Sasideera
Well-Known Member
உலகின் ஆதி மனிதனும் ஆதி மொழியும் அவனே!!!
உலகின் ஆதி நாகரிகமும் உயிரின் ஆதாரமான விவசாயமும் அவன் ஆதி தொழிலே!!!
உலகில் பல மொழிகளின் தாயும் இவன் மொழியே!!!
எதிரியாக இருந்தாலும் விருந்தோம்பல் செய்ததாலே இன்றும் அவனைச் சுற்றி பல வண்ண மலர் இனங்கள்!!!
மொழி பற்று இல்லாதவனுக்கு தேசப்பற்று இராது என்பதை சங்கம் வைத்து தமிழ் வளர்த்து நிரூபித்தவன்!!!
உயிரால் மாண்டாலும் சொல்லாலும் செயலாலும் இன்றும் வாழ்பவர்கள் அவன் சான்றோர்கள்!!!
அவனின் எதிரியாக நண்பனாக இந்த பூமியில் இருந்து அவனையும் அவன் மொழியையும் சுவடே இல்லாமல் அழிக்க முயல்வது ஏனோ!!!
அயலவரிடம் இருந்து காக்கும் நிலை மாறி அண்மையில் இருப்பவரிடம் இருந்து அவனை காக்கும் நிலை வந்தது ஏனோ!!!
கடல் கடந்து வீரக்கொடி நட்ட அவன் முன்னோர்கள் வாழ்ந்த அவன் மண்ணில் இன்று அவனின் உரிமை போராட்டம் ஏனோ!!!
காவல் தெய்வமே காவலை கடந்து தமிழனாய் தன்னை மறந்து காலனாய் சூறையாடியது ஏனோ!!! கூடவே இருந்து அவன் முதுகில் குத்தும் இந்த துரோகம் ஏனோ!!!
சூழ்நிலையை ஆளும் அரசியல்!!!
ஆளுமை இல்லாத தலைவர்கள்!!!
தலைகுனியும் அதிகாரங்கள்!!!
இரக்கமின்றி அடிமைசாசனம் எழுதித் தந்த பதவிகள்!!!
அடிபணிந்து போகும் ஆளுமைகள்!!!
அன்றாட சாமானியனுக்கு இது ஒரு செய்தி!!!
கூடி விவாதிப்போருக்கு இது ஒரு தலைப்பு!!!
கேலி அரட்டை அடிப்போருக்கு இது ஒரு துணுக்கு!!!
பதவிக்காக பணத்துக்காக ஏலம் போவோருக்கு இது ஒரு அரசியல்!!!
பணக்காரனுக்கு இது ஒரு தொழில் யுக்தி!!!
பத்திரிகைக்காரனுக்கு இது ஒரு பக்க செய்தி!!!
ஆனால் யார் உணர்வர் இது அவனுக்கான போராட்டம் இல்லை தமிழனின் உரிமைக்கான தேடல் என்று!!!
யார் அறிவார்? தன் மண்ணிலே தன்னை அந்நியனாக்கும் தேசத்தில் தன் அடையாளத்தை நிலைநிறுத்தும் அறப்போராட்டம் இது என்று!!!
யார் சொல்வர்? அவன் சூழ்நிலையின் இயலாமையை அரசியலாகவும் பணமாகவும் மாற்ற நினைக்கும் வஞ்சகரிடத்தில் இருந்து தப்ப முனையும் ஆதரவு போராட்டம் என்று!!!
உலகின் ஆதியான அவனையும் அவன் மொழியையும் அந்தமாக்க நினையாதே!!! ஏனெனில் அவன் சீறியெழும் ஜல்லிக்கட்டு காளை!!!
தமிழ் மொழி மட்டுமல்ல தமிழனும் தனித்து இயங்கும் வல்லமை படைத்தவன்!!!
சசி.

Last edited: