ஆண் : கரை வந்த பிறகே….
பிடிக்குது கடலை….
நரை வந்த பிறகே….
புரியுது உலகை….
ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
ஆண் : வாழா
என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்