கதை எழுதுவோருக்கும்,கதை எழுத ஆசை படுவோருக்கும் மிக பெரிய எழுத்தாளர் சுஜாதாவின் 1௦ கட்டளை.
பணப்பெட்டியில் ஒரு காதை வைத்துக்கொண்டுஎழுதாதீர்கள்.காசு குலுக்கும் சப்தம் உங்கள் உரைநடையின் சத்ததை மறைந்துவிடும்
உங்கள் வாசகனை வெறுக்காதீர்கள், சில சமயம் அவன் உமக்கு வழி காட்டலாம்.
வாசகனை உங்களுக்கே புரியாத பெரிய வார்த்தைகளால் குழப்பாதீர்கள்
மற்றவன் வெற்றிக்கு ஆசைப்படாதீர்கள்,அவன் நடையையோ கருத்துக்களையோ பாத்திரப்படைப்பையோ ராயல்டியையோ எதையும் விரும்பாதீர்.
உம் மொழிக்கு மரியாதை கொடுத்து உண்மையாக எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை ஒரு தேர்ந்த தச்சன்போல் இணைக்கப்பழகுங்கள்.
புகழை துரத்தாதீர்கள். புகழ் உங்களை தேடி வரவேண்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெல்லத்தான்தேடி வரும், ஆனால் நீண்ட நாள் உடன் வசிக்கும்.
உங்களுக்கு முன் எழுதிய பெரிய எழுத்தாளர்களை வெறுக்காதீர்கள் அவர்களை கண்மூடித்தனமாக உபாசிக்கவும் வேண்டாம்.
இலக்கியத்தை காப்பாற்ற வந்த அவதார புருஷராக நடிக்காதீர்கள்.திறமையின் விதைகள் கடல்மணல்போல பல்லாயிரம் வகையில் மலர்ந்து காளான்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.
உங்களை சுற்றியுள்ள வாழ்க்கையைப் புறக்கணிக்காதீர்கள் அதில்தான் உங்கள் எழுத்தின் ஊற்று இருக்கிறது.
ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுதுங்கள். அதன் தரத்திலிருந்து மக்கள் உம்மை அறிந்து கொள்வார்கள்