் முன் மண்டியிட்டு அவள் கரங்களை பற்றியவாறே,

"நம்ம ரூம் எப்படி இருக்கு பேபி, உனக்கு பிடிச்சி இருக்கா..?? என்ன தான் இருந்தாலும் இன்னைக்கு நம்மோட பிரஸ்ட் நைட் அண்ட் திஸ் நைட் ஷூட் பி ஸ்பெஷல் இல்லையா..?? அதான் எனக்கு தெரிஞ்ச மாதிரி டெக்கரேட் பண்ணி இருக்கேன் இது ஓகேவா" என்று ரசனையுடன் கேட்டவன் அவள் அதிர்ச்சியில் இருந்து மீளாததை கண்டு அவளருகே அமர்ந்து ப்ரீத்தியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி,

'பிடிச்சிருக்கா பேபி' என்றான்.

அவளோ அதிர்ச்சி விலகாத விழிகளால் அவனை பார்த்தவள், "இவ்ளோ தானா இல்லை இன்னும் இருக்கா..??" என்று வெறுமையான குரலில் கேட்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top