S
semao
Guest
தற்கொலை தவிர்
யார் கொடுத்தது இந்த உரிமைவீணாய் போன உலகத்திலே
தானாய் போகாமல்
தன்னை போக்கி கொள்ள
யார் கொடுத்தது இந்த உரிமை
பாலூட்டி சோறூட்டி
வளர்த்த காலம் போய்
கடன் வாங்கி
அதனுடன் (வட்டியும்) வாங்கி
வளர்க்கும் காலத்திலே
உன்னுயிர் வளர்க்கும் தோறும்
தன்னுயிர் போக உழைக்கும்
ஈருயிரை எண்ணியிருந்தால்
இன்னுயிரை மாய்க்க தோணுமோ
விழியோரம் ஆசை தேக்கி
வழியோர கடை பார்த்தாலும்
நொடிநேரம் சிதறாமல்
படிக்கின்ற உன்னை எண்ணி
விரும்பியதை மறந்து
விருப்பத்தோடு வருத்தத்தையும் துறந்து
விடியுமென்று உன்னால் விடியுமென்று
எண்ணியே விடிவெள்ளி வரை உழைத்திடும்
விடிவெள்ளியாய் உன்னை எண்ணும்
வீட்டாரை தான் மறந்து
வீணாய் மாய்வது ஏனோ
ஒரு நொடியும் மறவாதே
உன் இழப்பை எண்ணாதே
உற்ற முடிவு வாழுதலே
உயிரை மாய்ப்பதல்ல
என எண்ணும் எண்ணம் கொள்
ஏற்றத்தை கொண்டுவா
உன் மாற்றத்தால் கொண்டு வா
உயிர் போக்கும்
எண்ணத்தை போக்கி விடு
எண்ணத்தால் ஏறி விடு
எட்டி விடும் தூரம் தான்
மீரா